தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் – அ.சிதம்பரநாதன்‌ செட்டியார்‌

 

(1977ல் வெளியான புத்தகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆசிரியர்‌: டாக்டர்‌ அ.சிதம்பரநாதன்‌ செட்டியார்‌.எம்‌.ஏ.,பி.எச்‌.டி

பதிப்பாசிரியர்‌: பேராசரியர்‌. பிளோரம்மாள்‌, எம்‌.ஏ.எம்‌.ஈட்‌., ம.செ.இரபிசிங்‌, எம்‌.ஏ.

நூலைப்பற்றி

என்னுடைய கணவர் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார் அவர்களால், எழுதப்பட்ட சிறுகதையைப் பற்றிய சில கட்டுரைகளை நெறிப்படுத்தி, “தமிழில் சிறு கதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ எனும் ஒரு நூலாக வெளியிடுவதில் தான் பெருமகிழ்வடைகிறேன். சிறுகதை இலக்கியம் இந்த நூற்றாண்டில் செல்வாக்குப் பெற்ற இலக்கியக் கூறாகக் கருதப்படுவதால், அதுபற்றி ஆராய்ந்த என் கணவரது கட்டுரைகளை நூல் வடிவில் வெளியிட்டால், தமிழ் இலக்கிய அன்பர்கள் பயன்பெறுவர் எனக் கருதியே இதை வெளியிடுகிறேன். இதற்குரிய நூல் வடிவம் கொடுத்து. செம்மைப்படுத்திய பேராசிரியர் பிளோரம்மாள் (தமிழ்த்துறைத் தலைவர், ஸ்டெல்லா மேட்டிடுயூனா மகளிர் பயிற்சிக் கல்லூரி, சென்னை – 4), ம. செ. இரபிசிங் தமிழ்த் துணைப்பேராசிரியர், மாநிலக்கல்லூரி, சென்னைஆகியோருடைய உதவியை என்றும் மறவேன். ஏற்கனவே, என் கணவரது கட்டுரைகளைச் சேர்த்து ‘செங்கோல் வேந்தர்’ எனும் நூல் வெளியிடுவதற்கும் இவர்களே துணை செய்தார்கள்.

நூலை கல்ல முறையில் அச்சிட்ட ஒப்புரவு அச்சகத்தாருக்கும் நன்றியைச் செலுத்திக்கொள்கின்றேன்.

சி. பெரியநாயகி சிதம்பரநாதன்
குடந்தை, 15-4-177

பதிப்பாசிரியர்‌ முன்னுரை

தமிழ்ப் பேரறிஞர் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டி யார் அவர்களது கட்டுரைகளை நெறிப்படுத்தி, நூலாக உரு வெடுப்பதற்குத் துணைசெய்தவற்கான வாய்ப்புக் கிடைத்தது எங்கள் பெரும்பேறே. அன்னாரின் ஆழ்ந்த புலமையின் வாயிலாக வெளிப்பட்ட நூற்கள் பலவற்றினால் தமிழகம் பெரிதும் பயன்பட்டதுண்டு. மேலும் பயன்பெறும் வகை யில், இன்றைய இலக்கியமாகிய சிறுகதையைப் பற்றி அவரது ஆய்வுக் கட்டுரைகளை முறைப்படுத்தி நூல் வடிவு கொடுத்திருக்கிறோம். அளவிலே சிறிதாக இருந்தாலும், கருத்துச்செறிவிலே பெருநிறைவையும், பெரும்பயனையும் நல்கும் என்பதில் ஐயமில்லை. சிறுகதை ஆய்வுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும், இலக்கிய அன்பர்களுக்கு நல்ல இலக்கிய விருந்தாகவும் இந்நூல் அமையும் என்பது திண்ணம்.

மூன்றாவது அகில இந்திய எழுத்தாளர் மாநாட்டில் சிறுகதையைப் பற்றிப் பேசிய பேச்சின் சுருக்கமும், பல இலக்கிய ஏடுகளில் சிறுகதையைப் பற்றி எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

தமிழில் சிறுகதையைப் பற்றி ஆய்வுக் கண்ணோட்டத் தோடு, சிந்தித்து, தரம் அறிந்து வகைப்படுத்தித் திறனாய்வு செய்த முதல் தமிழ்ப் பேரறிஞர் இவரே. இந்நூல், சிறு கதையைப் பற்றிய பொதுச் செய்திகளை அறிவதற்கும். தமிழில் தொடக்க காலத்திய சிறுகதைகளைப் பற்றிச் சிறப் பாகத் தெரிந்துகொள்வதற்கும் துணைபுரியும் என நம்புகிறோம்.

ஆன்ற புலமை படைத்த அறிஞர் பெருமக்களின் அறிவுச் செல்வங்களை அழியாது பாதுகாக்கவேண்டியது நமது கடமையன்றோ !

இந்நூல் செவ்வையாக வெளிவருவதற்கு எங்களுக்குப் பெருமளவில் உறு துணையாக இருந்து, ஒத்துழைப்புக் கொடுத்த நண்பர் திரு. ந.அரணமுறுவல், பி. ஓ. எல். அவர்களுக்கு நன்றியுடையோம்.

சிறுகதை இலக்கியம்‌

நிகழ்ச்சி

இவ்வாறு எழுதப்படும்போது காட்டப்படும் நிகழ்ச்சி’ கனவாகவோ நினைவாகவோ இருக்காலம். ஆயினும், கனவும் நினைவுபோல இருக்கும்படி செய்யவல்ல திறமுடைய எழுத்தாளர்களுக்குச் சிறந்த மதிப்பு உண்டு. சிறுகதை ஒவ் வொன்றிலும் ஒரேவொரு நிகழ்ச்சி சிறந்து இடம்பெறுதல் நல்லது. அதனை ஒட்டிய பல்வேறு நிகழ்ச்சிகளைப் பற்றியும் விளைவுகளைப் பற்றியும் ஆசிரியர் கவலை கொள்ளுதல் கூடாது. வாசகர்கள் எதிர்பார்த்தாலும் கூடாது. ஆனால், வல்லவனாகிய ஒரு எழுத்தாளனுக்குச் சில நிகழ்ச்சிகளையும் ஒன்றேபோல கோக்கும் திறம் அமைந்திருத்தல் உண்டு. கதை ஒவ்வொன்றையும் முற்றுற முடித்துக்காட்டவேண் டிய அவசியம் இல்லை. கதையை இன்னும் வளர்த்தியிருந் தால் ஒன்றும் பெரியதொரு பயன் விளைந்திருக்க மாட்டாது என்ற நம்பிக்கை வாசகர்களுக்கு ஏற்படக்கூடிய வகையில் முடிவு இருந்தாற் போதும். எடுத்துக்காட்டி விரும்பிய பாத் திரத்தின் இயல்புகளில் ஒரு பகுதியைச் செவ்வன் படம் பிடித்துக் காட்டுவது போதுமானது. சிறுகதைகளில் ஒரே நோக்கமும் ஒரே விளைவுந்தான் எதிர்பார்க்கப்படுகின்றன. (“Singleness of aim and singleness of effect are the two great canone by which we have to try the value of a short story – as a piece of art.” – Henry Hudson in his introduction to the study of literature. P. 445), நோக்கம் நிறைவேறும் வகையில் கதை அமைந்திருத்தல் போது மானது. பல எழுத்தாளர்களுக்கு இது கைவரப்பெறாததால் தான் புதினங்களை எழுதத் தலைப்படுகிறார்கள் என்று சொல் வது தவறாகமாட்டாது.

பயன்

சிறுகதை எழுதுகிறவர்கள் கதை பொய் என்ற உணர்ச்சி வாசகர்கள் இடத்தில் உண்டாகும்படி எழுதுவார் களேயானால், அக்கதையில் நன்மைகள் பல உண்டு என்றாலும் அவை முழுப்பயன் அளித்தல் இல்லை என்ற நம்பிக்கை பெயின் என்பார்க்கு உண்டு . [f a story once fell to be false, then all its virtues are of no avail” – Paine P. 39.) மெழுகு வர்த்தி பார்ப்பதற்கு அழகாகவும் தொடுவதற்கு இனிய தாகவும் முகருவதற்கு மணமுடையதாகவும் இருந்தா லும் அது எரியவில்லை என்றால், எவ்வாறு தக்க பயன் விளைத்தல் இல்லையோ அவ்வாறே மெய் போன்றது என்ற உணர்ச்சியை எழுப்பாத சிறுகதை முழுப்பயன் தராது என் பது நம்பிக்கை.

எழுதும் முறை

சிறுகதை எழுதுகிறபொழுது, ஒருவர் கதையை முன் ‘னர் அமைத்துக்கொண்டு தக்க பாத்திரங்களைக் கதைக்கு ஏற்ப இயைத்துக்கொள்ளுதல் கூடும். அன்றி, பாத்திரங் களை முதலில் தேர்ந்தெடுத்துக்கொண்டு அவர்களுக்கு ஏற்ப நிகழ்ச்சிகளை உண்டாக்கிக்கொள்ளுதல் கூடும். அன்றி, ஒரு சூழ்நிலையைப் படைத்துக்கொண்டு அதனுள் இயையு ‘மாறு கதை நிகழ்ச்சிகளையும் ஆட்களையும் உருவாக்கிக் கொள்ளுதல் கூடும்.

சிறுகதை எழுதுகிறவர்கள் நிகழ்ச்சிகளைப் படர்க்கை யில் வைத்துத் தெரிவிக்கலாம்; கதைத் தலைவனோ கதைத் தலைவியோ தானே பேசுவதுபோல அமைக்கவும் செய்யலாம்; கடிதங்கள் மூலமோ, நாட்குறிப்புக்கள் மூலமோ, பிற பாத் திரங்கள் மூலமோ ஒன்றன்பின் ஒன்றாகச் செயல்கள் வெளிப்படுமாறு செய்யலாம். இந்த மூன்று வகைகளில் எதனை வேண்டுமானாலும் சிறுகதை ஆசிரியர்கள் தேர்ந் தெடுத்துக்கொள்ளலாம் என்பது மரபு.

பாத்திரங்கள்

பாத்திரங்களைப் படைக்கும் பொழுது படிப்போர் கற் பனை உள்ளத்தில் அவை உண்மையே போல் தோற்றும் படி படைத்தல் வேண்டும். நம் வீட்டிலோ நம் தெருவிலோ அடுத்த தெருவிலோ ஊரிலோ உள்ள எலும்பும் தோலும் சதையும் கூடிய உண்மை ஆட்களேபோல நமக்குத் தோற் றும்படி படைக்கப்படும் பாத்திரங்கள் நம்மிடத்து அன்பு உணர்ச்சியையோ வெறுப்பு உணர்ச்சியையோ கட்டாயம் எழுப்பிவிடுதல் உண்டு என்பதில் ஐயமில்லை. பாத்திரங் களைப்பற்றி எழுதுகின்ற முறையும் இரண்டு வகைப்படும். ஒரு வகையில் கதையாசிரியரே பேசுவார். மற்றொரு வகை யில் பாத்திரங்கள் தம்முள் பேசிக்கொள்ளுகின்ற வகையி னால், அவர்கள் இயல்பு புலப்படுத்தப்படுவதோடன்றிக் கதையும் தொடர்ந்து நிகழ்ந்துவிடும். இரண்டாவது கூறப் பட்ட முறைப்படி எழுதுவது முன்னைய முறையைவிடச் சிறந்தது என்று மேலைநாட்டார் நம்புகின்றார்கள்,

நடை

சிறுகதையின் நடை எவ்வாறு இருத்தல் வேண்டும்? அது தெளிவாகவும், எளிதாகவும் பாத்திரங்கள் பேசுவது போலவும் இருத்தல் வேண்டும். உரையாடல்கள் ஒருவித விறுவிறுப்பு உடையனவாகவும்… இயற்கையை ஒட்டியன வாகவும், நாடகம் போல் தோற்றுவனவாகவும் இருத்தல் நல்லது. இதனால், அந்தந்தப் பாத்திரங்கள் பேசுமாறு போலவே கட்டாயம் அமைக்கவேண்டும் என்பது இல்லை. சிலவேளைகளில் பாத்திரங்களின் பேச்சுக்களை எடுத்துக் கொண்டு, புதுப்பித்துப் பதிப்பிப்பவரும் உண்டு. ஒவ்வோர் எழுத்தும் பாத்திரத்தின் பேச்சு நிலையில் நின்று மாறுபடா மல் இருக்கவேண்டும் என்பது நியதியில்லை. மாறுபட்டா லும் மாறுபடவில்லை என்ற ஒரு பொது உணர்ச்சியை எழுப் பக்கூடிய வகையில் பேச்சுக்களைச் சிறிது மாற்றியோ கூட் டியோ திருத்தியோ அமைத்தல் தவறாகமாட்டாது. இந்த முறையையும் சிலர் கைக்கொண்டு வெற்றி பெறுகின் றனர். சிறுகதையில் உரையாடல் இருப்பது விரும்பத் தக்கது என்றாலும், இருக்கவேண்டும் என்பது கட்டாய மில்லை. சிலருடைய சிறுகதை உரையாடலே இல்லாமல் நிகழ்தல் கூடும். சிலருடைய சிறுகதையிற் சிறிதளவு உரையாடல் இருத்தல் கூடும்; சிலருடைய சிறுகதையில் எல்லாம் உரையாடலாகவே அமைந்துவிடுதலும் உண்டு. முதற் பத்தி யில் வரும் வாக்கியங்களைச் சிறந்த எழுத்தாளர்கள் தேர்ந்து அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றார்கள். முதற் பத்தியைப் படித்தவுடன் நோக்கம் இன்னது என்பது புலப் படவேண்டும் என்பார் ஹிட்சன். (Initial sentences should bring out the aim,’) சிறுகதையில் வரும் வருணனைகள் சிறிய அளவினவாக இருத்தல்வேண்டும். அவ்வருணனைகள் இன்ன ஊர், இன்ன இடம், இந்த ஆள் என்பதைப் புலப் படுத்தும் அளவிற்கு ஏற்றதாக இருப்பது போதுமானது.

முடிவு

சிறுகதையில் முடிவு இன்பமாக இருத்தல் வேண்டும் என்று சிலரும், துன்பமாகவே இருத்தல்வேண்டும் என்று சிலரும் நினைக்கிறார்கள். துன்ப முடிவினாலேயே ஒரு கதை கலையழகுடையதாகிவிடும் என்ற தப்பான கருத்து சிலரிடத் திற் பரவி வருகிறது. துன்பியல் முடிவினால்தானோ இன் பியல் முடிவினால் தானோ கலை அழகு பெற்றுவிடாது; கலை யழகிற்கு ஏனைய பல காரணங்கள் உண்டு என்பதை மதித் தல் வேண்டும் என்பார் பெயின். (“Happiness and unhap. piness have nothing to do with art; the artistic ending is the right and inevitable ending.”)

நாம் வாழும் இக்காலத்தில் மக்கள் எதனையும் விரைந்து செய்ய விரும்புகின்றனர். அதனால் கதைகளை விரைவிற் படித்து முடித்துவிடவேண்டும் என்ற எண்ணம் பலரிடத் திற் பரவியுள்ளது. அவ்வெண்ணத்தை நிறைவேற்றும் வகையிற் பற்பல சிறுகதைகள் குவிந்துகொண்டிருக்கின் றன. இக்கதைகளை எழுதுவித்துப் படிப்போரை மகிழ்விக் கும் நோக்கம் உடையனவாகப் பல பத்திரிகைகள் உள. வெளிவரும் சிறுகதைகளிற் பல பொருளற்றனவாகவும், மற்ற நிலையிலுள்ளனவாகவும் சிறுகதை இலக்கணத்திற்குப் பொருந்தாதனவாகவும் இருத்தல் கூடும், இருக்கின்றன். எல்லா மொழிகளுக்கும் இது ஒத்ததே. சிறுகதை இலக் கணத்தோடு ஒத்து அமைந்த சிறுகதைகள் ஆங்கிலத்திற் பத்து அல்லது பதினைந்துதான் உண்டு என்பது உண்மை யானால், தமிழ் மொழியிலும் பிற இந்திய மொழிகளிலும் இலக்கணத்தோடு பொருந்திய சிறுகதைகள் இவ்வளவு என எளிதிற் கணக்கிட்டுவிட முடியும் அன் எவ்வாறாயி னும், தமிழ்ச் “சிறுகதை” இலக்கியம் எழுதுவோரின் திறத்தாலும் படிப்போரின் ஆதரவாலும் பெருகுவதற்கும் வளருவதற்கும் வாய்ப்பு உடையது என்பது மாத்திரம் உண்மை.

தமிழில் சிறுகதைகள்

தமிழிற் சிறுகதை இலக்கியக்கலை என்பது கடந்த முப் பது ஆண்டுகளாகத்தான் வளர்ந்து வருகிறதென்றாலும், அதற்கு வேண்டிய கரு முன்னை நாள் தொட்டு உண்டு என லாம். தொல்காப்பியத்தில் “ பொருளொடு புணர்ந்த நகை மொழி’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஓர் உரைநடை வகை சிறுகதைக்கு வேண்டிய அடிப்படையைக் கோலியிருப் பதாகக் கொள்ளலாம். கலித்தொகை, நற்றிணை, அகநானூறு முதலிய சங்கச் செய்யுட்களிற் சில ஒரே ஒரு நிகழ்ச்சியை அழகான முறையிற் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஆனா லும், அவை வசனத்தில் இல்லாதபடியால் அவற்றைச் ‘ சிறு கதைகள்’ என்று சிறப்பித்துக் கூறமுடியாது. பஞ்ச தந்திரக் கதைகள், விக்கிரமாதித்தியன் கதைகள், மதன காமராஜன் கதைகள், அரபி இரவுக் கதைகள், தெனாலி ராமன் கதைகள் முதலியன தமிழில் வழங்கினாலும், அவை கதைகளே ஒழியச் சிறுகதை இலக்கணத்திற்குப் பொருந்தி யவை ஆகமாட்டா, வீரமாமுனிவர், ‘பரமார்த்த குரு கதை’, அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் இயற்றிய ‘விநோத ரச மஞ்சரி ‘ ஆகியவற்றிற் கற்பனைக் கதைகளைக் காண்கி றோமே அன்றிச் சிறுகதைகளை அல்ல.

1921 வரை வாழ்ந்த சுப்பிரமணிய பாரதியார் தான் சிறு கதை எழுத்தாளர்களுக்கு விடி வெள்ளியாய் இருந்தவர் என்று கூறலாம். அவர் இயற்றிய ‘திண்டிம சாஸ்திரி! ‘சுவர்ண குமாரி போன்றவற்றின் அடிப்படையில், பின்னர்ச் சிறுகதைகள் எழுந்தன. வேதநாயகம் பிள்ளை, வ. வே. சு. ஐயர், மறைமலையடிகள் போன்றவர்களும் சிறுகதை போன்ற சிலவற்றை முன்னர் எழுதியுள்ளார்கள். மறை மலையடிகளின் ‘கோகிலாம்பாள் கடிதங்கள்’ என்னும் நூலில், கடித வடிவிற் கதை கூறப்பட்டிருக்கிறது. ஒவ் வொரு கடிதமும் ஒரு சிறுகதை போலவும், எல்லாக் கடிதமும் சேர்ந்து ஒரு நாவல் போலவும் அமைந்துள.

சரியான சிறுகதை இலக்கியத்தின் தந்தையாகத் தமி ழில் மதிக்கத்தக்கவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி என்று கூறு வது பொருத்தமற்றதாகாது. ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளாக அவர் முதலில் ஆனந்த விகடனிலும், பிறகு ‘கல்கி’ பத்திரிகையிலும் ஆகச் சிறுகதைகள் எழுதிப் புகழ் படைத்துள்ளார். நாவல், சிறுகதை, கட்டுரை ஆகிய இலக் கிய வகைகளில் எல்லாம் அவர் ஏற்றபடி தொண்டாற்றி யுள்ள அறிஞர். அவர் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒரு வர் என்பதில் ஐயப்பாடில்லை. அவருடைய சிறுகதைகளிற் சில நெடுங்கதைகளாக இருக்கின்றன; ஏறத்தாழ குட்டி நாவல்கள் என்றுகூடச் சில காரணங்களாற் சொல்லி விடலாம்.

அவரோடு சமதாலத்திலே வேறு இரு பெரும் எழுத் தாளர்கள் தோன்றினர். ‘கு.ப. இராசகோபாலனும்’ ‘புது மைப்பித்தன்’ என்ற சொ. விருத்தாசலமும் நம் சந்ததி யாராலும் விரும்பிப் படிக்கத்தக்க அளவு சிறப்பும் ஆற்ற லும் பெற்றிருந்த சிறுகதை ஆசிரியர்கள். அவர்கள் இரு வரும் காலஞ் சென்றுவிட்டனர். புதுமைப் பித்தன், உலகச் சிறுகதைகள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளார். “உலகச் சிறுகதைகள்’ “தெய்வம் கொடுத்தவரம்” என்ற தலைப்பு களில் அவை வெளிவந்திருக்கின்றன. அவர் தாமே எழுதிய கதைகளிலும், மாப்பசான், கிப்ளிங், டால்ஸ்டாய், கார்க்கி போன்ற பிற நாட்டுக் கதைப் பேராசிரியர்களுடைய செல் வாக்குக் காணப்படுகிறது. அவர் கதைகளில் வரும் பாத் திரங்களும், நிகழ்ச்சிகளும் எங்காவது ஒரு மூலை முடுக்கில் காணக்கூடியனவே. அவர்மிக்ககற்பனை ஆற்றல் உடையவர். நெஞ்சினை உருக்கித் தைக்கும் வகையில் எழுதக்கூடிய அவர், போலப் பலரில்லை. அவர் மிக்க சுருக்கமாகவும், திட்பமாக வும் எழுதுதலில் வல்லவர்; வரிதோறும் தொனிப் பொரு ளோடு வரையும் பெற்றி படைத்தவர்.

கு. ப. இராசகோபாலன் உயிரோடு திகழ்வாரைப் போலப் பல பாத்திரங்களைத் தமது கதைகளிற் படைத்துக் கொடுத்துள்ளார். சாதாரணமாக நம்மால் ஒதுக்கி விடப் படுகிற, நம் கண்ணுக்குத் தெரியாது போய்விடக்கூடிய வாழ்க்கை நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு அவர் கதைகளை எழுப்பியுள்ளார். அவர் சொல்லாட்சி ஒரு தனிமதிப்புடை யது. சில சொற்களில் அடங்கிக் கிடக்கும் பொருள் விரித் தால் அகன்று காட்டும். “காணாமலே காதல்” “புனர் ஜென்மம்” “கனகாம்பரம்” முதலிய அவருடைய சிறு கதைத் தொகுதிகளால் அன்றியும், “இரட்டை மனிதன்” போன்ற மொழிபெயர்ப்பு நாவல்களாலும் அவர்புகழ் நிலவும் என்பது உறுதி.

இக்காலத்தில் தமிழ்ச் சிறுகதை ஆசியர்களின் எண் ணிக்கைப் பெரிது. எதற்கும் அவசரப்படுகின்ற இக்காலத் தில் நீண்ட நாவல்களைப் படிப்பதை விடச் சிறுகதையைப் படித்து முடித்துவிடுவதற்கு விழைவோர் பலர். அதனால், பத்திரிகை யுலகம் சிறுகதைக் கலையை வளர்த்து வரக் காண் கிறோம். பஞ்சாமிர்தம், லட்சுமி, ஆனந்த போதினி, ஆனந்த விகடன், பிரசண்ட விகடன், கல்கி, மணிக்கொடி, பொன்னி, கலைமகள், வசந்தம், அமுதசுரபி, சக்தி, சிந்தனை, மஞ்சரி, கலைக்கதிர், குமுதம், காதல், அஜந்தா, சுதேசமித்திரன் வாரப் பதிப்பு, தினமணிகதிர். வீரகேசரி, ஈழகேசரி, தினகரன் முதலிய பத்திரிகைகளில் அடிக்கடி சிறுகதைகள் வெளி வரக் காண்கிறோம்.

அவற்றில் எழுதும் ஆசிரியர் அனைவரைப்பற்றியுமோ, வெளிவரும் கதைகள் எல்லாவற்றையுமோ இப்போது கூறுதல் என்பது இயலாது. பொறுக்கி யெடுத்த சிலரைப்பற் றித்தான் ஆய இயலும்.

அறிஞர். சர். எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களுடைய கிருத்தினைப் போல, இலக்கியம் நம்மை மகிழ்விக்கச்செய்து, அறிவுரையும் ஈனுவதோடு நின்றுவிடாமல், நம் ஆத்ம சச்தியை எழுப்பவேண்டும். சிறுகதையும் இலக்கியத்தின் வகைகளில் ஒன்றாதலின், இப்பண்பினைச் சிறுகதைகளிலும் எதிர்பார்ப்பது குறையாக மாட்டாது. அக்கருத்தோடு நோக் கினால், சுப்பிரமணிய பாரதி இயற்றிய “சிதம்பரம்” என்ற கதையில் கடவுள் ஒருவரே என்ற கொள்கை குறிப்பாக நிலைநாட்டப்படுவதைக் காணலாம். சி. இராஜகோபாலாச்சாரி யார் எழுதிய “கூனி சுந்தரி” என்ற கதையில் “உன்னைப் பார்த்தால் என் உடம்பு தெரியவில்லை. உடம்பைப் பார்த் தால் நீ தெரியவில்லை” என்ற தத்துவக் கருத்து விளங்கு கிறது: கு.ப.ரா எழுதிய “தமிழ் மங்கை ” நாரண துரைக் கண்ண ன் (ஜீவா) எழுதிய “வேதாந்தகேசரி’, சிதம்பர சுப்பிரமணியம் எழுதிய “இரட்டைத் தாமரை” மகுதூம் எழுதிய “அமர ஓவியம்” ஆகிய கதைகள் இக்கூறுபாட்டில் அமையும்.

சிறுகதையின் இலக்கணம் வகுத்த பெயின் என்பார் கூறுவதைப் போல், சிறுகதைகள் அகண்ட பெரிய உண்மை களைப் போதிக்க வேண்டியதில்லை. தற்பொழுது மகிழ்ச்சி யையூட்டிக் குறிப்பு வகையான ஏதாவது ஒரு கருத்தினைப் புலப்படுத்தினாற் போதும். அதனால்தான் பல ஆசிரியர்கள் ஒரே மூச்சிற் படித்து விடக் கூடிய பல சிறுகதைகள் எழுது. கின்றார்கள்.

சில கதைகளில், சொல் வேறு செயல் வேறாக உள்ள மாந்தர்களைப் பற்றிக் கூறப்படுகின்றன. “தனி யொரு வனுக்கு உணவில்லை யெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” “பாரத சமுதாயம். வாழ்க’ என மேடைப் பிரசங்கங்கள் கடைபெறுகின்ற அதேநேரத்தில் ஒரு மனிதன் ஒருகையளவு சோறு பெறத் தவித்து வாழ உயிரை இழக்கும் நில் ‘யைத் “தனியொருவனுக்கு” என்ற சிறு கதையில் உருக்க மாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் புதுமைப்பித்தன். கைவல்ய ஞானி ஒருவர், கடவுள் எங்கும் உண்டு என்று கற் பிப்பவர், எவ்வாறு ஒரு நாள் தன் அந்தரங்க சீடன் ஒரு வனின் மனைவிமேற் காதலுற்றுக் கலங்கினார் என்பதை ஜீவா “வேதாந்த கேசரி” என்ற கதையிற் காட்டுகிறார். சோஷ லிஸ்டு கருத்தினை மேடையிற் பரப்பும் ஒருவர் எவ்வாறு அதே நேரத்தில் லாட்டரிச் சீட்டுப் போட்டுப் பிறரை ஏமாற்ற அவர் பணத்தைத் தான் நாடி விரும்பி எதிர்பார்க் கிறார் என்பது ஜீவா எழுதிய “பிரதிவாதி பயங்கரம்” என் னும் மற்றொரு கதையால் வெளியாகிறது. ஜில்லா போர்டு தலைவர் ஒருவர் “மக்களாய்ப் பிறந்தார் எல்லோரும் சமம், உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்பது இந்தியாவில் இல்லையே” என மேடைகளிற் பேசும் இயல்புடையவர், வெள்ளத்தால் வாட்டமுற்றுத் தங்க இடமின்றிக் கலங்கிய நாவிதன் ஒருவனுக்கு வீட்டின் திண்ணைப் புறத்தே இடங் கொடுக்க இசைய மனமில்லாதவராய், அதை வெளிப்படையாகக் காட்டாமல் அவனுக்குக் குடிசை கட்டிக்கொள்ள என ஐம்பது ரூபாய் கொடுத்துத் தப்பித்துக்கொள்கிறார் என்ற செய்தி விந்தன் எழுதிய “பொன்னி” என்ற கதையில் விறுவிறுப்புடன் காட்டப்பட்டுள்ளது. கணையாழி எழுதிய ‘நொண்டிக் குருவி’யில் வரும் காலேஜ் மாணவி ஒருத்தி ஜீவகாருண்ய மேடைப் பிரசங்கத்தில் வல்லவன் தன்வீட்டில் சிதைந்த கூட்டில் வருந்திக் கிடக்கும் நொண்டிக்குருவியைத் தள்ளி எறியக் கூசவில்லை என்பது அறியப்படுகிறது.

“யார் குற்றவாளி” என்ற கருத்தோடு எழுதப்படும் கதைகள் பல. இராசகோபாலச்சாரியார் எழுதிய ‘பட்டாசு அண்ணாதுரை எழுதிய ‘குற்றவாளி யார்?’ புதுமைப் பித்தன் எழுதிய ‘பொன்னகரம்’ ஜீவா எழுதிய ‘கொலு பொம்மை’ ஆகிய கதைகளில் வரும் பாத்திரங்கள் திருடிய தாகவோ, விபசாரம் செய்ததாகவோ இருந்தன. அதற்குக் காரணம் அவ்வாறு அவர்களைச் செய்யும்படி பாழான ஏழ்’ மையான நிலையில் விட்டுவிட்ட சமுதாயமே என்பது காட்டப் படுகிறது.

பழங்கதைகள் பல புது மெருகுப் பெற்றுச் சிறுகதை களாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. கு. ப. ரா. எழுதிய ‘துரோகமா?’ கருணாநிதி எழுதிய ‘ராயசம் வெங்கண்ணா ‘ என்பதும் தஞ்சை நாயக்கர்களிடமிருந்து மராத்தியர் கைக் குப் போகும்படி ஏற்பட்ட சரித்திரக் குறிப்பின் அடிப்படை யில் எழுந்தன. அவ்விரு ஆசிரியர்களும் நிகழ்ச்சியை வெவ் வேறு கோணத்திலிருந்து படம் பிடித்துக் காட்டியுள்ளார் கள். புஷ்பத்துறை சுப்பிரமணியன் ‘அஜாத சத்ருவைப் பாடலி என்ற கதையில் திரும்பவும் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். ‘கொனஷ்டை’ எழுதிய அரைகுறைக் கதைகளில் மகனுக்கு முதுமையைக் கொடுத்து இளமை யைத் தான் பெற்றுக்கொண்ட யயாதி ஒரே நாளில் பட்ட அல்லல்கள் ஆயிரம் ஆண்டுகளில் படுவதோடு ஒக்கும் என்ற அரிய கருத்துக் காட்டப்பட்டிருக்கிறது. ” அகல்யை” என்ற புதுமைப்பித்தன் கதை புத்துருவமே பெற்று நிற் கிறது.

சில கதைகள் எழுத்தாளருடைய வாழ்க்கையையும், வாழ்க்கை நிலையையும் காட்டுகின்றன. சுண்டுவின் ‘சந்நியா சம்’ என்ற கதையில் ஒரு கதையாசிரியர் தன்னால் காதலிக்கப் பட்ட ஒரு பெண்ணைப் பட முதலாளி தன் ஆசை நாயகியாக ஆக்கிக்கொண்டுவிட்டபடியால் எவ்வாறு படத்திலாவது சந்நியாசியாகிவிட்டார் என்பதைக் காட்டியிருக்கிறார்.

ஒரு கதையாசிரியர் தமது பெருமையை தமிழ்நாட்டார் அறியவில்லையென வடநாட்டிற்குப் போய் அங்கிருந்து இந்தியில் ‘வக்ரநாத்ஜி’ என்னும் புனைப்பெயரில் கதைகள் எழுதினாராக, அப்புத்தகங்கள் தமிழில் மொழி பெயர்க்கப் பட்டுப் பெருவாரியாக விற்பனை ஆயின என்பதை விந்தன் காட்டியுள்ளார்.

ஆண், பெண்களின் உள்ளத்தை நன்றாக உணர்ந்து எழுதும் எழுத்தாளர்கள் பலர். அரு.இராமனாதன் எழுதும் காதல் பற்றிய கதைகள் இத்தகையன. டி. கே. சீனிவாசன் எழுதிய துன்பக்கதை’ இவ்வகையில் எண்ணப்பட வேண் டியது. மகளிருடைய மனநிலையைச் செவ்வனே ஓர்ந்து தெளிந்த அறிவோடு லக்ஷிமி (திரிபுரசுந்தரியின் கதைகள் உள. உதாரணமாக, “விசித்திரப் பெண்கள்” “முதல் வகுப்பு டிக்கெட்” ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அவர் அமைக்கும் சொல்லாடல்கள் அழகாகத் திகழ்கின்றன, ஏழைத் தொழிலாளருடைய மனநிலையை நன்கு உணர்ந்து எழுதுபவர் தொழிலாளராயிருந்து எழுத்தாளரான விந்தன், தூரன், மு. வரதராசன், ராஜம்கிருஷ்ணன். கி.வா. ஜகந்நாத னின் ‘பவள மல்லிகை ‘யையும் ராஜம் கிருஷ்ணனின் * பிஞ்சு மனம்’ என்பதையும் இதனுடன் குறிப்பிடலாம்.

கலைஞர் சிலருடைய முக்கிய விருப்பத்திற்குப் பாத்திர மாக இருப்பவர் கண்முன்னே இல்லாமல் மறைந்துவிடின், அவருடைய கலைத்திறன் மங்கி விடுகிறது என்னும் கருத் தைச் சில எழுத்தாளர்கள் தங்கள் கதைகளிற் காட்டியுள் ளார்கள். ஜீவாவின் “ பிடில் நாதப்பிரம்மம்” என்ற கதை யையும், புஷ்பத்துறை சுப்ரமணியத்தின் “ஜீவ சிலை” என்ற கதையையும் குறிப்பிடலாம்.

சினிமாப் பட முதலாளி, டைரக்டர்களும் தரும் தொல்லை கள் சில கதைகளினூடே வருகின்றன. ஜீவாவின் ‘ மிரு காளினி ‘ கல்கியின் ‘சுண்டுவின் சந்நியாசம்’ ஆசியவற்றில் இக்கருத்து வரக்காணலாம்.

தீண்டாமை ஒழிப்பு. விதவை மறுமணம், கலப்பு மணம் ஆகியவற்றைத் தூண்டிவிடக் கூடிய வகையில் எழும் கதை கள் உண்டு. கல்கியின் ‘ விஷ மந்திரம்’ தீண்டாமையைப் பொசுக்கிவிடும் வகையில் அமைந்துள்ளது. காசி நகரப் பண்டாக்களுக்கு இக்கதையை மொழி பெயர்த்துக் காட்டு தல் வேண்டும். ஏ. எஸ். பி. ஐயர் எழுதிய ‘ வான் மலர்’ என்னும் கதை விதவை மறுமணத்திற்கு வக்காலத்து வாங்கியதுபோல உளது. இவற்றைவிடமிகச்சிறந்தது புதுமைப் பித்தனுடைய “வழி”. இக்கதையில் வரும் விதவை கண்கலங்கி, வதங்கிச் சாவினை வரவேற்கிறாள். படைத்த கடவுளையும் அநியாயமாகவும், சமத்துவமில்லாமலும், செய் யப்பட்டுள்ள மனித சட்டங்களையும் சபித்துவிட்டுச் சாகின் முள். சுத்தானந்த பாரதியாரின் ‘ கலிமாவின் கதை’ முஸ் லீம் பக்கிரி ஒருவனின் மகள் இந்துவை மணந்துகொண் டதைப் படம் பிடித்துக் காட்டுவது. அண்ணாத்துரையின் * பேரன் பெங்களூரில்’ என்ற கதை பிராமண விதவை முதலியார் குலத்து ஆசிரியரை மணந்து, ஒரு சூழ்ச்சியால் தந்தையின் ஆசியைப் பெற விழைவதுபோலக் காட்டுகிறது.

நம்மின் மெலிந்தாரையும் தாழ்ந்தாரையும் கை தூக்கி விடவேண்டும் என்ற உணர்ச்சியை உண்டாக்கக்கூடிய, கதைகள் பல உண்டு. புதுமைப்பித்தன் எழுதிய ‘ தனி ஒருவனுக்கு’ என்ற கதையில் கோயிலில் ஆரவாரத்தோடு பூஜையும் நைவேத்தியமும் நடக்கிற வேளையில், பிச்சைக் காரன் எப்படி வெளியே வருந்தி மாய்கிறான் என்பது காட் டப்படுகிறது. அகிலன் எழுதிய “ கோயில் விளக்கு” என் னும் கதையில் இடியிலும் இருளிலும் மண்ணெண்ணெய் விளக்குக்கு வழியில்லாமல் சாம்பான் வீட்டில் குழந்தை பிறக்கிற அதே வேளையிலே எவ்வாறு ஒரு மண்ணெண் ணெய் வியாபாரி ரேஷன் காலத்திலே ஆயிரம் ரூபாய் செல வில் கோயிலிலே மின்சார விளக்கு ஏற்றுகிறார் என்பது காட்டப்படுகிறது.

கதையாசிரியர் சிலர் எழுதும் கதைகளில் இலக்கிய மணம் வீசுகிறது. பொதுமக்கள் மதிப்புக்கு அதிகமாக அசைபடாமல் தம்மை அறிந்து வாசித்து மகிழக்கூடிய மக்க ளுக்கு ஒத்ததாக மு. வரதராசனின் நடை அமைந்துள்ளது… அவர் எழுதிய ‘ விடுதலையா?’ முதலிய கதைகளைக் காண லாம். “கட்டாயம் வேண்டும்” என்ற தலைப்பிலே, வேலை யின்மையும் வறுமையும் இரந்தும் பெறாமையும் எவ்வாறு ஓர் இளைஞனைத் தற்கொலைக்குத் தூண்டிவிட்டன என்ற கருத்து அழகாக அமைத்துக் காட்டப்பட்டிருக்கிறது. ஜீவா வின் ‘முல்லை’ மகுதூம் என்பவரின் ‘ திருமறையின் தீர்ப்பு ஆகிய கதைகளில் நல்ல இலக்கிய மணம் வீசக் காண் கிறோம்.

எழுத்தாளர் சிலர் ஒரு கதைக்குள் கதை வருமாறு போல எழுதி, இரண்டையும் ஒன்றே போலச் சாமர்த்திய மாகப் பொருத்திவிடுகிறார்கள். உதாரணமாக, அகிலன் எழுதிய • பெண் பாவம்’ என்ற கதையையும், எஸ். பி. ஷர்ஷன் எழுதிய ‘ கொடியும் கோலையும்’ குறிப்பிடலாம்.

பெரும்பான்மையான எழுத்தாளர்கள் சிறுகதையின் முடிவைக் கூறாமலேயே முடிக்கிறார்கள். வாசகர்களின் மனம்போல முடிவு தோன்றலாம். இன்னதுதான் முடிவா யிருக்கலாம் என்பதை ஊகித்து விடக்கூடியவாறே பல கதைகள் உள. ஆனால், ஏ. எஸ். பி. ஐயர், அண்ணாத்துரை, சுத்தானந்த பாரதியார் ஆகியோர் கதைகளின் முடிவை நன்றாகவும், தெளிவாகவும் காட்டியேவிடுகிறார்கள். இது அவர்களுடைய கதைகளின் சிறப்பு.

சிறுகதைகளைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தலாமா? என்பது பற்றி ஒரு சொல் : கருணாநிதி, அண்ணாத் துரை ஏ. எஸ். பி. ஐயர், சுத்தானந்த பாரதியார் போன்றவர்கள் சமூகக் குறைகளைப் போக்குவதைப் பற்றித் “ தமது கதை களைப் படிக்கும் வாசகர்களைப் பொறுத்து விட்டுக்கொடுக்க வேண்டிய விஷயம் இது” எனச் சிறுகதை இலக்கண ஆசிரி யர் பேரிபெயின் என்பார் கூறுவர். அரைகுறையாகப் படித்த மக்களே நிரம்பியுள்ள நம் நாட்டைப் பொறுத்தவரையில், வாசகர்கள் பலர் கதையாசிரியர்கள் எல்லாவற்றையும் சொல்லித் தீர்த்துவிடவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் எனக் கூறுவது தப்பாகாது. அண்ணாத்துரையின் “சிறு கதைகள்” என்ற புத்தகத்தில் பிரச்சாரத்திற்கு அதிக இடம் எடுத்துக்கொண்டிருப்பது போலக் “கற்பனைச் சித்தி ரம்” ‘ என்ற புத்தகத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை எனக் குறிப்பிடலாம். தினமணிக் கதிரில் வெளியாகும் நிமிஷக் கதையையும் துருவி நோக்கினால், ஒரு கருத்தினை அல்லது தத்துவத்தை விளக்க அக்கதை பயன்பட்டுள்ளது என்பது விளங்காமற் போகாது.

மாயாவி என்பாரின் சிறுகதைகள் மக்கள் நெஞ்சப் பாங்கினை விறுவிறுப்பான, தெள்ளிய இனிய நடையில் விளக்கிக் காட்டுகின்றன. அவர் அமைக்கும் பாத்திரங்கள் உண்மையிலேயே செயல் ஆற்றுவது போலவும், பேசுவது போலவும் தோன்றுகின்றன. உதாரணத்திற்கு அவர் இயற்றிய ‘ பனித்திரை’ என்பதைக் குறிப்பிடுவேன்.

மாணவர்க்கு ஏற்ற கதைகளாக சி. எம். இராமச் சந்திரஞ் செட்டியார் எழுதிய “சிறுகதைத் திரள் ”, கா. அப்பாத்துரை எழுதிய “சமூகக் கதைகள்’, “நாட்டுப்புறக் . கதைகள்”, பி.என். அப்புசாமி எழுதிய “விஞ்ஞானக் கதைகள்”, பாலூர் கண்ணப்ப முதலியார் எழுதிய “சிறுகதைக் களஞ்சியம்’ முதலியவற்றைக் குறிப்பிடலாம்.

உலகத்தின் பல்வேறு பகுதிகளில் எழுதப்பட்ட கதை களைப் புதுமைப்பித்தன், கு. ப. ரா., ஆர். வீழிநாதன், சேனாதிபதி, டி. என். குமாரசாமி, ஏ. கே. ஜெயராமன் முதலியவர்கள் மொழி பெயர்த்துத் தந்துள்ளார்கள். 1946இல் எஸ். குருசாமி “ இந்தியச் சிறுகதைகள்” என்ற தலைப்பில் பல்வேறு இந்திய மொழிகளில் அமைந்த கதைகளை மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார்.

இலங்கை எழுத்தாளர்களில் அரியரத்தினம், வைத்தி லிங்கம், சம்பந்தம், ‘ இலங்கையர் கோன்’ ஆகியோர் தீட் டும் கதைச் சித்திரங்கள் படித்து இன்புறத்தக்கவை. இவர் கள் அக்கதைகளைப் புத்தக வடிவிற் கொண்டுவருவார்களா னால் அதிக நலன் விளையும்.

சிறுவர்க்கு உரிய வகையில் கதை எழுதுவோரில் தலைசிறந்தவராக அழ. வள்ளியப்பா, அம்புலி மாமா, தமிழ்வாணன், கண்ணன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

எஸ். வி. வி., தூரன், சுகி, நாடோடி ஆகியோர் சிறு. கதை போன்ற உரைநடைச் சித்திரங்களால் பல மக்களை மகிழ்வித்து வருகிறார்கள். மிகமிகச் சாதாரணப் பொருள் களையும் பெரிதாக்கி, நகைச்சுவையோடு வரைந்து காட்டும் ஆற்றல் இவர்களிடம் பெரிதும் உண்டு.

பல பத்திரிகைகளில் அடிக்கடி பல்வேறு சிறுகதைகள் வெளிவந்து குவிகின்றன. அவையெல்லாம் நல்ல முறையில் அமைந்துவிடுகின்றன என்று சொல்ல முடியாது. ஆனால்,அடியிற் காணும் சில நன்றாக எழுதப்பட்டுள்ளன என்பது. குறிப்பிடத்தக்கன :

 • கணையாழி எழுதிய நொண்டிக்குருவி
 • ஜெகசிற்பியன் எழுதிய ஜல சமாதி
 • சோமு எழுதிய கடலும் கரையும்
 • ஞானாம்பாள் எழுதிய தம்பியும் தமையனும்
 • கே. ஆர். கோபாலன் எழுதிய அன்னபூரணி
 • சோமாஸ் எழுதிய அவன் ஆண்மகன்
 • கௌசிகன் எழுதிய அடுத்த வீடு
 • எஸ். டி. சீனிவாசன் எழுதிய கனிவு.

பிற இந்திய மொழிகளில் பெயர்த்தெழுதத் தக்கவையாகப் பன்னிரண்டு சிறுகதைகளைக் குறிப்பிடவேண்டும்என்றால் அடியில் வருவனவற்றைக் குறிப்பிடுவேன் :

 • கு. ப. ராஜகோபாலனின் ‘காணாமலே காதல்’
 • புதுமைப்பித்தனின் ‘வழி’
 • கல்கியின் ‘விஷ மந்திரம் ‘
 • சுத்தானந்த பாரதியாரின் ‘கடிகாரச் சங்கிலி’
 • அகிலனின் ‘இதயச் சிறையில்’
 • விந்தனின் ‘முல்லைக்கொடியாள்’
 • லட்சுமியின் ‘வில் வண்டி ‘
 • ஜீவாவின் ‘வேதாந்த கேசரி ‘
 • டி. கே. சீனிவாசனின் ‘ துன்பக் கதை’
 • புஷ்பத்துறை சுப்ரமணியத்தின் ‘ஜீவ சிலை’
 • கணையாழியின் ‘நொண்டிக் குருவி’

கட்டுரையை முடிப்பதற்குள், பத்திரிகைகளில் அடிக்கடி சிறுகதை எழுதுவோரின் பெயர்கள் இன்னுஞ் சிலவற்வற்றைக் குறிப்பிடுவேன் : கே. என். சுப்ரமணியன், ஜி. கௌசல்யா, இராதா மணாளன், . தில்லைவில்லாளன், புஷ்பா மகாதேவன், வேங்கடலட்சுமி, புரசு பாலகிருஷ்ணன், ஜி. எஸ். பாலகிருஷ்ணன்.

சிறுகதை இலக்கியம் எனப்படுவது தமிழில் அண்மையான காலத்தில் தான் எழுந்தது; ஆயினும், இலக்கியக் கூறுகளில் அதற்குரிய நிலைபேறான இடத்தைப் பெற்று விட்டது என்றே சொல்லவேண்டும். வாசகர்கள் பல்கப் பல்கச் சிறுகதைகள் மென்மேலும் வளரும்.

– தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், முதற் பதிப்பு: ஏப்ரல் 1977, பிலோமினா பதிப்பகம், சென்னை.

ஆசிரியரைப்பற்றி

அமிர்தலிங்கம், பார்வதி அம்மாள் ஆகியோரின் மகனாக 1907ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் நாள் குடந்தையில் பிறந்தார். குடந்தைக் கல்லூரியில் 1928ஆம் ஆண்டு பி. ஏ. பட்டம் பெற்றார். மாநிலத்திலேயே முதல்வராகத் தேறி, டாக்டர் ஜி.யு. போப் பதக்கமும், பிராங்கிளின் பதக்கமும் பெற்றார். அதன்பின், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம். ஏ. பட்டம் பெற்றார். தொடக்கத்தில், சென்னை அரசினர் இஸ்லாமியக் கலைக் கல்லூரியிலும், பாலக்காடு அரசினர் கலைக் கல்லூரியிலும் தமிழ் விரிவுரையாளராகப்பணியாற்றி னார். பின்னர், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரை யாளராகவும், தமிழ்ப் பேராசிரியாகவும் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். பணிபுரிந்த காலத்திலேயே, 1942இல் டாக்டர் (Ph.D) பட்டம் பெற்றார். இவரே தமிழில் முதன் முதலில் ஆராய்ச்சி வழியில் டாக்டர் பட்டம் பெற்ற பெருமைக்குரிய வர். இடைக்காலத் துணைவேந்தராக 1948ஆம் ஆண்டு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய பெருமை யும் இவருக்குரியது. 1955ஆம் ஆண்டில், பல்கலைக் கழகப் பயிற்றுமுறை, இயங்குமுறை, ஆட்சித் திறன் ஆகியவற்றை அறிந்து வர இலண்டன் மாநகருக்கு அனுப்பப்பட்டார். 1956இல் மலேசியா போன்ற கிழக்கத்திய நாடுகளுக்குச் சென்று தமிழ் மணம் பரப்பி வந்தார். 1956இல் மாநிலத் தமிழாசிரியர் கழகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1958இல் சென்னை மேலவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னைப் பல்கலைக் கழகத்தில், ஆங்கில . தமிழ் அகராதித் தலைமைத் தொகுப்பாசிரியாக ஆறு ஆண்டு கள் பணியாற்றினார். 1960ஆம் ஆண்டு, மாஸ்கோவில் நடைபெற்ற 25ஆவது உலக மொழிப் பேரறிஞர் மாநாட்டில், தென்னகத்தின் பேராளராக (Delegate) கலந்துகொண்டு, உலகினருக்குத் திருவள்ளுவர் தரும் செய்தி’ என்ற தலைப்பில் தமிழின் பெருமையினை உலகினுக்கு எடுத்துரைத்தார். இவரின் ஆற்றல்களை அறிந்தே ‘செந்தமிழ்ச் செல்வர்’ என்ற பட்டத்தைத் தருமபுர ஆதீனம் இவருக்கு வழங்கியது.

தமிழில் ஒப்பாய்வுக்கு வழிகோலியவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒத்த புலமையுடையவர். ஆங்கிலத்தில் தமிழைப்பற்றிய பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளார்.

நாதனார் நாநலம் கண்டறியா மேடைகளே தமிழகத்தில் இல்லையெனலாம். தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்து, பின்னர் வடநாடு, ஈழம், மேலை நாடுகள் எங்கும் தேமதுரத் தமிழோசை பரவும் வகை செய்தார். இவரது நாவன்மையை ஞானியாரடிகள், திரு. வி. க., மறைமலையடி கள் போன்றோர் சிறப்புற பாராட்டியுள்ளனர்.

இலக்கிய புலமையும், மொழியியல் வல்லமையும் வாய்ந்த இவர். கவிதைகள் சிலவற்றையும் இயற்றியுள்ளார்.

இறுதிக் காலத்தில் 1965ஆம் ஆண்டு முதல் 1967 வரை மதுரைத் தியாகராசர் கல்லூரியின் முதல்வராகப் பணி யாற்றினார். இவ்வாறு பல்வேறு பொறுப்புகளில் பணியாற் றிய, உருவத்தாலும் உள்ளத்தாலும் ஒரு தான்மைசால் (Personality) தமிழ்ப் பெருமகன் பெருமித நோக்குகொண்ட பண்பாடு மிக்கப் பெருந்தகை, 1967ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் நாள் இயற்கை எய்தினார்.

ஆசிரியரின் நூல்கள்

1. கட்டுரைக் கொத்து
2. தமிழ்காட்டும் உலகு
3. தமிழோசை
4. வீட்டுத் திருமகள்
5. முன்பனிக் காலம்
6. இளங்கோவின் இன்கவி
7. உழைப்பால் உயர்ந்த ஒருவன்
8. பெரியார் மன்றோ
9. புக்கர்தி வாசிங்டன்
10. மன்னுயிர்க்கன்பர்
11. இந்திய சரித்திர மாலை
12. An Advanced Studies of Tamil Prosody
முதலியன

தொகுத்த நூல்
சிறுகதைக் களஞ்சியம் (சாகித்திய அக்காதெமி வெளியீடு)

பிலோமினா பதிப்பக வெளியீடுகள்
1. செங்கோல் வேந்தர்
2. தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *