மன்மதப் பாண்டியன்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: January 20, 2024
பார்வையிட்டோர்: 4,372 
 
 

(1998ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 5-10 | அத்தியாயம் 11-15

அத்தியாயம்-6 

நான்கு வாயிலும் நான்கு கட்டுகளும் கொண்ட பரிமள சாந்தி என்ற தாசியின் வீடு. அலங்காரமாக இருந்தது. 

அத்தனை மாடங்களிலும் எண்ணெய் விளக்குகள் எரிந்தன. நடுக்கூடங்களில் தொங்கு விளக்குகள் ஆடாமல் அசையாமல் எரிந்தன. 

உள்ளே நிறைய புகை ஏற்றிவிட்டு, தீக்கணப்பை நடுக் கூடத்தில் வைத்து விட்ட பரிமளசாந்தி, “ஏண்டி அல்லிக் கொடி! நான் சொன்னது காதில் விழுந்ததா?” என்று கோபத்தில் கேட்டால். 

பரிமள சாந்திக்கு நாற்பது வயது இருக்கும். இன்னும் கட்டுக் குலையாமல் பழைய சொரூபத்தை வைத்திருந்தாள். பாவாடை தாவணி அணிந்தால் போதும், “இப்போதுதான் பூப்பு எய்தினாளோ?” என்று கேட்கும்படி இருந்தாள். 

தாய் இப்படி இருந்தால், பெண் எப்படி இருப்பாள்? சயன அறையில் தந்தம் பதித்த கட்டில் மேல் இறகுப் படுக்கையில் அல்லிக்கொடி மல்லாந்து சாய்ந்திருந்தாள். கையில் ஏடும் எழுத்தாணியும் இருந்தது. 

பக்கத்தில் ஓலை நறுக்குகள் பல நடுவில் துவார மிட்டு, மஞ்சள் தடவிய மங்களத்தோடு இருந்தன. 

கண் ஆயிரம் என்று. முதல் வாக்கியத்தை அமைத்து, அதற்கு ஏற்ற மோனை சரிவர அமையாமல் நீக்கி இருந்தான், அல்லிக்கொடி! 

நல்ல பதினெட்டில் பருவம்! பதமான இளசு! தேகம் சிற்ப இலக்கணம்! மார்பு இரண்டும் நிமிர்ந்து பார்க்கும் மயிலைக் காளைகள்! இடுப்பு ஒடிசலோ, கடைசல் எடுத்த வளைவுகள்! அப்போதுதான் அவள் இரவு ஆகாரம் உண்டு. தாம்பூலம் தரித்திருந்தாள். வாயில் கற்பூரம், கிராம்பு, லவங்கமாக வசந்தம் வீசியது. தாம்பூல ஈரம் அவளது உதடுகளை மென்மையாகப் பூசி, “வாய்கூட இவளுக்கு பூப்பு எய்யுமோ!” என்று கூறும் வண்ணம் இரத்தச் சிவப்பாக இருந்தது.

கண்ணாயிரம் கொள்ளினும் காணாது..என்ற வரி அப்படியே முறிந்து நின்றுவிட- 

அவளோ அந்த வெள்ளி எழுத்தாணியால் சிந்தூரல் கன்னத்தில் சிறிதாகக் குத்தி சொறுகும் கண்ணோடு யோசித்திருக்க, 

தாய் பரிமளசாந்தி ஆடிச் சுழல்போல் உள்ளே வத்தாள். 

சீற்றத்தோடு மகளைப் பார்த்து, “அடிப்பாவி! நீயும் உன் எழுத்தும் நாசமாய் போக!” என்று சொல்லி, 

அவள் கையிலிருந்த எழுத்தாணியையும், மெத்தையில் கிடந்த வெற்று ஒலைகளையும் வெளியே தூக்கிக் கடாசி விட்டாள். 

“என்ன நீ சொத்தைச் சேர்க்காமல், செத்தையைச் சேர்க்கிறாயே! பனையோலையா குடும்பத்தைத் தாங்கப போகிறது! பொன் ஒலையை பூட்டிக் கொள்ளடி, பாதகி எத்தனைதரம் சொன்னாலும் கேட்காமல் கொள்ளாமல், ஆகாயத்தையும் பூமியையும் பார்க்கிறாயே! அரசர் வரப் போகிறார்! எழுந்துபோய் அவரை மயக்கவேண்டியதைக் கவனி” என்று கூறி நிறுத்தினாள், அவள். 

பெண் அல்லிக்கொடி கண்ணில் சுள்ளி எரிந்தது. இரண்டு புருவ இடுக்கில் ஒரு சிணுங்கலான நெரிப்பு எழுந்தது. 

“இந்தாம்மா! இதுபோல இன்னும் ஒருமுறை செய்தாயோ. நான் கப்பரை ஏந்தி விட்சுணியாக வெளியே போவேன்” என்று கடிந்து கூறினாள். 

தாய் அவ்வளவில் முகம் சிவந்தவளாகி, பெண்ணின் மெத்தைக் கட்டிலேயே அமர்ந்து, 

“அடி, துப்புக்கெட்டவளே இப்படி உலசும் தெரியாமே எத்தனை காலம் இருக்கப் போகிறா உன்னையொத்த பெண்கள் உலகத்தை வெல்கிறார்களே! நீ இப்படி, கொண்டதே கோலம் என்று இருக்கிறாயே! எத்தனை தடவைதான் உனக்கு உபதேசம் செய்வது? என்று சரமாரி யாகப் பேசினாள் தாயார். 

பெண்ணுக்குத் துக்கம் வெகுண்டு வந்தது. உறுத்த லாக ஒரு பார்வை பார்த்தாள். “அம்மா! நீ சொன்னபடி அரசரை நான் வசப்படுத்தியாகிவிட்டது. இன்னும் என்ன தான் செய்யச் சொல்கிறாய்?” 

“அப்படிக் கேள்! சொல்கிறேன்! ஏற்கனவே குற்றாலத்தில் வைத்து நான் சொல்லவில்லை!” என்று கேட் டாள், பரிமளசாந்தி ஆத்திரத்துடன். 

“என்ன சொன்னீர்கள்” 

“இந்த அருவிலேயே குளிக்க, எத்தனை மன்னர்கள், மந்தரிகள், சேனாதிபதிகள் வருவார்கள் தெரியுமா? இப்போது யாரும் வருவதில்லையே என்றேன்! நினைவு இருக்கிறதா?” என்றாள், தாயார். 

அல்லிக்கொடி புருவத்தைத் தூக்க, சட்டென்று அத்தனை விஷயமும், மனசில் நினைவுக்கு வந்தன.தாயார் கெட்டிக்காரி, சாமர்த்தியக்காரி! எல்லோரும் சொத்தை வளைக்கப் பார்த்தால், இவன் தேசத்தையே வளைக்கப் பார்ப்பாள்! அவள் ஆசையைப் பாரேன்! ஒரு தேசத்தை ஆளவேண்டுமாமே! 

அதற்காக ஏன் இவளிடம் சண்டை போடவேண்டும்? அவள் ஆசை அவளுக்கு! 

“சரிம்மா! மன்னரை நான் இன்னும் வசப்படுத்தி நீ சொல்றபடியே செய்யறேன்.. போதுமா!? என்ற வார்த்தை களை நுனிநாவால் சொன்னாள். அவள்’ 

“என் கண்ணே. என் ராஜாத்தி!” என்று பெண்ணைத் தழுவிக் கொண்டாள், பரிமளசாந்தி. 

பிறகு எழுந்துகொண்டு, “அல்லி! இன்னும் கொஞ்ச நேரத்தில் மன்னர் இங்கே வரப்போகிறார். சித்தமாய் இருந” என்று சொல்ல- 

“மன்னவரா? இப்போது வருகிறாரா?” என்று திகைத்துக் கேட்டாள், அல்லிக்கொடி. 

“ஆமாம்! உன் பெயரில் நான் லிகிதம் அனுப்பியிருக் கிறேன்” என்றாள், பரிமளசாந்தி. 

“அம்மா, உனக்கு வேறு வேலையில்லை?” என்று அவள் நிந்தனையாகச் சொல்லும் வார்த்தையைக் கேட்கத் தாயார் அங்கே நிற்கவில்லை. 

சிறிதுநேரத்தில் குதிரை வரும் சத்தமும், அது நிற்கும் சத்தமும் கேட்க, 

அதிவீரன் கம்பீரவசமாக உள்ளே நுழைந்து ஒரு மிருதுவான புன்னகை செய்து ஆசனத்தில் அமர்ந்து கொண்டான். 

கண்ணைக் கொட்டாது ஒரே ஒரு விழி அளவால் பார்த்தாள் அல்லி! அடுத்து அடுத்து அவளால் அடக்கத்தில் இருக்க முடியவில்லை. 

ஏட்டையும் எழுத்தாணியையும் அள்ளி வைத்து விட்டு, தாவி அவன் அணைப்பில் ஆழ்ந்து கொண்டாள்.

கண் கழிந்தது. 

கால துவண்டது 

அவளது குளிர்ந்த உடம்பு பூராவும் அவனது விஸ்தார தேகத்தில் சரணடைந்து கொண்டன. 

சித்தினி இளம் பெண் தானே இவள் என்று நினைத்தான். 

அவளை அப்படியே தூக்கி, மெத்தை மீது தவழ விட்டு, அவனும் தலையணையில் ஆய்வாக அமர்ந்து கொண்டான். 

அதிவீரன் மன்மதக் கலையில் தேர்ந்தவன். கைகள் முதலில் அவள் மீது விரவிக்கொண்டு சென்றன. 

அவளது மென்மையான தேகம் பல இடங்களில் வழுக்கியது. சில நெருக்கங்களில் வியர்வை பூத்து மென்மையாக இருந்தது. மேலே மேலே கைளை நோவில்லாமல் வழுக்கி செலுத்த அந்தப் பசபசப்பு உதவியது. 

அந்த ஸ்யரிசம் பட்டு நாளாகிவிட்டதா? 

அவள் தன் உடலை அவனது விரல்கள் பரிமாறு வதற்கு வசதியாக தளர்த்திக் கொடுத்தாள். சில வாரங்களாக அவளது உடலில் சேர்ந்துவந்த வெப்பம் மெல்ல மெல்லக் குறைந்து கொண்டிருந்தது. 

நாவிக் குழிவுக்குக் கீழே மெல்லியதாக அது இறங்கும் போது, அவளது உயிர் நாடிக்குள் ஏதோ சென்று நொடுவது போல் தோன்ற, “ஆ” என்று சிருங்காரமாகக் கத்தினாள். 

அந்த “ஆவை வரவழைக்கும் தொடு குறி சாத்திரம் அவனுக்குத் தெரியும். 

தனது ஸ்பரிசங்களை பஞ்சுபோல் ஆக்கிக் கொண்டு, அவளது இடை ஆடையை தொழ்த்தி உள்ளே செல்ல, 

அடைபட்டிருந்த அந்தப் பிரதேசத்திலிருந்து ஒரு வெம்மை ஆவி அவன் விரல்களை நோக்கி வீசியது. 

அதை ரசிப்பவன் அவன். 

அந்தச் சூட்டின் இதம் அவனைச் சற்றே மெய் மறக்கச் செய்யும். மேலும் மன்மதச் சிகரங்களுக்கு ஏறவேண்டிய அவன் விரல்களை, அவை வெந்நீர் வைத்து. ஒத்தியது போல இருக்கும். 

அவள் இப்போது அக்னிக் குழம்பாக மாறி இருப்பாள் என்று அவனுக்குத் தெரியும். ஆற்றாமை அவளுக்குத் தாங்காது. போதை பெற்றதுபோல உறக்கமாகக் கண் பார்க்கும் தன் தணலை எல்லாம் எங்கேயாவது கொட்டி ஆற்றதா என்று துடியாகத் துடித்துக்கொண்டிருப்பாள் என்று அவனுக்குத் தெரியும். 

அவள் எதிர்பார்த்ததற்கு இணங்க, அவள் தன் அங்கங்ககளை தளர்த்தியும் படர்த்தியும், புரளவும் விட்டு அவன் கவனத்தை இழுத்துக் கொண்டிருந்தாள். 

அதிவீரனுக்கு மேலும் அவளைத் தவிக்கவைக்க விரும்பமில்லை. 

ஒரு வீணையை அள்ளுவது போல எழுந்து, தலையணியில் பொருத்தமாகப் படுக்கவைத்தான். பிறகு கால்களில் ஜூரம் ஜொலிக்க, அவளை நோக்கி இறங்கினான். அவன். 

இமய உச்சிக்குச் சென்று அதன் குளிரில் அபிஷேகமாகிவிட்டுத் திரும்பினாள், அவள். 

மெல் மெல்ல தன் சுயநினைவுக்குள் இறங்கிக் கொண்டிருந்தாள். 

இழைப்பும் மூச்சும் சீரானதும் உடல் வியர்ப்புகள் மெல்லிய கோடுகளாக அங்கங்கு வழிய. 

“சுவாமி!” என்றாள். 

“என்ன அல்லி” என்றான், அவன், 

“ஏன் இத்தனை காலம் வரவில்லை?” 

“ம்ம்ம்…” என்று பெருமூச்சுவிட்டு, “ராஜகாரியத்தையும் கவனிக்க வேண்டாமா?” 

“கவனிக்கிறீர்களா!” என்று நிமிர்ந்துகொண்டு கேட்டாள், அவள். 

“ஏன் அதில் என்ன சந்தேகம்?” 

“உண்மையில் கவனிக்கிறீர்களா? அல்லது அந்த இனத்துப் பெண், இந்த சுகம் தருவாள். இன்ன இனத்துப் பெண்ணுக்கு எங்கே தொட்டால் ஆசை வரும் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்களா?” என்றாள் அவள். 

அதிவீரன் சிரித்தான். “அது ஒரு தனி கலை, அல்லி! எந்தக் கலைக்கும் ஆராய்ச்சி செய்து இலக்கணம் எழுதலாம்…”

“இதுதான் ராஜ காரியமா?”

“என் ராஜகாரியத்தில் இது ஒரு பங்கு”

“இந்தப் பங்கைத் தவிர மீதிப் பங்குகளை ஒழுங்காகச் செய்கிறீர்களா, சுவாமி” 

“ஏன் இப்படிக் கேட்கிறாய்?” 

“என்னென்னவோ செய்திகள் என் காதில் விழுகின்றனவே, சுவாமி” 

“என்ன செய்தி சொல்” 

“நாட்டில் பெரிய யுத்தம் வரப்போகிறதாமே?” 

“பெரிய யுத்தமா?” என்று சிரித்தான். அதிவீரன், “இருக்கும். மன்னவர்கள் எல்லோரும் சின்னவர்கள் தானே! அவர்கள் எப்படி பெரிய யுத்தம் செய்யமுடியும்?”

“ஏன் முடியாது? பலர் ஒன்று சேர்ந்தால்..”

“சேரமுடியுமா?” 

“முடியும் நிலை வந்தால்…” 

“அப்போது அதைப் பார்த்துக் கொள்ளலாம்”. 

சட்டென்று எழுந்து அமர்ந்தாள். அவள். 

“சுவாமி! என்ன எதுவும் தெரியாமல் இருக்கிறீர்கள் தாங்கள்? நாட்டில் நடப்பது எதுவும் தங்களுக்குத் தெரியாதா?”

“என்னதான் நடக்கிறது அல்லி!” என்று வேடிக்கை அக்கறையோடு கேட்டாள். அவன். 

“திருவடி ராஜ்ஜியத்தில் இருந்து வடக்கு நோக்கி. பெண்ணும் பொருளும், ஆட்களும் போய்கின்றனராம். தெரியாதா?”

“ஏதோ கொஞ்சம் கேள்விப்பட்டேன்! அரச குமாரி யாரோ போவதாக…” 

“அவள் மட்டுமில்லை. இன்னும் ஆட்களும் பொருளும் போகின்றனவாம்”. 

“எதற்கு?” 

“வடக்கே ஏதோ கூட்டுச்சேரப் பார்க்கிறார்களாமே! மதுரை ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு?” 

அதிவீரன் நிமிர்ந்து அமர்ந்தான். புதுமையாக இருந்தது செய்தி. 

“நாயக்கர் ஆட்சியையாவது.– கவிழ்க்கிறதாவது?”

“இல்லை சுவாமி! நிறைய சதிகள் நிகழ்ந்து கொண் டிருக்கின்றன. பிரதானி அரியநாதர் எங்கே தெரியுமா?”

“மதுரைப் பிரதானி மதுரையில் இருப்பார்!”

“இல்லையே! இப்போது அவரை மதுரையிலே காணவில்லையாமே?” 

“எங்கே போயிருப்பார்” 

“ஒன்று அவர் மறைந்து போயிருக்கவேண்டும். அல்லது அவரை யாராவது கடத்திப் போயிருக்கவேண்டும்”

அதைக் கேட்டுக் கட கட என்று சிரித்தான், அதிவீரன்!

”அந்த வயதானவரைக் கடத்தி என்ன பிரயோசனம்!” என்றான். அவன். 

“அவரிடம் பெரிய ரகசியம் இருக்கிறதாமே?”

“ரகசியமா? என்ன ரகசியம்?” 

அந்தக் கேள்வி கேட்டு முடியவில்லை, வாசலில் சல சலப்பு கேட்டது. “ஆ” என்று ஒரு தீனக் குரலுடன் கேட்க, திடுக்கிட்டு எழுந்தான், அதிவீரன். 

அவன் கை வாளைப் பற்றியது. 

அத்தியாயம்-7 

வெளியே சலசலப்பு! 

அதிவீரன் எழுந்து கதவருகே போனான். அல்லி, “வேண்டாம்” என்று ஜாடைகாட்டியும் கதவைத் திறந்து வெளியே பார்த்தான். 

பகீர் என்று, கத்தி ஒன்று வீறிட்டு, அவன் காதருகே பிய்த்துக் கொண்டு ஓடியது. 

அதிவீரன் பட்டென்று குனிந்து உள்ளே தத்திக் கொள்ள, மேலும் ஒரு கத்தி வீறிட்டு பெருத்து உலோக ஓசையோடு தரையில் உருண்டது. 

துணுக்குற்றான், அதிவீரன்! 

கோபம் எழுந்து கண்கள் சிவப்பேறின! 

கதவை விருட்டென்று மூடித் தாழிட்டு உள்ளே, ஒடி உக்கிராணத்தில் இருக்கும் ஆயுதப் பெட்டியில் இருந்து, கத்திகளை அள்ளிக்கொண்டு, மாடிப் படி ஏறினான்! 

தட்டோட்டின் திட்டி வாயிவை எச்சரிக்கையாகத் திறந்து, திறந்தவெளிக்கு வந்து ஆகாய இருட்டைச் சற்று நேரம் பார்த்திருந்தான். 

இதற்குள் கண்களுக்கு இருட்டில் பார்க்கும் சக்தி கூடி விட்டது. 

கைப்பிடிச்சுவர் ஓரமாகச் சென்று, மெல்ல எம்பிப் பார்த்தான். இருட்டுக்குள் நாலைந்து குதிரை வீரர்கள் நிற்பது தெரிந்தது. என்ன ஆச்சரியம்! பாண்டியனின் தென்காசித் தலைநகரிலா இப்படி நடக்கிறது! 

இரண்டு கையில் ஒன்றில் காயம்! ஒன்றைத்தான் உபயோகிக்கலாம்! கத்தி ஒன்றைச் சுழற்றினான். “விண்” என்று ஏவினான். 

அது ஒரு இலக்கில் பாய, கீழே சலசலப்பும், கூக்குரலும் கேட்டது.

இரண்டாவது கத்தியும் அவன் கையிலிருந்து பால, கூச்சல் அதிகமாகியது. குதிரைகள் தடுமாறுவது கேட்டது. அதன்பின் தொடர்ந்த சில விநாடிகள், அவனுக்கு யுகங்களாகத் தோன்றின. 

திடீரென்று அப்போது அல்லியின் அலறலும் மனிதச் சந்தடிகளும் கேட்டது. 

”ஐயோ! என்னைப் பிடித்துப் போகிறார்களே! ஆபத்து! சுவாமி, வாருங்கள்! வாருங்கள்!” என்று அவள் கூக்குரல் கேட்டது. 

அவ்வளவில் அதிவீரன் வெகுண்டு, மேலும் கத்திகளை மானாவாரியாக எறிந்துவிட்டு, 

“அல்லீ!” என்று வாளை மட்டும் எடுத்துக் கீழே ஓடினான். 

படிகளில் இறங்கி, வாயிலில் போவதற்குள் அந்த வீரர்கள் அல்லியைக் குதிரையில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். 

படிகள் தாண்டிக் குதித்த அதிவீரன் அந்தக் குதிரைகள் திரும்பி ஓடுவதைத்தான் பார்க்க முடிந்தது. அவர்கள் எல்லோரும் நீலத் தலைப்பாகை கட்டி இருந்தார்கள். 

தனது குதிரையைத் தேடி அவசரமாக ஒட, அது காணாமல் போனது அப்போதுதான் தெரிந்தது. 

விக்கித்து அவன் நிற்க, அல்லியின் தீனக்குரல் மட்டும் சிறிது நேரம் வரை உருக்கமாகக் கேட்டது. 

பெருமூச்சு விட்டு, பதட்டத்துடனும் என்ன செய்யலாம் என்ற பரபரப்புடனும் அவன் மாளிகைக்குத் திரும்பி வர. இத்தனை நேரம் நடந்ததை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பரிமளசாந்தி, குய்யோ முறையோ என்று கத்திக்கொண்டு அவன் முன்னால் வந்தாள். 

“ஐயோ! என் அல்லி போனாளே! என் தங்கம் போனாளே! என் ராசாத்தி போனாளே!” என்று பிரவாபித்து தலைவிரி கோலமாய் அரற்றி அழுதாள். 

அதிவீரன் அவளைச் சமாதானப்படுத்தப் போனான். அவளோ அவன் மீது எரிந்து விழுந்தாள். “நீரும் ஒரு மன்னரா? உங்களுக்கு ஒரு கோட்டையா? ஒரு தலை நகரமா? வெட்கம் இல்லையா, கண்முன்னால் உன் ஆசை நாயகியைப் பறித்துப் போகிறான். சும்மா இருந்தீரே! என் சொத்தை இழந்தேனே! என் பொக்கிஷத்தை இழந்தேனே!” என்று மேலும் கூக்குரலாகக் கத்தினாள். 

அவள் வார்த்தைகள் உண்மை அம்புகளைவிட மனசில் அதிகமாகத் தைக்க- 

அதிவீரன் அவளை விறைத்துப் பார்த்துவிட்டு. உள்ளே விரைவாகப் போனான். 

சரச சல்லாப அறைக்குள் போனபோது, இன்னும் தூபம் கமிழந்தது. 

பழங்கள் கும்பலாக நின்றன. 

மது ஜாடி ஓரத்தில் நின்றது. 

மெத்தை மீது அவனது பிரதிநிதிபோல அவன் தலைப் பாகை மட்டும் அமர்ந்திருந்தது. 

அதைச் சற்று விரக்தியோடு பார்த்தான், அதிவீரன்! பிறகு சற்று யோசனையோடு அதைக் கையில் எடுத்துக் கொண்டான.

வாயில் நடையில் இன்னும் பரிமளசாந்தி சோகப் புலம்பலோடு இருப்பதைப் பார்த்தான். 

மனதில் இரக்கமும், அதேநேரம் அவமானமும் கொண்டவனாக ”அம்மணி! சில வார்த்தைதான் சொன்னீர்கள்! சொன்னதையும் அழுத்தமாகச் சொல்லி விட்டீர்கள்! ஒரு அழகுப் பெண்ணை வீடு புகுந்து அபகரித்துப் போகும் அளவுக்கு என் நாடு சீர்குலைந்துவிட் டது! “நீரும் ஒரு மன்னரா? என்று கேட்டீர்களே! சரியான கேள்வி அம்மா அது! அதற்கு மறுமொழி சொல்லத்தான் இத்தனை நேரம் குழம்பிக்கொண்டிருந்தேன்! ”உங்களுக்கு ஒரு கோட்டையா? ஒரு தலைநகரமா? என்று கேட்டுவிட டீர்கள்! இன்னும் ஒரு வார்த்தை கேட்க மறந்துவிட்டீர்கள்? இந்தாருங்கள்! என் மணிப்பாகை. என் தலை அதற்குத் தகுதி அல்ல! இதைக் கழற்றி இதோ வைத்துவிட்டேனம்மா என்றைக்கும் உங்கள் அல்லியை மீட்டுத் தருகிறேனோ, அன்றைக்கு இதை ஏற்றுக் கொள்கிறேனம்மா! அதுவரை இந்த அதிவீரனுக்கு ஆகாயம்தான் தலை! நட்சத்திரங்கள் தான் மணிகள்! நாட்டில் அமைதியைக் குலையவிட்ட மன்னனுக்கு இவைதான் இனி அணிகலன்கள். பூமிதான் இனிப் படுக்கை! வருகிறேன் அம்மா! என் கண்ணைத் திறந்துவைத்தவர் நீங்கள்! அதற்குப் பெரிதும் கடமைப் பட் டிருக்கிறேன். நிச்சயம் அல்லியை மீட்டு வருகிறேன். இது சபதம்!” என்று அழுத்தமும் வேகமும் கொண்டு பேசினான், அதிவீரன். 

கையிலிருந்த பாசுையைத் தாழ்வாரத்தில் மெல்ல வைத்தான். 

அவன் பேச்சு அத்தனையும் கேட்டுவந்த பரிமன சாந்திக்கு. இப்போது திடீரென்று அவன் மீது துக்கமும் இரக்கமும் பொங்கி வந்தது. 

”மன்னவா! மன்னிக்க வேண்டும்! மகளை இழத்த நிலையில் ஏதோ வாய் பிதற்றிவிட்டேன்! தங்களது குணத்திலும், சுருணையிலும்தான் நாங்கள் வாழ்கிறோம். தங்கள் சுகம் இன்றி, எங்கள் இலட்சியம் ஏது? பாகையை எடுத்துக் கொள்ளுங்கள்! அணிந்து கொள்ளுங்கள்! உங்கள் பேச்சு ஒன்றே போதும். என் பெண் எனக்குத் திருப்பிக் கிடைப்பாள் என்ற நம்பிக்கைக்கு! இந்தாருங்கள்…!” என்று கனிந்த குரலில் பேசி, பாகையை எடுத்துக் கொடுத்தாள். 

பலமுறை பரிந்து பேசியும் பாகையை அதிவீரன் ஏற்றுக் கொள்ளவில்லை. 

“உரிய நேரத்தில் வந்து எடுத்துக் கொள்கிறேன் அம்மா! இப்போது அவசரமாகப் போகிறேன்! உடனே காரியத்தில் இறங்க வேண்டும்! விடை கொடுங்கள்” என்று சொல்லி, தாழக் குனிந்து வணங்கி வெளியேறினான், அதி வீரன், 

அரை நாழிகையில் தென்காசிக் கேட்டை மூடப்பட்டது! 

அதன் இழு பாலம் மேலே இழுக்கப்பட்டுவிட்டது. காவல் ஆட்கள் கோட்டைக்கு உள்வசமாய் சுற்றி வரத் தொடங்கினார்கள். 

வீதிகளில் அரச வீரர்கள், குதிரைகளில் குறுக்கும் நெடுக்குமாகச் சென்றார்கள்.

மடங்களிலும் சத்திரங்களிலும் உள்ளவர்களை எழுப்பி அதிகாரிகள் வினவ ஆரம்பித்தார்கள். 

குளம் கோவில்களில் வேவுக்காரர்கள் தேட ஆரம்பித்தார்கள். 

இரவு ஒரு ஜாமத்திற்குப் பிறகு அதிவீரனும் அவனது பிரதானிகளும் சைனிய அதிபதிகளும், விசுவநாதர் கோவில் முன் கூடினார்கள். 

எல்லோரும் களைத்திருந்தார்கள். அவர்கள் குதிரை களும் களைத்திருந்தன. 

பிரமாண்ட கோபுரத்துக்கு வெளியே இரவுக்கு அடைக்கப்பட்டிருந்த வாசல்முன் நின்றுகொண்டார்கள். 

“என்ன ஆச்சரியமாய் இருக்கிறது. ஐந்து வீரர்களும், ஐந்து குதிரைகளும் எப்படித் தப்பமுடியும்? வீரர்களாவது பதுங்கி இருக்கலாம். குதிரைகள் எங்கே பதுங்கி இருக்க முடியும்?” என்று அங்கலாய்த்தான். அதிவீரன். 

“நீலத் தலைப்பாகைக்காரர்கள் தானா?” என்று கேட்டார். ஒரு அதிபதி! 

“அதைக் கண்கூடாகப் பார்த்தேன்! சந்தேகம் என்றான். அதிவீரன். 

கூட்டம் மவுனமாக நின்றது. 

“இந்த நீலத் தலைகளை நடத்துபவன் யார் என்று தெரியவில்லையா?” என்றான், அதிவீரன். 

“தெரியவில்லை சுவாமி!” என்றார். சைனியாபதி. 

“நாட்டுப் புறங்களில்தான் நடமாடுகிறார்கள் என்று கேள்விப்பட்டோம்! இப்போது நகரத்துக்கும் வந்து விட்டார்களே!” என்றார். ஒரு உபதளபதி! 

“தலைநகரத்தில் அவர்களை உலாவவிடுவதா? அநியாயம்! அநியாயம்!” என்றான். அதிவீரன்! 

“நாட்டில் குழப்பம் விளைவிக்கவே இவர்களை யாரோ ஏவிவிட்டிருக்கிறார்கள்!” என்றார். பிரதானி. “மன்னவாரி” என்றார். ஒரு வயதான தளபதி. “சண்டைக்கு உரிய அறிகுறிகள் தோன்றிவிட்டன? எச்சரிக்கை வேண்டும்!” 

“இன்று நடந்த சம்பவம், மன்னரைக் கொல்ல ஒரு ஏற்பாடே!” என்றார், ஒரு உபதளபதி. 

“நம் கோவிலின் பரம்பரை தாசிகளில் முதன்மை பெற்றவள், பரிமளசாந்தி அவள் மகள் பறிபோனது. ரொம்ப வருத்தமாக இருக்கிறது என்றார், பிரதானி. 

“அது பெருத்த அவமானம்” என்றான், அதிவீரன், அவன் குரல் உச்சத்தில் ஏறியது.- 

“என் கொடி. குடை, பல்லக்கு போனதுபோல இருக்கிறது, என் தாசி போனது!” என்று கடிந்து கொண்டு கூறினான். 

“சுவாமி! மலையாள ராஜ்ஜியங்களும், தஞ்சை ராஜ்ஜி யமும் ஒன்று சேருகிறது. இதனால் மதுரை ராஜ்ஜியத்துக்கு தீங்கு வருகிறதோ இல்லையோ, நம் பாண்டியத்துக்குப் பயம்! 

“மலையாள அரசர் நம் பாண்டியத்தின் மீது கண்ணாக இருக்கிறார். அதுவும் விஜயநகரம் அழிந்து போனதில் இவர்களுக்குத் துள்ளாட்டம் வந்துவிட்டது. 

“சதிகள் நிறைய நடந்திருக்கவேண்டும். நமக்குத் தெரிய வந்தது. அல்லியின் பிடிப்புதான்!” 

“அதிபதிகளே! பிரதானிகளே! நிறுத்துங்கள்! என் காதில் வேல் பாய்ச்சுகிறீர்கள்! ஒன்றை நிச்சயம் சொல் கிறேன். உங்கள் மீது நான் குறை கூறப்போவதில்வை! என் குறைதான் இந்த நாட்டின் குறையாக மாறி இருக்கிறது என் குறை! என் கவனக் குறை என் ராஜரீகக் குறை நல்லது. விசுவநாதர் என் கண்ணைத் திறத்துவிட்டார். அவர் சன்னதி முன் சத்தியம் செய்வோம்! இந்த நீலப் பாகை களை நிர்மூலமாக்குவோம். அவர்களும் பகை மன்னர்களும் சேர்ந்து செய்யும் சதிகளை முறியடித்த பின்தான், மறுவேலை! இது சத்தியம்!” என்று அதிவீரன் ணர்ச்சி பொங்கக் கூச்சல் இட 

எல்லோருமே, “சத்தியம்!” என்றார்கள். 

அடுத்து நான்கு கோட்டை வாயிலுக்குப் பாதுகாவலுக் காக நான்கு குழுவாகப் பிரிந்து அவர்கள் சிளம்பினார்கள். வடக்கு வாசலை அணுகிய அதிவீரன், கணிைத்து நிற்க 

அவன் மனதில் ஒரு யூகம் உதிர்த்தது. 

அத்தியாயம்-8 

வடக்குக் கோட்டை வாயில் பக்கம் அதவீரன் போன போது, அந்த நிழல் சலனம் கவனத்தைக் கவர்ந்தது. 

பிராணிபோல ஏதோ ஒன்று ஓரமாக நகர்ந்து கொண்டிருந்தது. வியப்புடன் பக்கத்தில் போய்ப் பார்க்க குட்டையான ஒரு கூனன் தலையை நிமிர்ந்து அவரைப் பார்த்தான். 

“யார் நீங்கள்?” என்று அதிவீரன கேட்க அவணைப் பொருட்படுத்தாமல் மேலே கூனன் நின்று. வெறுப்போடு அதிவீரனைப் பார்த்தான். “என் பெயர், வெங்கடநாயகன்!” என்றான். 

“இந்த ராத்திரியில் எங்கே போகிறீர்?” என்று கேட்க- 

“ஐயா! பாபவிநாசம் போய்த் தீர்த்தம் ஆட நினைத் திருந்தேன். அடியேனுடைய பிரார்த்தனை அது? இங்கே வந்து பார்த்தால், கோட்டைக் கதவை அடைத்திருக்கிறார் களே! அநியாயமா இப்படிச் செய்வார்களா? மக்கள் எப்படிப் போவார்கள்? கலி முததிவிட்டது” என்று பிரலாபித்தார். 

“ஐயா!” என்றான். அதிவீரன்! ”ஊரில் எதிரி வேவுக்காரர்கள் வந்திருக்கிறார்கள்! அவர்களைப் பிடிக்க வேண்டி, கோட்டைக் கதவுகளை அடைத்திருக்கிறார்கள்!”

சிரித்தான், கூனன் வெங்கடநாயகன். உங்களைப் பார்த்தால் அரசாங்க அதிகாரிபோல தென் படுகிறீர்கள். வேவுக்காரனைப் பிடிக்கவேண்டுமானால், வேவுகாரனை அல்லவா ஏவவேண்டும். அதை விட்டு கோட்டையை மூடி, அவர்களைத் தேட முடியுமா? அத்தனை பேரும் மறைந்துவிடுவார்களே!” என்றான். 

அவன் சொன்னது சுருக்கென்று தைத்தாலும். “இல்லை ஐயா! அத்தனை பேரும் குதிரை வீரர்கள்!! என்றான். அதிவீரன். 

“சரிதான்! யானையையே மறைப்பார்கள் வேவுக் காரர்கள். குதிரையை மறைக்க மாட்டார்களா?” என்று சொன்னவன் சற்று நின்று. 

“ஐயா! எத்தனைக் குதிரைக்காரர்கள்?” என்றான், ஆவலோடு 

“நான்கு பேர்” என்றான், அதிவீரன். 

“அப்படியா? இரண்டு நாழிகை முன்னால் சேணியர் தெருவில் நான்கு வீரர்களைப் பார்த்தேன். அவர்களாக இருக்குமோ?” என்று சந்தேகமாகப் பேசினான், கூனன்.

“உடை எப்படித் தரித்திருந்தார்கள்?” என்றான் அதிவீரன் பரபரப்புடன். 

“நிச்சயம் உள்ளூர்க்காரங்கள் இல்லை! கோட்டைக்கு வழிபற்றி இரண்டு பேர் தர்க்கம் செய்து கொண்டிருந்தார்கள்!” என்றான், கூனன். 

”ஐயா! எப்போது பார்த்தீர்கள்?” என்று ஆத்திரமாகக் கேட்டான், அதிவீரன் 

“இரண்டு நாழிகை இருக்கும்” என்று சொன்னான், 

இதற்கிடையில் மன்னனின் அதிகாரிகள் அங்கே வந்து சேர, 

“நல்லவேளை! அவர்கள் தப்பித்திருக்க முடியாது. இரண்டு நாழிகை முன் சேணியர் தெருவில் இருந்தார்களாம்?” என்றான், அதிவீரன். 

‘”அப்படியா?’ என்றார். பிரதானி கூனனைப் பார்த்துக் கொண்டு, “இனி ஒவ்வொரு வீட்டையும் தேட ஆள்விட வேண்டியதுதான். 

“அதுதான் வழி. சீக்கிரம் கண்டுபிடித்துவிடலாம்” என்றான். அதிவீரன். 

இதற்குள் கோட்டை வாயில் தளபதி வந்து வணங்கி நிற்க, 

“தளபதி! கதவை மூடுமுன் யாராவது குதிரை வீரர்கள் வாயில் வழியே சென்றார்களா?” என்று கேட்டான், அதிவீரன். 

“இல்லை பிரபு” என்று, தலைகுனிந்து கூறினான், தளபதி., 

“நல்ல”து என்று கூறிய அதிவீரன் அதிவீரன் வெங்கட நாயகனை நோக்கி, “ஐயா! பெருந்தகையீர் நகரத்தில் விஷமிகள் வந்திருக்கிறார்கள். அவர்களைப் பிடித்த பிறகு தான் கோட்டையைத் திறப்பார்கள். அதுவரை தயவு செய்து வெளியே போகவேண்டாம் !” என்று சொல்லிவிட்டு. மற்றவர்களுக்கு சைகைக் காட்டிக் கிளம்பினான். 

மறுநாள் காலையில் அதிகாரி யாவரையும் அரண்மனைக்கு வரவழைத்து, நகரத்தில் உள்ள எல்லா வீடுகளிலும் புகுந்து, குதிரைகளையும் குதிரை வீரர்களையும் தேடச் சொன்னான், அதிவீரன். 

பிறகு முதல் காரியமாக இலஞ்சிச் சாமியாரின் மடத்திற்குப் போனான். 

மடத்தில் சாமியார் இல்லை. வெளியூர் போய்விட்டார் என்று கூறினார்கள். 

அடாடா! அதற்குள்ளாகவா போய்விட்டார்! நம்மிடம் சொல்லாமல் போய்விட்டாரே! 

மன்னர் யோசனையிட்டுத் தவித்துக்கொண்டிருந்த போது, மடத்தில் இருந்த மூத்த தம்பிரான் உருத்திராசமும் விபூதியுமாக வந்து, 

மன்னவா வணக்கம் நமது குரு போகும்போது, இதைத் தங்களிடம் கொடுக்கச் சொன்னார். நானே அரண் மனைக்கு எடுத்து வரலாம் என்று நினைத்திருந்தேன்! தாங்களே இங்கே வந்துவிட்டீர்கள்!” என்று கூறி, பட்டு பையில் பொதித்த மூலைச் சுருளைக் கொடுத்தார். 

அதிவீரன் அதை வாங்கி தாழ்வாரத் திண்ணையில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தான். 

மன்னருக்கு இலஞ்சி முருகன் ஆசிர்வாதமும் கடாட் சமும் உண்டாவதாக! 

தலைநகரத்தில் நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றிக் கேள்விப்பட்டோம்! விசனமாக இருக்கிறது. பாண்டியக் கொடிக்கு ஆபத்து வரக்கூடாது என்பது நம் அவா! அதற் காகத் தலங்களில் சென்று தெய்வங்களிடம் வேண்டிக் கொள்ள, நாம் புறப்பட்டு விட்டோம் திருமங்கைக்கு யாது நேர்ந்தது என்பதை மன்னர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அவள் ஆபத்தில் இருந்தால் அவளைக் காப்பாற்ற வழி செய்ய வேண்டும். அல்லிக் கொடியையும் உடனே கண்டுபிடித்தாக வேண்டும்? நீவத் தலைப்பாகைக் காரர்கள்தான் இந்த தீயச் செயலுக்குப் பின்னால் இருக் கிறார்கள் என்பது தெளிவு. நோய்மூலம் அறிந்து அதைக் களைய வேண்டுவது போல் இந்தத் தலைப் பாகைக்காரர் கள் யார்? அவர்களை’ யார் தோற்றுவித்து பாண்டிய நாட்டுள் அனுப்பியிருக்கிறார் என்பதை மன்னர் நிச்சயம் நம் வேவுக் காரர் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் தலைப் பாசைக்காரர்களின் பிறப்பிடத்தையே கொன்று நிர் மூலமாக்க முடியும். மன்னர் சற்று காலம் தமது கல்விக் கேள்வியிலே திளைத்துப் பொழுதைக் கழிக்காமல், உடனே இந்த அரசாங்கக் காரியங்களில் இறங்க வேண்டும். 

அப்போதுதான் தொன்மைவாய்ந்த பாண்டியக் கொடியைக் காப்பாற்றமுடியும். இல்லாவிடில் கொடிக்கே ஆபத்து வந்துவிடும். மன்னர் உடனே ஆவன செய்ய வேண்டுகிறோம். 

–திரு இலஞ்சி மடம் சாமியார். 

ஓலை நறுக்கைச் சுருட்டி தமது அங்கிப் பையில் அதிவீரன் திணித்தான். 

அந்தக் கணமே, அரண்மனையை நோக்கி விரைந்தான். 

மத்தியானப் பொழுது தாண்ட தாண்ட அதிவீரனுக்கு மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. 

வீடு வீடாகத் தேடச் சென்ற ஒவ்வொருவரும் வெறுமையாகத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். குதிரை களையும் காணவில்லை. குதிரை வீரர்களையும் காண வில்லை! 

ஒரு அதிகாரி மட்டும், இரவில் அதிவீரன் இழந்த அரச குதிரையைக் கண்டு பிடித்து அரண்மனைக்குக் கொண்டு வந்தார், 

மற்றபடி நீலத் தலைப் பாகைக்காரர்களைப் பற்றி ஒரு சிறு செய்தியும் கிடைக்கவில்லை, 

அதிவீரனுக்கு இது பெருத்த வருத்ததைக் கொடுத்தது.

தனது தலைநகரத்தில் இப்படி ஒரு அபசீர்த்தி நடந்து விட்டதே என்று மனம் நோவெடுத்தது. 

அல்லிக்கொடி அந்தக் கொடியவர்கள் கையில் அகப்பட்டு என்னமாகத் துடிப்பாளோ!! 

இதுவரை அதிவீரன் வந்து அவளைக் காப்பாற்றாதது குறிந்து, அவன் மீது நம்பிக்கையை இழந்திருப்பாளோ!

குதிரைக்காரர்கள் நகரத்துள் இருந்தால், அவளும் நகரத்துள்தான் இருக்கவேண்டும்.

அல்லியை இன்னும் கண்டுபிடிக்கமுடியாதது பெரும் வருத்தததைத தந்தது. 

தவிர, மனதின் அடி ஓரத்தில் ஒரு புதுமையான இன்பம் ஒதுங்கியிருந்தது. அது அடிக்கடி ஜாலம் காட்டி, அது இருக்கும் இடத்தை நெருடிக் காட்டியது. 

அதை நினைத்தால் கூட ரோஜா மணம் கமழ்கிறது. சங்கரநயினார் கோவிலில் கணீர் என்று பாடிய அந்தப் பாவையை, எப்படி அவனால் மறக்க முடியும். 

அவள் கண்கள் ஒரு குளிர்ச் சுனை. குளிரக் குளிர அதில் நீராடலாம். 

பெண் என்றால், அவள் பெண். 

சாமுத்திரிகா லட்சணம் அத்தனையும் பொருந்தியவள், அவள்! 

இவள் மலையாள அரச குமாரியா? 

இவள் எங்கே போகிறாள்? 

வடக்கே தீர்த்த யாத்திரையாக இருக்குமோ! 

அவளையும் அந்த நீலத் தலைப்பாகையார் வழி மறித்தார்களே! கோவிலுக்குள் வந்து அவளை அபகரிக்கப் பார்த்தார்களே! 

யார் இந்தத் தலைப்பாகையார்?’ 

இவர்கள் பின்னால் இருப்பது யார்? 

இந்தக் காரியம் எல்லாம் ஏன் செய்கிறார்கள்? பாண்டியத்தை நிலை குலைக்கவா இப்படிச் செய்கிறார்கள். 

இரவுப் பொழுதுவரை சிந்தனையிலும் யோசனை யிலும் இருந்துவிட்டான், அதிவீரன். 

இடையில் அரண்மனை வைத்தியர் வந்து அவன் புஜத்தில் மருந்துகள் வைத்துக் கட்டிவிட்டுப் போனார். 

அதன் உபாதைகள் வேறு உடம்பில் அடிக்கடி நோவு கொடுத்துக்கொண்டிருக்கிறது. 

இரவு சீக்கிரமே தனது உணவை முடித்துவிட்டு. தனது அத்தியந்த நண்பர்களான வீரகேசரியையும், விஜயகேசரி யையும் அழைத்துக் கொண்டான். 

“நீங்கள் என் நண்பர்கள்! எனக்காக உயிர்விடச் சித்தமாக இருப்பீர்கள்! நமது தலைநகரத்தில் நடந்த சம்பவம் என்னை தலைகுனியச் செய்துவிட்டது. பாருங்கள். நான் என் அரச முடியைக் கழற்றி வைத்துவிட்டேன். தாசி அல்லிக் கொடியை அபகரித்த ஆட்கள் இன்னும் நகரத்துள்தான் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் இடத்தை நாம் நிச்சயம் கண்டுபிடித்தாக வேண்டும். இதில் நான் உங்களை அதிகம் நம்பி இருக்கிறேன்! வாருங்கள் போகலாம்” என்றான். 

மூவரும் சாதாரணக் குடிமகன் வேடம் தரித்து அகலமான ராஜ வீதிகளை விடுத்து குறுகலான தெருக்களில் நுழைந்து குதிரை வீரர்களைத் தேடத் தொடங்கினார்கள். 

இரண்டு மூன்று நாழிகைகள் அலைந்து, மிகவும் களைப்பான பிறகு- 

ஊரின் மாவடிச் சத்திரத்தின் அருகே இளைப்பாறத் தொடங்கினார்கள்.

அதிவீரனுக்கு மனம் நொந்திருந்தது. என்ன செய்தும் இந்தக் குதிரைக்காரர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லையே! 

அவர்கள் எப்படி மாயமாக மறைந்துவிட முடியும்? ஒவ்வொரு வீட்டையும் அதிகாரிகள் சோதனை செய்தார்களா இல்லையா? 

அல்லது இந்தக் கொடியவர்களுக்கு உதவியாக நகரத்தில் யாராவது இருக்கிறார்களா? 

மாவடிச் சத்திரம் பழைய சத்திரம். பல இடங்கள் இடிந்து அது உபயோகம் இல்லாமல் இருந்தது. இங்கிருந்து பார்த்தாலே அதன் வெற்றுக் கூடு தெரிந்தது. ஒரு பக்கம் வழியே ஊடுறுவி மறுபக்கம் வரை பார்த்துவிடலாம். பெரிய தூண்கள் மட்டுமே நிற்க, இடையே உள்ள சுவர்கள் இடிந்து கிடந்தன. சுற்றி வர மரங்கள் சூழ்ந்த இந்தச் சத்திரத்தை யாராவது சீர்செய்து நடத்த முன் வரவில்லையே என்று அதிவீரன் வருத்தப் பட்டான். 

சுற்றிச் சுவர் மண்ணால் வடிக்கப்பட்டிருக்க, யதேச் சையாக அந்தச் சுவர் ஓரமாகச் சிறிது தூரம் நடந்த அதிவீரன் சட்டென்று நின்றான். 

ஏதோ மனதில் உறுத்த, காற்றில் மூக்கைக் கொடுத்து உறிஞ்சி உறிஞ்சிப் பார்த்தான். 

இன்னும் சில அடிகள் போய்விட்டும் உறிஞ்சிப் பார்த்த பிறகு, அந்த வீச்சம் இன்னதென்று புரிந்துவிட்டது. 

ஆ! இது குதிரைகளின் சிறுநீர் வீச்சம் அல்லவா? நன்றாகத் தெரிகிறதே! 

அப்படியானால் உள்ளே குதிரைகள் இருக்கின்றனவா? கட்டிடத்தை நன்றாக ஊடுருவிப் பார்க்கமுடிகிறதே! உள்ளே அவை இருக்கமுடியாதே! 

இருந்தாலும், மனதில் ஏதோ உறுத்தல் தோன்ற உள்ளே போனான். 

நண்பர்கள் தொடர்ந்தார்கள். 

கட்டிடத்தின் அருகில் நிறைய புதர்களும் செடிகளும் கொழித்து வளர்ந்திருந்தன. 

இவ்வளவு நெருக்கத்தில் பார்த்தபோது, கட்டிடத்தின் வெறுமை நன்றாகத் தெரிந்தது. 

ஒரு ஆட்டுக்குட்டி நின்றால் கூட அதன் வடிவம் வெளிப்புற வெளிச்சத்திற்குப் பின்னணியில் நன்றாகத் தெரிந்துவிடும். 

இந்த லட்சணத்தில் குதிரைகள் எங்கே நிற்க முடியும்? வீண்முயற்சி என்று திரும்பும்போது, அவன் பார்வை சற்றுத் தள்ளி தரையில் விழுந்து, அப்படியே லயித்து நின்றது. “ஜெயா, வீரா இங்கே வாருங்கள்” என்று கத்தினான். அதிசயத்தோடு தரையைச் சுட்டிக் காட்டினான். 

அத்தியாயம்-9 

புதரும் தழையும் மண்டிக்கிடந்த தரைவெளியில் ஒரு நீண்ட பலகை கிடந்தது. அதிவீரன் வியப்பு அடைந்து மேலும் சுற்றிப் பார்க்க அதுபோன்ற பல பலகைகள் தெரிந்தன. ஒன்றை எடுத்துப் பார்த்ததில் நிறையத் தழும்புகள் தெரிந்தன. பலமாக அங்கங்கே உலோகத்தால் அழுத்திய தழும்புகள். 

யோசனை தோன்ற கட்டிடத்தின் வலப்புறம் சென்று பார்த்தான். இரண்டு மரத் தடிகள் தரையில் நின்றிருந்தன. 

யோசனை பரபரக்க, கட்டிடத்து பக்கச் சுவரில் கால் வைத்து மேலே ஏறினான். தட்டோட்டியை அணுகியதும், குதிரைச் சாணமும் சிறுநீரும் மூக்கில் நெடி ஏற்றின. 

“வீரகேசரி” என்றான். வீரன் ஓடிவந்து, மன்னரை மேலே பார்த்து ஏறினான். 

தட்டோட்டியில் ஏறிப் பார்த்ததும் அவனும் ஆச்சரியத்தில் மூழ்சினான். “பார்வீரா! இப்படி ஒரு தந்திரம் செய்திருக்கிறார்கள். சாரம் கட்டி குதிரைகளை மேலே ஏற்றி இருக்கிறார்கள்!” என்றான், வீரன்! 

“எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?” என்றான், வீரன். “குதிரையின் மூத்திர நெடி அடித்தது. கீழே சோதித்ததில் சாரப் பலகைகள் தென்பட்டன!” என்றான். அதிவீரன்.

“அப்போ இங்கேதான் நீலத் தலைப்பாகைகாரர்கள் தங்கி இருக்கிறார்கள்.” 

“அப்படியானால் இப்போது எங்கே போய் இருப்பார்கள்?” 

“கோட்டைக் கதவு மூடி இருக்கிறது. தப்ப முடியாது.” அடுத்து மேலே தீவர்த்தி ஏற்றிக் கொணர்ந்ததில் சாணக் குவியல் பரவலாக இருந்தது 

அங்குதான் இரண்டு நாட்களும் தங்கி இருக்கிறார்கள் என்பது உறுதியாயிற்று. 

வியப்பும் வேதனையும் அடைந்த அதிவீரன் தீவர்த் தியை வாங்கி, சுற்றிவர ஆராய்ந்தான். ஒரு பக்கம் கைப்பிடி சுல்சுவர் எழுப்பப்பட்டு இருந்தது. 

சுவரில் ஒரு கல் சற்று துருத்தலாகத் தெரிய, அதைக் கையால் அசைத்துப் பார்த்தான். அசைந்தது. கையோடும். வந்தது. உள்ளே ஒரு துணிப்பை இருந்தது. அதிவீரன் அதை எடுத்துப் பார்த்தான். தீவர்த்தியை வீரனிடம் கொடுத்து, பையைப் பிரித்துப் பார்த்தான் 

உள்ளே வெள்ளிக் காசுகள் நிறைய இருந்தன. ஒரு பொன் நாண் ஒன்று இருந்தது. ஒரு பித்தளைச் சிமிழும் இருந்தது. 

சிமிழைத் திறந்து பார்த்தான். ஒரு பரிமள வாசம் அடிததது. உள்ளே வாசப்பொடி சிறிது இருந்தது. அவ்வளவே என்று மூடும் வேளையில் ஏதோ சிந்தனை வந்து, சிமிழின் வட்டமான பக்கவாட்டச் சுவரில் விரலை விட்டுப் பார்த்தான். நினைத்தது சரி என்று பட்டது. ஒரு மெல்லிய நறுக்கு ஓலை சிமிழின் உட்புறச் சுவரோடு பதிக்கப்பட்டிருந்தது. 

நறுக்கைத் தென்னி வெளியே எடுத்தான். பிரித்து பார்க்க, உள்ளே எழுத்து தெரிந்தது. படித்தான். 

நீலி, நீலமலை ஆத்தாள் துணை! இப்பவும் நறுக்கு கண்டதும் அதிவீரராமனின் தாசி அல்லிக் கொடி விஷயத்தை முதலில் கவனிக்க வேண்டியது. அடுத்து உடனே வடக்கே போகவேணும். இளைய நாச்சியாரை நமது ஆட்கள் பிடித்தார்களா, நரசிங்கம் குன்றில் வைத்தார்களா என்று தெரியவில்லை? இளைய நாச்சியாரைப் பிடித்தால்தான் பாண்டியனுக்கு நிறைய தலைவலி கொடுக்கலாம். எனவே மெத்தனமாக இருக்க கூடாது. தலைவர் மன வியாசலப்பட்டு இருக்கிறார் உடனே போய் அதைக் கவனிக்க வேண்டியது. 

இங்ஙனம்
திருவாய்க் கேள்வி
நீலி, நீலமலை 
ஆத்தாள் துணை. 

நறுக்கை மற்ற இருவர்களும் படித்தார்கள். 

“நல்லது!” என்று வெப்ப மூச்சுவிட்ட அதிவீரன், “வீரா, நிச்சயம் இவர்கள் கோட்டையைக் கடந்திருக்கமாட் டார்கள் வேறு எங்கேயாவது இருப்பார்கள்! வாருங்கள்! என்று கூறி, அவசர அவசரமாகக் கீழே இறங்கினான். 

மூவரும் குதிரை ஏறி குறுக்குத் தெருக்களைக் கடந்து பிரதான சாலைக்கு வந்தார்கள். 

சாலையில் சிறிது தூரம் செல்லவில்லை. அதற்குள் பிரதானியார் பத்து குதிரை வீரர்களுடன் எதிரே வருவது தெரிந்தது. வருபவர்கள் வேடத்தில் இருக்கும் அதிவீரனை அடையாளம் கண்டு கொண்டு, “மன்னவா! தங்களைத் தான் தேடி வருகிறோம். குதிரைக்காரர்கள் கோட்டையை விட்டுத் தப்பிவிட்டார்கள் என்று பதட்டத்தோடு சொன்னார், பிரதானி. 

”எனன! தப்பினார்களா? எப்படி?” என்று அதிவீரன் ஆத்திரத்தோடு கேட்க, 

“மன்னவா! கீழ்க் கோட்டை வாசலுக்குச் சற்று தூரத்தில் உள்ள இடத்தில் நெருப்பு உண்டாக்கி, அதன் புகை மூட்டம் கோட்டை வாயிலை மூடும்படி செய்து விட்டார்கள். பின்னர் புகை நடுவே புகுந்து நம் வீரர்கள் கண்களில் ஏதோ பொடியைத் தூவி எரிச்சலுண்டாக்கி விட்டு, கோட்டைக் கதவை அவர்களே திறந்து, இழுபாலத்தை அவர்களே கீழே இறக்கி, குதிரைகளோடு ஓடிவிட்டார்கள்!” என்றார். பிரதானியார். 

“எப்போது நடந்தது?” என்றான், மன்னன். 

“நடந்து இரண்டு முகூர்த்தம் ஆகிவிட்டது! செய்தி வந்து ஒரு முகூர்த்தம் ஆயிற்று!” 

நீண்டமூச்சை இழுத்துவிட்டான் அதிவீரன். பிறகு, “சரி! நீங்கள் கோட்டை வாயிலுக்குப் போய் அங்கே திலையைக் கவனியுங்கள்! பக்கத்து காடுகளில் ஒரு படையை விட்டுத் தேடச் சொல்லுங்கள்!” என்று சொல்லி. “இங்கே வாருங்கள்” என்று பிரதானியாரைத் தணிந்த குரலில் அழைத்தான் அதிவீரன். 

பிரதானி குதிரையை விட்டு இறங்கி மன்னன் அருகில் வந்தார். 

“கையை நீட்டுங்கள்!” என்று சொல்லி பிரதானி யின் விரிந்த உள்ளங்கையில் ஒரு பொருளை வைத்து மடக்கினான், அதிவீரன். 

“நாட்டின் நிலைமை சரியில்லை! பகைவர்கள் உளவு களை அனுப்பி, நிறையச் சதி செய்கிறார்கள் என்று அறிந்தேன். நேரில் சென்று எதிர் உளவு செய்யப் போகிறேன். நகரத்தை ஒழுங்காகக் கவனித்துக்கொள்ளுங் கள், கோட்டையை நான் சொன்னால் தவிர, திறக்க வேண்டாம். அவசியம் போகிறவர்களுக்கு அனுமதி கொடுங்கள். புலவர்களுக்கும் அனுமதி! நான் வருகிறேன். என் அன்னையிடம் என் வணக்கங்களைத் தெரிவியுங்கள். நான் விடைபெறுகிறேன்” என்று தழதழப்புடன் கூறினான், அதிவீரன். 

பிறகு, தம் சகாக்களை அழைத்துக்கொண்டு வேகமாகக் கிளம்பினான்.

தம் கையில் அரசனின் முத்திரை மோதிரத்தைப் பார்த்துக் கண்கலங்கி நின்றார், பிரதானி மன்னன் திரும்பும் வரை நகரத்தையும் நாட்டையும் ஆட்சி செய்யவேண்டும் அவர். 

சிறிதுநேரம் சிந்தனை வசப்பட்டிருந்தவர், “வாருங்கள்!” என்று தமது மெய்ப்படைக்கு சைகை செய்து, கோட்டை வாயிலை நோக்கி விரைந்து சென்றார். 

அடுத்த நாள் மதிய வேளையில் கோதை நல்லூர் போய்ச் சேர்ந்தார்கள்! வடக்கே போகும் வழியில் அது இருந்தது அல்லாமல் இரண்டு முக்கிய விஷயங்களுக்காக அதிவீரன் அங்கே போசு விரும்பினான். முதலில் குண்டல ராமனைச் சந்திப்பது குண்டலராமன் வடமொழி விற் பன்னர் கைவிரல்களைச் சொடுக்கினால், காளிதாசனு பர்த்துரு ஹரியும் உதிர்வார்கள். நாவில் சொல்வளம் புரண்டு விளையாடும். 

குறிப்பாக சிருங்கார ரசத்தில் தயங்காது மழை பொழிவார். இத்திக்கத் தித்திக்கக் கேட்டுக்கொண்டிருக்கலாம். கோதை நல்லூர் கோவில்களை திருமடைப்பள்ளி கைங் கரியம் செய்பவர். சமையல் செய்தால் நளபாகம்தான்! வெறும் பாத்திரத்தை அவர் தூக்கினால்கூட வாசனை வந்துவிடும் அதிவீரன் சில யாத்திரைகளில் அவரைத் தம்முடன் அழைத்துச் செல்வான். சுருள் அமுது செய்வதில் (வெற்றிலை மடித்துக் கொடுப்பது) நிபுணன். 

இரண்டாவது முக்கியமான விஷயம் சித்ராங்கி! கோவில் தாசி. அவள் சென்ற ஆண்டு வந்தபோது பக்குவத்துக்கு வரும் நேரம். இப்போது பக்குவம் ஆகியிருப்பாள் என்பது அதிவீரனின் நம்பிக்கை அவள் கண்ணில் மயக்கமான கவர்ச்சி ஒன்று உண்டு. கவிழ்த்திய சின்னக் கிண்ணம்போல இருந்தன. அவளது இரு மார்புகள். இப்போது கனத்து பருத்து, கடின மிருதுவாக ஒரு பந்துபோல இருக்கும் என்பது அதிவீரனின் நம்பிக்கை! இந்த அவசரத்தில் அவளையும் ஒருமுறை பார்க்கமுடியுமா என்று தப்பாத! 

குண்டல ராமனைப் பற்றி விசாரித்தபோது, அவர் பக்கத்தினுள் கலசமங்கலம் திருவிழாவுக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். 

அவருக்காகக் காத்திருப்பதில் பயன் இல்லை என்று உணர்ந்த அதிவீரன். விரைவாக அங்கிருந்து புறப்பட்டு, மாலையில் பிரசித்திப் பெற்ற ஆழ்வார் சத்திரத்திற்குப் போய் சேர்ந்தான். 

நாலு மார்க்கங்கள் வந்து சேரும் இடத்தில் இருந்தது. ஆழ்வார் சத்திரம். பெரிய பரோபகாரிகளாக இருந்த மூன்று செட்டியார்கள் அதைக் கூட்டி இருந்தார்கள். 

சத்திரம் ஒரு கட்டிடம் அளவி பல கட்டிடங்களாக இருந்தது. பல கிணறுகளும் இருந்தன. பல தோட்டங்கள்! பல தொழுவங்கள்! 

“இங்கே சற்றுத் தங்கிப் போகலாமா” என்றான். அதிவரன். 

“மன்னவா, நேரம் இல்லை! நாம் எங்கும் நிற்காமல் போனால்தான் அந்தத் தலைப்பாகைக்காரர்களைப் பிடித்து. விட முடியும். நாம் பின்பற்றி வருகிறோம் என்பது அவர் களுக்குத் தெரியாது. எனவே அங்கங்கே தங்கித்தான் செல்வார்கள். நாம் மட்டும் தங்காமல் போனால், அவர்களைப் பிடித்துவிடலாம்!” என்றான். வீரன். 

“வீரா! இங்கே தங்குவது என் நோக்கம் அல்ல! தென் காசியிலிருந்து தலைப் பாகைக்காரர்கள் வடக்கு நோக்கிப் போனால், இந்த வழியாகத்தான் போயிருப்பார்கள், எனவே சத்திரக்காரியக்காரரிடம் உளவு கேட்டால் சொல்வாரே!” என்றான், அதிவீரன். 

“நவலது, நீங்கள் இப்படி வெளிப்புறத்திலேயே இருங்கள்! நான் கேட்டு வருகிறேன்” என்ற வீரன், குதிரையைச் செலுத்தி சத்திர முகப்பு வாயிலுக்குள் நுழைந்தான். 

மன்னன் ஒரு மரத்தடியில் நின்றான். கீழே குதித்து, கை கால்களை நீட்டிவிட்டு ஆசுவாசமாக, அவன் கண்கள் பக்கத்து சத்திரத்து சாளரம் மீது பதிந்தது. 

சட்டென்று அவன் புலன்கள் துள்ளி எழுந்தன.

அத்தியாயம்-10 

ஆழ்வார் சத்திரத்துக்கு அப்பால் இருந்த வேம்பு மர குளிர்ச்சி நிழலில் நின்று அதிவீரன், சத்திரத்துக் கட்டிடம் ஒன்றின் சாளரத்தில் பார்த்தபோது அங்கே சந்திரன் ஒன்று தோன்றி திடீரென்று மறைவதைக் கண்டான். 

மனதில் அமிருதமான நினைவுகள் நோன்றின. அந்தச் சந்திரவதனி யார்? அவளது விழிகள் இரண்டும் மையல் கொட்டுகிறதே! அவளது பிரமிக்கும் பார்வையில் அவனை நோக்கி: “இந்த சுந்தர புருஷன் யார்?” என்ற கேள்வி ஓடுவது போல் தெரிகிறதே! 

மனம் குடைந்தது. உள்ளே எழுந்த தாபம் திமுதிமு என்று ஒரு வெப்பத்தை வளரச் செய்ததால், அதிக நேரம் யோசிக்க முடியவில்லை! 

குதிரையை மரத்தில் சுட்டினான். “இதோ சற்று போய் வருகிறேன்” என்று மற்ற மெய்யாளிடம் கூறி, சத்திரத்துச் சுற்றுச் சுவரைச் சுற்றிச் சென்றான். 

மெய்யாள் பார்வை விழாத இடத்திற்குச் சென்று சுவர் ஏறி குதித்து அந்தக் குறிப்பிட்ட கட்டிடத்தை நோக்கிச் சென்றான். 

முகப்புத் திண்ணையில் பல்வக்குத் தூக்கிகள் பல பேர் அமாந்து வெற்றிலை போட்டும். பேசிக் கொண்டிருந்தார்கள். சுற்றிவர புளிச் புளிச் என்று அவர்கள் அடித்த உமிழ்நீர்ச் சாயமாக இருந்தது. 

அதிவீரன் ஓரமாகப் போக, அவர்கள் பேசுவது காதில் விழுந்தது. 

“தென்காசிக் கோட்டையை அடைச்சுட்டாங்களாமே!” என்றார் ஒருவர். 

“உள்ளே கலவரமாமே!” என்றார் ஒருவர். 

“விஷயம் என்னென்னு தெரியலை! குற்றாலம் போற மக்கள் எல்லாம் தவிச்சுப் போச்சு!” என்றார் மூத்தவர்.

“ராஜா ஊரிலே இல்லையா?”

”அவரா! வேட்டைக்குப் போயிருப்பாரு!”

“என்ன வேட்டை?” என்று ஒருவர் கண்சிமிட்டிக் கேட்க- 

“பெண் வேட்டைதான்! மன்மதப் பாண்டியர் ஆச்சே அவர்!” என்றார் மூத்தவர். 

பொக்கென்று எழும் சிரிப்புக்கு இடையே அதிவீரன் உள்ளே போனான். 

கூடத்தில் பரிமளங்கள் பல வீச, அறை வாசல் ஓரமாக ஒரு சேடி அமர்ந்து சந்தனம் குழைப்பதைப் பார்த்தான். 

தனது அகன்ற கருவிழியால் அவள் அவனை நோக்கி குறுகுறு என்று ஒரு முறுவல் காட்ட- 

அவன் அவள் அருகில் சென்று “நான்தான் அதிவீரன்” என்று காதோரமாகச் சொன்னான்.

சேடியும் இளமை, சுகந்தவல்லி என்று பெயர் தரித்தவள். அதிவீரனைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறாள். இன்பக் கேளிக்கைகளில் வல்லவன் என்று பெண்களிடையே பேச்சு இருந்தது. 

இத்தனையும் நினைவில் வர, சுகந்தவல்லி கண் மட்டும் குறுகுறுக்காமல் அங்கங்கள் அனைத்தும் குறுகுறுக்க, துகிலை எல்லாம் வியர்வையும், மதன நீரும் படிந்து ஈரமாக்கி விட வேகமாக உள்ளே சென்று கதவை மூடிக் கொண்டாள். 

அதிவீரன் இதற்குள் காம வேட்கை முதிர்ந்தவனாய், கண்களில் தபதப என்று எரியும் கனலோடு நின்றுகொண்டிருந்தான். 

சேடி சுகந்தவல்லி திரும்பி வந்து, அவர் காதோரம் குனிந்து, “அடுத்து அறைக்குச் செல்லுங்கள்! எங்கள் எஜமானி உம்மைத் தேடி வருவாள்!” என்று பக்குவமாகக் கூறினாள். 

காதோர நெருக்கத்தில் அவள் பேசியதில் அவளது மெல்லிய பட்டு இழையான சுவாசங்கள் காதின் மெல்லிய சருமத்தில் வருடி பரவசத்தை வழங்க- 

அவளது உடல் வாசங்கள் வேறு அவன் மனதைச் கிறுகிறுக்க வைத்தது அவளை மறுகிப் பார்த்து, முகவாயைப் பிடித்து, செண்டு போல் மேலே தூக்கி, அவள் கண்ணில் தனது கண்ணை உறுத்தி வைத்து அதிலேயே ஒரு சம்போக உணர்வை அவளுக்கு ஊட்டினான். 

பின்னர் அவள் பணித்தது போல அடுத்த அறைக்குச் சென்றான். அது, ஏற்கனவே அலங்காரங்களால் ஜோடிக்கப்பட்டிருப்பதை அறிந்து, மகிழ்ச்சி அடைந்து, மஞ்சக் கூடத்துக் கட்டில் மீது அமர்ந்தான். 

சிறிது நேரத்தில் கம்மென்று கமழும் கதம்ப வாசனை யோடு அந்தச் சாளரத்துச் சந்திரவதனி உள்ளே வர. 

அதிவீரன் அவள் திசை திரும்பி கண்ணை அவள் மீது வைத்தான். வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை. சித்திரமா? சொப்பனமா? 

கற்பனையா? காவியமா? 

ஒரு விஷயம் அதிவீரனை குதூகலிக்க வைத்தது.

அவன் முன் நிற்பது சித்திராங்கி. 

யாரை அவன் தேடிப் போனானோ அவளே அவன் முன் பிரசன்னமாகி விட்டாள். 

ஒரு வருடத்தில் என்ன மாறுதல்! 

உடற் பரப்பின் வளைவுகள் யாவும் தெளிவாகி வனப்பாகி விட்டன. மார்பு நல்ல முகப்போடு ததும்பி விட்டது. குழந்தைத்தனம் விளையாடிய கண்களில் இப்போது தயக்கம் வந்துவிட்டது. 

இன்னும் அவள் கழுத்தில் முத்துச்சரம் விழவில்லை. எனவே கன்னி கழியவில்லை என்று தெரிந்தது. 

மருட்சியோடு அவன் முன்னால் வந்தாள். உடனே அமராமல் அவரைக் கூர்ந்து நோக்கி, “மன்னவரா?” என்று வாய்புதைத்துக் கேட்டாள். 

அதிவீரன் முகத்தில் புன்முறுவல் வயித்தது. 

“ஆமாம்” என்று தலை அசைத்தான் அவன். 

“அடியாள் மீது ஏது இவ்வளவு கரிசனம்?” என்று மதுரமாக மொழிந்தாள். 

“உன்னைத் தேடி உன் ஊருக்கே போய் வருகிறேன். சித்திராங்கி சென்ற ஆண்டு திருவிழாவில் பார்த்ததை மனதில் படம் வரைந்து வைத்திருக்கிறேன். பாவாடையும், சட்டையுமாக பிம்பம் போல் நின்றாயே!” என்றான் அவன். 

அதைக் கேட்ட சித்திராங்கி மகிழ்ச்சி மேலிட்டவளாய், “சுவாமி அடியாளை அவ்வளவு தூரம் நினைவு வைத்த தற்கு ஜன்ம ஜனமத்திலும் தங்களை மறக்காமல் இருப்பேன். என்றைக்கு தங்களைத் தரிசித்தேனோ அன்றைக்கே தங்களை மோகித்துவிட்டேன். பின்னர் தங்கள் கீர்த்தி கேட் சுக் கேட்கத் தங்கள் நினைவிலேயே எயித்துப் பைத்தியமாகி விட்டேன். இன்று அடியாளுக்குப் புனித நாள்! தங்களால் தான் கன்னித்திரை விலக வேண்டும் என்று உறுதி பூண்டிருந்த அடியாளுக்கு இந்த இடத்தில் தங்கள் சந்திப்பு நேர்ந்தது என்பதை நினைக்க நினைக்க ஆனந்தமாக இருக்கிறது” என்றாள் அவள். 

கீழே மடிந்து அமர்ந்து அதிவீரனின் பாதங்களைத் தொட்டு ஒத்திக்கொண்டாள். 

“நானும் அவசரமாகப் போகிறவன். என் ராஜாசு விஷயத்தில் உன்னைப் பார்க்கக்கூட நேரம் கிடையாது. ஆனால், எப்படியும் பார்த்துப் போக வேண்டும் என்று விடாப் பிடியில் வந்தேன்!” என்றான் அதிவீரன்.

“என் பாக்கியம் அது. சுவாமி! இல்லாவிடில் இன்று நான் மேலகிராமம் பாளையக்காரருக்கு அடியாளாகப் போயிருப்பேன்! தாங்கள் நல்ல வேளையாக என்னைக் குறுக்கிட்டு ஆட்கொண்டீர்கள்!” என்றாள் அவள் நன்றிப் பெருக்கோடு. 

அப்போது “யாரம! உள்ளே யார் வந்திருக்கிறது?” என்று இடிகுரல் கேட்க 

அதைத் தொடர்ந்து சித்திராங்கியின் தாயார் மாணிக்க ஆத்தாள் உள்ளே நுழைந்தாள். 

அங்கே சப்பிர மஞ்சத்தில் ஒரு புது ஆள் திக்பிரமை யோடு இருப்பதைப் பார்த்து, சற்று கண்களை இடுக்கிப் பார்தது. 

“ஓகோகோ! மன்னர் அதிவீர ராமபாண்டியரா இங்கே கைவரிசை காண்பிக்க வந்துவிட்டாரா?” என்று கைகொட்டி, முகவாயில் ஒரு ஆட்காட்டி விரலை வைத்து- 

தன் மகளை நோக்கி, “ஏண்டி? உனக்குப் புத்தி எங்கே போயிற்று? இந்த மாமன்னரின் பவிசு உனக்குத் தெரியாதா? தம்முடைய பிரதம தாசியை தம் கண் முன்னாலேயே பறி கொடுத்த சேலைப்பாண்டியர்தாண்டி இவர்! சேலை உடுத்தும் பாண்டியர்! இவரை நீ நம்பினாயோ, தட்டுவே வைத்து தலைப்பாகைக்காரன் கையிலே கொடுத்துடுவார்! ஆண்பிள்ளை என்று கைப்பிடிக்கப் போனாயே. இவன் கிட்டே!” 

சித்திராங்கி இப்போது கோபத்தோடு குறுக்கிட்டு ‘”அம்மா! வாயை அடக்கிப் பேசு! நாட்டுக்கு அரசரை அவமதியாதே! நாளைக்கு உன் கதி அதோகதி ஆகிவிடும். தெரியுமா?” என்று இரைச்சலாகக் கூறினாள். 

“அடி என் சமர்த்தே” என்று ஆரம்பித்தாள் மாணிக்கம் ஆத்தாள். “தலையைச் சீவி விடுவாரோ சீவி! இது யார் நாடு தெரியுமில்லே? வரதுங்க ராமன் நாடு! இங்கே இவர் செல்வாக்குப் பலிக்காது. ஆமாம், அவர் கையாலாகாதவர்டீ! இவர்கிட்டே போய் கன்னி கழியணும் என்று ஆசைப்பாடதே!” என்று மேலும் தொடர்ந்தாள் ஆத்தாள். 

“அம்மா!” என்று ஆத்திரப் பார்வை பார்த்துக் குறுக்கிட்டாள் சித்திராங்கி! “அம்மா! வாயை மூடிக்கொள்ளுங்கள்! உங்கள் அசுத்த வாயால் அவதூறு பேசாதீர்கள்! பாண்டியர் என்றால் அவர்தான் பாண்டியர்! பாண்டித்தியம் பெற்றவர்” என்று சொல்ல- 

“உன் பாண்டித்தியம் இங்கே யாருக்கு வேணும்! காலம் மாறிப் போயிடுத்துடி! எழுதி வைக்கிற நூல் பேசாதடை வேல் பேசும் அவர் பாண்டித்தியம் என்ன செய்தது. பார்! பறிபட்டுப் போன பிரதம தாசியை பறிக்க முடிந்தததா, திரும்பி?” என்றாள் மாணிக்க ஆத்தாள். 

அவள் வாய் கோணிப் பேசியதும், கையைக் காட்டி அபிநயத்ததும் சித்திராங்கிக்குப் பெரும் வெறுப்பைக் கிளறி விட்டது. 

அவள் பயமும், தாபமும் பொங்க, அதிவீரனைத் திரும்பிப் பார்த்தாள். 

அந்தக் காட்சி தொடங்கியதுமே அதிவீரன் கட்டிலை விட்டுக் காலைக் கீழே ஊன்றிவிட்டான். அவன் முகம் சிறிது சிறிதாகக் கல்லாகி வந்தது. மாணிக்க ஆத்தாள் பேசிய எல்லா வார்த்தைகளும் அவன் நெஞ்சில் சுருக் சுருக் என்று தைத்தன. 

உள்ளே கனன்று கொண்டு ஒரு கோபம் வீறிக் கொண்டு வந்தது. அவனது அனுபவம் வாய்ந்த மனம் “பொறுமை! பொறுமை!” என்றது. 

“ஆத்தாளே!” என்றான் அவன், அவனை மீறி ஆத்திரம் வந்துவிட்டது. “நல்லது! நீங்களும் என்னை ஏசினீர்கள்! உங்களை நான் எதுவும் சொல்லமாட்டேன்! ஏனெனில் இது உங்கள் குற்றமல்ல! என் குற்றம்! இலஞ்சிச் சாமியார் எத்தனையோ முறை சொல்லுவார்! ராஜாங்கத்தைக் கவனி! அதைச் செப்பனிட்டால்தான் மற்ற கேளிக்கையில் நான் ஈடுபடலாம் என்று அவர் சொன்னதை நான் செவி மடுத்தேன் இல்லை!. அதன் பலன் இதோ இந்த அவமானத்தை நான் தாங்க வேண்டி வந்துள்ளது! நல்லது! ஆத்தாளே! சித்திராங்கியை நான் தொடமாட்டேன்! இது சத்தியம்!” என்றான் அதிவீரன். 

“சுவாமி! சத்தியம் செய்யாதீர்! வேண்டாம்!. வேண்டாம்!” என்று சொல்லி அவனது அடிகளில் தடால் என்று விழுந்தாள் சித்திராங்கி! 

மாணிக்க ஆத்தாள் அவளைப் பற்றி இழுத்தாள், “விடுடீ அவரை! தாசியாகப் பிறந்துவிட்டு ஒரு புருஷன் மேலே என்ன காதல் வேண்டியிருக்கிறது. விடுடீ அவரை!” என்றாள் அவள். 

“மாட்டேன்! மாட்டேன்! அவர் எனக்குக் கிடைக்கா விட்டால் நான் கன்னிதான்! நான் கன்னிதான்!” என்று இரைந்தாள் சித்திராங்கி. 

அதிவீரன் எதையும் பொருட்படுத்தாது வெளியே விருட்டென்று சென்றான். சேடி சுகந்தவல்லி வெளியே இருந்து கொண்டு அவனை ஒரு காதல் பார்வை பார்த்தாள். முகத்திலும் முறுவலும் வந்தது. 

வாசலில் சென்றிருப்பான்! 

“பிரபு! பிரபு! என்று குரல் கேட்டு பார்வையைத் திருப்பினான். 

வீரன் கைகளை ஆட்டி அவனை அவசரமாக அழைத்துக் கொண்டிருந்தான். 

கனத்த மனதோடு வெளியே பாய்ந்து சென்றான் அதிவீரன், 

அவன் கண்கள் வெளியே என்ன நடந்திருக்கிறது என்பதை அறிய விழைந்தன.

மனதில் கோபம் ஒன்று உக்கிரமாக எழுந்து வந்து கொண்டிருநதது. 

தன் ஆத்திரத்தை வெளியே வெளியே காண்பி, காண்பித்துக் கொண்டால் தான் ஆயிற்று என்கிற முறையில், வாளை விருட்டென்று உறுவி மேலே தூக்கினான்.

– தொடரும்…

– மன்மதப் பாண்டியன் (நாவல்), முதல் பதிப்பு: 1998, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *