வெள்ளைக்கத்ரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 7, 2018
பார்வையிட்டோர்: 20,160 
 
 

வெள் விழியை சுற்றிய கரு வெளியைப் போல் இரவின் அழகு இதமாய் ஜொலித்தது. கோபுரகலசத்தின் உச்சி முனையில் வெள்ளிப் பந்தை உருட்டி வைத்தார் போல் பெளர்ணமி நிலா நழுவி விழாமல் நடு நாயமாய் நின்றதை நான் மட்டும் ரசித்தேனா? இல்லை என்னை போல் எந்த சுமையையும் ஏற்றி கொள்ளாமல் முதுகையும், மூளையையும் வெற்றிடமாய் வைத்துக் கொள்ளும் பலரும் ரசித்திருப்பார்களா என்று என்னால் தெளிவாய் சொல்ல முடியவில்லை.

வேலை பளு இல்லை என்று நான் பெருமையடித்து கொண்டாலும் எனக்கு உள்ள வேலையின் அளவு முடிவிழியை தொட்டு நிற்கிறது. பலருக்கு காலை முதல் மாலை வரை வேலை, சிலருக்கு மாலை முதல் காலை வரை வேலை என வரையறுத்துக் கூற முடியும். என் போன்றவர்களுக்கோ எப்பொழுதும் தீராத வேலை அதுவும் இது போன்ற திருவிழா நாட்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் கண்கொள்ளாத வேலை இந்த இரண்டு கண்களை மட்டும் வைத்துக் கொண்டு உலகை நோட்டமிடுவதற்கு மிகவும் சிரமமாய் இருக்கிறது.

இப்பொழுது என் எதிரிலே ஒரு குழந்தை சிரித்துக் கொண்டு அதன் தாயின் இடையில் அமர பிடிக்காமல் மொத்த உடலையும் குதிரையில் செல்லு போர் வீரனை போல் ஆட்டிக் கொண்டே இருக்கிறது. அக்குழந்தையின் கால்கள் போலோவையும், கதகளியையும் கலந்த நடன அசைவை வெளிப்படுத்துகின்றது. கைகள் சால்சாவையும், கரகாட்டத்தையும் கலந்து செய்கின்றது. கண்களோ அதற்கும் மேல் பரதத்தையும் மற்றுமொறு நடனம் அதன் பெயர்

………… நுனிவரை வந்துவிட்டது நினைவுக்கு வர மறுக்கின்றது. இவ்வாறாக ஒரு சால்சா அபினய கரகாட்டத்தை மேற்கொள்ளும் அக்குழந்தையை காண்பதா அதனை ரசிக்கவும் முடியாமல், அடிக்கவும் முடியாமல் கெஞ்சலும், கொஞ்சலுமாய் குழந்தையை கையமர்த்த
பாடுபடும் தாயை காண்பதா இல்லை இருவரையும் நடு தெருவென்றும் பாராமல் திட்டி தீர்க்கும் அவள் கணவனை காண்பதா இவை அனைத்தையும் விசித்திரமாக பார்க்கும் வாலாட்டும் மனித குல நண்பனை காண்பதா இல்லை இவர்களை சூழ்ந்து மின்னும் பல வண்ண மின் விளக்குகளை காண்பதா அவற்றில் ஒளிரும் ஒவ்வொரு மனிதனும் ஒரு நொடிக்கு ஒரு முகபாவம் காட்டும் மனித கூட்டத்தை காண்பதா அனைவரும் ஆ என்று பிளந்த வாய் மூடாத மனித கொக்குகளை போல் வானத்தில் கண்டுகளிக்கும் பல வண்ண வானவேடிக்கையை காண்பதா நொடிக்கு பல வண்ணங்களாய் தெளிக்கும் நெருப்பு பூக்களை கண்டுகொள்வதா இல்லை இவை அனைத்திற்கும் காரணகர்த்தாவாக பத்து பேர்களின் தோளில் துள்ளிக் கொண்டு வரும் உற்சவ மூர்த்தியை காண்பதா. இரண்டே கண்; கண்கொள்ள முடியா காட்சிகள் இவை இரண்டிற்கும் மத்தியில் கூத்தாடும் மூளை கொண்டு குமுறிக் கொண்டிருக்கும் மனிதன்
நான். இந்த அவளநிலை பற்றி புரியாத உலகம் வெட்டி, தண்டம், உதவாகரை எந்தவேலையும் செய்யாத செய்ய தெரியாக முட்டாள் என்று கூறுவதை நினைக்கும் போதுதான் எனது நெஞ்சம் அணு உலை போல் கொதிக்கின்றது. ஆயினும் அவர்களின் செந்தமிழ் சொற்பொழிவுகளை எனது செவிச் செல்வங்கள் கேட்க மாட்டார்கள் என்றும் தெரிந்த தெளிவான புத்திசாலிகள், சாலையில் சிவப்பு விளக்கு போட்டபின்னும் ஆரன் அடிக்கும் ஆறறிவு ஜந்துகளை போல் செயல்படுவதுதான் செயற்கரிய செயல் சிறப்பு. குழப்பங்கள் குடல் புன்னாய் மாறும் அளவிற்கு கூட்ட நெரிசல் இதில் எதை ரசிப்பது, எதை விடுப்பது எதை நினைப்பது என கண்களை காற்றில் அலையவிட்டு பெண்களுக்கு சமரசம் வீசிக்கொண்டிருக்கயில், வீதியின் முனையில் என் விதியை மாற்றுவதுபோல் ஒரு கால்
முளைத்த நிலா என் கண்ணோடு சேர்த்து இதயத்தையும் பறிக்க வருகிறாள்.

செம பீசு டா மச்சி கட்டுனா இவள கட்டனும் இல்ல கல்லணையிலே இருந்து காவேரியில் விழந்து சாகனும்டா….

காவேரியில் விழுந்து சாகனும்னா கல்லனைக்கு இல்லடா கர்நாடகாவுக்கு தான் போகனும்டா கல்லணையில் தண்ணி வந்ததெல்லாம் சோழர்காலத்துல றீலிஉஷ்ழியி னிedஷ்ழி காலத்துல இல்ல….என்று நான் அவளை வர்ணிக்க நினைக்கும் முன்பாகவே என் இன சரச லீலா வேதாந்திகள் காதல் கற்ளாலும், காமக்கற்களாலும் அவளை தாக்க தொடங்கிவிட்டனர். அந்த தாக்குலில் இருந்து அவளை காக்க விஷ்ணு பரமாத்மாவாக மாறி பின் காதல் கொள்ள கண்ண பரமாத்மாவாக மாற வேண்டும். வினாடிப் பொழுதில் விஸ்வரூபமெடுக்க நான் கமலஹாசனா என்ன?

இவை எதை பற்றியும் கவலை கொள்ளாமல் எனை கடந்து சென்ற கட்டழகி என் கழுத்தில் கயிற்றை கட்டி கட கடவென இழுதது செல்வதை போல்அவள் பின்னே நான் செல்கிறேன்.

ஒரு வேளை மாடுமேய்பவளாய் இருப்பாளோ என்று தோன்றியது. அவள் மேய்பவள் என்றாள் நான் தான் மாடா சீ சீ ….. பரமாத்மாவிலிருந்து மாட்டுக்கு தாவி விட்டேனா மந்தி மனம் மாறி மாறி செல்கிறதே.

கூழாங்கற்களின் குவியலில் குண்டு மணியை துளைத்தவள் போல் அவளை தவறவிட்டுவிட்டேன் கபடை மாடுகளின் கூட்டத்தின் உததவியினால் காதல் கயிறு கட்டவிழ்ந்தது.

திரும்பிய பக்கமெல்லாம் மனித கூட்டம் என்பார்கள் நான் திரும்பாத பக்கம் கூட மனித கூட்டம்தான்.

மரங்கள் வெட்டப்பட்ட காட்டில் கிளைகளை தேடித்தவிக்கும் மனித முன்னோடிகளை போல் இந்த குரங்குப் பின்னோடிகள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தனர்.

நானும் அவர்களை போல் தேடினேன் என பொய் கூற மாட்டேன் எனது தேடுதல் கிளைகள் அல்ல கிளைய்ல அமரும் குயில் அல்ல அவள் வட்டமிடும் மயிலும் அல்ல என் கனாவின் மொத்த உயில்.

மதிய உணவு டப்பாவில் அமிழ்த்தி கட்டப்பட்ட ஒருவர் மீது ஒருவர் அழுந்தி நசுக்கினர்.

இவற்றிலும் எனக்கு தனி இடம்தான் நான் காஞ்ச மிளகாய்போல் கசக்கப்பட்டு கொண்டிருக்கயில் மொத்த மொத்தக் ……………. முள்ளை காலில் மித்தார் போல் ஒரே குரலில் கோவென்று ஆரம்பித்து லா வில் முடித்தார்கள். முதல் மூன்று கத்தல்கள் காதுக்குள்
முன்டியடிக்க நான்காவது கோ­ம் முழுவதுமாய் கோபாலாவில் முடிந்தது.

சரி என்னை எதற்கு மொத்த மக்களும் ஒத்ததை குரலில் அழைக்க வேண்டும். அழைத்தது உருப்புடாபய கோபாலனை அல்ல உல்லாச கோபாலனை. உற்சவ மூர்த்தியை கண்டவளை எல்லாம் காண்கிறேன் என் கண்கண்டவளை காணவில்லை. பஞ்சத்தில் அடிப்பட்ட
கூட்டம் உணவுப் பொட்டலங்களை உருவி இழுப்பது போல் இங்கு அனைவரும் ஆக்ஸிஜனை உறிஞ்சி இழுத்து கொண்டிருந்தனர்.
கூட்ட நெரிசலிலும் குதுகலத்திற்கு குறைவில்லாமல் ஒருவர் இருக்க முடியுமானால் அத கோபாலனே! எங்கள் அவஸ்தையிலும அவர் ஆனந்தம் காண்கிறார். அவர் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம் காலைச் சூரியனை போல் அதை விட பெரிது அந்த நெரிசலிலும் அனைவரும் அவரை ஆனந்தமாய் ஆத்மார்த்தமாய் ரசிப்பது தான். வீட்டுக்குள்ளேயே அடைப்பட்ட ஜீவன் வெளிவந்து பார்க்கும்போது உள்ள குதுகலம்தான் அவருக்கு. அவரைப்போல் பலருக்கும் எத்தனை பேர் திருவிழா என்று பெயர் சொல்லி ஊர் சுற்றி பார்க்க வெளிவந்தார்களோ அவருக்கே வெளிச்சம்.

குழந்தைக்கு முன் மத்தாப்பூ புத்திரியை காட்டி மகிழ்விப்பது போல் கோபாலன் முன் தீப ஆராதனை காட்டப்பட்டது. மீண்டும் அனைவரின் காலிலும் முன் குத்தியது இப்போது கொஞ்சம் அதிகம் போலும் அனைவரும் ஒரு சேர இரு கைகளிலும் மேலே தூக்க பலர் கண், காது, மூக்குகளில் இலவச முழங்கை குத்து விழுந்தது. எத்தனைபேர் வலியால் கத்தினார்களோ தெரியாது. கத்தினாலும் இந்த சத்தத்தில் வெளியில் தெரியாது. நானும் கைகளையும் தூக்கி எனக்கு மட்டும் ஏன் இந்த வேதனை. உன்னை வணங்க என் பெயரை நானே கூற வேண்டி உள்ளது. சரி அப்படியே வணங்கினாலும் தெண்ட கோபாலா பொருக்கி கோபாலா, மட கோபாலா என்று எனது சுற்றமும், நட்பும் அன்போடு அழைப்பதே என் நினைவுக்கு வருகின்றது. அடுத்த ஜென்மத்திலாவது உன்னை நான் நிம்மதியாய் வணங்க என் பெயரை மாற்றிவிடு, இல்லை உன் பெயரை மாற்றிவிடு.

ராஜகோபாலா என வேண்டிக்கொண்டிருக்காமல், கூட்டத்திற்கு அருகில் எவனோ வேட்டை போட்டுவிட்டான் பெயரை மாற்றிகொள்ள சொன்னதும் கோபாலனுக்கு கோபம் வந்து விட்டதோ என நினைக்கு நேரத்தில சூடு கண்ட பூனை போல் கூட்டம் …வட்டிற்கு எதிர்பக்கம் வேகமாய் ஓடியது. மூடப்பட்ட பற்பசை குழாயில் மாட்டி கொண்டவன் போல் அங்கும் இங்கும் அசைகிறேன்.
ஆனால் எங்குமே நகரவில்லை. வெடி சத்தம் வேறு நெருக்கத்தில் கேட்கிறது. திடீரென்று எனது இடது கை முழுவதும் ய்reeகுerŠல் வைத்தார்போல் ஜில் என்று ஆனது. கையை அசைக்க முடியவில்லை குனிந்து பார்த்தால் என் மார்பளவு உயரம் கொண்ட பெண் எனது கையை முழுவதுமாக பிடித்து இருக்கி அனைத்து கொண்டு இருக்கிறாள் அவளின் முகம் உடல் அனைத்தையும் சேர்த்து இருக அனைத்திருக்கிறாள். ஆனால் எனக்கு எவ்வித இருக்கமும் தெரியவில்லை. மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது. என்னை ஏதோ அவள் உறவினர் என்று நினைத்து விட்டாள். நானே அபிதாப்பச்சனின் இடை அளவுதான் இருப்பேன்.

என் மார்பளவு உயரம் என்றாள் அந்த குட்டி பிசாசை சீ சீ குட்டி தேவதையை என்ன வென்று சொல்வது. என்னால் அவளை விடுவிக்க முடியவில்லை. அது எனக்கு பிடித்திருந்தது.

எங்கள் இருவரையும் கூட்டத்தில் சிலர் குரளிவித்தை பார்ப்பதுபோல் வித்யாசமாய் பார்த்தனர். அவள் முகமே வெளியில் தெரியாதவாறு இருக மூடியிருந்தால். வெடிச்சத்தம் நின்ற பிறகு இரு பெண்கள் வந்து அவளை தட்டி எழுப்பினர் அவள் அசயைவில்லை. நான் அவர்களை கோபமாய் முறைத்தேன். அப்போது அவர்கள் வேகமாய் அவளை பிடித்து இழுத்தனர். அவளும் நிமிர்ந்து என்னை பார்த்துவிட்டு வெடுக்கென்று நகர்ந்தான். ஒரு அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு வேகமாக நகர்ந்தாள். வெட்கமா, ஆசையா, கோபமா, இல்லை அதிர்ச்சியா என விளங்காதவாறு ஒரு பார்வை அதில் சிறு ஊசி மூளை புன்னகையும் கலந்திருந்தது. அவள் திரும்பி பார்த்தபொழுது ஆகா இவள்தான் அந்த மாட்டுக்காரி கழுத்தில் அவிழ்ந்த கயிற்றை கையில் கட்டிவிட்டு போகிறாள். அதுவும் அவிழக்கூடாதென்று இருகக்கட்டி இருக்கிறாள். எனது இடக்கையில் இப்பொழுது தனி உணர்வு ஏற்பட்டது. எனது மூளையின் முக்கால் பாகமும் விடுமுறையிலிருந்து திரும்புவதுபோல்வேலை செய்ய தொடங்கின.

வேலைக்கு கண்டவள் வந்துவிட்Vள் கையனைத்து நின்றுவிட்டால் கழுத்தை அறுத்துவிட்டாள் கையில் கட்டிவிட்டால் வெட்டிவேலை செய்பவனை காதல் வெட்டி ஆக்கிவிட்டால் அழகின் புத்தி என் காதல் கத்ரியே ……..

ஆகா …. ஆகா … ஒரு கையை பிடித்ததற்கே கவிதை கொட்டுகிறதே, மறுகையையும் தொட்டால் காசு பணமெல்லாம் கொட்டுமோ அதிசயம் ஆனால் உண்மை தமிழில் தேராத ஒருவன் கவிதை பாடுவது சாத்தியமா. பள்ளி சொல்லிதராததை இவள் கண்ணில் சொல்லிவிட்டாள்.

வேற்று கிரகம் சென்றாலும் அவளை விடுவதில்லை என முடிவுகட்டி அந்த குள்ளக்கத்ரி மனித சந்தையில் மறைவதற்குள் அவளை மடக்கி பிடிக்கவேண்டுட்ம. கூட்டம் ஓரளவு குறைந்த இடத்தில அவள் தன் சக தோழிகளுடன் ஏதோ வினவிக்கொண்டிருந்தாள். அவள் வாயுடன் கையும் கலந்து பேசின மூடாத வாயும், ஓயாத கையும் ஏதோ உலகத்தையே சுற்றி வந்தார் போல் அவள் முகத்தின் புன்னகையும் எனை என்னிடமிருந்து அவளுக்கு புலம்பெயர்ந்தது. கண்கள் மங்கியது. செவிகள் அடைத்தது உடல் உறைந்தது. உலகம் எனை பிரிந்தது. இருப்பது அவள் மட்டுமே அவளுடன் நான் மட்டுமே அவளின் அங்க நலினம் கருநீல பாவாடை சட்டையில் தங்க
நிற மாங்கனிகள் அவள் உடலிலும், உடையிலும் நிறைந்து மின்னின. அவற்றின் அசைவு என் உள்ளுணர்வையே அசைத்துவிட்டன. என் நரம்பு முடிச்சுகள் விரைந்து புடைத்தன. புவியின் அழகை ரசிக்க நிதம் நால்புறமும் சூழலும் மதி போல் அவளை அங்கும் இங்கும் அலைந்து ரசித்தேன். அவளின் நாசிக்குள் சென்ற வெறுங்காற்று தென்றலாய் திரும்பி வந்தது என் தேகத்தை உரசி மோகத்தையும், தாகத்தையும் கூட்டி எனை காதல் கொண்ட மேகமாய் மாற்றியது. எடையற்ற என் உடல் கணக்க தொடங்கியது. நிதானத்தின் நிலைக்கு வர எனக்கு அபயக்கரம் தேவைப்பட்டது. கண்ணவள் நீட்டினான் என் உடல் தூக்கினால் நிலையற்ற காதலில் அவள் எனை நிலையாக நிறுத்தினாள்.

ஐய்யோ …. ஐய்யோ …. ய்ற்யியி அடிச்சாகூட இப்படி புளம்பமாட்டானேடா … 5 நிமி­த்துல இப்படி என்ன தூக்கி அடிச்சுட்டாலே. கேமரா இல்ல டைரக்டர் இல்ல என்னமா சீன்காட்ரா அப்பப்பா … குளத்த குத்தகைக்கு எடுக்குற மாறி என் நௌப்ப குத்தகைக்கு எடுத்துட்டாலே, இப்படி கெறக்கடிச்சுட்டாலே…

சரி அவளுங்க கிட்டதான பேசுறா மாறி இருக்கு ஆனா பட்டு பட்டுனு நம்மளயும் பாக்குறாமாறி இருக்கு. நம்மளதான் பாக்குறாளா இல்ல நாமளா கற்பனை பண்க்கிறோமா.

இல்ல மூஞ்சி கீஞ்சில ஏதும் ஒட்டிருக்கோ. இரு கண்ணாடிய பார்ப்போம் என்று பக்கத்து கடையில் இருக்கும் சுவர் கண்ணாடியை பாக்க கண்ணாடியிலும் அவள்முகம் தொலைவில் தெரிகிறது. நான் தலை கலைந்திருக்கிறதா இல்லை முகத்தில் ஏதேனும் இருக்கிறதா என சரிபார்ப்பதை பார்த்துவிட்டு தாயை கண்ட குழந்தையை போல் எனை பார்த்து சிரிக்கிறாள்.

தொலைவில் தெரியும் அவன் சிரிய முகம் சிறிது சிறிதாக பெரிதாகி முழு கண்ணாடியையும் அடைத்துபின் உடைத்து சிதறும் கண்ணாடி சில்களுக்கு மத்தியில் அவள் முகம் எனை அடைகின்றது…

டேய் …. டேய் எந்திரிடா என்னடா இப்படி தூங்குற 7 மணிக்கே ….

மாப்ள அதே கனவு அதே டிரஸ்சு மாப்ள ஆனா அவ முகம் மட்டும் ஞாபகமே வரள மாப்ள…

டேய் போன வரு­ம் திருவிழால பாத்த பொண்ணு இந்த வரு­மும் வருவான்னு எப்புடிடா நம்புற அதும் அவ முகம் உனக்கு ஞாபகமே இல்ல வந்தாளும் எப்புடிடா கண்டுபிடிப்ப தெரியல மாப்ள ஆனா எப்புடியாச்சும் கண்டுபிடிக்கணும்டா என் வெள்ள கத்ரிகாவ ….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *