ஒரு கல், பல கண்ணாடி

 

அப்புகுட்டி; ‘வேலை வெட்டிக்கு போகாமல் வீட்டில் டேரா போட்டு, வெளிநாட்டிலிருந்து மனைவி அனுப்பி வைக்கும் பணத்தில், நொந்து நோகாமல் டீக்கடை பெஞ்சுகளை தேய்த்து உல்லாசமாக வாழும் ஒரு அறியவகை மனுசன்.

ஒவ்வொரு மாதமும் மனைவி, வெளிநாட்டில் கஷ்டப்பட்டு அனுப்பும் பணத்தில் ‘வீட்டுக்காரன் வீடு கட்டுவார்!’ என்று எண்ணிக்கொண்டுருக்கையில் அப்புகுட்டி என்னவோ மைனர்! ரேஞ்சாட்டம் ஊதாரித்தனமாக செலவு செய்துவிட்டும். போதாதாக்குறைக்கு பக்கத்து வீடுகளிலும் வெளிநாட்டு இன்காமைச் சொல்லிச் சொல்லியே ஒரு தொகை கடண்களைத்தான் பல்காவா கட்டி வைத்துருந்தார்!.

ஒருநாள் அப்புக்குட்டியின் மனைவியும் நாடு வந்து சேர்ந்ததாள். மாப்பிளை அப்புகுட்டியின் அண்டர்கிரவுண்ட் அல்வா முழுவதையும் அறிந்துகொண்டவள், கையோடு கொண்டுவந்த பணத்தை வைத்து, இருந்த பழைய வீட்டை ஓரளவு திருத்தி செய்துவிட்டு , கடண்கள் சிலவற்றையும் கொடுத்துவிட்டு. திருத்த முடியாத ஜடமான அப்புக்குட்டியை ஆட்டுக்குட்டிபோல் வீட்டுக்கு வெளியே இருந்த திண்ணையில் ‘ஓடாத பழைய அம்பாஸ்ட்டர் காரைப்போன்று ஒரு ஓரமாக பார்க் பண்ணியிருந்தாள்’.

கட்டிய கடணுக்காகவும் கொட்டிய கடணுக்காகவும் வேலை வெட்டியற்ற, அப்புகுட்டிக்கு வேளா வேளைக்கு சாப்பாடு மட்டும் சரிவர போய்க்கொண்டிருந்தது.

விடிந்தும், பொழுது சாயும்வரை ‘கொட்டாவியைத் தவிர வேரொன்ரும் தன்னிடம் சாதிப்பதற்கு இல்லையென அப்புக்குட்டியின் வாயும் வயிரும் பிடிவாதமாக அடம்பிடித்து வந்தது.

வழமைபோல் ஒருநாள் ‘திண்ணையில்’ பக்கவாட்டில் படுத்துக்கொண்டு காலாவதியான பத்திரிகைகளில் உலக அரசியலயெல்லாம் அலசி ஆராய்ந்துகொண்டிருந்த அப்புகுட்டிக்கு பக்னு ஒரு ஐடியா தோன்றியது.

ஷாக் அடித்தவனைப்போல் திடிரென எழுந்து குந்திக்கொண்ட அப்புகுட்டி “நாம ஏன் ரெஸ்ட்டாரண்ட் ஒன்னு நடத்தக்கூடாது?”னு, தனக்குக் தானே மில்லியன் கேள்விகளை கேட்டுவிட்டு மனைவியை கூப்பிட்டு பம்மிக்கொண்டே “நான் ஒரு ரெஸ்ட்டாரண்ட் நடத்தப்போகிறேன் 1லட்சம் பணம் கொடு ” என்றார் .

“‘இப்போதாவது உழைக்கும் என்னம் வந்ததே!”‘ என புருஷனை நம்பி, தன்னிடமிருந்த நகை நட்டுக்களையெல்லாம் கொடுத்து ஒரு தொகை பணத்தை ஏற்பாடு செய்து அப்புகுட்டிக்கு கொடுத்தாள்.

கடையொன்றை வாடகைக்கு எடுத்து ரெஸ்ட்டாரண்ட்க்கு தேவையான வகை வகையான கண்ணாடி சோவ்க்கேஸ்களையும் வாங்கி, அதற்குள் பொருட்களையும் நிரப்பிவிட்டு, ‘வேலைக்கு ஆட்கள் தேவையென’ ஊருக்குள் நாதியற்று அழைந்து திரிந்த, தன்னைப்போன்று மனைவியின் வெளிநாட்டு பணத்தை நம்பி வாழ்ந்த ஜீவராசிகள் சில பேரை சல்லடை போட்டு தேடி பிடித்துக்கொண்டார்.

“”ஹோட்டல் அல்டா உல்டா”" என ஒரு பெயரையும் வைத்துக்கொண்டவர் தடபுடலாக ரெஸ்ட்டாரண்டரை திறந்து பிஷ்ணஸையும் ஆரம்பித்தார் அப்புக்குட்டி.

முதல் நாளே வியாபாரம் “ஓஹா’னு ஒரே கலவரமாக பிச்சிக்கொண்டுபோனது. மறுநாள் ஆஹா’னு பிதுங்கிக்கொண்டுபோனது. இப்படியே போய்க்கொண்டிருந்த பிஷ்ணஸ் படிப்படியாக பிரக்கப்பாகி போக கடுப்பாகிய அப்புக்குட்டி விற்பனைக்காக போட்ட சமோசா,ரொட்டி போன்ற சாப்பாட்டையெல்லாம் வீட்டுக்கு மூட்டை மூட்டையாக கட்டி சுமக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இறுதியில் ஒருவழியாக சுருண்டு படுத்துக்கொண்டது ‘அல்டா உல்டா’ ஹோட்டல். அத்தோடு வேலைக்கு வைத்திருந்த அந்த ஜீவராசிகளும் லாட்ஜ்ஜில் தங்குவதற்காகவே வந்ததுபோல், தூங்கி எழுந்து கக்கூஸசை நாறடித்து நாசப்படுத்தியது, வாடிக்கையாளர் அற்ற ஹோட்டலில் வேடிக்கையாக மாறிக்கொண்டிருந்தது.

இப்படியே ஒரு மாதத்தை சமாளித்து சிதைந்து சின்னாபின்னமான அப்புகுட்டி மறுபடியும் கொட்டாவி விட ஆரம்பித்தார். இம்முறை சற்று வித்தியாசமாக ‘ஈக்களை’ விரட்டி விரட்டி கொட்டாவி விட்டார்.

கடையில் வேலைபார்த்த வேலையாட்களுக்கும் சம்பளப் பாக்கி ஏறிக்கொண்டு போக, ஒரு கட்டத்தில் அடியாட்கள் ரேஞ்சில் விஸ்வரூபம் எடுத்த அவர்கள், அப்புகுட்டியின் மூக்கோடு மூக்கை வைத்து தேய்த்துகொண்டு நின்றார்கள்.

பயந்து நடுங்கிப்போன அப்புகுட்டி, பணமின்றி ரெஸ்ட்டாரண்டில் கிடந்த தளர்பாடங்கள் சிலவற்றை விற்று அதில் கிடைத்த பணத்தில் அடிமை ஜீவராசிகளின் ஜீவனாம்சங்களை கொடுத்து அனுப்பி வைத்தார். எஞ்சிய கண்ணாடி சோவ்கேஸ்களை வண்டியொன்றை பிடித்து ஏற்றிக்கொண்டவர் ரெஸ்ட்டாரண்டை காளி செய்துவிட்டு வீடு போய் சேர்ந்தார் முதலாளி அப்புகுட்டி .

கண்ணாடி சோவ்க்கேஸ்களுடன் வீட்டுக்கு வந்த அப்புகுட்டியை பார்த்து ஆத்திரமடைந்த அவரது மனைவி, கோவை சரளா ஸ்டைலில் ஓடி வந்து ஒரு உதை விட்டாள்.

“யம்மாஆ…” என அலரி, ஆடி சிவாஜிகணேசனின் நடிப்புக்கே கொம்படீசனாக தனது முழுப் பெர்போமண்ஸையும் வெளிக்காட்டி ஒரு மூலையில் அலேக்கா சாய்ந்துகொண்டார் “”அல்டா உல்டா”" ஓவ்னர் அப்புகுட்டி…

வண்ட வண்டையா மனைவி திட்டியும் எதுவும் கேட்ககாததுபோல் பெர்போமண்ஸை கண்டினிவ் பண்ணிக்கொண்டிருந்த அப்புகுட்டிக்கு சற்று விளம்பர இடைவேளை கிடைத்தது.

இடைவேளையை தொடர்ந்து மறுபடியும் தொடங்கிய சண்டை சற்று வித்தியாசமான தோரணையில் கேட்க, காதை கூர்மைமையாக்கி செவிமடுத்தரார் அப்புகுட்டி. சண்டை ‘பக்கத்து வீட்டாருடன்!’ என புரிந்துகொண்டவர் மெதுவாக தலையை உசத்தி “அங்கென்ன பிரச்சினையோ…!?”என்ற பீதியில் ஹார்ட் அடாக் வராத குறையாக மயக்கத்தில் உறைந்துபோனார்.

அப்புகுட்டி வாங்கிய கடண்களை கேட்டு பக்கத்து வீட்டார் அவரது ,மனைவியுடன் சண்டையிழுத்தது அப்புகுட்டிக்கு மயக்கம் கலந்த தெளிவுடன் மெது மெதுவாக புரியத்தொடங்கியது.

“ஒரு சனியன் முடியல அதற்குள் இவளுங்க வேற… எரியிர நெருப்புல பெற்றோல் ஊத்துராலுங்களே”னு அப்புகுட்டி பதட்டத்தில் பதரிக்கொண்டிருக்கையில் அப்புகுட்டியின் மனைவி “இதோ பாருங்க இந்த கண்ணாடி சோவ்க்கேஸ்களை வித்து உங்க கடணை அடைப்பாரு என்ட புருஷன் என்றாள்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அப்புகுட்டி “பொஞ்சாதி நமக்குதான் சப்போட்டா பேசுரா”னு சுதாரித்துக்கொண்டு பாய்ந்து களத்தில் இறங்கினார்.

கடண் கொடுத்தவர்களை பார்த்து “அதுதான் சோவ்கேஸ் இருக்குல அப்புறம் என்ன மண்ணாங்கட்டிக்கு கத்துரீங்க”னு கண்களை அகல விரித்து வாயில் வந்த சென்சார் வார்த்தைகளையெல்லாம் பஞ்சு பஞ்சா விட்டார். வாண்டட்டடா ஒருபடி மேலே போய் ஒருவர் இருவர்தான் நிற்பதாக நினைத்து சண்டையின் ஆர்வக்கோளாரில் சிறு கல் ஒன்றை எடுத்து அவர்கள் பக்கம் வீசி எறிந்தார் அப்புக்குட்டி!.

பதிலுக்கு எதிர்த் தரப்பிலிருந்து மழைபோல் கற்கள் அப்புகுட்டி வீட்டை நோக்கி துப்பாக்கி ரவைகள்போன்று பாய்ந்து வந்தது. அப்புகுட்டியும் மனைவியும் தாக்குதலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் உள்ளே ஓடிச்சென்று கதவை சாத்திக்கொண்டு ஒழிந்துகொண்டார்கள்.

வீட்டுக்குள் சென்று மனைவியோடு மறைந்துகொண்டு அப்புகுட்டி
வீர வசனம் பேசிக்கொண்டிருக்க… சற்றும் எதிர்பாராமல் மனைவி வீட்டுக்குள் வைத்தே அடித்து துவம்சம் பண்ணிவிட்டு, மிரட்டல் தொணியில் “அந்த சோவ்கேஸை வித்து கடணை கொடுத்தவிட்டுதான் இனிமேல் வீட்டுக்குள்ளே நுழையவேண்டும்” என கட்டளையிட்டவள் கதவை திறந்து அப்புகுட்டிட்டியின் பெடக்சில் கிரிஷ்டியானோ ரொணால்டோ ஸ்டைலில் ஒரு உதை விட்டாள். பஞ்சரான பந்துபோல் வெளியே வந்து விழுந்தார் அப்புகுட்டி.

“எப்படியும் அப்புகுட்டி வெளியே வருவார்!” என பழி தீர்க்க காத்திருந்த கற்கள்
கண் இமைக்கும் தருணத்தில் சோவ்கேஸ் கண்ணாடிகளை சரமாரியாக பதம் பார்த்தது .

“இதை வெச்சுதான் இருக்கிற பிரச்சனைகளை முடிக்களாம்னு இருந்தேன் இப்ப இதுவும் பேச்சே… நம்ம வாயும்,கையும் ஒழுங்கு மரியாதையா இருந்திருந்தா இந்த சேதாரமும்,செய்கூலியும் வந்துருக்காதே…”னு ‘உடைந்த சோவ்க்கேஸ் கண்ணாடிகளை அப்புறப்படுத்திக்கொண்டிருந்தார் ஆப்புகுட்டி- ச்ச்சே அப்புகுட்டி….!.’ 

தொடர்புடைய சிறுகதைகள்
ஆதம்; "அரசியல் விமர்சனத்துக்கு தன்னை மிஞ்சிட ஊருக்குள் ஒருத்தனுமே இல்லை!" எனும் கர்வத்தோடு அடிக்கடி கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து பெருமை பட்டுக் கொள்வான். 'டொனால்டு ட்ரம்ப் எப்படி ஜெயித்தார், ஒபாமா எப்படிபட்டவர்!? ரஜினி அரசியலில் குதிப்பாரா?' என்று சர்வதேச அரசியலையும் அவன் ...
மேலும் கதையை படிக்க...
பாக்கெட்டிலிருந்த சில்லறையை எடுத்து டீக்கு கொடுத்துவிட்டு அவசர அவசரமாக வெளியே ஓடி வந்தான் 'ஷாம்'. வீதியின் இரு பக்கமும் வண்டிகளின் நெரிசலை பார்த்ததும், பயந்து பம்மிக்கொண்டே முன்னாடியிருந்த பஸ் ஸ்டாப்புக்கு தாவி ஓடிச்சென்று நின்று கொண்டான். ஒரு மர நிழலில் பஸ்ஸுக்காக காத்திருந்த அவன், ...
மேலும் கதையை படிக்க...
சில வருடங்களுக்கு முன்பு. 'ஹ்ஹூம் இந்த மூஞ்சிக்கெல்லாம் ஒரு அட்ட பிகர் கூட இனியும் செட்டாகாவே செட்டாகாது'னு என்று அவநம்பிக்கை நாக்குத்தள்ளி போய் இருந்த சமயத்தில்தான் அந்த அம்சமான பிகரை சந்திக்கும் வாய்ப்பொன்றும் எனக்கு அமைந்தது. அன்று கொழும்பிலிருந்து ஊருக்கு ரயில் வண்டியினிலே பயணித்துக்கொண்டிருந்தேன். ...
மேலும் கதையை படிக்க...
'ஆயிரம் வேலைப் பளுவுக்கு மத்தியில் கிடைத்ததே இரண்டு மணி நேர லீவு... அதுவும் இந்த ட்ராபிக்ஜாமில் முடிந்து விடும்போல் இருந்தது!.' அடுத்தடுத்து டென்ஷன் "எப்பதான் போய் சேருவோம்!" என கடுப்பாகி காரின் ஹோர்னை அழுத்திக்கொண்டிருந்தான் உதய்; பின்னாடி பார்க்கும் மிறரை சரி செய்தவனாக மெதுவாக ...
மேலும் கதையை படிக்க...
தீவின் மலையில் இருந்து ஒரு வழியாக இறங்கிய ஷாம், தொண்டை காய்ந்து தண்ணீர் தாகமெடுக்க சுற்றுவட்டம் தேடி பார்த்துவிட்டான்... கடலைத் தவிர அவன் கண்களில் எதுவும் தென்படவில்லை. முயற்சியை கைவிடாது அடர்ந்த தீவில் எல்லா பக்கமும் தண்ணீர்க்காக தேடி ஓடியவனுக்கு அதிர்ஷ்டவசமாகா ஒரு ...
மேலும் கதையை படிக்க...
அன்றொரு மதியம். புழுக்கம் கதகதப்பை தரவும், கடலோரமாக சென்று சற்று இளைப்பாறலாமென எழுந்து பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே சென்றேன். எங்கள் வீட்டிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில்தான் வங்கக்கடலின் விளிம்பவள் நீல நிறத்தில் மிதந்து கொண்டிருந்தாள். கடல் அருகில் அதன் கரையோரமாக நெடு ...
மேலும் கதையை படிக்க...
பூஞ்சோலை எனும் பெயர் கொண்ட அழகியதொரு கிராமம்தான் எனது கிராமம். இயற்கை கொஞ்சும் பச்சை புல்பூண்டுகளும் மஞ்சல் மணல் தெருக்களும். கிராமத்தின் ஒவ்வொரு மண் குடிசைகளிலின் முற்றத்திலும் வாகை, புங்கான், மாமரம் முந்திரிகை தேக்கு என அக்கிராமே மரங்களால் சூழ்ந்தே செடிகொடிகளோடும், ...
மேலும் கதையை படிக்க...
'பீட்சா,kfc, மெக்டொனால்ட்ஸ்,பேர்கர் அது இதுனு நவ நாகரீக கார்ப்பரேட் உணவு கவர்ச்சி மோகங்கள் வந்தாலும்கூட எங்க ஊரு டேஸ்ட் கடைகளில் கிடைக்கும் சுவைகளை அடித்திட , ஒருபோதும் அவர்களால் முடியாது!. அதிலும் நாகூர் மாமாவின் "கசாப்பா புரட்சி"! டேஸ்ட் கடையில் இளைஞர் பட்டாளத்தை ...
மேலும் கதையை படிக்க...
விடிந்தது கூட தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்த லவ்டொமி திடுக்கிட்டு எழுந்து நேரத்தை சரி பார்த்தான். "அய்யயோ... நேரம் போனதே தெரியாமல் தூங்கிட்டேனா...!?" என தடபுடலாக எழுந்தவன் பல்லையும் விளக்காமல் குப்பாயாட்டம் கிடந்த தன்னுடைய பேண்ட், சட்டை எல்லாக் கன்றாவிகளையும் எடுத்து மாட்டிக்கொண்டவன், ...
மேலும் கதையை படிக்க...
அதிகாலை சிறு மழைத்துளிகளோடு சுபஹ் சொழுகைக்கான பாங்கும் ஒலித்தது. கையில் ஒரு தடியோடு தட்டுத்தடுமாறி பள்ளிவாயல் கேட்டில் ஒரு கையை வைத்து உள்ளே நுழைந்தார் அபூபக்கர் டைலர். மோதினார் மைக்கில் பாங்கை சொல்லிவிட்டு திரும்பி பார்த்தார். எப்பவும்போன்றே, அபூபக்கர் டைலர் மட்டும் முதல் ...
மேலும் கதையை படிக்க...
ஆப்புச் சின்னம்
பழைய ராகம்
முன்னாள் காதலி
பாசத்துடன் ஒரு டைவர்ஸ்
மர்ம தீவு
பிசாசக்கை
சேகு மாமாவின் அம்பாஷ்ட்டர்
டேஸ்ட் கடை நாகூர் மாமா
லவ்டொமி
அபூபக்கர் டைலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)