இரவு எட்டு மணி. பாம்பே ரயில்வே ஸ்டேஷன்.
அகமதாபாத் செல்ல வேண்டிய குஜராத் மெயில் முதல் பிளாட்பரத்தில் வந்து நிற்பதற்கு இன்னமும் இரண்டு மணி நேரங்கள் இருந்தன. அகமதாபாத் செல்வதற்காக அன்று மதியம்தான் தாதர் எக்ஸ்பிரஸில் சென்னையிலிருந்து பம்பாய் வந்திருந்தான் பாலாஜி.
சென்னையில் ஒரு இண்டர்வியூவிற்கு சென்றவன் கையோடு வேலைக்கான ஆர்டரையும் வாங்கிய உற்சாகத்தில் மிதந்து கொண்டிருந்தான். ‘நாளை முதல் காரியமாக இந்த அகமதாபாத் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஒரு மாத நோட்டீஸ் பிரியடில் குஜராத் பெண்களை நன்கு சைட் அடித்துவிட்டு சொந்த ஊரான சென்னைக்குத் திரும்பி புதிய வேலையை ஒப்புக் கொண்டவுடன் ஒரு அழகான பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட வேண்டியதுதான்’ இதுதான் அவனுடைய தற்போதைய ஆசைகள்.
பிளாட்பார பெஞ்சின் மீது அமர்ந்து சூட்கேசை மடிமீது வைத்துக் கொண்டு ரயிலுக்காக காத்திருந்தான்.
“எக்ஸ்கியூஸ்மி” என்ற இனிய குரலால் கலையப்பட்டு திரும்பிப் பார்த்தான்.
எதிரே பாப் கட்டிங்குடன் கோதுமை நிறத்தில் வாளிப்பான உடலில் ஒரு அழகான யுவதி நட்புடன் சிரித்தாள்.
நீல நிறத்தில் தொடையுடன் ஒட்டிய இறுக்கமான ஜீன்ஸ¤ம், அதனுள் இறுக்கி சொருகப் பட்டிருந்த ஆண்கள் அணியும் காட்டன் சட்டையும், அவளுடைய பெரிய பிருஷ்டங்களையும் ஏராளமான மார்பகங்களையும் அழகாக எடுத்துக் காட்டியது. இது போதாதென்று அவள் தோளில் மாட்டியிருந்த ஷோல்டர் பேக்கின் நீளமான கைப்பிடி, பட்டையாக ஒரு டிவைடர்போல் அவளது மார்பகங்களின் குறுக்கே பதிந்து அதீத கவர்ச்சியுடன் பாலாஜியை மிகவும் இம்சைப் படுத்தியது.
“ஐயாம் ஹர்ஷிதா” புன் சிரிப்புடன் பாலாஜியிடம் கை நீட்டினாள். பாலாஜி மிக ஆர்வமுடன் அவள் கைகளைப் பற்றி குலுக்கினான்.
அவளின் மென்மையான உள்ளங்கை ஸ்பா¢சத்தில் உடம்பு சிலிர்த்தது. ஹர்ஷிதா அதே பெஞ்சில் தனது ஷோல்டர் பேக்கை வைத்துவிட்டு பாலாஜியின் அருகில் அமர்ந்தாள்.
ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தொடங்கினாள்.
“அகமதாபாத் செல்கிறீர்களா?”
“ஆமாம்”
“எந்த கம்பார்ட்மெண்ட்?”
“எஸ் சிக்ஸ்… நீங்க?”
“நானும் அகமதாபாத் போகிறேன்.. எஸ் சிக்ஸ்தான். ஐயாம் •ப்ரம் அகமதாபாத்”
பாலாஜிக்கு உற்சாகம் கரை புரண்டது. ‘மொபைல் நம்பரை வாங்கிக்கொண்டு, இவளிடம் நன்கு ஒட்டிக்கொண்டு நோட்டீஸ் பிரியடில் இவளை வளைச்சு போடணும்’ என்று நினைத்துக் கொண்டான்.
இரண்டு நிமிட பொதுவான உரையாடலுக்குப் பிறகு அவள், “மிஸ்டர் பாலாஜி, என்னுடைய பேக்கை சற்று பார்த்துக் கொள்ளுங்கள், நான் படிப்பதற்கு ஏதாவது புத்தகம் வாங்கி வருகிறேன். ரயிலில் எனக்கு தூக்கம் வராது.” என்று கிளம்பிச் சென்றாள்.
‘தூக்கம் வரலைன்னா நான் இல்லையா ஹர்ஷ¥” என்று செல்லமாக நினைத்துக் கொண்ட பாலாஜி, ஒயிலாக நடந்து சென்ற அவளின் பின்னழகை ரசித்து பெருமூச்செறிந்தான். சற்று நேரத்தில் திரும்பிய ஹர்ஷிதா, தன் கையில் ஒரு குஜராத்தி நாவல் வைத்திருந்தாள்.
பாலாஜிக்கு, ‘தானும் கையில் ஏதாவது ஒரு புத்தகம் வைத்திருக்காவிடில் நம்ம ஸ்டேட்டஸ் என்னாவது?’ என்கிற வரட்டுக் கெளரவம் தோன்ற, “மிஸ்.ஹர்ஷிதா என்னுடைய சூட்கேசை சற்று கவனித்துக் கொள்ளுங்கள், உடனே வருகிறேன்” புக் ஸ்டாலை நோக்கி விரைந்தான்.
புக் ஸ்டாலில் என்ன வாங்குவது என்று சற்று குழம்பிய பின், எக்ஸிபிஷனில் விற்கப்படும் பொ¢ய சைஸ் அப்பளம் போல் பள பளவென்றிருந்த ஆங்கில சினிமா மேகஸின் ஒன்றை நூறு ரூபாய் கொடுத்து வாங்கினான்.
திரும்பி தான் உட்கார்ந்திருந்த பெஞ்குக்கு வந்தவன், ஹர்ஷிதாவைக் காணாது அதிர்ந்தான். தன்னுடைய சூட்கேஸ¤ம் அங்கு இல்லாதது உறைக்க, குழப்பத்துடன் பயந்து சற்றும் முற்றும் தேடினான். ஹர்ஷிதாவைக் காணவில்லை.
சூட்கேஸில் தன் கல்வித் தகுதிக்கான அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்கள், ஐய்யாயிரம் ரூபாய் பணம், மூன்று ஜோடி உடைகள், அம்மா ஆசையுடன் செய்து கொடுத்தனுப்பிய மா லாடு, இரண்டு பாட்டில் ஆவக்காய் ஊறுகாய் … ஓ காட். நிலமையின் தீவிரத்தை உணர்ந்த பாலாஜி ஏராளமாக வியர்த்தான். கண்களில் நீர் முட்டிக்கொண்டு வர பிளாட்பாரத்தின் மேலும் கீழும் வெறி வந்த மாதிரி ஓடி ஹர்ஷிதாவைத் தேடினான்.
சூட்கேஸூடன் ஹர்ஷிதா கழண்டு கொண்டாள் என்கிற உண்மை புரிய, பெரிதாக அழ ஆரம்பித்தான்.
“க்யா பாய், ஹ¥வா க்யா?” என்று ஆளாளுக்கு வினவ, பாலாஜி நடந்ததை அழுகையுடன் ஆங்கிலத்தில் விவா¢த்துக் கொண்டிருக்கையில் – குஜராத் மெயில் மெதுவாக ரிவர்ஸில் பிளாட்பாரத்தினுள் நுழைய, சுவாரஸ்யத்திற்காக இவனிடம் கதை கேட்டுக் கொண்டிருந்தவர்கள், ரயிலில் இடம் பிடிக்க ஓடினார்கள்.
அம்போவென்று விடப்பட்ட பாலாஜியிடம், ஒரு தமிழ் தெரிந்த போர்ட்டர் இரக்கப்பட்டு, ரய்ல்வே போலீஸிடம் அழைத்துச் சென்றான்.
எழுத்து மூலமாக புகார் செய்தபின், எப்.ஐ.ஆர் கார்பன் காப்பியை பெற்றுக் கொண்டு. எஸ் சிக்ஸ் கம்பார்ட்மெண்டைத் தேடி, ஒரு நப்பாசையுடன் ரிசர்வேஷன் சார்ட்டில் ஹர்ஷிதாவின் பெயர் இருக்கிறதா என்று பார்த்து ஏமாந்தான். தன் இருக்கையில் போய் அமர்ந்தான்.
ப்யணத்திற்கான ரயில் டிக்கெட்டும், செல்போனும், பர்ஸில் முப்பது ரூபாயும், அப்பள சைஸ் சினிமா இதழும்தான் அவன் கையில் எஞ்சியது.
மறு நாள். அகமதாபாத். சென்னையில் அதிக சம்பளத்திற்கு புதிய வேலை கிடைத்த சந்தோஷம் முற்றிலும் அடிபட்டுப் போய், சான்றிதழ்களே இல்லாமல் புதிய கம்பெனியில் சேர முடியுமா, முடியாதா? என்கிற குழப்பத்தில் ஆழ்ந்தான். ஆபீஸ் வேலையில் மனது ஒட்டவில்லை.
சில நெருங்கிய நண்பர்களிடம் தான் ஏமாற்றப் பட்டதை சொன்னபோது, “யுனிவர்சிட்டியில் எப்.ஐ.ஆர் காப்பியுடன் புகார் கொடுத்தால் டூப்ளிகேட் தருவார்கள்.
ஆனால் குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் ஆகும்.. அதுவரை நீ இங்கிருந்து ரிஸைன் பண்ணாதே… புது கம்பெனியில் எக்ஸ்டென்ஷன் கேட்டுப்பாரு” என்று அக்கறையுடன் சொன்னார்கள்.
அருணாச்சலம் என்ற நண்பன், “என்னடா மச்சி ஒரு பொண்ணுகிட்ட ஜொள்ளுவிட்டு இப்படி ஏமாந்துட்டு நிக்கறயே.. உனக்கு இது ஒரு பாடம், மவனே நீ இனிமே பொண்ணு இருக்கற பக்கமே போக மாட்டியே” என்று பாலாஜியை வெறுப்பேற்றினான்.
இறுதியாக, பாலாஜி தான் தற்போதைய வேலையை விடக்கூடாது என்றும், யுனிவர்சிட்டிக்கு எழுதி டூப்ளிகேட் சான்றிதழ்கள் எல்லாம் வாங்கிய பிறகு, வேறு வேலைக்கு சென்னையில் மறுபடியும் முயற்ச்சிப்பது என மிகுந்த துக்கத்துடன் முடிவு செய்தான்.
கலகலப்பான பாலாஜி மிகவும் சோகமானான். உள்ளுக்குள் அழுதான். விழிப்பிலும், தூக்கத்திலும் ஹர்ஷிதா அடிக்கடி வந்து பயமுறுத்தினாள்.
இரண்டு நாட்கள் சென்றன.
அன்று பாலாஜியின் அலுவலக முகவரிக்கு, ஆங்கிலத்தில் இரண்டு வரிகளில் எழுதப்பட்ட அஞ்சல் அட்டை ஒன்று வந்தது. அதில்,
“ஒரிஜினல் சான்றிதழ்களை அங்காடி சர்வீஸ் மூலமாக பார்சலில் அனுப்பியிருக்கிறேன். சர்வீஸ¤க்கான பணத்தைக் கட்டிவிட்டு பார்சலைப் பெற்றுக் கொள்ளவும்”. -ஹர்ஷிதா. அங்காடியின் முகவரி கார்டின் பின்புறம் இருந்தது.
மண்டைக்குள் குப்பென்று ரத்தம் பாய, பரபரப்புடன் வெளியே ஓடி வந்து ஆட்டோ பிடித்தான். அங்காடி சர்வீஸ் முகவரியைத் தேடி, கார்டைக் காண்பித்து நூறு ரூபாய் பணம் கட்டி, பார்சலை வாங்கி அவசர அவசரமாக திறந்து பார்த்தான்.
ஒன்றும் விட்டுப் போகாது அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்களையும் அப்படியே அனுப்பியிருந்தாள் ஹர்ஷிதா.
கண்களில் நீர் மல்க, “ஹர்ஷிதா நீ எங்கிருந்தாலும் வாழ்க, உன் தொழில் நேர்மைக்கு நான் தலை வணங்குகிறேன்” வாய்விட்டுப் புலம்பினான் பாலாஜி. பரபரப்புடன் அலுவலகம் திரும்பி வந்தான். தன் ராஜினாமா கடிதத்தை உடனே சமர்ப்பித்தான்.
அன்று மாலை ரூமுக்கு சந்தோஷத்துடன் வந்தவன், அப்போதுதான் முதன் முறையாக பாம்பே ஸ்டேஷனில், நூறு ரூபாய் கொடுத்து தான் வாங்கிய அப்பள சைஸ் சினிமா இதழை நிதானமாக புரட்டிப் பார்த்தான்.