அம்மா புடவை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 30, 2023
பார்வையிட்டோர்: 1,971 
 
 

அன்று காலையில் தினசரி செய்தித்தாள் படிக்கும்போது திருச்சி அருகே தென்னுரை சார்ந்த சித்ரா என்ற பெண் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றாள் என்று செய்தி.

இரட்டை பின்னல் கட்டிய ஒரு மாணவியின் பேட்டி!

அவள்,  “எங்க  வீட்டில நானும் அம்மாவும் தான் இருக்கிறோம். குடிசை வீடுதான் குட கூலி மாதம் 30 ௹பாய்.  கரண்ட் வசதி இல்லை! நான் பெருபாலும் பள்ளிக்கூடத்திலேயே எல்லாப் படங்களையும் படித்துவிடுவேன். ராத்திரிலே எங்கள் தமிழ் டீச்சர் தேவகி அவர்கள் வீட்டில் வந்து படிக்கச் சொல்லுவார்கள்”.

“என் அம்மா பல வீடுகளில் வீட்டு வேலை செய்துதான் எனக்கு சோறு போடுது”.

“எங்க  வீட்டில் ஒரே ஒரு பாய் மட்டும் தான் இருக்கு! இரவில் நான் குளிருக்கு நடுங்கி ஒடுங்கி படுக்கும் போது என் அம்மா தான் கட்டியிருக்கும் புடவையை அவிழ்த்து எனக்கு போர்த்திவிட்டு அது வெறும் பாவாடை ஜாக்கெட்டுடன் சுருண்டு படுத்துக்கொள்ளும். எனக்கு ரொம்ப பாவமாக இருக்கும்”.

“ஆண்டவன் ஏன் எங்களை இப்படி படைத்துவிட்டான் என்று பல நாட்கள் நான் அழுவேன்”.

“காலையில் ஐந்து மணிக்கெல்லாம் என்னை எழுப்பிவிட்டு அந்த புடவையை அலசி காயப்போட்டுவிட்டு காலையிலேயே சோறு பொங்கி எனக்கு போட்டு டிபன் பாக்ஸ்ல் குடுத்து விடும்.”

“சீக்ரம் பள்ளிக்கூடத்திற்கு போய் அங்கே வாட்ச்மேன் அண்ணனின் நாற்காலியில் உட்கார்ந்து வீட்டு பாடம் படிப்பேன்!”

“புடவை பாதி காஞ்சு இருக்கும் போது குளித்துவிட்டு அதை கட்டிக்கிட்டு அம்மா    வேலைக்கு போகும்”.

இந்த செய்தியை படித்தவுடன் வேதனையாய் இருந்தது.

அன்று நண்பன் ராகவனிடம் இதைப்பற்றி “ரொம்ப பாவமாக இருக்கு” என்று பேசும் போது அவன் சொன்னான், “நம் மனசுக்கு பிடிக்காத காட்சிகள், செய்கைகள் நம் கண் முன் தோன்றினால் அதுக்கு நாம் செய்த பாவம் தான் காரணம்!”.

“அது   அவர்கள் பாவம் இல்லை. அந்த காட்சிக்கு பதில் நமக்கு பிடித்தமான நல்ல விஷயங்களை நாம் பார்க்கும்படியான சுழ்நிலையில் நாம்  இல்லாமல் போய்விட்டோம்!அது தான் காரணம்”  என்றான்.

“நாம்ப இருவரும் அமெரிக்காவில் நியூஜெர்சியில் சாயந்திரம் வாக்கிங் போகும்போது     அன்னைக்கி என்ன பேசினோம் ஞாபகம் இருக்கா?”.

“இந்த ஊரில் பிறந்து விட்ட ஒரு காரணத்தினாலேயே, இங்கு வாழ்பவர்கள் வெயில்ல காயாம குடி தண்ணீக்கு கவலைப்படாம வாழ முடிகிறதே! இவர்களை விட நாம்ப திறமையில் ஒன்னும் கொறஞ்சுடலே. ஆனாலும் நமக்கு சென்னையில் என்ன இருக்குனு அங்க இருக்கோம்?

குடிதண்ணீக்கு கஷ்டம் வருஷத்திலே பத்து மாசம் கடும் வெய்யல்! சுத்தமில்லாத குப்பைகள் நிறைந்த தெருக்கள்…

பொதுவெளியில் சக மனிதனுக்கு மரியாதை இல்ல. இதுதானே?”

“எல்லாம் நாம் எந்த சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதை வைத்துதான். இந்த பாவம் கீவம் எல்லாம் நமக்கு வேண்டாம். விடு” என்று சொன்னது ஞாபகம் வந்தது .

போனவாரம் அமெரிக்காவில் இவன் மகள் வீட்டில் பேத்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்.

மகளுடைய நண்பர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டார்கள் சுமார் எட்டு குடும்பம். எல்லோரும் தமிழர்கள்தான் .ஒரே பேச்சு ஆட்டம் பாட்டம் கேலி சிரிப்பு என்று போய்க் கொண்டு இருந்தது .

அதில் ஒரு குடும்பத்தில் இருந்து மூவர் வந்திருந்தனர். என் மகளின் நண்பர் தமிழ்ச்செல்வன் குடும்பம் அது.

இரவு தூக்கத்தை பற்றி அவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர். எதேச்சையாக அவர்கள் பேச்சில் இவனும் கலந்து கொண்டான். தமிழ்செல்வன் இவன் மகளிடம் தன் மனைவியை பற்றி சொல்லும்போது, “இவள் தூங்கும் போது எப்பவும் அவளோட அம்மா புடவையை தலைமாட்டில் வைத்துக்கொண்டுதான் தூங்குவாள். எங்கே வெளியூர் போனாலும் அம்மா புடவை தான் முதலில் எடுத்து பெட்டியில் வைத்துக் கொள்வாள். அம்மா  புடவை மீது அவ்வளவு பாசம்” என்றார்.

இவனுக்கு சட்டென்று எதோ பொறிதட்டியது.

“அம்மா புடவை மீது அவ்வளவு பாசமா….?” என்று கேட்டான்.

அவளிடம், “உங்கள் பெயர் சித்திராவா?” என்று கேட்டான்.

அவள் பரவசத்துடன் “ஆமாம்! எப்படி சரியாக கேட்டீங்க. என்னை தெரியுமா?”

“௨ங்கள் ஊர் திருச்சிஅருகில் உள்ள தென்னுரா?”

“ஆமாம் எப்படித்தெரியும்?”

இவன் யோசனையுடன் நகர்ந்தான்!

– ஆகஸ்ட் 2022 பிரதிலிபி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *