அறிவு பெற்ற அரசன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 4, 2022
பார்வையிட்டோர்: 1,467 
 

(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரண்டு அரசர்களுக்குள் கொடிய பகை மூண் டிருந்தது. ஒருவரையொருவர் தொலைப்பதற்குத் தகுந்த சமயத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது ஓர் அரசனுடைய இரண்டு பிள்ளைகள் மற் றோர் அரசனிடத்திலே அகப்பட்டுக்கொண்டார்கள். பழி தீர்ப்பதற்குச் சமயம் பார்த்துக்கொண்டிருந்த மன்னன் தன்னிடம் அகப்பட்டுக்கொண்ட இரு சிறு வர்களையுங் கொன்று தன்னுடைய பழியைத் தீர்த்துக் கொள்வதற்கு எண்ணினான். தன்னிடம் சிக்கியுள்ள இரண்டு அரசிளஞ் சிறுவர்களையும் யானையின் காலில் இடறிக் கொலை புரியுமாறு கட்டளையிட்டான்.

கொலைஞர்கள் அரசன் கட்டளைப்படியே இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்வதற்கு ஏற்பாடு செய் தார்கள். சிறுவர்கள் கொலைக்களத்திற்கு இட்டுச் செல்லப்பட்டனர். கொலை செய்வதற்கு யானை ஒன்றும் வந்து காத்துக்கொண்டு நின்றது.

தந்தையினிடம் ஏற்பட்ட பகை காரணமாக மைந் தர்களை, அரசன் கொலை புரிய ஏற்பாடு செய்திருத் தலை ஓர் அறிஞர் உணர்ந்தார். அவர் சிறந்த அறிவு நலமும் அருட்பெருக்கும் ஒருங்கே அமையப் பெற்ற வர். அவர் விரைந்து கொலைக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் அரசனிடஞ் சென்றார். அரசனைப் பார்த்து, “அரசே! இச் சிறுவர்களின் தந்தையின்பால் நீ கொண்டிருக்கும் பகைமை காரணமாக, ஒன்றும் அறியாத இச்சிறுவர்களைக் கொலை புரிதற்கு முயலுகிறாய். இது மிகவுங்கொடிது. தன் பகைவன் தன்னிடஞ் சிக்கிக் கொண்டான். ஆயினும் அவனுக்கு நன்மை செய்யவேண்டியது மக்கட் பிறப்பினருடைய கடமையாகும். அவ்வாறாகவும் குற்றமற்ற இச் சிறு வர்களை நீ கொலை புரிவதன் காரணமாக நீ மிகவுங் கொடிய நிரயத்திலே விழுவாய். அந்த நிரயத்தினின்றும் நீ கரையேறுவது மிகவும் அருமையாகும். பிறர் கெடத்தக்க தீவினைகளைப் புரிவோர் தாங்கள் கேட்டை யாமல் இருப்பார்களா? பகைவர்மாட்டுப் பழி தீர்த்துக் கொள்வதால் உனக்கு ஏற்படப் போகிற நன்மை யாது? தனக்குத் துன்பஞ் செய்தவர்களை ஒறுத்தல், அவர்கள் நாணும்படி நன்மை செய்வது தான் என்று அறிஞர்கள் கூறியிருப்பதற்கேற்ப நீ இச் சிறுவர்கட்கு நன்மையன்றோ செய்து அனுப்புதல் வேண்டும்,” என்று மிகவுங் கடுமையாக இடித்துரைத்தார்.

அறிஞரின் உரையைக் கேட்ட அரசன் அஞ்சினான். அச்சிறுவர்களைக் கொலை புரியாமல் அனுப்பி விட்டான். ஒவ்வொருவரும் பிறருக்குத் தீமை புரியாமல் இருத்தற்கு முயலவேண்டும்.

“நைவினை நணுகேல்” (இ – ள்.) நைவினை – பிறர் கெடத்தக்க தீவினைகளை, நணு கேல் – ஒரு போதுஞ் செய்யாதே.

– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *