கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2015

39 கதைகள் கிடைத்துள்ளன.

வேலைக்கு போக விரும்பிய மனைவி

 

 காலையில் மாணவர்களின் கூட்டம் அதிகம் இருந்தது, நானும் என் மனைவி, பையன் மூவரும் மாறி மாறி மாணவர்கள் கேட்டதை எடுத்துக்-கொடுத்து களைத்து போய்விட்டோம். மணி ஒன்பது ஆகும்போது பள்ளி மணி அடித்து விடும், அதற்குள் நோட்டு புத்தகம், பேனா போன்ற பல பொருட்கள் வாங்க வேண்டும் அதற்காக காலில் இறக்கை கட்டிக்கொண்டு மாணவர்கள் பறப்பார்கள், அதற்குத்தகுந்தவாறு நாங்கள் மூவரும் வேகமாக பொருட்களை எடுத்துக்கொடுத்து காசையும் வாங்கி போடவேண்டும். அப்பாடா ஒரு வழியாக பள்ளி மணி அடிக்க மாணவர்கள்


செத்து செத்து விளையாடுபவன்

 

 கடவுள் எப்போதும் தனக்குப் பிடித்தவர்களைத்தான் சோதிப்பான் என்று மணிகண்டனின் அப்பாயி அடிக்கடி சொல்லுவாள். அதனாலேயே அவன் ஒரு போதும் இறைவனின் பிடித்தவர்கள் லிஸ்ட்டில் இருக்க விரும்பியதில்லை. குறைந்தபட்சம் பிடித்தவர்களின் லிஸ்ட்டில் தான் இல்லாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்தபடி இருப்பான். வெள்ளிக்கிழமை கறி தின்னுவது, அந்த தெரு கோவிலில் தினமும் கொடுக்கிற சுண்டலை இரவு சரக்குக்கு சைடு டிஷ்ஷாக பயன்படுத்துவது என்று எதையாவது செய்தபடி இருப்பான். வீட்டில் இருந்தாலாவது அம்மா இவை எதையும்


பெரியவர்

 

 நடராஜ் அவரை பார்க்க சென்ற போது அவர் கொல்லைபுறத்தில் இருப்பதாக தெரிந்தது. அங்கு சென்ற போது அவர் இடுப்பில் ஒரு துண்டை கட்டிக்கொண்டு துடைபத்தால் குப்பையை கூட்டிகொண்டிருந்தார். இவனை பார்த்ததும், ஆச்சிரியமயிருக்கே எப்பிடியோ வந்துட்டியே. வா வா வா, என்று மிகவும் அன்புடன் அழைத்தார். அவருக்கு 76 வயதிருக்கும், சதையில்லாத ஒத்தை நாடி உடம்பு. தோளில் சுருக்கம் இருந்தது. அந்த காலத்து மக்களுக்கு இதுபோன்ற உடல் வாகு சாதாரணம். வயது ஆகா ஆகா சதை குறைந்துவிடும். அவர்கள்


சுட்ட கதை..

 

 ஓப்பன் பண்ண…. டிரங் பெட்டியில் பழைய பட்டு புடவையின் கீழிருந்து புகைப்படம் ஒன்றை எடுத்த விரல்கள் லேசான நடுக்கத்துடன் நீள்கின்றது வாசலில் கத்திருக்கும் போலிஸ்காரரிடம்….. போட்டாவை உற்று பார்த்தவாறே…”பொண்ணை கடைசியா எப்ப பார்த்திங்க? “நேத்து கலம்பற பள்ளியோடத்துக்கு போனவ இன்னும் வரலீங்க” எனும்போது முட்டிக்கொண்டு வந்த அழுகையை அடக்க முயற்ச்சித்து தோற்று போனார் பால்ராஜ் பால்ராஜ் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, மொழிவரியக பிறிக்கப்படதா இந்தியாவில்,தமிழகத்தின் கோவை அருகே சூலூர் கிராமத்தில் மனைவி எஸ்தருடன் வாழ்ந்து வந்தார்,பிழைப்புக்காக


ஏன் இப்டி செஞ்சேன்?

 

 “ஹலோ குணா, பீ நெகட்டிவ் ரத்தம் தேவைப்படுது… ஹாஸ்பிட்டல் வரைக்கும் வரமுடியுமா?” தேவ் பேசும்போதே, அவசரத்துக்கான அவதி தெரிந்தது… தேவ், ஜேகே மருத்துவமனையில் பணிபுரியும் என் சமீப கால நண்பன்… கண் தானம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்று எங்கள் அலுவலகத்தில் நடந்தபோது தொடங்கிய நட்பு, இப்போது இதைப்போன்ற அவசியமான சந்திப்புகள் மூலம் தொடர்கிறது… எங்கள் நட்பு வட்டத்தின் அத்தனை பேருடைய ரத்த ஜாதகமமுமே தெரியும் அவனுக்கு… இப்போது நான் ஏதேனும் காரணம் கூறி மறுத்தாலும், அதை பெரிதாக


விபத்தில் சிதைந்த காதல் கதை…!

 

 சேது என் பைக்கின் பின்னால் உட்கார்ந்திருந்தான். அவன் என் கூட வருவது எனக்குப் பிடிக்கவில்லை. நான் அவனை அழைத்து வரவில்லை. வரும் வழியில் பஸ்-ஸ்டாப்பில் நின்று ஏறிக் கொள்கிறான். தினமும் எனக்குத் தொல்லையாயிருந்தது. யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரே பேச்சில் முறிக்க நினைத்தேன். பஸ் வந்தவுடனே ஏறிப் போக வேண்டிதானே… …என்றேன் நீதான் வர்றியே… எதுக்கு பஸ்…என்றான். அவனுக்கு வெட்கமில்லை. இப்படி நான் கேட்டபிறகும் வருகிறானே…? மானங்கெட்டவன்…. மனது திட்டியது. இவனை ஏற்றிக் கொள்ளாமல் செல்ல என்ன வழி


எய்தவர் யார்

 

 ‘புது உலகம் எமை நோக்கி பிரசுரம்’- ஆடி 99 லண்டன்-97. ஜனட் மிகவும் ஒய்யாரமாக அமர்ந்திருந்து,கண்ணாடியிற் தன் அழகை ரசித்தபடி சிவப்பு லிப்ஸ்டிக்கைத் தன் இதழ்களுக்குப் பூசிக் கொண்டிருந்தாள் அவளின் செய்கை அவளது காதலன் பீட்டருக்கு எரிச்சலைத் தந்தது. கொஞ்சக் காலமாக அவள் தன்னை அளவுக்கு மீறி அலங்கரிப்பதாக அவனுக்குப் பட்டது. பீட்டர் தன்னைப் பார்க்கிறான் என்பதைக் கடைக் கண்ணால் எடைபோட்டபடி ஜனட் தன்வேலையைத் தொடர்ந்தாள்.அவளுக்கு இப்போது வயது இருபது. பதினெட்டுவயதிலேயே ஒரு குழந்தைக்குத் தாயாகி விட்டாள்..


ஏலம்

 

 காலை எட்டு மணிக்கு தென்காசியிலிருந்து கிளம்பி டிரைவருடன் தனது காரில் திம்மராஜபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார் சந்தானம். கடந்த வாரத்திய தினசரியில் திம்மரஜபுரத்தில் உள்ள அருள்மிகு வரதராஜப் பெருமாளுக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத இரும்புப் பொருட்களும், மரச் சாமான்களும் ஏலம் விடப்போவதாக இணை ஆணையர் பெயரில் டெண்டர் கோரி நோட்டீஸ் வந்திருந்தது.  உடனே சந்தானம் கோவில் இணை ஆணையரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, ‘நேரில் வந்து ஏலப் பொருட்களைப் பார்த்து, பின் விருப்பமிருந்தால் இரண்டு லட்ச ரூபாய்க்கான வரைவோலை


ஒரு சத்திய தேவதையின் தரிசன ஒளியில் சரிந்த நிழற் கோலம்

 

 புதிதாக ஓரு கல்யாணக் காட்சி நாடகம், சாரதா பார்த்துக் கொண்டிருக்க அந்த வீட்டில் களை கட்டி அரங்கேற இருந்தது இதற்கு முன் பெரியக்காவின் கல்யாணத்தையே முதன் முதலாகப் பார்த்த ஞாபகம் அலைகழிக்கும் ஒளிச் சுவடுகளோடு ஒரு மாயக் கனவின் நிழல் வெளிப்பாடுகளாய் அடிக்கடி அவளுள் வந்து போகும் அதை நிஜமென்றே நம்ப முடியாத நிலையில் மீண்டும் மனதை ஊடறுக்கும் துருவப் போக்கான ஒரு காட்சி நிழல் இரண்டாவது அக்கா மஞ்சரியின் இந்தக் கால் விலங்குக் கல்யாணம் மிகவும்


வேகம்

 

 தேசிய நெடுஞ்சாலை 4. ஹுண்டாய் கார் பாக்டரிக்கு அருகில் சிகப்பு சிக்னலுக்கு நிற்காமல், அந்த மாருதி ஸ்விப்ட் கார் சென்னையை நோக்கிப் பறந்தது. சாலையோரத்தில் இருந்த ட்ராபிக் போலீஸ்காரர் சைகை காட்டியும், விசிலடித்தும் நிற்காமல் வேகமாகப் பறந்தது. போலீஸ்காரர் அந்த காரின் எண்ணை தன் பாக்கெட் நோட்புக்கில் குறித்துக் கொண்டார். அந்தக் காரை ஓட்டிக் கொண்டிருந்த வாலிபன் ஆக்சிலரேடரையும், ஹாரனையும் அழுத்தியபடி முன்னால் செல்லும் வாகனங்களை வேகமாகத் தாண்டிக் கொண்டிருந்தான். அவனால் முந்தப்பட்ட வாகனங்களின் டிரைவர்கள் அவனைத்