இப்படி செய்துட்டியே ஜூலி!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 14,724 
 
 

ஜூலி இப்படியெல்லாம் நடந்து கொள் வாள் என்று நாங்கள் யாரும் கனவில் கூட நினைக்கவில்லை.

எங்கள் வீட்டில் நாங்கள் மூன்று பெண்கள், அப்புறம் ஒரு பையன். தம்பிக்கு 16 வயது இருக்கும்போது வந்து சேர்ந்தாள் ஜூலி. முதலில், ‘இதுவும் பெண்ணா’ என்று வருத்தப்பட்ட அப்பா, அவளின் வெள்ளை வெளேர் நிறம், புசுபுசு முடி, கோலிக்குண்டு கண்.. இவற்றை எல்லாம் பார்த்து மயங்கி விட்டார்.

தன் அழகால் எல்லோரையும் தன்வசமாக்கினாள் ஜூலி. அவள் நடந்த நாட்களை விட எல்லோர் மடியிலும் தோளிலும் இருந்த நாட்கள்தான் அதிகம். அப்பா எப்பொழுதும் அவளை ‘என் கிளி, ராஜாத்தி, ரோஜாப்பூ, ரதி’ என்றுதான் கொஞ்சுவார்.

அக்காக்களுக்கு திருமணமாகி, எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் நேரத்தில் ஜூலி வயசுக்கு வந்தாள். அதற்கு அப்புறம்தான் கூத்தே. பருவக் கோளாறு அவளை ஆட்டிப் படைத்தது. அடுத்த வீட்டு மாமா, அப்பாவிடம் வந்து, ÔÔஅண்ணாச்சி, உங்க ஜூலியை எதுத்த வீட்டு ‘ராஜபாளையத்துக்காரன்Õ கூட பக்கத்துத் தெருவில் பார்த்தேன்ÕÕ என்றார். அவ்வளவுதான்.. அப்பாவுக்கு கோபமான கோபம்.

அப்பா சோபாவில் அமர்ந்திருந்தபோது ஜூலி அப்பாவியாக அப்பா மீது கால் போட்டுப் படுத்தாள். கோபத்துடன் சடாரென காலைத் தட்டி விட்டு ஸ்கேலை எடுத்தார் அப்பா. ÔÔஏண்டி ÔநாயேÕ, அதுக்குள்ளே ஜோடி தேட ஆரம்பிச்சிட்டியா? மூணு பொட்டப் பிள்ளை களையும் இருக்குற எடம் தெரியாம மானம், மரியாதை யோட அப்படி வளர்த்திருக்கேன். நீ என்னைய அசிங்கப் படுத்திட்டயேÕÕ என்று விளாசினார். அழுது கொண்டே இருந்தவளுக்கு சாப்பாடு போடாமல் வீட்டிலேயே வைத்துப் பூட்டினார்.

பின்னொரு நாளில் அவளை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு, நாங்கள் எல்லோரும் கோயிலுக்குப் போய்விட்டு வருகிறோம்.. அந்த Ôராஜபாளையத்து தெருப் பொறுக்கி நாய்..’ அத்தனை நேரம் எங்களின் வீட்டுக்குள் இருந்தது.. எங்களைப் பார்த்ததும் ‘நாலுகால்Õ பாய்ச்சலில் ஓடியது.

அன்று தம்பியின் முறை. அவனும் நன்றாக அடித்தான். அப்பாவோ புலம்பவே தொடங்கி விட்டார்.. ‘‘உனக்கு உன் அழகுக்கேத்த, நல்ல ஜாதி மாப்பிள்ளையைப் பார்க்கணும்னு நினைச்சேனே, எல்லாத்தையும் கெடுத்து குட்டிச்சுவராக்கீட்டியே..ÕÕ

அவர் பயந்ததும் சரிதான். ஜூலி சோர்ந்து சோர்ந்து படுக்கத் தொடங்கினாள். சரியாக சாப்பிடவில்லை. வீட்டுக்குள்ளேயே வாந்தி எடுக்க ஆரம்பித்தாள். டாக்டரிடம் கூட்டிச் சென்றோம். டாக்டர், ஜூலி கர்ப்பமாக இருப்பதை உறுதிப் படுத்தினார்.

அதன் பிறகு வெளியே விடாமல் வீட்டிலேயே வைத்திருந்து அம்மாதான் ஸ்பெஷலாகக் கவனித்தார்கள். என்ன இருந்தாலும் வயிற்றுப் பிள்ளைக்காரியாயிற்றே. பிரசவ நேரமும் நெருங்கியது. வெளியே தெரியாமல் டாக்டரை வீட்டுக்கே கூட்டி வந்து விட்டார்கள். ரொம்பவும் கஷ்டப்பட்டாள். கத்தினாள். கதறினாள். எங்களுக்கெல்லாம் பாவமாக இருந்தது.

சில நிமிடங்களில் களைத்துப் போய் வெளியே வந்த டாக்டர் அப்பாவிடம் மிக சந்தோஷமாக, ÔÔசார், பாருங்கள்.. உங்களை மாதிரியே ஜூலிக்கும் 3 பெண் குட்டியும் 1 ஆண் குட்டியும் பிறந்திருக்குÕÕ என்று சொன்னார். பாமரேனியனான அவளுக்கு மூன்று வெள்ளைக் குட்டிகளும் ஆண் குட்டி அந்த ராஜபாளையம் நாய் மாதிரியே செவலை நிறத்திலும் பிறந்திருக் கிறது.

இந்தாங்க.. இனிப்பு எடுத்துக்கோங்க!

– மே 2007

Print Friendly, PDF & Email

1 thought on “இப்படி செய்துட்டியே ஜூலி!

  1. அடச்சே இப்படி பண்ணிடீங்களே பா… ஹாஹாஹாஹா சூப்பர் நல்ல திருப்பம்.. சொன்ன விதம் ஆரம்பத்தில் சிறிது கவலையாக இருந்தாலும் முடிவில் சிரிப்பை அடக்கமுடியவில்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *