யாருக்குக் கோடி?

0
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 10, 2024
பார்வையிட்டோர்: 65 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வித்யாவிற்கு எதிரில் அமர்ந்திருந்த புகழ்பெற்ற அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் சச்சின்குமார் மீண்டும் மீண்டும் சொன்னார்.

“வித்யா அம்மா! இந்தக் கடைசிக் கேள்விக்கு உரிய விடையைச் சரியாகக் கூறமுடியாவிட்டால் இதுவரை தங்களுக்குக் கிடைத்துள்ள உரூபாய் இரண்டு கோடியையும் இழந்து, வெறும் இருபதினாயிரம் மட்டுமே பெறுவீர்கள். நன்கு யோசித்து, அமைதியாகப் பதில் சொல்லுங்கள். கடைசிக் கேள்வி!”

ஆசை யாரை விட்டது? நான்கு உதவிக்கரங்களான தொலைபேசியில் நண்பர்கள், பார்த்துக் கொண்டிருக்கின்ற பார்வையாளர்கள், உதவியுடன் பாதி மிகவும் பிடித்த செய்தியில் இருந்து கேள்விகள் எல்லாம் முடிந்து விட்டன.

படிப்படியாகப் பதினொரு கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டு உரூபாய் இரண்டு கோடியை எட்டிவிட்ட வித்யாதரின் அருமை மனைவி வித்யாவிற்குப் பன்னிரண்டாவது கடைசிக் கேள்வியை எதிர்நோக்கிய நிலை. வித்யாதருக்கோ ஒரே திக்! திக்! திக்!

இந்தக் கடைசிக் கேள்வியைத் தொடர்வதற்குமுன், கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்கு முன்னால் ஒரு நாள்…

தனியார்துறை ஒன்றில், அந்த நான்கு கோடிப் பரிசுப் போட்டி தொடங்கியதும், வித்யாதரின் மனத்தில் ஆசை அலை மோத ஆரம்பித்தது. சமூக சேவைகளில் மூழ்கியிருந்த மனைவி வித்யாவிடம்,

“வித்யா! அந்த மலைக்கோவிலுக்குப் போன போது உனக்கு இந்த ஆறு மாதத்திற்குள் செல்வம் அமோகமாக அடிக்கும் என்று ஒரு சாமியார் சொன்னாரே, அதனால் இந்த நான்கு கோடிப் போட்டிக்கு வேணா முயற்சி பண்ணேன்.”

“சாமியார் சொன்னா ? கூப்பிடுவாங்களா என்ன?” அப்பாவி போல் கேட்ட வித்யாவை ஒரு முறை முறைத்தான் வித்யாதர்.

“சொல்லியபோதே, கூப்பிடுவாங்களா? எதிர்மறையான அணுகுமுறை, சே!” குரலை உயர்த்திவிட்டான் ஒரேயடியாக.

“சரி! சரி! சரி!” இடத்தை விட்டகன்றாள் வித்யா.

“சரி” என்ற வார்த்தைக்குப்பிறகு, நிகழ்ச்சியில் பங்குபெற விடாப்பிடியாக முயற்சி செய்து ஒரு வழியாகத் தேர்வும் செய்யப்பட்டுவிட்டாள் வித்யா.

அவள் என்னமோ இயல்பாகத்தான் இருந்தாள். அவனுக்குத்தான் தலைகால் புரியவில்லை. போதாக்குறைக்கு நண்பன் வீட்டிற்குச் சென்றிருந்த சமயம், அங்குத் தற்செயலாக வந்திருந்த சோதிடன் ஒருவன் வேறு,”உங்கள் குடும்பத்துலே செல்வத்திருமகள் செல்வத்தைக் கொட்டப் போகிறாள்” என்று சொல்லிவிட்டான்.

அக்கம், பக்கம் நண்பர் குழாம், அலுவலகம், உள்ளூர்-வெளியூர் மட்டுமின்றி, வெளி நாடுகளுக்கும் தொடர்புகொண்டு தெரிந்தவர்களுக்கெல்லாம் அந்தச் செய்தியைப் பரப்பினான் வித்யாதர். தொலைபேசிக் கட்டணம் ஏறியது பற்றிக் கண்டுகொள்ளவேயில்லை.

எல்லாத் துறைகளிலும் என்னவெல்லாம் புத்தகங்கள் உண்டோ அத்தனையையும் வாங்கி வந்து வித்யாவிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னான்.

“என்னங்க! எனக்குப் பிடித்தமான சமூக சேவை வேலையெல்லாம் நின்னு போச்சுங்க. படிக்கவே துன்பமாக இருக்குங்க” என்றவளிடம் அவன் பதிலே பேசவில்லை.

அலுவலகத்திற்கு விடுமுறை போட்டு, அந்தந்தத் துறைகளில் ஆற்றல் கொண்ட ஆசிரியர், ஆசிரியைகளை அங்குமிங்கும் அலைந்து தேடிப்பிடித்து, வித்யாவிற்குத் தனிப்பயிற்சி வைத்துச் சக்கைப் பிழி பிழிந்தான். நாலு கோடியா? கொக்கா ?

போதாக்குறைக்கு, விரல்களை வேகமாக ஒட்டிப் பழக வைக்கவும், பிடித்து விடவும் ஆட்களை வரவழைத்தான் அழகுநிலையத்தில் இருந்து. அவளுக்கு வருகின்ற சமூக சேவை சம்பந்தமான தொடர்புகளை, அவள் சொல்லியும் காதில் போட்டுக்கொள்ளாமல் துண்டித்தான்.

ஏற்கெனவே, இரு சகோதரிகளின் திருமணத்திற்கு வாங்கிய கடன் பாக்கி ஏறத்தாழ 3 இலட்சம். சேமிப்போ சழி மேலும், மூன்று, நான்கு வட்டிக்குக் கடன் வாங்கி அவளைத் தயார்படுத்தினான். அது இப்போது ஏழு இலட்சத்தைத் தொட்டாகிவிட்டது.

இருபத்து நாலு மணி நேரமும் அவளிடம், “நான்கு கோடி உனக்குத்தான்” என்று நம்பிக்கையூட்டி, இரண்டு சீருந்து வண்டிகள் என்ன, ஊட்டியில் ஒரு பெருமாளிகை என்ன, பெங்களூரில் ஒரு பெருமாளிகை என்ன, பல்வேறு ஆடம்பரங்கள் என்ன என்ன? என்று மனக்கோட்டைகள் வேறு.

முதலில் கவலையின்றி இருந்தவள், அக்கறையுடையவளாகிப் படிக்க ஆரம்பித்தாள்.

பிறகு சிறிது

இதற்கிடையில், வித்யாதருக்கே சிறிது உடல் நலம் சரியில்லாமல், மருந்து சாப்பிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுக் பிறகு சரியானது.

“அந்த நாளும் வந்திடாதோ” என்பது போல அந்த நாளும் வந்தது. கணவன்-மனைவி இருவருக்கும் போகவர விமானப் பயணச்சீட்டு இவைபோன்றவை கொடுத்து, அங்கு அவர்கள் சென்று, கேட்ட கேள்விக்கு வேகமாக விரல்களைப் பதிவிற்காக ஒட்டிய வித்யா, அங்கே.. அங்கே…

அந்த உணர்ச்சிமயமான இருக்கையில் புகழ்பெற்ற நிகழ்ச்சித் தொகுப்பாளர் சச்சின்குமார் எதிரே அமரவும், பார்வையாளர்கள் பகுதியிலமர்ந்திருந்த வித்யாதருக்குப் படபடப்பு ஆரம்பித்துவிட்டது. ‘அம்மா! வணக்கம், கூட வந்திருக்கின்றவர் யார்?” நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டார்.

“என் கணவர், வித்யாதர்.”

“நன்று அருமையான இணை+ பெயர்ப்பொருத்தம்” எனச் சச்சின்குமார் கூற ஒளிப்படக்கருவி, வித்யாதரை மெதுவாக, அழகாக வளைக்க, இஞ்சி தின்ற குரங்கு போல, முகத்துடன் அதற்குப் படம் எடுக்க இடம் கொடுத்தான்.

முதலில் விதிமுறைகள் விவரமாகச் சொல்லப்பட்டன.

பட்டியல்

கேள்வி பரிசுவிவரம்

1.ரூ.20,000

2.ரூ.40,000

3.ரூ.80,000

4.ரூ.1,60,000

5.ரூ.3,20,000

6.ரூ.6,40,000

7.ரூ.12,50,000

8.ரூ.25,00,000

9.ரூ.50,000,000

10.ரூ. 1 கோடி

11.ரூ.2 கோடி

12.ரூ.4 கோடி

மொத்தம் பன்னிரண்டு கேள்விகள். உரூபாய் இருபதினாயிரத்தில் ஆரம்பமாகி, நான்கு கோடியில் முடிவன. முதல் கேள்விக்கு விடை சொல்லிக் கிடைக்கின்ற இருபதினாயிரம் உரூபாயை, அடுத்துத் தொடரும் நான்கு கேள்விகளுக்கும் விடை கூறாவிட்டால் இழக்க நேரிடும். ஐந்திற்கும் சரியாக விடை கூறி, ஆறாவது ஆறாவது கேள்வியிலிருந்து விடை கூறமுடியாவிட்டால், உரூபாய் இருபதினாயிரம் மட்டும் கிடைக்கும். விலகினால் வென்ற தொகை வரை கிடைக்கும்.

அநேகமாக எல்லாக் கேள்விகளுக்கும், உதவிக்கரங்கள் நான்கினாலும், சச்சின்குமார் கொடுத்த ஊக்கத்தினாலும் விடைகளை வித்யா சரியாகச் சொல்லிக்கொண்டு வரக் கடைசிக் கேள்வியும் வந்தது. பன்னிரண்டாவது கேள்வி.

“என்ன கேள்வி வருமோ ? விடை சரியாகச் சொல்லுவாளா?” வித்யாதர் மனத்தில் மில்லியன் டாலர் கேள்வி. இலட்சக்கணக்கில் வாங்கியிருக்கின்ற கடன்களை முதலும்,வட்டியுமாக அடைக்க வேண்டும். வென்ற இரண்டு கோடி உரூபாயுடன் வந்துவிடு. கடைசிக் கேள்வி வேண்டாம் என்று வித்யாவிடம் சொல்ல முடியாத இக்கட்டான ஒரு சூழ்நிலை. மிச்சம்-மீதி இருந்த நகங்களைக் கடித்துக் கடித்துத் துப்பிக்கொண்டிருந்ததையும் ஒளிப்படக் கருவி வளைத்துப் படம் பிடித்து எல்லோருக்கும் காட்டியது. அப்போது-

“அம்மா! போட்டியிலிருந்து விலகுகின்ற எண்ணம் உண்டா?, அல்லது, கேள்வியைத் தொடரலாமா?” எனச் சச்சின்குமார் தொடர்ந்தார்.

“தொடருங்கள் என்றாள் வித்யா.

சிரித்தவாறே அந்தப் பன்னிரண்டாவது கடைசிக் கேள்வியைக் கேட்டேவிட்டார். சச்சின்குமார்.

“மிகவும் புகழ்பெற்ற அன்னை அரவிந்தர் ஆசிரமம் இந்தியாவில் எந்த இடத்தில் உள்ளது?”

அ) வேளச்சேரி ஆ) புதுக்கோட்டை இ) பாண்டிச்சேரி ஈ) கூடுவாஞ்சேரி இ) பாண்டிச்சேரி என்று வித்யா உடனே கூற “நன்று நன்று! வித்யா அம்மா, நான்கு கோடி உரூபாய் வென்ற முதல் பெண்மணி நீங்கள்தான்” என்று சச்சின்குமார் அவளது கையைப் பிடித்துக் குலுக்கினார்.

வித்யாதருக்கோ வாயெல்லாம் பல்.

“உண்டியல் எடுத்து எழுத ஆரம்பிக்கையில்,” ஐயா! ஒரு விண்ணப்பம். என் பெயரில் எழுத வேண்டாம்” என்று வித்யா குறுக்கிட்டாள்.

ஆஹா! தன் பெயரைத்தான் உண்டியலில் எழுதச் சொல்லுவாள். கடனை எல்லாம் அடைத்துக் கனவுகளை எல்லாம் நினைவாக்கலாம் என்று வித்யாதர் ஆவலுடன் எழுந்து வித்யாவை நோக்கி வந்தான்

சச்சின்குமார் வேறு, “ஓஹோஹோ!” எனச் சிரித்தவாறு “கணவர் வித்யாதர் பெயரில் எழுதணும் அவ்வளவுதானே, அம்மா” என்று கேட்டார். முகத்தில் புன்முறுவல் தவழச் சுற்றிவர எல்லோரையும் ஒரு முறைக் கம்பீரமாகப் பார்த்த சமூக சேவகி வித்யா-

“ஒரு நிமிடம் ஐயா! அன்னையின் அருளினால் பரிசு கிடைத்துவிட்டது.. உண்டியல் எழுத வேண்டியதுதான். ஆனால்…”

“ஆனால்.. என்ன அம்மா?”

உண்டியலில் எழுதவேண்டியது, “உதவும் கரங்களான” வித்யாசாகர் அவர்களின் சமூக சேவை அமைப்பிற்கு” என்று மெதுவாக, அதே சமயம் உறுதியாகக் கூறியதும் அரங்கம் முழுவதும் கை தட்டலோ தட்டல்.

சச்சின்குமாருக்கோ ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி, ஒருவருமே எதிர்பாராதது இது. இதனைக் கேட்ட வித்யாதரோ அதிர்ச்சியடைந்து கீழே மயங்கி விழுந்தவன் விழுந்தவன்தான் மீண்டும் நினைவு திரும்ப நெடுநேரம் ஆயிற்று, அவனுக்கு.

– ஆர்.மீனா, மும்பை-89.

– மனங்கவர் மலர்கள், முதற் பதிப்பு: ஜூன் 2005, சிங்கைத் தமிழ்ச் செல்வம், சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *