டீச்சர் வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 15, 2018
பார்வையிட்டோர்: 6,401 
 

டீச்சர் வீட்டுக்குள் நுழைந்தேன், உள்ளே ஹாலில் சார் போட்டோ பெரியதாக இருந்தது. கிறிஸ்தவர் என்பதால் படத்துக்கு மாலை, ஊதுபத்தி, விளக்கு என்று எதுவும் இல்லை. ‘வா லதா உன் மகன் எங்கே? அவன் வரலியா என்றார் டீச்சர். அவருக்கு வயது எழுபதை எட்டியிருக்கும்.. இன்னொரு ரிட்டயர்டு டீச்சரும் இவரும் மட்டும் இருக்கிறார்கள்

இந்தாங்க டீச்சர் வாடகை என்று பணத்தை கொடுத்தேன்

அம்மாவும் பொண்னும் கேக்கமாட்டீங்க. அவனுங்க ரெண்டு பேரும் அமெரிக்காவுல இருக்குறானுங்க. எனக்கு பென்ஷன் இருக்கு. இந்த பணம் எதுக்கும்மா? அம்மா நல்லாருக்காங்களா? அப்போ அவுங்க சொந்த சகோதரி போல உதவுனாங்க; அதை மறக்கவே மாட்டேன்

நல்லா இருக்காங்க டீச்சர்; நடக்க முடியல. இப்பவும் டீச்சர் தான் எனக்கு தாய் மாதிரி, என்னை அன்பா ஆதரிச்சாங்கன்னு சொல்லிகிட்டே இருப்பாங்க. டீச்சர் வீட்டுக்கு போய்ட்டு வரும்போது தாய் வீட்டுக்கு போய்ட்டு வர்ற மாதிரி பை நிறைய சாமான் போட்டு குடுத்துவிடுவாங்கன்னு சொல்லுவாங்க

லதா, கடவுள் எப்படியும் நல்லவங்களுக்கு உதவாம போக மாட்டாரு காப்பி போடு குடிப்போம்

உடனே நான் போய் காபி போட்டேன்; இருவரும் குடித்தோம்.

லதா என் காலமும் முடிய போகுது. நீ ஒரு தானப் பத்திரம் எழுதிகொண்டா. நான் கையெழுத்து போட்டு தர்றேன். இந்த வீடுகளை உன் பேருக்கும் உன் தங்கச்சி பேருக்கு மாத்திடலாம்

வேணாம் டீச்சர் இப்பவே நாங்க நல்லா தான் இருக்கோம். நாளைக்கு தம்பிமாருக்கு எதுக்காவது தேவைப்பட்டால் இந்த வீடுகளை வித்து பணம் எடுக்கலாம் .

நீ சொன்னா கேக்க மாட்ட. அவனுங்க இங்கே எங்க வரப்போறானுங்க . நான் திடீர்ன்னு செத்தா தேவாலயத்துக்கு இந்த வீடுக இரண்டும் போகும் உங்க அம்மா அப்பாக்கு நான் நன்றிக்கடன் தீர்க்கனும்ன்னு நெனக்கிறேன் நீ மறுத்து பேசுற.,

இப்படியே கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்துவிட்டேன்.

அன்று நடந்ததை நினைத்துக்கொண்டேன். அம்மாவும் நானும் அழுதுகிட்டே டீச்சர் வீட்டுக்கு போனோம். அங்கே வீடு வாசல் எல்லாம் கழுவிவிட்டு ஆட்கள் எல்லோரும் தலைக்கு குளிசுட்டு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தாங்க, . அம்மாவை பார்த்ததும் டீச்சரின் தங்கச்சி சகுந்தலாக்கா வந்து

லதாம்மா அழாதிங்க இப்ப தான் அக்கா தூங்ககுறாங்க உடனே லதாம்மாவை உள்ளே ரூமுக்கு அழைச்சுட்டு போனாங்க..

என்னம்மா ஆச்சு

ஹார்ட் அட்டாக் என்றார் சகுந்தலாக்கா.

நீங்க எப்பம்மா வந்தீங்க.

நாங்க காலையில தான் வந்தோம். வந்த உடனே எடுத்திட்டாங்க

டீச்சர் எங்க இருந்தாங்க, பசங்களை கானோமே

விளையாடுவானுங்க. அக்கா எங்க வீட்டுல தான் இருந்தாங்க கிறிஸ்மஸ்க்கு வந்துட்டு முந்தாநாள் தான் அத்தான் இங்க வந்தாரு. இன்னக்கு கிளம்பி நாளைக்கு அங்கே வர்றதாக சொல்லியிருந்தாரு. அதுக்குள்ள இப்படி ஆயிருச்சு

சகுந்தலாக்கா அமைதியாக பேசினாங்க,. யாரகிட்டயும் ஒரு பதட்டமோ அதிர்ச்சியோ இல்லை. அம்மாவும் கொஞ்ச நேரம் தேம்பிகிட்டே இருந்தாங்க வாய்விட்டு புலம்பினாங்க. எனக்கு பெத்த தாய் மாதிரின்னு சொல்லி அழுதாங்க

டீச்சர் கண் முழிச்சாங்க ,. என்னை தலையசைத்து கூப்பிட்டாங்க அம்மாவும் பக்கத்தில வந்து உட்கார்ந்து அழுதாங்க,. டீச்சர் சாப்பிட்டுட்டு போங்கன்னு சொன்னதும் . அம்மா ஒன்னு கத்தி அழுதுட்டாங்க.

. எங்களுக்கு டீச்சர் வீடு தான் சொந்தம் சுற்றம் எல்லாம். எங்க அம்மா அப்பா லவ் மேரேஜ் அதனால ஜாதிக்காரங்க யாருமே அவுங்கள சேர்த்துக்கல. டீச்சர் தான் லதாவை நல்லா படிக்க வையுங்க. அப்புறம் அவ உங்களை காப்பாத்துவா,, சொந்தக்காரங்க இல்லைனா என்ன நான் இருக்கேன். எங்க வீட்டுக்கு பிள்ளைங்களை அனுப்பி வைங்க ன்னு சொல்வாங்க. என் தங்கையை கூட தத்து கேட்டாங்க. என் அம்மா கொடுக்கல. இப்பொ சாப்பிட மறுத்துட்டு அம்மா கிளம்பிட்டாங்க. .

ஒரு வாரம் கழித்து அம்மா அப்பாவுக்கு சாப்பாடு வைக்கும்போது ரகசியமாக பேசினாங்க. இன்னைக்கு டீச்சரை பார்க்க பள்ளிக்ககூடம் போயிருந்தேன். ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்.. ரொம்ப மனசுக்கு சங்கடமா போச்சு. டீச்சர் வீட்டுக்காரரு மாரடைப்பு வந்து சாகல்லியாம் யாரோ அடிச்சு கொன்னுட்டாங்க

ஐயையோ யாரும் போலிசுக்கு போகலையா?

இல்லங்க வெளியே தெரிஞ்சா அசிங்கம்னு கொழுந்தன் சொல்லிட்டாராம் அவுர் தான் பிணத்தை இறக்கி கொண்டு வந்து வீட்டுல வச்சுட்டு டீச்சருக்கு போன் பன்னுணாராம்

கொன்னுட்டாங்கன்னு சொன்ன, அப்புறம் இறக்குனாங்கன்னு சொல்ற

அவர் எப்படித்தான் செத்தாரு?

அவரு கவர்ன்மென்ட் ஆபிசரு. அவர் தான் பியுனோட சம்சாரத்தை வச்சிருந்தாராம் அடிக்கடி அங்க அவ விட்டுக்கு போவாராம். டீச்சர் கிறிஸ்மசுக்கு ஊருக்கு போய்ட்டாங்கள்ல இவர் ஜாலியா கிளம்பிட்ட்டாரு. அங்க பக்கத்து வீட்டுக்காரங்க இவர்கிட்ட எதுக்கோ தகராறு பண்ணிருக்காங்க. எதுக்குன்னு யாருக்கும் தெரியல. திடீருன்னு கைகலப்பாகி இருக்கு அவனுங்க அடிச்சதுல படாத எடத்துல பட்டு இவரு செத்துட்டாரு ஒடனே அந்த ஆளுங்க இவரை தூக்கில தொங்கவிட்டுட்டு இவர் தம்பி கிட்ட வந்து சொல்லி இருக்கானுங்க

என்ன சொன்னாங்க ?

எங்க சாதிக்காரப் பிள்ளையை ஊருக்கு தெரியாம வச்சிருந்தான் இன்னைக்கு அவளை என்கிட்டே கட்டித்தரச் சொல்லி கேட்டான் நாங்க மறுத்திட்டோம் உடனே அங்கேயே தூக்கு போட்டு கிட்டான்னு சொல்லிட்டாங்களாம், அடிச்சதை யாரும் சொல்லலியாம். ஆனா ஒடம்பு முழுக்க காயம். டீச்சர் சொல்லி அழுதாங்க எனக்கு மனசே கேக்கல இப்ப அவர் பணம் கொஞ்சம் வருமாம் கொழுந்தனும் பாதி பணம் கேக்குறாராம் அந்த ஆட்களுக்கு கொடுக்கனும்கிறாராம் டீச்சர் என்ன செய்வாங்க, பாவம்

ஏன் முந்தியே டீச்சருக்கு இவர் குணம் தெரியாதா? கண்டிச்சு வைக்க கூடாதா? எதுக்கு அவரை தனியா விட்டுட்டு ஊருக்கு போறாங்க?

அந்த ஆளு ஆரம்பத்திலே இருந்தே அப்படி தான். கொஞ்ச நாள் டீச்சர் டியுஷன் கூட எடுக்காம பள்ளிக்கூடம் விட்ட உடனே வீட்டுக்கு போனாங்க என்னன்னு நான் கேட்டதுக்கு வீட்டுல அவர் வேலைக்காரிய வச்சுக்கிட்டு என்ன கொடுமை படுத்திறாரு. அதனால் வேலக்கு ஆள் வைக்கல லதாம்மா. நான் வீட்டுக்கு போய் தான் மாவாட்டணும் பாத்திரம் வெளக்கணும் துணி துவைக்கணும்னு சொன்னாங்க.

இப்ப என்ன செய்ய போறாங்களாம்?

இப்ப வீட்டுல யாரும் இல்லையாம். எல்லோரும் ஊருக்கு திரும்பி போய்ட்டாங்களாம். தங்கச்சிமார் முணு பேருக்கு இவுங்க தான் கல்யாணம் பண்ணி வச்சாங்க. அவர் அதுக்கெல்லாம் ஒன்னும்சொல்ல மாட்டார். தம்பி ரெண்டு பேருல ஒருத்தர் மிலிட்டரி சின்னவர் . அவர் வரல போல. எல்லோரும் ஊருக்கு போய்ட்டாங்க நான் இனி என் சம்பளத்த மட்டும் வச்சுக்கிட்டு என்ன செய்வேன்னு அழுறாங்க. அவருக்கு வர்ற பணத்தை நம்ம கிட்ட தர்றாங்களாம் வட்டிக்கு விட்டு மாசாமாசம் பணம் தர முடியுமான்னு கேட்டாங்க

வேண்டாம் வேண்டாம் யாராவது வாங்கிட்டு கொடுக்கலைன்னா நாம பொறுப்பேற்க முடியாது. எவ்வளவு இருக்காம் ?

பதிலை காணோம் அம்மா விரலை காட்டி தொகையை சொல்லியிருப்பாள்

கோபால் கொத்தனார் வீடு கட்டி விக்குறார். ரெண்டு வீடு ஜோடியா கட்டியிருக்காரு அதை வாங்கி போட சொல்லு. இப்ப வாடகை வரட்டும் பின்னாடி பையனுங்க ஆளுக்கொரு வீடாக எடுத்துக்குவாங்க,

அப்பா சாப்பிட்டுவிட்டு கை அலம்பினார். ‘டீச்சருக்கு இரண்டு வீட்டையும் சல்லிசான விலைக்கு அப்பா வாங்கி கொடுத்தார்.

இரண்டு வீடுகளில் ஒன்றில் நாங்களும் மற்றொன்றில் இன்னொருவரும் குடி இருந்தோம் எனக்கு கல்யாணம் ஆகவும் நான் ஒரு வீட்டிலும் என் அம்மா ஒரு வீடுமாக நாங்களே இன்னும் குடியிருக்கிறோம். அப்போ இந்த வாடகை டீச்சருக்கு மிகவும் உதவியாக இருந்தது. இப்போ இது தேவையில்லைன்னு சொல்வாங்க இருந்தாலும் எங்க நன்றிக்காக நாங்க கொடுத்துகிட்டே வரறோம் டீச்சர் வாடகை வேண்டாம் என்று சொன்னாலும் நாங்க கேட்குறதில்லை இந்த இரண்டு வீட்டுக்கும் டீச்சர் வீடுன்னே பேர் வச்சாச்சு.

வீடு வந்துருச்சு

அம்மா சுருண்டு படுத்திருந்தார். என்னம்மா வாடகைய குடுத்தியா? டீச்சர் நல்லாருக்காங்களா? பார்க்கனும்னு ஆசையா இருக்கு. முடியலயே.

நல்லா இருக்காங்கம்மா உங்களுக்கு நன்றிக்கடன் தீர்க்கனுமாம் அதுக்கு வீட்டை எங்க பேருக்கு மாற்றி தருவேன்னு பிடிவாதம் பிடிச்சாங்க. நான் வேண்டாம்னுட்டேன்,

வேண்டாம் வேண்டாம் அந்த மகராசி வீடு நமக்கெதுக்கு. அவுங்க எனக்கு பெத்த தாய் மாதிரி என்று ஏதேதோ தனக்குள் அம்மா பேசிக்கொண்டே இருந்தார்,

நன்றி தேவதை ரெண்டு வீட்டுக்குமாக மாறி மாறி அலைந்து கொண்டிருந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *