கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2015

67 கதைகள் கிடைத்துள்ளன.

தஞ்சாவூர் ஓவியங்கள்

 

 அன்று ஞாயிற்றுக் கிழமை. அறுபது வயதான ரகுராமன் தன் ஸ்மார்ட் போனை நோண்டிக் கொண்டிருந்தார். “சிறந்த அழகான தஞ்சாவூர் ஓவியங்கள் விற்பனைக்கு உள்ளது. தொடர்பு கொள்ளவும்: ராகுல் 99000 06900” OLX ல் வந்திருந்த அந்த விளம்பரத்தை பார்த்த ரகுராமன் மனைவி லக்ஷ்மியைக் கூப்பிட்டுக் காண்பித்தார். ஆலிலைக் கிருஷ்ணன், வெண்ணைத் தாழி கிருஷ்ணன், ராதா கிருஷ்ணர், கஜ லக்ஷ்மி, கீதாபதேசம் என்று புகைப் படங்களுடன் விளம்பரத்தில் அழகாகக் காணப் பட்டன. லக்ஷ்மி மிகுந்த உற்சாகத்துடன், “வெண்ணைத் தாழி


அடுக்கு மாலை

 

 பாயின் மீது புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தாள் நந்தினி. பக்கத்தில் உள்ள சர்ச்சில் இருந்து மணி அடிக்கும் சத்தம் கேட்டது. இரண்டு தடவை அடித்து விட்டு அது ஒய்ந்தது. மணி இரண்டாகி விட்டதா? ஐயோ இன்னும் கொஞ்ச நேரத்தில் பொழுது விடிய ஆரம்பித்து விடும். அதுவரைக்கும் இப்படித்தான் பாயில் புரண்டுக் கொண்டிருக்க வேண்டுமா? என மனது சந்தோஷத்துடன் அலுத்துக் கொண்டது. வானத்தில் மேகம் மிதப்பது போல அவளது மனம் சந்தோஷத்தில் மிதந்து கொண்டு இருந்தது. சந்தோஷத்தில் தூக்கம் வராமல்


ஆச்சர்யம் காத்திருக்கிறது

 

 இந்தக் கதையை உங்களுக்கு சொல்லப்போகும் நான் ஒரு அறிவுஜீவி என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். உங்களைப் போன்றே சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். உங்களைப் போலவே புகை கக்கும் டி.வி.எஸ்-50 ஒன்றை வைத்துக்கொண்டு, அல்லும்பகலும் உழைத்துக்கொண்டிருக்கிறேன். எப்போதேனும் அது கிளம்ப மாட்டேன் என்று அடம்பிடிக்கும்போது, ‘லட்சுமி கிளம்பிடு’ என்று ‘படிக்காதவன்’ ரஜினிபோல கெஞ்சிக்கொண்டு சாலையோரத்தில் நின்றிருப்பேன். கெஞ்சல் என் வண்டியிடம் எடுபடாது; உருட்டல்தான். வழக்கமான என் மோட்டார் மெக்கானிக்கிடம் கொண்டுசென்றால், வழக்கமாக அவன் சொல்வது ‘பேரீச்சம்பழக்காரனுக்குத்தான் தேறும்’. என் அப்பா


அவள் மட்டும் துணையாக!

 

 “”கவிதா, எங்கே போயிருந்தே நீ? மறந்துட்டியா? இன்னைக்கு நம்ம பேரனோட பிறந்த நாள் விழா ஆச்சே! நீ இன்னும் ரெடி ஆகலையா?” டிப் டாப்பாக உடையணிந்து வாசலில் நின்று கொண்டு அப்பொழுதே உள்ளே நுழைந்த அவர் மனைவியிடம் கேட்டார் ராகவன். “”அதெப்படி மறக்க முடியும். அதுக்கு தானே கோவிலுக்கு போய் நம்ம பேர குழந்தையோட பேருல அர்ச்சனை செஞ்சிட்டு வரேன்” என்று சொல்லிக் கொண்டே குங்கும பிரசாதத்தை அவரிடம் கொண்டுதந்தாள். அதை பக்தியோடு வாங்கி நெற்றியில் இட்டுக்


எனக்கு மட்டும்

 

 வெள்ளவத்தை கார்கில்ஸ் Food city அருகாமையில் ஒரு நாள்… ராம்: மச்சான் செம பிகருடா தினேஷ்: எங்கடா….???? சிவா: அது சரி நீ எப்பல இருந்துடா சைட் அடிக்க தொடங்கின……..?? தினேஷ்: அதானே உனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது சும்மா கிட தனு: உன் ரேஞ்சுக்கு அங்க போகுதே அதான்டா சரி எல்லோரும்: ஹா ஹா ஹா சிவா: டேய்…… சரி ராம் நீ பீல் பண்ணாத … அவன் கிடக்குறான்…. – கடற்கரை அருகில் ஒருநாள்


நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்

 

 மஞ்சளையும் சந்தனத்தையும் அரச்சி ஒரே சீரா பூசுன, புதுசா சமஞ்ச பொண்ணு கணக்கா ஊற சுத்தி செவ்வந்தி பூக்க பூத்து கெடக்கு.செவந்து கெடக்கு ஊரு. இந்த ஊருக்கு கொளத்தூர் ங்கற பேர்க்கு பதிலா செவ்வந்திபுரம்னு பேர மாத்தி வைக்கக்கூட பரிசீலன பண்லாம் னா பாத்துக்கோங்க. மானம் பாத்த பூமி, தப்பாம பேயர மழையினால வெள்ளாமா சுகபோகமா நடக்குது அந்த கிராமத்துல. மேடதெரு மூணாம் வீடுதான் கனகாம்பரத்தோட வீடு, பேருதான் கனகம் ஆனா அழகுல குறிஞ்சிப்பூ. அம்புட்டு அழகு.


அரை குறை அடிமைகள்

 

 தன்னுடன் வேலை செய்யம் டொக்டர் ஸ்டிவனின் முகபாவத்தைப் பார்த்துவிட்டு, இவன் என்ன நினைக்கிறான் என்று டொக்டர் சண்முகலிங்கத்தால் திட்டவட்டமாக எதையும் முடிவுகட்ட முடியவில்லை. இளமையும் அழகுமாய் உருண்டு திரண்டு கொண்டு திரியும் நேர்ஸஸைகை; கண்டாற்தவிர,மற்ற நேரங்களில் ஒரு கற்சிலை மாதிரியான ஸ்டிவனின்; முகபாவத்தை வைத்துக்கொண்டு அவனைப் புரிந்து கொள்ளுதல் மிகக் கடினமான விடயம். கடந்த இரண்டு மூன்று கிழமைகளாக டாக்டர் சண்முகலிங்கத்திற்;கு வார விடுமுறை கிடைக்கவில்லை. அந்த டிப்பார்ட்மென்டில் ஒன்றிரண்டு பேர் ஹொலிடேயில் போய்விட்டார்கள், ஒன்றிரண்டுபேர் தங்களின்


என்னைக் கைவிடு!

 

 “நல்லா யோசிச்சுப் பாத்தியா, சியாமளா?” தந்தையின் குரலில் கவலை மிகுந்திருந்தது. மூன்று வருடங்களோ, இல்லை ஐந்து வருடங்களோ சேர்ந்து வாழ்வதற்கா கல்யாணம்? ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்களே! பெற்ற ஒரே பெண்ணுக்குத் தன் முயற்சியால் ஒரு கணவனைத் தேடித் தர முடியவில்லையே என்ற அவருடைய நீண்டகால வேதனை இன்னும் மிகுந்தது. “சதீஷ் காண்ட்ராக்டிலே வந்தவன்! அது முடிஞ்சதும் வந்த ஊருக்கே திரும்பிப் போயிடணுமேம்மா!” கட்டட வேலை செய்துகொண்டிருந்தபோது, ஒரு விபத்தால் முதுகில் பலத்த அடிபட, சில ஆயிரம் நஷ்ட


நெடுஞ்சாலையில் ஒரு…

 

 சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் கிழவன் ஒருத்தன் சாய்ந்து சாய்ந்து நடந்து போய்க் கொண்டிருக்கிறானே, அந்த இடத்திலிருந்து பதினாலாவது கிலோமீட்டரில்தான் ஒசூர் இருக்கிறது. இரைச்சலுடன் போகும் பெரிய லாரிகளின், கண்டெய்னர் வாகனங்களின், கார்களின், சத்தங்களுக்கிடையில் சிலுசிலுவென்று பனிச்சாரலுடன் வீசும் காற்றினால் குளிர் கவ்வுகிறது. இங்கிருந்து வலப்புறம் பிரிந்து செல்லும் மண்சாலையில் இரண்டு கிலோமீட்டர் பயணித்தால் மலையும், மலை சார்ந்த பசுமையும் சூழ்ந்த ஹள்ளியோ, பள்ளியோ கிராமம் இருப்பதை இங்கிருந்தே பார்க்கமுடிகிறது. கட்டடங்கள் புகைபடிந்து தெரிகின்றன…இந்த இடத்தில் விட்டுவிட்டு பறக்கும்


பிறவி

 

 எழும்பூர் இரயில் நிலையம், பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் மதியவேளை. இன்னும் பண்டிகைகளின், தொடர் விடுமுறை தினம் துவங்காத நாட்கள் என்பதால், நெருக்கியடிக்கும் கூட்டமில்லை. பயணிகள், பிளாட்பாரத்தில் வந்து நின்றிருந்த இரயிலின் பெட்டிகளில் ஒட்டப்பட்டிருந்த லிஸ்ட்டில் தங்களின் பெயரையும், இருக்கை எண்ணையும் சரி பார்த்துக் கொண்டும், தங்களின் உடமைகளோடும், மனைவி, பிள்ளைகளோடும், அல்லாடிக்கொண்டிருந்தனர். கான்ஸ்டபிள் குமரேசனுக்கு, அன்று ரோந்து சுற்றும் பணி. காலையிலிருந்தே, குமரேசனுக்கு மனசு சரியில்லை. ரோந்தில் மனமில்லாமல்தான் சுற்றிக்கொண்டிருந்தார். கூட்டத்திலுள்ளவர்களை பார்வையிட்டுக் கொண்டே வந்தவருக்கு, அங்கே யாருக்கும்