கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 10, 2017
பார்வையிட்டோர்: 11,359 
 
 

‘ஏன் இந்த வேதனை? இங்கிராம் உயிரோடிருந்தால் இப்போது மூன்று குழந்தைகள் என்றாலும் பிறந்திருக்குமே? ஏன் அவன் என்னிடமிருந்து பிரிந்தான்? எனது காதல் புனிதமற்றதா? ஏன் எனது காதலைக் கடவுள் ஆசிர்வதிக்கவில்லை? தாங்கமுடியாத வேதனையுடனான அலிசனின் சிந்தனை வெளியில் வீசிக்கொண்டிருந்த பயங்கரக் காற்றின் அதிர்வால்; ஜன்னல்கள் சாடையாக அடிபட்டுக்கொண்டிருந்ததுபோது தடைப் பட்டது.

இங்கிலாந்தின் காலநிலை கடந்த சில தினங்களாகப் பல பிரச்சினைகளைத் தந்துகொண்டிருக்கின்றது. சூழ்நிலை வெப்பமடைவதால் சாதாரணமான பருவமாற்றங்கள் அசாதாரணமாகிவிட்டன.

இயற்கையின் பருவமாற்றங்களில் மட்டும்தானா அசாதாரண நிகழ்வுகள். பக்கத்திலிருக்கும் கணவரைப் பார்த்து அவள் மெல்லிய பெருமூச்சுவிடுகிறாள்.அவர் கவனம் டெலிவிஷனிலிருக்கிறது.

‘கடந்த சில நாட்களாக அறிவித்துக் கொண்டிருக்கும் கால நிலையின் நிமித்தமாக,நாளை மதியத்திலிருந்து இங்கிலாந்தில் பெருங்காற்ற வீசும் நிலையிருக்கிறது. முடியுமானால் உங்கள் வெளியூர்ப் பிரயாணங்களைத் தவிர்த்துக் கொள்ளவும்’ பி.பிசி. கால நிலை அறிவிப்பாளர்,; மிகவும் கவனமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.

இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்ட அலிசனும் அவள் கணவர் ஒலிவரும்,டி.வி நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

‘ உனது ஆபிசில்,அவசரமாக ஏதும் செய்து முடிக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லாவிட்டால்,நாளைக்கு நீ வேலைக்குப் போகாமல் விடலாம்.’ ஒலிவர் அன்புடன் சொன்னார்;.

அவள் உடனடியாக அவருக்குப் பதில் சொல்லவில்லை.

காலநிலையால் அவள் பாதிக்கக்கூடாது என்று நினைப்பவர்,ஓரு மணித்தியலாத்திற்குமுன் நடந்த அவர்களின் உரைடயலால் அவள் மனது எவ்வளவு பாதிக்கப் பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள மாட்டார் என்பது அலிசனுக்கு நன்றாகத் தெரியும்.

அவருக்கு அவளைப் பற்றி,அவளின் ஆசை அபிலாசைகள்பற்றி என்ன தெரியும்? அவள் தனது மனதுக்குள் அந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டாள்.

அலிசனின் மறுமொழியை எதிர்பார்க்காமல் அவர் மேல் மாடிக்குப் போகிறார். அவர் சொல்லும் எதற்கும் அவள் மறுப்புச் சொல்வதில்லை என்று அவருக்குத் தெரியும்.

அவர்கள் அன்றிரவு காதல் புரிந்தபோது,அவள் அவரிடம் கேட்கவேண்டிய கேள்விகள் மறந்து விட்டன. கணவனுக்கு ஒரு நல்ல மனைவியாக இருக்கிறாள்.சில வேளைகளில் சில கேள்விகளைக் கேட்கக்கூடாது என்று அவள் சமாதானப்பட்டுக் கொள்ளவேண்டுமா?

வெளியில் பெரும் காற்று வீசிக் கொண்டிருக்கிறது.

கடந்த சில நாட்களாகக் கூடிக்கொண்டு வந்த காற்றின் வேகம் இப்போது,எண்பது மைல் வேகத்தில் வீசிக் கொண்டிருப்பதாகச் செய்திகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

வெளியில் மட்டும்தானா சூறாவளி?

கடந்த சில காலமாக அலிசனின் மனத்திலும்தான் பெருங்காற்று வீசிக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகத் தொடங்கிய அவள் மனக்குழப்பம் ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் கொஞ்சம் தெளிவைத் தந்ததால் அதைத் தொடர்ந்து அவள் மனதில் இப்போது,வேறு பல குழப்பங்கள்,சஞ்சலங்கள்.

அவள் மனதில் ஏற்படும் தடுமாற்றங்களால் அவன் சிந்தனைகள் அதிர்வதுபோல், வெளிக் காற்றில் ஜன்னற் சட்டங்கள் அதிர்கின்றன.

‘நாளைக்கு வேலைக்குப் போகாதே’ என்று அவளுக்கு நேரடியாகச் சொல்லாமல், ‘அவசரவேலை ஒன்றுமில்லை என்றால் வேலைக்குப் போகவேண்டாம்’ என்று அவர் சொல்லிவிட்டார்.நேரடியாக எதையும் சொல்லாமல் நாகரீகமான வார்த்தைகளுக்குள் தனது ஆதிக்கத்தை அவளுக்கு உணர்த்துகிறாரா அவர் என்று அவள் கொஞ்சகாலமாக அவரைப்பற்றிய மறுபக்கத்தைத் தேடுகிறாள்..

‘கால நிலை மோசமாகிக் கொண்டிருப்பதால்,’லண்டனுக்கு வெளியிலிருந்து வருபவர்கள்,; நாளைக்கு லீவ எடுத்துக் கொள்ளலாம்’ என்று அவளின் டிப்பார்ட்மென்ட் தலைமை அதிகாரி; நேற்றே சொல்லிவிட்டாh.;

அவள் தேவையில்லாமல் ஒரு நாளும் லீவு எடுத்தது கிடையாது. அலிசனுக்கு வேலைக்குப் போவது மிகவும் பிடித்த விடயம். அவள் அங்கு பலருடன் பேசிப் பழகிக் கொள்வதற்காகவே அவள் முக்கியமாக வேலைக்குப் போகிறாள்.அத்துடன் இந்த வார இறுதிக்குள் முடித்துக்கொள்ளவேண்டிய றிப்போர்ட் ஒன்றிருக்கிறது. அவள் முடியுமானால் நாளைக்கு வேலைக்குப் போவது என்று முடிவுகட்டிவிட்டாள்.

அலிசன் வேலைக்குப் போய் உழைக்க வேண்டுமென்ற எந்த நிர்ப்பந்தமும் அவளுக்கில்லை. அவளின் கணவர், ஒலிவருக்கு நல்ல வேலையிருக்கிறது என்பதை விட அவர்களுக்கு இன்னும் மேலதிகமான சொத்துக்காளால் வருமானமும் இருக்கின்றன.

லண்டனை விட்டு தூரத்திலிருக்கும், கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். பல்கலைக் கழகம் போகும் வரைக்கும் வெளியுலகம் தெரியாதவள்.

தாய் தகப்பனுக்கு ஒரே மகள். தாய்,தகப்பனுடன் மட்டுமல்லாமல் அவர்களுடன் சேர்ந்திருந்து வாழ்ந்த அவளுடைய அன்பான பாட்டியின் அன்பிலும் திளைத்து வளர்ந்தவள்.

இளவயதிலிருந்து அவளின் அன்புடன் தன்னையிணைத்துக்கொண்ட அவளது அன்பன் இங்கிராம் என்பனுக்கு அப்பாலுள்ள எந்த உலகத்தையும் பற்றி அக்கறைப்படத்தேவையில்லை என்று அவளது பதினெட்டாவது வயது வரைக்கும்; நினைத்துக் கொண்டவள். அலிசனின் காதலன் இங்கிராம் அகால மரணமடைந்தபின் அவள் எதிர்காலத்தைப் பற்றிய இனிய ‘கனவுகளை’ தூரத்தில் வைத்துக் கொண்டாள்.

அலிசனுக்கு இப்போது வயது முப்பத்தியிரண்டு. ஒலிவருக்கும் அவளுக்கும் திருமணம் நடந்து கிட்டத்தட்ட ஏழுவருடங்களாகின்றன.அவர்களுக்கு இன்னும் குழந்தை கிடைக்கவில்லை. திருமணமாகி முதலிரண்டு வருடங்களும், அவர்களக்குப் பிள்ளை வரவில்லை என்பதைப் பற்றி அவள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் இப்போதெல்லாம் ஆபிசில் வேலை செய்யும்,அவளின் வயதொத்த பெண்கள் இரண்டாவது,மூன்றாவது குழந்தைகளைப் பெற்றெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பிரசவத்துக்காக லீவ எடுத்துக்கொள்ளும்போது அவள் தனது ‘தனிமை’யான வாழ்க்கையை நினைத்துப் பெருமூச்சு விடுகிறாள்.பெருமூச்சுவிடுவதற்குக் காரணம் அவளுக்குப் பிள்ளையில்லை என்பதுமட்டும்காரணமல்ல என்பது அவளுக்குத் தெரியும்.

அடுத்த நாள் விடிந்தபோது., காலநிலையில் எந்த மாற்றமுமில்லை. அகோரமான விதத்தில காற்று அடாவடித்தனம் செய்துகொண்டிருந்தது.அலிசன்; வேலைக்குப் புறப்பட்டபோது,’காலநிலை மோசமானால், இரவுக்கு உனது சினேகிதியரின் வீட்டில் தங்குவது நல்லது’ என்று சொன்னார் அவள் கணவன் ஒலிவர்.அவர் குரலில் கரிசனம்.

அவள் அதிகம் பேசிக் கொள்ளாதவள்.அவரின் அறிவுரைகளைக் கேள்வி கேட்காமல் பெரும்பாலும் ஏற்றுக் கொள்பவள்.அவள் அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டதைக் காட்டிக் கொள்வதற்கு அடையாளமாகச் சாடையாகத் தலையாட்டிக்கொண்டாள்.

இருவரும் காரில் ஏறிக்கொண்டபோது. அவர்கள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. அவரிடம் தற்போது பேசுவதற்கு எதுவுமில்ல என்று அலிசன் நினைத்துக் கொள்கிறாள்.

ஓவ்வொரு நாளும் அவர் அவளை ட்ரெயில்வே ஸ்டேசனில் இறக்கிவிட்டு அவர் தனது வேலையிடத்திற்குச் செல்வார். அவள் வேலைக்குச் செல்லும்,ஸ்N;டசன் அவர்களின்; வீட்டின் அருகாமையிற்தானிருக்கிறது. காரில் வராமல்,அவள் ஸ்டேசனுக்கு நடந்து வரலாம்.ஆனாலும் அவர், அலிசன் முடியுமட்டும் தனது ‘பாதுகாப்பில்’ இருக்கவேண்டும் என்பதுபோல் நடந்து கொள்பவர். அவர்கள் இருவருக்கும் எட்டு வயது வித்தியாசம். அவளை ஒரு ‘குழந்தை’போல்ப் பார்த்துக்கொள்வதில் அவர் திருப்தியடைபவர்.

அவள் பிறந்து நினைவு தெரிந்த நாளிலிருந்து, ஒலிவர் அப்படித்தான் அவளைப் பார்த்துக் கொள்வார்.அவரின் தம்பியான இங்கிராமுக்கும் அவளுக்கும் மூன்று வயது வித்தியாசம். அவளின் இளமையின்,ஆரம்ப நினைவுகள், இங்கிராமுடன் ஓடிப்பிடித்து விளையாடுவதும்,அவர்கள் இருவரையும் ஒலிவர் கவனமாகப் பார்த்துக் கொள்வதிலுமிருக்கும்.

அவர்களுக்குக் கல்யாணமான புதிதில் அவளிடம் அவருக்கிருந்த கரிசனத்தைக் கண்டு அவளின் பெற்றோரும் பாட்டியும்.அத்துடன்; அவரின் தாயாரும் சந்தோசப் பட்டார்கள் ஒலிவரைத் திருமணம்செய்த அலிசனின் அதிர்ஷ்டத்தை வாழ்த்தினர். அலிசனின் காதலனாகவிருந்து அகாலமரணமான இங்கிராம்; ஹரிசன் மாதிரியே அவனின் தமயனான ஒலிவர் ஹரிசன்; அவளை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்வார் என்று அவர்கள் வாழ்த்தினார்கள்;.

ஐ லவ் யு டார்லிங்’ அவர் வழக்கம்போல் முகம் மலரச் சொல்கிறார். அலிசன் அவரைப் பார்க்காமல்@ ‘மீ டு’ என்று சொல்லி விட்டுச் செல்கிறாள்

அவளின் நினைவு தெரிந்த நாட்களிலிருந்து,அவளின் வாழ் நாள் முழுதும் அலிசனின் அன்பனாக அவள் மனதில் நிறைந்திருந்த இங்கிராம் ஒரு விபத்திலிறந்தபின் அலிசன் பதினெட்டாவது வயதிலியே ஒரு பெண் துறவி மாதிரியாகிவிட்டாள். அவளின் காதலுக்கு அப்பால் எதையும் தேடாத இளமைக்காலமது. தென்றலும். நிலவும் தங்களின் இணையாத காதலை வாழ்த்துவதாக நினைத்த பவித்திரமான நாட்களவை. புல்கலைக்கழகத்தின் சுதந்திரமான நாட்களிலும் தன்னை இங்கிராமின் ஞாபகத்தில் ஒதுக்கிக்கொண்டு வாழ்ந்தவள்.

இங்கிராம் என்ற வாட்டசாட்டமான, அன்பான பண்புகளுடைய,அவளில் உயிரையே வைத்திருந்த இங்கிராம் ஒருசில வினாடிகளில்,; சட்டென்று அவளிடமிருந்து பிரிந்து விட்டான்.ஒரு சந்தியில் அவன் சென்ற தனது காரைத் திரும்பும்போது, அடுத்த பக்கத்திலிருந்து பாய்ந்து வந்த பிரமாண்டான வாகனமொன்று அவனைப் பலியெடுத்தது.

ஓரு சில வினாடிகளில் அவளின் வாழ்வும் பாழாகிவிட்டது. எதிர்காலக் கனவுகள் கானல் நீராகிவிட்டன. அவன் இனி ஒரு நாளும் அவளை அணைத்துக் கொள்ளப்போவதில்லை. இங்கிலாந்தின் தென் கடலோரத்திருந்து காதல் மொழிகளைக் கிசுகிசுக்கப்போவதில்லை.

காடுகளிலும் வரம்புகளிலும் வசந்தகாலத்தின் அழகை ரசிக்கப் போவதில்லை. இருவரும் எத்தனை பிள்ளைகள் பெற்றுக் கொள்ளப்போகிறார்கள், அவர்களின் குழந்தைகளை எப்படியெல்லாம் வளர்க்கப் போகிறார்கள் என்று இருவரும் ஒன்றிணைந்து கற்பனை செய்யப் போவதில்லை. பிரித்தானியப் பரம்பரை இசைகளைக்கேட்டு ரசித்து நிலவின் குழந்தைகiளாக நடனம் ஆடப்போவதில்லை.

அவள் துடித்து விட்டாள். இங்கிராமின் காதல் நினைவுகளுடன்,அவளது கிராமத்த வாழக்கையின் சின்ன உலகத்தில் அவள் சிறைபிடிக்கப்பட்டு விட்டாள்.

அழுகையைத் தவிர அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை.வாழ்க்கை வெறுமையானது. பல்கலைக்கழகத்தில்,அவளின் வயதிலுள்ள இளம் பெண்கள் தங்கள் காதலர்களுடன் கைகோர்த்துக் கொண்டு காதலில் கனிவதைக் கண்டால் அவள் கதறியழத் துடித்தாள்.

எனக்கு ஏன் இந்தக் கொடுமை வந்தது? அவளால் பதில் தேடமுடியவில்லை. வாழக்கையின் மாற்றங்களுக்கு முகம் கொடுக்கத் தெரியவில்லை. பதினெட்டுவயதும் பெண்மையின் பரிதாப நிலையைப் புரிந்தவர்களின் தேற்றல்கள் அவளின் துயரைத் தீர்க்க முடியவில்லை.

அந்தத் துயரும்,அவளின் பல்கலைப் படிப்பும் அதைத் தொடர்ந்து லண்டனில் வேலை செய்யும் வாய்ப்பும் அவளைக் கொஞ்சம் மாற்றியிருந்தது. அவளின் அன்பன் இங்கிராம் இறந்தபின் கடவுள் தன்னை வஞ்சித்துவிட்டதாகத் தனக்குள் விம்மியழுத துயரைத் தாண்டி,லண்டனில் அவளுடன் வேலை செய்யும் சூழ்நிலை, அவளுடன் அன்புடன் பழகும் சினேகிதிகள் என்போர் அவளின் ‘துறவி’ நிலையிலிருந்து யதார்த்த நிலையை உணரப் பண்ணினார்கள்.

‘வாழ்க்கையில் இழப்புக்கள் தவிர்க்கமுடியாதவை,அதற்குப் பயந்து வாழ்க்கைத் துறக்க நினைத்தால், இன்று இந்த உலகம் பாலைவனமாகிவிடும்’ என்றாள் தேவிகா மாதவன்.அவள் இலங்கைத் தமிழ்ப் பெண். கடந்த காலத்தில் அங்கு நடந்த அரசியல் கொடுமைகளால் அவளின் குடும்பத்தில் பலரையிழந்தவள். பல துயர்களுக்கு முகம் கொடுத்தவள்.

அலிசனின்; அடுத்த சினேகிதி, எலிசபெத் ஹீலி. பட்டப்படிப்பு முடித்தபின் பலகாலம், ஒரு மருந்து உற்பத்தி செய்யும் ஸ்தாபனத்தில் ஆராய்ச்சியாளராக வேலை செய்தவள். பெரும்பாலான மருந்து உற்பத்திகள், மக்களை மருந்துக்கு அடிமையாக்கும் பணியைத் தாராளமாகச் செய்கிறது என்பதை உணர்ந்தவள். எங்களால் முடியுமட்டும் எதிர்காலத்தைப் பாதுகாக்கவேண்டும் என்ற தத்துவத்தைக் கடைப்பிடிப்பவள்.

எலிசபெத் இருகுழந்தைகளுக்குத் தாய். இப்போது மூன்றாவது குழந்தையைத் தரித்திருக்கிறாள்.அவளின் கணவர் உத்தியோக நிமித்தம் அடிக்கடி உலகின் பலபகுதிகளுக்கும் செல்பவர். எலிசபெத் மிகவும் பொறுப்பாகத் தன் குழந்தைகளைப் பாதுகாப்பவள். தனது இருசினேகிதிகளும் அன்புத் தாய்களாக இருப்பதைக் கண்ட அலிசனுக்குத் தனக்கு எப்போது ஒரு குழந்தை வரும் என்ற ஏக்கம் தலைதூக்கத் தொடங்கியது.

கடந்த சில மாதங்களுக்கு முன் அலிசன், தங்களுக்குக் குழந்தை இன்னும் வரவில்லை என்பது ஏன் என்று பரிசோதிக்க டாக்டரைப் பார்க்கவேண்டும் என்று சொன்னபோது,அவர், அவளைப் பார்க்காமல் எங்கேயோ பார்த்துக்கொண்டு,’ எது எப்போது நடக்குமொ அது தன்பாட்டுக்கு நடக்கும். கொஞ்சம் பொறுத்திருப்பதால் என்ன குறைந்து விடப்போகிறது?’ ஏனோ தானோ என்ற விதத்தில் சொன்னார். அவர் சொன்ன தோரணை அவளுக்குப் பிடிக்கவில்லை. தங்களுக்குப் பிள்ளை வராவிட்டால் இந்த உலகத்திற்கு என்ன நட்டம் வந்து விடுமா என்ற தொனியிலல்லவா அவர் பேசுகிறார், தங்களுக்கு ஒரு குழந்தை தேவையில்லை என்று சொல்கிறாரா?

அலிசன்; அதைக்கேட்டுத் திடுக்கிட்டாள். அவர் அப்படி நினைப்பதற்கு அவருக்கு உரிமையுண்டு. ஆனால் அவரின் மனைவி, தனக்கு ஒரு குழுந்தை பிறக்கவேண்டும் என்று நினைக்கவும் கேட்கவும், உரிமையுள்ளவள்.

அந்த சம்பாஷணை நடந்து பலகாலத்தின்பின் அலிசன் ,குழந்தை சம்பந்தமான,விடயங்களை எடுத்தபோதெல்லாம் அவர் அவளின் ஏக்கத்தைப் புரிந்துகொள்வதில்லை என்பதாக அவள் உணர்ந்தாள்..

பெரும்பாலானோரின் திருமணம் என்பது இரு உயிர்களைச் சடங்குகளாற் பிணைத்து. உடல்களால் ஒன்றாக்கி இரு உள்ளங்களின் ஏக்கங்களை இருதுருவங்களில் அலையவிடு;வதா?

அவளால் அவளின் வாழ்க்கையின் சிக்கல்களின் மூலவேர் எங்கிருக்கிறது என்று புரியவில்லை. ஓரு சாதாரண பெண்ணின் சாதாரண எதிர்பார்ப்புக்களை எத்தனை சோதனைகள் தடுக்கினறன?

மருத்துவத் துறையில் அறிவுள்ள அலிசனின் சினேகிதி,எலிசபெத்துக்கு அதுபற்றிச் சொன்னபோது,’ஏன் நீ உன்னைப் பரிசோதித்துக் கொள்ளக்கூடாது?’ என்று அலிசனை எலிசபெத் கேள்வி; கேட்டதுமட்டுமல்லாமல்,லண்டனிலுள்ள ஒரு நல்ல மருத்துவரிடம் கூட்டிக்கொண்டு போய்ப் பரிசோதனையும் செய்யப் பட்டது.அலிசன் அந்த விடயத்தை அவள் கணவரிடம் சொல்லவில்லை. அவர் அதற்கும் ஏதும் மறுப்புச் சொல்வார் என்று பயந்தாள்.

தாயாகுவதற்கான எந்தப் பிரச்சினையும் அலிசனின் உடலில்லை என்று மருத்துவப் பரிசோதனையில் கண்டுபிடிக்கப் பட்டது.அந்த சந்தோசத்தில் தங்களுக்குப் பிள்ளை வேண்டும் என்ற விடயத்தை அவள் ஆரம்பித்தபோது, ஒலிவர் தனது வழக்கமான பதில்களைச் சொல்லித் தட்டிக் கழித்தபின் அவள் ஏங்கிப் போய்விட்டாள்.

ட்ரெயினில் ஏறியதும்,அவள் கண்கள் அவளையறியாமல்.ஜன்னற் பக்கம் பதிந்தது.இன்னும் இரண்டு ஸ்டேசன்கள் தாண்டியதும் ‘அவன்’ வந்தேறுவானா’ என்று அவள் மனம் ஏங்கியது.

கடந்த இருவாரங்களாக அவனை அவள் அந்த ட்ரெயினல் காணவில்லை.வேலை நிமிர்த்தமாக அவன் வெளியூர் சென்றிருக்கலாம்.அடிக்கடி வெளியில் போகவேண்டியது எனது வேலை என்று அவளுக்குச் சொல்லியிருக்கிறான். ஆனால் ஒரு நாளும் அடுத்த சில நாட்களுக்கோ அல்லது வாரங்களுக்கோ வரமாட்டேன் என்று அவன் சொன்னது கிடையாது. அவளுக்கு அவன் விளக்கம் கொடுப்பதற்கு அவசியமும் இருப்பதாக அவளுக்குத் தெரியவில்லை.

.ஓடிக்கொண்டிருக்கும் ட்ரெயினின் ஜன்னல்களைப் பலமான காற்று தட்டிப் பார்த்துச் சேட்டை செய்து கொண்டிருந்தது. அவள் தனது மனக்குமுறலை அடக்கத் தெரியாமல் தனது கண்களை இறுக மூடிக் கொண்டாள்.அவன் அவளிருக்கும் ஜன்னற் பக்கத்தைப் பார்த்துக்கொண்டு விரைந்து வருவதைப் பார்க்க அவள் மனம் மறுத்தது.

வெளியில்,காற்று, மிகப் பயங்கரமாக வீசிக் கொணடிருந்தது.அவள் மனதில் அதைவிடப் பயங்கரமான காற்று ஊழித்தாண்டவமாடிக் கொண்டிருந்தது. தானும் அந்த ஊழிக்காற்றின் தாண்டவத்தில் இறந்து தொலைந்துபோகவேண்டும் என்ற அவள் மனம் யோசித்தபோது தனது வாழ்க்கையை நினைத்துத் தன்னில் மிகவும் பரிதாபப்படவேண்டும்போலிருந்தது.அந்த நினைவு வந்ததும் அவள் மனம் சிலிர்த்தாள். இறந்து விட்ட அவள் அன்பன் இங்கிராமுடன் போய்ச்சேரவேண்டும் என்றால் அதை அவள் எப்போதோ செய்திருப்பாள். ஆனால் அவள் உறுதியானவள். இளம் வயதில் தன் இழப்பை மறக்க அவள் பட்டபாடு அவளுக்குத்தான் தெரியும் அப்படியானவள் இப்போது ஏன் இப்படி நினைக்கிறாள்?

அந்த வினாடியில் அவள் கணவன் ஒலிவர்மீது அவளுக்குக் கோபம் வந்தது. ஏன் கோபம் என்ற ஆராய அவளுக்கு அவசியமில்லை. தன்னை ஒலிவர் அவரின் உடமையாகப் பாவித்துப் பராமரிப்பதற்கப்பால் அவளின் சுயமையின் ஆசைகளை அவர் நிராகரிக்காரா என்ற நினைவு நெருடியதும் அவளுக்குத் தன்னையறியாமல் விம்மல் வெடிக்கும்போலிருக்கிறது.

வாழவேண்டிய வயதில் வாழ்க்கை வரண்டு விட்டதாகக் குமுறுகிறாள். வாழ்க்கை தன்னை விடாமற் சோதிப்பதாகப் பொருமுகிறாள். அந்த அளவுக்கு அவள் மனம் பேதலித்துப் போயிருப்பது அவளுக்குத் தெரியாது.அதற்குக் காரணங்கள் பலவென்றும் அவளுக்குத் தெரியும்.

சில மாதங்களக்கு முன் பெய்த பெருமழையால் பின்னேரம் வீட்டுக்குத் திரும்பி வரவேண்டிய ட்ரெயின் புறப்படத் தாமதமாகிவிட்டது. அடுத்த ட்ரெயினுக்குக் காத்திருந்த அந்த நேரம்தான் அவனுக்கும் அவளுக்கும் அந்த ‘உறவே’ ஆரம்பித்தது.

பழைய வாழ்க்கையை மறக்க லண்டனில் வேலை எடுத்துக்கொண்டு தன்பாட்டுக்கு ட்ரெயினில் வந்துபோய்க் கொண்டிருந்தவளுக்கு இந்த நிமிடம்,முன்பின் தெரியாத ஒரு பிரயாணியால் மனதில் எற்படும் துயரநினைவுகளை அவளால் ஒதுக்க முடியாமற் தவித்தாள்.

ஓன்றாகப் பிரயாணம் செய்பவர்கள் என்பதற்கப்பால் அவர்களின் பெயர்கூட அவர்களுக்குத் அன்றைய சந்திப்புக்குமுன் தெரியாது. தேவையல்லாமல் பக்கத்திலிருப்பவர்களுடன் எந்த வார்த்தையும் பேசிக் கொள்ளாதவர்கள் பிரித்தானியர்கள்.

அவன் லண்டனை விட்டுக் கிராமப் புறத்துக்குப் பெயர்ந்திருக்கிறான் என்பதை,அவன் ஆரம்பத்தில் இந்த ட்ரெயின் பிரயாணத்தைத் தொடர்ந்த நாட்களில்,அவனின் மனைவியுடன் பேசிக் கொண்டதிலிருந்து அவள் சாடையாகத் தெரிந்து காண்டாள்.அன்று அவன் அவளுக்கு முன்னாலுள்ள ஆசனத்திலிருக்கவில்லை.இரண்டு வரிசைகள் பின் தள்ளியிருந்தான்.அவனின் டெலிபோன் அடித்ததும் அவன் பேசத் தொடங்கியதும் அந்தக் குரலைக் கேட்டு அவள் திடுக்கிட்டாள். அப்பழுகில்லாமல் அவளின் இறந்து விட்ட அன்பன் இங்கிராமின் குரல் மாதிரியேயிருந்தது. மறந்து விட்டிருந்த அந்தக் குரலைக்கேட்டதும் அவளுக்குத் தன்னையறியாமல் சோகம் வந்தது. அன்று,அவன் வந்த முதல் நாளே ஏதோ பழைய நினைவுகள் அவள் நெஞ்சை நெகிழப் பண்ணியது. அவனின் உடல்வாகு. நடந்துவரும் பாங்கு என்பன அவளுக்கு யாரை ஞாபகப் படுத்துகிறது என்று அவளுக்கு யாரும் சொல்லத் தேவையில்லை.

அன்று வீடுதிரும்பியபோது,அவளையறியாமலேயே,அன்று இங்கிராம் மாதிரி ஒருத்தனை ட்ரெயினில் கண்டதாக அலிசன் தன் கணவனக்குச் சொன்னாள்.’ இந்த உலகத்தில் உன்னைப்போல ஏழு மனிதர்கள் இருப்பார்கள் என்று சொல்வார்கள்’ என்று ஒலிவர் குறும்பாகச் சொன்னார்.

அவன் அவளுடன் பிரயாணம் செய்யத் தொடங்கிப் பலமாதங்கள் அவனை முற்று முழுதாக அவள் ஏறிட்டுப் பார்த்ததும் கிடையாது. அவனை ஏறிட்டுப் பார்க்க விரும்பவில்லை. அவனது குரலும், அவனை அவள் சாடையாகப் பார்த்தபோது அவனின் நடையுடை பாவனையும் அவளை எங்கோயோ துரத்திக் கொண்டுபோய் வேதனை தருவதை அவள் விரும்பவில்லை. அவனிடமிருந்து. அவனின் குரலிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவொ என்னவோ,அவள் எப்போதும் எதையோ வாசித்துக் கொண்டிருப்பாள். ட்;ரெயினில் வந்து ஏறுபவர்கள் இறங்குபவர்களைப் பற்றி எந்த அக்கறையுமில்லாமல், அவள் ஏறியவிடத்திலிருந்து லண்டனுக்கு வரும் வரை தானும் தன் புத்தகமுமாகவிருப்பாள்.

ஓரு நாள் அவளுக்கு நேரெதிரே வந்து உட்கார்ந்தான். பாடசாலைகளின் விடுமுறை காலங்களில் ட்ரெயின்களில் அதிக நெருக்கடியிருக்காது.அவள் தர்மசங்கடப் பட்டாள். அவளை இதுவரை நேரடியாகப் பார்க்காதவள் இன்று தனக்கு முன்னால் வந்திருப்பவனைப் பார்க்காமலிருப்பதற்காகத் தனது புத்தகத்தில் அவளின் முழுப் பார்வையையும் ஓட்டினாள்.

அவன் தனது ‘லப்டொப்பில்’ கண்களைப் பதித்திருந்தான். இறங்கும் நேரம் வந்ததும், அவளுக்குப் பின்னால் அவன் வரவேண்டியிருந்தது. ;ட்;ரெயின் சட்டென்று நின்றபோத அவள் நிலைதடுமாற, அவன் அவளைச் சட்டென்று தாங்கிக் கொண்டான். தன்னைச் சுதாரித்துக் கொண்டு திரும்பிய அலிஸனின் கண்கள் அவளைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தவனின் கண்களில் முட்டிமோதியது. அவளுக்கு உடனடியாக என்ன செய்வது என்று தடுமாறியபோது அவன் பிடியில் அவன் இன்னுமிருப்பதையுணர்ந்து தன்னைச் சட்டென்று விடுவித்துக் கொண்டாள்.

சட்டென்று வந்து போன தடுமாற்றத்தின் அதிர்வு அவளை ஒருநிமிடம் அவளை நிலைகுலைத்தது.

இறந்துவிட்ட இங்கிராம் எங்கிருந்தோ குதித்துவந்து இவனுருவில் அணைத்தானா?

புதினெட்டு வயது ஞாபகங்கள் இன்னொருதரம் பதிவாகி அகத்தை அதிரவைக்கிறதா?

‘அன்னியமாய்’ அவள் வாழ்ந்த வாழ்க்கை அவன் அணைப்பில் சட்டென்று நகர்ந்ததேன்?

அன்றிரவு அவள் கனவில்(?)’அவன்’ கவர்ச்சியாகச் சிரித்துக்கொண்டு அவளிடம் வந்தான். அவள் திடுக்கிட்டு எழுந்து, தனது கனவில் வந்தது ட்ரெயினில் அவளைத் தாங்கிப் பிடித்தவனா அல்லது இறந்து விட்ட இங்கிரமா என்று தெரியாமற் குழம்பித் தவித்தாள்.

அடுத்த நாள் அவன் அவளை நேரடியாகப் பார்த்தான்.;அவளால் அந்தப் பார்வையை மீறமுடியவில்லை. பின் இருவரும் சாடையான புன்முறவலைப் பரிமாறிக் கொண்டார்கள். அமைதியான அவள் மனதில் ஏதோ ஒரு கிளர்ச்சியுண்டாவதை அவளாற் தடுக்க முடியவில்லை.அவனைக் கண்டதுமுதல் அவளின் அன்பன் இங்கிராமின் நினைவுகள் அவளை வருத்தியது.

பல இரவுகள் அழுதுகொட்டினாள். இந்த உலகில் ஓருத்தரைப்போல் இன்னும் ஏழுபேர் இருப்பார்கள் என்று அலிசனுக்குத் தெரியும். தன்னுடன் வரும் பிரயாணி இங்கிராமை ஞாபகப்படுத்துவதம் அவளுக்குத் தெரியும். ஆனால் அவள் மனச் சஞ்சலத்துக்கு ‘அவன்’ மட்டுமா காரணம் என்று அவளுக்குத் தெரியாது.

சிலவேளைகளில் ஒன்றிரண்டு நாட்கள் அல்லது ஒன்றிரண்டு கிழமைகளுக்கு அவனைக் காணமுடியாது.அவன் வரமாட்டான்.அல்லது அந்த நேரத்துக்கு வராமல் முந்திப் பிந்திப் பிரயாணம் செய்திருக்கலாம். அந்தச் சமயங்களில் அவனைக் காணவேண்டும் என்ற ஆவல் நெருப்பாக எரியும். தனது உணர்வுகளை அடக்கிக் கொள்ள முடியுமானவரைக்கும் முயன்றாள்.

அவன் தனக்கு முன்னால் வந்து உட்காரக்கூடாது என்று அவள் மனம் வேண்டிக் கொள்ளும். ஆனால், பெரும்பாலான நேரங்களில் அவன் வேறு எங்கேயோ போய் உட்காரும்போது அவன் தனக்கு முன் வந்திருக்கமாட்டானா என்று மனம் ஏங்கியபோது அலிசன் தனது பெலவீனத்தையுணர்ந்து தன்னைத்தானே வெறுத்தாள்.

ஓரு பின்னேரம் சிக்னல் பெயிலியர் என்பதால் அவர்களின் ட்ரெயின் தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த நேரம்; ட்ரெயினுக்குக் காத்துக் கொண்டிருந்தவளை அவன் தயங்கித் தயங்கிக் காப்பி சாப்பிடக் கூப்பிட்டான்.அவன் அவளுக்கு அன்னியல்ல. கடந்த இருவருடங்களாக அவளுடன் ஒன்றாகப் பிரயாணம். செய்கிறான். அவர்கள் இருவரும் சந்திக்கத் தொடங்கிப் பல மாதங்கள் ஒருத்தருடன் ஒருத்தர் பேசிக் கொள்ளவில்லை.

தென்றல் வந்து தன்னைத் தழுவும் மலர்களுடன் ஏதும் பேசத் தேவையா?

அல்லது மழைத்துளிகள் முத்தமிடு;ம் நிலத்திற்குத் தன் மன்நிலையைச் சொல்லத்தான வேண்டுமாஃ

வெண்ணிலவின் தண்ணொளி; மோனத்தில் குதிக்கச் சொல்ல அலைக்கொரு ஆசிரியன் தேவையா?

அவள் உணர்வின் அனலுக்கு அவன் அலைபோட முடியுமா?

அவள் ட்ரெயின் வரும் நேரத்தைக் காட்டும் அட்டவணையில் தலையைநிமிர்த்தினாள். பதினைந்து நிமிடங்கள் தாமதமாக ட்ரெயின் வரும் என்று அட்டவணை அறிவிக்கிறது.

நாள் முழுக்க ஆபிசில் அடைந்து கிடந்து விட்டு அவசரமாக ஓடிவந்து ட்ரெயினில் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் எப்போதாவது ஒருநாள் ட்ரெயின் தாமதமாக வரும் பிரச்சினையால் அலிசன் அருகிலுள்ள காப்பிக் கடைக்குப்போய் அவளுக்குப் பிடித்த ஹாட் சொக்கலேட்டுடன் நேரத்தைக் கழிப்பதுண்டு.இதுவரையும் தணியாகச் சென்றவள். இன்று காப்பி சாப்பிட் அழைத்தவனுக்குத் ‘தாங்க் யு’ சொல்லிவிட்டு அவனுடன் நடந்தாள்.

வாழ்க்கையில் எதோ ஒருவினாடி ஒரு மனிதனைச் சோதனைக்குள் தள்ளப்போகிறது என்பதை முன்கூட்டி அறிந்துகொள்ள ஞானிகளால் முடியுமோ என்னவோ. அலிசன் போன்ற சாதாரண பெண்களால் முடியாது என்பதை எதிர்காலம் நிர்ணயிக்கப் போகிறது என்பதை அந்த நொடியில் அவள் ஊகிக்கவில்லை..

அவன் இவளுக்கு என்ன ஆர்டர் பண்ண வேண்டும் என்று கேட்டான். அவன் குரலில் இவளை அவளது வாழ்க்கை முழுதும் அறிந்து பழகிய தொனி பதிந்திருந்தது. பின்னேரங்களில் அவள் தேனிர், காப்பி சாப்பிடுவது கிடையாது. ‘ஹாட் சொக்கலேட் பிளிஸ்’ என்று சொன்னாள். தனது குரல் ஏன் சாடையாகத் தடுமாறுகிறது என்று அவளாற் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவன் தனது நேரத்தைப் பார்த்துக் கொண்டதை அவள் அவதானித்தாள் என்பதைப் புரிந்துகொண்ட அவன்,’ இன்று எனது மனைவி தனது புத்தகவாசிப்பக் கிளப்புக்குப் போகும் நாள். நான் சரியான நேரத்துக்கப் போகாவிட்டால் அவளால் புக் கிளப்புக்குப் போக முடியாது’ அவன் அலிசனுக்குச் சொன்னான்.

‘ ஷி இஸ் லக்கி’ அலிசன் ஏன் சட்டென்று அப்படிச் சொன்னாள் என்பதைப் புரியாமல் அவன் அவளை ஏறிட்டுப் பார்த்தான். அவனின் குரலில் ஒலித்த அவனின் மனைவியிலுள்ள கரிசனம் அவளை நெகிழப் பண்ணியதா?. தனது கணவனை நினைத்துக் கொண்டாள் உணர்வுகள் தடுமாறின.

அவள் முகம் தாழ்த்தினாள்.

‘நான் ஏன் அப்படிச் சொன்னேன்’ என்று தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொண்டாள்.

அவளுக்குத் தர்மசங்கடமாகவிருந்தது. ‘நாங்கள் இருவருடங்களாக ஒன்றாகப் பிரயாணம் செய்கிறோம்.. எனக்கு உங்கள் பெயர் தெரியாது’ என்றான்.

‘எனதுபெயர் அலிசன் ஹரிசன்’ அவள் அவனை ஏறிட்டுப் பார்க்காமல் சொன்னாள்.அவனின் முகம் அவளது பழைய காதலனின் முகத்தை ஞாபகப்படுத்துவது அவளால் பொறுத்துக் கொள்ளமுடியாதிருந்தது.

‘எனது பெயர் ஏர்வின் காம்பெல், இரண்டு பையன்கள் இருக்கிறார்கள, மனைவியின் பெயர் ஹெலன.;.’ அவன் அவனின் மனைவியின் பெயரைச் சொல்லிவிட்டு ஒரு கணம் அலிசனின் முகத்தை ஆராய்ந்தான்.

வழக்கமாக அலிசன் மிகவும் வெட்கம் பிடித்தவள். யாரும் அவளின் முகத்தை நேரடியாகப்பார்த்தால் அவள் முகம் குப்பென்று சிவந்து விடு;ம். அவன் கண்கள் அவள் முகத்தில் மேய்ந்தபோது அவள் முகம் குங்குமமாகிவிட்டது.

‘அவளுக்காகத்தான் லண்டனை விட்டு வெளியே குடியேறினோம,சில விடயங்கள் நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ நடந்து முடிகிறது,இந்தப் பிரயாணத்தில் உன்னைச் சந்தித்தது சந்தோசம்.’அவன் தொடர்ந்து என்ன சொல்கிறான் என்பதைக்கேட்டுக் கொண்டிருந்தவள், அவன் அவனுடைய மனைவி பற்றிய விடயத்தை அவளிடம் ஏன் சொல்லவேண்டும் என்று ஆராயவில்லை,அவனுடைய மனதிலுள்ள சில விடயங்களை அவளிடம் சொல்லவருவது அப்பட்டமாகத் தெரிந்தது.

மனித குணங்கள் வித்தியாசமானவை. பக்கத்திலுள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாதவற்றைத் தற் செயலான பயணத்தில் சந்தித்தவர்களிடம் சொல்வது பெரும்பாலும் நடப்பதுண்டு.

வைத்தியர்களிடம் தனது உண்மையான வருத்தக் குறிகளை மனம் விட்டுச்; சொல்வதுமாதிரியான போக்குத்தான் வழியில் கண்டவர்களிடம் மனம் விட்டுப்பேசுவம் என்று அலிசன் தனக்குள் யோசித்தாள்

அவள் தனக்குள்ள மனத் துயர்களைத் தன்னுடன் வேலை செய்யும் ஒருசில சினேகிதிகளிடம் பகிர்ந்து கொள்கிறாள். ஆண்கள் அப்படியில்லையா?

அவளிடமிருந்து எந்த விதமான கருத்தோ கேள்வியோ வராததால் அவன் ஆச்சரியப்படாதது அவளுக்குத் தர்மசங்கடமாகவிருந்தது.

‘ தயவு செய்து என்னைப் புரிந்துகொள்’ என்று மறைமுகமாகச் சொல்கிறானா?

அல்லது,’ உன்னிடம் மனம் விட்டுப் பேசவேண்டும் போலிருக்கிறது’ என்று அவளுக்கும் தனக்கும் ஒரு நெருக்கமான உறவு இருப்பதாகக் காட்டிக்கொள்கிறானா?

‘நான் அடிக்கடி வேலை விடயமாக வெளியில் செல்வது அவளுக்குப் பிடிக்காது’ அவன் தொடர்ந்தான்.

ஓஹோ, அடிக்கடி அவனை ட்ரெயினில் காணமுடியாததற்கு அவன் வேலை காரணமா?

அவள் அவன் அப்படி என்ன வேலை செய்கிறான் என்பதைக் கேட்க அவளுக்கு ஒரு அவசியமுமில்லை என்று தனக்குள் நினைத்துக் கொண்டதால் அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவனின் குரல் அவளின் இறந்துவிட்ட அன்பன் இங்கிராமின் குரல்போலிருந்ததும் அவன் குரலைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கவேண்டும் என்று அவள் ஏங்கியதை அவளால் மறுக்க முடியவில்லை. இங்கிராம் பிரித்தானிய பாதுகாப்புத் துறையில் வேலை செய்ய உத்தேசித்திருந்தான். பிரித்தானிய இராணுவத்துடன் இங்கிராமின் குடும்பத்திறகுப் பல் நூற்றாண்டுப் பாரம்பரியத் தொடர்புண்டு. அவன் மிலிட்டரி எஞ்சினியரிங் படித்துக்கொண்டிருந்தான். தனது இருபத்தியோராவது வயதில் பாதையில் நடந்த விபத்திற் சட்டென்று உயிரிழந்தவன் பாதுகாப்புவேலையில் சேர்ந்திருந்தால் அங்கும் பல தரப்பட்ட விபத்துக்களசை; சந்தித்திருக்கலாம். அலிசன் அவனைத் திருமணம் செய்த குறகிய காலகட்டத்தில் விதவையாகியிருக்கலாம். அப்படியான ஒரு சந்தர்ப்பம் இருந்திருந்தாலும் இங்கிராம் மாதிரியே உடலமை;ப்பும் குரலும் நடையுடைபாவனைகளும் கொண்ட ஏர்வின் போன்ற யாரிடமோ ஈர்ப்பு கொண்டிருக்கலாம்.

ட்ரெயின் புறப்படப்போவதான அறிவிப்பு வந்ததும் அவர்கள் அவசரமாக எழுந்து கொண்டார்கள்.

‘என்னுடன் காபி,-சாரி ஹொட் சாக்கலெட் சாப்பிட வந்ததற்கு நன்றி’ அவன் முகம் மலரச் சொன்னான். ‘இப்படி அடிக்கடி நடந்தால் மிகவும் சந்தோசப்படுவேன்’ என்று அவன் மனம் சொல்வது அவளுக்குக் கேட்பதுபோலிருந்தது.

அவனுடன் பேசிய அன்று பின்னேரம் அவள் மனம் ஏதோ காரணத்தால் கொந்தளிக்கத் தொடங்கியது. அன்று அவள் ட்;ரெயினால் இறங்கியதும் அவளின் கணவர் ஒலிவர் அவளைக் காத்துக்கொண்டு ஸ்டேசனில் நின்றிருந்தார்.

வேலைப் பிரச்சினை குறைந்த நாட்களில் அவருக்கு நேரமிருந்தால் அவளுக்காக அவர் வந்து நிற்பது வழக்கம்.

அவள் கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்றார். .

அவர் அவளுக்காக் காத்து நின்றால் அவருக்கு நன்றி சொல்வதும் கலாச்சாரத்தின் ஒரு அங்கம்.ஆனால் அன்று அவள் மனம் எங்கேயோ பறந்துவிட்டதால் அவளின் கணவர் ஒலிவர் வந்து நின்றதற்கு அவள் நன்றி சொல்லவில்லை.

அதை அவர் கவனிக்காமல் ஏதோ சொல்லிக் கொண்டு வந்தார்.

‘தயவு செய்து இங்கிராமின் கல்லறையில் காரை நிறுத்தமுடியமா’ அவள் சட்டென்று கேட்டாள்.அவளின் கணவர் ஒலிவர் அவளை விசித்திரமாகப் பார்த்தார்.

அவர்கள் போய்க்கொண்டிருந்த கார் கல்லறை சார்ந்த தேவாலயத்தை நெருங்கிக் கெண்டிருந்தது.

அவருடைய தாய் தனது இரண்டாவது மகனின்-அவரின் தம்பி இங்கிராமின் கல்லறைக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வந்து மலர்க்கொத்துக்கள் வைப்பது வழக்கம்

அவர்எ எப்போதாவது ஒருநாள் தாயுடன் சேர்ந்து வருவார். அலிசன் அவளின் அன்பன் இங்கிராமின் கல்லறைக்கு வருவதுண்டா இல்லையா என்பது போன்ற கேள்விகளை அவர் தனக்குள் கேட்டுக்கொண்டது கிடையாது.

மாலை நெருங்கிக் கொண்டிருந்த அந்த அமைதியான நேரத்தில் அவர் காரை தேவாலயத்தின் அருகில் நிறுத்தினார்.’ நீங்கள் போங்கள் நான் நடந்து வருகிறேன்’கணவரின் மறுமொழியை எதிர்பாராமல் அலிசன் இறங்கி நடந்தாள்.

பறவைகளின் சப்தங்கள் தவிர எந்தவிமான ஒலியுமற்ற அமைதி அவளை ஆட்கொண்டது. பரந்து விரிந்த இடத்தின் கல்லறைகள் அவளை மவுனமாக வரவேற்கத் தன் தன் அன்பனின் கல்லறை நோக்கி நடந்தாள். அந்தக் கிராமத்தின் சரித்திரம் அந்தக் கல்லறையில் பரந்து துயில்கிறது. ஆங்கிலேய அரசின் பல மாற்றங்களின் சரித்திரம் நானூறு ஆண்டுகளாக அங்கு துயில் கொள்கிறது. இங்கிராமின் பரம்பரை கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகளாக இக்கிராமத்தின் நிலவுடமையாளர்களாக, படைவீரர்களாக,அயல் நாடு தேடிய வியாபாரிகளாக வாழ்ந்த பூர்வீக சரித்திரத்தைக் கொண்டவர்கள்.இந்தத் தேவாலயம் அவர்களின் குடும்பத்தின் கொடை. இந்தக் கல்லறைகளிற் துயில்பவர்கள் பெரும்பாலோர் அவர்களின் பரம்பரை.

இங்கிராமின் கல்லறை இன்னும் புதிதுபோல் அழகாகத் தெரிகிறது. அவனின் தாயார் அந்தக் கல்லறையை அவனின் தனியறைமாதிரி நினைத்துச் சுத்தம் செய்வது அலிசனுக்குத் தெரியும்.

‘உன் அன்பனுடன் தனிமையாக இரு’ என்று இயற்கை அலிசனை ஆசிர்வதிப்பதுபோல் உலகை இருள் திரை மூடத்தொடங்கியது.

அலிசன் அவளின் தாயின் கருவறையிலிருந்து வெளிவந்த அடுத்த கணம் அவளைத் தொட்டவை மூன்றே வயதான இங்கிராமின் பிஞ்சுக் கரங்கள் என்று அலிசனின் தாய் சொல்லியிருக்கிறாள். அலிசன் இருள் பருவம் நேரத்தில் துயர்படிந்த இதயத்துடன் தனது அன்பனின் கல்லறையில் வீழ்ந்தழுதாள்.

‘உன்னைப் போல உருவமுள்ள ஒருத்தனுடன் உறவு வருகிறது. அது எனது பேதமையா அல்லது உனது ஞாபகத்தை மீண்டெடுக்கும் பைத்தியமான கற்பனையா எனக்குத் தெரியாது’.

முன்னிரவின் மெல்லிய இருளில் கலந்து கொண்டு கல்லறையருகில் அமர்ந்திருந்து கண்ணீர் வடிக்கும் அந்தப் பெண்ணைத் தழுவிக்கொள்ள தென்றல் அணுகியது. கோடிக்கணக்கான வானத்து நட்சத்திரங்கள் வெளிவந்து’அழாதே பெண்ணே’என்று கண்சிமிட்டிக் கதைகள் பேசின.

அமைதி அமைதி,மயானத்து அமைதி அலிசனைப் பயமுறுத்தவில்லை. இங்கிராம் இறந்தபின் எத்தனையோ தடவைகள் அவள் இந்தக் கல்லறையில் இருள் சூழ்ந்த மாலைப்பொழுதுகளில் அவன் கல்லறை நனையக் கண்ணீர் வடித்திருக்கிறாள்.

அடுத்த நாள் வேலைக்குப் போனபோது அலிசனின் சினேகிதி தேவிகா அலசனின் குழப்பம் படிந்த முகத்தை ஆராய்ந்தாள்.

‘என்ன பிரச்சினை உனக்கு?’ தேவிகாவின் கேள்விக்கு அலிசனால் பொய்யான மறுமொழி சொல்லலாம் என்று தெரியவில்லை.

‘இங்கிராம் மாதிரி ஒருத்தனை—–‘ என்று அலிசன் தொடங்கிய வார்த்தைகளை முடிக்கமுதல்,தேவிகா அலிசனின் முகத்தில் தன் பார்வையை ஒருசிலகணங்கள் இறுக்கமாகப் பதித்தாள்.

தேவிகாவின் முகத்தில் பரிதாபக்கோடுகள் பட்டு மறைந்தன. பதினெட்டு வயதில் தனது அன்பனையிழந்த துயரைச் சுமந்து தவிக்கும் அலிசனில் தேவிகாவுக்கு எப்போதும் ஒரு அனுதாபமுண்டு. ஆனாலும் திருமணத்தின்பின்னும் இங்கிராமை மறக்காமல் அலிசன் துயர்படுவது தேவிகாவால் புரியமுடியாததாகவிருந்தது.

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற வார்த்தைகள் அலிசனின் அகத்துயரை அகற்ற எத்தனை வருடங்கள் எடுக்கும்?

அலிசன் தன்னுடைய கணவன் ஒலிவரின் தம்பியும் தனது அன்பனுமான இங்கிராம் பற்றிப் பேசும்போது, தேவிகா தனது சினேகிதியைப் பார்த்து வேடிக்கையாக, ‘அ.இ,ஒ என்பதன் ஒன்று பட்ட ஒலி ஓம் என்ற பிரணமந்திரத்தின் அடிப்படை நாதம்’ என்றாள். அலிசன்

ஒன்றும் புரியாமல் சினேகிதியை ஏறிட்டுப் பார்த்தாள்.

‘அலிசன்,இங்கிராம்,ஒலிவர்-மூன்று ஒலிகளும் ஒன்றிணைந்த வாழ்க்கையுனக்கு.இப்போது இங்கிராம் இல்லாத இடத்திற்கு ஏர்வின்–‘ அலிசன் தேவிகாவை முறைத்துப் பார்த்தாள்.இங்கிராம் இருந்த இடத்திற்க ஏர்வின் என்ற கருத்தையே அவள் கிரகிக்க மறுத்தாள்.தேவிகா அதன்பின் மேற்கொண்டு ஒன்றும் சொல்லவில்லை.

புதிதாக அலிசனின் வாழ்க்கையில் வந்தவனின் வெயர் ஏர்வின் (ஐசறiநெ) என்கிறாள். தேவிகா எப்போதாவது இருந்து இந்து மத நம்பிக்கைகளான,விதி, கர்மா என்பவைகளைத் தேவிகா சொல்லும்போது அலிசனுக்கு அவற்றின் விளக்கங்களைஅறிந்து கொள்ளவேண்டும் போலிருந்தாலும் வாழ்க்கையின் திடீர்த்திருப்பங்களை முகம் கொடுக்க தேவிகாவின் நம்பிக்கைகள் உதவுமா என்று தெரியவில்லை.

‘நீ உனது பழைய காதல் நினைவுகளை அசை போட்டுக்கொண்டிருப்பதால் தேவையில்லாமல் வாழ்க்கையைக் குழப்பிக் கொண்டிருக்கிறாய் என்று நினைக்கிறேன்’ தேவிகா தனது சினேகிதிக்குப் புத்தி சொல்லும் பாவனையிற் சொன்னாள்.

இங்கிராம் மாதிரியே தோற்றமுள்ள ஒருத்தனைக் கண்டேன் என்று அலிசன் சொன்னபோது அவளின் குரலிருந்த அசாதாரணமான தொனி, புதிதாக அலிசன் வாழ்க்கையில் குறுக்கிட்ட ஏர்வின் என்பவனில் அவளுக்கு எவ்வளவு ஈர்ப்பு அல்லது ஒரு கவர்ச்சி அல்லது அசாதாரணமான ஒரு கிளர்ச்சியை அலிசனின் மனதில் உண்டாகியிருக்கிறது என்பதைச் சொல்லாமற் சொல்லியதா?.

அதன் பின் அலிசனுடன் பேசம் சந்தர்ப்பம் கிடைத்த சிலவேளைகளில் ஏர்வின் தனது குடும்பத்தைப் பற்றிசி சில வேளைகளில் பேச்செடுக்கும்போது அலிசனுக்குத் தர்மசங்கடமாகவிருப்பதாகச் சினேகிதிகளுக்குச் சொன்னாள்.மற்றவர் விடயங்களுக்குப் பட்டென்று தனது மூக்கைப் புகுத்தி அபிப்பிராயம் சொல்வது அலிசனுக்குப் பிடிக்காது என்று அவளின் சினேகிதிகளுக்குத் தெரியும்.அதே மாதிரி மற்றவர்களும் அவளிடம் துருவித் துருவி ஏதும் கேள்வி கேட்பதும் அவளுக்குப் பிடிக்காது.

தான் பார்க்கும் உத்தியோகம் தனது மனைவிக்குப் பிடிக்காது என்று ஒருநாள் ஏர்வின் அலிசனுக்குச் சொன்னான்.

.

அலிசன் வழக்கம்போல் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

‘மற்றவர்களுக்காக அதாவது, எங்கள் குடும்ப வாழ்க்கையின் ஒற்றுமைக்காக எங்கள் அபிலாசைகளை விட்டுக் கொடுத்தால் கடைசியில் எங்களின்- ‘நாங்கள்’ என்ற எங்களின் சுயமையையே விட்டுக்கொடுக்கவேண்டிவரும்’ ஏர்வின் அலிசனிடம் தனது குடும்ப நிலவரத்தைப் பற்றிச் சொல்கிறானா அல்லது தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறானா என்று அலிசனுக்குப் புரியவில்லை என்று நினைத்துக் கொள்ள அவள் மனம் மறுத்தது. அவளின் வாழ்க்கை நிலையும் அதுதானே?

‘எங்களுக்கு ஒரு குழந்தை தேவை’என்று அலிசன் சொல்வதை எனோ தானோ என்று ஒதுக்கிவிடு;ம் அவள் கணவர் ஒலிவரின் போக்கு அவளுக்கு ஆத்திரமூட்டினாலும் அவளாலும் ஏதும் செய்யமுடியாத கையாலாகாத் தன்மை அவளை வேதனைப் படுத்தியது. அலிசனுக்குப் பிடித்தமாதிரி வாழ்க்கை தொடரவேண்டுமானால் அவளுக்கு ஒரு குழந்iது தேவை. அவளின் அந்த உணர்வைப் புரிந்துகொள்ளாத அவளின் கணவரை அவளால் புரிந்து கொள்ள முடியாது என்று ஏங்குகிறாள்.

அவர் ஏன் அவர்களுக்கு ஒரு வாரிசு வரவேண்டும் என்ற அவளின் ஆசையை விளங்கிக் கொள்ளாமலிருக்கிறார் என்று அவளுக்குப் புரியவில்லை. அவர்களுக்குப் பத்துக் குழந்தைகள் பிறந்தாலும் வசதியாகப் பாதுகாக்கம் வசதியிருக்கிறது. ஓலிவருக்கு அலிசன் என்ற அழகிய தேவதை தனது மனைவியாக இருப்பதிலும் பெரிய பெருமை என்று அவளுக்குத் தெரியும்.

அப்படியிருந்தும் ஏன் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதில் அக்கறையில்லை? அவருக்குத் தந்தையாக முடியாத ஏதும் குறையிருக்கிறதா? அப்படியிருந்தால் வைத்திய உதவிகளை நாடலாமே? அவள் பல்லாயிரம் கேள்விகளைத் தனக்குள் கேட்டுக் கொண்டாள். தனது வாழ்க்கை அந்தக் கிராமத்தில் சிறைப் பட்டுக் கிடப்பதாக உணர்ந்தபோது அதற்குக் காரணம் அவளின் ஆத்மாவோடு கலந்து விட்ட இங்கிராமின் பரிசுத்தமான காதல்தான் என்று அவளுக்குத் தெரியும்.

அவளின் வாழ்க்கை அவள் வாழும் சூழ்நிலையை விட்டு எக்காரணத்தாலம் பிரிக்கமுடியாது.

இங்கிராம் இறந்தபின் பல்கலைக்கழகம் போன காலகட்டத்தில் அவளைப் போன்ற இளம் பெண்கள் தாங்கள் எப்படி வாழவேண்டும் என்ற எதிர்காலக் கனவுகளைப் பகிர்ந்துகொள்ளம்போது அவர்களின் சுதந்திர சிந்தனை அவளுக்க ஆச்சரியத்தையுண்டாக்கும்.

அலிசனின் வாழ்க்கையின் அத்திவாரம்; அவளின் பெற்றோர்களும் இங்கிராமின் குடும்பமும் அவள் பிறந்து வாழ்ந்த அழகான கிராமுமாகும்.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே பிரித்தானியப் பெண்கள் தங்களின் சிறைவாழ்க்கையை உடைத்துக் கொண்டு உலகம் பார்க்கப் புறப்பட்டதும், பெண்களை அப்புறப் படுத்தி வைத்திருந்த ‘இலக்கியம்’ போன்ற கலையுலகத்திற் காலடி எடுத்து வைத்ததும் அவளுக்குத் தெரியும்.

ஏன் அவள் பிறந்த ஊரை விட்டு அவளால் நகர முடியாமலிருக்கிறது என்பதற்கு இங்கிராமின் நினைவின் இறுக்கமா என்று அவளால்த் தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை.

இப்போது இங்கிராம் மாதிரி தோற்றமும், பேச்சும், நடையுடைபாவனையுமள்ள ஒருத்தன் அவளின் அடிமனத்தைக் குழப்பிக் கொண்டிருக்கிறான்.

அந்தக் காலைப் பொழுதில்,உலகம் பஞ்சபூதங்களாலும் படுமோசமாகப் பதம் பார்த்துக் கொண்டு திண்டாடிய நேரத்தில் அவன் வந்து ஏறும் இடத்திலிருந்து ட்ரெயின் மீண்டும் தனது பயணத்தைத் தொடங்க ஆரம்பித்தபோது அவன் ஓடிவந்து ஏறிக்கொண்டான். கால நிலை சரியில்லாதபடியால் பலர் லீவு எடுத்திருந்திருப்பார்கள்போலும், அந்த ட்ரெயின் கிட்டத்தட்ட வெறுமையாகவிருந்தது. அவளைக்கண்டால் ஒருசிறு புன்னகையாவது தருபவன் அன்று அவசரமாக ஓடிவந்து ஏறியதாலோ என்னவோ அவளுக்கு முன்னாலிருந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டு மூச்சுவாங்கிக்கொண்டிருந்தான்.

மலர் இதழ்கள்;போல் அவன் முகத்தில் சரிந்திருக்கும் அவனின் மூடிய கண்களை அலிசன் ஏறிட்டுப் பார்த்தாள். அவர்களிருந்த இடம் கிட்டத் தட்ட வெறுமையாகவிருந்தது. அவனை அவள் இரண்டு கிழமைகளாகக் காணவில்லை. சாடையாக மெலிந்திருக்கிறான் போலிருந்தது. என்ன வேலை செய்கிறான் எங்கே போகிறான் என்ற விபரங்கள் அவளுக்குத் தெரியாது. அவன் அவளின் சக பிரயாணி. அவளின் அன்பன் இங்கிராம் மாதிரியிருப்பதால் அவளுக்கு அவனில் ஒர ஈர்ப்பு அதைவிட அவனுக்கும் அவளுக்குமிடையில் என்ன பந்தமிருக்கிறது?

ஒருசில வினாடிகளின்பின் அவன் கண்களைத் திறந்து அவளை வைத்தவிழி வாங்காமற் பார்த்தது அவளுக்குத் தர்மசங்கடமாகவிருந்தது.’ட்ரெயினைத் தவற விட்டால் இன்று உன்னைப் பார்க்க முடியாமற் போய்விடுமோ என்று தவித்து விட்டேன்’ அவன் அப்படிச் சொன்னது அவளுக்கு அதிர்ச்சியாகவிருந்தது. அவளும்தான் அவளை இரண்டு வாரங்கள் பார்க்காமலிருந்திருக்கிறாள்.

அதை அவள் அவனிடம் வெளிப் படையாகச் சொல்ல முடியாது.

அவள் அவனின் முகத்தைப் பார்க்காமல் முகத்தைத் தாழ்த்திக் கொண்டாள்.

‘இன்று உன்னைப் பார்க்க முடியாமல்’என்று அவன் சொன்னதன் அர்த்தமென்ன? நாளைக்கு வரமாட்டானா? அல்லது இனி ஒரேயடியாக வராமலே விட்டுவிடுவானா? அவனது மனைவியின் ஆசைப்படி அடிக்கடி வெளியூர் செல்லத் தேவையற்ற வேலையொன்றை அவன் வீட்டருகில் பார்த்து விட்டானா?

அவள் மனதில் பல கேள்விகள்.அவுனமாவிருந்தாள். அவன் மெல்லமாக அவள் விரல்களை வருடினான். அதை அவள் எதிர்பார்க்கவில்லை.அவள் இருதயம் படபடவென்று அடித்துக்கொண்டது.உடம்பெல்லாம் தாங்கமுடியாத வெப்பம் தகிப்பதுபொலிரந்தது. அவள் அவனது அந்த செய்கையை எதிர்பார்க்கவில்லை.

ட்;ரெயினிற் கண்டு பழகும் ஓரளவு புரிந்துணர்வு கொண்ட சினேகிதர்களாக இருக்கிறார்கள் என்றுதான் அவள் இதுவரையும் நினைத்தாளா அல்லது அவனுக்கும் அவளுக்குமிடையில் ஏதோ ஒரு பிணைவு வருவதற்கு அவள் தன்னையறியாத சைகளை அவனுக்குக் கொடுத்திருக்கிறாளா?

அவள் பட்டென்று தனது கைகளை இருவருக்குமிடையிலிருந்த மேசையிலிருந்து இழுத்துக் கொண்டாள். அவள் உடம்பில் உண்டாகிய கனலை அவளால் விபரிக்க முடியவில்லை. அவளின் அன்பன் இங்கிராம்அவனின் மென்கைகளை அவளுடன் பிணைக்கும்போது அவளுடலிலும் உணர்விலும் உண்டாகும் இன்ப அலை இந்தக் கணத்தில் இவன் தொட்டதால் வந்தபோது அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இங்கிராமின் ஆவியா இவன்? ஏன் என்னை இப்படித் துடிக்க விடுகிறான்.

அவன் அவளைத் தொட்டதற்கு மன்னிப்புக் கேட்பான் என்று நினைத்தாள்.அவன் மவுனமாக அவளை ஏறிட்டு நோக்கினான். அவன் கண்களிற் தெரிந்த சோகம் அவளை என்னவோ செய்தது. பார்வையை ஜன்னலுக்கு அப்பால் செலுத்தினாள்.

‘இரண்டு கிழமைகள்.. இரண்டு கிழமைகள் நான் உனது முகத்தைப் பார்க்கவில்லை’ ஏர்வின் ஒரு தயக்கமுமின்றிச் சொன்னான் ‘இப்படிச் சொல்ல உனக்கு என்ன தைரியம்?’ என்று அவள் சீறுவாள் என்று நினைக்கவில்லையா?

அவளின் மவுனத்திற்கு கடந்த இருவருடங்களாக அவன் பழக்கப் பட்டிருந்ததால் அவன் இன்னும் தனது பார்வையை அவள் முகத்திலிருந்து எடுக்கவில்லை. அவள் தன்னைத் திட்டமாட்டாள் என்பது அவனுக்குத் தெரியும் என்று அவளுக்குப் புரிந்தது. அவளுக்கு அழவேண்டும் போலிருந்தது.தான் வெளியேறமுடியாத ஒரு சிக்கலான உறவுக்குள் அவள் ஆளாகி விட்டதை அவள் புரிந்துகொள்ளாத அளவு முட்டாளல்ல.

அவன் ட்ரெயின் சேர்விசில் வரும் காப்பியை வாங்கிக்கொண்டான்.’உனக்கு ஏதும் ஆர்டர் பண்ணவா என்று அவன் கேட்கவில்லை.

அவளுக்கு என்ன விருப்பம் என்ன விருப்பமில்லையென்று அவனுக்குத் தெரிந்த பாவனையை அவளால் கிரகிக்கமுடிந்தது. அவர்களின் பேச்சில் அவள் தனக்குப் பிடித்த சாப்பாட்டுவகைகளையம் சொல்லியிருக்கலாம்.

இரண்டு வருடகாலம் ட்ரெயினின் அடிக்கடி அவளைக் கண்டவனுக்கு அவளின் விருப்பு வெறுப்புகள் தெரிகின்றன. அவளைத் தனது வாழ்நாள் முழுக்கத் தெரிந்து வைத்திருக்கும் அவள் கணவர் ஒலிவருக்கு அவளின் தேவைகள் பற்றித் தெரியாதா அல்லது தெரியாத மாதிரி நடித்துக் கொள்கிறாரா?

‘இன்றைக்கு அவள் வேலைக்கு வந்திருக்ககூடாது, அவள் இந்தப் பிரச்சினைiயான தனக்குக் குழந்தைவேண்டும் என்ற ஆவலை நேற்று அவருக்குத் தெரிவித்தபோது அவர் ஏன் நழுவலாகத் தட்டிக் கழிக்கிறார் என்பதற்கு அவளுக்கு விளக்கம் தேவை. இன்று வேலைக்கு வராமல் அவரிடம் அவர் வேலைக்குப் போகமுதல் இதுபற்றிக் பேசியிருக்கவேண்டும்’ அவள் பலவாறு நினைத்துக் கொள்கிறாள்.

தனக்கு முன்னால் இருப்பவனின் உறவிலிருந்து, அவளுக்கு அவனிடமுள்ள ஒரு ஈர்ப்பைக் கடந்தோடத்;தான் அவள் ;மனம் தனக்கு ஒரு வாழ்க்கைப்பிடிப்பு அதாவது ஒரு குழந்தைவேண்டுமென்று துடிக்கிறாளா,?

அலிசன் பலவாறு நினைத்துக்கொண்டு அவனுக்குமுன்னாலிருந்து திண்டாடிக் கொண்டிருந்தாள்.

அவளிடமிருந்து எந்தவிதமான பேச்சும் வராததால் அவன் அவளை நேரே பார்த்தான். அவள் தனது முகத்தை ஜன்னற்பக்கம் திருப்பிக்கொண்டாள். மீழமுடியாத ஒரு பாதாளத்தில் அகப்பட்ட உணர்வு அவளைப் பயத்துடன் சிலிர்க்கப் பண்ணியது. இன்று வேலைக்கு வந்திருக்கக்குகூடாது என்று அவள் மனம் பல்லாயிரம் தடவைகள் சப்தமிட்டது.

ட்;ரெயின் விக்டோரியா ஸ்டேசனை முத்தமிட்டு நின்றது.

‘ இன்றைய காலநிலை சரியில்லை,கவனமாகப் பார்த்துப்போங்கள்’ அவன் குரலிருந்த கரிசனை இங்கிராம் அவளிடம் சொல்வது போலிருந்தது.

அவள் மவுனமாகச் சென்றாள். அவன் அவளது விரல்களைத் தடவாமலிருந்தால் அவளும் பதிலுக்கு அவனிடம்’ நீங்களும் கவனமாகப் போங்கள் என்று சொல்லியிருக்கலாம்’

லண்டன் விக்டோரியா ட்ரெயில்வே ஸ்டேசன் கிட்டத்தட்ட வெறுமையாகத் தெரிந்தது,கால நிலைபற்றிய அரச அறிவிப்பைக் கேட்ட பலர் இன்று வேலைக்கு வருவதைத் தவிர்திருக்கலாம்.

அவள் தனது ஆபிசுக்குப் போனதும் அவளது சினேகிதிகளான எலிசபெத்தோ அல்லது தேவிகாவோ வேலைக்கு வரவில்லை என்று தெரிந்தது. அவள் மனம் காலையில் அவன் அவளின் விரல்களைத் தடவியபோது வந்த உணர்வுகளுக்குள் சிறைப்பட்டத் திண்டாடிக்கொண்டிருந்தது. அவளின் சினேகிதிகள் வேலைக்கு வந்திருந்தால் காலையில் அவன்செய்த காதல் வருடல் பற்றிச் சொல்லியிருப்பாளா? அதுவும் அவளுக்குத் தெரியாது.மனம் நிம்மதியின்றி அலைந்தது.

ஆபிசுக்கு வந்திருந்தவர்களும் மத்தியான நேரத்துடன் வீடு திரும்புவதாகச் சொன்னார்கள். அவளுக்கு வேலையில் கவனமில்லை. அடுத்த கிழமைக்கு முன் முடித்துக் கொடுக்க வேண்டிய றிப்போர்ட் ஒன்றை எழுதி முடிக்கவேண்டும்.ஆனால் அவள் மனம் எதிலும் பதியவில்லை.

ஆபிஸ் மிகவும் அமைதியாகவிருந்தது. மதிய உணவு நேரம் தலைமையதிகாரி தனது அறையிலிருந்து வெளியே வந்தார் ஆபிசை ஒரு நோட்டம் விட்டார். ஓரு சிலர் மதிய உணவு இடைநேரத்தில் ஆபிஸ் கண்டினுக்ப்போக ஆயத்தமாகிக்கொண்டிருந்தார்கள.; தலைமை அதிகாரி அங்குமிங்குமாக அமர்ந்திருக்கும் ஆபிசர்களைப் பார்த்தார். பெரும்பாலோர் குழந்தை குட்டிகள் இல்லாதவர்கள். ஓருசிலர் மிக நீண்ட பிரயாணம் செய்து லண்டனுக்கு வேலைக்கு வருபவர்கள்.பெரும்பாலான குடுப்பஸ்தர்கள் வேலைக்கு வரவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

வெளியில் பகல் ஒரு மணியாகிறது என்ற எந்தவிதமான தடயத்தையும் காட்டாத வானம் இருண்டு மப்பும் மந்தாரமுமாகவிருந்தது.இடியும் மின்னலும் மழையும் அடிக்கடி தோன்றி பூமிமாதாவைக் கண்டபாட்டுக்குத் துவம்சம் செய்துகொண்டிருந்தன.

‘வெளியில் காலநிலை சரியாகவில்லாததால்,இந்த நிமிடத்திலிருந்து ஆபிசைப் பூட்டலாமென்றிருக்கிறேன். நீpங்கள் உடனடியாக வீட்டுக்குப் போகலாம்’ அவர் ஒலிபெருக்கிமாதிரிச் சொல்லி விட்டுத் தனது ஆபிசுக்குள் மறைந்து விட்டார்.

அலிசனும் மற்றவர்களும் பட படவென்று தங்கள் மேசைகளைச் சரியாக்கிவிட்டு ஆபிசை விட்டு வெளியேறினார்கள். லண்டன் பாதாள ட்ரெயின்கள் பல சிக்னல் பெயிலியரால் தாமதமான சேவையைச் செய்து கொண்டிருந்தது. வீடுபோய்ச் சேர எவ்வளவு நேரமாகும?

அவளின் கணவர் சொன்னதுபோல் அவளுடைய சினேகிதிகளுடன் தங்கிவிட்டு நாளைக்கு வீடு செல்லாம் என்றால் எலிசபெத், தேவிகா இருவரும் இன்று வேலைக்கு வரவில்லை. அவர்களும் வடக்கு லண்டன் எல்லையில் வாழ்பவர்கள்.அவர்கள் யாரிடமாவது போய்ச் சேரக்கிட்டத்தட்ட ஒன்றரை மணித்தியாலங்கள் எடுக்கலாம். எலிசபெத் வீட்டுக்கு ஒருதரம் அலிசன் போயிருக்கிறாள். அவளின் கணவர் அடிக்கடி இங்கிலாந்தை விட்டு வெளிநாடு செல்பவர்.பெரிய கம்பனி ஒன்றின் முக்கிய உத்தியோகத்தராகவிருக்கிறார். அலிசன் அங்கு போனால் எலிசபெத் தனியாக இருந்தால் அன்புடன் தன்னை வரவேற்பாள் என்று தெரியும்.ஆனால் அங்கு போனால் தனது மனத் துயரைக்கொட்டி அழவேண்டிவரலாம் என்ற யோசனை வந்ததும் அவளுக்குத் தன்னிலேயே ஒருபரிதாபம் வந்தது.

யோசனையடன் விக்டோரியா ஸ்ரேசனில் பார்வையைத் துழாவவிட்டவளுக்குச் சட்டென்று அவள் இதயத் துடிப்பு நின்று விட்டது போன்ற பிரமைஏற்பட்டது.

ஏர்வின் பிரயாண விபரங்களையறிவிக்கும் அறிவிப்புக்களைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். லண்டனிலிலுள்ள பல ஆபிஸ்களிலிருந்து பலர் விக்டோரியா ஸ்டேசனை நிரப்பிக்கொண்டிருந்தார்கள்.

ஏர்வினும் அவளும் இதுவரையும் மாலை நேர ட்ரெயினில் சந்தித்துக்கொண்டது கிடையாது. இன்றுதான் அவனை முதற்தரம் ஒரு மாலை நேரப் பொழுதில் இன்று சந்தித்திருக்கிறாள். அவன் காலையில் வரும்போது அவளின் விரல்களைத் தழுவியது ஞாபகம் வந்தது. அவள் மனதில் என்னவென்று சொல்லமுடியாத பேரலை எழுவது போலிருந்தது. ‘அவன் தன்னிடம் என்ன உரிமையுடன் என் விரல்களைத் தடவினான@; அவனிடம் காலையில் நேரடியாகக் கேட்கமுடியாத கேள்வி அவள் மனத்தை ஈட்டியாகக் குத்தியது.

அவன் திரும்பிப் பார்க்க முதல் அந்த இடத்தை விட்டு ஓடவேண்டும் என்று அவள் நினைத்தபோது ட்;ரெயின் புறப்படும் நேரத்தைப் பற்றிய அறிவிப்புத் தொடங்கியது. அந்த நேரம் தற்செயலாகத் திரும்பிய ஏர்வினின் பார்வையில் அலிசன் அகப்பட்டுக் கொண்டாள்.

‘ஆபிஸ் எல்லாம் நேரத்துடன் பூட்டியாகிவிட்டன.’ அவன் அவன் ஏன் அங்கு நிற்கிறான் என்பதற்கு விளக்கம் சொல்வதுபோல் அவளுக்குச் சொன்னான்.

‘எனது ஆபிசும்தான்’ அவள் குரல் மெல்லமாக ஒலித்தது.

இவர்கள் போகவேண்டிய ட்ரெயின் தாமதாகமாகிவிட்டதாகவும் எப்போது அடுத்த ட்ரெயின் புறப்படம் நேரத்தைத் தற்போது தெரிவிக்கமுடியாதென்றும் அறிவிப்புச் சொல்லியது.

இருவரும் அங்கு அலையும் பிரயாணிகளின் கூட்டத்துடன் காப்பி பாரில் அமர்ந்திருந்தார்கள்.

அவன் சட்டென்று எழுந்தான்.’உனக்கு விருப்பமென்றால் என்னுடன் வெளியில் வரலாம்.கொஞ்சதூரம் நடக்கவேண்டும் போலிருக்கிறது’

வெளியில் போகவா? மழை தூறிக்கொண்டிருந்தது.ஆனால் காற்றுத் தாங்கமுடியாததாகவிருந்தது. இந்தக் காற்று நேரத்திலா? அவள் ஒரு கணம் தயங்கினாள்.

வெளியில் அவர்கள் இருவரும் வந்தபோது,வானம் இருண்டு கொண்டுவந்தது. மின்னற் கீறுகள் வானத்தைப் பிழந்துகொண்டு அவ்வப்போது பூமியைத் தொட்டன. பாதைகள் எங்கும் வாகனங்கள் நிறைந்து வழிந்தது. மக்கள் பறவைகள் மாதிரித் தங்கள் கூடுகளை நோக்கிப் பறந்து கொண்டிருந்தார்கள். பெரிய கடைகள் வெறிச்சோடித் தெரிந்தன.ஸ்டேசனைச் சுற்றிக் கிடந்த நாடகக் கொட்டகைகள், சினிமாத் தியேட்டர்கள் அதிக சன நடமாட்டற்று மந்தமாகத் தெரிந்தது.

வானத்தை ஒரு கணம் அளவிட்ட அவன்,’ வீட்டுக்குப் போகலாம் என்று நான் நினைக்கவில்வை. பல ட்ரெயின்கள் கான்சலாகிவிட்டன’.அவன் தனக்குத் தானே சொல்லிக்கொள்வதுபோல் சொல்லிக்கொண்டான.

———————————- ————————– ——————————-

ஒன்பது மாதங்களும் ஒருகிழமையின் பின்:

அலிசன் கடந்த மூன்று நாட்களாகப் பிரசவ வேதனையுடன் பட்ட துயர் ‘ஆ’ என்ற அலறலுடன் பிறந்த குழந்தையின் அலறலுடன் அகன்று விட்டது. ஏதோ ஒரு காரணத்தால் அவள் கணவர் அடிக்கடி கேட்கும் பழைய ஆங்கில போர்க்கால சங்கீதம் அவள் காதில் கேட்டது. போரில் வென்று விட்டேனா?

தனது வம்சத்துக்கு அடுத்த தலைமுறைக்கான போர் புரிந்து வெற்றி கண்ட உடலெங்கும் வலியிற் துடித்தபோது உருகிய உடலின் நீர் வியர்வையாக ஓடிக்கொண்டிருந்தது.

அவளுடலுக்குள்ளால் வெளிவந்த சிறு உயிரை அவளுக்குப் பிரசவம் பார்த்த தாதி போர்வையிற் சுற்றியபடி அலிசன் கைகளிற் கொடுத்தாள்.

சுழலும் நாற்காலியில் உட்கார்ந்திருந்த அவளின் கணவர் அலிசனின் கட்டிலுக்கு அருகில் நகர்ந்து வந்து மிகுந்த முக மலர்ச்சியுடன் மனைவியின் கைகளிருக்கும் அழகிய குழந்தையை வைத்த கண்கள் வாங்காமல் பார்த்தார்.

‘எனது அப்பா மாதிரியிருக்கிறான்’ அவர் குரலில் பெருமை. அவரின் தகப்பனின் சாயல்தான் இங்கிராமிடமிருந்தது என்று அவளுக்குத் தெரியும். அவளின் குழந்தையின் சாயலை இங்கிராமுடன் இணைக்காமல் தனது தந்தையுடன்; இணைத்தது அவளுக்கு ஒரு விதத்தில் ஆறதலாகவிருந்தாலும் அவளின் அடிமனதில் எங்கேயோ ஒரு சோகக்குரல் அவளின் ஆத்மாவைச் சுண்டியிழுத்தது.

‘ஒரு குழந்தை பிறக்கவில்லையே என்று சொல்லிக் கொண்டிருந்தாய்.இப்போது பார் உனக்கு இரண்டு குழந்தைகளைப் பராமரிக்கும் பொறப்பு வந்திருக்கிறது.’அவளிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு அவர் மனைவியிடம் சொன்னார்.

அவள் மவுனமான புன்முறவலுடன் அவர் என்ன சொல்கிறார் என்று புரிந்துகொண்டாள்.

அவளின் கணவர் ஒலிவர் சந்தித்த விபத்தொன்றில் அவர் கால்களையிழந்து விட்டார். அன்றிலிருந்து அலிசன் தனது வேலையை இராஜினாமா செய்துவிட்டுத்தன் கணவரைக் கண்ணும் கருத்துமாகப் பார்க்கிறாள்.

‘ஐ லவ் யு ஒலிவர்’ அவள் கண்களிலிருந்து நீர்வடிகிறது. இப்படியான அன்பான கணவரைக் கைபிடிக்க அவள் என்ன தவம் செய்திருக்கவேண்டும்?

‘ஏய் பெண்ணே எங்களுக்கு ஒரு அழகான குழந்தை பிறந்தநேரம் ஏன் இப்படி அழுதுகொட்டவேண்டும்’.ஒலிவரின் அன்பான குரல் அவளை நெகிழவைத்தது. அவள் கண்ணீர் ஆறாக ஒடிக்கொண்டிருந்தது.

அவள் அவரின் தோள்களில் சரிந்து வீழ்ந்தழுதாள். குழந்தை பிறந்த ஆனந்தக் கண்ணீரா? அல்லது? அவர் அவளின் அழுகைக்கு விளக்கம் கேட்கவில்லை.குழந்தை பிறந்த பெண்கள் உணர்ச்சிவசப்பட்டுத் திண்டாடுவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறார்.

அவளின் மாhமியாரும் அலிசனின் தாயும் அலிசனின் அறைக்கு வந்தபோது அலிசனின் கண்ணீரை மாமியார் கண்டதும் ‘குழந்தை பிறந்த சந்தோசத்தில் நானும்தான் அழுது கொட்டினேன்’ என்றாள்.

அலிசனின் தாயார் குழந்தையைக் கண்ட அடுத்த கணம்,’ என்ன அதிசயம் அப்படியே இங்கிராம் மாதிரியே இருக்கிறானே’ என்று தன் கண்களைக்குறுக்கிக் கொண்டு குழந்தையை ஆராய்ந்தாள்.

‘உனக்கு ஞாபகமில்லையா, அவர்களின் அப்பா மாதிரியே இங்கிராம் இருந்தான் இப்போது தாத்தாவின் சாயலில் எங்கள் குழந்தை அப்படியே பிறந்திருக்கிறான்.’ ஒலிவரின் தாய் தனது பேரப் பையனைத் தன்னிடம் வாங்கிக் கொண்டாள்.

ஓலிவரின் தாய் சில சம்பவங்களை நினைத்துப் பார்த்துக் கொள்கிறாள். அந்தப் பெருங்காற்றடித்த இங்கிலாந்தின் கிழக்கையும் முக்கியமாகத் தென் பகுதியையும் துவம்சம் செய்துகொண்டிருந்த அந்த வெள்ளிக்கிழமை,அலிசன் லண்டனுக்கு வேலைக்குச் சென்றது ஒலிவருக்குப் பிடிக்கவில்லை அவரின் தாய்க்குத் தெரியும். ஆனாலும் ஒலிவர் ஒருநாளும் எதையும் உரத்துச் சொல்லிக் கட்டளை போடும் தன்மையற்றவர்.

அலிசன் லண்டனுக்கு வேலைக்குப் போய்விட்டாள்.காலநிலை சரியில்லை என்றும் முடியுமானால் அவளின் சினேகிதிகளுடன் அன்றிரவு தங்கச் சொல்லியனுப்பியதாகவும் ஒலிவர் தாய்க்குச் சொல்லியிருந்தார்.

அன்றிரவு வேலையால் திரும்பும்போது ஒலிவரின் கார் ஒரு லாறியிடன் மோதியதால் பெரும் விபத்து நடந்தது. இங்கிராமுக்கு நடந்த விபத்துமாதிரியே நடந்தது ஒலிவரின் தாயால் தாங்கமுடியாததாகவிருந்தது. ஓலிவரின் உயிர் தப்பி விட்டது. ஆனால் உடல் பல சேதமாகிவிட்டது.தலையில் பலத்த அடி.

போலிசார் வந்து ஒலிவரின் தாய் திருமதி டெவினா ஹரிஸனுக்கு விடயத்தைச்சொன்னதையடுத்து. அவள் தனது மருமகளுக்கு டெலிபோன் பண்ணியபோது அடுத்த நாள்க் காலை வரை அலிசனின் டெலிபோன் வேலை செய்யவில்லை.

அலிசன் லண்டனில் எந்தச் சினேகிதியுடன் எங்கு தங்கியிருக்கிறாள் என்ற எந்த விபரமும் ஒலிவரின் தாய்க்குத் தெரியாது. படுகாயமடைந்த தனது மகனை ஹாஸ்பிட்டலில் பார்த்த ஒலிவரின் தாய் பதறிவிட்டாள். ஓருமகனை ஏற்கனவே இழந்த தாய் துயர் தாங்காமல் கதறியதைப் பார்க்கப் பரிதாபமாகவிருந்தது.தலையில் பட்ட காயத்தால் ஒலிவரின் மூளை பாதிக்கப் பட்டிருக்கலாம் என்று டாக்டர் சொன்னபோது ஒருமகன் இறந்து விட்டான் இன்னொரு மகன் நடைப்பிணமாக வாழப்போகிறானா? ஓலிவரின் தாய் என்ன செய்வது யாரிடம் உதவி கேட்பது என்ற கூடத் தெரியாமல் திக்பிரமையடைந்து போயிருந்தாள்

விபத்தில் காயமடைந்த ஒலிவர் பற்றிய விடயம் அலிசனுக்குத் தெரியாது. லண்டனில் புயற்காற்று காரணமாக லண்டனில் இரவைக் கழித்த அலிசன் தனது வீட்டை அடுத்த நாள் மதியம் வந்தடைந்தாள். அடுத்த வீட்டார் ஒலிவருக்கு நடந்த விடயத்தைச் சொன்னபோது அவள் நாடி நரம்பெல்லாம் செயலிழந்தமாதிரித் திணறிவிட்டாள்.

‘என்ன நடந்தது உனக்கு, ஏன் எனது டெலிபோன் அழைப்புக்களுக்குப் பதில் தரவில்லை’ ஒலிவரின் தாய் தன் மருமகளிடம் புலிமாதிரிப் பாhய்ந்தாள்.மாமிக்குப் பதில் சொல்லாமல் கணவனிடம் ஓடியவள் கணவனின் நிலை கண்டு மயக்கமடைந்து விட்டாள்.

அவள் மயக்கம் தீர்ந்தபோது ஒலிவர் அருகில் மாமியார் அழுதபடி உட்கார்ந்திரந்தாள்.

‘எனது போன் சார்ஜ பண்ணாமற் கிடந்ததை நான் கவனிக்கவில்லை’ அலிசன் முனகினாள்.அவள் முகம் வெளுத்திருந்தது.

‘காலநிலை சரியில்லாத நேரம் நீ கட்டாயம் வேலைக்குப் போயிருக்கத்தான் வேண்டுமா’ ஒலிவரின் தாய் மருமகளைக் குற்றம் சாட்டும் தொனியில் சீறினாள். அவள் அப்படி ஒருநாளும் அலிசனுடன் முறைத்தது கிடையாது.

அலிசன் மாமியை ஏறிட்டுப்பார்க்காமல்,’ வார இறுதியில் முடித்துக்கொடுக்கவேண்டிய றிப்போர்ட் ஒன்று இருந்தது’ என்று மெல்லமாக முணுமுணத்தாள்.அலிசன் பொய் சொல்வதில்லை என்று ஒலிவரின் தாய்க்குத் தெரியும்.

அதையடுத்த சில மாதங்கள் எப்படிக் கழிந்தன என்று அலிசனால்ச் சொல்லமுடியாது.ஒலிவரின் நிலை ஒவ்வொரு நாளும் மிகவும் மந்தவேகத்தில் தேறிக்கொண்டுவந்தது.அவரின் ஞாபகங்கள் முற்று முழுதாகச் சரிவர எவ்வளவு காலம் எடுக்கும் என்று தெரியாது என்ற டாக்டர்கள் சொன்னார்கள்.

அலிசன் தனது வேலையை ஒலிவருக்கு விபத்து நடந்த அடுத்த நாளே இராஜினாமா செய்துவிட்டாள். கணவருக்கு அருகில் காலையிலிருந்து மாலைவரை அவரின் பணி செய்துகொண்டிருப்பாள்.அவரின் ஞாபகங்கள் பூரணமாகத்திரும்பவேண்டுமென்பதற்காக அவருடன் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பாள். அவருக்குப் பிடித்த பழைய ஆங்கிலேயப் போர்க்கால இசையை அவர் காதுகேட்கும்படி அவர் அருகில் வைத்திருந்தாள். எங்கள் வாழ்க்கைப்போரில் நாங்கள் வெற்றியடையவேணும் ஒலிவர்,தயவு செய்து என்னுடன் பேசு’ கண்ணீர்வழிய அவருடைய முகத்தைத் தடவிக் கொண்டழுவாள்.

ஓலிவரின் ஞாபகம் திரும்பத் தொடங்கி விட்டது என்பதற்கடையாளமாக ஒருநாள் சட்டென்று,’ கெல்டிக் மியுசிக் ‘ என்றார்.அவர் குரல் மிக மிகத் தழும்பியிருந்தது. அவருக்குப் பிடித்த சங்கீpதங்கள் பற்றியிருக்கும் ஞாபகசக்தி தன்னைப் பற்றியுமிருக்குமா, அலிசன் தனது நம்பிக்கையுடன் அவர் அருகிலிருந்த பணி செய்தாள். அப்படி அவள் செய்து கொண்டிருந்து ஒருநாள், தனது அடிவயிற்றில் ஒரு பட்டாம்பூச்சி துடிப்பதுபோன்ற உணர்ச்சி அவளுக்கு வந்தது.

அவளுக்குப் புல்லரித்தது. ‘எனது வயிற்றில் இருக்கும் குழந்தை என்னுடன் விளையாடுகிறதா?

அதேகணம், அந்தவினாடி ஒலிவர்,’ அலிசன்’ என்று ஈனமான குரலில் அவளையழைத்தார்.அவள் இருதயம் படபடக்க அவரருகில் சென்றாள். ‘எங்களுக்கு ஒருகுழந்தைபிறக்கப்போகிறது’ என்று அவள் அவருக்குச் சொன்னால் அவருக்குப் புரியுமளவுக்கு அவரின் மூளை தற்போது வேலை செய்யுமா? அவள் அவரை அணைத்துக்கொண்டாள். பலமாதங்களுக்குப் பின் அவர் அலிசன் பெயரைச் சொல்லியழைக்கிறார்.அவளின் வயிற்றில் வளரும் குழந்தை அவளைத் தட்டிக்கொடுக்கிறது. அவளுக்கு அவற்றைவிட வாழ்க்கையில் வேறென்னதேவை? கடந்த பலவருடங்களாக அவள் பட்ட துயர்களுக்கு கடவுள் ஒரு அற்புதமான முடிவைக்காட்டியிருக்கிறாரா?

ஓலிவருக்குப் பூரண குணம் வந்து வீட்டுக்கு வந்தபோது அலிசன் நிறைமாதக் கர்ப்பிணி. ஓலிவருக்கு விபத்து நடந்த காலத்திலிருந்து ஒலிவரின் தாய் அலிசனிடம் அதிகம் பேச்சு வைத்துக் கொள்ளவில்லை. ஓரு மகளையிழந்ததும் மற்ற மகனின் விபத்தும் அந்தத் தாயை மிகவும் துயர்படுத்தியிருக்கும் என்று அலிசனுக்குத் தெரியும்.மாமியின் உதாசினமான போக்கை அவள் பெரிதுபடுத்தவில்லை. ஓவ்வொரு நிமிடமும் ஒலிவரின் பூரண சுகத்துக்காக அலிசன் பிரார்த்தனை செய்தாள்.

அலிசன் கர்ப்வதியாய் வாந்தி எடுத்தபோது அலிசனின் தாய் மகளை அன்புடன் பார்த்துக்கொண்டாள்.

ஓலிவர்; பூரண குணமாகி வீடு வந்ததும் ஒருநாள் அலிசன் டாக்டரிடம் போயிருந்த சமயம் ஒலிவரின் தாய் மகனை ஏறிட்டுப் பார்த்தாள்.

‘அலிசனை என்ன செய்யலாம் என்று நினைக்கிறாய்?’ தாயின் குரலிருந்த கடுமையான தொனி ஒலிவரை ஒருதரம் தூக்கிவாரிப் போட்டது. தாயை ஏற இறங்கப் பார்த்தார். தனது தாய்க்கு அலிசனில் ஏன் அப்படி ஒரு கோபம் என்று அவருக்குத் தெரியும்.

‘விபத்து நடந்தது நல்ல விடயம்’ ஒலிவர் தனது தாயை நேரடியாகப் பார்த்தபடி சொன்னார்.’;விபத்தில் எனது உடம்பில் என்னென்ன பகுதிகள் பாதிக்கப் பட்டிருக்கினறன என்று முழுப் பரிசோதனையும் செய்தார்கள். எனது உறுப்புக்களில் எந்த சேதமும் கிடையாது.பத்துக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று டாக்டர் சொன்னார்’ ஒலிவரின் தாய் ஒருசில கணங்கள் மௌமாக இருந்துவிட்டு,

‘கடவுள் அழிவிலும் ஒரு ஆக்கத்தையுண்டாக்குவார் என்ற சொல்வார்கள்’ என்று முணுமுணுத்தாள். தனது மனைவியில் தனது தாய்க்கு உள்ள சந்தேகத்தை ஒரு அப்பட்டமான பொய்யைச் சொல்லி அந்த நிமிடமே வெட்டி எறிந்து விட்டார் ஒலிவர்.அலிசனில் தாயின் சந்தேகத்துக்கான காரணம் அவருக்குத் தெரியும்.

அலிசனைத் திருமணம் செய்த சில மாதங்களிலேயெ அவனுடைய தாய் அவனைச் சீக்கிரமாகத் தகப்பனாகச் சொன்னாள்.’அலிசனின் மனதில் இங்கிராம் இன்னும் இருக்கிறான் என்பதை ஒலிவரின் தாய் நன்றாகப் புரிந்துவைத்திருந்தாள். ஓலிவருக்கும் அலிசனுக்கும் குழந்தைபிறந்தால் இங்கிராமை அலிசன் மறக்க உதவியாகவிரும் என்பது மட்டுமல்ல பரம்பரையின் விருத்திக்குக் குழந்தைகள் தேவை என்பதில் ஒலிவரின் தாய் கவனமாகவிருந்தாள். அப்படிச் சொன்னாலாவது ஒலிவர் டாக்ரிடம் போய உதவி எடுக்கலாம் என்ற நினைத்தாள்.ஒலிவருக்க என்ன பிரச்சினை இருக்கும் என்பது அவளுக்குச் சாடையாகத் தெரியும்.அதை அவள் ஒலிவருக்குச் சொல்லவில்லை.

குழந்தை வரவேண்டுமென்ற யோசனை ஒலிவருக்கும் நன்றாகப் பிடித்துக் கொண்டது. ஆனாலும் வருடங்கள் இரண்டாகியும் அவர்களுக்குக் குழந்தை வராததால் என்ன காரணமாகவிருக்கும் என்று அவர் தனது டாக்டரைக் கலந்தாலோசித்தபோது, தம்பதிகளில் யாரோ ஒருத்தருக்கு ஏதும் இனவிருத்தி உறுப்புக்கள் சம்பந்தமான பிரச்சினையிருந்தால் குழந்தை வருவது பிரச்சினையாகவிருக்கும் என்று டாகடர் சொன்னபோர் அவர் அலிசனிடம் ஏதும் பிரச்சினையிருக்கிறதா என்பதை அறிய முதல் தனக்கான பரிசோதனைகளைச் செய்துகொண்டார்.

அவருக்குத் தந்தையாக வரும்; அளவுக்கு விந்துக்களின் வலிமைகிடையாது என்பது பரிசோதனையிற் தெரியவந்தது.

அதை நிவர்த்திக்க என்ன செய்யலாம் என்று அவர் வினவியபோது,அவர் சில மருந்துக்களைச் சிபாரிசு செய்தார்.

காலம் கடந்தது,; அலிசன் கருத் தரிக்கவில்லை.அலிசன் தனது உடலைப் பரிசோதித்து அவளுக்குக் குழந்தை வர எந்தத் தடையுமில்லை என்று தெரிந்தபோது கணவனிடம் தங்களுக்குப் பிள்ளை பிறக்கவேண்டும் என்ற ஆசையைப் பலதடவை சொன்னபோது அவள் ஏக்கம் அவரை வதைத்தது. எப்படி அவளுக்குத் தன்நிலமையைச் சொல்வது என்ற அவருக்குத் தெரியவில்லை.டாக்டரிடம் திரும்பிப்போனால் அவர் ஒலிவரைப் பரிசோதித்து விட்டு,’உங்கள் விந்து உற்பத்தியில் ஒரு மாற்றமும் தெரியவில்லை’ என்று சொன்னால் அதை அலிசனுக்கு எப்படிச் சொல்வது?

அலிசன் லண்டனிற் தங்கிய அன்றிரவு அவர் தாயைப் பார்க்க வந்திருந்தார். வழக்கம்போல் அவள் ‘எனக்கு ஒரு பேரப்பிள்ளையை எப்போது பெற்றுத் தரப் போகிறாய்’? என்று கேட்டபோது’ ஏன் இப்படி அவசரம்,எனக்கொன்றும் அப்படி வயதாகிவிடவில்லையே’ என்று வேடிக்கையாகச் சொன்னார். அலிசன் மட்டுமல்ல தாயும் அடிக்கடி அவர்களின் எதிர்காலவாரிசு பற்றிக் கேட்கிறாள்.

தன்னைப் பெற்ற தாய்க்கோ அல்லது தன்னுடன் தனது வாழ்க்கையை இணைத்துக்கொண்ட ஒரு அன்பான,அழகான மிகவும் நல்ல ஒரு பெண்ணுக்குத் தன் நிலைமையைச் சொல்லமுடியாத வேதனை அவரை வாட்டியது. அந்தநேரம்தான் ஒலிவரின் தாய் சில விடயங்களை ஒலிவருக்கச் சொன்னாள்.அதாவது, ஒலிவர் சிறுவயதில் மரத்திருந்து விழுந்தபோது அவர் ஆண் உறுப்புக்கள் பலமாகத் தாக்குப் பட்டதாகவும் அதனால்ச் சிலவேளைகளில் அவரின் எதிர்காலத்தில் குழந்தை பெறும் தன்மையில் பிரச்சினை இருக்கலாம் என்று டாக்டர் சொன்னதாகச் சொன்னாள். இந்த செய்தி; ஒலிவர் எதிர்பார்க்காத விடயம். அவரின் விந்து உற்பத்தியப் பிரச்சினைக்கு மூலகாரணத்தை அவனது தாய் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால் அவர் எடுத்துக் கொண்டிருக்கும் சிகிச்சையை எப்போதோ ஆரம்பித்திருக்கலாம். தாயிடம் அவர் மேற்கொண்டு பேசாமல் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டார். அலிசன் வீடுதிரும்பியதும் அவர் தன்னைப் பற்றிய முழவிபரங்களையம் சொல்லவேண்டும், முடியுமானால் விஞ்ஞான உதவியுடன் அலிசன் கர்ப்பம் அடையலாம் என்பதையும் அவளுக்குச் சொல்லவேண்டுமென்று சங்கற்பம் செய்துகொண்டார்.தன்னிடம் தனது பிரச்சினையின் உண்மைக்காரணத்தைச் சொல்லாத தாயில் கோபம் வந்தது. அந்த ஆத்திரம் அவரின் காரின் வேகத்தில் பிரதிபலித்தது,விபத்து நடந்தது.அவர் ஊனமாகிவிட்டார்.

——————

குழந்தை பிறந்து ஒரு சில நாட்களுக்குப் பின் அலிசன் தனது முலைப்பாலை பசியுடன்; அருந்தும் மகனைக் கண்வைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘இங்கிராம் மாதிரியே இருக்கிறான் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.’

அவள் கண்களில் நீர் பெருகியது. உண்மையாகவா?அவளால் அடிமனதில் புதைக்கட்டு வைத்திருப்பதாக அவள் நினைத்துக் கொண்டிருக்கும் பல நினைவுகள் கட்டுக்கடங்காத அலையாக அவள் மனதில் எகிறிப் பாய்ந்தன.

அந்த இரவு ஞாபகத்திற்கு வருகிறது.புயற்காற்றால் இங்கிலாந்தின் தெற்கும் கிழக்கும் இயற்கையின் சீற்றலுக்கு அடுத்த நாள் அந்தப் புயலின் கொடுமை எவ்வளவு தூரம் நாடு நகரங்களைத் துவம்சம் செய்திருக்கிறது என்று புரிந்தது.

வெறும் கட்டிடங்களும்,பாலங்களும், தெருக்களுமா சின்னா பின்னமாயின?

புயல்படிந்த அவ்விரவின் தனிமையில் ஏர்வினின் முத்தங்கள் அலிசனுக்கு ஞாபம் வந்தது.

‘இன்று வீடு திரும்ப முடியாது’அவன் அவளிடம் சொன்னபோது,

‘தெரியும்’ என்று அலிசன் சொன்னது அவனுடன் அந்த இரவைக் கழிக்கச் சம்மதம் என்று அர்த்தமா?

அவள் பிறந்து பதினெட்டு வருடங்கள் அவள் உணர்வுகளின் ஒவ்வொரு நுனியிலும் மட்டுமல்லாது அவளின் ஆத்மாவுடன் இணைந்த இங்கிராம் தனக்கு முன்னமர்ந்து சொல்வது போலிருந்தது.

இயற்கை மாதா வேண்டுமென்றே அவர்கள் இருவரும் இணையவேண்டும் என்ற சூழ்நிலையை உருவாக்கினாளா?

காலையில் அவன் அவளது விரல்களை வருடியபோது அவனிடமிருந்து தனது விரல்களைச் சட்டென்று பறித்துக்கொண்டவள் இப்போது இந்தமாலை நேரத்தில் அவன் அவளது கரங்களைத் தன்னோடு இணைத்தபோது பறித்துக் கொள்ளவில்லை.

‘உனக்குப் பிடிக்கவில்லையென்றால்–‘ ஏர்வின் குரல் மிகவும் அண்மையில் கேட்டது.

சட்டென்று இங்கிராமின் ஞாபகம் வந்தது. இதே மாதிரி வார்த்தைகளை இங்கிராம் சொன்னது ஞாபகம் வருகிறது.அவளுக்கு அப்போது ஐந்து வயது,அவனுக்கு எட்டு வயது. தங்கள் கிராமத்தையண்டிய காட்டுப்பகுதியில் பல சிறுவர்கள் சிறுமிகளுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

பல சிறு சிறுமிகள் பெரிய மரங்களில் ஏறி விளையாடிக்கொண்டிருந்hர்கள். வீட்டில் ஒரே ஒரு பிள்ளையான அலிசனை அவள் தாய் மிகவும் பத்திரமாக வளர்த்ததால் அலிசனுக்குச் சட்டென்று மற்றவர்களைப் பார்த்து ஏதும் செய்யவேண்டும் என்ற குறும்புத்தனம் கிடையாது.

மற்றச் சிறுவர்கள் அலிசனைப் பார்த்து வேடிக்கையாகச் சிரித்தபோது,’உனக்குப் பிடிக்கவில்லை என்றால் ஏறாதே, ஆனால் ஏறுவதற்குப் பயம் என்றால் நான் கை தருகிறேன்’இங்கிராமின் உதவியுடன் அவள் அன்று மரமேறினாள். மற்றச் சிறுவர்களின் கிண்டல் அன்றோடு நின்றது.

‘உனக்குப் பிடிக்கவில்லை என்றால்—‘ இன்று ஏர்வின் சொல்வதன் அர்த்தம் அவளுக்குப் புரிந்தது.

இங்கிராம் மாதிரியே உடல்வாகு குரல் மட்டுமல்ல ஏர்வினின் நடத்தைகளும் அப்படியே இருக்கிறது.

அலிசனுக்கு ஏர்வினைப் பற்றி எவ்வளவு தெரியும்? ஏர்வின் பெரும்பாலான ஆங்கிலேயர்கள் போல் மிகவும் கௌரவமான குடும்பத்திலிருந்து வந்தவன் என்ற அவளது கணிப்பைத் தவிர அவனைப் பற்றி நிறையத் தெரியாது.அவனுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது.இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவன் லண்டனில் வேலை செய்வது அவனது மனைவிக்குப் பிடிக்காது.

அலிசனில் மிகவும் ஈர்ப்பாகவிருக்கிறான்.அதை விட அவளுக்கு என்ன தெரியும்?

‘என் கணவர் மிகவும் நல்லவர்’ அலிசன் சட்டென்று சொன்னாள். அவள் குரல் கரகரத்தது.மிகவும் பலவீனமான மன நிலையிலிருக்கும் என்னைப் பாவித்துக்கொள்ளாதே என்ற கெஞ்சலா அது?

ஏர்வின் சில நிமிடங்கள் மௌனமாகவிருந்தான்.

‘நீ அதிர்ஷ்டசாலி@ அதற்குப்பின் மீண்டும் ஒன்றிரண்டு நிமிட மௌனம். அலிசன் பொறுமையுடன் காத்திருந்தாள்.

‘எனது மனைவி என்னிடமிருந்து பிரிந்து போய்விட்டாள்.அதுதான் கடந்த இருகிழமைகளாக நான் வரவில்லை. அவள் சொல்லும்; வாழ்க்கையை நான் ஒத்துக்கொள்ளாவிட்டால் விவாகரத்து செய்வதாகச் சொல்லி விட்டாள்’ஏர்வினின் குரல் மிகவும் சோகமாகவிருந்தது. அவள் ‘சாரி’என்றாள்.

அவன் தொடர்ந்தான்:

‘திருமணத்தில் பெரும்பாலான ஆணும் பெண்ணும் ஒட்டுமொத்தமாக வெற்றியடைவது கிடையாது. திருமணங்கள் பலகாரணங்களை அடிப்படையாக வைத்து நிறைவேறுகின்றன. பொருளாதாரம், சமுதாய கௌரவம்,குழந்தைகளின் எதிர்காலம் என்பன பின்னிப் பிணைந்ததுதான் திருமணங்கள், ஒரு ஆத்மாவின் சுயமை அந்தப் பிணைப்பில் அடையாளத்தை இழக்கிறது. அல்லது மாற்றிக் கொள்கிறது’ அவன் தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறானா? அல்லது அவளின் அபிப்பிராயத்தையும் எதிர்பார்க்கிறானா என்று அவளுக்குத் தெரியாது.

‘உனது வாழ்க்கை சந்தோசமானது என்றால் அதைப் பாதுகாத்துக்கொள்’ அவன் குரல் ஒரு ஆசிரியனின் தொனியாயிருந்தது. நாங்கள் இப்போது இணைந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் உண்டாகும் பலவீனமான சிந்தனைகளால்; உனது எதிர்காலத்தைப் பாழாக்கக்கூடாது என்று சொல்கிறானா?

அவள் ஒருசில நிமிடங்கள் கடந்த சில காலமாகத் தனக்கும் தனது கணவருக்குமிடையில் தொடரும் வாய்விட்டுச் சொல்லமுடியாத சில பிரச்சினைகளைச் சிந்தித்துப் பார்த்தாள். அவள் ஒரு தாயாக வேண்டுமென்பதின் தவிப்பை அவர் ஏனோ தானோ என்று தூக்கியெறிவது அவளால்த் தாங்கமுடியாததாகவிருந்தது.

அலிசன் என்ற மிகவும் பொறுமையான பெண்ணை அவர் முழவதும் புரிந்துகொள்ளவில்லை என்று அவள் நினைத்தபோது, ஏர்வின் குறிப்பிட்ட,’ஒருத்தரின்’சுயமை’ திருமணத்தின் கோட்பாடுகளைக் காப்பாற்றப் பாவிக்கப் படவேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறதா

ஒருசிலவாரங்களாக மிகவும் குழம்பியிருந்த அலிசன் அன்றிரவு-அந்த நிமிடம் தெளிவாகச் சிந்தித்தாள்..

தன்னைப் போலவே தனது திருமணத்தைக் காப்பாற்ற லண்டனை விட்டுவெளியேவந்தும் அவன் மனைவி திருப்திப்படாமல் அவனது குடும்பமே உடைந்த பரிதாபத்தை அவளும் ஒருநாள் சந்திக்கவேண்டுமா?

அவள் வேலைசெய்வதும் ஒலிவருக்கு அதிகம் பிடிக்காது. அவர்கள் வசதியானவர்கள். அவள் உழைக்கவேணடும் என்ற எந்தத் தேவையுமற்றவர்கள். ஓருநாள் அவளும் வீட்டோடு அடைந்து கிடக்கவேண்டுமா?.உடனடியாக வீட்டுக்குத் திரும்பிப் போய்த் தன் கணவருடன் சண்டைபிடித்தாவது தனது எதிர்காலத்தை அவள் நிர்ணயிக்கவேண்டும்போலிருந்தது.ஆனால் கால நிலை பயங்கரமாக இருந்ததால் அவளால் அந்த வினாடி எதுவும் செய்யமுடியவில்லை.

தனது இரண்டும் கெட்டான் வாழ்க்கையை நினைத்து அவளுக்கு அழுகை வந்தது. வாய்விட்டழத்தொடங்கி விட்டாள்.

ஏர்வின் அவளை அணைத்துக்கொண்டான். ஓரு அன்பான சினேகிதனின் அணைப்பு. அது அவனின் ஆசைவெறியின் அணைப்பில்லை என்று அவளுக்குப் புரிந்தது. இங்கிராம் அவளை அன்புடனும் பாசத்துடனும் அணைத்துக்கொண்ட பழைய ஞாபகங்கள் அவள் மனதில் புதிதான விளக்கத்துடன் பிரவகித்தது.

ஆண் பெண் என்ற அன்னியமான இருவரின்; ஆழமான ‘ஈர்ப்பு’ இரு இளம் உள்ளங்களில் ஏற்படும் காமத்தையோ,மோகத்தையோ அடிப்படையாகக்கொண்டதல்ல என்று ஏர்வினின் அணைப்பு அவளுக்குப் புரியவைக்கிறது.

‘கடந்த இருவருடங்களாக உன்னை அவதானித்துக் கொண்டுவருகிறேன். உனது கணவன் மிகவும் அதிர்ஷ்டசாலி’ஏர்வினின் பார்வை அவள் கண்களை ஊடுருவியபடியிருக்கின்றன.

வாழ்க்கையின் சிக்கல்கள்,குடும்ப உறவின் பரிமாணங்கள் என்று எத்தனை புரிந்துணர்வு இவனுக்கு இருக்கிறது? அவள் நினைவில் அவளின் அன்பான கணவர் ஒலிவரின் முகம் சட்டென்று வந்தது.

அவர்கள் தங்கியிருந்த ஹொட்டெலின் ஜன்னலால் தேம்ஸ் நதி அமைதியாக ஒடிக்கொண்டிருந்தது.

அன்றிரவுக்குப் பின் அலிசனின் வாழ்க்கை மிகவும் அவசரமாக ஒடிவிட்டது போலிருக்கிறது.

———— ——————-

அவள் பெயர் அலிசன் என்ற அடையாளத்தைச் சட்டென்று இழந்துபோய் அவளின் கணவரின் நலத்திற்காகத் தன்னை அலிசன் அர்ப்பணத்ததை ஒலிவர் ஒட்டுமொத்தமாக உணர்ந்துகொண்டார்.இரவு பகலாக அவருடன் தங்கிப் பணிவிடைசெய்கிறாள்.அவரின் நலன் பற்றிய துயரிலும் வேதனையிலும் அவள் கர்ப்பத்தில் குழந்தை சரியாக வளராமல் பிரச்சினை வரும் என்று அவர் சொன்னபோது,’எனக்கு நீங்கள்தான் முக்கியம்’என்று ஒலிவரைக் கட்டிக்கொண்டு அழுதாள்.

கடந்த ஒன்பது மாதங்களாக தாயைப்போல் அவரைப் பராமரித்தவள். மனைவி என்ற ஸ்தானத்தைக் கடந்து ஒரு சேவகியாக அவர் தேவைகளைப் பூர்த்தி செய்தவள். கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறிவரும்போது அவளில்லாத நேரங்களில் அவளின் பரிசுத்தமான அன்பையும் பணியையும் நினைத்து மனம் விட்டு அழுதிருக்கிறார்.

‘குழந்தைக்கு இங்கிராம் என்று பெயர் வைப்போமா’ அலிசனின் குரலில் தயக்கம். அவள் குழந்தையை இறுகப்பிடித்திருந்தாள்.

‘உனது விருப்பப்படியே பெயர் வைப்போம்;’ ஒலிவர் மனைவியையும் குழந்தையையும் அணைத்தபடி சொன்னார்.

இரண்டு வருடங்களுக்கு முன் அவள் ஒருநாள்’இங்கிராம் மாதிரி ஒருத்தனை ட்ரெயினில் சந்தித்தேன் என்று சொன்னபோது அவர் ஒருகணம் திடுக்கிட்டார்,ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் எதோ மறுமொழி சொல்லி அவளைச் சமாளித்தார் ‘எவ்வளவு காலம் இங்கிராம் நினைவில் வாழப்போகிறாள்?

அலிசன் குழந்தை பற்றிப் பேசும்போதெல்லாம் அவளுக்குச் சரியான மறுமொழி சொல்லாமல் நழுவும்போது அவர் மனதுக்கள் தர்மசங்கடப்படுவார். தன் இயலாமையைப் போக்க டாக்டர் கொடுத்த மருந்துக்களை எடுக்கிறார்.அவை எப்படியான முன்னேற்றத்தத்தைக் கொடுத்திருக்கிறது என்பதற்கான பரிசோதனைக்கு டாக்டர் வரச்சொல்லியிருந்தார்.

அவர் அதற்காகச் செல்லமுதல் பாரிய விபத்து நடந்து விட்டது. அலிசன் தாயாகி விட்டாள்.அவரைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்கிறாள். குழந்தை உரித்து வைத்தாற்பொல இங்கிராம் மாதிரியே பிறந்திருக்கிறது.

;ட்;ரெயினில் இங்கிராம் மாதிரி ஒருத்தனைச் சந்தித்தாகச் சொன்னாளே,அப்படியானால் அவர்களுக்கு ஏதும் தொடர்பு நீடித்திடிருக்குமா? ஓலிவர் பல குழப்பமான கேள்விகதை; தனக்குள் கேட்டுக் கொண்டார்.அலிசன் மோகவெறிபிடித்த பெண் அல்ல என்பது அவருக்குத் தெரியும்.மோகத்தை வெல்லக் கூடிய பெண்மையைக் கொண்டவள்.

அவள் பிறந்தபோது அவளின் முதல் அழுகைக் குரலைக் கேட்டவர்.அவள் பிறக்கும்போது அவருக்கு எட்டுவயது. அவர் தனது தம்பி இங்கிராமையும அலிசனையும் பாதுகாத்தவர். அவளின் நினைவு தெரிந்த நாள்முதல் இங்கிராமுடன் அலிசன் ஒட்டிவாழ்ந்தவள். ஒழுக்கத்தைப் பாதுகாக்கும் பரம்பரைப்பெண். இங்கிராமும் அலிசனும் எவ்வளவு தூரம் அவர்களின் தூய அன்பால் ஓன்றியிணைந்தவர்கள் என்று அவருக்குத் தெரியும்.அளவுக்கு மீறாத அன்பைப் புனிதமாகப் போற்றுபவள் அலிசன் என்று அவருக்குத் தெரியும்.அந்த அன்புடன்தான் அலிசன் அவளது கணவரையும் பாதுகாக்கிறாள்.

குழந்தை பற்றிய சந்தேகத்தை அவர் அவளிடம் கேட்டால் அதன்பின் அவர்களுக்கு மட்டுமல்ல அந்தப் பிஞ்சுக் குழந்தைக்கும் அவர்களின் ஊரில் ஒரு மதிப்பும் கிடையாது. அவர் தனது மனதில் சாடையாக நெருடும் பல கேள்விகளுகளைத் தர்க்கரீதியாக அலசிக் கொண்டே வருகிறார்.’ குழந்தை பிறந்ததை உனது சினேகிதிகளுக்குச் சொல்லவில்லையா?’ ஒலிவர் அவளின் முகத்தில் ஏதும் உணர்வுகள் பரவுகின்றனவா என்பதை ஆராய்ந்தபடி கேட்டார்.விபத்து நடந்த அடுத்த நாளிலிருந்து லண்டன் பற்றிய எந்தவிதமான தொடர்புகளும் அலிசனுக்குப் பெரிதாக இல்லை என்று அவருக்குத் தெரியும்.

‘சொன்னேன்,ஆனால் அவர்கள் இவ்வளவு தூரம் வந்துபார்க்க வேண்டும் நான் எதிர்பார்க்கவில்லை’ அவள் தனது குழந்தையை முத்தமிட்டபடி சொன்னாள். ஓலிவர் தனது மனைவியையும் குழந்தையையும் வைத்த கண்வாங்காமற்பார்த்தார்.

அவர் உடலளவில் ஊனமாகிவிட்டார். அலிசனிடம் எதையும் கேட்டு அவளின் மனத்தையும் அவரின் குடும்பத்தையும் ஊனமாக்க அவர்விரும்பவில்லை.அவளின் அப்பழுக்கற்ற அன்பு அவருக்குத் தேவை.அது பரிசுத்தமானது என்று அவருக்குத் தெரியும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *