வளரும் பயிருக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2023
பார்வையிட்டோர்: 850 
 
 

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தேன்மொழி :அண்ணா அன்று எங்கள் சிறுவர் நாடகத்திற்கு நல்ல விமர்சனம் சொன்னீர்கள். ஆனால் ஒன்று சொல்லவில்லை!

அறிவண்ணன்: என்ன? என்ன சொல்லவில்லை?

தேன்மொழி : நடிகர்களில் யாருடைய நடிப்பு உச்சம் என்று கூறவில்லை!

தமிழ்நிலா: அதாவது சிறந்த நடிகருக்கு ஒரு பரிசு வழங்க வேண்டும் என்கிறாள் தேன்மொழி..

அறிவண்ணன்: இந்தியாவின் தேசியப் பறவைதான் ‘ரொப்’

அன்பரசன்: மயிலாக நடித்த இளவழகனுக்குத் தான் பரிசு.

தேன்மொழி :என்ன பரிசு கொடுப்போம்?

அன்பரசன்: உடைஞ்ச சோடாப் போத்தல் ஒன்று கொடுப்போம்.. (சிரித்தல்)

அறிவண்ணன்: பரிசு என்று வந்தால், சொக்கிளேற், விளையாட்டுப் பொருள் என்று கொடுப்பதைவிட, ஒரு நல்ல புத்தகம் வாங்கிக் கொடுக்கலாம்.

தமிழ்நிலா : சரி, இளவழகனுக்கு ஒரு நாடகப் புத்தகம் வாங்கிக் கொடுப்போம்.

(எல்லோரும் கைதட்டுகிறார்கள்.)

தேன்மொழி : இந்தியாவின் தேசியப் பறவை மயில். அவுஸ்த்திரேலியாவின் தேசிய விலங்கு எது அண்ணா?

அன்பரசன்: எனக்குத் தெரியும் ; கங்காரு!

இளவழகன்: கங்காரு ஒரு முலையூட்டிதானே அண்ணா?

அறிவண்ணன்: முலையூட்டிதான்; கங்காருவைப் போன்ற விலங்குகளை மாசூப்பியல்கள் (Marsu- pials) என்று சொல்கிறார்கள்.

தேன்மொழி : கங்காருவைப் போன்ற விலங்குகள் என்றால்.. கங்காருவைப் போல வேறு விலங்குகளும் இருக்கின்றனவா?

அறிவண்ணன்: இருக்கின்றன; கோலாக் கரடி, தாஸ் மேனியன் ஓநாய், மோல், வரி எறும்பு தின்னி ஆகியவையும் மாசூபியல்கள் தான்.

தமிழ்நிலா: இவற்றின் வயிறுகளில் பை இருக்கும் இல்லையா?

அறிவண்ணன்: இவற்றின் குட்டிகள் ஆரம்ப நிலையில் பிறந்துவிடும். அதனால் சிறிது காலத்திற்குத் தாயின் வயிற்றில் உள்ள பையில் தங்கியிருக்கும்.

அன்பரசன் : மாசூப்பியல்கள் அவுஸ்த்திரேலியாவை விட வேறு எங்கே வாழ்கின்றன?

அறிவண்ணன்: அவுஸ்த்திரேலியா அமெரிக்காவின் தென் பகுதி, மத்தியபகுதி ஆகிய இடங்களில் மட்டும்தான் அவை இப்போது வாழ்கின் றன.

இளவழகன் : ஆதியில் வேறு இடங்களிலும் வாழ்ந்திருக்கின்றனவா?

அறிவண்ணன்: ஆம். ஐரோப்பா, ஆசியா, தென் அமெரிக்கா ஆகிய இடங்களிலெல்லாம் அவை வாழ்ந்திருக்கின்றன.

தேன் மொழி: அப்படியானால் இப்போது ஏன் அவை அவ்விடங்களிற் காணப்படுவதில்லை?

அறிவண்ணன்: ஏனைய முலையூட்டிகள் கூர்ப்படைந்து பெருகிய போது அவற்றோடு போட்டியிட்டு வாழ முடியாமல் அழிந்து போயினவாம்.

தமிழ்நிலா : ஐயோ பாவங்கள்!

அறிவண்ணன்: உயிர் வாழ்வுக்கான போட்டியில் வல்லமை கூடியவை வாழும். ஏனையவை அழியும் என்பதுதான் டார்வினுடைய கூர்ப்புக் கொள்கையின் முக்கிய கருத்தும்கூட!

அன்பரசன் : மனிதர்களுக்கு இது பொருந்துமா அண்ணா?

அறிவண்ணன: பொருந்தத்தான் வேண்டும். ஏனெனில் மனிதனும் ஒரு விலங்குதான்.

இளவழகன்: அப்படியானால் அவை அழிந்து போகாமல் எப்படி இன்னும் வாழ்கின்றன?

அறிவண்ணன்: அவுஸ்த்திரேலியாவும், தென் அமெரிக்காவும் ஏனைய கண்டங்களிலிருந்து நீண்ட காலமாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்தன. ஏனைய கண்டங்களில் நடை பெற்ற முலையூட்டிகளின் கூர்ப்பும் ஆட்சியும் இந்த இரு கண்டங்களையும் பாதிக்கவில்லை.

தேன்மொழி: அப்படியானால் அவுஸ்த்திரேலியாவில் இப்போதும் மாசூப்பியல்களைவிட வேறு முலையூட்டிகள் இல்லையா?

அறிவண்ணன்: இருக்கின்றன. அவை மிகவும் பிற்காலத்தில் மனிதனாற் கொண்டு செல்லப்பட்ட முலையூட்டிகள்தான்.

தமிழ்நிலா: அவுஸ்த்திரேலியாவில் முயல்கள் தொல்லை பெரிய தொல்லை என்று சொல்கிறார்கள்.

அறிவண்ணன்: முயல்களை மனிதனே அவுஸ்த்ரேலியாவில் அறிமுகம் செய்தான். ஆனால் இன்று அவற்றின் அபரிமிதமான பெருக்கத்தை அவனாலேயே கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறது.

அன்பரசன் : ஏனைய முலையூட்டிகளின் அறிமுகத்தால் ஒரு காலத்தில் அவுஸ்த்திரேலியாவிலும் மாசூப்பியல்கள் அழிந்துவிடும் நிலை ஏற்படலாமா?

அறிவண்ணன்: ஏற்படலாம்; புதிய விலங்குகளை அவுஸ்த் திரேலியாவிற்குள் கொண்டு செல்வதற் குக் கடுமையான தடை இருக்கிறது. அவுஸ்த்திரேலிய அரசு விழிப்பாக இருக்கிறது. ஆனாலும் என்ன நடை பெறும் என்று நாம் நிச்சயமாகக் கூற முடியாது.

இளவழகன் : கங்காரு என்ன சாப்பிடும் அண்ணா?

அறிவண்ணன: கங்காரு ஒரு தாவர உண்ணி.

தேன்மொழி : எல்லா மாசூப்பியல்களும் சைவமா?

அறிவண்ணன்: இல்லை. தாஸ்மேனியன் ஓநாய் முழு இறைச்சி தின்னி; வரி எறும்பு தின்னியின் பெயரைப் பார்த்தால் தெரியும் என்ன சாப்பிடும் என்று. மோல் பூச்சிகளை உண்ணும்.

(கூட்டத்தில் இருந்து வெளியேறிய அன்பரசன் சிறிய தென்னையில் ஏறுகிறான்)

தமிழ்நிலா : என்ன இவன் கோலாக்கரடி மாதிரி விறுவிறென்று ஏறுகிறான்?

இளவழகன் : அண்ணாவுக்கு இளநீர் தரப்போகிறான்.

அறிவண்ணன்: அப்படியா? நல்லது. இன்றைய பொழுது இனிப்பாக முடியட்டும்.

– விஞ்ஞானக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 2000, கலை இலக்கியக் களம் தெல்லிப்பழை, ஸ்ரீலங்கா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *