பாடுபட்டுத் தேடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 25, 2022
பார்வையிட்டோர்: 1,917 
 

(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இன்று கிளறிக்கல் மெஷின்; மற்றது சமையல் மெஷின். ஒன்று படித்தது; மற்றது படிக்காதது. ஒன்று ஆண்: மற்றது பெண். ஒன்று புரு ஷன்;மற்றது மனைவி. ஒன்று மகத்தான பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இயங்க தினமும் வேலை செய்வது; மற்றது அது வேலை செய்வதற்கு வேண்டி வேலை செய்வது. ஓர் உபயந்திரம், ஒன்றுக்குப் பெயர் ராமலிங்கம்: மற்றதுக்கு பொன்னம்மா.

ராமலிங்கமும் பொன்னம்மாவும் உற்பத்தியானது யாழ்ப்பா ணத்திலே. ராமலிங்கத்துக்கு வேலை கொழும்பில் ஒரு அரசாங்கக் கந தோரில், மாசம் 75 ரூபா சம்பளம். இந்த வேலை கிடைத்த சில நாட்க ளுக்குள் ராமலிங்கம் பொன்னம்மாவைச் சேர்த்துக் கொண்டது. ஒரு வீட்டில் இருபது ரூபாவுக்கு ஓர் அறையை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு இரண்டும் தனிக்குடித்தனஞ் செய்தனர்.ராமலிங்கம், சிக்க னக் கலையில் கைதேர்ந்த பேர்வழி. அதாவது, மிகச் செட்டு, வசதி வந தால் 75 ரூபாவையுமே மிச்சம் பிடித்து விடவேண்டு மென்று ஆசை அத ற்கு. ஆனால் அது முடிகிற காரியமா? எப்படியோ அது நமக்குத் தெரியாது. அந்தத் தொகையில் பாதியை ராமலிங்கம் ரொக்கமாக மிச்சம் பிடித்துவிடும். கொழும்புப் பட்டினத்திலே ராமலிங்கம் – அதன் சிக்கனத்துவம் ஒரு நூதனம்; அதன் வீடு ஒரு நூதனசாலை. நூதனமான ஒன்று இருக்குமிடம் நூதனசாலையில்லாமல் வேறென்ன?

8.30 மணிக்குக் கந்தோர். ராமலிங்கத்திடம் ஒரு நல்ல பழக்கம். வைகறைத் துயிலெழுந்துவிடும். 5.00 மணிக்கெல்லாம் படுக்கையில் ஆளைக் காண முடியாது. சுய நலமில்லாமல், அயர்ந்து நித்திரை போய்க் கொண்டிருக்கும் பொன்னம்மாவையும் கூட எழுப்பிவிடும். ஆரம்பத்தில் சில நாட்கள் தான் இப்படி. பிறகு நாலாவட்டத்தில் பொன்னம்மா இராமலிங்கத்துக்கு முன்பாகவே நித்திரை விட்டெழுந்து ஆறுமணி அடிக்க எல்லாக் காரி யங்களையும் முடித்து வைத்துவிடும். ராமலிங்கம் சாப்பிட்டுவிட்டு மத்தியான உணவையும் கட்டி எடுத்துக் கொண்டு 6.30 மணிக்குக் கந்தோர் புறப்பட்டுவிடும்.

பஸ், டிராம். ரயில் என்றெல்லாம் பட்டணங்களிலே குறுக்கும் மறுக்குமாக ஓடித் திரி கின்றனவே – அவற்றின் பக்கமே ராமலிங்கம் திரும்பிப் பார்ப்பதில்லை. ஐந்து மைல் தூர முள்ள அலுவலகத்துக்கு தெய்வம் கொடுத்த திருக்கால்களின் உதவியைக் கொண்டே போய்ச் சேர்ந்துவிடும். கொழும்பிலே ராமலிங்கத்தின் ‘நூதன வாழ்க்கை இரகஸ்யங்களில் இது ஒன்று.

மாலையில் கந்தோர் முடியும். நாலரை மணிக்கு ராமலிங்கம் மற்றவர்களைப் போலப் பறந்தடித்துக் கொண்டு வெளியேறுவதில்லை. பொழுது கருகும்வரை வேலை செய்யும். பிறகு சாவகாசமாக எழுந்து வேலையை முடித்துக் கொண்டு, வீட்டிலிருந்து கொண்டுவந்த வெற்றிலை பாக்கில் ஒரு வாய் போட்டுக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பும். கால் கோச்சில் ஆடி ஆடி வீடு போய்ச்சேர 8.00 மணியாகும். பொன்னம்மா சோறும் வடித்து ஒரு பச்சடியும் அரைத்து ஒரு ரசமும் வைத்து விட்டு ராமலிங்கத்தைக் காத்துக் கொண்டிருக்கும்.

காலையில் அவிழ்த்துவிட்டுப் போன வேட்டி சால்வை காற்றிலே படபடவென்று அடித்துக் காய்ந்து கொண்டிருப்பதைப் பார்க்க ராமலிங்கத்தின் மனம் மலரும். “வெந்நீர் வைத்திருக்கிறது குளிக்க” – என்று பொன்னம்மா சொன்னதும் ராமலிங்கத்துக்கு ஒரு புது உற்சாகம் பிறந்துவிடும். அதோடு, அடுப்பிலே கொதித்துக் கொண்டிருக்கும் மிளகுரசத்தின் வாசனை மூக்கில் வந்து தட்டவும்…. ராமலிங்கத்துக்கு ஒரே ஆனந்தம். பகல் பன்னிரண்டு மணி நேரமும் கந்தோரில் திரும்பத்திரும்ப கூட்டியும் கழித்தும் கொண்டிருந்த அலுப்பு. அயர்வு, எல்லாம் நீங்கி ஓர் உல்லாசம் உண்டாகி வாய் இலேசாக ஒரு பாட்டையும் முணுமுணுக்க ஆரம்பித்துவிடும்!

ஸ்நானம், சாப்பாடு எல்லாம் ஆகி முடிய இரவு பத்தரை மணியாகி விடும். சாப்பாட்டில் ராமலிங்கம் மிக எளிமை. அதாவது வாய் ருசிபார்த்து நாக்குக்கு அடிமைப்பட்டு அது வேணும், இதுவேணும் என்று அவதிப்படுவதில்லை. ஏதோ பசிக்கும் வேளையில் எதை யாவது போட்டு வயிற்றை நிரப்ப வேண்டியது தான் – என்பது ராமலிங்கத்தின் சித்தாந்தம்.

சாப்பாடு முடிய அன்றைய வரவு – செலவும் கணக்குகள் பரிசோதனை நடைபெறும். பொன்னம்மாவின் செலவினங்கள் யாவும் புள்ளி விபரமாக இருக்கும். அவற்றைப் பார்த்து அவற்றுக்கு ஒரு சிறு விமர்சனமும் செய்யப்படும். பொன்னம்மாவின் கை ஓட்டைக் கை என்று ராமலிங்கம் தினமும் கண்டிப்பதுண்டு. செலவுகளைக் கொஞ்சம் இறுக்கிப் பிடிக்க உபதேசஞ் செய்யும். இந்தக் குறை குற்றங்கள், உபதேசம் ஒன்றுக்கும் பொன்னம்மா திறக்கக் கூடாது. பேசாமலிருந்து எல்லாவற்றையும் பொறுமையோடு கேட்டுக் கொல் வேண்டும். இடையிலே ஒரு வார்த்தை சொன்னால்… ராமலிங்கத்துக்குப் பிரமாக கே. பிறந்து விடும். பெண்களுக்கு எந்த விஷயத்திலாகட்டும் பேச்சு என்ன வேண்டியிருக்கிறார் என்பது ராமலிங்கத்தின் கட்சி.

போசனம், ‘பட்ஜெட்’ யாவும் முடியப் பதினொரு மணியாகிவிடும். அதற்குப் பிறகுதான் படுக்கை. இதோடு ராமலிங்கத்தின் தினசரி வாழ்க்கை அலுவல்கள் முடிகின்றன. இதற்க மேல் சினிமாவோ, கூத்தோ, கேளிக்கையோ. அரசியலோ, பொது விஷயமோ – ஒன்றிலமே பிரவேசிப்பது கிடையாது. ராமலிங்கம் உண்டு, ராமலிங்கத்தின் மனைவி உண்டு; உத்தி யோகமுண்டு, சம்பளமுண்டு, பெரியதுரை உண்டு – இவ்வளவுதான் ராமலிங்கத்தின் உல கம். ராமலிங்கத்தின் வாழ்க்கை இன்பதுன்பங்கள். அனைத்தும் பொருளாதாரத்தில் – வீட்டிலேயிருக்கும் இரும்புப் பெட்டகத்தில் அடக்கம்.

ராமலிங்கத்துக்கு மனத்தில் எவ்வளவு பயம் உண்டோ அவ்வளவுக்குத் தெய்வ பக்தி யும் உண்டு. மனத்தில் பயம் அதிகமாகும் சமயங்களிலே தெய்வத்தின்மீது தீவிர பக்தி உண்டாகி ராமலிங்கம் தேவார, திருவாசக பஜனாமிருதத்தில் இறங்கிவிடும். பொழுதுபட்டு விளக்கேற்றி விட்டால் ராமலிங்கம் தனியாக வீட்டு வாசலைவிட்டு வெளியே இறங்க மாட் டாது. பொன்னம்மா துணைக்குப் போகவேண்டும்! நடுச்சாமத்திலே வெளியே சத்தம் சலனம் ஏதும் கேட்டால் லேசாக விளக்கைத் தூண்டி விட்டு கந்தரலங்காரம் சொல்லத் தொடங்கி விடும். பட்டணத்திலே உத்தியோகம் பார்க்கும் அநேகர் இப்படிச் சூரப்புலிகளாயிருந்தபடியால் ராமலிங்கத்தின் இந்தக் குணவிசேஷம் அவ்வளவாக ஒருவரையும் கவரவில்லை. ராமலிங்கத்தின் கெட்டித்தனத்திலோ, துணிச்சலோ அப்படி ஒரு விசேஷ பார்வை யாருக்கும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை ;

ஆனால்… ராமலிங்கத்தைப் போன்ற பேர்வழிகள் மீது விசேஷ பார்வை செலுத்து வதற்குப் பட்டணத்திலே வேறே ஆட்கள் இருந்தார்கள். அவர்கள் ராமலிங்கத்தைக் கவனிக்கவுஞ் செய்தார்கள்.

“சிவனே யென்று தானுந்தன்பாடுமாகவிருந்த ராமலிங்கத்துக்கு இருந்தாற்போலிருந்து பொல்லாத காலம் வந்தது.

அது கிறிஸ்மஸ் சமயம். கிறிஸ்மஸ் லீவு ஒன்றும் வேண்டாமென்று விட்டு ராமலிங்கம் சம்பாத்தியத்தில் அக்கறையாயிருந்தது. வீட்டிலே கூடவிருந்த மற்றக் குடும்பங்கள் வீட்டையா பூட்டிக்கொண்டு விடுதலை கொண்டாட ஊருக்குப் போய்விட்டன. ராமலிங்கம் தம்பதிகள் தனியே.

ஒருநாள் நடுச்சாமத்தில் வெளியே கதவில் யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ராமலிங்கம் துடித்துப் பதைத்து எழுந்தது. விளக்கைத் தூண்டிவிடம் ஒருதரம் உரக்கச் செருமி விட்டு “அடலருணைத்திருக் கோபுரத்தே…” என்று ஆரம்பித்தது.

ஆனால் வந்தவர்கள் யமகாதகப் பேர்வழிகள்.

ராமலிங்கம் வேலை செய்யும் கந்தோரையும், பெரிய துரையின் பெயரையும் குறிப் பிட்டு “அவசரமான செய்தி ஐயா…” என்று ஆங்கிலத்தில் இழுத்து விட்டார்கள். கந்தோர் துரை யின் பெயரைக் கேட்டதும் ராமலிங்கம் ஏமாந்து போய்விட்டது. கதவைத் திறந்துவிட்டது. நீட்டிய கைத்துப்பாக்கியும் பளிச்சிடும் கத்தியும் கொண்டு இரண்டு தடியர்கள் உள்ளே நுழைந் தார்கள். அப்பொழுதுதான் பேர் வழிக்கு விஷயம் விளங்கிற்று. வெலவெலத்துப் போய் விட்டது. பாவம்.

‘மூச்சுக் கேட்கக்கூடாது – என்று வந்தவர்கள் கைத்துப்பாக்கியை மார்புக்கு நேரே நீட்டியதும் …. ராமலிங்கம் தம்பதிகள் உண்மையில் மூச்சை அடக்கிக் கொண்டுவிட்டனர்.

“பெட்டகத்துச் சாவியைக் கொடு” என்று அவர்கள் கேட்க, ராமலிங்கம் இரண்டாவது பேச்சின்றி எடுத்துக் கொடுத்தது. “நகை அடைவு பிடிக்கத் தத்துவம் பெற்றவர்” என்று வெளியே விளம்பரம் ஒன்றும் போடாமலிருந்தும் வந்தவர்கள் அதை எப்படி அறிந்தார்கள் என்று ராமலிங்கத்துக்கு ஒரே ஆச்சரியமாகயிருந்தது.

சிறந்த பாதுகாப்பு என்று ராமலிங்கம் எண்ணியிருந்த இரும்புப் பெட்ட கம்…. அது பாதுகாப்பாகவேதானிருந்தது. ஆனால், அந்தத் தடியன் பளபளக்கும் கத்தியைக் காட்டிய போது பாவம் – ராமலிங்கத்துக்குப் பிராணனே போய்விடும் போலிருந்ததே!

அலுவலை முடித்துக்கொண்டு அவர்கள் போகும்வரை ராமலிங்கம் கண்ணை மூடிக்கொண்டு குப்புறப்படுத்துவிட்டது.

பொன்னம்மாவின் கழுத்தில் கிடந்த தாலியைக் கழட்டும்படி வந்த தடியர்களில் ஒருத் தன் கேட்டபோது பொன்னம்மா ராமலிங்கத்தைச் சற்றுக் சுரண்டிப் பார்த்தும் ராமலிங்கம் அந்தந் சமயம் மரக்கட்டை போல அசையாமல் கிடந்துவிட்டது!

கடைசியில் அவர்கள் போன பிற்பாடு திரும்புப் பெட்டகத்தைப் போய்ப் பார்க்க…ஐயையோ ஒரே…வயிற்றெரிச்சல்!

எறும்பு அரிசி சேர்ப்பது போலச் சேர்த்து வைத்த ராமலிங்கம் ஏங்கிப் போய்விட்டது.

அதிலிருந்து ராமலிங்கத்துக்கு காய்ச்சல் அடிக்க ஆரம்பித்தது, காய்ச்சல் வரவரக் கடுமையாகிக் குளிராக்கி குளிர் முற்றி ஜன்னியாக்கி எட்டாவது நாள் ராமலிங்கம் இந்தப் பொல்லாத கொள்ளைக்கார உலகத்திலிருந்து விடுதலை பெற்றது.

அடைவு பிடித்த நகைகளுக்குச் சொந்தக்காரர்கள் செய்தி அறிந்து ஓடி ஓடி வந்தார்கள்.

ஆனால் அங்கே வீடு பூட்டியிருந்தது. ராமலிங்கத்தின் துணை மெஷின் எங்கே போனது, என்னவாயிற்று – என்று யாருக்குமே தெரியவில்லை.

ஒரு சமயம் ராமலிங்கத்துக்குத் துணையாகவேதான் போய்விட்டதோ என்னவோ!

– மறுமலர்ச்சி – 03 ஆனி – 1946, ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *