பந்தயம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 21, 2016
பார்வையிட்டோர்: 7,168 
 
 

“அந்த தெரு கடைக்கோடியில்  உள்ள ஒரு குட்டிச்சுவரில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள் பதின்மவயது பையன்கள். அந்த ஆறு பேர்களில் முத்துமாணிக்கமும்  இருந்தான்.

“இன்னைக்கு மழை வரமாதிரி இருக்குடா” என்றான்

“மழை வராதுடா….இது பாலுவின் பதில்… அந்த கூட்டத்தில்  இருவருமே எதிரெதினாவர்கள். முத்துமாணிக்கம் பாசீட்டீவ்வா சொன்னால், அதை நெகட்டீவ்வா சொல்றதும், செய்யறுதும்தான் பாலுவின் வாடிக்கை

ஒரு சில நேரங்களில் பேச்சு பேச்சாக இல்லாமல் கைகலப்பாகி விடும். அந்த நேரத்தில் சமாதானப்படுத்தி வைப்பதற்குள்;  நண்பர்களுக்கு. மூச்சிரைக்கும்.

பாலுவை எப்படி பாசீட்டிவ்வா நினைக்கவும்,  செய்யவும்  வைக்கமுடியும்…. இவன் ஒருவன் மட்டும் நம்ம  கூட்டத்தில்  அந்நியப்படுகிறானே”என உள்ளுக்குள் கவலைப்பட்டான் முத்துமாணிக்கம்.

அப்பொழுது எப்.எம்மில் “தோல்வி நிலையென நினைத்தால் வாழ்வை நினைக்கலாமா” பாட்டு ஒலிக்க…..முத்துமாணிக்கத்தின் மூளையின் மின்னலென ஒரு யோசனை தோன்றியது.

பாபு அந்நியப்பட்டு இருப்பதை தவிர்க்க இதை பயன்படுத்தினால் என்ன?

அந்த குட்டிச்சுவருக்கு அருகே இருந்த வீட்டில் குரல் கொடுத்தான்  முத்துமாணிக்கம் …..கீதா..கீதா… செஸ் போர்டு இருந்தா எடுத்து வாயேன்” என்றான்.

செஸ் போர்டு கொண்டு வர, அதை குட்டிச்சுவரில் வைத்து இதில் அறுபத்துநான்கு கட்டங்கள் இருக்கின்றன என்றான்.

“அதான் உலகறிஞ்ச விசயமாச்சே…புதுசா சொல்றாரு இவரு என நக்கலடித்தான் பாலு.

அவசரப்படாதே பாலு.. சொல்றேன்.

“பிரன்ட்ஸ், பாலுவுக்கான  பந்தயம் இது”

“முதல் வரிசையில் முதல் கட்டத்தில் பத்து  ரூபாய் வைக்க வேண்டும். இரண்டாம் கட்டத்தில் இருபது ரூபாய்….இப்படி அடுத்து..அடுத்து  இரட்டிப்பா… ஒரு ரெண்டு ரோ வைச்சா போறும் அப்படி வைக்கிற காசை நான் எடுத்து அநாதை இல்லத்திற்கு கொடுத்து விடுவேன்’அத்தோடு இல்லாமல் ஒரு வாரத்திற்கு அந்த அநாதை இல்லத்தில் வாலியண்டரா பாலு வேலை செய்யணும்” என்றான்; முத்துமாணிக்கம்.

இப்பொழுது பாலு சொன்னான்…. “ஏன்னடா சுஜிபி வேல…. இத போய் பெரிசா பேசறான்““என் பர்ஸ்ல  கத்தையாகவும்,  கனமாவும் ரூபா இருக்குடோய்  பாத்துடலாம்” ஒரு கை”என்று சொல்லி….       

“ நான் ஜெயிச்சா….. முத்து  நம்ம யாருகிட்டேயும்   ஒரு மாசத்துக்கு   பேசக்கூடாது..  இந்த குட்டிச்சுவர்  பக்கமே வரக்கூடாது சரியா” என்றான்

பதின்மவயது பையன்கள் “சபாஷ் சரியான போட்டிடா இது” என குட்டிச்சுவர்  அதிர கோஷமிட்டனர்

பாலு,  முதல் கட்டத்தில்  ஒரு பத்து ரூபாய்  வைத்தான்…அடுத்த கட்டத்தில் இருபது….இப்படியே போக…போக… பதினோறாவது கட்டத்திலேய அவன் சம்பள பணம் அம்பேல் ஆகி  பர்ஸ்   காலியானது. பிறகு  நண்பர்களிடம் பிராய்ந்து… வைக்க…வைக்க….. முத்து எடுத்து எடுத்து நண்பர்களிடம் கொடுத்துக் கொண்டே வந்தான்.

“என்னடா இது பூதம் விழுங்குறது மாதிரி இருக்கே …” என ஒரு கட்டத்தில் மிரண்டு போய்….. “மழை வர்றா மாதிரி இருக்கே” என முணுமுணுத்த பாலு, “நண்பா,  என்னைக்கு அநாதை இல்லத்துக்கு வாலியண்டரா சேவை செய்ய  போகணும் நான் ரெடி… நீயும் வாயேன் துணைக்கு” என்றான்.

Print Friendly, PDF & Email

1 thought on “பந்தயம்

  1. பந்தயம் சிறுகதையினை வலைத்தளத்தில் பதிவிட்டதற்கு மிக்க நன்றி தொடர் ஆதரவிற்கு மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன். மேலும், நான் பல்வேறு பத்திரிகைகளிலும், வலைத்தளங்களில் (சிறுகதைகள் வலைத்தளம் உட்பட) எழுதிய சிறுகதைகள் ”அம்மா” என தலைப்பிட்டு கலைஞன் பதிப்பகத்தால் விரைவில் வெளியிட இருக்கிறது மகிழ்வோடு அனைத்து வாசக எழுத்தாள நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *