கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2016

47 கதைகள் கிடைத்துள்ளன.

பாவ தகனம்

 

 மனிதர்களுக்குக் கொடுத்த வாக்கைக் காற்றில் பறக்க விடாமல் காப்பாற்றுவதிலும் சத்திய மனோ தர்ம வாழ்க்கை நெறிகளைக் கடைப்பிடிப்பதிலும் அப்பாவுக்கு நிகர் அவரே தான் ஊரிலே அவர் ஒரு பெரிய மனிதனாகத் தலை நிமிர்ந்து நடப்பதற்கு அதுவே முதற் காரணமென்பதை அறிந்து கொள்ளக் கறை படியாத அவரின் வாழ்க்கைப் புத்தகத்தைப் படித்தாலே போதும் அதன் ஒவ்வொரு பக்கத்திலும் இதற்கான அவர் பெற்ற அனுபவங்கள் படிக்கும் போதே உங்கள்: கண் முன்னால் களை கட்டித் தோன்றும் மெய்யறிவு காண்கின்ற அவரின்


ஊழ்

 

 தங்கவேலுவுக்கும், ராஜாத்திக்கும் ஒரே பிள்ளை ராஜா, அதனால் ராஜாத்தி கொடுக்கும் செல்லம் அளவுகடந்து போயிற்று, எந்த அளவுக்கு என்றால் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று வகுப்பிற்கு வெளியே நிற்கவைத்த ஆசிரியையிடம் சண்டைக்குப்போகும் அளவிற்கு, தங்கவேலுவும் ராஜாத்தியிடம் சொல்லிப்பார்த்தார். அவள் மாற்றக்கருத்தாக வேறு பள்ளிக்கு அவனை மாற்ற எண்ணினாள். எந்த பள்ளிக்கு சென்றாலும் வீட்டுப்பாடம் செய்யாமலிருக்க முடியாது என்று கூறி பிரச்னையை அப்போது நிறுத்தினார். ராஜா வளர வளர பிரச்னைகளும் வளர்ந்தது, படிப்பு அவனுக்கு பிடிபடாத விஷயமானது. எப்பொழுதும் நண்பர்கள்


தாய்மை

 

 கருப்பு நிறச் சாலையில் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. இரண்டு சக்கர வாகனத்தில் ஒய்யாரமாய் கேசவன், அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தான். எதிர்க்காற்றில் தலைமுடி தென்னங்கீற்றாய் பறந்தது. அலுவலகத்தில் அன்றைய வேலை பரப்பரப்பாக ஓடியது அவனுக்கு. “கேசவனுக்கு என்னாச்சு… இன்னிக்கு ஒரே சிரிப்பும் கும்மாளுமாக இருக்கிறார்” என்று அலுவலகத்தில் அரசபொறசலாகப் பேச்சு அடிப்பட்டது. அன்றைய தினமும் புதியதாய்தான் பட்டது அவனுக்கு. அந்த சந்தோசத்தை மனதிலே நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டான். கேசவன் சார்… கேசவன் சார்… என்று பியுன் ஆறுமுகம் கூப்பிட்டும்


ஓர் உணவு விடுதியும் இரண்டு காதலிகளும்

 

 உடம்பும் மனசும் அப்படியொரு பரபரப்பிற்கு ஆட்பட்டு ரொம்ப நாளாகிவிட்டது அவனுக்கு.அழகானப் பெண்களைப் பார்க்கிற போது அவ்வகைப் பரபரப்பு ஏற்படும் . அப்போதும் ஏற்பட்டது. இன்னும் கொஞ்சம் விபரீதத்துடனே. மைதிலி என்று வாய் விட்டுதான் அலறியதாக அவனுக்குத் தோன்றியது.ஆனால் அலறல் சப்தம் கேட்டு நடந்து கொண்டிருந்தவர்கள் யாரும் திரும்பிப் பார்க்கவில்லை. ஓடிக்கொண்டிருந்த வாகனங்கள் எதுவும் நின்று விடவில்லை. புகைக் காற்று அதன் திசையை மாற்றிக் கொண்டு அலறவில்லை. அப்படியானால் குரல் சரியாக எழும்பி அடையாளம் காட்டவில்லையா. அப்படியெல்லாம் நிகழ


ராஜதந்திரம்

 

 கடற்கரை மணலில் அமர்ந்திருந்தான் அவன். தன் எதிர்காலம் கேள்விக்குறியாவதை நினைத்து வெம்பிக்கொண்டிருந்தான், பார்த்திபன். வருங்காலம் அவனின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஏன் அவனை ஒரு அரக்கன் என்று கூட அழைக்கலாம். ஆனால், அதைப்பற்றியெல்லாம் அவன் கவலைப்படப்போவதில்லை. மறதி ஒன்றே மக்களின் மிகப்பெரிய பலவீனம். மறந்துவிடுவார்கள். இதையும். இங்கொன்றும் அங்கொன்றுமாய் விழுந்துகொண்டிருந்த துளிகளில் ஒன்று, அவன் வாய் மறைக்கும் அடர் மீசையைத் தாண்டி உதட்டில் விழுந்தது. நிமிர்ந்து வானம் பார்த்தான். வானத்தை கருமேகமது மூடியதால் கடுங்கோபம் கொண்டு


சென்னையில் ஒரு சின்ன வீடு

 

 “இந்த தாய் சொல்வதில் எத்தனை உண்மை இருக்கிறது”? காயத்திரி சிவராமன் தனக்குள் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்கிறாள். திருமதி சங்கரலிங்கம் காயத்திரியை மிகவும் கடினபார்வையுடன் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். “சில மனிதர்கள் தங்களின் சுயநலத்திற்கும் தங்களின் பாதுகாப்புக்கும் எந்தப் பொய்களையும் சொல்வார்கள். வறுமையான நாடுகளில் இது சகஜம். நாகரீகமான ஆங்கில நாட்டிலும் இப்படிப் பொய் சொல்கிறாளே………….இவள் இந்தப் பொய்களை ஏன் சொல்கிறாள்?” காயத்திரியின் மனதில் பல கேள்விகள் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. திருமதி சங்கரலிங்கம் காயத்திரியின் மன ஒட்டத்தைப் புரிந்து


நீதிக்கு ஒருவன்

 

 வாசுகி தொலைபேசியைக் கீழே வைத்த விதம், அது பல கிலோகிராம் எடை கொண்டது என்று எண்ணத் தோன்றியது. மனைவியை அதிசயமாகப் பார்த்தார் விவேகன். எதற்கும் கலங்காத நெஞ்சுரத்தால், பல ஆண்களும் எட்ட முடியாததொரு உயரத்தை எட்டி இருந்தாள் வாசுகி. நாற்பது ஐந்து வயதுக்குள் வக்கீல், அரசியல் கட்சி ஒன்றின் பெண் பகுதி தலைவி, செனட்டர் என்று படிப்படியாக ஏறியிருந்தாள். இப்படிப்பட்டவளே அதிரும்படி அப்படி என்ன செய்தி வந்திருக்கும்? ஆரம்பத்தில் தான் அளித்த ஊக்கத்தையும் பக்கபலத்தையும் மறந்து, இப்போதெல்லாம்


கதை கதையாம் காரணமாம்…

 

 கண்ணுக்கெட்டும் தூரம் வரை மணல்வெளிகள்…மணல்வெளிகள் சொல்லும் தத்துவத்தில் ஒட்டாத பாதங்களைக் காண முடியும்….சூரியன் காணாத மணல்வெளிகளில் காற்றின் கண்கள், நற நறத்தே கிடக்கின்றன….மணல்களின் படிமங்களாய் வழுக்கிக் கொண்டே செல்லும்,இரவுகளின் வீரியத்தில் நிழல்கள் தன்னிறம் மாறுவதை ஹைக்கூவாக உணர்ந்த பின் கிடைக்கும் புதுக் கவிதையாக, ஒரு மரபு மாந்திரீகம் விதைக்கிறது…….. எப்போதும்.. இரவென்றால் எப்படி இருக்கும் பாலைவனம்….. !!!….. வனங்களில்…கணிக்க முடியாத வானம் கொண்ட பாலைவனம் குளிர்களின் கம்பிளியை போர்த்திக் கொண்டே இருக்கிறது…. கடுங்குளிர்…. தேகம் நடுக்க….. நடுவினில்


துவேஷம்

 

 “எக்காரணத்தை கொண்டும் துரியோதன்னுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை மீற மாட்டேன். போரில் அர்ச்சுன்னனை கொல்ல வேண்டும் என்பது என் சபதம். அவன் எனது சகோதரன் என்று அறிந்தாலும் அவனை கொல்லும் எண்ணத்தில் இருந்து பின் வாங்க போவதில்லை. ஆனால் தாயே. உனக்கு கொடுத்த வாக்குறுதியின்படி உனக்கு ஐந்து மகன்கள் இருப்பார்கள். அர்ச்சுனன் அல்லது நான்” என்று கர்ணன் குந்தியிடம் சொல்லும் வசனத்தை படித்தவுடன், புத்தகத்தை மூடி கண்ணாடியை கழற்றி மேசையில் வைத்தார் குமரப்பன். அவருக்கு மனதில் மிக


பெளர்ணமி நிலவில்

 

 பாஸ்கருக்கு தன் இளம் மனைவி பவானியுடன் ஐந்தாவது மாடியில் அமைந்திருக்கும் அவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு அரட்டையடிப்பது மிகவும் பிடித்திருந்தது. புதிதாகத் திருமணமான இந்த ஐந்து மாதங்களாக இரவு உணவு முடிந்ததும் இருவரும் மொட்டை மாடிக்கு வந்து விட்டால் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். அந்த பிளாக்கில் குடியிருக்கும் அனைவருக்குமே டெரஸ் சொந்தமானது என்றாலும், மற்ற குடித்தனக்காரர்கள் எவருமே இரவில் அங்கு வருவதில்லை. பகலில் ஏதேனும் துணிகள் காயப்போடுவதோடு சரி. இவர்கள் ஐந்தாவது மாடியில்