கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 25, 2022
பார்வையிட்டோர்: 2,211 
 

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“சீனி இருக்குதா?”

“இல்லை ”

கிராமப் பக்கத்தான் ஒருத்தன் வந்து பல்லைக் காட்டினான், “அண்ணே , சீனி கொஞ்சம் எடுக்கலாமோ?”

சின்னத்தம்பி – கடைக்காரன். அவனை ஏற இறங்க வைத்துப் பார்த்தான்.

“எவ்வளவு வேணும்?”

“ஒரு இறாத்தல் அண்ணே!”

“அறுபது சதம்”

வேட்டி முடிப்பை அவிழ்த்து அவன் அறுபது சதத்தை எடுத்துக் கொடுத்தான். கடைக்காரன் சீனியைக் கட்டிக்கொடுத்தான்.

ஒரு தடியன் வந்து மளமளவென்று படிக்கட்டுகளில் ஏறினான்.

“சீனி என்ன விலை?” என்று கடைக்காரனிடம் சற்று அதிகாரத் தொனியில் கேட்டால்

“முப்பத்திரண்டு சதம்”

“இரண்டு இறாத்தல் மட்டும்”

“கூப்பனை எடும் பார்ப்போம்”

வந்தவன் “தலையிறங்கிப் போய்விட்டான்.

“இல்லை அண்ணே, கூப்பனுக்கல்ல கள்ளமாகக் கொஞ்சம்…”

“இங்கே என்ன கள்ள வியாபாரம் நடைபெறுகின்றது என்று எண்ணிக் கேட்டாயோ? நாங்கள் என்ன கள்ளர் கூட்டமோ?”

வந்தவன் பேச்சு மூச்சின்றி வந்தவழியே திரும்பி விட்டான். கடைக்காரன் அவனைப் பார்த்து வாய்க்குள் சிரித்தான்.

“நயினர்”

“யாரது?”

மகாதீனமான குரலில் வார்த்தைகள் எழுந்தன. கிழட்டு உருவம் ஒன்று தலையிலி ருந்து சுமையை படிக்கட்டில் இறக்கி வைத்துவிட்டு நயினாரிடம் “முறையிட்டது”.

“நயினார்தான் காப்பாற்ற வேண்டும். வீட்டில் இரண்டு காய்ச்சல்காரர் நயினர். இரண்டு கிழமையாக தேத்தண்ணீர் தான் சாப்பாடு. தேத்தண்ணி வைக்கவும் வழியில்லை . நயினர் மனமிரங்கி…”

“நயினர்” குறுக்கிட்டு கண்டிப்பான வார்த்தையில் பதில் கூறினார். “றாத்தல் அறுபத்தைந்து சதம் விருப்பமென்றால் எடு”

“ஐயோ நயினர் எவ்வளவையும் எடுத்துக்கொள்ளுங்கள். அகப்படுவதே பெரிய காரியம். அறுபது சதம் இருக்கு நயினார் அதற்கு மட்டாகத் தா”

“ஒரு றாத்தல் சீனியை நிறுத்து அதில் ஐந்து சதத்துச் சீனியை அள்ளி கிள்ளிக்கொண்டு கிழவியிடம் கட்டிக் கொடுத்தான். அதை வாங்கிக் கண்ணில் ஒற்றிக்கொண்டு அவள் போய் விட்டாள். போகும் போது இரண்டு பக்கமும் பார்த்து முழுசிக்கொண்டு போனாள். பயம் வேறே

சின்னத்தம்பியின் எட்டு வயசுக் குழந்தை இதெல்லாவற்றையும் கடையில் காசுப் பெட்டிக் கருகிலிருந்து கவனித்துக் கொண்டிருந்தது.

கிழவி போய்விட்டாள்.

“அப்பா”

“என்ன?”

“இது என்ன அப்பா?

“என்ன?”

“நாலு சாக்கு நிறைய சீனி இருக்கிறதே அங்கே!”

“இருக்கட்டும் வாயை மூடு”

“அப்பா ”

“சொல்லு”

“அப்போதை வந்த இரண்டு பேருக்கு ஏன் இல்லை என்று சொல்லி விட்டாய்?”

சின்னத்தம்பிக்கு அவன் ஒரே ஒரு குழந்தை அவன் கேட்பதற்கெல்லாம் அவனும் பதில் சொல்லிக் கொண்டு வந்தான் சலிக்காமல்.

“அது உனக்குத் தெரியாது கண்டபடி எல்லோருக்கும் கொடுக்கக் கூடாது”

“கொடுத்தால் என்ன அப்பா?”

“சில வம்பன்கள் பிடித்துக் கொடுத்து விடுவான்கள்”

“யாரிடம்?”

“பொலிசிடம்?”

“சீனிவிற்றால் அது குற்றமா அப்பா?”

“இல்லை, களவாக சீனிவிற்கக் கூடாது?”

“பின் நீ ஏன் அப்பா விற்கிறாய்?”

போகிற போக்கில் யாரோ ஒருத்தன் ஓடி வந்து கேட்டான். “சீனி இருக்குதா அண்ணே?”

“இல்லை ”

“அப்பா ”

“ஓய்”

“எனக்கு பயபாய் இருக்கு அப்பா”

“என்னத்துக்கு?”

“நேற்றைக்கு வாத்தியார் சொன்னார், களவெடுக்கிறவன்களையும், பொய் சொல்கிறவன்களையும் பொலிஸ்காரர் மறியல் வைத்து ஈட்டியால் குத்துவான்களாம். அவர்கள் செத்த பிறகு கடவுள் அவர்களை நரகத்தில் போட்டு நெருப்பால் கொளுத்துவார்களாம்.”

“அப்பா” சிரித்தார். “ஏன் அப்பா சிரிக்கிறே?”

அந்தச் சமயம் பார்த்து யாரோ ஒருத்தன் ”அப்பா” வோடு கதைக்க வந்து விட்டான். கள்ளச் சந்தை வழக்குகள் பற்றி சுவாரசியமான சம்பாசனை நடைபெற்றது.

குழந்தைக்கு ஒன்றிலும் புலன் போகவில்லை.

“இதென்ன நூதனம்? இந்தப் பெரிய அப்பா கூடப் பொய் சொல்கிறாரே, களவும் செய்து றாரே.மூட்டை மூட்டையாக சீனியை வைத்துக் கொண்டு சீனி இல்லை” “சீனி இல்லை” என்ற எத்தனை பேரைக் கலைத்து விட்டார்? அந்தக் கிழவியிடம்”-ஐயோ அந்தப் பாவத்தாரிடம் அலை பது சதம் வாங்கினார். வேறொருவனிடம் ஐம்பத்தைந்து சதம் வாங்கிக்கொண்டு சீனியைக் கொடுத்தார். சில பேருக்கு அடியோடு இல்லையென்று விட்டார். அவர்கள் அப்பாவின் கோவக் காரர்களோ? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக ஏன் இப்படி வஞ்சகம் செய்கிறார். சீனி விற்கக்கூடாதாம். பின்னர் ஏன் களவாக விற்கிறார்? ஐயோ அப்பாவை பொலிஸ்காரர் பிடித்துக் கொண்டு போய்விட்டால்…”

அங்கே வந்து கதைத்துக் கொண்டிருந்தவன் பேப்பரில் படித்ததாகச் சின்னத்தம்பியிடம் சொன்னான் ”ஒரு இறாத்தல் சீனி களவாக இரண்டு சதம் கூட்டி விற்றதாக ஒருவன் ஆறு மாசம் சிறை தண்டனை பெற்றான்.”

இதையும் கேட்டுக்கொண்டு சின்னத்தம்பி சோர்ந்து போய் திரும்பி வந்தான்.

“அப்பா ”

“என்ன ?”

“கடையை மூடிவிட்டு வீட்டிற்குப் போவோம் வா அப்பா, இனிமேல் இந்தக்கடையே வேண்டாம். எனக்கு பயமாய் இருக்கு அப்பா. நீ எல்லாம் பொய்சொல்லவும், களவெடுக்கவும் பழகி விட்டாய் -”

சின்னத்தம்பி சிரித்தார். இல்லை, அவர் வாய் சிரித்தது. அவர் மன மலர்ச்சியோடு சிரிக்கவில்லை. மனம் சிந்திக்க ஆரம்பித்து விட்டது. பேப்பர் புதினம் அவர் மனதை கிளறியது.

குழந்தையின் வார்த்தைகளும் அதோடு சேர்ந்து கொஞ்சம் வேலை செய்ய ஆரம்பித்தன.

“ஓ குழந்தை சொல்வதும் ஒரு மாதிரியாத்தான் இருக்கு, இந்த வியாபாரத் தொழிலே இப்படித்தான். இன்றைக்கு விடிந்த பிற்பாடு எத்தனை பொய்கள் சொல்லி விட்டேன்! எத்தனை களவுகள் செய்து விட்டேன். ஆனால் – ஓ ! – வியாபாரம் என்றால் பொய் களவு இல்லாமல் முடியுமா? உண்மைதான். ஆனால் அப்போது அவன் ஒருத்தன் களவாகக் கொஞ்சம் சீனி” என்றதும் ஏன் கோபம் வந்தது எனக்கு? ”நாங்கள் என்ன கள்வர் கூட்டமா?” என்று எரிந்து விழுந்தேனே அவன் மேல் சந்தேகம் என்ன? நான் கள்ளன் தான். பொய்யன்தான். நான் மட டுமா? வியாபாரிகள் எல்லோரும் அப்படித்தான். பொய்யர்கள்! கள்ளர்கள் சீ இந்தத் தொழி லைப் போல் கேவலமான தொழில் வேறு என்ன? மனிதனைமிருகமாக்கிற தொழில். அந்தக் கிழவி ஒருத்தி நின்று துடித்தாளே சீனிக்கு . அப்போதுதான் பாழும் மனம் இரங்கிற்றா? இந்த பணவெறி குறைந்ததா? முப்பது சதத்துச் சீனியை அறுபத்தைந்து சதத்தற்கு விற்றேன. சு’

இந்த ஆசை – பண ஆசை மனிதனை எத்தனை குரூரமாக்கி விடுகிறது?

என்னுடைய களவும், பொய்யும், ஆசையும் ஐயோ – என் குழந்தைக்குக் கூடத் தெரிந்துவிட்டதே. அது என்னைப் பற்றி என்னவெல்லாம் நினைக்கப் போகிறது! இப்படி அதி யாயமாக-அதர்மமாக சம்பாதித்துத்தான் என்ன செய்கிறது கடைசியில்? இந்த ஒரு அதரமதிதிற்குள் இன்னும் எத்தனை வேறு அதர்மங்கள்! நாய்போலச் சாவடியில் வந்து விழுகிற வர்களுக்குத்தான் உதவி அளிக்கிறோம். வசதி கண்ட இடத்தில் ஏழையோ, பிச்சைக்காரனோ அவனிடம் கொள்ளையடித்துவிடப் பார்க்கிறோம்

எத்தனை துணிகரமான பொய்? அதோ முழித்தாற்போல நாலு மூட்டை சீனி இருக்கிறது. இல்லை. இல்லை” என்று எத்தனை பேருக்கு வாய் கூசாமல் சொல்லி விட்டேன். “றாத்தல் முப்பத்திரண்டு சதம்” என்று அதோ எழுதிப் பகிரங்கமாகத் தொங்கவிட்டிருக்கிறேன். அதை எழுதிய அதே கையினால் அறுபத்தைந்து சதமும் ஐம்பத்தைந்து சதமும் வாங்கியிருக் கிறேனே! அப்பா – எவ்வளவு கேவலமான தொழில் இது. இதே சின்னத் தம்பிக்குத்தான் பள்ளிக்கூடத்தில் ஒரு காலத்தில் நேர்மைக்குப் பரிசு கிடைத்தது!

இப்பொழுதோ? தெருவால் போய்க்கொண்டிருந்த ஒருத்தன் வந்தான்.

“சீனி இருக்குதா?”

“இல்லை – இருக்கிறது இருக்கிறது”

“றாத்தல் என்ன விலை?”

“அறுப..முப்பது சதம்”

“பெரிய காரியம், இரண்டுறாத்தல் தாருங்கோ”

சின்னத்தம்பி நிறுத்துக் கொடுத்தான். புனர் ஜென்மம் அடைந்தவன் போன்ற உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது.

– ஈழகேசரி 26.09.1943, ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *