கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 23, 2013
பார்வையிட்டோர்: 21,429 
 

“இன்றைக்கேனும் கட்டாயம் கேட்பார்கள்’
என்றசபலத்துடன் வீட்டுப் படியேறினாள் மாலதி. கண் சோர.
நடை துவள. மச்சுப்படி ஏறுகையில் விழுந்துவிடாமருக்க
வேண்டுமே என்றஉணர்வில் கையால் சுவரைப் பற்றிக்
கொண்டாள்.
கூடத்திருந்து
மங்களத்தம்மாளின் கீச்சுக்குரல் ஒத்தது.
இறைவனின் படைப்பில் உண்டான எத்தனையோ மாதிரிகளில்.
மங்களத்தம்மாளின் குரல் ஒரு தனி மாதிரி. அது தடிக்கவும்
தடிக்கும்; கீச்சென்று செவிகளில் பாயவும் பாயும்.
“ஊரு உலகத்துக் கயாணமா
நடந்திருந்தாத்தான்
கேள்வியே இல்யே!”
மாலதிக்கு நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது.
மச்சுப்படி அவள் காலை அனுப்ப மறுத்துப் பிடித்துக்
கொண்டது.
மங்களத்தம்மாள் நெருப்புக்குச்சியைக் கிழித்துத் தீ
வைப்பாளோ என்பது அவளுடைய யூகம்தான். ஆனால். பற்றும்
இடம்தானா? பற்றும் இடம் தான் என்பது விளங்க அவளுக்கு
வெகுநேரம் ஆகவில்லை.
“சீமை கடந்து இப்ப அவன் போகப்போகிறான்னு தெரிஞ்சா.
இவளை வீட்டுக்குக் கொண்டான்னு சொல்
யிருக்க
மாட்டேனே! என்னவோ பண்ணிக்கிட்டான். பிறகு
பார்த்துக்கிடலாம்னு இருக்கலாமே? இப்ப இந்த விஷயமும்
தெரிஞ்ச பிறகு மனசு குறும் குறும்னு உறுத்துது. நான் என்ன
கேக்குறது? இல்லே. சம்பந்தி சீராட முடியுமா. உங்க பொண்ணு
இப்படி இருக்கிறா. ஏதோ. அந்த காலத்திலே தாய் வீட்டிலே
செய்யறதைச் செய்யணும்ன்னு. சொல்லுங்க!”
“கஷ்டந்தாங்கம்மா. குலமில்லே சாதியில்லேன்னு
சொல்டற
ôங்க. எளிசா. என்னதான்னாலும். அவங்க தொட்டு
நீங்க எடுத்துக்கிட முடியுமாம்மா?”
“அது எப்படி முடியும்? எனக்கு எங்கே மனசு துணிகிறது.
நிசமாச் சொல்றேன்.” என்று குரலைத் தாழ்த்திக்கொண்டாள்
மாலதியின் கணவனைப் பெற்றவள்.
“ஏதோ உத்தியோகம்ன்னுறசாக்கில் வெளியே போகட்டும்.
வரட்டும். இருக்கட்டும்னு பின்னே ஏன் வச்சிருக்கிறேன்?
வீட்டுக்குள்ளே அவளை வச்சுக்கிட்டு உள்ளே தொட்டு ஒத்தாசை
செய்யச் சொல்ல முடியுமா? ஏதோ இவந்தான் ஏடாகூடமாகக்
கொண்டு வந்திட்டான்னா. இன்னும் இருக்கிறவங்களுக்கு நல்ல
இடமா கயாணம்
ஆக வேண்டாமா? இவ வீட்டுக்கு
வந்தப்புறம். இந்திரா வீட்டிலேந்து யாருமே வரதில்லே. நான்
என்ன பண்ணுவேன் சொல்லுங்க? வேதாண்ட
முடியலே.
முள்ளில சிக்கிட்டாப்போலதான் இருக்குது….”
“அதெப்படிங்க தாண்ட முடியும்? பொண்ணு வேணா ஏதோ
படிச்சா. வேலை செய்யறா. நல்லா உடுத்தி. சிரிச்சுப் பேச
எல்லாருந்தான் தெரிஞ்சிட்டாங்கன்னாலும். மண்ணு
மண்ணுதானே? பூவை எடுத்திட்டாலும் கிழங்கை
எடுத்திட்டாலும் மண்ணைப் பூசிக்க முடியுமா? அப்ப….. மகனும்
வர வருசம் ஆகும். பேறு காலம்னா என்ன செய்வீங்க?”
“என்ன செய்யறது? ஆசுபத்திரி இருக்குது. பெத்த பின்னே
அவங்க அக்காளுக்கோ. அம்மாளுக்கோ சொல்அனுப்பற
து.
வந்து பார்த்திட்டுப் போறாங்க. இங்கே அவதான் வந்திட்டா.
அவங்களையெல்லாம் கொண்டாடிச் சம்பந்தி
உறவுமுறைகாப்பாத்தணுமா?”
இதைச் சொல்
விட்டுக் கோமதி பெருமூச்சு விடுமுன்.
கடைசிக்குட்டி செண்பகம் அண்ணி நிற்பதைப் பார்த்து. செய்தி
அறிவித்துவிட்டாள்.
“மச்சுப்படியிலே அண்ணி நின்னு பாக்குதம்மா!”
அந்த வேதாண்டாத
அம்மையின் விரிந்த அனுபவம்
முழுவதும் அந்தப் பத்துவயசு மூளைக்கு அற்றுபடி. அண்ணன்
214 215
ஆபீசிருந்து
அவளைத்தான் கயாணம்
பண்ணிக்கொள்வேன்
என்று முரண்டிக் கொண்டு. ஒரு நாள் மாலை மாற்றிக்கொண்டு
கூட்டிவந்திருக்கும் அண்ணி பார்ப்பதற்கு அழகாகவும்
பேசுவதற்கு ஆசையாகவும் எல்லார் வீட்டுப் பெண்களையும்
போன்றவளாகவே இருந்தாலும் அவள் தங்களுக்குச் சமமானவள்
அல்ல என்பது செண்பகத்துக்குத் தெரியும்.
அவள் தொட்டு அம்மா உணவு கொள்ளமாட்டாள் என்பது
மாலதிக்குத் தெரியாவிட்டாலும். செண்பகத்துக்குத் தெரியும்.
அவள் விடுத்த எச்சரிக்கையில் மங்களத்தம்மாள் சட்டென்று
கிளம்பி விட்டாள்.
“அடடே? மணி அஞ்சு அடிச்சுப் போச்சா…..” என்பது
முற்றுப்புள்ளி.
மாலதி மச்சுப்படியில் நின்றபடி குச்சி கொளுத்திவிட்டுப்
போகும் மங்களத்தம்மாளைப் பரிதாபத்துடன் நோக்கிவிட்டு
மேலே ஏறினாள்.
காதன்
பாதை கரடு முரடானதுதான். கல்யாணம் ஆகும்
வரைக்கும் தான் நாவலும்
சினிமாவிலும் அந்தப் பாதையை
நீட்டிக் காண்பிப்பார்கள். பணம். அந்தஸ்து. சாதி
எல்லாவற்றையும் தாண்டிக் குதித்துவிட்டுப் பரிசைப் பெறுவது
போல். கதை புனைபவர்கள் கதையைக் கல்யாணத்தில்
முடித்துவிடுவார்கள். ஆனால். கரடு முரடான பாதை.
கல்யாணத்தில் தொடங்கித்தான் நீளுகிறது.
மாலதி எடுத்ததற்கெல்லாம் அழும் பிறவி அல்ல.
அழுவதனால் ஆறுதல் உண்டாகிறது என்று நினைப்பதற்கும்
மாறாகச் சக்தியே செலவாகிறது என்று தெளிந்தவள். அதிலும்.
மண வாழ்வினால் ஏற்பட்ட மாறுதலுடன். எட்டு மணி நேரம்
அலுவலக அறையில் இயந்திரம் போல் இயங்கிவிட்டு
வந்திருக்கும் அவளுக்கு அழக்கூட அன்று சக்தியில்லை எனத்
தோன்றியது. படுக்கையிலே சோர்ந்து விழுந்தாள்.
தாய் வீட்டுக்கும் இவர்கள் அனுப்பப் போவதில்லை.
இவர்களும் ஆதரவு கொடுக்கப் போவதில்லை. நம்பிய ஆதரவோ
ஆறாயிரம் கல்களுக்கப்பால் நாட்டு நலனுக்கான தொழில்
வளர்ச்சித் திட்டத்துக்காகப் பணியாற்றப் பயிற்சி பெறப்
போயிருக்கிறது.
இதுவா வெற்றி?
“மாலதி?…….. கீழே வந்து காப்பியைக் குடிச்சிட்டுப் போகக்
கூடாதாம்மா?”
மாமியின் குரல்தான்! மங்களத்தம்மாவைப் போன்றஅண்டை
அயலாருக்கு எத்தனை ஆதரவாகப் படும் குரல்!
மாலதிக்கு எழுந்திருக்க வேண்டும் என்றேதோன்றவில்லை.
தலை குடைராட்டினத்தில் சுற்றுவது போல் சுழன்றது. அந்தச்
சுழற்சியில் அரும்புப் பல்வரிசை தெரியப் பார்வையின்
தீட்சண்யமும் மூக்கின் கூர்மையும் அவளை விழுங்க வருவது
போல் ஒருமித்துப் போர் முனை நிற்க. ஜாலக் கதிரவனும்
நீலக்கடலோரமும் மாலை மயக்கும் துணை புரிய. கோமதி பெற்று
வளர்த்து ஆளாக்கிவிட்ட வாபப்
பிள்ளையின் பிடியினின்று
திமிறவழியின்றி விழுந்துவிட்ட காட்சிகள்தான் பவனி வந்தன.
“உனக்காக எந்த மலையையும் தாண்டிக் குதிப்பேன் மாலு”
என்றான் அவன்.
“உங்களுக்காக நான் எந்த அலையையும் பொறுப்பேன்”
என்றாள் அவள்.
எல்லாம் அப்போது இன்பக் கனவுகள்!
இப்போது. பிரத்யட்ச நினைவுகள்; நடப்புகள்.
அவன். கன்னத்தை நிமிண்டிய குறுகுறுப்பு இப்போதும்
அவளுக்குப் புல்லரிப்பை உண்டாக்கினாற்போல் இருந்தது.
அசட்டுத்தனம். பிரச்னை அப்போது எங்கே தீர்ந்தது?
ஆரம்பம்!…
“ஏன் படுத்திட்டே மாலதி? உடம்புக்கு என்ன?”
216 217
தொட்டுப் பார்க்கட்டுமே என்று அழும்பு பிடிக்க
விரும்புபவள் போல் மாலதி கண்ணை மூடிக்கொண்டாள்.
“உடம்பு சரியில்லையா. தூங்குறியா? மாலதி. மாலதி.
மயக்கமா என்ன? சம்பகம். சம்பகம். இங்கே வந்து அண்ணியைத்
தொட்டுப் பாரு!”
செண்பகம் வரும் வரையிலும் மாலதி பொறுக்கவில்லை.
“களைப்பாயிருந்தது. ஒண்ணுமில்லே..”
“காப்பி குடிக்க வல்யேன்னு
பயந்துபோனேன். இப்பவே
புடிச்சு லீவு கொடுப்பாங்களா?”
“வேணும்னா எடுத்துக்கலாம்.”
“வேணுமா? பங்கஜம். சம்பா. ரகு எல்லோரும் வெளியே
காலேஜுக்கோ. ஸ்கூலுக்கோ போய்விடுவார்கள். எப்படி போது
போகும்? வேணும்னா எடுத்துக்க….”
“இல்லே……… அசதியாய் இருக்குது……..”
“இப்ப அப்படித்தான் இருக்கும். இப்ப வேறு லீவு எடுத்தால்.
அப்புறம் பேறு காலம்னா லீவு இருக்குமா?”
மாமி நிற்கவில்லை. போய்விட்டாள்.
லீவு…… லீவு வேணுமா? வேண்டாமா?
இப்படி ஏற்படப் போகிறதென்றஎண்ணமே அப்போது
போகவில்லையே?
“நீங்க திரும்பி வரும் வரையிலும் நான் எப்படி இருப்பேன்?”
என்று அவள் கேட்டாள் என்றாலும். இயல்பான பிரிவின்
வெம்மைதான் சுடுவதாக இருவரும் எண்ணியிருந்தார்கள்.
மாமியும் மாமனும் புதுமை மாறாமல் இருந்த புதிசு.
“உனக்கென்ன? நீதான் அம்மாவையும் சரியாய்க் காக்காய்
பிடித்து விட்டாயே?…. ஓடி ஓடியல்லவா உனக்கு அம்மா
உபசாரம் செய்யறாங்க?” என்று அவனும் சிரித்தான்.
குடும்பத்தில் ஒருத்தி என்று உலகுக்கு முன்னே ஏற்றாலும்
உள்ளத்துக்கு ஏற்கவில்லையே? உலகுக்கு முன் இருந்தாலென்ன.
இல்லாவிட்டாலென்ன? வீட்டுக்குள் தாராளமாக வளைய வர
முடியாத கொண்டியாலல்லவா பூட்டப்பட்டிருக்கிறது?
மாலதி கீழே இறங்கி வந்து முகத்தைக் கழுவிக்கொண்டு வரும்
முன் வெளியறைமேசைமேல் காப்பி பலகாரம் கொண்டு வந்து
மாமி வைத்து விட்டாள்.
“பங்கஜம் எங்கே? காலேஜிருந்து
வரவில்லையா?”
“என்ன அண்ணி?”
வாயில் பஜ்ஜியைக் கடித்துக் கொண்டே சமையலறையில்
இருந்து பங்கஜம் ஓடிவந்தாள்.
மாலதிக்கு இந்தச் சுதந்திரம் ஏது?
காப்பியை விழுங்கிவிட்டு மறுபடியும் மாலதி மாடிக் கூண்டில்
பதுங்கி விட்டாள். வாய்திறந்து பேசாமல் செயல் முறையில் மாமி
காட்டும் சாதுர்யம் மாலதிக்கு எவ்வளவு கசப்பில்
எண்ணினாலும் சாதுர்யமாகத்தான் இருக்கிறது.
“மாலு……..?”
எத்தனையோ நாட்களுக்குப் பின் அன்பும் ஆதரவும் தேனாக
வந்து பாயவே மாலதி பந்துபோல எழுந்து வந்தாள்.
“வாக்கா. அத்தானும் வந்திருக்காங்களா? வாங்க. அட
போக்கிரி ராஜு!”
“என்னாம்மா. நீதான் அரும்பாக்கம் பஸ்ûஸயே
மறந்திட்டேனாலும் நாங்க மறக்க முடியுமா?……… எத்தினி மாசம்
இது மாலு?”
“என்ன அத்தான் நிக்கிறீங்க? உக்காருங்க…” நாற்காயை
இழுத்துப் போட்டுச் செல்லப்பனை உட்காரச் சொன்னாள்….
குழந்தையைத் தூக்கிக் கொண்டு முத்தமழை பொழிந்தாள்.
“இந்தப் பய மறந்திட்டானக்கா. என்னமோ முழிச்சி முழிச்சி
பார்க்கிறானே….”
218 219
அக்காளும் தங்கையும் குலவிக் கொண்டிருக்கையிலே
செண்பகம் வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனாள்.
மாமி சற்றைக்கெல்லாம் மூச்சிறைக்க மாடி ஏறி வந்தாள்.
“சுகமாம்மா? மாசமா இருக்குதுன்னு கேள்விப்பட்டு வந்தோம்”
என்றாள் ருக்கு.
அக்காளுக்கும் தங்கைக்கும் எத்தனை வித்தியாசம்? கட்டை.
குட்டை. நல்ல கறுப்பு. வெள்ளையிலே மாங்காய் போட்ட புடவை
நன்றாகவே இல்லை…. மில்லே
ஏதோ நூறு ரூபாய் சம்பளம்
வாங்குபவன் பெண் சாதி- தேங்காய்ப்பூத் துண்டும் எண்ணெய்
கோத்து நிற்கும் தலையும் செல்லப்பனைச் சமமாக மதிக்கக்
கொஞ்சங்கூட அவளுக்குத் தெம்பிருக்கவில்லை.
வெறுப்பை விழுங்கிவிட்டு. சிரிப்பை நெளியவிட்டு. “வாங்க…..”
என்றாள் கோமதி. அம்மாளுக்குத்தான் உடம்பு நல்லாயில்லே.
மாலு மாலுன்னே எந்நேரம் புலம்புறாங்க. அதுவும் முழுகாம
இருக்குதாம்னு கேள்விப்பட்டபுறம் பறக்கிறாங்க….”
“அவங்களையும் கூட்டிட்டு வர்ரதுதானே? அவளுக்கு உடம்பு
நல்லா இல்லே. பஸ்ஸிலே வண்டியிலே அவ்வளவு தூரம்
அலைக்கழிக்கப் பயமா இருக்குது. அவன் இருந்தால் ஆபீஸ்
போகவே சம்மதிக்க மாட்டான். அவளுந்தான் வீட்டிலே எப்படிக்
கொட்டுக் கொட்டுன்னு உட்கார்ந்திருப்பேன்னு போய்வரா…..
மாடியைவிட்டு நான் இறங்கச் சொல்லுறது இல்லை.
அப்படியிருக்கப் பதினைந்து கல் பஸ்ஸிலே அலையலாமா?”
மாலதி பல்லைக் கடித்துக் கொண்டாள்.
ருக்கு தயங்கிவிட்டு “பூமுடிப்பு. வளையல் காப்புன்னு….. நீங்க
செய்யறதுன்னா… அம்மா கேட்டுட்டு வரச்சொன்னாங்க” என்று
இழுத்தாள்.
“எல்லாம் செய்யும் வழக்கம்தான்! பிறந்த வீட்டில். பொன்
வளை. சேலை எல்லாம் வாங்கிறது உண்டு…..” என்றாள் கோமதி.
அவள் குறிப்பை உணர்ந்து ருக்மணி பேசினாள்.
“கல்யாணம்தான் எப்படியோ ஆயிட்டது. அதும் மனசு இந்த
நாளிலே சந்தோஷமாய் இருக்கணும். கேட்டுட்டுவான்னு அம்மா
சொன்னாங்க. என்ன உண்டோ. நாங்க பணம்தந்திடறோம். நீங்க
ஒரு நாளைக் குறிச்சு செய்துக்கிடுங்க.” கோமதியின் பேச்சில்
சரளம் இப்போதுதான் புரளத் தொடங்கியது. அதுக்கென்ன.
செய்திட்டாப் போச்சு. பார்க்கணும்னா உங்கம்மாளையும்
கூட்டிட்டு வா….”
பங்கஜம் இந்த நிலையில் இரண்டு தம்ளர்களில் காப்பி
மட்டும் கொண்டு வந்து செல்லப்பனுக்கும் ருக்மணிக்கும்
கொடுத்தாள். “இப்ப என்னத்துக்குங்க. காப்பி? …” என்றருக்மணி.
“வளையல் எப்படிச் செய்யணுமோ? நீங்களே
செய்துக்கிடுவதானால்… பணம் கொடுக்கட்டுமா? ஏம்மா மாலு?”
என்றாள்.
மாலதிக்கு முகம் சிவந்தது. “இந்த சம்பிரதாயமெல்லாம்
எதுக்கு அக்கா?”
“வழக்கத்தை ஏன் குறைக்கணும்? அவ சொல்லுறாப் போல
ஒண்ணுமில்லாம கயாணம்தான்
நடந்து போச்சு.
பிறக்கிறகுழந்தை நல்லா இருக்க வேணாமா?” என்றாள் கோமதி.
கண்டிக்கும் தோரணையில்.
பிறகு ருக்மணி கண்ணைக்காட்ட. செல்லப்பன் பையிருந்து
திறந்து இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து
ருக்மணியிடம் கொடுத்தான். ருக்மணி கோமதியின் கையில்
பயபக்தியுடன் கொடுத்தாள்.
அவர் உடலை வருத்தி உழைத்து. மகளின் கல்யாணத்துக்காக
அருமையாகச் சேர்ந்த காசு என்பது மாலதிக்குத் தெரியும்.
பொன்னே போல இதுகாறும் அருமையாக இருந்த அந்தக்
காசை. கோமதி அலட்சியமாக நாலு மடிப்பு மடித்து. இடுப்பில்
செருகிக்கொண்டாள். தினமும் நூறு ரூபாய் நோட்டாகப்
புழங்குபவள் அவள்!
“ஏதோ சவரன் எண்பதுன்னு விக்கறது. பார்க்கலாம்.
காப்பியைக் குடியேன்?” என்றாள் கோமதி.
220 221
ருக்மணி குழந்தைக்குப் பாதி கொடுத்துவிட்டுத் தானும்ó பாதி
குடித்து விட்டு டம்ளரைக் கழுவி வைக்க எழுந்தாள்.
“இருக்கட்டும் அக்கா. நீ கழுவ வேண்டாம்!” என்றாள்
மாலதி எரிச்சலுடனே.
“பரவாயில்லே மாலு?….”
மாலதி டம்ளரைப் பிடுங்கிக் கீழே வைத்தாள். பிறகு
செல்லப்பனும் ருக்மணியுமாகப் பெரிய கும்பிடு போட்டுவிட்டு
விடைபெற்றுக் கொண்டார்கள்.
கோமதி அவசரமாகக் கீழே அடுப்பைப் பார்க்க விரைந்தாள்.
மாலதிக்கு நின்றஇடத்திலேயே தலை சுழன்றது. வயிற்றுக்
காப்பியும் பற்பல உணர்ச்சிகளும் அடித்துப் புரண்டு கொண்டு
மேலுக்கு எழும்பி வெளியே வரச் சுழன்றன. நெஞ்சைப்
பிடித்துக் கொண்டு படுக்கையில் விழுந்தாள்.
“மாலதி? மாலதி? ஏன் படுத்துட்டே? உடம்பை என்ன
பண்ணுதாம்?”
“தலை சுத்துது அத்தே!”
“என்னாலும் தின்னியா? எண்ணெயில முழுகின பஜ்ஜி
ஆகலே எலுமிச்சப்பழம் புழிஞ்சு குடுக்கட்டுமா?
ராவேளையாச்சே?”
“…. வேணாம்…….” என்றாள் மாலதி தலையைப்
பிடித்துக்கொண்டு.
“சரி. எந்திரிக்காதே. சீரக ரசமும். சோறும் கலக்கிக்
கொடுத்தனுப்பறேன். குடிச்சிட்டுப் படுத்துக்க……. அஞ்சு
தேதியாச்சே. ஆபீசிலே இன்னம் சம்பளப் பட்டியல்
போடயா?”
“போட்டுட்டாங்க. இன்னைக்குத்தான் சம்பளம் வந்தது.
பெட்டியில் இருக்குது.”
“உன்னைக் கேக்க வாண்டாம்முன்னா என்ன செய்யறது?
அவனுக்குச் சுளை போல ஐந்நூறு அனுப்பிட்டாங்க.
பால்காரன் முன்பணம் கேக்குறான். இல்லாட்டி மாட்டைக்
கொண்டாந்து கறக்கமாட்டான். பிள்ளைத்தாச்சிப் பெண்ணு
சோர்ந்து சோர்ந்து விழுறே. ஒரு நல்ல காப்பியானும் குடிக்க
வேணாமா? இன்னைக்கு ரெண்டு கப்பு காப்பிக்குப் பால்
எடுத்திட்டேன். நாளைக்குச் சனிக்கிழமை. ஒரு பொழுது.
மோருக்குக்கூடப் பால் இல்லை….. எங்கே வெச்சிருக்கே சொல்லு.”
தலையைப் பிடித்துக் கொண்டு மாலதி எழுந்திருக்க
முயன்றாள்.
“நீ எந்திரிக்க வேண்டாம். சொல்லு. எடுத்துக்கிடறேனே?”
“பெட்டியிலே வெச்சிருக்கேனே.”
“பரவாயில்லை. திறந்துதானே இருக்கு?”
“ஆமாம். சேலைக்கடியில் பர்சோடு இருக்கும்.”
கோமதி பெட்டியைத் திறந்து சேலைக்கடியிருந்து
பர்ûஸ
எடுத்துக் கொண்டாள்.
“எந்திரிக்க வேண்டாம். ரசம் சோறு கொடுத்துவிடறேன்.
வாந்தி வந்தாலும் குத்தமில்லை. குடிச்சுடு….”
“ஏ! சம்பகம். இந்த காப்பி தம்ளருகளை எடுத்திட்டுப் போய்
கழுவி வை. அப்படியே வச்சுட்டுப் போய்ட்டாங்க!”
கோமதி விடுவிடென்று படியிற
ங்கிப் போனாள்.
ஒரு சம்பளம் கூட முழுசாய் இப்படி அவளுடைய
அம்மாளிடம் மாலதி கொடுத்ததில்லை. படிப்புக்கும் வேலைக்கும்
தகுந்த வேஷமிடத்தான் அவளுடைய சம்பாத்தியம் சரியாய்
இருந்தது.
வேஷத்துக்குத் தகுந்த பலன் கிடைத்துவிட்டது. ஒரு சம்பளம்
கூட இந்த வீட்டில் அவளுக்குத் தங்கவில்லை.
துயரத்துக்குப் பதில் மாலதிக்குச் சிரிப்பு முட்டிக் கொண்டு
வந்தது.
வேயும்
இல்லை; முள்ளும் இல்லை.
பணத்துக்கு ஒன்றுமே இல்லை!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *