(1934 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஸாட்சாத் பரமசிவன் ரிஷப வாகனர் என்பது பரம்பரை. கைலாஸத்தைப் போய்ப் பார்த்தவர்கள், திரும்பி வந்து சேதி சொல்லுவார்களானால், பரமசிவன் ரிஷப வாகனர்தானா என்ற உண்மை தெரியும்! அது வரையிலும் பரம்பரைப் புராணத்தை நம்பலாம். அல்லது அதைப் பற்றிக் கேலி செய்யலாம். இஷ்டப் பட்டவர்கள் இரண்டிலொன்றைச் செய்யலாம். இரண்டும் முடியாது என்றால், நான் சும்மா யிருந்து விடுகிறேன். மேலே, தாவா உண்டோ?
கைலாஸத்தில் எழுந்தருளியிருக்கும் பரமசிவனைப் பற்றிப் பேசுவது பெரிய பேச்சு. ரிஷபாரூடராகப் பரமசிவன் பக்தர் களுக்குத் தரிசனம் கொடுப்பது மெய்யோ, பொய்யோ, அது எனக்குத் துளிகூடத் தெரியாது. தெரிந்து நாள் பாசாங்கு பண்ணு வதாக எண்ணி, வீணாக என்னைத் தொந்தரை செய்ய வேண்டாம். பெரிய புராணங்கூட, நான் செவ்வையாகப் படித்ததில்லை.
ரிஷபாரூடராக, ஆற்றங் கரைக்குப் பவனி வந்து காட்சியளிக்கும் ஒருவரை எனக்குத் தெரியும். அவர்தான் வண்ணார நாகப்பன். நாகப்பனை ‘அவர்’, ‘இவர்’, ‘போகிறார்’, ‘வருகிறார்’, ‘வேலை செய்கிறார்’ என்று நான் மரியாதையாகப் பேசுவது. கிராமத்து மிராசுதார்களுக்கும் பட்டணத்து மோட்டார் மனிதர் களுக்கும் பிடிக்காமலிருக்கலாம். மேற்சொன்ன இரண்டு திருக் கூட்டத்தையும் நான் சேர்ந்தவனன்று. நாகப்பனைப் போல நானும் ஒரு தொழிலாளி. கூட்டத்துக்குள்ளே, ஒரு கூட்டத்தான். ‘குடலை வழிப்பது’ நியாயமன்று.
நான் சமூக ஊழல்களின் அழுக்குகளை வெளுக்கிற வண்ணான். நாகப்பன், சமூகத்தின் அழுக்குத் துணிகளை வெளுக்கிற வண்ணான். நடையுடை பாவனைகளில் படியும் அழுக்குகளைப் போக்கும் சங்கரனுடைய (சம்ஹரிப்பவனுடைய) குலம் எங்களுடையது. எங்கள் பிதிரார்ஜித சொத்திலே, நாகப்பன் ரிஷபத்தைப் பங்காக எடுத்துக் கொண்டார். நான் எதை எடுத்துக் கொண்டேன் என்று விரைவில் நினைவு வரவில்லை. கொஞ்சம் யோசித்துச் சொல்லுகிறேன்.
நாங்கள் பிரிந்து தனிக் குடித்தனம் செய்யு முன்னர், நாங்கள் மூட்டை தூக்கிகளாயிருந்தோம். எத்தனை காலம், எங்கள் மூட்டைகளை நாங்களே சுமந்து செல்கிறது! நாகப்பனுடைய மூட்டை களைத் தூக்க, ‘கொழ கொழ’ எருது அகப்பட்டது. எனக்கு? இப் பொழுதுதான் ஞாபகம் வந்திருக்கிறது. வந்த ஞாபகம் நெஞ்சில் இருக்கிறது. அப்பா! நெஞ்சிலே மாட்டிக் கொண்ட ஞாபகத்தை, எப்படியோ வாயிலெடுத்து விட்டேன். எனக்கு, எனக்கு…. அகப் பட்டது ‘நோஞ்சல்’ பத்திரிகை.
‘நாகப்பனுடைய எருதுக்கு, இல்லை இல்லை, “கொழ கொழ கன்று “க்கு வைக்கோல் ஏது, அவருக்குத்தான் நிலம் கிடையாதே?’ என்பீர்கள். நாங்கள் ‘ஊர் தண்டி’ப் பிழைப்பவர்கள் என்ற ரகசியம் உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். தெரிந்திருந்தும் தெரியாதது போல இருப்பது மரியாதையல்லவா? ஊரிலே, நாகப்பனுடைய மனைவியும் பெண்ணும் தண்டுகின்ற சோற்றில், ஏராளமாக மிச்சப் பட்டால், ‘கொழ கொழ கன்’றின் வயிற்றிலேதான் போய்ச் சேரும். அது போதாததற்கு, ‘வண்ணான் துறை’யில் மேய்ச்சலுக்குத் தரை இருக்கிறது.
கிளியை வளர்த்துப் பூனைக்கு இரை கொடுப்பது அதர்மம் என்கிறார்கள். உண்மை. பட்டினியாகக் கிடக்கிற பூனை, கிளியை லாவிக்கொண்டு போனால் என்ன செய்கிறது? நாகப்பன் வளர்க்கும் கன்று பலப்பட்டால் போதும், உடனே, அதை ஒரு ஒற்றை மாட்டு வண்டிக்காரன் லாவிக் கொண்டு போய்விடுவாள். ‘ஐந்துக்கு வாங்கி ஐம்பதுக்கு விற்கிறான், நாகப்பன்!’ என்று ஊரிலே பொறாமை யுடன் பேசிக் கொள்ளுவார்கள். நஷ்டத்துக்கு விற்கிறவர்கள் இவர்கள் என்று தோன்றுகிறது. இவர்களுடைய சாமர்த்தியத்தைப் பற்றி நாம் ஏன் சத்தம் போட்டுப் பேச வேண்டும்?
அம்பட்டன் வீட்டில், ஏதோ ஒன்றுக்குப் பஞ்சமில்லை என்று முரட்டுக் கிராமத்தாள், கெட்டியாகப் பேசுவதுண்டு. நாகப்பன் வீட்டில் துணிகளுக்குப் பஞ்சமே கிடையாது. முதல் தடவை சலவை, இரண்டாம் தடவை சலவை – மொத்தம் சலவைக்காக வந்த உருப்படிகளைக் கொண்டு, ஒரு பெரிய ஜவுளிக் கடை வைத்து விடலாம். நாகப்பன் ரொம்ப பாக்கியசாலி. பணம் கொடுத்து வாங்காமல், பட்டாடைகளையும் கட்டி அனுபவிக்கும் தனி பாக்கியம் அவருடையதே!
விரைவில் நினைவு வரவில்லை. கொஞ்சம் யோசித்துச் சொல்லுகிறேன்.
நாங்கள் பிரிந்து தனிக் குடித்தனம் செய்யு முன்னர், நாங்கள் மூட்டை தூக்கிகளாயிருந்தோம். எத்தனை காலம், எங்கள் மூட்டை களை நாங்களே சுமந்து செல்கிறது! நாகப்பனுடைய மூட்டை களைத் தூக்க, ‘கொழ கொழ’ எருது அகப்பட்டது. எனக்கு? இப் பொழுதுதான் ஞாபகம் வந்திருக்கிறது. வந்த ஞாபகம் நெஞ்சில் இருக்கிறது. அப்பா! நெஞ்சிலே மாட்டிக் கொண்ட ஞாபகத்தை, எப்படியோ வாயிலெடுத்து விட்டேன். எனக்கு, எனக்கு…. அகப் பட்டது ‘நோஞ்சல்’ பத்திரிகை.
‘நாகப்பனுடைய எருதுக்கு, இல்லை இல்லை, “கொழ கொழ கன்று”க்கு வைக்கோல் ஏது, அவருக்குத்தான் நிலம் கிடையாதே?’ என்பீர்கள். நாங்கள் ‘ஊர் தண்டி’ப் பிழைப்பவர்கள் என்ற ரகசியம் உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். தெரிந்திருந்தும் தெரியாதது போல இருப்பது மரியாதையல்லவா? ஊரிலே, நாகப்பனுடைய மனைவியும் பெண்ணும் தண்டுகின்ற சோற்றில், ஏராளமாக மிச்சப் பட்டால், ‘கொழ கொழ கன்’றின் வயிற்றிலேதான் போய்ச் சேரும். அது போதாததற்கு, ‘வண்ணான் துறை’யில் மேய்ச்சலுக்குத் தரை இருக்கிறது.
கிளியை வளர்த்துப் பூனைக்கு இரை கொடுப்பது அதர்மம் என்கிறார்கள். உண்மை. பட்டினியாகக் கிடக்கிற பூனை, கிளியை லாவிக்கொண்டு போனால் என்ன செய்கிறது? நாகப்பன் வளர்க்கும் கன்று பலப்பட்டால் போதும், உடனே, அதை ஒரு ஒற்றை மாட்டு வண்டிக்காரன் லாவிக் கொண்டு போய்விடுவாள். ‘ஐந்துக்கு வாங்கி ஐம்பதுக்கு விற்கிறான், நாகப்பன்!’ என்று ஊரிலே பொறாமை யுடன் பேசிக் கொள்ளுவார்கள். நஷ்டத்துக்கு விற்கிறவர்கள் இவர்கள் என்று தோன்றுகிறது. இவர்களுடைய சாமர்த்தியத்தைப் பற்றி நாம் ஏன் சத்தம் போட்டுப் பேச வேண்டும்?
அம்பட்டன் வீட்டில், ஏதோ ஒன்றுக்குப் பஞ்சமில்லை என்று முரட்டுக் கிராமத்தாள், கெட்டியாகப் பேசுவதுண்டு. நாகப்பன் வீட்டில் துணிகளுக்குப் பஞ்சமே கிடையாது. முதல் தடவை சலவை, இரண்டாம் தடவை சலவை – மொத்தம் சலவைக்காக வந்த உருப்படிகளைக் கொண்டு, ஒரு பெரிய ஜவுளிக் கடை வைத்து விடலாம். நாகப்பன் ரொம்ப பாக்கியசாலி. பணம் கொடுத்து வாங்காமல், பட்டாடைகளையும் கட்டி அனுபவிக்கும் தனி பாக்கியம் அவருடையதே!
என்ன நாகப்பா, இவ்வளவு அக்கிரமம் பண்ணுகிறாயே, சலவைக்கு உருப்படி போட்டு எத்தனை நாளாச்சு?’ என்று யாரேனும் கேட்டால், ‘வெளுக்க, எங்கே தண்ணி அகப்படுதுங்க ஆவூர்த் தோப்பு கிணத்துக்குப் போயில்லே, வெளுத்துட்டு வாரேன்!’ என்று பதமாய்ச் சொல்லுவார் நாகப்பன். ஜலம் கண்டுபிடித்துக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டல்லவா, நாகப்பனைக் கண்டிக்கத் துணிய வேண்டும்? சவுக்காரம் போடக் கூட, சக்தியும் மனமும் இல்லாதவர்கள், நாகப்பனைக் கொஞ்சம் கூடக் கண்டிக்கவே முடியாது.
ரொம்பத் துடுக்காக யாரேனும் நாகப்பளைப் பேசிவிட்டால், அந்தச் சந்தர்ப்பத்தையும் சமாளித்துக் கொள்ள, நாகப்பனுக்குத் தொழில் நெளிவு தெரியும். அழுக்கு இருக்கிறபடியே நீலத்தை ஏராளமாகத் துணியில் போட்டு, சலவை செய்து கொண்டு வந்து விடுவார். அந்த அழுக்கு தீலத் துணியைக் கட்டிக் கொண்டு தெரு விலே, பகலில் போகத் துணிந்தவர்கள் பகல் வேஷக்காரர்களாய்த் தான் இருக்க முடியும்.
தாகப்பன், காய் உருட்டிப் பார்த்து, ஆருடம் சொல்லுவார். அழுக்கு மூட்டையைப் பாதையில் மரத்தடியில் வைத்துவிட்டு, ஆவலுடன் குறி கேட்கும் கிழவர்களிடமும், புருஷன் ‘தொலை’க்குப் போன ஸ்திரீகளிடமும், தாமரை மணிகளை உருட்டி உருட்டி, ஒற்றைப் படை, இரட்டைப் படை பார்த்து, ஆவேசத்துடன் நாகப்பன் குறி சொல்லுவதைப் பார்த்திருப்பீர்களானால், நீங்கள்கூட அவரை ‘ஸ்வராஜ்யம் எப்பொழுது வரும்?’ என்று கூசாமல் ஜோஸ்யம் கேட்கலாம்.
‘வண்ணானுக்குக் கடன் மிஞ்சி விட்டால், வீட்டில் தீப் பிடித்துக் கொண்டதென்று பொய் சொல்லி, அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு சவாரி விட்டுவிடுவான்!’ என்று போலீஸிலே. சிலர் புரளி செய்வதுண்டு. இது உண்மையோ, பொய்யோ, அதை அது பிறந்த இடத்திலே விசாரித்தால்தான் தெரியும். சொல்லு கிறதைத் திருப்பிச் சொல்லும் ‘கோலக் கிளி’ இனத்தைச் சேர்ந்தவள் தான். எனக்கு எது உண்மை என்று எப்படித் தெரியும்?
நாகப்பனும் அவரைச் சேர்ந்தவர்களும் மனது வைத்தால் எல்லா ‘வீடுகளையும்’ அழுக்கு மூட்டைகளாகச் செய்துவிட முடியும். ஆனால் பரோபகாரியான நாகப்பனுக்கு அந்த எண்ணம் ஒரு நாளும் வருவதில்லை. ‘ரொம்பப் பாவம்!” என்று அவர் முணுமுணுப்பார். என்றாலும், ‘வண்ணாரப் பயல் விரைக்கிறான்!’
என்று கிராமத்து மூடர்கள் பதட்டமாய்ப் பேசுகிறார்கள் என்று நாகப்பனுக்கு வருத்தம். பாவ புண்ணியம் தெரிந்தவர் நாகப்பன் என்று ஊரார் ஒப்புக் கொள்ளுவதில்லை.
“எனக்குப் பணம் காசிவே ஆசை என்று சொல்லுகிறாங்க. யாருக்கு ஆசையில்லீங்க? நேரம் பொழுது பார்காமல், நல்லது பொல்லாது பாக்காமல், வெயில் மழை பார்காமல், நாங்கள் வேலை செய்கிறோம். கூலிக்கு நடந்து நடந்து, காலுக்கு விளக் கெண்ணெய் துவளை போட வேண்டியிருக்குங்க. வண்ணாரப் பயல் என்று கண்டவங்க ஏசறாங்க. இது நல்லா யிருக்குங்களா?” என்று நாகப்பன் என்னிடம் குறை சொல்லிக் கொள்ளுவார்.
நாகப்பன் மனத்தில் இருக்கிற கடைசிக் குறையைச் சொல் லாமல் போனால், நாகப்பனுக்கு மனத் திருப்தி உண்டாகாது. நாகப்பன் சொல்லுகிறார்: ‘என்னாங்க போக்கிரித்தனம்? பெரிய வங்க நையாண்டிக்கு, நாங்கதானா ஆப்பட்டோம்? என்னாங்க, உங்களுக்குக் காது கேக்குதுங்களா? சாத்திரம் பேசுகிறாவளாம், சாத்திரம்! “வண்ணானுக்கு வண்ணாத்தி பேரில் ஆசை; வண்ணாத் திக்கு…!” என்னாங்க அக்கிரமம்! நீங்கள் பத்திரிகையிலே சொல்றவங்க, நாக்கை அனுக்கறாப்பலே எளுதுங்கள்!” நானும் எழுதிவிட்டேன். இந்தச் சங்கதி, இதற்குள் நாகப்பன் காதுக்கும் எட்டியிருக்கும்.
-1934