(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இனி, உவர்ப்பின்மையாகிய தரிசனாங்கத்திற் பிரசித்த ராகிய உத்தாயன மகாராசன் சரிதமாவது:
ஜம்பூ துலீப பரத க்ஷேத்திர சில்பி யென்னும் நாட்டு. ரோரூபுர மென்னும் நகரத்து ராசா உத்தாயண மகாராசன் பிராம்மணீய மென்னும் நாட்டு வைசாலி யென்னும் நகரத்துக் சேடக மகாராசனுக்கும் பத்மாவதி யென்னுந் தேவிக்கும் புத்திரி ப்ரபாவதி யென்பாளிவள் உத்தாயண மகாராசனுக்குத் தேவியானவள்.
இவளோடு இஷ்ட விஷய காம் போகங்களை யனுபவித்து இனிது செல்கின்ற காலத்து, ஸௌதர் மேந்திரன்ச்ரூதை யென்னும் ஆஸ்தான மண்டபத்துத் தேவராசிகளால் பரிவிருதனாகி யிருந்து தர்மோபதேசம் பண்ணுகின்ற காலத்து சம்யக்தரிசனாங்க மாகிய அஷ்டாங்கங்களில் உவர்ப்பின்மை யென்னும் அங்கத்தில் ஒத்தாயன மகாராசனையும், பிரபாவதி தேவியையும் ஒப்பார் பூலோகத்து யாவருமில்லையென்று ப்ரஸிம்ஸித்து, வினயம் பண்ணி ஆஸ்தான மண்டபத்திருந்தான்.
மணிகள னென்பானொரு தேவன் விஸ்மிதனாகி இவ்வண்ணந் தேவேந்திரனால் ஸ்துதிக்கப் படாநின்ற ஒத்தாயண மகாராசனையும், ப்ரபாவதி தேவியையும் பரீக்ஷப்பான் வேண்டி ரோரூஹபுர மடைந்து, திவ்யபோதனர் வடிவுகொண்டு ஸர்வாங்கமும் நிகிருஷ்ட தோஷதூஷித மாகவும் கைகளும் கால்களுங்குறைந்து துர்க்கந்தமாகிய ஜலம் சர்பாங்கங்களும் ஸ்ரவிப்பதாகவும் பண்ணி வீதியுட சர்யா காலத்து ராச பவன சமீபமடைதலும் அந்தகார வேளையில் பார்த்துக் கடைத் தலையில் நின்ற ஒத்தாயன சென்று, மகாராசன் கண்டு, அதிகானந்தத்தோடுஞ் நமஸ்கரித்து, எதிர்கொண்டு புக்கு, துர்க்கந்த சலம் சாவிக் கின்றவிடத்து ஸ்ரீபாதங்களை சந்தோதகத்தால் விளக்கித் தங்கள் முடியிசை தெளித்துக்கொண்டு, அஷ்டவித அர்ச் சனைகளை லர்ச்சித்து அமிர்து செய்விக்க, ராசாவுக்கும் மற்றுமுள்ளார்க்குஞ் சமைத்த ஆஷாரங்களெல்லாம் கொண்டு வந்து படைக்கவும் திருஷ்ணை திராதிருப்ப ராச பவனத்துள்ள பலங்களாலும் அபூர்வாதி வஸ்துக்களாலும் க்ஷுதா நிவிருத்தி வாராமை கண்டு, மிகவும் சந்தாபமடைந்து, என்னே திருமேனியில் மகா வியாதியே யன்றியும் யானைத் தீயென்று மகா வியாதியு முண்டானவாறு என்று கருதி நாமல்லது சரீர பலம் பெற்றாரில்லை யென்று சந்தோஷித்து, இந்த மகா வியாதியை நாமே தீர்க்கவேணுமென்று குதிப்பார்.
போனகமும் பருப்புப் போனகமும் வெண்போனகமும் முதலாகிய ஆஹார பேதங்களெல்லாங் கருகச் சமைப்பித்துப் படைத்து ஸ்ரீபாதமும் ஸ்ரீஹஸ்தமு முதலாகிய குறைந்த விடங்களால் துர்க்கந்தமான தோஷ ஜலஞ் சொரியவும், பக்திபண்ணி முகப் பிரசாதத்தினோடு நிற்ப, தபோதனரும் நுகர்ந்த ஆகாரத்தை யெல்லாம் சர்த்திபண்ணிக் கண்டு, மகாராசன் ஸந்தாயித்து நிலத்து விழாமற் கலசங்களிலேற்று வவையிற்றி லடங்காதொழிய, பொற் கிடாரங்களிலும் வெள்ளிக் கிடாரங்களிலும் ஏற்றுக்கொள்ளவும் அடங்கா திருப்ப, அவர் மேலுந் தெரித்து வழிந்து சொரியவும், அவர்கள் மகா புண்ணியம் செய்தோமென்று, மனமகிழ்ந்து, நம் பாபகர்மத்தால் சர்த்தி தோன்றியவாறென்று சிலேசித்து, தங்கள்மேற் சொரிந்ததெல்லாம் நோக்காது, உஷ்ண கங்கோதகங் கொண்டுவந்து திருமேனி யெல்லாம் விளக்கி, பவித்திரமான பட்டுத் துகில் கொண்டு, திருமேனி வருந்தாமல், துர்க்கந்தமெல்லாந் துடைத்து நமஸ்கரித்து, பின்பு, மாயாத போதன ரூபத்ததாகிய மணிசூள தேவன், “என்னே இவர்கள் தரிசன மாகாத்மிய மிருந்த வாறு!” என்று விஸ்மிதனாகி, மாயா ரூபம் நீக்கித் தன் வடிவுகொண்டு நிற்க,
ஒத்தாயண மகாராசனு மாச்சரிய மடைந்து, நீயாரென்று வினவ, தேவனமரேந்திரன் ஆஸ்தான மண்டபத்திருந்து, உம்முடைய உவர்ப்பின்மை யென்னும் தரிசனாங்கத்தினுடைய அதிசயத்தினை அமரகணங்கட்குச் சொல்லிப் பிரசம்ஸித்து, வினயம் பண்ணினமை கண்டு, யானுங்கள் தரிசன மாகாத்மியத்தினை பரீக்ஷிப்பான் வேண்டி, இவ்வண்ணர் தபோதனர் வேஷங் கொண்டு, அஞ்ஞானத்தாற் பரீக்ஷக்க வந்தேனென்று சொல்லி, யெனது அதிக்கிரம மெல்லாம் சகிக்க வேணுமென் றிறைஞ்சி, ஒத்தாயண மகாராசாவையும் பிரபாவதியாரையும் ஸிம்மாஸனத்தில் திருப்பாற் கடல் நீர் கொண்டுவந்து, அபிஷேகம் பண்ணி, திவ்ய வஸ்திராபரணங்க ளலங்கரித்துப் பொன்மழை பூமழை பொழிந்து இவர்கள் சாரித்தி ரத்தினைக் கண்டு ஸம்யக்த தரிசன சுத்தி பரிபூர்ண ராகிய இவர்கட்குப் பெருஞ்சிறப்பேத்தி, நமஸ்கரித்து நமஸ்கரித்து ஸ்வர்க்க லோக மடைந்தனர்.
இவ்வண்ண முவர்ப்பின்மை யென்னும் தரிசணாங் கத்தில் ஒத்தாயண மகாராசாவை உதாஹரணமாகச் சொல்லப்படு கின்றாரென்றவாறு.
சுமமஸ்து.
– தமிழ்நாடு அரசு கீழ்த்திசைச் சுவடிகள் வரிசை எண்: 73, நீதிக் கதைகள், பதிப்பாசிரியர்: டாக்டர் எஸ்.சௌந்தரபாண்டியன் எம்.ஏ, (தமிழ்), எம்.ஏ, (ஆங்.), பி.எட், டிப்.வ.மொ, பிஎச்டி, காப்பாட்சியர், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை, தமிழ்நாடு அரசு, 1992