வலைத்தளம் – ஒரு பக்க கதை

0
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 2,883 
 

வலையை மேய்ந்துகொண்டு இருந்த ஸ்டாலினின் முகம் முழுக்க கவலை ரேகைகள்…

எப்படி? எதனால்? … கேள்விகள் மனதை குடைந்துகொண்டு இருந்தன….

ஏய் மாமூ … என்னடா ஆச்சு ? ….ஆனந்த் கேட்டான் …

மச்சி …. எவனோ ஏன் நெட்ல கைவரிசை காடிட்டாண்டா !…

நீதானே நேத்து கடைசியா use பண்ணிருப்ப?…

ஆமாம் …ஆனா,அவசரமா போன் வந்ததுனால, அப்படியே விட்டுட்டுப் போய்டேன் ….

காலையில பார்த்தா எவனோ பொறம்போக்கு damage பண்ணிவெச்சிருக்கான்!…..

பழையபடி set பண்ணிட்டியா?……

செட்டிங் பண்ணா சரியா வர மாட்டேங்குது !….

தள்ளு நான் பார்க்குறேன் … பார்த்துவிட்டு உதடு பிதுக்கினான் …….

வேற வழி இல்லை புது வலைதான் வாங்கணும் … இன்னிக்கு நீ மீன் பிடிக்க முடியாதுடா மாமூ … இனிமே இப்படி அசால்ட்டா வலையை வெளியே காயப் போடதே !..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *