புறக்கணிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 14,455 
 

வா சார் ப்ரெஸ்ஸா..? இன்னா மார்னிங் நியுசா ஈவினிங் நியுசா….? இந்தியா அஸ்த்ரெலியான ஒட்ன என்ன க்ரவுடு பார். சும்மா ஜெ ஜென்னு கீது. ஜனத்த போட்டோ புடிக்கோ சொல்லோ அப்டியே என்னையும் ஒரு போட்டோ புடி சார், நானும் கிரிகெட் பிளேயர்தான். மெய்யாலுமேதான் சார். மெரீனா கிரவுண்டு கீதுல்ல, அதுக்கு அண்ணாண்ட கீற கூவத்துல தாந் எந் வூடு. தின்திக்கும் அந்த கிரவுண்டே கெதியாக் கெடந்தேன். நல்லா பேட் பண்ணுவேன், பாஸ்ட் போலர் சார்.

எவ்வளோ பெரிய பெரிய ப்லேயர்லாம் எந் போளிங்க்ள ஆடிருக்கங்க தெரியுமா? மெரினால ப்ராக்டீஸ் பண்ண ஆள் இல்லன்னா என்ன போல் போட சொல்லுவாங்கோ, அப்டியே நமக்கு இந்த கருமாந்திர கிரிகெட் பயகிடிச்சி. மாடு மாதிரி போடுவேன் சார். அப்டியே போட்டு போட்டு என்னையும் டீம்ல சேத்துகிட்டாங்க.

சரி நமக்கு கிரிகெட் நல்லா வருது அப்டியே span>ஒரு சச்சின், இல்ல தோனி மாதிரி வந்துரலாம்னு ட்ரீம். டி.என்.சி.ஏ’ல தேர்ட் டிவிசன் வரைக்கும் வெளாடிருக்கேன். அண்டர் 19ன்ல ஆடனும்னு சொல்லி, மூணு வருஷம் ஒம்பதாவதிலேயே இர்ந்தேன், இன்னா யூஸ்ஸு? படிப்புந் வயசுந்தான் போச்சி.

ஷூ கூட யாராவது போட்டு பயசான ஷூதான். ஆனாலும் ஒரு வெறி சார், எப்படியும் நா முன்னுக்கு வந்துருவேன்னு பாளாப் போன நெனப்பு, ஆனா கடைசி வரைக்கும் என்ன பால் பொருக்கி போடுரவனாவே வச்சிருந்தாங்க, இப்போ அதுவே போயப்பாவி எனக்கு சோறு போடுது. இது என்னோட நூறாவது மேட்ச் சார் பால் பொருக்கி போடுறதுல.

எல்லா செலக்சனுக்கும் போவேன், “தம்பி நீ நல்ல போடுற, பாஸ்ட் இருக்கு, ஆனா அக்சன் இல்ல, ரிதமில்லன்னு” சொல்லி வெளியேத்திடுவாங்கோ. ஆனா என்ன விட மொக்கையா போடுற எவனோ செலக்ட் ஆவான். எல்லாம் ரெகமெண்டேசன். என்ன மாதிரி ரொம்ப பேர் கீறாங்கோ சார் எங்கூர்ல. எல்லத்ளையும் பாலிடிக்ஸ் கீது, அப்றோம் எப்டி சார் நம்ம நாடு கேயிக்கும்.

ஒலிம்பிக்ல எவனோ ஒர்தந் தங்கம் வாங்குனான்னு தூக்கி வச்சி கொண்டாடுறீங்க ஆனா அதுக்கு அவன் அப்பா அவன தனியா கோச் பாண்ணாரு, நாடு அவனுக்கு என்ன பாண்ணுச்சி. என்காளுங்களுக்கு கீற மாதிரி ஸ்டாமினா யாருக்கு இருக்கு சொல்லு சார். நா பீச்சு மண்ணுல மூச்சு வாங்காம ரொம்ப தூரம் ஓடுவேன், கடல்ல நீந்துவேன், ஆனா குட்டையில நீந்தச் சொல்லி குடுத்து கேயி கேயின்னா எப்படி கேயிப்பான். என்ன மாதிரி இன்பாண்ட் டலண்ட எடுத்து ட்ரைன் பண்ணா நாட்டுக்கு எவ்வளவோ செய்வோம் சார்.

அது சரி நீ இன்னா செய்வ, ‘ஓட்ற குதிரைலதானே பணத்த கட்டுவாங்க’, நீயும் இந்தியாக்கு ஆடுரவன தானே போட்டோ புடிச்சி போடுவே. இந்தியா கேயிச்சா “அபார வெற்றின்னு” கொட்ட எயுத்துல போடுவீங்க அதுவே தோத்தா “போராடி தோத்ததுன்னு” போட்டு பேப்பர விப்பீங்க. இங்க குந்து சார் நல்லா போஸ் கெடைக்கும்”

மறுநாள் எல்லா பேப்பரிலும் இந்தியா போராடி தோல்வின்னு வந்தது……

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *