கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 1, 2024
பார்வையிட்டோர்: 2,215 
 
 

(1956ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வியாசர் விருந்து என்ற பெயரில் சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரியால் கல்கி இதழில் எழுதப்பட்டது. பின்னர் பாரதி பதிப்பகத்தாரால் நூலாக வெளியிடப்பட்டு அதன்பின் மகாபாரதம் என்று வானதி பதிப்பகம் நூலாக வெளியிட்டது!

பாகம்-2 | பாகம்-3 | பாகம்-4

திருதராஷ்டிரன் கவலை 

பாண்டவர்கள் வனம் செல்லப் புறப்பட்டார்கள். நகர வீதிகளில் ஜனக் கூட்டத்தின் நெருக்கடி நடக்க இடமில்லாம் லிருந்தது. மாளிகைகளிலும் தேவாலயங்களின் கோபுரங்கள் மேலும் மரங்கள் மேலும் ஜனங்கள் ஏறி உட்கார்ந்து பார்த் தார்கள். ஸ்திரீகள் உப்பரிகைகளிலும் பலகணிகள் வழியாக வும் பார்த்துக் கொண்டிருந்தனர். குடையுடனும் வாத்தியத் துடனும் பவனி செல்ல வேண்டிய தருமபுத்திரன் மரவுரியும் தோலும் உடுத்துக் கால் தடையாக வனம் செல்லுகின்றதைப் பார்த்து நகரத்து ஜனங்கள் எல்லாரும் “ஆ! ஆ!” ”சீ! சீ!” என்று சொல்லிக் கண்ணீர் சொரிந்தனர். 

திருதராஷ்டிரன் விதுரனுக்குச் சொல்லி யனுப்பினான். “விதுரா! பாண்டு புத்திரர்களும் திரௌபதியும் எப்படிச் செல் கின்றனர்? கண்ணால் பார்த்துத் தெரிந்து கொள்ள இயலாதவ னுக்கு நீ சொல்ல வேண்டும்” என்று கேட்டான். 

“குந்தி புத்திரனான புதிஷ்டிரன் துணியினால் முகத்தை மூடிக்கொண்டு போகிறான். பீமன் தன் கைகளிரண்டையு பார்த்துக் கொண்டு போகிறான். அருச்சுனன் மணலை எடுத்துத் தூவிக்கொண்டு போகிறான். நகுல சகாதேவர்கள் உடலெல் லாம் புழுதி பூசிக்கொண்டு தருமபுத்திரன் பின் போகின்றனர் திரௌபதியும் விரிந்த கூந்தலினால் முகம்முழுதும் மூடியவளாகக் கண்ணீர் சொரிந்து கொண்டு தருமபுத்திரன் பின் செல்கிறாள். புரோகிதர் தௌம்மியர் யமனைப் பற்றிய ஸாமகீதங்களை ஸ்வரத் துடன் பாடிக்கொண்டு கூடச் செல்லுகிறார்” என்றான் விதுரன். 

இதைக் கேட்ட திருதராஷ்டிரனுக்கு முன்னைவிட அதிகமான பயமும் கவலையும் உண்டாயின. “நகரத்திலுள்ள ஜனங்கள் என்ன சொல்லுகிறார்கள்?” என்று மறுபடியும் கேட்டான். 

“மகாராஜாவே! எல்லா வருணத்தாரும் நம்மை இகழ்ந்து சொல்லும் சொற்களைச் சொல்கிறேன், கேளும் ! ‘நம்முடைய நாயகர்கள் ஊரைவிட்டுப் போகின்றனரே! கௌரவ வம்சத்துப் பெரியோர்களெல்லாம் அறிவடையாத பாலர்களைப் போல் நடந்து கொண்டார்களே! சீ! சீ! இதுவென்ன துராசை? பாண்டு புத்திரர்களைத் திருதராஷ்டிரன் காட்டுக்கு அனுப்பி னான்’ என்று நகரத்து ஜனங்கள் எல்லாரும் நம்மை ஏசுகிறார் கள். ஆகாயத்தில் மேகமில்லாமலே மின்னல்கள் உண்டாயின பூமியும் நடுங்கிற்று. இதைப் போன்ற வேறு கெட்ட உற்பாதங் களும் தோற்றின” என்றான். 

இவ்வாறு திருதராஷ்டிரனும் விதுரனும் பேசிக்கொண்டி ருந்த பொழுது நாரதர் திடீரென்று பிரசன்னமானார்.”இன்றைக் குப் பதினான்காவது வருஷத்தில் துரியோதனன் செய்த பிழை யினால் கௌரவர்கள் அழியப்போகின்றனர்” என்று திருதராஷ்டி ரனுக்குச் சொல்லி விட்டுத் தேவரிஷி மறைந்தார். 

துரியோதனனும் அவன் சகாக்களும் பயமடைந்து துரோண ரிடம் சென்றார்கள். 

“ஆசாரியரே! – ராஜ்யமெல்லாம். – உமது!நீரே. தஞ்சம். எங்களைக் கைவிடலாகாது!” என்று அவரைக் கெஞ்சினார்கள், 

இதைக் கேட்ட துரோணர். பாண்டவர்கள் தேவர்களின் அம்சம். அவர்களை யாரும் வெல்ல முடியாது. இது அறிவுடை யோரின் அபிப்பிராயம். இதை நான் அறிந்திருந்தாலும் என் னைச் சரணடைந்த உங்களை நான் விட்டுவிட முடியாது. உங்க ளுக்கு என்னால் கூடிய அளவு முழுமனத்தோடும் அன்போடும் உதவி செய்வேன். ஆயினும் ம் விதியானது மிக்க வலிமை யுடையது. பாண்டவர்கள் வனவாசம் முடிந்து கோபத் தோடு திரும்பி வருவார்-கள். துருபதன்மேல் எனக்கு உண்டான கோபத்திற்காக நான் அவனை ராஜ்யத்திலிருந்து தள்ளி அவமானப் படுத்தினேன். என்னைக்கொல்லுவதற்காகவே ஒரு புத்திரனை வேண்டி யாகம் செய்து துருபதன் திருஷ்டத்யும்னனைப் பெற்றிருக்கிறான். அவன் பாண்டவர்களுக்கு நெருங்கிய பந்தும் சிநேகிதனும் ஆய்விட்டான். என்னைக் கொல்லுவதற்காகவே அவனு க்கும் பாண்டவ ர் களு க் கு ம் சிநே கமும், சம்பந்தமும், விதிவசமாக ஏற்பட்டிருப்பதாக உலகத் தார் எல்லாரும் பேசி வருகிறார்கள் நீங்கள் செய்து வந்த காரி யங்களெல்லாம் அந்தப் பேச்சை உண்மையாக்குவதாகத்தான் இருக்கிறது. உங்களுடைய நாள் கிட்டி வருகிறது. கால தாம் தம் செய்யாமல் உங்களுடைய நன்மையைச் செய்துகொள்ளுங் கள். பெரிய யாகங்களைச் செய்யுங்கள். சுகங்களை அனுபவித்து விடுங்கள். தானங்களைக் கொடுங்கள். பதினான்காவது வருஷத்தில் ஆபத்து வரப்போகிறது. துரியோ தனா! தரும புத் திரனோடு சமாதானம் செய்து கொள்.  நான் சால்வதைச் சொன்னேன். பிறகு உன் இஷ்டம்” என்றார். 

துரோணருடைய உபதேசம் துரியோதனனுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. 


“பூபதியே! ஏன் துயரப்படுகிறீர்?” என்று ஒரு நாள்  திருதராஷ்டிரனைச் சஞ்சயன் கேட்டான். 

“பாண்டவர்களைப் பகை செய்து கொண்ட பிறகு துயரமின்மை  ஏது?” என்றான் கண்ணில்லாத அரசன். 

சஞ்சயன். “நீர் சொல்லுவது உண்மையே. கெட்டுப்போக வேண்டியவனுடைய மதி அழிந்து போகிறது. நல்லவை யெல் லாம் தீயவை போலும், தீயவை எல்லாம் நல்லவை போலும் அவனுக்குத் தோன்றும். காலமானது, தானே நேராக ஒரு தடியை எடுத்து மனிதன் தலையை உடைப்பதில்லை. காரியா காரியங் களை மாறாக அவனையே செய்யச் செய்து மனிதனைப் பள்ளத்தில் தள்ளுகிறது. உம்முடைய பிள்ளைகள் பாஞ்சாலியை அவமானப் படுத்தினார்கள். தங்கள் நாசத்தைத் தாங்களே தேடிக்கொண் டார்கள் என்றான் சஞ்சயன். 

அறிவாளியான விதுரன் தருமத்துக்கும் ராஜநீதிக்கும் த்த சொல்லைச் சொன்னான். நான் அதைக் கேட்கவில்லை. மூட மகனுடைய விருப்பத்தை அனுசரித்தேன், நாம் ஏமாந்தோம்” என்றான் திருதராஷ்டிரன். 


அடிக்கொருதரம் விதுரன் திருதராஷ்டிரனை வற்புறுத்து வான். ”உம்முடைய மகன் பெரும் பாவம் செய்தான், தருமபுத்திரன் வஞ்சிக்கப்பட்டான். உம்முடைய குமாரர்களைக்கெட்ட வழியிலிருந்து திருப்புவது உம்முடைய கடமை யல்லவா? உம் மால் கொடுக்கப்பட்ட ராஜ்யத்தை பாண்டு புத்திரர்கள் மறுபடியும் அடைந்து அனுபவிக்க நீர் ஏற்பாடு செய்ய வேண்டும். யுதிஷ்டிரனை வனத்திலிருந்து திரும்பி வரச்செய்து சமாதானம் செய்யும். துரியோதனன் உம்முடைய ஆலோசனையைக் கேட்கா விட்டால் அவனை அடக்க வேண்டும் என்று விதுரன் பல தடவை திருதராஷ்டிரனுக்குச் சொன்னான். 

முதலில் இவ்வாறு சொல்லும் போது ருதராஷ்டிரன் சும்மா கேட்டுக்கொண்டிருப்பான். விதுரனுடைய அறிவு மேலா னது என்று திருதராஷ்டிரனுக்கு அவனிட த்தில் பூரண மதிப்பு. 

ஆனால் வரவரப் பொறுமையை இழந்தான். 

ஒரு நாள், ‘விதுரனே! நீ எப்போதும் பாண்டவர்களைப் களைப் பற்றிச் சாதகமாகவும், என் மக்களைப்பற்றி விரோதமாக வுமே பேசுகிறாய். நீ எனக்குச் சத்துருவென்றே தோன்றுகிறது. எங்கள் நன்மையை நீ விரும்பவில்லை. துரியோதனன் என் தேகத் திலிருந்து உண்டானவன். அவனை நான் எவ்வாறு விட்டுவிட முடியும்? நியாயமில்லாமலு ம் இயற்கைக்கு விரோதமாகவும் யோசனை சொல்லுவதில் என்ன பயன்? இனி நான் உன்னை நம்ப முடியாது. நீ எனக்கு இனிமேல் வேண்டியதில்லை. உனக்கு இஷ்ட மானால் பாண்டவர்கள் இருக்குமிடம் நீயும் போகலாம் கோபமாகச் சொல்லிவிட் டு விதுரனுடைய மறுமொழிக்குக் கூடக் காத்திராமல் திருதராஷ்டிரன் அந்தப்புரம் போய்விட்டான். 

இவ்வாறு சொல்லப்பட்ட விதுரன் இனி இந்தக் குலம் நாசமே என்று தீர்மானித்துக்கொண்டு வேகமான குதிரைகள் பூட்டிய ரதத்தில் ஏறிப் பாண்டவர்கள் இருந்து வனத்தி குச் சென்றான். 


விதுரன் நகரத்தை விட்டுப்போனதும் திருதராஷ்டிரன் மறுபடி கவலை அடைந்தான். என்ன செய்தேன்! பாண்டவர் களுடைய பலத்தை இன்னும் அதிகரித்துவிடும்படியான வழி யைத் தேடினேனே! விதுரனைத் துரத்தியது பெரும் தவறு என்று நினைத்துச் சஞ்சயனைக் கூப்பிட்டு சஞ்சயனே நான் என் பிரிய சகோதரன் விதுரனைத் தகாத சொல் சொல்லிவிட்டேன். அவன் கோபங்கொண்டு வனம் சென்று விட்டான் நீ உடனே போய் விதுரனைக் கண்டு எப்படியாவது சமாதானம் சொல்லி அழைத்து வா!” என்றான். 

சஞ்சயன் விரைவாகச் சென்று வனத்தில் பாண்டவர்கள் இருந்த ஆசிரமத்தை அடைந்தான். பாண்டவர்கள் மான் தோல் உடுத்தி, ரிஷிகளுடன் இருந்ததைப் பார்த்தான் அவ்விடம் விது ன் ருப்பதையும் கண்டான். தான் செய்த குற்றத்திற்குத் திருதராஷ்டிரன் பச்சாதாபப்படுவதைத் தெரிவித்தான். 

”நீர் திரும்பாமற் போனால் திருதராஷ்டிரன் உயிர் நீப்பான். சீக்கிரம் பாண்டவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு அரசன் சபையைச் சேருவீராக” என்று வணக்கமாகச் சஞ்சயன் விதுரனிடம் சொன்னான். 

இந்தச் செய்தியைக் கேட்டதும் விதுரன், யுதிஷ்டிரனிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டு ஹஸ்தினாபுரம் திரும்பி அடைந்தான். 

திருதராஷ்டிரனும் விதுரனைக் கட்டித் தழுவிக் கொண்டு குற்றமற்றவனே! என்னால் அவசரத்தில் சொல்லப்பட்ட பேச்சை நீ பொறுத்துக்கொள்ள வேண்டும்” என்று அழு குரலில் சொன்னான். 


ஒரு நாள் மைத்ரேய ரிஷி திருதராஷ்டிரன் சபைக்கு வந் தார். அரசன் ரிஷியை வணங்கி வரவேற்றான். 

பகவானே! வீரர்களும் எனக்குப் பிரிய மக்களுமான பாண்டவர்களைக் குருஜாங்குலத்தில் கண்டீரே, அவர்கள் சுகமா? வனத்திலேயே இருக்க விரும்புகிறார்களா? நம்முடைய குலத் தில் சிநேகம் குறைவடையாமல் இருக்குமா? ஆசீர்வதிக்கவேண் டும்” என்று திருதராஷ்டிரன் முனிவரைக் கேட்டான். 

மைத்ரேயர், ‘காம்யக வனத்தில் தற்செயலாகத் புத்திரரைப் பார்த்தேன். வனத்திலுள்ள ரிஷிகளும் அவரைப் பார்க்க வந்திருந்தார்கள். அப்போது ஹஸ்தினாபுரத்தில் நடந்த நிகழ்ச்சிகளை யெல்லாம் சொல்லக் கேட்டேன். அதனால் தான் நான் இவ்விடம் வந்தேன். நீரும் பீஷ்மரும் உயிருடன் இருக்கும் பொழுது இவ்வாறு நடந்தது யோக்கியமன்று’ என்றார். 

பிறகு, மைத்ரேயர் சபையிலிருந்து துரியோதனனைப்பார்த்து ‘ராஜகுமாரனே! உனக்கு நன்மையைச் சொல்லுகிறேன். பாண் டவர்களை மோசம் செய்யப் பார்க்கவேண்டாம். அவர்கள் சூரர் கள். கிருஷ்ணனுக்கும் துருபதனுக்கும் பந்துக்கள், அவர்களை விரோதம் செய்து கொள்ள வேண்டாம். சமாதானம் செய்து கொள்’ என்றார். 

இவ்வாறு ரிஷிசொன்ன போது, பிடிவாதக்காரனும் மூடனுமான துரியோதனன் தன் துடையைக் கையால் தட் டிப் புன்னகை புரிந்து பூமியைக் காலால் கீறிக்கொண்டு ஒன்று ம் சொல்லாமல் வேறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றான். 

மைத்ரேயர் கோபங்கொண்டு துரியோதனனைப் பார்த்து இந்தக் கர்வத்தின் பயங்கரப் பலனை நிச்சயமாக அடைவாய். பீமனுடைய கதையால் உன் துடை பிளக்கப்பட்டு யுத்தத் தில் மாள்வாய்” என்றார். திருதராஷ்டிரன் துள்ளி எழுந்து ரிஷியின் காலில் விழுந்தான். “சபிக்காதீர்! பகவானே” என்றான். 

மைத்ரேயர், அரசனே! உன் புத்திரன் சமாதானம் அடை ந்தால் என் சாபத்தின் பயன் உண்டாகாது. இல்லா விடில் உண்டாகும்” என்று சொல்லி எழுந்து சபையினின்று வெளியேறினார். 

மகாபாரதம் புராணக் கதை. தற்காலத்திலும் கூடப் பெரிய பதவியில் இருப்பவர்களையும் சாதாரண உலக வாழ்க்கையில் இருப்பவர்களையும் க்ஷத்திர எண்ணங்கள் தூண்டும். அப்போது இந்த அத்தியாயத்தைப் படித்தால் அறிவு உண்டாகும். பெரும் பிழையினின்று தப்பலாம 

கிருஷ்ணன் பிரதிக்ஞை 

சிசுபாலனைக் கிருஷ்ணன் கொன்றுவிட்டான் என்ற செய்தி அவனுடைய நண்பன் சால்வனுக்கு எட்டியதும் அவன் மிகுந்த கோபங்கொண்டு பெரும் படையைக் கூட்டிக்கொண்டு துவார கையை முற்றுகையிட்டான். அப்போது கிருஷ்ணன் இன்னும் நகரத்திற்குத் திரும்பவில்லை. கிருஷ்ணன் இல்லாத சமயத்தில் துவாரகையை உக்கிரசேனன் காவல் காத்தான். பாரதத்தில் முற்றுகையைப் பற்றிப் படிக்கும்போது தற்கால யுத்த நடவடிக் கைகள் போலவே எல்லாம் காணப்படுகிறது. துவாரகை என்பது ஒரு தீவில் கட்டப்பட்ட கோட்டை, அதில் சகலவிதக் காப்பு களும் நன்றாக நிர்மாணிக்கப்பட்டிருந்தன. பல்லாயிரக்கணக் கான போர் வீரர்கள் இருப்பதற்குத் தகுந்த இடங்களும் யந்தி ரங்களும் சுரங்க வழிகளும் அமைக்கப்பட்டிருந்தன. பலவித ஆயுதங்கள், கவண் கற்களை எறிகின்ற பொறிகள், வெடி மருந்து உள்பட எல்லாம் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. புகழ்பெற்ற வீரர்களின் பெருங்கூட்டம் நகரத்திற்குள்ளிருந்தது. முற்றுகை இடப்பட்ட காலத்தில் நகரத்தில் யாரும் கள் குடிக்கக் கூடாது என்று உக்கிரசேனனுடைய கண்டிப்பான உத்தரவு முரசு அறைந்து பகிரங்கப்படுத்தப்பட்டது. நகரத்திலிருந்து நர்த்தனம் செய் கிறவர்களையும் மற்ற வேடிக்கை ஆட்டக்காரர்களையும் அப்புறப் படுத்திவிட்டனர். ஜலத்தைத் தாண்டிவரும் எல்லாப் பாலங் களும் உடைத்து விடப்பட்டன். கப்பல்கள் தடுக்கப்பட்டன, அகழிகளில் ஜலத்துக்குள் இரும்புச் சூலங்கள் நடப்பட்டன. மதில்கள் எல்லாம் பழுது பார்க்கப்பட்டன். வழிகளெல்லாம் இரும்பு முள்ளங் கம்பிகள் நடப்பட்டுத் தடுக்கப்பட்டன. 

இயற்கையாகவே பிரவேசிப்பதற்குக் சுடினமாக இருந்த நகரத்துக்குச் சால்வன் முற்றுகையிட்ட காலத்தில் ன்னும் கக் கடினமான பந்தோபஸ்துகள் செய்யப்பட்டன. நகரத்தி லிருந்து யாரும் முத்திரையிட்ட ராதாரிச் சீட்டின்றி வெளியே போகாமல் தடுக்கப்பட்டார்கள். அவ்வாறே நகரத்துக்குள் பிர வேசிப்பதற்கும் கடுமையான உத்தரவு. சேனைகளுக்கெல்லாம் சம் பளம் உயர்த்தப்பட்டது. கொடுக்க வேண்டிய ஊதியங்கள் எல்லாருக்கும் தாமதமின்றித் தாராளமாகத் தரப்பட்டது. சேனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஆட்கள் எல்லாரும் நன்றா கப் பரீக்ஷிக்கப்பட்டார்கள். 

கிருஷ்ணன் வந்து நகரத்தில் ஏற்பட்ட கஷ்டங்களைப் பார்த்து மகா கோபங்கொண்டு சால்வன் மேல் படை எடுத்துச் சென்று ஜெயித்தான். பிறகு ஹஸ்தினாபுரத்தில் நடந்த செய்திகளும் பாண்டவர்கள் காட்டுக்குத் துரத்தப்பட்டதும் தெரிந்தது. உடனே கிருஷ்ணன் பாண்டவர்கள் தங்கியிருந்த வனத்துக்குச் சென்றான். 


பாண்டவர்களிடம் மிக்க அன்பு வைத்திருந்த போ பாஜகுலத்த பர்களும், விருஷ்ணி குலத்தவர்களும், சேதி தேசத்து ராஜா திருஷ்டகேதுவும் கேகயர்களும் இன்னும் பலரும் கிருஷ்ணனுடன் கூட்டமாகப் பாண்டவர்கள் இருந்த வனத்துக்குச் சென்றார்கள். 

துரியோதனாதியர் செய்ததைக் கேட்ட இவர்கள் மகா கோபங்கொண்டு இவர்களுடைய :ரத்தத்தைப் பூமி குடிக்கப் போகின்றது’ என்றார்கள். 

விசாரிக்க வந்த அரசர்களின் பேச்சு முடிந்த பின் திரௌபதி ருஷ்ண பகவானிடம் வந்தாள். 

ஒற்றை வஸ்திரத்தைத் தரித்துத் தீண்டாத நிலையிலிருந்த சமயத்தில் நான் சபைக்கு இழுக்கப்பட்டேன். திருதராஷ்டிர புத்திரர்கள் என்னை அவமானப்படுத்திப் பரிகசித்தார்கள். தங்களுக்கு நான் தாசியாகிவிட்டே ன் என்றே எண்ணினார்கள். பீஷ்மரும் திருதராஷ்டிரரும் நான் யார் என்பதையும் அவர் களுக்கு ம மரு மகள் என்பதையும் மறந்துவிட்டார்கள். ஜனார்த்தனரே! என் கணவர்களும் என்னைக் காப்பாற்றவில்லை’ என்றாள். பிறகு பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அற்பர்களால் துன்படுத்தப்பட்டேன். பீமனுடைய தேக பலம் பயன்படாமல் போயிற்று. அருச்சுனனுடைய காண்டீபமும் பயன்படாமல் சும்மா கிட ந்தது. கேவலம் பலவீனர்களுங்கூட உலகத்தில் தங்கள் மனைவிகளை ரக்ஷிப்பார்கள். இவ்வளவு பாவம் செய்த துரியோதனன் எவ்வாறு உயிருடன் இருக்கலாம்? ராஜாதி ராஜனாக இருந்த பாண்டுவின் மருமகளாகிய நான், தலைமயிரைப் பிடித்து ழுக்கப்பட்டேன். ஐந்து வீரர்களுடைய மனைவியாகிய நான் அவமானப்படுத்தப் பட்டே ன். நான் எவ்வாறு உயிருடன் இருக்கமுடியும்? மதுசூதனா! எனக்குப் பதிகள் இல்லை. புத்திரர் களில்லை, பந்துக்களுமில்லை, சகோதரர்களுமில்லை. நீரும் இல்லா மற் போனீர்! என்று கோபாவேசமாய்ப் பெருமூச்சு விட்டுக் கொண்டு ரத்தக் கண்ணீர் கலந்த சொற்களைச் சொன்னாள். 

இவ்வாறு புலம்பிய திரௌபதியைக் கிருஷ்ணன் சமாதானம் செய்து, உன்னை யார் இவ்வாறு துன்பப்படுத்தினார்களோ அவர்கள் எல்லாரும் இரத்தத்தில் நனைந்து உயிரற்றுக் கிடப்பார் கள்; நீ துயரப்பட வேண்டாம். நான் உனக்குப் பிரதிக்ஞை செய்கிறேன். பாண்டவர்களுக்கு என்ன துணை செய்யவேண்டுமோ அதை நான் செய்வேன். நீ அரசர்க்கரசியாகப் பட்டம் பெறு வாய். ஆகாயம் விழுந்தாலும், இமயமலை வெடித்தாலும், பூமி உடைந்து போனாலும், கட ல் வற்றினாலும் என் வார்த்தை பொய்யாகாது. சத்தியம்” என்று கண்ணன் திரௌபதிக்குச் சபதம் செய்தான். 

இப்படிச் செய்யலாமா. அப்படிச் செய்யலாமா, என்று மேல் வாரியாகத் தத்துவங்களைக் கையாண்டு வாதம் செய்யும் சிலர் மகாபாரதத்தில் கண்ணன் செய்த செயல்களைப் பற்றி விமரிசனம் செய்வதுண்டு. கற்பனா சக்தியோடு இந்தப் பிரதிக் ஞையை நன்றாக ஆலோசித்தால் அவர்களுக்கு ஏற்படும் இத் தகைய சந்தேகங்கள் தீரும். 

இந்தப் பிரதிக்ஞையைக் கண்ணன் செய்ததும் திரௌபதி சமாதானம் அடைந்து அருச்சுனனைக் கடைக் கண்ணால் கண்ணீர்த் துளிகளின் வழியாகப் பார்த்தாள். 

“அழகிய கண்ணை யுடையவளே! கண்ணபிரான் என்ன சொன்னாரோ அது நடக்கும். மாறாது!” என்று அருச்சுனனும் சமிக்ஞை செய்தான் 

இப்படிக் கண்ணனும் பார்த்தனும் செய்த பிரதிக்ஞை எவ்வாறு நிறைவேறும் என்பதைக் காட்டி திருஷ்டத்யும்னன் தன் சகோதரியைத் தேற்றினான். நான் துரோணரை எதிர் துக் கொல் லு வேன். சிகண்டி பீஷ்மரைக் கொல்லுவான். பீமன் அ தத்துர ம வான துரியோதனைக் கொல்லுவான். அருச்சுனன் தேரோட்டி மகன் கர்ணனுக்கு யமனாவான்” என்று திருஷ்டத் யும்னன் சொன்னான். 

கிருஷ்ணன், “நான் துவாரகையில் இருக்கவில்லை. இருந் திருந்தால் கட்டாயம் இந்தச் சூதாட்ட மோசத்தை நடவாமல் செய்திருப்பேன். திருதராஷ்டிரனும் துரியோதனனும் என்னைச் சபைக்குச் அழைக்காமலிருந்தாலும் நான் போயிருப்பேன். பீஷ் மர், துரோணர், கிருபர் முதலிய பெரியோர்களுக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லி இந்த நாசகரமான சூதாட்டத்தை நிறுத்தியிருப்பேன். நான் சால்வராஜனை எதிர்க்க வேண்டியதாகி நாட்டை விட்டு வெளியே போயிருந்தேன். சிசுபாலனை நான் யாகத் தில் வதம் செய்தேன் என்கிற கோபத்தால், நான் துவாரகையில் இல்லாதகாலத்தில் என் நகரத்தைச் சால்வன் முற்றுகையிட்டான். பிறகு நான் துவாரகை சென்றதும் விஷயம் தெரிந்து அவனைத் தொடர்ந்து துரத்திச் செல்ல நேரிட்டது. அவனை வென்று வதம் செய்த பின்னரே இந்தச் சூதாட்ட நிகழ்ச்சியைப் பற்றிக் கேள் விப்பட்டு உங்களைப் பார்க்க இங்கே வந்தேன். அணை உடைந்த பின் ஜலத்தைத் தடுக்க முடியாததுபோல் உங்கள் துக்கத்தை இப்போது போக்க இயலாதவனாக இருக்கிறேன்” என்றான். 

பிறகு கிருஷ்ணன் விடை பெற்றுக் கொண்டு அருச்சுனன் மனைவி சுபத்திரையையும் அவர்கள் குழந்தை அபிமன்யுவையும் ழைத்துக் கொண்டு துவாரகை சென்றான். திருஷ்டத்யும்னன் திரௌபதியின் புத்திரர்களை அழைத்துக்கொண்டு பாஞ்சாலம் சென்றான். 

பாசுபதம் 

வனவாச ஆரம்பத்தில் பீமசேனனும் திரௌபதியும் சில சந்தர்ப்பங்களில் தருமபுத்திரனோடு வாதாடுவார்கள். கோபமே க்ஷத்திரியனுக்கு லக்ஷணம் என்றும்,க்ஷத்திரியனுக்குப் பொறுமை தகாது என்றும் அது அவமானத்தில் முடியும் என்றும் பெரியோர் வாக்குகளையும் நியாயங்களையும் பிரமாணமாகக் காட்டி, பீமசேனனும் பாஞ்சாலியும் வாதிப்பார்கள். தாம் செய்த பிரதிக் ஞையை காப்பாற்றியே தீரவேண்டும், அனைவருக்கும் பொறுமையே மேலான தருமம் என்று யுதிஷ்டிரன் உறுதியாகப் பதில் சொல்லு வான். வனவாசத்தை நிறைவேற்றாமலே உடனே துரியோதனனைத் தாக்கி அவனையும் அவன் துணவர்களையும் கொன்று ராஜ்யத்தை மீட்கவேண்டும் என்பது பீமனுடைய வாதம். 

வேத மந்திரங்கணப போருளி செயதுகொள்ளாமல் எழுத் தறிவு மட்டும் அடைந்தவன் திருப்பித் திருப்பி மந்திரங்களைச் சொல்லிக்கொண்டு திருப்தி யடைவதைப்போல் நீர் பேசுகிறீர். உம்முடைய மதி குழப்பமடைந்திருக்கிறது. க்ஷத்திரியனாகப் பிறந்த நீர் வேறு குலத்தின் தருமத்தை அனுசரிக்கப் பார்க்கிறீர். பிராமணத் தன்மை அடைந்துவிட்டீர். இது பயன்தராது. சாஸ்திரம் என்ன சொல்லுகிறது? க்ஷத்திரியனுக்குக் குரூரமும் கோபமும் லக்ஷணம். பொறுமை என்பது க்ஷத்திரியனுக்கு விதித்த குணமல்ல. கெட்ட எண்ணங்களைக் கொண்ட திருதராஷ்டிர புத்திரர்களை வீரர்களாகிய நாம் சும்மாவிடலாமா? வஞ்சகப் பகைவரை வெல்லாத க்ஷத்திரியனுடைய பிறப்பு பயனற்றதென் பது என் அபிப்பிராயம். வஞ்சகனைக் கொன்று அதனால் நரகம் அடைந்தாலும் அந்த நரகம் சுவர்க்கத்திற்கு ஒப்பானது. உம்முடைய பொறுமை நெருப்பைக் காட்டிலும் மிக வெப்பமான தாபத்தை உண்டாக்கி என்னையும் அருச்சுனனையும் இரவும் பகலும் தூக்கமில்லாமல் வாட்டுகிறது. நீசர்கள் நம்முடைய ராஜ்யத்தைக் கவர்ந்துகொண்டு அனுபவிக்கிறார்கள். செய்யவேண்டிய காரியத்தில் பிரவேசிக்காமல் மலைப்பாம்புபோல் செயலற்றுக் கிடக்கிறீர். பிரதிக்ஞையைச் செய்து முடிக்க வேண் டும் என்கிறீர். உலகமெல்லாம் அறிந்த அருச்சுனன் எவ்வாறு உலகத்தாரால் அறியப்படாமல் அஞ்ஞாத வாசம் செய்து முடிக்க இயலும்? இமய மலையை ஒரு பிடி புல்லினால் மறைக்க முடியுமா? சிங்கங்கள் போன்ற அருச்சுனனும் நகுல சகாதேவர்களும் எவ்வாறு மறைந்து சஞ்சரிப்பார்கள்? கீர்த்தியைப்பெற்ற இந்தத் திரௌபதி எவ்விதம் மறைந்து சஞ்சரிப்பாள்? இவ்வாறெல்லாம் முடியாத காரியத்தை நாம் செய்யப்பார்த்தாலும் திருதராஷ்டிர புத்திரன் ஒற்றர்களை உபயோகித்து நம்மை அறிந்து கொள்ளுவான். இது நிறைவேறாத யோசனை. மறுபடியும் பதின்மூன்று வருஷம் காட் டில் நாம் இருக்க வேண்டி நேரிடும். பிரதிக்ஞையை முடிப்பது ஆகாத காரியம். இப்போது பதின்மூன்று மாதம் நாம் காட்டில் இருந்தாயிற்று. சோமலதை இல்லாதிருந்தால் வேறு தழையை உபயோகித்து யாகம் முடிப்பார்கள். பதின்மூன்று வருஷத்திற் குப் பதில் பதின்மூன்று மாதங்களே போதும், இதற்கு சாஸ்திரம் உண்டு. வஞ்சத்தில் உண்டான பிரதிக்ஞையைத் தவறினதற்குப் பிராயச்சித்தம் உண்டு. பாரம் சுமக்கும் காளை மாட்டுக்கு ஒரு பிடி புல்லைக் கொடுத்தால் அந்தக் குற்றத்திற்குப் போதுமான பிராயச்சித்தம் ஆகும். சத்துருவை உடனே வதம் செய்வதென்று நிச்சயம் செய்யும். க்ஷத்திரியருக்கு வேறு மேலான தருமம் இல்லை.” 

இவ்வாறு பீமன் அடிக்கடி பலமாக வாதிப்பான். திரௌ பதியோ, தனக்குத் துரியோதனனும், கர்ணனும், துச்சாதனனும் செய்த அவமானத்தை எடுத்துச் சொல்லி யுதிஷ்டிரனும் தயங்கும் படியாகச் சாஸ்திர மேற்கோள்கள் எடுத்துக் காட்டுவாள். யுதிஷ்டிரன் பெரு மூச்சு விட்டு ஆலோசிப்பான். தரு மத்தை உபதேசித்துப் பயனில்லை என்று நீதியையும் பலாபலத் தைப் பற்றியும் எடுத்து உரைப்பான். 

பூரிசிரவசும், பீஷ்மரும், துரோணரும், கர்ணனும், அசுவத் தாமரும், பகைவனுக்குத் துணையாக இருக்கிறார்கள். துரியோதன னும் அவன் தம்பிகளும் யுத்தப் பயிற்சி பெற்றவர்கள். பல சிற் றரசர்களும் பெரிய ராஜாக்களும் இப்போது துரியோதனன் பட சத்திலிருக்கிறார்கள். பீஷ்மரும், துரோணரும், துரியோதனனை மதிக்கவில்லையாயினும் அவனை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். யுத்தத்தில் அவனுக்காக உயிரையும் விடக் காத்திருக்கிறார்கள். கர்ணன் சாமர்த்தியசாலி. எல்லா அஸ்திரங்களையும் அறிந்தவன். அசைக்க முடியாதவன். மகாரதன். அபார முயற்சி எடுக்கும் தன்மை கொண்டவன். யுத்தத்தில் வெற்றி நிச்சயமில்லை. அவ சரப்படுவதில் பயனில்லை’ என்று யுதிஷ்டிரன் சொல்லுவான். இவ்வாறு பேசிப் பாண்டவர்களின் பொறுமையை தருமபுத்திரன் காப்பாற்றி வந்தான். 

பிறகு வியாசருடைய உபதேசத்தின்பேரில் புது அஸ்திரங் களையும், தேவர்களின் வரங்களையும் பெறுவதற்காக அருச்சுனன் தவம் செய்ய இமயமலைக்குப் போவதென்று நிச்சயமாயிற்று அருச்சுனன் சகோதரர்களிடம் விடை பெற்றுக்கொண்டு பாஞ் சாலியிடம் சொல்லப் போனான். தனஞ்சய! உன்னுடைய காரி யம் மங்களகரமாக முடிவு பெறவேண்டும். உன்னைப் பெற்ற குந்தி தேவி நீ பிறந்தபோது உன்னைப்பற்றி என்னவெல்லாம் விரும்பி ளோ அவற்றையெல்லாம் நீ அடைவாயாக! எங்கள் எல்லோ ருடைய சுகதுக்கமும் வாழ்வும் மானமும் ஐசுவரியமும் உன்னைப் பற்றி நிற்கின்றன. அஸ்திரங்களுடன் திரும்பி வருவாயாக!’ என்று பாஞ்சாலி மங்கள வார்த்தைகள் சொல்லி அனுப்பினாள். 

அருச்சுனன் தவம் செய்யச் சென்றபோது திரௌபதியின் உள்ளம் தாயின் உள்ளமாகப் பேசிற்று. மனைவியாயிருந்தபோதி லும், குந்திக்குப் பதிலாக ஆசீர்வதிக்கும் மொழிகளைச் சொன் னாள். குந்தி விரும்பிய மங்களமெல்லாம் உனக்கு ஆகுக’ என்று ஆசீர்வதித்தாள். 


அஸ்திரங்களுக்காகத் தவம் செய்யப்போன அருச்சுனன், அடர்ந்த காடுகளைத் தாண்டி இந்திரகீல மலையை அடைந்தான் அவ்விடத்தில் ஒரு கிழப் பிராமணனைக் கண்டான். குழந்தாய் வில்லும், கவசமும், பாணமும், கத்தியும் தரித்துக்கொண்டிருக்கிறாய். நீ யார்? இங்கே அஸ்திரங்களால் செய்ய வேண்டியது ஒன்றுமில்லையே? கோபத்தையும் இன்பங்களையும் விட்ட தவகி களுடைய இருப்பிடத்தில் இந்த க்ஷத்திரிய வேஷம் என்னத்திற்கு?” என்று சிரித்துக்கொண்டே அந்தத் தவசி அருச்சுனனோடு அன்பாகச் சம்பாஷித்தான். பிறகு தன் உண்மை உருவத்தைக் காட்டி, தானே இந்திரன் என்றும் தன் மகனாகிய அருச்சுனனைக் கண்டு மகிழவே வந்ததாகவும் தெரிவித்தான். 

அருச்சுனன் இந்திரனை வணங்கி, “நான் வேண்டுவது அஸ்தி ரங்கள். எனக்கு அதைத் தருவாயாக” என்றான். 

இந்திரன், “தனஞ்சய! அஸ்திரங்களால் என்ன பிரயோ சனம்? இஷ்டமான் போகங்களைக் கேள். மேலான உலகங்களைக் கேள்’ என்றான். 

“தேவராஜனே! நான்- போகத்தையும், மேலுலகங்களையும் விரும்பவில்லை. பாஞ்சாலியையும் சகோதரர்களையும் காட்டில் விட்டுவிட்டு வந்திருக்கிறேன். நான் கேட்பது அஸ்திரங்களே! என்றான். 

முக்கண்ணனாகிய சிவபெருமானைத் தரிசித்துச் சித்தி பெற் றால் உனக்கு திவ்யாஸ்திரங்கள் கிடைக்கும். மகாதேவனைக் குறித்துத் தவம் செய்” என்று சொல்லி ஆயிரங் கண்ணன் மறைந் தான், அதன்மேல் அருச்சுனன் சிவபெருமானைத் தியானித்து இமயமலைச்சாரலில் நீண்டகாலம் கடுந்தவம் செய்தான். 


பிநாகமும் அம்புகளும் கையில் எடுத்துக்கொண்டு பரம் சிவனார் உமாதேவியுடன் வேட உருவத்தில் அருச்சுனன் இருந்த காட்டை அடைந்தார். 

அப்போது ஒரு காட்டுப்பன்றி அருச்சுனனைத் தாக்க வந்தது. அந்தப் பன்றியைப் பிநாகம் வளைத்த சங்கரனும், காண்டீபம் வளைத்த அருச்சுனனும் ஒரே சமயத்தில் அம்பு எய்து கொன்றார்கள். 

”நீ யார்? ஸ்திரீயுடன் இந்தக் காட்டில் ஏன் சஞ்சரிக்கின்றாய்? நான் குறிவைத்த பன்றியை நீ எவ்வாறு அடிக்கலாம்? என்று அருச்சுனன் வேடனாகிய சங்கரனை அதட்டிக் கேட்டான். ஓய் வீரனே! மிருகங்கள் நிறைந்த இந்த வனம் காட்டு வாசிகளாகிய எங்களுடையது. நீ சுகத்துக்குரியவனாகத் தோன்று கிறாய். ஏன் தனிமையாக இந்தக் காட்டில் சஞ்சரிக்கின்றாய்? என்று வேடன் அருச்சுனனை ஏளனமாகப் பேசி, தான் அடித்த பன்றி என்றும், அதை அருச்சுனன் ஒப்புக்கொள்ளாவிடில் தன் னுடன் சண்டை செய்து வெல்ல வேண்டும் என்றும் சொன்னான். 

அருச்சுனனுக்குப் பெரும் கோபம் வந்தது. சர்ப்பம் போன்ற பாணங்களை வேடன்மேல் வருஷித்தான். அந்த அம்புமாரிகள் பரமசிவனாகிய வேடன்மேல் விழுந்து விழுந்து பயனற்றுப் போனதை அருச்சுனன் கண்டான்; நூற்றுக்கணக்கான நாராசங் களை விட்டான். மழையை மலை ஏற்றுக் கொள்ளுவது போல் அவற்றைப் பிரசன்ன முகத்துடன் வேடன் ஏற்றுக்கொண்டான். பாணங்கள் தீர்ந்துபோன பிறகு, வில்லின் நுனியால் வேடனைக் குத்தி அடிக்க ஆரம்பித்தான். அதையும் வேடன் பொருட்படுத்த வில்லை. அனாயாசமாக அருச்சுனனிடமிருந்து பிடுங்கிக்கொண்டு வேடன் சிரித்தான், காண்டீபத்தை இழந்த அருச்சுனன் ஒரு நாளும் நடை பெறாத தோல்வி சாதாரண ஒரு காட்டுவாசியிடம் தனக்கு உண்டானதைக் கண்டு திகைத்தான். பிறகு பரபரப்பா கக் கத்தியை எடுத்து யுத்தம் செய்தான். சங்கரன் தலையில் பட்ட கத்தி உடைந்து துண்டு துண்டாயிற்று. பிறகு கற்களை எடுத்து எறிந்து சண்டை செய்தான். அதுவும் பயன்பெறவில்லை. அதன்மேல் முஷ்டி யுத்தம் ஆரம்பித்தான். அதிலும் அருச்சுனன் தோல்வி அடைந்தான். பிறகு ஒருவரையொருவர் தாக்கி மல் யுத்தம் செய்தார்கள். வேடன் அருச்சுனனை மார்போடு மார்பாக இறுகக் கட்டிக்கொண்டு அவனால் ஒன்றும் செய்ய இயலாதபடி செய்தான். 

ஒன்றும் செய்ய முடியாதவனாகித் திகைத்துப் போன அருச சுனன், பகவான் மகாதேவனைத் தியானித்தான். தியானித்த வுடனே அவனுக்கு அறிவு உதயமாயிற்று. வேடன் யார் என்பது தெரிந்தது. 

“நான் செய்த குற்றத்தைப் பொறுக்க வேண்டும்!” என்று பரமேசுவரனுடைய காலில் விழுந்து வேண்டிக்கொண்டான். 

“பொறுத்தேன்” என்று சொல்லிச் சிரித்துப் பரமசிவன் அருச்சுனனுக்குத் தான் பறித்துக்கொண்ட காண்டீபத்தையும் மற்ற ஆயுதங்களையும் தன் கையால் திருப்பிக் கொடுத்து, பரசு பதாஸ்திரத்தையும் வரங்களையும் தந்தான். 

மல் யுத்தத்தில் முக்கண்ணனால் தீண்டப்பட்டதின் பயனாக அருச்சுனனுடைய சரீரம், எல்லாவித தோஷங்களும் நீங்கி முன்னை விட நூறு மடங்கு தேஜஸ் நிறைந்து பிரகாசித்தது. “நீ சுவர்க்கம் போய் இந்திரனைப் பார் என்று அருச்சுனனுக்குச் சொல்லி விட்டு, அவன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே சூரியன் அஸ்த மிப்பதுபோல் தகதகவென்று பரமசிவன் மறைந்தான். 

“நேரில் நான் மகாதேவனைப் பார்த்தும் தீண்டியும் அனும வித்தேனா? இனி எனக்கு என்ன குறை?” என்று அருச்சுனன் மகிழ்ச்சி பரவசமாக நின்றான். அப்போது ந்திரனுடைய தேர்ப்பாகன் மாதலி தேருடன் வந்து நின்றான். அதில் ஏறி அருச் சுனன் இந்திரலோகம் சென்றான். 

துயரம் புதிதல்ல 

பாண்டவர்கள் வனவாசத்திலிருந்த பொழுது ஒரு சமயம் அவர்களைப் பார்க்கப் பலராமனும் கோவிந்தனும்* பரிவாரத் துடன் வந்து சேர்ந்தார்கள். 

பாண்டவர்களைப் பார்த்துப் பலராமன் மிக்கத் துயரப்பட்டுக் கிருஷ்ணனுக்குச் சொல்லலானான்: 

‘கிருஷ்ணா! தருமமும் அதருமமும் வாழ்க்கையில் பயன் தருவதில்லைபோல் தோன்றுகிறது. துரியோதனனைப் பார். பூமியை ஆள்கிறான்; மகாத்மாவான யுதிஷ்டிரன் நாட்டையும் சுகத்தையும் இழந்து காட்டிலிருப்பதையும் துரியோதனனும் அவ னுடைய துஷ்ட சகோதரர்களும் விருத்தியடைந்து சுகமாக இருப் பதையும் பார்த்துப் பிரஜைகளுக்குக் கடவுள் நம்பிக்கையே போய்விட்டது. உலகத்தில் தரும அதருமங்களின் பலனைப் பார்த் தால் சாஸ்திரங்களில் தருமத்தைச் சிலாகிப்பது வெறும் பேச்சா கத் தோன்றுகிறது. பூமியாசை கொண்ட திருதராஷ்டிரன் எமன் முன் நிற்கும்போது தன் நடத்தைக்கு என்ன சமாதானம் சொல் லப் போகிறான்? குற்றமற்ற பாண்டவர்களும் யாக வேதியில் பிறந்த பாஞ்சாலியும் வனவாசம் செய்வதைப் பார்த்து மலைகளும் பூமியுமே துயரப்படுகின்றன!” என்றான். 

பக்கத்திலிருந்த சாத்யகி, “பலராமா! புலம்புவதற்கு அல்ல இது சமயம்! யுதிஷ்டிரர் ஏதும் செய்யச் சொல்லாமலிருந்தாலும் என்ன செய்யவேண்டுமோ அதை நாம் காலம் வீணாக்காமல் செய்ய வேண்டும். நீயும் கிருஷ்ணனும் நம்மைச் சேர்ந்தவர்களும் உயி ருடன் உறவினர்களாக இருக்க, இந்தப் பாண்டவர்கள் ஏன் வன வாசம் செய்ய வேண்டும்? பந்துக்களாகிய நாம் பாண்டவர்களுக்கு நேர்ந்த கஷ்டத்தை நீக்குவதற்கு அவர்கள் ஏவாமலே முயற்சி செய்யவேண்டும். நம்முடைய குலத்தாரை ஒன்றுகூட்டித் துரி யோதனன் சேனையை யமலோகத்துக்கு அனுப்ப வேண்டும். இந்த வேலைக்கு நீயும் கிருஷ்ணனுமே போதும். கர்ணனுடைய அஸ்தி ரங்களை நொறுக்கி அவன் தலையை வெட்டித்தள்ள ஆசைப்படு கிறேன். துரியோதனாதியர வதம் செய்து பாண்டவர்கள் இழந்த ராஜ்யத்தை யுத்தத்தில் மீட்டு அபிமன்யுவிடம் ஒப்படைப்போம். பாண்டவர்கள் வேண்டுமானால் வனவாசப் பிரதிக்ஞையை நிறை வேற்றலாம். இதுவே நமக்குப் புகழைத் தரும்படியான காரியம்” என்றான். 

இதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த வாசு தவன் நீங்கள் சொல்லுவது சரியே! ஆனால் பாண்டவர்கள் தங்கள் கைகளால் ஜெயிக்கப்படாத பூமியை மற்றவர்கள் சம்பா தித்துத் தருவதை விரும்பமாட்டார்கள். வீர வம்சத்தில் பிறந்த பாஞ்சாலியும் அவ்வாறே எண்ணுவாள். யுதிஷ்டிரர் பூமிக்கு ஆசைப்பட்டோ அல்லது பிறரைக்கண்டு பயந்தோ தம்முடைய தருமத்தை ஒருபோதும் விடமாட்டார். பிரதிக்ஞை முடிந்ததும் பாஞ்சால ராஜனும், கேகயனும், சேதி ராஜனும், நாமும் ஒன்று சேர்ந்து பாண்டவர்களுக்குத் துணையாக யுத்தம் செய்து பகைவர் களை வதம் செய்வோம்” என்றான். 

கிருஷ்ணன் இவ்வாறு சொன்னதைக்கேட்டு, யுதிஷ்டிரன் மகிழ்ச்சி அடைந்தான். “மாதவன் சரியாகச் சொல்கிறான். சத்தி யமே காக்கத் தக்கது; ராஜ்யமன்று. கோவிந்தன் ஒருவனே என்னை உள்ளபடி அறிந்தவன்.யுத்தம் செய்ய வேண்டும் என்று கேசவன் நமக்குச் சொல்லும் காலத்தில் யுத்தம் செய்வோம். இப்போது விருஷ்ணி குல வீரர்கள் திரும்பிப்போகக் கடவர். தருமம் தவறாமல் இருங்கள். பிறகு ஒரு காலத்தில் கூடுவோம் என்று யுதிஷ்டிரன் அவர்களுக்குச் சமாதானம் சொல்லி அனுப்பினான். 


அஸ்திரங்கள் பெறுவதற்காகப் போன அருச்சுனன் வெகு காலம் திரும்பி வரவில்லை. பீமனுடைய துக்கமும் கோபமும் முன்னைவிட அதிகமாயிற்று. யுதிஷ்டிரனைப் பார்த்து அவன் சொல்லலானான். 

“மகராஜாவே! நம்முடைய உயிரெல்லாம் அருச்சுனனிடத் தில் இருப்பது உமக்குத் தெரியும். உம்முடைய உத்தரவின்பேரில் போனவன் என்ன ஆனானோ தெரியவில்லை. அவனுக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டு அவன் இறந்தால் நம் கதி என்ன? அருச்சுனன் இல்லாவிடில் பாஞ்சாலனும் சாத்தியகியும் கிருஷ்ணனுங்கூட நம்மைக் காப்பாற்ற முடியாது. அருச்சுனன் இறந்தானானால் அந்தத் துக்கத்தை என்னால் தாங்கமுடியாது. உம்முடைய விளையாட்டால் இந்தத் துன்பங்களை எல்லாம் அடைந்தோம். அற்பர்களாகிய நம்முடைய பகைவர்கள் பலமுள்ளவர்களானார் கள். வனவாசம் செய்வது க்ஷத்திரியனுடைய தருமம் அல்ல. அரசு புரிவதே க்ஷத்திரியன் கடமையாகும். ஏன் நமக்கு உரிய தருமத்தை விட்டுவிட்டு இவ்வாறு பிடிவாதம் செய்கிறீர். அருச்சுனனை வனத்திலிருந்து திருப்பி அழைத்து கோவிந் தனையும் வரவழைத்து உடனே திருதராஷ்டிரன் மக்கள் மேல் போர் புரிவோம். அந்தத் துராத்மா சகுனியையும், கர்ணனையும், துரியோதனனையும் வதம் செய்து நான் திருப்தி அடைவேன். பிறகு நீர் வேண்டுமானால் காட்டுக்குப் போய்த் தவம் செய்யலாம்: உடனே செய்ய வேண்டிய காரியத்தைச் செய்யாமல் தாமதம் செய்வது பெரும் குற்றமாகும். மோசம் செய்தவனை மோசத்தால் கொல்லுவது பாபமல்ல. ஒரு பகலும் இரவும் சேர்ந்து ஒரு வரு ஷத்துக்குச் சமானமாகிய சில விரதங்களைச் செய்து முடிக்கலாம் என்பது தர்மசாஸ்திரம். இன்றிலிருந்து பதின்மூன்று நாட்கள் விரதமிருந்து முடித்தோமானால் பிரதிக்ஞை முடிந்து போகும். எனக்கு விடை கொடும். தீயானது புதரை எரிக்க ஆசைப்படு வதுபோல் துரியோதனனைக் கொல்ல ஆசைப்படுகிறேன்.’ 

பீமன் இவ்வாறு சொன்னதைக்கேட்ட தருமபுத்திரர் தம்பி யைக் கட்டி அணைத்துக்கொண்டு, “அன்பிற்குரியவனே! பதின் மூன்று வருஷங்கள் முடிந்ததும் காண்டீபம் ஏந்திய வீரனான அருச்சுனனும் நீயும் யுத்தம் செய்து துரியோதனனைக் கொல்லு வீர்கள். சந்தேகமில்லை. சரியான காலம் வரும் வரையில் பொறுத்துக் கொள்வாய். பாவத்தில் மூழ்கிய துரியோதனனும் அவனைச் சேர்ந்தவர்களும் தப்பமாட்டார்கள். சந்தேகமில்லை என்று சமாதானப் படுத்தினார். 

இவ்வாறு சோகத்தால் பீடிக்கப்பட்டுச் சகோதரர்கள் வாதாடிக் கொண்டிருக்கும்போது பிருகதசுவ மகரிஷி பாண்ட வர்களுடைய ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார். அவருக்குச் செய்யவேண்டிய பூஜையைச் செய்து களைப்புத் தீர்த்துக் கொள் ளச் செய்தபின் யுதிஷ்டிரன் அவரருகில் உட்கார்ந்து சொன்னான்: 

“பகவானே! வஞ்சகர்கள் நம்மைச் சூதாட்டத்திற்கு அழைத்து மோசம் செய்து நம்முடைய தனத்தையும் ராஜ்யத்தை யும் பறித்துக் கொண்டார்கள். அதன் பயனாக நானும் ஒப்பற்ற வீரர்களான என்னுடைய சகோதரர்களும் பாஞ்சாலியும் வன வாசம் செய்கிறோம். தம்பி அருச்சுனன் அஸ்திரங்கள் பெறப் போனவன் வெகு காலமாகியும் திரும்பவில்லை. அவன் இல்லாமல் நாங்கள் உயிர் இழந்தவர்கள்போல் இருக்கிறோம். அருச்சுனன் அஸ்திரங்களைப் பெற்றுத் திரும்பி வருவானா? அவனை நாங்கள் எப்போது பார்ப்போம்? தீராத துக்கத்தில் மூழ்கிக் கிடக்கிறோம். என்னைப் போல துக்கம் அனுபவித்த மனிதன் இவ்வுலகில் வேறு ஒருவனும் இருந்ததில்லை” என்றான். 

மகரிஷி சொன்னார்: 

“துக்கத்தில் மனத்தைச் செலுத்தாதே! அஸ்திரங்களும் வரங் களும் பெற்றுக்கொண்டு அருச்சுனன் வந்து விடுவான். பகைவர் களையும் ஜெயிப்பீர்கள். உன்னைப்போல் துர்ப்பாக்கியன் உலகத் தில் இருந்ததில்லை என்கிறாய்! அது சரியல்ல. உன்னைக் காட்டிலும் மிக்க துயரத்துக்கு ஆளான நளன் சரித்திரம் உனக்குத் தெரிய வில்லைபோலிருக்கிறது. நிஷத தேசத்து அரசனைப் பற்றி நீ கேட்ட தில்லையா? பந்தய ஆட்டத்தில் இறங்கிப் புஷ்கரனால் வஞ்சிக்கப் பட்டு நாடும் செல்வமும் எல்லாம் இழந்து, காட்டுக்குத் துரத்தப் பட்டான். வனவாச காலத்தில் அவனுடன் சகோதரர்களாவது, பிராம்மணர்களாவது இருக்கவில்லை. கலி புருஷன் அவனைப் பிடித் துக் கொண்டதன் பயனாக நளன் தன் விவேகத்தையும் குணத்தை யும் இழந்து, புத்தி தடுமாறி, தன் கூடவந்த மனைவியையும் ஏமாற்றிக் காட்டில் அவளைத்தனியாக விட்டுவிட்டு ஓடிப்போனான். நீயோ தேவர்களுக்கு ஒப்பான வீர சகோதரர்களாலும் பிராமணர் களாலும் சூழப்பட்டு வனவாசம் செய்கிறாய். ஒப்பற்ற பாஞ் சாலியும் கூட இருக்கிறாள். உன்னுடைய மதியும் களங்கமற்று நல்ல நிலையிலிருக்கிறது. நீ துயரப்படலாகாது.நீ பாக்கியவான்” என்று கூறினார். மகரிஷி. 

பிறகு ரிஷி நளனுடைய சரித்திரத்தை யுதிஷ்டிரனுக்கு விஸ்தாரமாகச் சொன்னார். 

நளன் கதை பாரதத்தில் இருபத்தெட்டு அத்தியாயங்களாகும். அதன் முடிவில் ரிஷி சொல்லுகிறார்:- 

“பாண்டவனே! நளன் மிகவும் பயங்கரமான துக்கத்தை அடைந்து முடிவில் க்ஷேமத்தை அடைந்தான். நீ அவனைப்போல் கலியால் பீடிக்கப்படாமலும் தனியாக இல்லாமலும் சகோ தரர்களுடனும் திரௌபதியுடனும் இருந்து கொண்டு தருமத்தை சிந்தித்துக் கொண்டும் வேத வேதாங்கங்களை ஓதிய பிராமணர் களால் எப்போதும் சூழப்பட்டும் புண்ணிய கதைகளைக் கேட்டுக் கொண்டும் இருக்கிறாய். துயரப் படவேண்டாம். மனித வாழ்க்கையில் சோதனைகள் நேருவது புதிதல்ல.” 

இவ்வாறு பிருகதசுவமகரிஷி நளன் கதையைச் சொல்லி யுதிஷ்டிரனுக்குத் தேர்தல் வார்த்தைகள் கூறினார். 

அகஸ்தியர் 

இந்திரப்பிரஸ்தத்தில் யுதிஷ்டிரனைப் பூஜித்து வந்த பிரா மணர்களின் கூட்டம், வனவாசத்திலும் கூடவே இருந்து கொண்டு வந்தது. பரிவாரத்தைச் சமாளித்துக்கொண்டு காலம் கழிப்பது கஷ்டமாகவே இருந்தது. அருச்சுனனைத் தவம் செய்ய அனுப்பி விட்டபிறகு, ஒருநாள் லோமசர் என்கிற பிரம்மரிஷி பாண்டவர்களைக் காணவந்தார். இந்தப் பரிவாரத்தைக் குறைத்து கொண்டு தீர்த்த யாத்திரை செய்யுங்கள். லகு பரிவாரமானால் தான் இஷ்டப்படி பிரயாணம் செய்ய முடியும் என்று லோமச் முனிவர் சொன்ன யோசனையை ஒப்புக்கொண்டு யுதிஷ்டிரன் அனைவருக்கும் தெரியப்படுத்திவிட்டான். 

“ஆயாசம் தாங்கமாட்டாதவர்களும், நல்ல போஜனம் விரும் பிச் சமையற்காரனை அண்டி நிற்பவர்களும், ராஜ பக்தியை மட்டும் முன்னிட்டு என்னிடம் வந்திருப்பவர்களும் எல்லாரும் திருதராஷ் டிர மகாராஜாவைப் போய் அடையலாம். அவர் ஆதரிக்காவிட் டால் பாஞ்சால ராஜன் துருபதனிடம் போகலாம்’ என்று சமா தானப் படுத்தித் தன் பரிவாரத்தைச் சுருக்கிக் கொண்டான். 

பிறகு பாண்டவர்கள் புண்ணிய. க்ஷேத்திரங்களுக்கு யாத் திரை போனார்கள். அங்கங்கே அவர்கள் கண்ட இடங்களின் பூர்வ கதைகளைக் கேட்டுக்கொண்டே சென்றார்கள். வ்வாறு சொல் லப்பட்ட கதைகளில் அகஸ்தியர் கதை ஒன்று. 

அகஸ்தியர் ஒரு சமயத்தில் சில பித்ருக்கள் தலைகீழாகத் தொங்கிக்கொண்டு துன்ப நிலையில் இருப்பதைக் கண்டார். ”நீங் கள் யார்? ஏன் இந்தக் கடுமையான தவம் புரிகிறீர்கள்?” என் அவர் கேட்டதற்கு, அந்த ஜீவன்கள், “மகனே! நாங்கள் உன்னு டைய முன்னோர்களாவோம். நீ விவாகமில்லாமலிருப்பதால் உனக்குப் பின் எங்களுக்குப் பிண்டம் தருபவர்கள் இல்லாமல் போவார்கள். அதற்காக இந்தத் தவம் செய்கிறோம். நீ புத்திர சந்தானம் பெறுவதற்கு வழி தேடினாயானால் நாம் இந்த நிலையி லிருந்து தப்புவோம்” என்றார்கள். 

இதைக் கேட்ட அகஸ்தியர் விவாகம் செய்துகொள்ளத் தீர்மானித்தார். 

விதர்ப்ப தேசத்து அரசன். தனக்குக் குழந்தை உண்டாக வில்லையென்று துயரப்பட்டுக் கொண்டிருந்தான். அதற்காக அவன் அகஸ்தியரை வணங்கி முனிவருடைய சியைக் கேட்டான். 

“உனக்குக் குழந்தை உண்டாகும். ஒரு அழகிய மகளைப் பெறுவாய். அவளை எனக்கு மனைவியாகத் தருவாயாக” என்று அகஸ்தியர் அந்த அரசனுக்கு வரம் தந்தார். 

உலகத்திலுள்ள ஸ்திரீ லக்ஷணங்களை யெல்லாம் சேர்த்து மிக்க சௌந்தரிய ரூபத்தை மனத்தில் நிருமாணித்துக்கொண்டு அரசனுக்கு அகஸ்தியர் இந்த வரம் தந்தார். அரசனுடைய பா யையும் கருப்பம் தரித்துப் பெண் குழந்தையைப் பெற்றாள். குழந் தையின் பெயர் லோபாமுத்திரை. லோபாமுத்திரை அகஸ் யர் மனத்தில் கற்பனை செய்து கொண்ட லக்ஷணங்களுடன் நிகரரற்ற அழகு வாய்ந்தவளாக வளர்ந்து விவாகத்துக்குத் தகுந்த பருவம் அடைந்தாள், 

விதர்ப்பராஜனுடைய மகளின் ரூபலாவண்ணியம் க்ஷத்திரிய உலகத்தில் பிரசித்தியா யிருந்தாலும், அகஸ்தியருக்குப் பயந்து எந்த ராஜகுமாரனும் அவளை வரிக்க வரவில்லை. 

பிறகு ஒருநாள் அகஸ்திய முனிவர் விதர்ப்பதேசம் வந்து அரசனைக் கண்டு என்னுடைய பித்ருக்களுக்குத் திருப்தி செய்யப் புத்திரனை விரும்புகிறேன். வாக்குத் தந்தபடி உன் மகளை எனக்குத் தருவாயாக என்று கேட்டார். 

நூற்றுக் கணக்கான கன்னிகைகளால் சூழப்பட்டுத் தாதி மார்களின் பணிவிடையைப் பெற்று வளர்ந்த தன் அருமை மகளை வனவாசம் செய்யும் முனிவருக்குக் கொடுத்துவிட அரசனுக்கு மனம் வரவில்லை. ஆனால் முன் செய்த வாக்குத்தத்தத்தை நினை த்து ரிஷியின் கோபத்துக்குப் பயந்தான்; 

ராஜாவும் தாயாரும் துயரத்தில் முழுகி வருந்துவதை லோ பாமுத்திரை பார்த்தாள். ”ஏன் வருந்துகிறீர்கள்? என் நிமித்தம் நீங்கள் சாபம் அடையலாகாது. என்னை முனிவருக்கே கொடு த்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். துயரம் வேண்டாம். இதுவே என் பிரியமும்” என்றாள். 

லோபாமுத்திரையின் சொல்லைக்கேட்டு அரசன் சமாதானம் அடைந்தான். முறைப்படி அவளை அகஸ்தியருக்குக் கொடுத்து விவாகமும் முடிந்தது. 

முனிவருடன் போக ராஜகுமாரி புறப்பட்டாள். “இந்த உயர்ந்த ஆடைகளையும் ஆபரணங்களையும் கழற்றி விடு” என் றார் அகஸ்தியர். 

உடனே லோபாமுத்திரை தன் அழகிய ஆபரணங்களையும் வஸ்திரங்களையும் கழற்றி அவற்றைத் தன் தாதிகளுக்கும் கன்னி களுக்கும் கொடுத்துவிட்டு மரவுரியும் தோலும் கட்டிக்கொண்டு முனிவருடன் சந்தோஷமாக வனம் சென்றாள். 

கங்கா துவாரத்தில் லோபாமுத்திரை அகஸ்தியருடன் அநேக நாள் விரதங் காத்துப் பணிவிடை செய்து முனிவருடைய அன்பைப் பூரணமாகச் சம்பாதித்தாள். 

ஒரு நாள் பிரியம் மேலிட்டு முனிவர் மனைவியைக் கருப்பம் வகிக்க அழைத்தார். லோபாமுத்திரை ஸ்திரீகளுக்கு இயற்கை யான வெட்கம் மேலிட்டுத் தலை வணங்கிக் கைகூப்பி, ஸ்வாமி! நான் கடமைப் பட்டிருக்கிறேன். ஆயினும் என்னுடைய பிரீ தியை நீங்கள் செய்யவேண்டும்” என்றாள். 

அவளுடைய ரூபசௌந்தரியத்தினாலும் சீலத்தினாலும் முற்றிலும் மனம் கவரப்பட்ட முனிவர், “அப்படியே!” என்றார். 

“பிதாவினுடைய வீட்டில் இருந்த காலத்தில் நான் படுத்த படுக்கையும் அணிந்த வஸ்திராபரணங்களையும் போன்று இவ் விடத்திலும் உம்மால் நான் அடைந்து, நீங்களும் திவ்யாலங் காரங்களை அணிந்து சந்தோஷமாக என்னைச் சேரவேண்டு மென் பதே என் விருப்பம்” என்றாள். 

“நீ சொல்லியபடி செய்ய எனக்குச் செல்வம் ஏது ? சௌகரியமேது, நீயும் நானும் வனத்தில் வசிக்கும் தரித்திரர்கள் அன்றோ?” என்றார் அகஸ்தியர், 

“சுவாமி! நீர் தவப் பெருமையினால் எல்லாம் படைத்தவராவீர்!  ஒரு நிமிஷத்தில் உலகத்திலுள்ள செல்வம் அனைத்தும் நீர் சம்பாதிக்க முடியும்” என்றாள். 

“அவ்வாறு நான் சம்பாதித்தால் அது தவத்தின் பயனை அழி த்து விடும்! இது உனக்கு விருப்பமா?” என்றார். 

“அதை நான் விரும்பவில்லை. தவத்தைச் செலவழிக்கா மல் போதிய தனம் எங்கேயாவது சம்பாதித்துக்கொண்டு வர வேண்டும் என்றேன்” என்றாள். 

“பாக்யவதியே! அப்படியே செய்கிறேன்” என்று அகஸ் தியர் மனைவிக்குச் சொல்லிவிட்டு, சாதாரணப் பிராமணனைப் போல் அரசர்களை யாசிக்கப் புறப்பட்டார். 

மிக்க செல்வம் படைத்தவன் என்று பிரசித்தி பெற்ற ஒரு அரசனிடம் அகஸ்தியர் சென்றார். 

“தனம் வேண்டி வந்தேன். பிறருக்குக் குறைவாவது துன் பமாவது ஏற்படாமல் எனக்குத் தானம் தரவேண்டும்” என்றார். 

அந்த அரசன் தன் ஆட்சியின் வரவையும் செலவையும் ஒன் றும் மறைக்காமல் முனிவரிடம் கணக்கை ஒப்புவித்தான்.”பார்த்து எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றான். ராஜ்யத்தின் வரசு செலவுக் கணக்கைப் பார்த்ததில் மிச்சம் ஒன்றும் இல்லை. அரசாங்கங்களில் வரவுக்குச் சரியாகவே செலவு எப்போதும் ஏற்பட்டு விடுகிறது. முன்னாட்களிலும் இப்போதைப் போலவே தான். 

இதைக்கண்டு, “இவ்விடம் நான் தானம் பெற்றால் பிரஜை களுக்குத் துன்பமாகும். வேறே எங்கேயாவது பார்க்கிறேன்’ என்று அகஸ்தியர் புறப்பட்டார். அந்த அரசன், நானும் கூட வருகிறேன் என்று அவனும் முனிவருடன் கூடச் சேர்ந்து வரும் மற்றொரு ராஜாவிடம் போய்க் கேட்டார்கள். அவ்விட திலும் அதே நிலைமையாக இருந்தது. 

நியாயமான செலவுக்கு எவ்வளவு வேண்டுமோ அந்த அள வுக்குத்தான் அரசன் பிரஜைகளிடமிருந்து வரி வசூல் செய்ய வேண்டும் என்கிற தத்துவத்தை வியாசர் இதன் மூலம் எடுத் துக் காட்டுகிறார். நியாயமான வரிகள் பெற்றுக் கடமைகளைப் பூரணமாகச் செய்து தரும சாஸ்திரபடி நடந்து வரும் எந்த அர சனிடத்திலாவது தானம் பெற்றால் அவனுடைய பிரஜைகளுக்கு அந்த அளவில் நஷ்டமும் துன்பமும் உண்டாகும் என்று அகஸ் தியர் உணர்ந்தார். அதன்மேல் எல்லோருமாகச் சேர்ந்து இல் வலன் என்கிற ஒரு கொடிய அசுரனிடம் போய் அவனைக் கேட் பது உசிதம் என்று தீர்மானித்தார்கள். 

இல்வலன் என்ற அசுரனும் அவன் தம்பி வாதாபியும் பிரா மணர்கள்மேல் தீராத துவேஷம் கொண்டவர்கள். பிராமணர் களை விருந்துக்கு ல்வலன் அழைப்பான். மாயையால் தம்பி வாதாபியை ஆட்டின் உருவம் எடுக்கச் செய்து, ஆட்டை வெட்டிப் பக்குவம் செய்து, வந்த பிராமணர்களை உண்ணச் சொல்லுவான். அந்தக் காலத்தில் பிராமணர்கள் மாமிசம் உண்பார்கள். 

விருந்து முடிந்தவுடன், இல்வலன் “வாதாபி வா!” என்று கூவுவான். தான் கொன்றவங்களை யமலோகத்திலிருந்து திரும்பி வரவழைக்கும் வரத்தை இல்வலன் பெற்றிருந்தான். வெட் டப்பட்டு இறந்த வாதாபி மறுபடி உயிர் கொண்டு பிராமணர் களுடைய வயிற்றைப் பிளந்து விட்டு அசுரச் சிரிப்புச் சிரித்துக் கொண்டு வெளியே வருவான். இவ்வாறு பல பிராமணர்கள் வாதாபியின் செயலால் வயிறு கிழிக்கப்பட்டு மாண்டார்கள். தருமத்தையே ஏமாற்றி இவ்வாறு பிராமணர்களைக் கொன்று தங்கள் எண்ணத்தை நிறைவேற்றி வருவதாகப் பாபிஷ்டர் களாகிய அந்த அசுரர்களுடைய கருத்து. 

அகஸ்தியர் வந்ததாகத் தெரிந்ததும் நல்ல பிராமணர் சிக் கினார். என்று இல்வலன் மிக்க மகிழ்சி யடைந்து அவரை வரவே ற்று வழக்கப்படி விருந்து வைத்தான். வாதாபியை ஆடாகச் சமைத்துப் பரிமாறி, “இந்த முனிவர் இறந்தார்” என்று மனதில் எண்ணிக்கொண்டு அகஸ்தியரை உண்ணச் செய்தான். 

விருந்து முடிந்த பின் இல்வலன். வாதாபி ! சீக்கிரம் வெளி யே வா! தாமதித்தாயா ல் முனிவர் உன்னை மீறுவார்!” என்று சொன்னான். 

முனிவர். வாதாபியே! உலகம் சாந்தி அடைக! நீ ஜீர ணம் செய்யப்பட்டாய்’ என்று சொல்லித் தம்வயிற்றைத் தடவிக் கொடுத்தார். இல்வலன். வாதாபி! வா! வாதாபி! வா!” என்று பன்முறை பயந்து கத்தினான். 

பயனில்லை! வாதாபி ஜீர்ணமாய் விட்டான். ஏன் வீணாக அழைக்கிறாய்?” என்றார் முனிவர். 

அசுரன் கை கூப்பி அகஸ்தியரை வணங்கி அவர் கோரிய தனங்களைக் கொடுத்து அனுப்பினான். லோபாமுத்திரையை அகஸ்தியர் திருப்தி செய்தார். 

”உனக்குப்பத்து நல்ல மக்கள் வேண்டுமா? அல்லது பத்துப் பேரை வெல்லக்கூடிய ஒரு மகன் வேண்டுமா?” என்று அகஸ் தியர் மனைவியைக் கேட்டதாகவும், பகவானே, புகழுக்குரிய அறிவைப்படைத்தவனும் தருமத்தில் நிலை கொண்டவனுமான ஒரு மகனையே விரும்புகிறேன் என்று லோபாமுத்திரை சொல்ல அவ்வாறே பெற்றதாகவும் கதை. 


ஒரு சமயம் விந்திய மலையானது மேரு மலையின்மேல் பொ றாமை கொண்டு, தானும் மேருவைப்போல் வளர்ந்து சூரிய சந் திராதிகளைத் தடுத்துவிடப் பார்த்ததாம். இந்தச் சங்கடத்தைத ர்த்துக்கொள்ள முடியாமல் தேவர்கள் அகஸ்தியரை வேண்டி ர்கள். அவர் விந்திய மலையண்டை சென்று, பருவதோத்த மனே! எனக்கு வழி விடக் கடவாய்! ஒரு காரியத்துக்காக நான் தெற்கே செல்ல வேண்டியதாக இருக்கிறது. நான் திரும்பிய பின் நீ இஷ்டப்படி வளரலாம். நான் வரும் வரையில் பொறுத்தி ருப்பாயாக!’ என்று சொன்னார். 

அகஸ்தியரிடம் விந்திய பருவதம் வைத்திருந்த கௌரவத் தினால், “அப்படியே!” என்று மலை ஒப்புக்கொண்டு நமஸ்கரித் ததாகவும், அகஸ்தியர் தெற்கே போனவர் திரும்பி வரவில்லை என்றும் இந்த ஒப்பந்தபடி விந்திய மலையும் வளராமல் இதுவரை படுத்துக்கிடக்கிறது என்றும், அதிலிருந்து அகஸ்தியர் தென்னாட்டிலேயே இருந்துவிட்டார் என்றும் கூறுகிறது பாரதக்கதை. 

ரிஷியசிருங்கர் 

விஷயானுபவங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாதபடி மக் களை வளர்த்தால் பிரம்மச்சரியம் சுலபமாக ஏற்படும் என்பது சினர் எண்ணம். இது பயனற்றது. அந்த முறையில் காக்கப்பட்ட கோட்டை வெகு எளிதாக எதிரியின் வசமாகும். இதை விளக்கு வதற்காகப் பாரதத்தில் ஒரு கதை உண்டு. இந்தக் கதை சுருக்க மாக இராமயணத்திலுமிருக்கிறது. பாரதத்தில் பௌராணிகர் அதை ரொம்பச் சித்தரித்து நீண்ட கதையாகச் சொல்லுகிறார்; 

பிரம்மாவுக்குச் சமமான தேஜஸ் படைத்த விபாண்டகர் தம்முடைய புத்திரன் ரிஷியசிருங்கருடன் வனத்தில் வசித்து வந்தார். ரிஷியசிருங்கர் தன் பிதாவைத்தவிர வேறு மனிதர் களைப் பார்த்ததே கிடையாது. பெண்களைக் கண்ணால் கண்டதே கிடையாது. இவ்வாறு சுத்த பிரம்மசாரியாக வளர்ந்தார் ரிஷிய சிருங்கர். 

அங்க தேசமானது ஒரு காலத்தில் பெரிய பஞ்சத்தால் பீடிக் கப்பட்டது. மழையின்மையால் பயிர்கள் அழிந்து ஜனங்கள் மாண்டார்கள். ஊமைப் பிராணிகளும் மிகவும் துன்பப்பட்டன. தேசத்தைத் துன்புறுத்தும் கொடிய பஞ்சத்தை எப்படிப் போக் குவது, பிரஜைகளைக் காப்பாற்ற என்ன செய்வது என்று ராஜா ரோமபாதன் பிராமணர்களைக் கேட்க, அவர்கள், “ராஜேந்தி ரனே! பெண்களை அறியாதவரும் சம்பூர்ண பிரம்மச்சாரியு மான ரிஷியசிருங்கர் என்கிற ரிஷி குமாரர் ஒருவர் இருக்கிறார். அவரை நம் ராஜதானிக்கு வரவழைக்க வேண்டும். மிக்க தவ முள்ள அவர் நம்நாட்டில் கால்வைத்ததும் மழை பொழியும்” என்றார்கள். 

விபாண்டகரிஷியின் ஆசிரமத்திலிருந்து ரிஷிய சிருங்கரை எப்படித் தருவிப்பது என்று அரசன் மந்திரிகளுடன் ஆலோசனை செய்தான். அவர்கள் சொல்லிய உபாயத்தின்படி ராஜதானியி லுள்ள வேசிகள் சாமர்த்தியசாலிகளான சிலரை அழைத்து, ‘நீங்கள் வனம் சென்று ரிஷிகுமாரனை எப்படியாவது உபாயம் செய்து என்னுடைய தேசத்திற்குக் கொண்டுவந்து விடவேண்டும் என்று நியமித்தான். 

அந்த ஸ்திரீகள் முதலில் தயங்கினார்கள். அரசன் சொல்லை மீறுவதற்குப் பயந்தார்கள். ஆனால் ரிஷியின் சாபத்துக்கும் பயந் தார்கள். முடிவில் தெய்வமே கதி என்று அரசனிடம் பொருள் களைப் பெற்றுக் கொண்டு ரிஷி ஆசிரமத்துககுச் சென்றார்கள். 

இவ்வாறு புறப்பட்ட வேசிகளின் கூட்டத்துக்குத் தலைவி யானவள் ஒரு பெரிய ஓடத்தைத் தோட்டம்போல் அமைத் தாள். அதில் போலி மரங்களும் புதர்களும் கொடிகளும் வைத்து அழகிய தோட்டத்தின் மத்தியில் ஆசிரமம் இருப்பது போல் செய்தாள். அந்த ஓடத்தை விபாண்டக ஆசிரமத் தண்டை நதியில் கட்டிவிட்டு வேசிகள் ரிஷியின் ஆசிரமத் தண்டை நெஞ்சம் பதைக்கச் சென்றார்கள். 

முனிவர் வெளியில் போயிருந்தார். இதுதான் சமயம் என்று அவர்களில் ஒரு அழகிய யுவதி ஆசிரமத்திலிருந்த ரிஷி குமார ரண்டை சென்றாள். 

‘முனிவரே! க்ஷேமமா? கிழங்குகளும் கனிகளும் குறைளின் றிக் கிடைக்கின்றனவா? வனத்தில் ரிஷிகளுடைய தவம் சரியாக நடைபெறுகிறதா? உம்முடைய பிதாவின் தேஜஸ் குறைவின்றி வளர்கிறதா? வேத அத்தியயனம் சரியாக நடைபெறுகின்றதா?” என்று ரிஷிகளும் சீடர்களும் விசாரிக்கும் முறையில் கேட்டாள் அவள். 

இதைப் போன்ற அழகிய மானிட உருவத்தையும் குரலை யும் அதற்கு முன் ரிஷி குமாரர் பார்த்ததில்லை. அந்த வடிவத் தைக் கண்டதும் ரிஷியசிருங்கருடைய உள்ளத்தில் மறக்க முடி யாத இயற்கை வேகம் வேலை செய்ய ஆரம்பித்தது. வேசியா கிய யுவதியைத் தன்னைப் போன்ற ஒரு ரிஷிகுமாரன் என்று எண் ணினார். 

உள்ளத்தில் அடக்க முடியாத ஒரு புது மகிழ்ச்சி பொங் குவதை அனுபவித்தார். 

‘நீர் ஜோதியைப்போலப் பிரகாசிக்கிறீர்.நீர் யார்? உம்மை நமஸ்கரிக்கிறேன். உம்முடைய ஆசிரமம் எங்கே இருக்கிறது? நீர் எந்த விரதத்தை அனுசரித்து வருகிறீர்?” என்று ஆண் பெண் வித்தியாசம் அறியாத ரிஷி குமாரர் அவளைக் கேட்டார். அவளுக்கு அர்க்கியமும் பாத்தியமும் அதிதிகளுக்குச் செய்யும் உப சாரமும் செய்தார். 

“இந்த இடத்துக்கு மூன்று யோசனை தூரத்தில் என்னு டைய ஆசிரமம் இருக்கிறது. உங்களுக்கு நான் பழங்கள் கொண்டு வந்திருக்கிறேன்: உங்களால் நான் நமஸ்காரம் பெறும் தகுதி படைக்கவில்லை. உங்களை நான் எங்கள் சம்பிரதாயப்படி நமஸ் கரிக்க வேண்டும்” என்றாள். 

நகரத்திலிருந்து கொண்டுவந்த மோதகங்களையும் பட்சணங் களையும் ரிஷி குமாரனுடைய வாயில் போட்டு அவரை உண்ணச் செய்து வாசனை பொருந்திய மாலைகளைச் சூட்டிப் பானங்களைக் குடிக்கச் செய்து, எங்களுடைய சம்பிரதாயப்படி நமஸ்கரிக் கும் முறை இப்படி” என்று சொல்லி அவரைக் கட்டித் தழுவி விளையாடினாள். 

கொஞ்ச நேரம் கழிந்தபின் விபாண்டகர் வரும் சமயமாயிற்று என்று பயந்து வேசியானவள், ”நான் அக்கினி ஹோத்திரம் செய்ய வேண்டிய காலம் வந்து விட்டது. நாழி ஆயிற்று’ என்று காரணம் சொல்லி மெதுவாக ஆசிரமத்தை விட்டு விலகிப் போய் விட்டாள். 


விபாண்டகர் வந்து ஆசிரமத்தில் சிதறிக்கிடக்கும் பண்டங் களைப் பார்த்துத் திடுக்கிட்டார். ஆசிரமம் சுத்தம் செய்யப்பட வில்லை. செடிகளும் கொடிகளும் ஒடிந்து கிடந்தன. ரிஷிகுமார ருடைய முகம் வழக்கம்போலில்லை. மன்மத வேகத்தினால் மதி யும் களையும் இழந்தவராக இருந்தார். 

“பிரிய குமாரனே! ஏன் சமித்துகள் கொண்டு வந்து வைக்க வில்லை? நல்ல செடிகளை யெல்லாம் யார் ஒடித்துப் போட்டிருக் கிறார்கள்? ஹோமம் செய்வதற்கு வேண்டிய பால் கறந்தா யிற்றா? இவ்விடம் யாராவது உனக்குப் பணிவிடை செய்ய மனி தர்கள் வந்தார்களா? இந்த விசித்திரமான பூமாலை யார் கொடுத்தார்கள்? ஏன் கவலையுற்றிருக்கிறாய்?” என்று விபாண்டகர் கேட்டார். 

“அற்புத வடிவான பிரம்மசாரி ஒருவர் வந்திருந்தார். அவ டைய  ே தேஜஸையும் அழகையும் குரல் இனிமையையும் என்னால் சொல்லி விளக்க முடியாது. அவருடைய வாக்கும் கண் ம் என்னுடைய அந்தராத்மாவில் விளக்கமுடியாத வண்ணம் மகிழ்ச்சியும் சிநேகமும் உண்டாக்கிற்று. அவர் என்னைக் சுட்டித் தழுவிய காலத்தில் எனக்கு உண்டான சந்தோஷம் இந்தப் பழங் கள் உண்டபோதும் உண்டாகவில்லை’ என்று ஏதும் அறியாத அப்பாவியான ரிஷியசிருங்கர், பிரம்மசாரி என்று தான் நினைத்த வேசியின் உடையையும் உருவத்தின் அழகையும் செய்கைகளை யும் தகப்பனாரிடம் சொன்னார். 

“என் தேகம் எரிவது போலிருக்கிறது. அந்தப் பிரம்மசாரி யைத் தொடர்ந்து போக வேண்டும்போல் எனக்கு இருக்கிறது. அவனை எப்படியாவது இங்கே தருவிப்பீராக. அவனுடைய விர தத்தையும் தேஜசையும் என்னவென்று சொல்லுவேன்! அவ னைக் காணாமல் என் உள்ளம் துடிக்கிறது” என்று ரிஷியசிருங்கர் கதறினார். 

விபாண்டகருக்கு விஷயம் தெரிந்துவிட்டது. ‘மகனே! இது யாரோ ராக்ஷசன் செய்த மாயை. அரக்கர் எப்போதும் தவத் துக்கு இடையூறு செய்வார்கள். பலவித உபாயங்களையும் மோசங்களையும் செய்வார்கள். அவர்களைப் பக்கத்தில் வர இடம் கொடுக்கக் கூடாது” என்று சொல்லி, மோசம் செய்தவர்களைத் தேடிப் பிடிக்க மூன்று நாள் காட்டில் திரிந்து யாரும் சிக்காமல் திரும்பினார். 

பிறகு விபாண்டகர் கிழங்கும் பழங்களும் கொண்டு வர மறுபடியும் ஒரு நாள் வெளியே போயிருந்த காலத்தில். வேசி யானவள் ரிஷியசிருங்கர் இருந்த இடத்துக்கு மெதுவாக வந் தாள். தூரத்தில் அவள் வருவதைக் கண்டவுடனே ரிஷியசிருங் கர் திடீர் என்று கரை உடை ந்த ஏரியினின்று தண்ணீர் ஓடுவதைப் போல் யுவதியண்டை குதித்து ஓடினார். 

“ஒளி வீசும் பிரம்மசாரியே! என் பிதா வருமுன் உம் முடைய ஆசிரமத்துக்கு நாம் இருவரும் போவோம்” என்று அவள் அழைக்கா மலே ரிஷியசிருங்கர் அவளுடன் வேகமாகச் சென்றார். 

ஆசிரமமாகத் தோற்றம் கொடுக்கப்பட்டு நதியின் ஓரத்தில் கட்டப்பட்டிருந்த ஓடத்தில் ஏறினார்கள். ரிஷி குமாரர் ஏறின தும் வேசிகள் ஓடத்தை அவிழ்த்துவிட்டு ஓட்டிச் சென்றார்கள்.! வழியில் பல வினோதங்களைக் காட்டி ரிஷி குமாரரை வஞ்சித்துக் கொண்டே போய் அவரை அரசனிடம் ஒப்புவித்து விட்டார்கள் 

ரோமபாதன் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான். ரிஷி குமார் ரைத் தன் அந்தப்புரத்தில் சுகமாக அமைத்துவிட்டு அவருக்கு எல்லாப் பணிவிடையும் செய்ய உத்தரவிட்டான். அப்போது மழை பொழிய ஆரம்பித்துவிட்டது. ஆறுகளும் ஏரிகளும் நிறைந்து பிரஜைகளு ம் களிப்புற்றார்கள். ரோமபாதன் தன் மகள் சாந்தாவை ரிஷிகுமாரருக்குக் கொடுத்து விவாகமும் செய்து முடித்தான் 

எல்லாம் நினைத்தவாறு முடிந்தாலும், அரசனுக்குப் பயம். பாண்டகர் தன் மகனைக் காணாமல் தேடிக்கொண்டு வருவார். சாபம் கொடுத்துவிடுவார் என்கிற பயம். இதற்காக மந்திரிகளு டன் ஆலோசனை செய்து வனத்திலிருந்து நகரத்துக்கு வரும் வழி யில் ஏராளமான காளைமாடுகளையும், பசுக்களையும், இடையர்களை யும் அமைத்து, முனிசிரேஷ்டர் விபாண்டகர் வருவார். அவரை நன்றாக உபசரியுங்கள். இந்தப் பசுக்களும் காளைகளும் வயல் களும் உம்முடைய புத்திரனுடையது. நாங்கள் உமக்கு அடிமை கள், உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?’ என்று அவர் கோபம் தணியுமாறு பேசுங்கள்” என்று எச்சரிக்கை செய்து ஏற்படுத்தி வைத்தான். 

எங்கு தேடியும் மகனைக் காணாமல் உக்கிரமான கோபத்தை உந்த விபாண்டகர், இது அங்கத ராஜன் வேலையாகத்தான் இருக்கும் என்று சந்தேகங் கொண்டு அரசனை எரிப்பதற்குப் போவதுபோல் ஆறுகளையும் கிராமங்களையும் தாண்டி அரச னுடைய நகரத்தை நோக்கிச் சென்றார். 

அரசன் கட்டளைப்படி, வழியில் இடையர்கள் முனிவரை உப சரித்தார்கள். அதன்பயனாக அவர் பெரும்பாலும் கோபம் தணிந்து ராஜதானியை அடைந்தார். 

சுவாக்கத்தில் தேவேந்திரன் இருப்பதைப்போல் அரசன் மாளிகையில் தம்முடைய புத்திரன் இருப்பதைக் கண்டார். மின் னலைப் போன்ற வடிவத்தோடு ஜொலிக்கும் ராஜகுமாரி பாணிக் கிரகணம் செய்யப்பட்ட மனைவியாகத் தன் மகனுடன் அமர்ந் திருப்பதையும் கண்டார்! 

விபாண்டகர் அரசனை அனுக்கிரகம் செய்தார். புத்திரனைப் பார்த்து, “இந்த அரசனுக்குப் பிரியமானதெல்லாவற்றையும் செய். ஒரு புத்திரன் பிறந்தவுடன் வனத்துக்கு மறுபடியும் வந்து சேருவாயாக” என்றார். அவ்வாறே ரிஷிய சிருங்கரும் செய்தார். 

“நளனுக்குத் தமயந்தியும், தசரத குமாரனுக்குச் சீதை யும், வசிஷ்டருக்கு அருந்ததியும், அகஸ்தியருக்கு லோபாமுத்தி ரையும்போல், யுதிஷ்டிரனே! உனக்குத் திரௌபதியும்போல், சாந்தா,ரிஷியசிருங்கருடன் வனத்திற்குச் சென்று பிரீதியுடன் பணிவிடை செய்து தவத்தில் பங்கு பெற்றாள். ரிஷியசிருங்க ருஷ்டய ஆசிரமம் இருந்த இடம் இது. இந்த நதிக்கரையில் இறங்கி ஸ்நானம் செய்து பரிசுத்தனாகக்கா வாய்” என்று லோம் யுதிஷ்டிரனுக்குக் கதையைச் சொல்லி முடித்தார். பாண்ட ர்கள் அங்கே ஸ்நான ஜபங்கள் முடித்தனர். 

பயனற்ற தவம்: யவக்கிரீதன் கதை 

பாண்டவர்கள் யாத்திரை போன காலத்தில் ஒரு நாள் ரைப்யரு ருடைய ஆசிரமம் என்று வழங்கும் இடத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள். 

“அதோ பார், கங்காதீரம்'” என்றார் லோமசர்; 

இதுதான் தசரத குமாரன் பரதன் ஸ்நானம் செய்த இடம். விருத்திரனை அதர்ம வழியில் கொன்றதனால் இந்திரன் அடைந்த பிரம்மஹத்தி தோஷம் இந்தத் தீர்த்தத்தில் தான் கழுவப்பட்டது. சனத்குமாரர் சித்தி யடைந்த க்ஷேத்திரமும் இதுவே. தேவர்களின் தாயான அதிதி புத்திரப் பேறுபெற இந்த மலையில் தான் பொங்கல் வைத்தாள். யுதிஷ்டிரனே! இந்தப் புண் ணிய மலையில் ஏறி. உங்களுடைய புகழுக்கு வந்த இடையூறு களை யெல்லாம் போக்கிக் கொள்ளுங்கள். இங்கே ஓடும் சுங்கை யில் நீராடினால் ஆணவமும் குரோதமும் நீங்கும்’ என்று லோம் சர் பாண்டவர்களுக்கு அந்த இடத்தின் மகிமையை எல்லாம் விளக்கிச் சொன்னார். 

“ரிஷி புத்திரனான யவக்கிரீதன் இவ்விடத்தில் தான் நாச மடைந்தான்” என்று கதையைச் சொல்லுகிறார். 

“பரத்வாஜர், ரைப்யர் என்ற இரண்டு பிராமண சிரேஷ் டர்கள் வனத்தில் ஆசிரமங்கள் அமைத்துக் கொண்டு இருந்தார் கள். இருவரும் மிக நெருங்கிய சிநேகிதர்கள். ரைப்யரும் அவ ருடைய குமாரர்களான பராவசு, அர்வாவசு. என்கிற இருவர் களும் நன்றாக வேதம் ஓதி, பெரிய வித்வான்களாகப் புகழ் பெற் றார்கள். பரத்வாஜர் தவத்திலேயே தம் நேரத்தை யெல்லாம் கழித்து வந்தார். பரத்வாஜருக்கு ஒருமகன் இருந்தான். அவன் பெயர் யவக்கிரீதன். பிராமணர்கள் வித்துவானான ரைப்பரை மதிப்பதுபோல் தன்னுடைய பிதாவை மதிக்கவில்லை யென்பதை யவக்கிரீதன் கண்டான். ரைப்யரும் அவர் குமாரர்களும் தங் கல்வியின் பயனாக ஜனங்களிடம் அதிகமான மதிப்பைப் பெற்றிருப்பதைப் பார்த்து யவக்கிரீதன் பொறாமைப் பட்டுத் துயரம் அடைந்தான். 

யவக்கிரீதன் இந்தக் குறையைத் தீர்த்துக்கொள்ள இந்திர னைக் குறித்து, கடுந்தவம் புரிந்தான். நெருப்பில் தன் தேகத்தை வாட்டி, தேவராஜனுக்குச் சந்தாபம் உண்டாக்கினான். மனிதர்கள் தவம் செய்து உடலை வாட்டிக் கொள்ளுவது தேவர்களை துன்புறுத்தும். யவக்கிரீதனுடைய கடுந்தவத்தைக் கண்டு தேவ ராஜன் இரங்கி “ஏன் இந்தக் கோரமான தவம்?” என்றான். 

“பிராமணர்கள் இதுவரையில் ஓதியிராத வேதங்கள் எல் லாம் எனக்கு வரவேண்டும். நான் பெரிய வித்வானாகவேண்டும். அதற்காக இந்தத் தவம் செய்கிறேன். குருவின் வாயால் நீண்ட காலம் ஓதிக் கஷ்டப்பட்டு வேதங்களை அடைய வேண்டியதா யிருக்கி கிறது. அவ்வாறு ல்லாமலே அடைய நான் தவம் செய்கி றேன். எனக்கு அருள்வாயாக” என்றான் யவக்கிரீதன். 

இந்திரன் நகைத்தான். “பிராமணனே! நீ வழியில்லாத வழியில் செல்லுகிறாய். திரும்பிப் போய் தகுந்த குருவை நாடிக் கற்றறிந்து வேதங்களை அடைவாயாக. படிப்புக்கு வழி தவ மல்ல. படிப்புக்கு வழி படிப்பேயாகும்” என்று சொல்லிவிட்டு மறைந்தான். 

பரத்வாஜ புத்திரன் விடவில்லை. இன்னும் மிகக் கோரமான முறையில் தவம்செய்தான். அதனால் தேவர்கள் மிகவும் துன் புறுத்தப்பட்டார்கள். இந்திரன் மறுபடியும் வந்து யவக்கிரீத னைப் பார்த்து, “நீ சரியாக ஆராய்ந்து விஷயத்தை அறிந்து கொள்ளாமல் இந்தக் காரியத்தில் பிரவேசித்திருக்கிறாய். தகப்பனாருக்கு வேதம் தெரியும். உன்னாலும் ஓத முடியும். போய்க் கற்றுக்கொண்டு வேதங்களை அடைவாயாக, உடலை வாட்டித் தவம் செய்வதை நிறுத்து” என்றான். 

இவ்வாறு இந்திரன் இரண்டாம் முறை சொன்னதையும் யவக்கிரீதன் கேட்கவில்லை. “என்னுடைய விருப்பத்தை நீ செய்யாமல் போனால் என்னுடைய சரீர அங்கங்களை ஒவ்வொன் றாக வெட்டி நெருப்பில் போட்டு ஹோமம் செய்யப் போகிறேன். விடுவதில்லை” என்றான். 

அவ்வாறே கடுந்தவம் செய்தான். தவத்துக்கிடையில் ஒரு நாள் காலை கங்கையில் ஸ்நானம் செய்யப் போனான். அங்கே நோய்ப்பட்டு மெலிந்திருக்கும் ஒரு வயோதிக பிராமணன் கங்கைக் கரையில் உட்கார்ந்து கொண்டு பிடிப்பிடியாக மணலை எடுத்துத் தண்ணீரில் போட்டுக் கொண்டிருந்தான். 

“என்ன செய்கிறாய், கிழவா?’ என்று கேட்டான் யவக்கிரீதன்.  

‘கங்கையைத் தாண்டச் சேது ஒன்று கட்டுகிறேன். இங்கே நதிக்குக் குறுக்காக ஒரு மணற் சேது கட்டி விட்டால் ஜனங்க ளுக்குச் சௌகரியமாக இருக்கும். இப்போது கங்கையைத் தாண் டிப் போக ரொம்பக் கஷ்டப்படுகிறார்கள். ஆகையால் இந்தக் காரியத்தில் இருக்கிறேன்” என்றான் அந்தக் கிழவன். 

யவக்கிரீதன் நகைத்து, “ஓடும் ஆற்றை இம்மாதிரித் தடுத்துச் சேதுவை உண்டாக்க முடியாது. எழுந்து வேறு காரியம் செய்” என்றான். 

“தாங்கள் வேதங்களை ஓதாமலே அடையப் பெருந்தவம் செய்கிறீர்கள் அல்லவா? அவ்விதமே நானும் கங்கைக்குச் சேது வைக் கட்ட முயற்சி செய்கிறேன்” என்றான் கிழவன், 


யவக்கிரீதனுக்குக் கிழவன் யார் என்று இப்போது தெரிந்து விட்டது. 

“தேவராஜனே, என்னுடைய முயற்சி வீண் என்று நீ எண்ணு வதாயிருந்தால், எவ்வாறு நான் வித்துவான் ஆவேனோ, அவ்வாறு எனக்கு வரம் தருவாயாக என்று மறுபடியும் யவக்கிரீதன் இந்திரனை வருந்தி வேண்டினான். 

“சரி, வரம் தந்தேன். போய் வேதங்கள் அத்தியயனம் செய். நீ வித்துவான் ஆவாய்” என்று இந்திரன் யவக்கிரீதனை ஆசீர்வதித்துத் திருப்தி செய்தான், 

யவக்கிரீதன் மாண்ட கதை 

யவக்கிரீதன் வேதம் ஓதிப் பாண்டித்தியமும் அடைந் தான். ”நான் இந்திரனிடம் வரம் பெற்று வேதங்களை அடைந் தேன்” என்று மிகுந்த கர்வம் கொண்டவனாக அலைந்தான். பரத்வாஜருக்கு இது பிடிக்கவில்லை. தம்முடைய நண்பர் ரைப் யரை இவன் அவமரியாதை செய்து விட்டு நாசத்தைச் சம்பா தித்துக் கொள்வான் என்று பயந்தார். 

“பிடிவாதத் தவம் செய்யும் அற்பர்களுக்கும் தேவர்கள் வரங்களைக் கொடுப்பார்கள். அதனால் அவர்கள் அடக்கத்தை இழந்து மதிமயங்கிப் போய்ச் சீக்கிரமே அழிந்து போவார்கள்’ என்று பரத்வாஜர் மகனுக்குச் சொன்னார். புராணக் கதை ஒன்றை யவக்கிரீதனுக்கு உதாரணமாகவும் சொன்னார். 


முன்னொரு காலத்தில் பாலதிஹி என்ற ஒரு புகழ் பெற்ற ரிஷி இருந்தார். அவருக்கு ஒரு குமாரன் இருந்தான. அவன் இறந்துவிட்டதைப் பார்த்து ரிஷியானவர் சோகத்தால் வருந்தி, சாகாத ஒரு மகனை அடையவேண்டும் என்று பெருந்தவம் செய்தார். 

‘மனித ஜாதி சாகாத வரம் பெற முடியாது. ஆயுளுக்கு ஒரு வரம்பு இருக்கத்தான் இருக்கவேண்டும். ஏதேனும் ஒரு வரம்பு இஷ்டப்படி நீரே வைத்துக் கேளும்” என்று தேவர்கள் ரிஷிக்குச் சொல்ல, அவரும், சரி, அப்படியானால் அதோ அந்த மலை இருக்கும் வரையில் என் மகனுடைய உயிரும் இருக்கக் கடவது” என்றார். அவ்வாறே வரம் பெற்றார். பிறகு அவருக்கு ஒரு மகன் உண்டானான். அவன் பெயர் மேதாவி. 

தன்னுடைய உயிருக்கு அபாயமே இல்லை. மலைபோல் ஸ்திர மாக இருக்கலாம் என்று மேதாவி கர்வம் கொண்டான். எல்லா ரிடத்திலும் மரியாதை யின்றி நடந்து கொண்டு வந்தான். 

ஒரு நாள் இந்தத் துஷ்டன் தனுஷாக்ஷர் என்கிற மகாத்மா வினிடம் அபசாரமாக நடந்துகொண்டான். அவர் உடனே ‘நீ சாம்பலாவாய்” என்று சாபமிட்டார். 

ரிஷி குமாரனான மேதாவியோ அந்தச் சாபத்தினால் ஒரு விதத்திலும் துன்பம் அடையாமல் ஆரோக்கியமாகவே நின்றான். இதைக் கண்டு வியப்படைந்த பெரியவருக்கு இவன் பெற்றி ருந்த வரத்தைப் பற்றி நினைவு வந்தது. 

‘அப்படியா’ என்று தனுஷாக்ஷர் தன்னை ஒரு காட்டெருமை யாகச் செய்துகொண்டு தன்னுடைய தவவன்மையால் மலையை மூட்டி உடைத்தார். மேதாவியின் ஆயுள் தீர்ந்து அவன் இறந்து கீழே விழுந்தான். 


“இந்தப் புராணக் கதையிலிருந்து அறிவு பெறுவாயாக. வரங்களைப் பெற்று கர்வப்பட்டு அழிந்துபோக வேண்டாம். டக்கத்துடன் இருப்பாயாக. மரியாதையை மறக்காதே. மகான் ரைப்யரிடம் – போகாதே” என்று பரத்வாஜர் யவக்கிரீதனுக்கு எச்சரிக்கை செய்தார். 


வசந்த காலம். மரங்களும் செடிகளும் கொடிகளும் எல்லாம் அழகிய மலர்கள் நிறைந்து-வனம் சோபித்தது. 

உலகமெல்லாம் மன்மதன் வசமாக இருந்தது. ரைப்யரு டைய ஆசிரமத்தில் புஷ்பித்த செடிகளின் மத்தியில் பராவசு வின் மனைவி தனியாக நடந்து கொண்டிருந்தாள். அழகும் தைரி யமும் பரிசுத்தமும் ஒன்று கூடி ஒரு கின்னர ஸ்திரீயைப் போல் விளங்கினாள். அச்சமயம் யவக்ரீதன் அவ்விடம் வந்து அவள் வடி வத்தைப் பார்த்து மனமாறுதலை யடைந்தான். 

காமத்தால் மதியிழந்த யவக்கிரீதன், ‘அழகியே இங்கே வா!” என்று அவளை அழைத்தான். அவள் வியப்பும் வெட்கமும் அடைந்தாள். ரிஷி புத்திரனுடைய சாபத்துக்குப் பயந்து அவன் சொன்னபடியே அவன் நின்ற இடத்திற்குச் சென்றாள். அவன் அவளைத் தனி இடத்துக்கு அழைத்துச் சென்று காம மயக்கத்தால் தூண்டப்பட்டு அவளுக்கு வெட்கம் உண்டாகும்படி நடந்து கொண்டான். 


ரைப்யர் ஆசிரமத்துக்குத் திரும்பி வந்தார். நடந்த நிகழ்ச் சியால் துன்புறுத்தப்பட்டு அழுதுகொண்டிருந்த மருமகளைப் பார்த்து, “ஏன் அழுகிறாய? என்ன நடந்தது?” என்று விசாரித் தார். நடந்த அவமானத்தைச் சொன்னாள். ரைப்யர் கோபா வேசமாகி, தன் தலையிலிருந்து ஒரு ரோமத்தைப் பிய்த்து அக்னி யில் மந்திரம் சொல்லிப்போட்டார். 

அவருடைய மருமகளின் அழகுக்குச் சமான வடிவம் கொண்ட ஒரு பெண்ணுருவம் ஹோமத் தீயிலிருந்து கிளம்பிற்று. மறுபடியும் ஜடையிலிருந்து ஒரு ரோமத்தை எடுத்து ஹோமம் செய்தார். அதன் பயனாக ஒரு பயங்கரமான பூதம் நெருப்பிலிருந்து கிளம்பிற்று. இந்த இரண்டு ருவங்களை யும் பார்த்து ரைப்யர், ‘போய் யவக்கிரீதனை வதம் செய்யுங் கள்” என்று நியமித்தார். ”அப்படியே!’ என்று அந்த இரு பூதங்களும் சென்றன 


காலைக்கடன் கழித்துக் கொண்டிருந்த யவக்கிரீவருைகில் பெண் பூதம் சென்று நகைத்தும் விளையாடியும் அவனை ஏமாற்றி அவன் கமண்டலத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டது. அந்தச் சமயத்தில் ஆண் பேய் சூலத்தைக் கையில் ஓங்கி ரிஷி குமாரன் மேல் பாய்ந்தது. 

யவக்கிரீதன் பயந்து எழுந்தான். அசுத்த நிலையில் தன் மந் திரங்கள் உதவமாட்டா என்று அறிந்து, கால் கழுவக் கமண்டலம் க்கப் போனான். அது இல்லாததைக் கண்டு தண்ணீர் இருக்கும் குளத்தைத் தேடி ஓடினான், குளம் வற்றிக்கிடந்தது, பக்கத்தி கிடந்தது. லிருந்த ஓடைக்குச் சென்றான். அதுவும் வற்றிக் கிடந்தது. இவ்வாறே எங்கு சென்றாலும் தண்ணீர் கிடைக்கவில்லை. பயங்கரத் தோற்றத்துடன் பூதம் துரத்திக்கொண்டே வந்தது? எங்கும் தண்ணீர் கா ணாமல் அரக்கனால் துரத்தப்பட்டு விரத வலிமையிழந்து ஓடிய யவக்கிரீதன் கடைசியாகத் தன் தகப்ப னாருடைய அக்கினி ஹோத்திர சாலைக்குள் புகுந்து, தப்பித்துக் காள்ளப் பார்த்தான். சாலை வாயிலில் இருந்த காவலாளி அரைக் குருடன். பயந்து கத்திக்கொண்டு ஓடிவரும் யவக்கிரீத னுடைய அடையாளம் தெரிந்து கொள்ளாமல் யாரோ என்று தடுத்தான். இதற்குள் அரக்கன் வந்து யவக்கிரீதனைச் சூலத் தால் குத்திக் கொன்றான். 


பரத்வாஜர் ஆசிரமத்தை நோக்கி வந்தபோது யக்ஞ சாலை வழக்கம்போல் ஜொலிக்கவில்லை. வாயிலில் குத்துண்டு உயிர் நீங்கிக்கிடக்கும் தன் மகனையும் பார்த்தார். ரைப்யரிடம் ஏதோ மரியாதை தப்பி நடந்து விட்டு இந்தக் கதி அடைந்தான் என்று மனத்தில் தீர்மானித்துக் கொண்டார். 

ஐயோ! என் பிள்ளாய்! உன் கர்வத்தால் மாண்டாயா? பிராமணர்கள் யாரும் ஓதாத வேதங்களை நீ வரமாகப் பெற்றது ஒரு பெருந் தவறல்லவே! நீ ஏன் இதற்காகச் சபிக்கப் பட்டாய்? என் ஒரே புத்திரனை நான் இழக்கச் செய்த அந்த ரைப்யர், அவ ருடைய இரு குமாரர்களில் ஒருவனால் கொல்லப்பட்டு மாள்வாராக” என்று புத்திர சோகத்தினாலும் கோபாவேசத்தினாலும் விசாரியாமல் சாபமிட்டார். 

பிறகு உடனே தெளிவு அடைந்து, “ஹா! புத்திரனைப் பெறா தவர்களே புண்ணியவான்கள். பெற்ற புத்திரனை நான் இழந் தேன். தோழனையும் சபித்தேன்! நான் உயிருடன் இருந்து என்ன பயன்?” என்றார். மகனுடைய பிரேதத்தைத் தகனம் செய்து அந் தத் தீயில் தானும் புகுந்து உயிர் நீத்தார். 

படிப்பு மட்டும் போதாது 

ரைப்ய ரிஷியினுடைய சிஷ்யன் பிருஹத்யும்னன் என்கிற அரசன் ஒரு பெரிய யாகம் செய்தான். அதை நடத்திக் கொடு க்கத் தன் ஆசாரியருடைய குமாரர்களாகிய பராவசு, அர்வாவசு இருவர்களையும் அனுப்பும்படி அரசன் கேட்டுக்கொண்டான். பிதாவினுடைய அனுமதியைப் பெற்றுக்கொண்டு அவர்களிரு வரும் மிகவும் மகிழ்ச்சி யடைந்து அரசனுடைய நகரத்துக்குச் சென்றார்கள். 

யாகத்திற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கை யில் ஒருநாள் பராவசு தன் மனைவியைப் பார்த்துவர விரும்பினான். இரவில் தனியாக நடந்து தன் ஆசிரமம் இருந்த வனத்திற்கு பொழுது விடிவதற்கு முன் இருட்டிலேயே வந்து சேர்ந்தான். அப்போது அங்கே புதரண்டை தோல் போர்த்துக்கொண்டு இரு ட்டில் இருந்த ரைப்யரைக் கண்டு காட்டு மிருகம் என்று எண் ணிப் பயந்து கையிலிருந்த ஆயுதத்தை வீசினான். அது அவரைக் கொன்றது. 

பிறகு துக்கப்பட்டு இது பரத்வாஜர் இட்ட சாபத்தின் பயன் என்று தெரிந்துகொண்டான். பிதாவுக்குச் செய்ய வேண்டிய பிரேத காரியங்களை அவசர அவசரமாகச் செய்துவிட்டு அர்வா வசுவிடம் சென்று நடந்ததைச் சொன்னான். அரசனுடைய யாக காரியத்திற்குக் குந்தகம் ஏற்படக்கூடாது. தெரியாமல் தகப் பனைக் கொன்ற என் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவதற்குச் செய்ய வேண்டிய பிராயச்சித்த விரதத்தை நீ அனுசரித்து எனக்காக நடத்துவாயாக. கொல்ல வேண்டும் என்கிற எண்ண மில்லாமல் கொன்ற பாபத்திற்குப் பிராயச்சித்தம் உண்டு. எனக் காக நீ விரதம் இருந்து இதை நடத்திவிட்டாயானால், நான் ஒரு வனே அரசனுடைய யாகத்தைக் குந்தகமின்றி முடித்து விடுகி றேன். தனியாக யாகத்தை நடத்த உன்னால் முடியாது. ஆகையால் இவ்வாறு சொல்லுகிறேன்” என்றான். தர்மவானான தம்பி ஒப்புக்கொண்டு, அரசனுடைய சத்ரயாகத்தைச் சரிவர நீ நட த்திவிடு. அதற்கு என்னுடைய சாமர்த்தியம் போதாது. பிரம்ம ஹத்தி தோஷத்திற்கு நான் உனக்காகத் தவமிருந்து கடமை செலுத்துகிறேன்” என்று சொல்லிவிட்டு வனம் சென்றான். 

அவ்வாறே தர்மாத்மாவான அர்வாவசு, அண்ணனுடைய பிரம்மஹத்தி தோஷத்தை தானே வகித்துக்கொண்டு பிராயச் சித்தம் செய்து விட்டு பிறகு சத்ர யாகத்திற்கு வந்து சேர்ந்தான். 

தானே பராயச்சித்தம் செய்யாதபடியால் பராவசுவின் பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கவில்லை. அது அவன் உள்ளத்தில் பாப எண்ணங்களை உண்டாக்கிக்கொண்டே இருந்தது. யாகசாலைக்குத் தம்பி வந்ததைப் பார்த்ததும் பராவசு அவன் மேல் பொறாமை கொண்டான். தம்பியின் முகத்தில் வீசிய பிரம்ம தேஜஸ்ஸானது அண்ணன் உ உள்ளத்தில் பொறாமையைக் கிளப்பிற்று. அவன் மேல் அக்கிரமமாக அபவாதம் சுமத்தி அவமானப் படுத்த நிச்சயித் தான். 

“பிரம்மஹத்தியைச் செய்த இவன் எவ்வாறு யாகசாலையில் பிரவேசிக்கலாம்??” என்று சபையிலிருந்த அரசனிடம் பராவசு உரக்கச் சொன்னான். 

இதை அரசன் கேட்டவுடன், அர்வாவசுவை உடனே அப்பு றப்படுத்திவிட வேலைக்காரர்களுக்கு உத்தரவிட்டான். 

“பிரம்மஹத்தி என்னால் செய்யப்பட்டதல்ல” என்று அர்வா வசு முறையிட்டான். யாரும் அவன் பேச்சைக் கேட்கவில்லை. மிக்க அவமானத்துடன் யாகசாலையிலிருந்து துரத்தப்பட்டான். 

“சத்தியமாகச் சொல்லுகிறேன். பிரம்மஹத்தி செய்தது என் அண்ணன். அவனுக்காக நான் விரதம் இருந்து அவனைக் காப்பாற்றினேன்” என்று அர்வாவசு திரும்பத் திரும்பச் சொன்னான். 

“பிரம்மஹத்தியும் செய்து விட்டு அதற்காக விரதமும் இரு ந்து விட்டுப்பொய்யாக அண்ணன்மேல் பழிபோடுகிறாயே?” என்று அவனை அனைவரும் முன்னைவிட அதிகமாக ஏசித் துரத்தினார்கள். இவ்வாறு அநியாயமாக அபவாதத்துக்கு இரையாக்கப் பட்டுப் பொய்யன் என்றும் ஏசப்பட்டுத் தர்மாத்மாவான அர்வா வசு பேசாமல் வனம் சென்றான். பிறகு உக்கிரமான தவம் செய்தான் 


தேவர்கள் பிரசன்னமாகி, “நீ தர்மவான்! உனக்கு என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டனர். 

தனக்கு அண்ணன் இழைத்த அநியாயத்தினால் உண்டான கோபம் அதற்குள் முற்றிலும் இழந்தவனாகி, தன்னுடைய பிதா மறுபடியும் உயிர்படைத்து வரவேண்டும் என்றும் தன் சகோ தரன் தோஷமில்லாதவனாக வேண்டும் என்றும் கேட்டுக் கொண் டான். 

“அப்படியே ஆகுக” என்று தேவர்களும் வரம் கொடுத்தார்கள். 

இந்தக் கதையை லோமசர் யுதிஷ்டிரனுக்கு ரைப்யர் ஆசி ரமத்தண்டை சொல்லி, “பாண்டவர்களே! கங்கையில் ஸ்நா னம் செய்யுங்கள்! புண்ணிய நதியில் கோபத்தை ஒழியுங்கள்!” என்றார். 

அர்வாவசுவும் பராவசுவும் ஒரே தகப்பன் மக்கள். ரைப்யர் மகா வித்வான். அவரிடம் இருவரும் கூடவே படித்துப் பண்டி தர்களானார்கள். ஆயினும் படிப்பு வேறு. குணம் வேறு. நன்மை க்கும் தீமைக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்தபின் ஒருவன் தீய செயலில் புகமாட்டான் என்பது உண்மை ஆனால் அடைந்த அறிவானது உள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்து நிலையாக இருக்க வேண்டும். அப்போதே படிப்பும் சீலமும் ஒன்றாகும். உள்ளத்தில் ஊடுருவிப் பாயாத கல்வி சீலத்தை உண்டாக்காது. வெறும் பாண்டித்தியமாகத்தான் நிற்கும். 

அஷ்டாவக்கிரன் 

பாண்டவர்கள் வனவாசம் செய்துகொண்டு சுற்றித் திரிந்த போது உபநிஷத்தில் சொல்லப்பட்ட உத்தாலகருடைய ஆசிர மம் இருந்த இடத்துக்கு ஒரு நாள் வந்து சேர்ந்தார்கள். லோம சர் அந்த ஸ்தலத்துக்குரிய கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்னார். 

வேதாந்தம் உபதேசித்த பெரியோர்களில் சிறந்தவரான உத் தாலகருக்குக் கஹோளர் என்ற ஒரு சிஷ்யர் இருந்தார். அவர் மிகுந்த நியமமும் பக்தியும் கொண்டவர். ஆனால் அவருக்கு கல்வி கற்கும் திறமை இல்லை. இதனால் அவரை மற்ற சிஷ்யர்கள் சிரித் துப் பரிகசிப்பார்கள். உத்தாலகர் இதைப் பொருட்படுத்தா மல் கஹோளருடைய நல்ல குணத்தையும் பக்தி சீலம் நியமம் இவற்றையும் பார்த்துத் திருப்தியடைந்து தன் குமாரத்தி சுஜா தையை அவருக்கு விவாகம் செய்து கொடுத்தார். 

கஹோளருக்கும் சுஜாதைக்கும் ஒரு மகன் உண்டானான். தகப்பன் தாய் இவர்களுடைய குண விசேஷங்களும் குழந்தைக் குப் பிறவிச் சம்பத்தாகும். உத்தாலகருடைய பேரனான இந்தக் குழந்தை தாய் வயிற்றிலிருக்கும்போதே வேதத்தை அறிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. கஹோளர் தப்பும் தவறுமாக அத்தியயனம் செய்வதை வயிற்றுக்குள்ளிருந்த குழந்தை கேட் டுப் பிழைகளை பொறுக்கமாட்டாமல் கருவிலேயே குழந்தை எட் டுக்கோணல் அடைந்து விட்டதாம். அந்தக் கோணல்களுடன் பிறந்ததால் குழந்தைக்கு அஷ்டாவக்கிரன் என்று பெயர் ‘வழங் கிற்று. வக்கிரம் என்றால் கோணல். 

அஷ்டாவக்கிரன் பால்ய பருவத்திலியே சிறந்த வித்துவா னாக வளர்ந்தான். பன்னிரண்டு வயதுக்குள்ளேயே வேத வேதாந் தங்களை ஓதி முடித்து விட்டான். 

ஒரு நாள் மிதிலையில் ஜனகன் ஒரு பெரிய யாகம் நடத்து வதாகவும் அங்கே வழக்கம்போல் வித்துவான்கள் கூடி சாஸ்தி ரங்களை வாதிப்பார்கள் என்றும் கேள்விப்பட்டு, அஷ்டாவக்கிரன் மிதிலைக்குப் போகலாம் வா!” என்று தன் அக்காள் மகன் சுவே தகேதுவையும் அழைத்துக்கொண்டு இருவரும் சென்றார்கள். 

மிதிலையில் யாகசாலைக்குப் போகும் வழியில் அரசனும் பரி வாரமும் சென்றுகொண்டிருந்தார்கள். ‘விலகு! விலகு!ராஜா வுக்கு வழிவிட்டு விலகு! என்று வேலைக்காரர்கள் கத்திக்கொண்டு முன்னால் சென்றார்கள். அஷ்டாவக்கிரனை விலகச் சொன்ன போது அவன்! 

‘ராஜ சேவகர்காள்! குருடனுக்கும், அங்கஹீனர்களுக்கும், பெண்களுக்கும், சுமை தூக்கிக்கொண்டு செல்பவர்களுக்கும் அர சனுமே விலகி வழி விடவேண்டும். பாதையில் வேதம் ஓதிய அந் ணன் சென்று கொண்டிருந்தால் அவனை விலகிச்செல்லும்படி அரசன் சொல்லலாகாது. இது சாஸ்திரம்” என்றான். 

பிராமணப் பையனுடைய கம்பீரப் பேச்சைக் கேட்ட அர சன் பிரமித்து “பிராமணச் சிறுவன் சொல்வது சரியே! நெருப் பில் சிறியதென்றும் பெரியதென்றும் இல்லை; சிறு நெருப்பும் சுடும்” என்று தன் பரிவாரத்துக்குச் சொல்லி வழிவிட்டு விலகினான், 

யாகசாலையில் அஷ்டாவக்கிரனும் சுவேதகேதுவும் நுழைந்தார்கள். 

”இந்த இடத்தில் சிறுவர்கள் பிரவேசிக்கக்கூடாது: வேதம் ஓதிய முதிர்ந்தவர்களே யாகசாலைக்குள் போகலாம். என்று வா யில் காப்போன் தடுத்தான். 

“நாங்கள் சிறுவர்கள் அல்ல. விரதங்களைக் காத்து வேதம் ஓதியவர்களாவோம். வேதாந்த சாஸ்திரத்தின் முடிவுகளை அறிந் தவர்கள். வயதையும் வெளித் தோற்றத்தையும் பார்த்து ஒரு வனைச் சிறியவன் என்று நிச்சயிக்க மாட்டார்கள்” என்றான் அஷ் டாவக்கிரன். 

துவாரபாலகன் நில், நில்! வீண் பேச்சுப் பேசுகிறாய். தற் புகழ்ச்சி வேண்டாம். சிறுவனாகிய நீ எவ்வாறு உபநிஷத்தை ஓதி வேதாந்த உண்மையை அறிந்திருக்கமுடியும்?” என்றான். 

“இலவங்காயைப்போல் வெளி வடிவம் பருத்து உள்ளே வெறும் பஞ்சாக இருந்தால் என்ன பயன்? வெளித் தோற்றம் அறிவுக்குப் பிரமாணமாகாது. முதிர்ச்சி என்பது சரீர வடிவத் தில் இல்லை. உயரமாக வளராதவனு ம் ஞானம் அடைந்திருந் தால் சாஸ்திரப்படி முதிர்ந்தவன் ஆவான். அறிவு அடையாத மனிதன் வயதினால் மட்டும் முதிர்ந்தவன் ஆகமாட்டான். என் னைத் தடுக்காதே” என்றான் சிறுவன். 

“சிறு பையனாயிருந்து ஏன் வீணாக முதிர்ந்தவனைப் போல் பேசுகிறாய்?” என்றான் வாயில் காப்போன். 

“துவாரபாலகனே! தலை மயிர் நரைப்பது முதிர்ச்சிக்குப் பிரமாணமல்ல. வயதும், தலை நரைப்பும், பொருளும், பந்துக் களின் கூட்டமும் ஒருவனைப் பெரியவனாக்கும் என்று ரிஷிகள் சொல்லவில்லை. எவன் வேதங்களை அங்கங்களுடன் படித்து ஆரா ய்ந்து பொருள் அறிந்திருக்கிறானோ அவனே பெரியவன். நான் அரசனுடைய முக்கிய வித்துவானாகிய வந்தி பண்டிதனைப் பார் க்க வந்திருக்கிறேன். ஜனக ராஜனுக்கு என் விருப்பத்தைத் தெரி விப்பாயாக என்று அஷ்டாவக்கிரன் சொன்னான். 

இதற்குள் அரசன் வந்து சேர்ந்தான். பையனுடைய சாக சத்தை வாயில் காப்போன் அரசனிடம் தெரியப் படுத்தினான். அஷ்டாவக்கிரனைப் பார்த்து, தான் முந்திப் பார்த்த சிறுவன் என்பதை அரசன் தெரிந்துக்கொண்டான். 

“என்னுடைய வித்துவான் வந்தி பல பெரிய வித்துவான் களை இதற்குமுந்தி வாதத்தில் தோற்கடித்து அவர்களைக் கடலில் வீழ்த்தும்படி செய்திருக்க, சிறுவனாகிய நீ ஏன் இந்தத் துணிச்சல் காரியம் செய்கிறாய்?” என்று அரசன் கேட்டான், 

“உம்முடைய வித்துவான் என்னைப்போல் வேதாந்தப் பயி ற்சி பெற்றவர்களுடன் வாதிக்கவில்லை. பண்டிதர்களாகாதவர் களைத் தோற்கடித்து அகம்பாவம் கொண்டிருக்கிறார். என் தகப்பனாரை இவர் வென்று அவரை நீரில் மூழ்கவைத்ததாக என் தாயாரிடம் நான் அறிந்து அதற்காகவே கடன் தீர்க்க வந்திருக்கிறேன். இவரை நான் எதிர்த்து வெல்லப் போகிறேன். அச்சு முறிந்த வண்டி வீழ்வதைப் போல் உம்முடைய வித்துவான் என் முன் வீழ்வதைப் பார்ப்பீர். உம்முடைய வந்தியை என்னருகில் அழைத்து வரச் செய்வீராக” என்றான் அஷ்டாவக்கிரன், 

வந்தியுடன் அஷ்டாவக்கிரன் வாதம் நடத்தினான். கேள் விகள் கேட்கப்பட்டு ஒருவர் சொல்லுக்கு ஒருவர் பதில் சொல்ல. மிதிலா நகரத்துத் தலைமை பண்டிதனான வந்தி தோல்வி அடைந்து அஷ்டாவக்கிரன் வெற்றியடைந்ததாகச் சபையிலுள்ளோர் அனை வரும் ஒப்புக்கொள்ள நேர்ந்தது. மிதிலா நகரத்துப் பண்டிதன் தலை குனிந்தான். பந்தயப்படி அவன் கடலில் அமிழ்த்தப்பட்டு வருணாலயம் சென்றான். 

அப்போது அஷ்டாவக்கிரனுடைய தகப்பனாரான கஹோள ருடைய ஆத்மா மகனுடைய புகழைக் கண்டு மகிழ்ச்சியடைந்து சொன்னதாகப்பௌராணிகர் அவன் வாய் மூலம் தத்துவத்தை விளக்குகிறார். 

“தகப்பனைப் போல் மகன் இருக்க வேண்டியதில்லை. தேக பலமில்லாத தகப்பனுக்குத் தேகம் பலம் படை த்த மகனும் கல்வி கற்பதற்கு வேண்டிய திறமையைப்படைத்திராத ஒருவ னுக்குப் பண்டித குமாரனும் உண்டாவதுண்டு. வடிவத்தையும் வயதையும் பார்த்து மனிதனுடைய பெருமையை நிர்ணயிப்பது தவறு. வெளித் தோற்றம் ஏமாற்றத்தைதான் தரும்.” 

பீமனும் ஹனுமானும் 

அருச்சுனன் இல்லாமல் இந்தக் காம்யக வனம் எனக்கு அழகாகவே காணப்படவில்லை. சவ்யசாயியைக் காணாமல் எனக் குச் சந்தோஷமில்லை” என்று அடிக்கடி திரௌபதி சொல்லி வந்தாள். 

திவ்வியாஸ்திரங்களைப் பெறுவதற்காக அருச்சுனன் இமய மலையில் தவம் செய்துகொண்டிருந்தகாலத்தில் அந்தப் பிரிவைப் பொறுக்க முடியாமல் பாண்டவர்களுக்கும் பாஞ்சாலிக்கும் வன வாசம் மிக்க கஷ்டமாயிருந்தது. 

பாஞ்சாலியைப் பார்த்து, பீமசேனன் கல்யாணி! நீ அருச் சுனனை நினைத்துச் சொல்லும் சொற்கள் என் உள்ளத்தில் அமிர் தம்போல் ஆனந்தமாய்ப் பாய்கின்றன. தம்பியைக் காணாத என் கண்களுக்கும் இந்த அழகிய வனம் ஒளியிழந்து இருட்டாகக் காணப்படுகிறது. பல்குனனைப் பாராமல் என் மனத்தில் அமைதி ல்லை. எல்லா திசைகளும் இருட்டில் மூடப்பட்டதுபோல் தோன்றுகிறது. சகதேவா, உனக்கு எப்படி இருக்கிறது?” என்றான். 

அண்ணனில்லாத இந்த ஆசிரமம் சூனியமாக இருக்கிறது. இந்த இடத்தைவிட்டு வேறு எங்கேயாவது போய் அவனை மறக்கப் பார்க்கலாம்” என்றான் சகதேவன். 

யுதிஷ்டிரன் புரோகிதர் தௌம்மியரைப் பார்த்து “அஸ் திரங்களைப் பெறுவதற்காகத் தம்பியை தேசாந்திரம் அனுப்பி னேன். வீரனும் சமர்த்தனுமான அவன் இன்னும் திரும்பவில்லை. பீஷ்மதுரோணர்களையும் கிருபரையும் அசுவத்தாமரையும் ஜெயி க்க கூடிய அஸ்திரங்களை தேவராஜனிடமிருந்து அடைவதற்காக அவனை இமயமலைக்கு அனுப்பினோம். பீஷ்மரும் துரோணரும் கிருபரும் திருதராஷ்டிர புத்திரர்களின் பட்சத்தில் நின்று யுத் தம் செய்வார்கள் என்பது நிச்சயம். கர்ணனும் திவ்ய அஸ்தி ரங்களை அறிந்த மகாரதன். அவன் அருச்சுனனோடு போர் புரி வதில் அதிக விருப்பம் கொண்டவன். அருச்சுனன் இந்திரனை நேரில் கண்டு அஸ்திரங்களைப்பெற்று வந்தானேயாகில் இந்த மகா ரதர்களை எதிர்த்து வெற்றி பெறலாம் என்று ஆசைப்பட்டு அவ னைத் தேசாந்திரம் அனுப்பினேன். மிகவும் கஷ்டமான காரியத் திற்கு அவனை அனுப்பிவிட்டு நாங்கள் இங்கே சுகமாக இருக்கி றோம். அவன் பிரிவை எங்களால் பொறுக்க முடியவில்லை. அவனோடு இருந்த இந்த இடத்தைவிட்டு வேறு எங்கேயாவதுபோய் அவன் பிரிவை மறக்கப் பார்க்கலாம் என்று எண்ணுகிறேன். போகும்படியான டங்களைப் பற்றிச்சொல்ல வேண்டும்” என்று புரோகிதரைக் கேட்டான். 

தௌம்மியர் அனேக வனங்களையும் புண்ணிய தீர்த்தங்களை யும் பற்றிச்சொன்னார். அந்த இடங்களுக்குச்சென்று அருச்சுனன் பிரிவை ஒருவாறு ஆற்றிக் கொள்ளலாம் என்று எல்லோரும் புறப்பட்டார்கள். பல ஸ்தலங்களுக்குச் சென்று, அந்த இடங் களின் புண்ணிய கதைகளைக் கேட்டுக்கொண்டே பல ஆண்டுகள் கழித்தனர். சில இடங்களில் மலைகள் ஏறியும், காடுகள் தாண்டியும் சிரமம் தாங்காமல் திரௌபதி சளைத்து விடுவாள். பீமன் அந்தச் சமயங்களில் எல்லாருக்கும் தைரியம் உண்டாகும்படி யான சேவை செய்துவந்தான்.அவனுக்குத் துணையாகச் சில சம யம் பீமனுடைய அசுர மனைவியின் மகன் கடோத்கஜனும் வந்து உதவுவான். 

இமயமலைப் பிரதேச த்தில் பல இடங்களைப் பார்த்துக் கொண்டே போன போது ஒரு இடத்தில் பயங்கரமான காட்டில் பாதை மிகக் கடினமாயிருந்தது. அதைக் கண்டு கவலையுற்ற யுதி ஷ்டிரன் பீமசேனனைப் பார்த்து குந்தி நந்தன! திரௌபதி இந்த டத்தில் நடப்பது கஷ்டம். நானும் நகுலனும் லோமச ரிஷியும் போவோம். நீ சகதேவனுடன் ஜாக்கிரதையாக திரௌபதியைப் பாதுகாத்துக் கொண்டு  கங்கா துவாரத்தில் வசித்துக் கொண்டிரு. திரும்பிச் சென்று அந்த இடத்தில் நாங்கள் வரும் வரையில் இருப்பாயாக” என்றான். 

“மகாராஜவே! திரௌபதி இதற்கு ஒப்புக்கொள்ள மாட் டாள். அருச்சுனன் ஒருவனுடைய பிரிவே உமக்கு இவ்வளவு வரு த்தம் தந்திருக்க, சகதேவனையும் என்னையும் திரௌபதியையும் பாராமல் நீர் மன GU த்தம் தாங்க மாட்டீர். ராக்ஷஸர்களும் மிருதங்களும் நிறைந்த இந்தக் காட்டில் உம்மைத் தனியாக அனு ப்ப நான் ஒரு பொழுதும் சம்மதிக்கமாட்டேன். பாஞ்சாலியும் இதற்கு ஒப்ப மாட் IT bit. அவள் நடக்க முடியாத இடங்களில் நான் அவளைத் தூக்கிச் செல்வேன். நகுல சகதேவர்களையும் நான் தூக்கிச்செல்வேன். நீர் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்” என்றான் பீமசேனன். 

இவ்வாறு தம்பி சொன்னதைக் கேட்ட தருமபுத்திரன் அவனைக் கட்டித் தழுவிக்கொண்டு. “பீமனே! உன்னுடைய தேக பலம் எப்போதும் வளர்ந்துகொண்டே போகக்கடவது!” என்று ஆசீர்வதித்தான். 

பாஞ்சாலி சிரித்துக்கொண்டு தருமராஜனைப் பார்த்து என்னை யாரும் தூக்கிச் செல்ல வேண்டியதில்லை. நான் நடப்பேன். என்னைப் பற்றிக் கவலை வேண்டாம்!” என்றாள். 

இமயமலைப் பிராந்தியத்தில் சுபாகுவின் தேசமாகிய குலிந்த நாட்டை அடைந்தார்கள். அவ்விடம் அந்த அரசன் செய்த மரி யாதைகளைப் பெற்றுக்கொண்டு களைப்பாறினார்கள். அதன் பிறகு மிக ரம்மியமான நாராயணாசிரம வனத்தை அடைந்தார்கள்] அந்த இடத்தில் சில நாள் தங்கினார்கள். 

ஒரு நாள் வடகிழக்கிலிருந்து வீசிக்கொண்டிருந்த காற்றில் அடிக்கப்பட்டு ஒரு திவ்வியமான மலர் பாஞ்சாலியிடம் வந்து விழுந்தது. அந்தப் புஷ்பத்தை திரௌபதி கையில் எடுத்து அதன் அழகினாலும் வாசனையாலும் பரவசமானாள். 

“பீமசேனா! இந்த மலரைப் பார், என்ன வாசனை! என் அழகு! இதைத் தர்மபுத்திரனுக்குக்கொடுப்பேன். நீ சென்று இந்த வகையைச் சேர்ந்த இன்னும் சில புஷ்பங்களைப் பறித்துக் கொண்டு வா! நம்முடைய காம்யக வனத்தில் இந்தச் செடியைக் கொண்டுபோய் வளர்க்க வேண்டும்’ என்றாள். இவ்வாறு பீம னுக்குச் சொல்லிவிட்டுத் திரௌபதி புஷ்பத்தை எடுத்துக் கொண்டு யுதிஷ்டிரனிடம் ஓடினாள், 

காதலி சொன்ன சொல்லால் ஏவப்பட்ட பீமன் அந்த மலர் உண்டான செடியைத் தேடிக்கொண்டு சென்றான். மலரின் வாச னையைக் காற்றில் நுகர்ந்துகொண்டே அந்தத் திக்கில் வெகு தூரம் தனியாகப் போனான். வழியில் அநேக காட்டு மிருகங் களைக் கண்டாலும் லட்சியம் செய்யாமல் சென்றான். 

பருவதத் தாழ்வரையில் ஒரு பெரிய வாழைமரச் சோலையை அடைந்தான். சோலையின் நடுவில் வழியை அடைத்துக்கொண்டு நெருப்பைப் போல் பிரகாசித்துக்கொண்டு ஒரு வானரம் தனிமையாகப் படுத்திருப்பதைக் கண்ட பீமன் தன்னையும் அறியா மல் ஒரு பெரிய சத்தம் போட்டான். 

வானரம், தன் கண்களைச் சிறிது திறந்து அலட்சியமாகப் பீமனைப் பார்த்து. எனக்கு உடம்பு சரியாக இல்லை. படுத்திருக் கிறேன். நீ ஏன் என்னை எழுப்பினாய்? மனிதனாகிய நீ அறிவு படைத்திருக்கிறாய். விலங்குகளாகிய எங்களுக்குப் பகுத்தறிவு இல்லை. பகுத்தறிவு படைத்திருக்கும் மனிதர்கள் பிராணிகளிடம் கருணை காட்டுவது முறை. உன்னைப்போன்ற புத்திமான்கள் மிரு கங்களை இம்சிக்கலாகாது. நீ தருமத்தை அறியவில்லை போலிருக் கிறது. நீ யார்? எங்கே போக வந்திருக்கிறாய்? இம் மலையில் இதற்கு மேல் செல்ல முடியாது. இது தேவலோகத்திற்குப் போகும் பாதை. மனிதர்கள் இதைத் தாண்டிப் போக முடியாது. உன் வரவு நல்வரவு ஆகுக. நீ இங்கே பழங்களைப் புசித்து விட்டுத் திரும்பு. நான் சொல்வதைக் கேள்” என்றது வானரம். 

பீமனுக்குக் கோபம் பொங்கிற்று. “நீ யார்! வானர சரீரத்தை அடைந்து இவ்வளவு பேசுகிறாய்? நான் க்ஷத்திரியன். குருவம்சத்தில் பிறந்த வீரன். குந்தி தேவியின் மகன். வாயு புத்திரன் என்று என்னை அறிவாயாக! என்னைத் தடுக்காதே. வழியைவிட்டு விலகு!” என்றான். 

குரங்கு இந்தப் பேச்சைக் கேட்டுக் கொஞ்சம் புன் சிரிப்புச் செய்து, “நான் ஒரு குரங்கு. இந்த வழியில் சென்றாயானால் நீ நாசத்தை அடைவாய்” என்றது. 

பீமசேனன், “வானரமே! நான் நாசமடைந்தாலும் சரி, ஏதானாலும் சரி, உன்னை நான் கேட்கவில்லை. எழுந்து வழியை விட்டுப் போ. எனக்குக் கோபம் உண்டாக்க வேண்டாம்” என்றான். 

“எனக்கு எழுந்திருக்கச் சக்தி இல்லை. நான் கிழக் குரங்கு. அவசியம் போக வேண்டுமானால் என்னைத் தாண்டிச் செல்வாயாக” என்றது வானரம். 

“பிராணியைத் தாண்டிச்செல்லலாகாது என்பது சாஸ்திரம். ஆகையால் நான் உன்னைத் தாண்டிச்செல்லவில்லை. இல்லாவிடில் ஹனுமான் சமுத்திரத்தைத் தாண்டியது போல் உன்னையும் மலையையும் ஒரே பாய்ச்சலாகத் தாவிச் சென்றிருப்பேன்” என்றான் பீமன், 

“நர சிரேஷ்டனே! கடலைத்தாண்டிய அந்த ஹனுமான் வார்? உனக்குத் தெரிந்திருந்தால் எனக்குச் சொல்லவேண்டும்” என்றது வானரம். 

“ராமபத்தினியைத் தேடுவதற்காக நூறு யோசனை அகல முள்ள கடலைத் தாண்டியவனும், எனக்கு அண்ணனுமான ஹனு மானை உனக்குத் தெரியாதா? பலத்திலும் நான் அவனுக்குச் சமானமாவேன்! ஒரு காரியமாக நான் இங்கே வத்திருக்கிறேன். வழியை விடு, எழுந்திரு; நான் சொன்னதைக் கேளாயாகில் உன்னை யமலோகத்திற்கு அனுப்புவேன்’ என்று பீமன் வானரத்தை அதட்டினான். 

“வீரனே! தோஷமற்றவனே! கோபம் தணிவாயாக! முதுமையால் எனக்கு எழுந்திருக்கச் சக்தி இல்லை. என்னைத் தாண்டிச் செல்ல உனக்கு ஆட்சேபணை இருந்தால் என்மேல் கருணை கொண்டு இந்த வாலை நகர்த்தி விட்டுச் செல்வாயாக’ என்றது வானரம். 

தன்னுடைய புஜபலத்தில் கர்வங் கொண்ட பீமன் இவ்வாறு சொல்லப்பட்டவுடன், இந்தக் குரங்கை வாலைப்பிடித்து இழுத்து அப்புறம் தள்ளுவேன்’ என்று எண்ணி அதனுடைய வாலைப் பிடித்தான். 

வாலை அசைப்பதற்கே முடியவில்லை! பீமன் வியப்படை ந் தான். இரு கைகளையும் கொண்டு இழுத்துப் பார்த்தான். புரூ வங்கள் நெரிந்து விழி பிதுங்கி உடல் வியர்த்தது. வாலைத் தூக் சுக்கூட முடியவில்லை. வெட்கப்பட்டுத் தலை குனிந்து நின்றான். 

”நீர் யார்? என்னைப் பொறுக்கவேண்டும். நீர் சித்தரா? தேவரா? கந்தர்வரா? நீர் யார்? சிஷ்யன் கேட்கிறேன்; சரணம்” என்றான் பீமன். பலவானைக் கண்டால் பீமனுக்கு உடனே பக்தி. 

“தாமரைக் கண்ணனே! பாண்டவ வீரனே,சர்வ லோகங் களுக்கும் பிராண ஆதாரமான வாயுவின் மகன் ஹனுமான் நான் தான். தம்பி,பீமா! யக்ஷரும் ராக்ஷதர்களும் இருக்கும் இந்த வழி யில் நீ சென்றால் ஆபத்துக்கு ஆளாவாய் என்று உன்னை நான் தடுத்தேன். இது தேவலோகம் போகும் வழி. இதில் மனிதர்கள் செல்ல முடியாது. நீ தேடி வந்த சௌகந்திச் செடி இருக்கும் நீரோடையும் மடுவும் அதோ பார்!” என்றான் ஹனுமான்? 

“வானர சிரேஷ்டரே! உம்மைக் கண்டேனானதால் என்னைக் காட்டிலும் பாக்கியசாலி யாருமில்லை. உம்முடைய கடல் தாண் டிய வடிவத்தைப் பார்க்க ஆசைப்படுகிறேன்’ என்று சொல்லி பீமன் ஹனுமானை நமஸ்கரித்தான். 

ஹனுமான் நகைத்துத் தன்னுடைய வத்தை விருத்தி செய்துகொண்டு இரண்டாவது மலைபோல் தி சைகளை வியாபித்து நின்றா ன். பீமசேனன் அது வரையில் கேள்விப்பட்டு மட்டும் மகிழ்ந்து வந்த தன் அண்ணனுடைய திவ்ய ரூபத்தை இப்போது நேரில் பார்த்து ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தான். சூரி யனைப்போல் ஜொலிக்கும் அந்தப் பிரகாசத்தைத் தாங்காமல் கண்ணை மூடிக்கொண்டான். 

“பீமனே ! இதற்குமேல் வளர்ந்து உனக்குக் காட்ட இது சமயமல்ல. பகைவரின்முன் என் சரீரம் இன்னும் பெரிதாக வள ரும்” என்றான். 

பிறகு ஹனுமான் தன் வடிவத்தை முன்போல் சுருக்கிக் கொண்டு பீரசேனனை அன்போடு தழுவிக் கொண்டான்.மாருதி. 

நான் கொக்கல்ல 

பாண்டவர்கள் வனத்தில் வசித்த காலத்தில் ஒரு நாள் மார்க்கண்டேயர் வந்திருந்த சமயத்தில் தருமபுத்திரன் ஸ்திரீகளின் குணங்களை மிகவும் புகழ்ந்து பேசினான். 

“ஸ்திரீயின் பொறுமையையும் கற்பையும் விட வேறு என்ன வியப்பு உலகத்திலிருக்கிறது? கர்ப்பத்தை வயிற்றில் பத்து மாத காலம் காத்துத் தன் உயிருக்கே சந்தேகம் உண்டாகும் ஆபத் தையும், சொல்லுக்கு அடங்காத வேதனையையும் சகித்து ஸ்திரீயானவள் குழந்தையைப் பெறுகிறாள். அந்தக் குழந்தையை மிக்க அன்புடன் வளர்த்து இவன் எத்தகையவன் ஆவானோ என்று கவலைப்படுகிறாள். கொடிய கணவனை அடைந்த மனைவி பல துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டாலும் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு அவனிடம் பக்தியாகவே இருப்பதைப் பார்க்கிறோம். இது எவ்வளவு அற்புதமான விஷயம்!” என்றான். இதைக் கேட்ட மார்க்கண்டேயர் ஒரு புண்ய கதையைச் சொல்லலானார். 

மிக்க நியமத்துடன் பிரம்மச்சரிய விரதம் காத்த பிராம ணன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் கௌசிகன். ஒருநாள் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு வேதம் ஓதிக்கொண்டிருந் தான். அப்போது மரத்தின் மேலிருந்து அவன் தலையில் பறவை யின் எச்சம் விழுந்தது. மரக் கிளை ஒனறில் ஒரு கொக்கு இருப்பதைப் பார்த்து அதுதான் எச்சம் இட்டதென்று பிராமண னுக்கு அதன் பேரில் கோபம் உண்டாயிற்று. அவனுடைய பார்வை பறவையின் பேரில் பட்டதும் அது செத்துக் கீழே விழுந்தது. உயிரற்றுப் பூமியில் கிடந்த கொக்கைப் பார்த் ததும் பிராமணனுக்குத் துயரம் மேலிட்டது. 

மனத்தில் எழும் எண்ணங்கள் நிகழ்ச்சிகளாக வடிவம் கொள்ளுவதற்குப் பல புறக் காரணங்களும் சேர வேண்டும். அவை வந்து சேராத காரணத்தினால் அல்லவோ பல தீமைகளிலி ருந்து தப்புகிறோம்? எண்ணிய எண்ணங்களெல்லாம் எண்ணிய வாறு உட னே ஆகி விடுவதாக இருந்தால் உலகத்தின் கொடு மைகளைப் பொறுக்க முடியாமல் போகும். 

“கோபத்தால் நான் எண்ணிய எண்ணம் இந்த வேலை யைச் செய்து விட்டதே! ஒருபாவமும் அறியாத பறவையைக் கொன்றேனே!” என்று கெளசிகன் துயரப்பட்டான். பிறகு வழக் கம் போல் பிக்ஷை எடுக்கச் சென்றான். 

ஒரு வீட்டின் வாயிலில் பிக்ஷைக்காக நின்றான். அப்போது அந்த வீட்டுக்காரனுடைய மனைவி உள்ளே பாத்திரங்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். தன் வேலையை முடித்து விட்டுத் தன்னைக் கவனிப்பாள் என்று கெளசிகன் காத்துக் கொண்டிருந்தான். அப்போது அந்த ஸ்திரீயின் கணவன் வெளி யில் போயிருந்தவன் வீட்டுக்குத் திரும்பி வந்தான். வந்தவுடனே உள்ளே நுழைந்து “பசியாக இருக்கிறது” என்றான். அதைக் கேட்ட மனைவி பிக்ஷைக்காக வெளியில் காத்திருந்த பிராமணனைக் கவனியாமல் ஜலம் 
கொண்டு வந்து புருஷனுடைய கால்களைச் சுத்தம் செய்து ஆசனம் அமைத்து அவனுக்கு ஆகாரம் கொண்டு வந்து வைத்து உபசரித்தாள். 

வாயிலில் பிராமணன் காத்துக்கொண்டேயிருந்தான். புருஷன் சாப்பிட்டு முடிந்த பின் காத்திருந்த கெளசிகனு க் குப் பிக்ஷை எடுத்துக்கொண்டு வந்தாள். தங்களை வெகு நேரம் காக்க வைத்தேன். மன்னிக்க வேண்டும். என்று சொன்னாள். 

கோபத்தினால் நெருப்பைப் போல் ஜொலித்துக்கொண்டி ருந்த கௌசிகன் “அம்மா பல வீடுகளுக்குப் போக வேண்டியவனை இவ்வாறு அலட்சியம் பண்ணிக் காக்க வைத்தாய்! இது தகாது!” என்றான். 

பிராமணனைப் பார்த்து ஸ்திரீயானவள் “பிராமணோத்தமரே! பொறுத்துக்கொள்ள வேண்டும். என் புருஷனுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தேன். அதனால் நேரமாகி விட்டது” என்றாள். 

“புருஷனைக் கவனிப்பது தருமமே! ஆனால் பிராமணர்களை அவமதித்தல் கூடாது. நீ கர்வம் கொண்டவளாக இருக்கிறாய்” என்றான். 

“கோபிக்காதீர்! புருஷனைக் கவனித்துக்கொண்டிருந்த ஸ்திரீயின் பேரில் நீர் பொறுமையை இழத்தலாகாது. நான் கொக்கல்ல! கணவனுக்குப் பணிவிடை செய்வதில் ஈடுபட்டிருக்கும் ஸ்திரீயை உம்முடைய கோபம் ஒன்றும் செய்ய இயலாது” என்றாள். 

பிராமணனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. “கொக்கைப் பற்றி இவளுக்கு எப்படித் தெரிந்தது?” என்று வியந்தான். 

ஸ்திரீ இன்னும் சொல்லலானாள். “பெரியவரே! உமக்குத் தருமத்தின் ரகசியம் தெரியவில்லை. மனிதனுக்குக் கோபம் சரீரத்துக்குள்ளேயே இருக்கும் பெரும் பகையாகும். அதை நீர்  அறியவில்லை. என் குற்றத்தை மன்னித்து நீர் மிதிலைக்குச் சென்று அவ்விடமிருக்கும் தருமவியாதனிடம் உபதேசம் பெறுவீராக!” என்றாள். 

பிராமணன் ஆச்சரியமடைந்தான். “அம்மணி ! உனக்கு மங்களம்! நீ என்னை நிந்திப்பது நன்மையென்றே கருதுகி றேன். நீ எல்லா பாக்கியமும் அடைவாயாக!” என்று சொல்லி விட்டு மிதிலைக்குச் சென்றான். 


கௌசிகன் மிதிலைக்குப் போய் தருமவியாதன் எவ்விட மிருக்கிறான் என்று விசாரித்துத் தேடினான். 

தனக்குத் தருமத்தை உபதேசிக்கத் தக்கவராகச் சொல் லப்பட்ட பெரியவர் ஏதோ ஒரு தனித்த ஆசிரமத்தில் இருப்பார் என்று நினைத்துத் தேடிப் போன பிராமணன் பல அழகிய வீடுகளும் தோட்டங்களும் தாண்டிய பிறகு ஒரு கசாப்புக் கடையில் ஒருவன் இறைச்சி விற்றுக் கொண்டிருந்ததைப் பார்த் தான். அவனை “இவர்தான் தருமவியாதர்” என்று ஜனங்கள் காட்டினார்கள்.! 

பிராமணனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. தூரத்தில் வெறுப் புடன் நின்றான். கசாப்புக் கடைக்காரன் பரபரப்பாக எழுந்து பிராமணரிடம் வந்து பகவானே! உமக்குச் சுபம்! அந்த மகா பதிவிரதையான பிராமண ஸ்திரீ உங்களை என்னிடம் அனுப்பினாளா? என்று கேட்டான். 

பிராமணன் பிரமித்துப் போனான். 

“சுவாமி! நீர் வந்த காரியம் எனக்குத் தெரியும்! வாரும்!” என்று கசாப்புக் கடைக்காரன் பிராமணனைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அவ்விடம் அவன் தன் தாய் தந்தையர்களுக்குப் பக்தியுடன் பணிவிடை செய்வதைக் கண் டான். பிறகு கௌசிகன் அந்த மாமிசம் விற்பவனால் மனித வாழ்க்கையைப் பற்றியும் தொழிலைப் பற்றியும் கடமையைப் பற்றியும் உபதேசம் பெற்றான். பிறகு தன் ஊருக்குத் திரும்பிச் சென்று அது வரையில் சரியாகக் கவனிக்கப்படாத தன் பெற்றோர் களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினான். 

தரும வியாதர் கதையே கீதையின் உபதேசமும். எல்லாப் பொருள்களிலும் ஈசன் இருப்பதால் எந்தத் தொழிலும் அவன் தொழிலே. சமுதாய அமைப்பினாலோ விசேஷ சந்தர்ப் பத்தின் காரணமாகவோ அல்லது தன் முயற்சியின் பயனாகவோ மனிதனுக்குத் தொழில்கள் ஏற்படுகின்றன. எந்தத் தொழிலை யும் தருமம் தவறாமல் சரிவரச் செய்து வந்தால் அதுவே பக வானை உபாசித்தபடியாகும். கசாப்புக் கடை வேலையும் இதில் சேரும் என்கிற இந்தப் பிரசித்தமான கதையை மார்க்கண்டேய ரிஷி சொல்லித் தருமபுத்திரன் கேட்ட தாக மகாபாரதத்தில் வேத வியாசர் அற்புதமாய்ச் சேர்த்திருக்கிறார். 

துஷ்டர்களுக்குத் திருப்தி ஏது? 

வனவாசத்திலிருந்து பாண்டவர்களைப் பார்த்து விட்டுத் திரும்பி வந்த ஒரு பிராமணன் ஹஸ்தினாபுரத்தில் அரண்மனைக் குச் சென்று திருதராஷ்டிரன் செய்த மரியாதைகளைப் பெற்றுக் கொண்டு பாண்டவர்கள் இருந்த நிலைமையைப் பற்றி அரசனு க் குச் சொன்னான். காற்றிலும் வெய்யிலிலும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்த ராஜகுமாரர்களைப் பற்றிப் பிராமணன் சொன்ன தைக் கேட்ட திருதராஷ்டிரன் இந்த அனர்த்தம் எந்த விதமாக முடியுமோ என்று கவலைப்பட்டான். 

யுதிஷ்டிரனுடைய கட்டளைக்கு அடங்கிப் பீமன் எவ்வளவு தன் கோபத்தைத் தடுத்துக் கொள்வான்? என்றைக்கா வது ஒரு நாள் பாண்டவர்களுடைய கோபம் கரை உடைந்து பிர வாகமாகப் புரண்டோடும் என்பது திருதராஷ்டிரனுடைய பயம். 

அருச்சுனனும் பீமனும் நம்மை நிச்சயமாகத் தண்டிப்பார்கள். சகுனியும் கர்ணனும் துரியோதனனும் மந்தபுத்தியுள்ள துச்சாதனனும் கொம்புத் தேனுக்காக மரத்து நுனியில் ஏறி விட்டு அங்கே தொங்குகிறார்கள். கீழே பீமனுடைய கோபம் என்கிற படுகுழி அவர்களுடைய நாசத்திற்காக வாய் திறந்து காத்திருப்பது அவர்களுக்குத் தெரிய வில்லையே!” என்று அரசன் ஏங்கினான். 

“ஐயோ! என்ன காரணத்தினால் பேராசைக்குப் இரை யானோம்? நமக்கு ஒரு குறையுமில்லாதிருக்க ஏன் இவ்வாறு செய்தோம்? எதற்காக அநீதியில் இறங்கினோம்? இருக்கும் பொருளை நல்ல வழியில் செலவு செய்து சுகமாக இருக்காமல் துராசைப்பட்டோம். நாம் செய்த பாவம் தன் பயனைத் தரா மல் போகாது. தனஞ்சயன் இந்திர லோகம் சென்று திவ்யாஸ் திரங்களைப் பெற்றுத் திரும்பி வந்திருக்கிறான். சரீரத்தோடு சுவர்க்கம் சென்ற அருச்சுனன் திரும்பி வந்திருக்கிறான். எங்கள் பேரில் பழி வாங்க வேண்டும் என்றல்லவோ இவ்வாறு செய்தி ருக்கிறான்? இல்லாவிடில் எந்த மனிதன் இந்திரலோகம் அடைந்தும் அதை விட்டுவிட்டுத் திரும்புவான்?” என்றிவ்வாறெல் லாம் எண்ணி எண்ணித் திருதராஷ்டிரன் சிந்தனையில் ஆழ்ந்தான். 

திருதராஷ்டிரன் இவ்வாறு கவலைப்பட்டான். ஆனால் சகுனி யும் கர்ணனும் துரியோதனனும் கவலைப்படவில்லை. அவர்கள் போக்கே வேறாக இருந்தது. நல்ல அதிர்ஷ்டம் அடைந்தோம் என்று அவர்கள் ஒருவரை ஒருவர் புரோத்ஸாகப்படுத்திக் கொண்டு மகிழ்ந்தவர்களாக இருந்தார்கள். 

“யுதிர்ஷ்டிரனிடத்தில் ஜொலித்துக் கொண்டிருந்த ராஜ்ய லக்ஷ்மி, எங்களிடம் வந்து விட்டது. இனிப் பொறாமையால் நாம் வாடி வதங்க வேண்டியதில்லை. இதற்கெல்லாம் உன் கூர்மை யான புத்தியே காரணம்’ என்று கர்ணனும் சகுனியும் துரி யோதனனுக்குச் சொன்னார்கள். 

இதைக் கேட்ட துரியோதனன் “கர்ணா! நீ சொல்கிற தெல்லாம் உண்மை ஆனால் பாண்டவர்கள் கஷ்டப்படுவதை என் கண்ணால் பார்க்கவேண்டுமே! நம்முடைய சந்தோஷத்தை யும் அவர்கள் பார்க்க வேண்டும்! பகைவர்களுடைய கஷ்டத்தை நாம் கண்ணால் நேரில் பார்த்தாலல்லவோ நம்முடைய மகிழ்ச்சி பூர்த்தியடையும். இதற்கு என்ன செய்யலாம்? வனத் ற்குப் போய்ப் பாண்டவர்களைக் காணவேண்டும். ஆனால் தகப் யனார் இதற்கு அனுமதி தரமாட்டார்” என்று சொல்லி வருத்தப் பட்டான். 

நம்மைவிடப் பாண்டவர்கள் தவ வன்மை பெற்றிருப்பதாக எண்ணி அவர்களைக் கண்டு அரசர் பயப்படுகிறார். வனம் சென் பாண்டவர்களைச் சந்தித்தால் ஏதோ ஆபத்து நேரிடும் என்று எண்ணி அனுமதி தரமாட்டேன் என்கிறார். திரௌபதியும், பீமனும், அருச்சுனனும் அரணியத்தில் கஷ்டப்படுவதைப் பார்க்க காமலிருந்தால் இவ்வளவு செய்தும் என்ன பிரயோஜனம்? வெறு மனே இவ்விடம் ராஜ்ய பாரம் பெற்றுச் சுகமாக இருப்பதில் நான் திருபதி அடையவில்லை. வனத்துக்குப் போய்ப் பாண்டவர்களைப் பார்க்க, திருதராஷ்டிரனுடைய அனுமதியைப் பெற நீயும் சகுனி யும் எப்படியாவது ஒரு வழி தேட வேண்டும்!” என்று துரியேர்தனன் கர்ணனை வேண்டிக்கொண்டான். 

மறுநாள் காலை கர்ணன் வெகு சீக்கிரமாக எழுந்து து ரியோ தன்னிடம் வந்தான். கர்ணனுடைய முகத்தில் சந்தோஷக் குறி யைக் கண்டு துரியோதனன் என்னவென்று விசாரித்தான். 

உபாயம் கண்டேன். துவைத வனத்தில் நம்முடைய இடைச் சேரிகள் இருக்கின்றன. அந்தப் பசுக்கூட்டங்களை வருஷத்துக் கொருமுறை எண்ணிக் கணக்கெடுத்து இடையர்களையும் விசாரித்து வரவேண்டியது நம்முடைய கடமை. புராதனமாக இவ் வாறு நடைபெற்று வருகிறது. அதை வியாஜமாக வைத்துக் கொண்டு அரசர் அனுமதியைப் பெறலாம்” என்று கர்ணன் சொன்னதும் துரியோதனனுக்கும் சகுனிக்கும் அளவற்ற சந் தோஷமுண்டாயிற்று. 

“நல்ல உபாயம்! நல்ல உபாயம்!” என்று ஒருவர்க்கொருவர் கைகொடுத்துச் சிரித்து மகிழ்ந்தார்கள். 

இடையர்களின் தலைவனுக்குச் சொல்லியனுப்பி அவனுடனும் பேசி முடித்தார்கள். 

“பசுக்கள் தயாராக இருக்கின்றன. வனத்தில் அழகிய இடத் தில் எல்லா ஏற்பாடுகளும் செய்திருக்கிறோம். ராஜ குமாரர்கள் வந்து கால்நடைகளின் வயது, நிறம், ஜாதி, பெயர்,இவைகளைப் பார்த்து வழக்கம்போல் கணக்கெடுத்துக் குறித்துக்கொண்டு கன்றுகளுக்கு அடையாளமுமிட்டு வனத்தில் வேட்டையாடிப் பசு யாத்திரை முடித்துககொண்டு நகரம் திரும்பலாம்” என்று இடையர்களின் தலைவன் திருதராஷ்டிரனிடம் விண்ணப்பம் செய்தான். ராஜகுமாரர்களும் இதற்கு அனுமதி தரவேண்டும் என்றும் தகப்பனை வற்புறுத்தினார்கள். 

திருதராஷ்டிரன் ஒப்பவில்லை. “ராஜகுமாரர்களுக்கு வேட்டை நல்லதுதான். பசுக்களைப் பரிசீலனை செய்வதும் நல்லதே. ஆனால் இந்த வனத்தில் பாண்டவர்கள் இருப்பதாகக் கேள்விப் பட்டேன். அவ்விடம் நீங்கள் செல்வது சரியல்ல. கோபத்துக்குக் காரணம் இருக்கும் காலத்தில் அந்தப் பீமார்ஜூனரிடம் உங்களை அனுப்ப நான் சம்மதிக்கமாட்டேன்” என்றான். 

அவர்கள் இருக்குமிடம் நாங்கள் போக மாட்டோம். மிகவும் ஜாக்கிரதையாக இருப்போம்.’ என்றான் துரியோதனன்.

“நீங்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக. இருந்தாலும் அபர் யம் உண்டாகும். வனவாசத்தினால் வருத்தமடைந்திருக்கும். பாண்டவர்கள் இருக்குமிடத்துக்கு நீங்கள் போவது சரியல்ல. உங்கள் பரிவாரத்தில் யாராவது ஒரு போர் வீரன் பாண்டவர் கள் இருக்குமிடம் சென்று அறிவீனத்தால் மரியாதைக் குறை வாக நடந்து கொள்வான். அதனின்று பெரும் கலகம் நேரிடும். வேறு யாராவது உங்களுக்காகப் போய்ப் பசுக்களை எண்ணும் காரியத்தை முடித்து விட்டு வரலாம்'” என்றான் அரசன். 

சகுனி “அரசனே யுதிஷ்டிரன் தருமத்தை அறிந்தவன். சபையில் பிரதிக்ஞை செய்திருக்கிறான். பாண்டவர்கள் அனை வரும் அவன் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நிற்பார்கள். நம்மிடம் குந்தி புத்திரர்கள் கோபத்தைக் காட்ட மாட்டார்கள். வேட் டையில் பிரியமுள்ள துரியோதனனைத் தடுக்க வேண்டாம். வழக்கம்போல் பசுக்களைப் பரிசீலனை செய்துவரட்டும். நானும் கூடப் போய்ப் பார்த்துக் கொள்கிறேன். வனத்தில் பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்கு நாங்கள் யாருமே போக மாட்டோம்” என்று வாக்குறுதி செய்து அனுமதி கொடுக்கும் படி கேட்டுக்கொண்டான். 

“சரி, இஷ்டப்படி செய்யுங்கள்!” என்றான் அரசன் : 

துவேஷம் கொண்ட உள்ளத்துக்குத் திருப்தி. என்பது கிடையாது. எரியும் தீயைப்போல் விறகு போடப் போட இன்னும் பெரிதாக எரிந்துகொண்டு ‘போதாது, போதாது” என்று இரை கேட்டுக்கொண்டேயிருக்கும். 

துரியோதனன் அவமானப்பட்டது 

பெரிய சேனையும் பரிவாரமும் கூட்டிக்கொண்டு கௌரவர் கள் துவைத வனம் சென்றார்கள். பாண்டவர்களுடைய கஷ்ட நிலைமையைக் கண்ணால் பார்த்து ஆனந்தம் அடைவோம் என்று துரியோதனனும் கர்ணனும் அடக்க முடியாத மகிழ்ச்சி யுடன் போனார்கள். பாண்டவர்கள் இருந்த இடத்துக்கு நான்கு நாழிகை தூரத்தில் தங்களுடைய பரிவாரத்துக்கு பார்த்து விடுதிகளும் அமைத்துக் கொண்டார்கள். 

அங்கங்கே இருந்த மாட்டு மந்தைகளையெல்லாம் பார்த்து எண்ணி அடையாளமிட்டார்கள். பசுக்களையும் காளைகளையும் கணக்கெடுத்து முடிந்த பிறகு இடைச்சேரியில் ஆட்டமும் நர்த் தனமும் பார்த்து மகிழ்ந்தார்கள். அதன் பிறகு காட்டிலுள்ள மிருகங்களை வளைத்து வேட்டையாடினார்கள். 

வேட்டையாடிக்கொண்டே சென்ற துரியோதனன் பாண்டவர்களுடைய ஆசிரமத்தண்டையிருந்த தடாகத்தை அடைந்தான்.  அங்கேயே சில நாள் தங்கலாம் என்று தன்பரிவாரத்துக்கு உத்தரவிட்டான். 

துவைத வனத்துத் தடாகத்தண்டை கந்தர்வராஜன் சித்திர சேன ம் அவன் பரிவாரமும் வந்து தங்கியிருந்தார்கள். துரி யோதனனுடைய உத்தியோகஸ்தர்களை “இவ்விடம் நீங்கள் தங்கக் கூடாது. போங்கள்” என்று கந்தர்வர்கள் தடுத்து விட் டார்கள். அவர்கள் துரியோதனனிடம் சென்று வேறு யாரோ சிற்றரசன் தன் பரிவாரத்தோடு இருப்பதாகவும் தங்க ளைத் தடுத்ததாகவம் கொன்னர்கள். 

துரியோதன கோபங் காண்டு “என் உத்தரவைத் தடுக்கும்படியான அரசன் யார்? திரும்பிப் போய் அவர்களைத் துரத்தி விட்டு மறுகாரியம் பாருங்கள்” என்றான். 

அவ்வாறே வேலைக்காரர்கள் தடாகத்தண்டை போய் விடுதிகள் கட்ட ஆரம்பித்தார்கள். கந்தர்வர்கள் அவர்களைத் துரத்தி அடித்து விரட்டி அப்புறப்படுத்தி விட்டார்கள். 

துரியோதனனுக்கு கு இந்தச் செய்தி எட்டியதும் மகா கோபங் கொண்டு பெருஞ் சேனையோடு தடாகத்தண்டை இருக்கும் குறும்புக்காரர்களை யெல்லாம் துவம்சம் செய்து விடப் போனான். 

கந்தர்வர்களுக்கும் து ரியோதனன் படைக்கும் பெரும் யுத்தம் நடந்தது. முதலில் சாதாரண முறையில் யுத்தம் நடந்தது. அதில் கந்தவர்கள் தோல்வி யடைந்தார்கள். இது தெரிந்ததும் கந்தர்வராஜனான சித்திரசேனன் கோபங் கொண்டு தன்னுடைய LOFT WI அஸ்திரங்களைப் பிரயோகித்தான். கர்ணனுடன் மற்ற கௌரவ வீரர்களும் தேரும் ஆயுதங்களும் இழந்து புறங் காட்டி ஓட வேண்டியதாயிற்று. துரியோதனன் ஓடாமல் யுத்த களத்தில் நின்றான். சித்திரசேனன் அவனை உயிருடன் பிடித்துக் கயிற்றால் கட்டி தன் ரதத்தில் தூக்கிப் போட்டுக் கொண்டு சங்கநாதம் செய்தான். கெளாவ வீரர்களில் முக்கியமானவர்கள் பலரைக் கந்தர்வர்கள் சிறைப்படுத்தினார்கள். கௌரவ சேனை சிதறியடிக்கப்பட்டுச் சிலர் பாண்டவர்களுடைய ஆசிரமத்துக்கு ஓடிப் போய் முறையிட்டார்கள்.

பீமனுக்குச் சந்தோஷம் பொங்கிற்று.’நாம் செய்ய வேண் டியதை இந்தக் கந்தர்வர்கள் செய்தார்கள். நம்மைப் பார்த்து ஏளனம் செய்ய வந்த இந்தத் துரியோதனனுக்குத் தகுந்த சிட்சை ஏற்பட்டது. நாம் செய்ய வேண்டிய பொறுப்பை இந்தக் கந்தர்வ நண்பன் ஏற்றுக்கொண்டான். அவனுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்” என்று பீமன் தன் மகிழ்ச்சியை யுதிஷ்டிரனிடம் தெரி வித்துக்கொண்டான். 

“அப்பனே! நீ மகிழ்வது சரியல்ல. நம்முடைய குலத்தவர்கள் சிறைப்பட்டு இருப்பதையறிந்து நாம் சும்மா இருக்கலாகாது. போய் துரியோதனனை விடுவிப்பாயாக!” என்றான் தருமபுத்திரன். 

பீமனுக்கு யுதிஷ்டிரன் சொன்னது பிடிக்கவில்லை. 

“நம்மை வஞ்சித்து அரக்கு மாளிகையில் எரித்துக் கொல்லப் பார்த்த இந்தப் பாதகனை நான் ஏன் போய் மீட்க வேண்டும்? என் உணவில் விஷம் கலந்து என்னைக் கட்டிப்போட்டுக் கங்கையில் மூழ்க வைத்துச் சாகடிக்கப் பார்த்த இந்தத் துரியோதனன் மேல் ஏன் இரக்கம் கொள்கிறீர்? திரௌபதியைச் சபையின் முன் இழுத்து அவமானம் செய்த இந்தக் கொடிய நீசர்களிடம் ஏன் சகோதர பாவம் வைக்க வேண்டும் என்கிறீர்?” என்றான். 

அந்தச் சமயத்தில் பிடிபட்ட துரியோதனனுடைய கூக்குரல் கேட்டது. தர்மபுத்திரன் பரபரப்புடன் பீமனுடைய ஆட்சே பணை தகாதது என்று சொல்லித் தம்பிகளை உடனே போய்க் கௌரவர்களை மீட்டுக்கொண்டுவர உத்திரவிட்டான். 

இதன் மேல் பீமனும் தனஞ்சயனும் தோல்வியடைந்த கெளரவர்களுடைய சேனையை மறுபடியும் திரட்டிக் கூட்டிக் கொண்டு போய்க் கந்தர்வர்களுடன் யுத்தம் துவக்கினார்கள். 

பாண்டவர்கள் வந்ததும் சித்திரசேனன் தன் கோபத்தை விட்டான். துராத்மாக்களான கௌரவர்களுக்குப் பாடம் கற்பிக் கத்தான் இவ்வாறு செய்தேன்” என்று சொல்லி, கட்டுக்களை அவிழ்த்து விட்டு ஊருக்கு உட னே போங்கள்” என்று துரியோ தனாதியர்களை அனு ப்பி விட்டான். அவமானப்பட்ட கௌரவர்க ளும் ஹஸ்தினாபுரத்துக்கு விரைவாகத் திரும்பினார்கள். புறங் காட்டி ஓடிய கர்ணன் துரியோதனனை வழியில் சந்தித்தான். 

‘கர்ணனே!நான் அந்தச் சித்திரசேனனால் கொல்லப்பட்டு மாண்டு போயிருந்தால் நன்றா யிருந்திருக்கும்'” என்றான் துரியோதனன். 

கர்ணன் என்ன  சமாதானம் சொல்லியும் துரியோதனன் கேட்கவில்லை. “நான் இவ்விடமே உபவாசமிருந்து உயிர் நீப் பேன், துச்சாதனா! நீ பட்டம் பெற்றுக்கொண்டு ராஜ்யத்தை ஆள்வாய். பகைவர்கள் முன் பரிகசிக்கப்பட்டு இனி என்னால் உயிர் வைத்துக்கொண்டிருக்க முடியாது” என்றான். 

துச்சாதனன் அண்ணன் காலைப் பிடித்துக்கொண்டு வேண் டாம் என்று அழுதான். இவ்வாறு சகோதரர்கள் புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கர்ணனுக்குப் பொறுக்கவில்லை. 

“குரு வம்சத்தவர்களே! இது உங்களுக்குத் தகாது. அற்பர் களைப் போல் ஏன் புலம்புகிறீர்கள்! சோகத்தில் என்ன நன்மை யைக் காண்கிறீர்கள்? தைரியத்தை அடையுங்கள். நீங்கள் துயரப்பட்டால் உங்களுடைய பகைவர்களுக்கு அதில் மகிழ்ச்சி உண்டாகுமேயொழிய வேறு பயனில்லை. பாண்டவர்களைப் பாருங் கள்! அவர்களுக்கு நேர்ந்த அவமானங்களைக் கண்டு அவர்கள் பிராயோபவேசம் செய்யவில்லை!” என்றான் கர்ணன். 

சகுனி பேச ஆரம்பித்தான். கர்ணன் சொன்னதைக் கேள். பாண்டவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட ராஜ்யத்தை நீ அனுபவிக்க வேண்டியதாயிருக்க ஏன் உயிரைத் துறக்க வேண் டும் என்கிறாய்? உன்னுடைய யோசனை விபரீதமாக இருக்கிறது. எழுந்து வா! அல்லது இதுவரையில் செய்ததற்கு வருத்தப்படு வதாயிருந்தால் பாண்டவர்களோடு சிநேகிதம் செய்துகொண்டு அவர்களுக்கு ராஜ்யத்தைத் திருப்பிக்கொடுத்து விட்டுச் சுகத்தை அடை!” என்றான். 

இந்தப் பேச்சைக் கேட்டதும் மறுபடியும் துரியோதன் க் குத் துர்ப் புத்தி மேலோங்கிற்று. அதுவரையில் தான் சொல்லி வந்தது ஏதோ சுவப்பனம் போல் தோன்றிற்று. பாண்டவர்களை ஜெயிப்பேன்” என்று கத்தினான். 

“பேஷ்!” என்றான் கர்ணன். 

“மரணத்தில் என்ன நன்மை இருக்கிறது? உயிரோடு இருந்தாலல்லவா நன்மைகளை அடையலாம்?” என்று சொல்லிக் கர்ணன் துரியோதனனை ஆலிங்கனம் செய்துகொண்டான். 

எல்லோரும் ஊர் திரும்பினார்கள். போகும்போது கர்ணன் “நான் உனக்குச் சபதம் செய்து வாக்குத் தருகிறேன். பதின் மூன்று வருஷங்கள் கழிந்ததும் நான் யுத்தத்தில் அருச்சுனனைக் கொல்லுவேன்” என்று கத்தியைத் தொட்டுத் துரியோதனனுக் குப் பிரதிக்ஞை செய்து கொடுத்தான். 

கண்ணன் பசி 

பாண்டவர்களின் வனவாச காலத்தில் துரியோதனன் ஒரு பெரிய யாகம் செய்து சிறப்பாக முடித்தான். முதலில் ராஜசூய யாகமே செய்யலாம் என்று ஆரம்பித்தான். ஆனால் பிராமணர்கள் யுதிஷ்டிரனும் திருதராஷ்டிரனும் உயிருடன் இருக்கும்போது நீ ராஜசூயம் செய்ய இயலாது. வைஷ்ணவம் என்கிற சிறந்த யாகம் ஒன்று உண்டு. ராஜசூயத்திற்குப் பதிலாக அதைச் செய்யலாம்.” என்றார்கள். 

அவ்வாறே செய்தான். யாகம் முடிந்த பின் நகரத்தில் சிலர் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். “இது என்ன யாகம்? யுதிஷ்டிரன் செய்வித்த ராஜசூயத்தின் பதினாறில் ஒரு அம்சத்து க்கு ஈடாகாது.” என்றார்கள். ஆனால் துரியோதன்னுடைய நண் பர்கள் அவனைப் புகழ்ந்து அவன் செய்த யாகத்தின் சிறப்பை எடுத்துப்பேசி அது யாயதி, மாந்தாதா, பரதன் முதலானோர் செய்த யாகத்துக்குச் சமானமாகும் என்றார்கள். துரியோதனன் இந்தப் புகழ்ச் சொற்களைக் கேட்டுச் சந்தோஷமடைந்தான். 

அரண்மனையை அண்டிப் பிழைத்த மற்ற ஸ்துதிக்காரர்க ளும் துரியோதனனை ஸ்தோத்திரம் செய்து அவன் மேல் நெல் பொரியும் சந்தனத் தூளும் வாரி இறைத்தார்கள். அச்சமயத்தில் கர்ணன் எழுந்து துரியோதனனைப் பார்த்து “சீக்கிரம் யுத்தத்திவ் பாண்டவர்கள் தோல்வியடைந்து கொல்லப்படுவார் கள். பிறகு நீ ராஜசூய யாகமும் செய்வாய். அருச்சுனனை நான் வதம் செய்வேன், அது வரையில் நான் என் கால்களைத் தண்ணீர் விட்டு அவம்பு மாட்டேன். மாமிசம் உண்ண மாட்டேன். மதுவைத் தீண்ட மாட்டேன். எவன் என்ன யாசித்தாலும் இல்லை என்று சொல்ல மாட்டேன் என்று சபையில் பிரதிக்ஞை செய்தான். 

இதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த திருதராஷ்டிர புத்திரர் கள் பேராரவாரம் செய்தார்கள். மகாரதனான கர்ணனுடைய சபதத்தைக் கேட்டதும் பாண்டவர்களுடைய கதி முடிந்தது என்றே அவர்கள் நிச்சயம் செய்து கொண்டார்கள். 

கர்ணன் அர்ச்சுனனைக் கொல்வேன் என்று யாகசபையில் பிரதிக்ஞை செய்ததைப் பற்றி வனத்திலிருந்த பாண்டவர்களி டம் சாரணர்கள் போய்ச் கொன்னார்கள். இந்தப் பேச்சைக் கேட்ட தருமபுத்திரன் துயரத்தில் ஆழ்ந்தான். நெடு நேரம் தரையைப் பார்த்த வண்ணம் இருந்தான். கர்ணன் தெய்வீக கவசம் படைத்தவன். அற்புதமான பராக்கிரமசாலி. காலமும் நமக்கு விரோதமாக இருக்கிறது’ என்று எண்ணிக் கவலைப்பட்டான். 

ஒரு நாள் காலையில். யுதிஷ்டிரன் தூக்கத்தின் முடிவில் ஒரு கனவு கண்டான். அநேகமாகக் கனவுகள் தூக்கத்தின் முதலி லும் முடிவிலுமே வரும். துவைத வனத்திலிருந்து துஷ்ட மிருகங் கள் வந்து தன்னிடம் முறையிட்டதாகக் கனவு கண்டான். களை வேட்டையாடிப் பெரும்பாலும் கொன்று தீர்த்துவிட்டீர்கள். நாங்கள் அடியோடு நாசமாகாமலிருக்க வேண்டும். தயவு – செய்து நீங்கள் வேறு டம் சென்று வனவாசம் செய்யுங்கள்.நாங்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைந்து விட்டோம். மிச்சமிருக்கிற நாங்கள் சிலரே எங்கள் குலத்துக்கு வித்தாக இருக்கிறோம். உம்முடைய அருளால் நாம் விருத்தி அடையக் கடவோம். உமக்கு மங்களம். எங்கள் மீது தயை செய்யக் கடவீர்”. என்று கண்ணீரும் கம்பலையுமாக மிருகங்கள் கனவில் சொல்லின. இந்தக் கனவு யுதிஷ்டிரனை மிகவும் வாட்டிற்று. சகோதரர்களுக்கு விஷ யத்தைச் சொல்லி அவர்களும் உடன்பட, எல்லாரும் வேறு வனம் சென்றார்கள். 

காட்டையும் காட்டு மிருகங்களையும் அழித்து விடலாகாது என்பது நம்முடைய முன்னோருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. 


ஒரு நாள் துருவாச ரிஷி பதினாயிரம் சிஷ்யர்களுடன் துரி யோதனனிடம் வந்தார். ரிஷியின் சாபத்துக்குப் பயந்து மிகவும் கவனமாக நேரில் தானே எல்லாக் காரியங்களையும் துரியோதனன் வகித்து அதிதி பூஜையை வெற்றிகரமாகவே முடித்தான். ரிஷி திருப்தி அடைந்து உனக்கு என்ன வரம் வேண்டும்என்று கேட்டார் 

அதிகக் கோப சுபாவமுள்ள அந்த முனிவரைத் திருப்தி செய்தது, தான் மறுபடியும் பிறந்த மாதிரி என்று துரியோதனன் மகிழ்ந்தான். என்ன வரம் கேட்கலாம் என்று ஆலோசித்தான். பாப சுபாவம் படைத்த அந்த ராஜகுமாரன் கேட்ட வரமாவது:- 

“சுவாமி சிஷ்யர்களோடு எனக்கு அதிதியாக வந்ததைப் போலவே, வனத்திலிருக்கிற எங்கள் சகோதரர்களான பாண்ட வர்களிடமும் போய் அதிதியாக இருக்க வேண்டும். மகாராஜனும் எங்கள் குலத்தில் மிக்க சிறப்புப் படைத்தவருமான யுதிஷ் டிரரிடம் தாங்கள் செல்ல வேண்டும். என்னிடத்தில் அனுக்கிர கம் வைத்து, அவருக்கு அதிதியாகக் கடவீர். ராஜபுத்திரி பாஞ் சாலியானவள் பாண்டவர்களுக்கும் அவர்களுடைய பரிவாரத்தி லுள்ள எல்லோருக்கும் போஜனம் செய்வித்துக் களைப்பாற்றிக் கொண்டு சுகமாக உட்கார்ந்திருக்கும் பொழுது தேவரீர் அவர்க ளிடம் செல்ல வேண்டும் என்பது என் வேண்டுகோள்”. 

இவ்வாறு துரியோதனன் சொன்னதும் ஜனங்களைப் பரீட்சை செய்வதில் எப்போதும் பிரியம் கொண்ட துருவாசரும் “அப்படியே செய்கிறேன்” என்றார். 

துரியோதனன் இவ்வாறு கேட்டுக்கொண்டதன் நோக்கம் அதிதி பூஜையைத் திருப்தியான முறையில் செய்யச் சக்தியில் லாமல் பாண்டவர்கள் முனிவருடைய கோபத்திற்கு இரையாகி சாபத்தை அடைவார்கள் என்கிற கெட்ட எண்ணம். முனிவரிடம் வரம் பேற்று ஏதாவது தான் நன்மை அடைவதற்குப் தீமை விளைவிப்ப பதிவாகத் தனக்கு வேண்டாதவர்களுக்குத் தையே பெரியதாகத் துரியோதனன் எண்ணினான். இதுவே தீயவர்கள் சுபாவம். 

துரியோதனன் கேட்டுக்கொண்டபடியே துருவாசர் சிஷ்யர்களுடன் வனத்திலிருந்த யுதிஷ்டிரனிடம் சென்றார். தம்பிமார்க ளுடன் தருமபுத்திரன் முனிவரை எதிர்கொண்டழைத்து உபசரித் தான். பிறகு “ஆற்றில் குளித்து விட்டு வருகிறோம்.சாப்பாடு தயாராக இருக்க வேண்டும்” என்று சொல்லி விட்டு முனிவரும் சீடர்களும் அவசரமாக ஸ்நானத்துக்குச் சென்றார்கள். 

வனவாச ஆரம்பத்தில் யுதிஷ்டிரன் செய்த தவத்தினால் சூரிய பகவான் பிரத்யட்சமாகி ஒரு அட்சய பாத்திரத்தைப் பாண்டவர்களுக்குத் தந்தான். தைப் பெற்றுக் கொள்.பன்னி ரண்டு வருஷம் இதன் மூலம் உனக்கு அன்னம் தருவேன். தினமும் திரௌபதி இந்தப் பாத்திரத்தைக் கொண்டு எவ்வளவு பேருக்கு அன்னம் அளிக்க விரும்புகிறாளோ, அது வரையில் அன்னம் வளரும். அனைவருக்கும் உணவு அளித்து விட்டுத் திரௌபதி புசித்த பின் அதன் சக்தி அன்றைக்கு மறைந்து விடும்.” இவ்வாறு சூரிய பகவான் வரம் கொடுத்திருந்தான். 

இதன்படி தினமும் பிராமணர்களும் அதிதிகளும் புசிப் பார்கள். பிறகு தம்பிகள் உண்டபின் தருமபுத்திரன் போஜனம் செய்வான். அதன் பின் கடைசியாகத் திரௌபதி உண்பாள். துருவாசர் வந்த சமயம் எல்லோரும் போஜனம் முடித்து விட்டுத் திரௌபதியும் சாப்பிட்டு முடிந்திருந்தபடியால், அட்சய பாத்திரத்தின் சக்தி அன்று தீர்ந்து போயிருந்தது. 

முனிவரும் சிஷ்யர்களும் குளித்து விட்டு வருவார்களே என்ன செய்வது என்று பெருங் கவலையுடன் ஒரு வழியும் தோன்றாமல் திரௌபதி பகவானைத் துதித்தாள். “பிரபுவே! சரணமடைந்த வர்களைக் காப்பவனே! கதியற்றவர்களுக்குக் கதியை கொடுப்ப வனே! துருவாசருடைய கோபத்துக்கு ஆளாகாதபடி என்னைக் கரையேற்ற வேண்டும்” என்று இறைஞ்சினாள். 

உடனே திரௌபதியின் சங்கடத்தைத் தீர்க்க வாசுதேவன் வனத்தில் சமையற்கட்டிலிருந்த திரௌபதியண்டை சென்றான். ‘மிக்க பசியாக வந்திருக்கிறேன். சீக்கிரம் அன்னம் கொண்டு வா! பிறகு எல்லாக் காரியமும்!” என்றான். 

திரௌபதி “ஐயோ! இதென்ன பரீட்சை? கண்ணனே. நான் போஜனம் செய்து விட்டேன். சூரியனால் கொடுக்கப்பட்ட பாத்திரத்தின் சக்தி இன்று முடிந்து விட்டது. துருவாசர் இச் சமயம் வந்திருக்கிறார். நான் என்ன செய்வேன்? முனிவரும் சீட ர்களும் குளித்து விட்டு வந்து விடுவார்கள். போதாததற்கு நீரும் இப்போது வந்து பசி என்கிறீர்!” என்று சொல்லித் தத்தளித்தாள். 

“நான் பசியால் வருந்துகிறேன். பரிகாசத்திற்குச் சமயமல்ல. பாத்திரத்தைக் காட்டு, பார்க்கவாம் என்றான் கண்ணன். திரெளபதி எடுத்துக் காட்டினாள். அதன் விளிம்பில் கொஞ்சம் கீரையும் ஒரு சோற்றுப் பருக்கையும் ஒட்டிக்கொண் டிருந்தது. அதைக் கண்ணன் கீறி எடுத்து”இது விசுவரூபனா கிய ஹரிக்கு உணவாகி அவன் பசி தீர்ந்து பிரீதி அடைவானாக! என்று மனத்தில் சொல்லிச் சோற்றுப் பருக்கையையும் கீரையை யும் வாயில் போட்டுக்கொண்டான், 

திரௌபதி வெட்கமும் கவலையும் கொண்டு ஐயோ நான் பாத்திரத்தை நன்றாக அலம்பாதததால் அதில் ஒட்டிக் கொண்டிருந்த சோற்றுப் பருக்கையை எடுத்து வாசுதேவன் உண்டானே! ” என்று எண்ணி வருத்தப்பட்டாள். 

கண்ணன் வெளியே போய்ப் பீம்சேனனைப் பார்த்து “சீக்கிரம் ஆற்றுக்குச் சென்று முனிவர்களைப் போஜனத்துக்கு அழைத்து வா!” என்று சொல்லி அனுப்பினான். 

பீமசேனன் விரைந்து சென்று ஆற்றிலிருந்த துருவாசர் முதலிய ரிஷிகள் இருந்த இடத்துக்குப் போனான். அவர்கள் அனைவரும் போஜனம் செய்து திருப்தி அடைந்தவர்கள் போல் ஏப்பம் விட்டுக் கொண்டிருந்தார்கள். “தரும புத்திரனை அன் னம் தயார் செய்யச் சொல்லி வந்தோமே! எங்களுக்கு வயிறு நிறைந்து பொறுக்க முடியாமலிருக்கிறதே! என்று சீடர்கள் துருவாசருக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பிறகு துருவாச ரும் பீமசேனனிடம் ‘நாங்கள் சாப்பிட்டாயிற்று. எங்களுடைய தவற்றை மன்னிக்க வேண்டும் என்று தரும் புத்திரனுக்குக் சொல்” என்று கேட்டுக்கொண்டு அனைவரும் மறைந்தனர். 

அகில  விசுவமும் கண்ணனுக்குள் அடங்கியிருந்த படியால் அவன் உண்ட ஒரு சோற்றுப் பருக்கை ரிஷிகளுக்கெல்லாம் பசியாற்றி விட்டது. 

நச்சுப் பொய்கை 

பாண்டவர்களுடைய பன்னிரண்டு வருஷ வனவாசம் முடியும் காலம் நெருங்கிற்று 

ஒரு நாள் வனத்தில் வசித்து வந்த ஓர் ஏழைப் பிராமண னுடைய அரணிக் கட்டையின் மேல் ஒரு மான் உடலை உராய்ந்து விட்டுத் திரும்பிச் செல்லும்போது அரணிக் கட்டை அதன் கொம்பில் மாட்டிக்கொண்டது. 

அரணி என்பது தீக்குச்சி இல்லாத அந்த நாட்களில் நெரு ப்பு உண்டாக்குவதற்காக ஆசிரமங்களில் வசிப்பவர்கள் வைத்துக் கொண்டிருந்த கடைக்கோலும் கீழ்க்கட்டையுமான ஓர் எந்திரம். 

கொம்பில் அரணிக்கட்டை மாட்டிக் கொண்டதும் மான் மிரண்டு வேகமாக ஓடிற்று.பிராமணன் ஐயோ, என் அரணி யைத் தூக்கிக் கொண்டு போய் விட்டதே. அக்கினி ஹோத்திரத் திற்கு நான் என்ன செய்வேன்?” என்று கத்திக்கொண்டு பக்கத் தில் குடிசையில் வசித்து வந்த பாண்டவர்களிடம் ஓடிப் போய் முறையிட்டான். 

பாண்டவர்கள் மானைப் பிடிக்க ஓடினார்கள். அரணியைத் தூக்கிக் கொண்டு போன மான் மாய் மான். அது துள்ளிக் குதித்து வேகமாகச் சென்று பாண்டவர்களைக் காட்டில் வெகு தூரத்தில் இட்டுக்கொண்டு போய் மறைந்து விட்டது. 

பாண்டவர்கள் மிகக் களைப்படைந்து ஓர் ஆலமரத்தடி யில் உட்கார்ந்தார்கள். எல்லாரும் பெருந் தாகத்தால் வருந் தினார்கள். நகுலன் யுதிஷ்டிரனைப் பார்த்து “அந்தப் பிராமணனுக்காக இந்த அற்ப காரியத்தைக் கூட நம்மால் செய்து முடி யலாமல் போய் விட்டதே! நாம் என்ன தாழ்ச்சியை அடைந்து விட்டோம்” என்றான். 

இவ்வாறு நகுலன் வருத்தப்பட்ட போது பீமன் “திரௌபதி யைச் சபைக்கு இழுத்து வந்தார்களே, அப்போது நாம் அந்த நீசர் களை கொன்றிருக்க வேண்டும். அது செய்யாதபடியால் அல்லவா நாம் இந்தச் சங்கடங்களை அடைந்தோம்?” என்று சொல்லி அருச்சுனனை வருத்தத்தோடு பார்த்தான். 

அருச்சுனனும் “ஆம்! அந்தத் தேரோட்டிமகன் சொன்ன கடுஞ் சொற்களைக் கேட்ட பின்னும் நான் சும்மா நின்றேன். அதனால் இந்த நிலைமையில் இருக்கிறோம்” என்றான். 

எல்லாரும் களைப்பினால் பொறுமையையும் தைரியமும் இழந்திருப்பதைக் கண்ட யுதிஷ்டிரனுக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. பொறுக்க முடியாத தாகம் வாட்டிற்று.நகுல னைப் பார்த்து, ”தம்பீ! அந்த மரத்தின் மேல் ஏறிச் சமீபத்தில் எங்கேயாவது ஜலம் இருக்கிற குளமாவது, ஆறாவது தென்படுகிறதா பார்!” என்றான். 

நகுலன் மரத்தின் மீது ஏறிப் பார்த்து விட்டு இறங்கி வந்து,”கொஞ்ச தூரத்தில் ஜலத்தை அடுத்து வளரும் செடி வகைகளும் கொக்குகளும் தென்படுகின்றன. அந்த இடத்தில் கட்டாயமாக ஜலம் இருக்கும்” என்றான். 

“போய்ப் பார்த்து அவ்விடத்தில் ஜலம் கிடைத்தால் சீக்கிரம் எடுத்துக்கொண்டு வா!” என்று யுதிஷ்டிரன் சொல்ல நகுலன் விரைவாகப் போனான். 

போன் இடத்தில் எதிர்பார்த்தபடி ஒரு பொய்கை யைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி யடை ந்தான். தன் தாகத்தையும் தீர்த்துக்கொண்டு அம்புத் தூணியிலும் தண்ணீர் நிரப்பிக்கொள் ளலாம் என்று நகுலன் பொய்கையில் இறங்கினான். நிர்மலமான ஜலத்தில் கையைத் தோய்த்ததும் ஒரு அசரீரிப் பேச்சு ஆகாயத்தில் உண்டாயிற்று. 

“சாகசம் செய்யாதே! இது என் வசமுள்ள குளம். மாத்ரீ புத்திரனே! என் கேள்விக்கு விடை கூறி விட்டுப் பிறகு தண்ணீரைக் குடி!” என்றது. 

நகுலன் திடுக்கிட்டான். ஆனால் தாகத்தின் வேகத்தினால் அதைக் கவனியாமல் ஜலத்தை எடுத்துக் குடித்தான். குடித்து விட்டுக். கரை ஏறினதும் மயக்கம் உண்டாகிக் கீழே விழுந்தான். 


போனவன் திரும்பி வரவில்லை யென்று தருமபுத்திரன் சகதேவனை அனுப்பினான். சகதேவன் பொய்கையண்டை சேர்ந்த தும் அங்கே பூமியில் படுத்துக் கிடந்த சகோதரனைக் கண்டான். அவனை யாரோ கொன்று விட்டார்கள் என்று ஊகித்துக் கொண்டே தாகம் பொறுக்காமல் தண்ணீரண்டை சென்றான்.

அசரீரி முன் போலவே “சகதேவா! இது என் பொய்கை. என்னுடைய கேள்விக்கு விடை சொன்ன பிறகே தாகம் தீர்த்துக் கொள்ளலாம்!” என்றது. 

நகுலனைப் போலவே தாகம் மேலிட்ட சகதேவனும் அசரீரி எச்சரிக்கையைக் கவனிக்காமல் தண்ணீரைக் கண்டதும் எடுத்துக் குடித்தான். அவனும் உடனே இறந்து கீழே விழுந்தான். 

சகதேவனும் திரும்பி வராததைக் கண்டு யுதிஷ்டிரன் அருச்சுனனைப் பார்த்து “ஜலத்திற்காகப் போனவர்கள் வெகு நேரமாகியும் என்ன காரணமோ திரும்பி வரவில்லை. நீ போய் அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டதா, பார். ஜலமும் கொண்டு வா என்று சொல்லி அனுப்பினான். 

அருச்சுனன் வேகமாகவே சென்றான். குளத்தண்டை தம்பிகள் இருவருவம் செத்துக் கிடப்பதைப் பார்த்தான். திடுக்கிட்டு இதற்குக் காரணம் யாராக இருக்கலாம் என்று யோசித்துக் கொண்டே அவனும் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளப் பொய்கையில் இறங்கினான். அப்போது “நான் கேட்கும் வினாக்களுக்கு விடைசொல்லி விட்டுப் பிறகு தாகம் தீர்த்துக்கொள்வாய். இது என்னுடைய வசமுள்ள பொய்கை. மீறினாயானால் நீயும் தம்பிகளைப்போல் மாள்வாய்!” என்றது அசரீரி. 

அருச்சுனனுக்குக் கோபம் மேலிட்டது. நீ யார்? கண்ணுக் அரு கெதிரில் நின்று தடு. இதோ இந்தப் பாணங்களால் உன்னைக் கொல் வேன்” என்று சொல்லி சத்தத்தைக்கொண்டே குறிபார்த்து பாணங் களை விட்டான். அசரீரி அம்புகளை அலட்சியம் செய்து ‘உன்னு டைய பாணங்கள் என்னைத் தீண்டா. என்னுடைய கேள்விகளுக்கு விடை சொல்லி விட்டுத் தாகம் தீர்த்துக்கொள். அவ்வாறு செய்யாமல் தண்ணீரைப் பருகினால் இறந்து போவாய்” என்றது. 

செலுத்திய பாணங்கள் வீணானதைக் கண்டு அருச்சுனன் கோபத்தோடு கடும் யுத்தம் புரிவதற்கு ஆயத்தமானான். பெரிய யுத்தத்தில் இறங்குவதற்குள் தாகம் தீர்த்துக்கொள்ளலாம் என்று பொய்கையில் இறங்கித் தண்ணீர் குடித்தான். குடிக்கவே அவனும் இறந்தான். 

“அப்பா பீமசேனா! சத்துருக்களை சம்ஹாரம் செய்பவனே! அருச்சுனனு ம் திரும்பவில்லை! நீ போய்ச் சகோதரர்கள் என்ன வானார்கள் என்பதைப் பார்த்து விட்டுத் தண்ணீரும் கொண்டு வா! காலம் நமக்கு விரோதமாக இருக்கிறது. உனக்கு மங்களம்! எனக்குத் தாகம் பொறுக்க முடியவில்லை” என்றான் யுதிஷ்டிரன். பீமன் வேகமாகப் போனான். 

பொய்கையண்டை மூன்று சகோதரர்களும் உயிர் துறந்தவர் களாக விழுந்து கிடப்பதைப் பார்த்துப் பீமனுக்குத்தாங்க முடி யாத துக்கம் மேலிட்டது. “இது யட்சர்களுடைய வேலையாகத் தான் இருக்க வேண்டும். அவர்களைப் போர் புரிந்து வீழ்த்துவேன். அதற்குள் தண்ணீர் குடித்து என் தாகத்தைத் தீர்த்துக்கொள்வேன்” என்று எண்ணிப் பொய்கையில் இறங்கப் போனான். 

“அப்பா பீமசேனா! சாகஸம் செய்யாதே! என் வினாக்களுக்குப் பதில் சொல்லி விட்டுத்தான் குளத்தில் இறங்க வேண்டும். நான் சொன்னதை மீறித் தண்ணீர் குடித்தாயானால் சாவாய்!” என்றது அசரீரி. 

“நீயாரடா என்னைத் தடுக்க?” என்று சொல்லிக்கொண் டே பீமன் நச்சுத் தண்ணீரைக் குடித்து விட்டுச் சகோதரர்களைப் போல் அவனும் கீழே விழுந்தான். 

“ஒரு நாளும் நடவாத விஷயமாக இருக்கிறதே! நெடு நேரமாகியும் போன சகோதரர்கள் யாரும் திரும்பாமலிருப்பதற்கு என்ன காரணம்? ஏதேனும் சாபத்தை அடைந்துவிட்டார்களா? ஜலத்தைக் காணாமல் காட்டில் திரிந்து கொண்டிருக்கிறார்களோ? நானே போய்த்தான் பார்க்க வேண்டும்” என்பதாக யுதிஷ்டிரன் நிச்சயித்து வனத்திற்குள் சகோதரர்களைத் தேடிக் கொண்டு போனான். 

ஜன சஞ்சார மில்லாததும் புள்ளிமான்களும் பன்றிகளும் பறவைகளும் நிறைந்திருந்ததுமான நச்சுப் பொய்கை வனத் தண்டை தருமபுத்திரன் போனான். அழகான பச்சைப் புல்; அதன்மேல் விழா தீர்ந்த இந்தித்ரத்துவஜங்களைப்போல் சகோ தரர்கள் நால்வரும் வீழ்ந்து கிடப்பதை கண்டு ஆச்சரியமும் துக்கமும் அடைந்தான். சோகத்தைத் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டான். 

“அப்பா!பீமனே! உன் சபதம் எல்லாம் வீணாயிற்றே! வனவாசம் முடியப்போகும் சமயத்தில் இறந்து விட்டாயே! தெய்வங்கள் சொன்ன வாக்கெல்லாம் பொய்யாகி விட்டதே” என்று உயிரற்று வீழ்ந்து கிடக்கும் பீமனையும் அருச்சுனனையும் தழுவிப் புலம்பினான், 

“எந்தப் பகைவன் உங்களனைவரையும் கொல்லும் சாமர்த்தியம் படைத்தான!” என்று மீண்டும் மீண்டும் சகோதரர்களைப் பார்த்துக் குழந்தைபோல அழுதான். ”உயிரற்றுக் கிடக்கும் இந்த நகுல சகதேவர்களைப் பார்த்ததும் என்னுடைய எஃகு இப்யம் வெடிக்காமலிருக்கிறதே! நான் இந்த உலகத்தில் இனி என்ன செய்வதற்காக உயிருடன் இருக்கவேண்டும்?” என்று தன்னைத் தானே நொந்து கொண்டான். 

பிறகு நன்றாகக் கவனித்துப் பார்த்து, “இது ஏதோ மாயமாகத் தோன்றுகிறது. இவர்களுடைய உடல்களில் காயம் ஏதுமில்லை. உறங்குகிறவர்கள் போல் முகத்தில் எவ்வித மாறுபாடும் இல்லாமல் கிடக்கிறார்கள். விரோதிகளுடைய காலடிகள்கூட மண்ணில் காணப்படவில்லை. இது துரியோதனுடைய சதியாகவே இருக்கலாம். ஜலத்தில் விஷம் கலந்திருக்கலாம்” என்று தனக்குத்தான் சொல்லிக்கொண்டே தாகத்தினால் ஏவப்பட்டுப் பொய்கையில் இறங்கினான். உடனே அசரீரி பேச ஆரம்பித்தது. 

“உன் தம்பிகள் என் பேச்சைக் கேளாமல் தண்ணீர் அருந்தினார்கள். அவ்வாறு நீயும் செய்யாதே. என் வினாக்களுக்கு விடை கொடுத்துவிட்டுப் பிறகு பொய்கையில் இறங்கித் தாகம் தீர்த்துக்கொள். இது என்னுடைய வசத்தில் இருக்கிற குளம” என்றது. 


யுதிஷ்டிரன் இது யாரோ யக்ஷின் வாக்கு என்று தெரிந்து கொண்டு அசரீரியினுடைய பேச்சு க் கு ணங்கி உன் கேள்வி களைக் கேள்’ எனறான். 

ஒன்றன்பின் ஒன்றாக அசரீரி பல கேள்விகளைக் கேட்டது. “எது தினமும் ஆதித்யனை உதிக்கச் செய்கிறது?” என்றது அசரீரி. 

”பிரம்மம்” என்றான் யுதிஷ்டிரன். 

“மனிதன் எதனால் எப்போதும் துணை யுள்ளவனாகிறான்?” என்றான் யக்ஷன். 

“தைரியமே மனிதனுக்குத் துணை” என்றான் யுதிஷ்டிரன்.

“எந்த சாஸ்திரம் படித்து மனிதன் புத்திமான் ஆகிறான்?”

“எந்த சாஸ்திரம் படித்துமல்ல; பெரியோர்களை அடுத்தே மனிதன் புத்திமான் ஆகிறான்” என்றான் தரும புத்திரன். 

“பூமியைக் காட்டிலும் கனமானது எது?” என்றான் யக்ஷன்.

“மக்களைத் தாங்கும் தாய் பூமியைக் காட்டிலும் கனமானவள்” என்றான் யுதிஷ்டிரன். 

“ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது எது?”

“பிதா.” 

“காற்றைக் காட்டிலும் விசை கொண்டது எது?”

“மனம்” என்றான் யுதிஷ்டிரன். 

“புல்லிலும் அற்பமானது எது?”

“கவலை”. 

“தேசாந்திரம். போகிறவனுக்கு யார் தோழன்?”

“வித்தை.”

“வீட்டிலிருப்பவனுக்கு யார் தோழன்?” 

“மனைவி”. 

“சாகப்போகிற கிழவனுக்கு யார் நண்பன்?'”

“தானம். அதுதான் மரணத்தின் பின் தனியாகச் செல்லும் உயிரின் கூடப் போகும்.” 

”பாத்திரங்களுக்குள் எது பெரியது?” 

“எல்லாவற்றையும் தனக்குள் அடக்கக் கூடிய பெரிய பாத்திரம் பூமி” என்றான் யுதிஷ்டிரன். 

“எது சுகம்?” என்றான் யக்ஷன்.

“சுகம் நல்லொழுக்கத்திலே நிலைபெறுகிறது” என்றான் தரும புத்திரன். 

“எதைவிட்டுப் பிரிந்தால் மனிதன் எல்லாருக்கும் பிரியனாகிறான்?” 

“தன்னைப் பற்றிய கர்வத்தைவிட்டால் மனிதன் மற்றவர்களுக்குப் பிரியமானவனாகிறான்” என்றான். 

“எதை இழந்துவிடுவதில் துயரம் இல்லை?”

“கோபத்தை விட்டால் துயரம் அண்டாது” என்றான் தரும் புத்திரன். 

“எதை இழந்தால் மனிதன் தனவான் ஆகிறான்?” 

“ஆசையை விட்டால் மனிதன் சம்பத்து அடைகிறான்”.

“பிராம்மண்யமானது குலத்தினாலா? ஒழுக்கத்தினாலா? படிப்பினாலா? நிச்சயமாகச் சொல்லு” என்றான் யக்ஷன். 

“குலமும் படிப்பும் பிராம்மண்யத்திற்குக் காரணம் அல்ல; ஒழுக்கமே காரணம். ஒழுக்கத்தில் குறைபட்டவன் பிராம்மணன் ஆகமாட்டான். எவ்வளவு படித்தவன் ஆனாலும் கெட்ட வழக்கங்களில் சிக்கினவன் பிராம்மணன் ஆகமாட்டான். நான்கு வேதங்களை ஓதியிருந்தாலும் கெட்ட நடத்தை யுள்ளவன் இழி குலத்தவனாவான்” என்றான் யுதிஷ்டிரன். 

“உலகத்தில் எது பெரிய ஆச்சரியம்?” 

“நாள் தோறும் பிராணிகள் யமன் வீட்டுக்குப் போய்க் கொண்டே இருப்பதைப் பார்த்தும் மிஞ்சி உள்ள மனிதர்கள் தாம் நிலையாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். இதுவே பெரிய ஆச்சரியம்.” 

இவ்வாறு இன்னும் பல கேள்விகள் யக்ஷன் கேட்டான். எல்லா வினாக்களுக்கும் யுதிஷ்டிரன் அற்புத அறிவுடன் விடை தந்தான். 

முடிவில் யக்ஷன், “அரசனே! இறந்த சகோதரர்களில் ஒருவன் பிழைக்கக் கூடும்! நீ எவனை விடும்புகிறாயோ அவன் பிழைப்பான்'” என்றான். 

யுதிஷ்டிரன் ஒரு கணம் யோசித்தான். பிறகு, ”சியாமள நிறமும் தாமரைக் கண்களும் அகன்ற மார்பும் நீண்ட கைகளும் கொண்டு ஆச்சா மரம்போல் விழுந்து கிடக்கும் நகுலன் உயிரோடு எழுந்திருக்கட்டும்” என்றான். 

அப்போது யக்ஷன் யுதிஷ்டிரனுக்குப் பிரசன்னமாகி “பதினாயிரம் யானைகளுக்குச் சமமான பலம் படைத்த பீமனை விட்டுவிட்டு ஏன் நகுலனுடைய உயிரைக் கேட்டாய்? பீமசேனன் உனக்கு ரொம்பப் பிரியம் என்றல்லவோ எல்லோரும் சொல்கிறார்கள்? அருச்சுனனுடைய சாமர்த்தியமல்லவோ உங்களுடைய பாதுகாப்பு? அவ்விருவரையும் விட்டுவிட்டு ஏன் நகுலன் பிழைத்தெழுந்திருக்க விரும்பினாய்?” என்று யக்ஷன் கேட்டான். 

“யக்ஷனே! தருமமே மனிதனைப் பாதுகாக்கிறது. பீமனுமல்ல அருச்சுனனுமல்ல. புறக்கணிக்கப்பட்டால் தருமமே மனிதனைக் கொல்லுகிறது. என் பிதாவுக்குக் குந்தியும் மாத்ரியும் இரு மனைவிகள். நான் குந்திக்கு ஒரு புத்திரன் மிஞ்சினேன், மாத்ரி புத்திரனும் ஒருவன் உயிருடன் இருந்தால் சமமாக இருக்கும். நகுலன் பிழைத்து எழுந்திருக்கட்டும்” என்றான். 

“பட்சபாத மறியாத என் மகனே! உன்னுடைய எல்லாத் தம்பிமார்களும் உயிர் பெற்று எழுவார்கள்” என்று யக்ஷன் வரம் தந்தான். 

மானாகவும் யக்ஷனாகவும் வந்தது தரும தேவதையே. தன் மகனான யுதிஷ்டிரனை நேரில் பார்த்து அவன் குணாதிசயத்தைச் சோதித்து மகிழ்ச்சி யடைவதற்காக வந்த தரும தேவன் யுதிஷ்டிரனைத் தழுவிக்கொண்டு ஆசீர்வதித்தான்.

“பன்னிரண்டு வருஷ வனவாசம் முடிவதற்கு இன்னும் வெகு சில நாட்களே இருக்கின்றன. இனிப் பதின்மூன்றாவது வருஷத்தில் செய்து கழிக்க வேண்டிய மறைவுப் பிரதிக்ஞையு சரியாகவே பூர்த்தியாகும். உன்னையும் உன் தம்பிமார்களையும் பகைவர்கள் யாரும் கண்டுபிடிக்க முடியாமல் உங்கள் தவத்தை வெற்றிகரமாகவே முடிப்பீர்கள்” என்று யமதருமன் யுதிஷ்டிரனுக்கு வரம் தந்து மறைந்தான். 

பாண்டவர்கள் வனவாசத்தின் கஷ்டங்களை யெல்லாம் பொறுத்தார்கள். அருச்சுனன் தகப்பனான இந்திரனிடமிருந்து அஸ்திரங்கள் அடைந்து திரும்பினான். 

பீமனும் அண்ணன் மாருதியை ஸௌகந்தித் தடாகத் தண்டை சந்தித்து அவனைக் கட்டி யணைந்து பன்மடங்கு பலம் பெற்றுவிட்டான். 

நச்சுப் பொய்கையண்டை யுதிஷ்டிரன் தன்னுடைய பிதா வான சாக்ஷாத் தரும தேவதையால் ஆலிங்கனம் செய்யப்பட்டுத் தகப்பனுக்குத் தகுந்த புத்திரனாக விளங்கினான். 

“தரும புத்திரன் தன் பிதாவைத் தரிசித்த இந்தப் புண்ணிய கதையை கேட்டவர்களுடைய மனமானது எந்தக் காலத்திலும் அதர்மத்தில் செல்லாது. மித்ர பேதத்திலும் பிறர் பொருளைக் கவர்வதிலும் பிரவேசிக்காது. தனக்கு உரிமையில் லாத ஸ்திரீயையாவது புருஷனையாவது கண்டு மயங்க மாட்டார் கள். அற்பப் பொருள்களில் பற்றுதல் கொள்ள மாட்டார்கள்’ என்று இந்த யக்ஷப் பிரச்னைக் கதையைப் பற்றி ஜனமேஜய ராஜாவுக்கு வைசம்பாயனர் சொல்லுகிறார். குற்றங் குறையுடன் சுருக்கமாகத் தமிழில் நான் எழுதி யிருப்பதை அன்புடன் படித்த மக்களும் மகளிரும் அதே நற்பயனைப் பெறுவார்களாக!

– தொடரும்…

– வியாசர் விருந்து (மகாபாரதம்), முதல் பதிப்பு: ஜனவரி 1956, பாரதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *