பகைவனுக்கருள்வாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 23, 2022
பார்வையிட்டோர்: 12,648 
 
 

சோதி மயமான ஒரு பொழுது விடிந்த நேரம். தாரணிக்கு மனம் சம நிலையில் இருக்கும் பழக்கத்தினால், அவளின் உள் மையம் அசைவுகளற்ற பரப் பிர்ம்ம நிலையிலே தான், என்றும் இருப்பது வழக்கம். அவள் அப்படித் தான் பழக்கப்படிருந்தாள். இந்த பழக்கமும் மனித சுபாவத்திற்கு மாறான தெய்வீகப் போக்கும், அவளுக்கு இன்று நேற்று ஏற்பட்டதல்ல..வாழ்க்கை ஆரவாரங்களுக்குள் முழ்கி தன்னிலை மறக்கிற போக்கு என்றைக்குமே அவளுக்கு வந்ததில்லை.. சிறுவயதிலிருந்தே, அவள் அப்படியொரு தேவதை தான். சராசரி பெண்களைப் போல பட்டிலும் பவுண் அலங்காரங்களிலும் மூழ்கி தன் அழகை பிரகனப்படுத்தி வெளிக்காட்டுகின்ற, சலன புத்தியேஒரு போதும் அவளுக்கு வந்ததில்லை. இப்படியான அவளின் தெய்வீக அம்சம் என்றும் காட்டில் எறித்த நிலா மாதிரித் தான்.

அவளுடைய பருவ காலம், இளமைப் பொழுதுகள், இனிமை குன்றாமல் குடை சாயாமல் இருந்ததே, இப்போது வெறும் பகற் கனவு தான். வாழ்க்கையும், அதன் அனுபவ வெளிப்பாடுகளும், ஏன் இந்த உலகமும் கூட மனதின் மாயச் சிருஷ்டிகளே தவிர வேறல்ல என்பது, சான்றோர் வாயி;லாகவே அவள் கேட்டறிந்த உண்மை. ஆகவே கடினமாக சூழ்நிலை வரும், போது, கூட, அவளின் உள் மைய இருப்பு கொஞ்சமும் தளும்பாமல் ஒளி பிரகாசமாகவே இருக்கும். அவளின் கல்யாணத்திற்குப் பிறகு. வாழ்க்கையே அடியோடு திசை மாறிப் போனது. வாழ்வின் குடை சாய்ந்து வீழ்கிற கடைசி நேரம், இப்போது இந்த எண்பதாவது வயதில், கருமை நிழல் வந்து சூழ்ந்த அவளின் அப்போதைய இருண்ட யுகமும்,அதனால் களங்கப்பட்டு நிற்கும் மிகக் கசப்பான வாழ்க்கை அனுபவங்களும், இப்போது நினைக்கையில் புறம் தள்ளக் கூடிய கனவு அனுபவங்களாகவே தோன்றின. இப்பொய்யான கனவு மயக்கத்திலிஒருந்து விடுபட்டு, முழுமையான அன்பு ஆதாரதனை ஒன்றே, மனிதனை தெய்வமாக்குகிறது என்று அவள் மனப் பூர்வமாக நம்பினாள். இந்த அன்பு வழிபாட்டிற்கு மாறாக, எதிர்மறை புத்தி மயக்கத்தோடு தோன்றுகிற அனைத்து மனிதர்களையும், அவள் வேடிக்கை மனிதர்களாகவே உணந்தாள். இந்த உணர்தலின் உச்ச கட்ட அன்பு வெற்றியாக, சென்ற மாதம் ஒரு கடின சூழ்நிலையை அவள் எதிர் கொள்ள நேர்ந்தது.

ஒரு திருடன். அவப் பொழுதாக வந்து விடிந்த அவளின் திருமண உறவு சாம்ராச்சியமே, அன்பு நடத்தை தை பிசகிய, திருடர்கள் வசமே இருந்தது. போக, இன்னுமொரு திருடனா அவள் வாழ்க்கையில்? அவன் அவளிடமிருந்து எதை எடுத்துப் போக வந்திருக்கிறான்? இழப்பதற்கு இனி ஒன்றுமே இல்லாத நிலைதான் அவளுக்கு.

நல்ல வேடிக்கை அனுபவம் தான் மீண்டும் ஒரு முறை. அவள் கண்களுக்கு புலப்படாத ஓர் ஆதர்ஸ் தேவதையாக மட்டுமல்ல, ஒரு சாட்சி புருஷனாகவும் தன்னை உண்ர்ந்து கொண்ட தெய்வீகை பிறவி. அவள். அப்பேர்ப்பட்ட அவளை மீண்டும் ஒரு முறை தீக்குளிக்க வைத்து, பரீட்சித்துப் பார்க்கவே அரங்கேறிய ஒரு நாடகம் தான் அது.அ தில், முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்க வந்தவன் வெறும் ஆள்ளல்ல. ஊரறிந்த கள்ளன். ஒரு சின்னப் பையன் இன்னும் மீசை கூடச் சரியாக முளைக்கவில்லை.. அவன் அப்பன் பீட்டர் ஓட்டோ ஓட்டிப் பிழைக்கிறவன். பீட்டரோடு நெருங்கிய பழக்கம் அவளுக்கு. இந்தத் தள்ளாத வயதிலும், வீட்டு மளிகைச் சாமான்கள் வாங்குவதற்காக, பென்ஷன் எடுத்துக் கொண்டு, வெள்ளவத்தை வரை எத்தனை தடவைகள் அவள் பீட்டரின் ஓட்டோவில் பயணித்திருக்கிறாள். அவனும் சிறு கள்வன் தான். அவள் வாங்கில் கொண்டு வரும் சாமான்கள் பலவற்றை அவன் திருடிச் சென்ற பிறகும், அவள் அதை ஒரு பொருட்டாக எடுத்து அவனைக் கை கழுவி விட நினைக்கவில்லை. வீட்டின் அவசர தேவைக்களுக்கு அவனே ஓடி வந்து உதவி இருப்பதை மறக்காமலே, அவனின் திருட்டு புத்தியை அவள் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை.

அன்று என்ன கிழமை என்பது மறந்து விட்டது. ஆனால் அந்தச் சம்பவம் மறக்கவில்லை.மறந்து மன்னித்து விடக் கூடிய சம்பவமா அது? காசு என்றால் உயிருக்குச் சமம் அனைவருக்கும். அவள் அப்படி எத்தனை பேரை பார்த்திருப்பாள். ஓர் வெறும் ஆயிரம் ரூபாவுக்காக, அவள் கடன்பட்ட சமயத்திலும், கால் செருப்புத் தேய நடந்து வந்து, அவளின் உயிரை வாங்கி அதைப் பெற்றுச் சென்றவர்களையும் அவள் கண்டு அனுபவித்தவள் தானே. இதில் மனிதாபபிமானமாவது மண்ணாங்கட்டியாவது. அவளுக்குத் தெரியும் எது பெறுமதியானதென்று. அவள் யார் என்பதை நிரூபிக்க அந்த ஒரு சம்பவமே சவாலாய் வந்து நின்றது.

அவளுக்கு அதிகாலை நாலரை மணிக்கே விழிப்பு வந்து விடும்..மகள் பூஜாவின் கதை வேறு.அவள் ஓர் உடைந்த வெற்றுப் பொம்மை போல, நீண்ட கால ஒரு மன நோயாளி. அவள். அவளின் இந்தப் பரிதாபகரமானநிலைக்கு கர்ம வினைதான் என்ற காரணம் ஒரு புறமிருக்க, அவளைப் புறம் தள்ளி வார்த்தைகளால் கொன்று வஞ்சம் தீர்த்த மனிதர்கள், நீதியின் பார்வைக்குத் தப்பினாலும், கடவுள் இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாரா என்ற கேள்விக்குத் தர்ம சாஸ்திரமே பதில் சொல்லட்டும்.பூஜா நித்திரைக்கு மாத்திரை போட்டுத் தூங்குவதால் ஒழுங்கான தூக்கமில்லை. அன்று அவள் வேளைக்கே எழுந்து விட்டிருந்தாள் மணி அதி காலை ஆறரை மணி இருக்கும்.

அவர்கள் இருப்பது மிகப் பெரிய வீடு. சுவீஸிலுள்ள மகன் வாங்கித் தந்த வீடு. மேலும் கீழுமாய் பத்து அறைகளுக்குக்கு மேலே. அதைப் பராமரிக்கவே நூறு வேலையாட்கள் தேவை. கொரொனோ இல்லாத காலத்தில், வீடு சுத்தம் செய்ய வேலை ஆட்கள் வந்து போவார்கள் அதற்குப் பிறகு எல்லாம் நின்று விட்டது. தாரணி தான் அதையும் பார்த்துக் கொள்கிறாள் அத்துடன் சமையல் வேலை.அதற்கான சாமானகள் வாங்குவதெல்லாம் அவள் தான் கணவரோடு இருந்தவரை கால் பங்கு பொறுப்பை பார்த்துக் கொள்வார், அவர்.இப்போது முழுப் பொறுப்பையும் சுமந்து மகளை வேறு ஒரு குழந்தை போலப் பாரமரித்துப் பார்க்க வேண்டிய பெரும் சுமை அவள் தலை மீது.எனினும் இதற்காக ஒரு போதும் அவள் பின் வாங்கியதில்லை. கர்மம் வந்து எப்படிப் புரட்டி எடுத்தாலும், இன்னும் அவள் ஒரு சாட்சி புருஷனாகவே இருக்கிறாள். மகள் நித்திரை முடிந்து எழும்பி விட்டதால், அவளுக்குத் தேனீர் தயாரிக்க அவள் அடுகளைக்குள் நின்றிருந்த போது, போது பூஜாவின் குரல் கேட்டது

அம்மா! தேத்தண்ணி! கூடவே கொஞ்சம் குரல் வலுக்க இன்னொன்றையும் சொன்னாள்

அம்மா! பீட்டரின்ரை மகன் வந்து நிக்கிறான்,.

அவளுக்கு அவனைத் தெரியும். முழங்கால் முட்டும்படி முக்கால் காற்சட்டை போட்டுக் கொண்டு,, ஓர் அரைக் கிறுக்குப் போலத் தெரிவான்.. தகப்பன் உழைக்கிற காசில், பீடி கஞ்சா எல்லாம் வாங்கிக் குடிப்பான். இப்போது தொற்று காரணமாகப் பீட்டருக்கு வருவாய் குறைந்து, விட்டாலும், அந்தப் போதைப் பொருட்கள் வாங்க அவனுக்குக் காசு வேண்டுமே. திருடுவதைத் தவிர வேறு வழியில்லை.

அவன் சிலசமயங்களில் அவளிடம் காசு கேட்டு வீட்டிற்கு வந்து போன சந்தர்ப்பங்களை இப்போது நினைவு கூர்ந்தவளாய், கேட்டிற்கு வெளியே அவன் முகம் தெரிகிறதா என்று பார்த்தாள்..ஆளைக் காணோம். கேட் பூட்டியிருப்பதால், உள்ளே வந்திருக்க்க மாட்டான் என்று நினைத்தவாறே, அவள் வேலையில் மூழ்கினாள்.

இரவு ஆறு மணிக்கு பூஜாவிற்கு மாத்திரைகள் கொடுப்பதற்காக சுவாமியறைக்கு வந்து, அவள் படுக்கும் கட்டிலின் கால் நீட்டும் முனைக்கு அண்டினாற்போல, ஒரு சூட்கேஸ் இருக்குமே. அதன் பாக்கெட்டில் பூஜாவுக்கு மருந்து எடுப்பதற்காகக் கை வைத்தவள், கூடவே, அதிலேயே காசு வைக்கும் பழக்கமும் இருந்ததால், நேற்று அவள் கொண்டு வைத்த பென்ஷன் காசு மாயமாய் மறைந்து விட்டிருப்பது கண்டு வெகுவாகத் திடுக்கிட்டுப் போனாள்.

பீட்டரின் மகன் வந்து போனதற்கு அடையாளமாக, சாட்சி நிரூபணமாக அவள் வைத்த காசைக் காணவில்லையே1 அவனுக்கு எப்படித் தெரியும் அவள் காசு வைக்கும் இடம்?.பூஜாவின் அப்பா இறந்த போது அவர் கடைசிக் காரயங்களை முன்னிட்டு, பீட்டர் வரும் போதெல்லாம் கூடவே அவன் வந்து போனதை அவள் கண்டிருக்கிறாள். அதுவும் கொஞ்சநஞ்சக் காசல்ல. சுளையாக இருபதாயிரம் ரூபாய். கேட் பூட்டியிருப்பதால் மதில் ஏறிக் குதித்தே, இக் களவை அவன் செய்திரூக்கலாம்..இதற்குச் சாட்சியாக மகள் வேறு இருக்கிறாள்..அவள் அப்பா இறந்த பிறகு தாரணிக்குத் துணை இந்த் மகள் தான். மனம் குழம்பியிருந்தாலும் முற்றாக இல்லை..சிலவிடயங்களை ஆழமாகக் கிரகிக்கக் கூடிய நிலையில் தான், இன்னும் அவள் இருக்கிறாள் இதை வழக்காகக் கொண்டு செல்ல அவள் ஒரு சாட்சியே போதும். அவளுக்கு இந்த வலியிலும் சிரிக்கத் தோன்றியது வெளியே நடக்கிற விடயங்களுக்கு நான் பொறுப்பல்ல.எல்லாம் கடவுள் சித்தப்படியே நடக்கிறது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிற, அப்ப நான் ஆர்? நீ வெறும் சாட்சி மட்டுமே. ஓ அப்படி வேறு கதை இருக்கிறதா? சீ1 நானா அதை மறக்கிறவள்? நான் வெறும் சாட்சி புருஷன் மட்டுமே என்ற நினைவு வந்தவுடன், நடந்த அந்தச் சம்பவத்தை மறக்கத் தோன்றியது,.எனினும் அன்று இரவு சரியாக அவளுக்குத் தூக்கம் வரவில்லை. இதை எப்படி மகனிடம் சொல்வது என்ற குழப்பம் அவளுக்கு..அவளின் மூத்தமகன் இங்கு தெஹிவளையில் தான், காலி வீதிக்குச் சமீபமாக ஒரு பிளாட்டில் மனைவியோடு இருக்கிறான். தினமும் இங்கு வந்து போவான்.நாளை காலை அவன் வரும் போது இது பற்றி எடுத்துரைத்து ஒரு முடிவு காண்போம் என்றெண்ணி கவலை மாறாமலே, சிறிது அயர்ச்சியுடன் அவள் தூங்கவும் செய்தாள்.

மறுநாள் காலை பத்து மணிக்குத் தான் மகன் வந்து சேர்ந்தான். வந்தவுடன் அவனுக்குத் தேனீர் போட்டுக் கொடுத்து விட்டு, ஹாலுக்குள் அவள் வந்து அமர்ந்த போது, ஆழ்ந்த நிசப்தம் நிலவியது. எப்படி அவனிடம் விடயத்தை எடுத்துச் சொல்வது என்று புரியவில்லை அவளுக்கு.

என்னம்மா யோசிக்கிறியள்? என்று அவன் பேச்சைத் தொடங்கினான்.

நரேன்! நான் ஒன்று சொல்வன் கோபிக்க மாட்டியே?

உங்களிடம் போய் எப்பவாவது நான் கோபித்திருக்கிறேனா?பயப்படாமல் சொல்லுங்கோ கேக்கிறன்..

நேற்றுக் காலை பிறகும் ஒரு சவால் எனக்கு. என்னைத் தீக்குளிக்க வைச்ச சவால் எப்பவும் ஓர் அக்கினிக் குண்டம் தான் என்னைச் சுற்றி. இதிலிருந்து நான் உயிர் தப்பி மனம் தப்பி வாறதே பெரிய காரியம் ஒரு பத்து ரூபா காசு கேட்டே அந்தக் காலத்தில் கொப்பா வேலையை விட்டிட்டு இருந்த காலத்திலை. ரோட்டிலே அலைஞ்ச களைப்பு எனக்கு இன்னும் மறந்து போகேலை இவ்வளவு சிறு தொகைக்கே இந்த நிலையென்றால் சுளையாக ஒரு இருபதினாயிரம் நேற்று போச்சடா!

என்ன சொல்லுறியளம்மா? காசு களவு போட்டுதா?ஆர் வந்து எடுத்தது?

வேறு ஆர்? பீட்டரின்ரை அந்தக் கள்ளப் பெடியன் தான். அதுவும் கேட் பூட்டி வைச்சிருந்தனான். அவன் வந்து நிக்கேக்கை பூஜா தான் ஓடி வந்து சொன்னவள்.நான் வந்து பார்க்கேக்கை, அவன் இல்லை, போன காசு தான் இதுக்குப் போய் பொலிஸிலை சொல்லவா முடியும்? அப்படி ஒரு நிலையிலையா நான் இருக்கிறன்?

என்னம்மா விசர்க் கதை கதைக்கிறியள்? அவனுக்குத் தண்டனை கொடுக்காவிட்டால், அவன் ஒரு போதும் திருந்தப் போறதில்லை. நாங்கள் அவனை சுலபமாக மன்னிச்சு விட்டாலும், இன்னொரு இடத்திலை போய் அவன் இப்படிக் களவெடுத்தால் சும்மா விடுவினமோ? அதுவும் இவ்வளவு பெரிய தொகை போயிருக்கு. அர் தான் விடுவினம்.காசல்லே?

காசையே கடவுளாய் கும்பிடுறவைக்குத் தான், இந்தக் காசு சித்தாந்தம் பொருந்தும்.. எனக்கு இந்தக் காசு பெரிசாய் படேலை நீ கூறுவது போல இது ஏற்கெனவே கடவுளாலை தீர்மானிக்கப் பட்ட விஷயம் தான்..கண்ணை மூடிக் கொண்டு ஒரு சாட்சி புருஷனாய் இருந்து உலக விவகாரங்களை, வாற லாப நஷ்டங்களை, வேடிக்கை பார்த்தே பழக்கப்பட்டவள். நான். எனக்கு இது ஒரு சின்ன விடயம். அந்தச் சின்னைப் பையனைப் பொலிஸிலை பிடிச்சுக் குடுத்திட்டு வேடிக்கை பார்க்கிற ஆள் நானில்லை நரேன்

அம்மா 1உங்களைப் போலக் கடவுளாகி விடுறது மிகக் கஷ்டம் அதிலும் காசு விஷயத்திலை ஒருவன் உங்களைப் போலக் கடவுளாக இருக்கிறது எங்கையம்மா நடக்கப் போகுது ?இது உலகமம்மா1 உங்களை விழுங்கி ஏப்பம் விட்டுப் பீஸ் பீளாகக் கிழித்திப் போட்டாலும், கொஞ்சமும் களை மாறாமல் உயிர்த்து எழ, உங்களால் மட்டும் தான் முடியும் இப்படியொரு கடவுளின் வயிற்றில் வந்து பிறக்க நான் எவ்வளவோ கொடுத்து வைச்சிருக்க வேணும். என்றான் அவன் பெருமிதக் களையோடு. இப்படிப் பகைனுக்கருள்கிற நீங்கள் வெறும் தாய் மட்டுமல்ல கடவுள் என்றான் அவன் அதைத் தொடர்ந்து அவள் கூறினாள்

இதை நீ ஒருவனாவது புரிஞ்சு கொண்டியே ஆரும் என்னைக் கடவுளாக நினைச்சுக் கையெடுத்துக் கும்பிட வேண்டாம் கல்லெறியாமல் இருந்தாலே பெரிய காரியம் தான்.

அவனும் இதை ஏற்றுக் கொண்டு விட்ட பாவனையில், தலை ஆட்டிய போது தேவர்களும் விண்ணிலிருந்து பூமாரிபொழிவது போல் பூச்சிதறலாக மழைத் துளிகள் வந்து வீழ்வதே, அவன் கண்களுக்கு இப்போது வெறும் கனவு போல் பட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *