பெரியவர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 5, 2024
பார்வையிட்டோர்: 2,012 
 
 

பெரியவர் பெரியசாமிக்கு வயது எண்பதிருக்கலாம்.

வயதிலும், வசதியிலும், படிப்பிலும் இன்னபிவற்றிலும் பெரியசாமி பெரியவர்தான்.

ஆனால் இதால் மட்டுமே ஒருவரைப் பெரியவராக கருதிவிடமுடியாது. ஏற்றுக் கொள்ள முடியாது.

ஒரு ஊர்ல ஒரு யானை இருந்தது. அது கோயில் யானை. அது தினமும் கோயிலுக்கு அருகே இருக்கும் குளத்துக்கு குளிக்கப்போகும். திரும்பி வரும்போது பாகனால் விபூதி பட்டை அடிக்கப்பட்டு சந்தனம் குங்கும் வைக்கப்பட்டு அழகாய் கம்பீரமாய் வரும்.

அங்கே வழியில் ஒரு சாக்கடை உண்டு. அதில் புரளும் ஒரு பன்றிக்கு ‘தான்தான் வராக அவதார மூர்த்தி!’ என்ற வக்கிர புத்தி.

ஒருநாள் குளித்து முடித்து சுத்தமாய் வரும் யானை மீது காழ்ப்பு கொண்டு அந்த வராகம் தன் மேனியை யானை மீது ஈஷிட நினைத்து யானையை நெருங்கியது. யானையோ அந்த பன்றிக்கு வழிவிட்டு, தான் ஒதுங்கி ரோட்டை விட்டுக் கீழிறங்கி நின்று கொண்டது. 

பாகனுக்கு அலாதி சந்தோஷம். இந்த ஐந்தறிவு ஜுவன் இப்படி அறிவோடு நடந்து கொள்கிறதே! என்று.

உலகில்  பெரியசாமி மாதிரி சிலர் தங்கள் அரசியல் பிடிப்பை, பற்றை கோயில் யானை மாதிரியான வேற்று அரசியல் பிடிப்பாளர்களோடு வாட்ஸாப் வழியில் வக்கிரங்களைப் பகிர்ந்து மோதுவதுண்டு.

கோயில் யானையின் தூய்மையைத் தன் துக்கிரித்தனத்தால் அசூசப்படுத்தும் பெரியசாமிகள் வராக மூர்த்திகள் அல்ல என்பதால் ‘ஆதிமூலமே’ என்றதும் காப்பாற்ற வந்த கருணாமூர்த்தியாய் அவர்களைக் காக்க நிஜ கடவுள் காப்பாற்ற நிச்சயம் வருவார் என்ற நம்பிக்கையில் இன்னமும் பலர் வாழ்கிறார்கள்.

அதனால்தான் அந்த ‘வழக்கு வார்த்தை’ உலகில் வந்ததுபோலும்?!

‘பெரியோரெல்லாம் பெரியோரல்ல…! சிறியோரெல்லாம் சிறியோரல்ல!’ என்று.

இது ‘வாட்ஸாப்’ மூலம் வக்கிரம் பகிரும் பெரியசாமிகளுக்குப் புரிந்தால் சரி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *