கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 3, 2022
பார்வையிட்டோர்: 31,206 
 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஜான் ஸ்டீன்பெக்

“Junius Multby” by John Steinbeck, published after obtaining the permission of the Author’s Agent.

ஜான்ஸ்டீன்பெக் கலிபோர்னியாவிலுள்ள ஸாலினாஸ் என்ற இடத்தில் 1902ம் ஆண்டில் பிறந்தவர். அவருடைய புத்தகங்களில் எல்லாம் பெரும்பாலும் அவருடைய சொந்த ஜில்லாவினதும், மணமானபின் அவர் வாழ்க்கை நடத்திய மாண்ட்ரீ கடற்கரையினதுமான சூழ்நிலைகளுமே பிரதிபலிப்பதைக் காணலாம்.

அவர் ஸ்டான்போர்டு சர்வகலாசாலையில் நான்காண்டுகள் கல்வி பயின்றார். பட்டம் பெறுவதற்கல்ல. சர்வ கலாசாலையில் கல்வி பயிலவேண்டுமென்ற இச்சையினால் அவர் விஞ்ஞான பாடத்திலேயே தன் முழு கவனத்தையும் செலுத்தினார். பிராணி நூலில் பூர்ண அறிவு பெற்றிருந்தார். முக்கியமாக அவர் கடலில் வாழும் ஜந்துக்கள் பற்றிய வரலாற்றில் விசேஷ வல்லமை பெற்றிருந்தார். வாழ்க்கையில் அவர் பலதிறப்பட்ட தொழில்களில் ஈடுபாடு உடையவராக இருந்தார். அவர் பத்திரிகை நிருபராகவும், கொல்லனார் சிற்றாளாகவும், ஆடு மாடு மேய்ப்பாளராகவும், ஓவியக் கலைஞராகவும், மருந்து விற்பவராகவும், எஸ்டேட் காரி யஸ்தராகவும், கடல் வாழ் ஜந்துக்களின் ஜீவிய நூல் ஆராய்ச்சியாளராகவும், சர்வேயராகவும், மீன் பிடிப்பவராகவும், பழ வியாபாரியாகவும், நூலாசிரியராகவும் இப்படிப் பல துறையில் ஈடுபட்டிருந்தார். 1939-ஆம் ஆண்டில் அவர் நூல்கள் இலக்கிய மேன்மைக்காக வழங்கப்படும் புலிட்ஸர் பரிசைப் பெற்றன.

ஸ்டீன் பெக் கலிபோர்னியாவின் நாட்டுப்புறப் பகுதி யில் எளிய வாழ்வு நடத்தி வருபவர். அவர் மிகவும் சங்கோஜி ; அவர் நீல நிறமான ஆழ்ந்த கண்களுடன், மெல்லிய-ஆனால் ஆழ்ந்த அமைதியான குரலோடு, உயரமாகவும் நல்ல பெருத்த சரீரத்துடனும் இருப்பார்.

***

ஜுனியஸ் மல்ட்பி ஒரு நல்ல இளைஞர் நல்ல பண் பட்ட குடியில் பிறந்து வளர்ந்தவர்; போதிய அளவு கல்வியும் கற்றவர். அவருடைய தகப்பனார் கடனாளி யாகி இறந்தபோது, ஜுனியஸ் தன் விருப்பத்துக்கு மாறாக, பிழைப்புக்கு வேறு வழியின்றி, ஒரு குமாஸ்தா உத்தியோகத்தில் மாட்டிக்கொள்ள நேரிட்டு, பத்து வருடங்கள் அதைவிட்டு வெளிவர வகை தெரியாமல் அதைக் கட்டிக்கொண்டு காலம் தள்ளவேண்டியிருந்தது.

இந்தக் காலங்களில் சாதாரணமாக ஒவ்வொரு நாளும் மாலையில் வேலைக்குப் பிறகு ஜுனியஸ் தனக் கென்றிருந்த விடுதியிற்போய்த் தங்கி மெத்தை வைத் துத் தைக்கப்பட்ட மாரீஸ் நாற்காலியை நன்றாகத் தட்டி அதில் அமர்ந்து கொண்டு ஏதாவது புத்தகங்கள் படித்து கொண்டிருப்பார். அவர் ஸ்டீவன்ஸனுடைய கட்டுரை கள் தாம் ஆங்கிலத்தில் அதிநேர்த்தியானவை யென்று கருதினார் ; அவர் எழுதிய “கழுதையுடன் பயணங்கள்” (‘ட்ரேவல்ஸ் வித் எ டாங்கி’) என்ற புத்தகத்தைப் பல முறை ரசித்துப் படித்திருக்கிறார்.

அவருடைய முப்பத்தைந்தாவது பிறந்த தினத்துக் குப் பிறகு ஒருநாள் மாலை ஜுனியஸ் அவர் விடுதியின் படிகளில் ஏறிக்கொண்டிருக்கையில் அப்படியே மூர்ச்சை யடைந்து விழுந்துவிட்டார். அவர் மூர்ச்சை தெளிந்து எழுந்தபோது தான் முதல்முறையாகத் தன்னால் சரியாக மூச்சுவிட முடியாததையும், மூச்சு விடுவதற்குச் சிரமப் படுவதையும் உணர்ந்தார். எவ்வளவு காலமாக அப்படி இருந்து வருகிறது. என்று எண்ணியதும் அவரே சற்று திகைப்படைந்தார். உடனே டாக்டரிடம் விரைந்தார். ஆலோசனை கேட்ட டாக்டர் அன்பாகவும், நம்பிக்கை யூட்டும் படியாகவும் பதில் அளித்தார்.

அந்த டாக்டர் சொன்னார்: “எப்படியும் உங்கள் உடம்பு குணமாகாது என்று சொல்லும் அளவுக்கு மோசமாகிவிடவில்லை. ஆனால் உங்கள் நுரையீரல் இருக்கும் நிலைக்கு நீங்கள் ஸான் பிரான்ஸிஸ்கோவை விட்டு வேறு எங்காவது போவதுதான் நல்லது. நீங் கள் இந்த மூடுபனிப் பிரதேசத்திலிருந்தால் இன்னும் ஒரு வருடம் உயிரோடிருப்பது கூடக் கஷ்டம்தான். ஈரம் அற்ற வெப்பமான சீதோஷ்ணமுள்ள ஓரிடத்துக்குச் சென்று விடுங்கள்”

டாக்டர் சொன்ன யோசனை இது!

அவருடைய ஆரோக்கியம் பழுதடைந்துவிட்டது என்று கேட்க அவர் ஒருவகையில் மகிழ்ச்சியேயடைந்தார். ஏனெனில், தான். வேண்டா வெறுப்புடன் பார்த்துவந்த குமாஸ்தா உத்தியோகத்துடன் தன்னைப் பிணைத்த பந்தங்களை அறுக்க வகை தெரியாமல் தவித்த மல்ட்பீக்கு இது விடுதலைக்கு வாய்ப்பாக அமைந்தது. அவரிடம் ஐநூறு டாலர்களிருந்தன. அது தான் அவர் அதுவரை சேமித்து வைத்திருந்த சொத்து. இல்லை, சேமித்து வைத்தார் என்றும் சொல்லமுடியாது; செலவழிக்க மறந்து விட்டார், அதனால் தானாக சேர்ந்து விட்டது என்றுதான் சொல்லவேண்டும். “இவ்வளவு பணத்தைக்கொண்டு நான் ஒன்று, நன்கு குணம் பெற்று மறுபடி ஒரு புதிய வாழ்க்கையைத் துவங்க வேண்டும் அல்லது ஒரு முடிவாக அதோடு இறந்து விடவேண்டும்” என்று தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்தார்.

அவர் ஆபீஸிலிருக்கும் ஒரு நண்பன் வெப்ப முள்ள பாதுகாப்பான “ஸ்வர்க்கப் புல்வெளி” என்னும் பள்ளத்தாக்கு பற்றிக் கூறி அது அவருக்கு ஏற்ற இடம் என்றும் யோசனை கூறினார். ஜுனியஸ் (பாஸ்ச்சர்ஸ் ஆப் ஹெவன்) அந்தப் பிரதேசத்துக்கு உடனே பயணமாகி விட்டார். அந்த இடத்தின் பெயரே அவருக்கு வெகுவாகப் பிடித்திருந்தது: “அந்தப் பிரதேசம் தான் அதிக நாள் உயிரோடிருக்கப் போவதில்லை என் பதை அறிவிக்கும் சகுனமாகவாவது இருக்கவேண்டும்; அல்லது அந்த இடமே பூலோகத்தில் ஸ்வர்க்கத் திற்குச் சமானமாக அதன் பிரதியாக விளங்கவேண் டும்” என்று நினைத்தார். கடந்த பத்து ஆண்டுகளாக அவருக்கேயென்று தனிப்பட்ட முறையில் ஒன்றுமே இல்லாத அவருக்கு அந்த இடத்தின் பெயர் தனியாக அவருக்கென்றே அமைந்தது போலத் தோன்றியது. அதை எண்ணிப் பெருமகிழ்ச்சியடைந்தார்.

அந்த ஸ்வர்க்கப் புல்வெளி என்னும் இடத்தில் ஆரோக்கியத்தின் பொருட்டு தங்க வருபவர்களை விருந்தினர்களாகச் சேர்த்துக்கொள்ளபலகுடும்பங்கள் இருந்தன. ஜுனியஸ் அவர்களைப்பற்றி எல்லாம் விசாரித்துப் பின் நேரிலும் பார்த்து விட்டுக் கடைசியில் க்வே கர் என்ற விதவை ஒருத்தியின் பண்ணை வீட்டில் தங் குவதென முடிவு செய்தார். இது அவருக்குத் திருப்தி யாக அமைந்தது. அவளுக்கும் பணம் தேவையாக யிருந்தது ; தவிரவும் ஜுனியஸுக்குப் பண்ணை வீட்டி லீருந்து தனித்து ஒரு கொட்டகை படுக்க வசதியுள்ள தாக அமைந்து இருந்தது. மிஸஸ்க்வேகருக்கு இரண்டு சிறிய பையன்கள் இருந்தார்கள். அவர்களைத் தவிர பண்ணையில் வேலை செய்வதற்கென ஒருகூலியாளையும் நியமித்திருந்தாள்.

அந்த வெப்பமான சீதோஷ்ணம் அவருடைய நுரையீரலுக்கு இதமாக இருந்தது : நோய்க்குக் குண மாகவும் அமைந்தது. வந்து ஒரு வருடத்துக்குள் அவர் சரீரம் ஆரோக்கியம் பெற்றதோடு, எடையும் அதிகரித் தது. அந்தப் பண்ணையில் அவர் அமைதியாகவும் ஆனந்தமாகவும் காலத்தைக் கழித்தார். அவை யாவற் றையும்விட அவருக்கு அதிக மகிழ்ச்சி யளித்தது என்னவென்றால் பத்தாண்டுகளாகப் பெரும்பாடு படுத்திய அந்த ஆபீஸ் வேலையை அறவே மறந்து விட்டு ஒன்றுமே செய்யாமல் முழுச் சோம்பேரியாக ஆகிவிட்டது தான்! ஜுனியஸின் மெல்லிய வெளிறிய தலைமயிர் வாரிவிடப்படாமல் கிடந்தன ; தன்னுடைய மூக்குக் கண்ணாடியை வழக்கத்திற்கு மாறாக மூக்கு நுனியில் அசட்டையுடன் அணிந்து கொண்டிருந்தார். அவருக்கு இப்போது கண்ணாடியே தேவைப்படவில்லை. கண்ணாடி இல்லாமலே நன்றாகப் பார்க்க முடிந்ததால கண்ணாடி எங்கே தொங்கிக்கொண்டிருந்ததென்றே கவலைப்படவில்லை; ஏதோ கண்ணாடி போட்டுக் கொண்டே இருந்துவிட்டோ மென்பதற்காகத்தான் அதைக் கழற்றாமலிருந்தார். எப்போதும் ஏதாவது சிந் தனையிலேயே ஆழ்ந்திருப்பவர்களும் முழுச்சோம்பேறிகளும் செய்துகொண்டிருப்பது போல் எப்போதும் ஒரு குச்சியை எடுத்து பல்லைக் குத்திக்கொண்டே இருப்பார். 1910-ம் ஆண்டில் அவர் பூரண குணம் பெற்று விட்டார்.

1911-ம் ஆண்டில், மிஸஸ் க்வேகர் அக்கம் பக் கத்திலுள்ளவர் பேசும் வம்பு வார்த்தைகளைக் கேட்டு கவலையுடன் சிந்திக்கத் தொடங்கினார். ஒரு அயல் மனிதனைத் தனியாகத் தன் வீட்டில் நீண்டகாலம் வைத் திருப்பதையும் அதன் விளைவுகளையும் யெண்ணி

அவளே ஒருவாறு உணர்ந்து தன்னமைதியை இழந்த தோடு பயப்படவும் ஆரம்பித்தாள். அவளுக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. ஜுனியஸ் பரிபூர்ண மாகக் குணமடைந்துவிடுவாரென்று சந்தேகமறத் தெரிந்தவுடன் வேகர் அத்தனை நாட்களாக மனத் துள் வைத்துக்கொண்டு தடுமாறிக் கொண்டிருந்ததை ஜுனியஸிடம் மெல்லச் சொல்லிவிட்டாள். ஜுனிய ஸும் அவள் தடுமாற்றத்தைத் தடுத்து நிறுத்த உடன் ஒரு வழி கண்டுபிடித்தார். ஜுனியஸ் காலந் தாழ்த் தாமல் களிப்போடு க்வேகரை கல்யாணமே செய்து கொண்டு விட்டார். அவருக்கு இப்போது சொந்த வீடு கிடைத்ததோடு பொன்னான எதிர்காலமும் காத்துக் கொண்டிருந்தது ; ஏனென்றால் அவருடைய மனைவி என்ற பதவியை அடைந்த மிஸஸ் மல்ட்பிக்கு மலைச்சாரலில் இருநூறு ஏக்கர் புல்வெளி நிலமும் ஐந்து ஏக்கர் பழமரத் தோட்டமும், காய்கறிகளும் பயிரிடப் பட்ட நிலமும் சொந்தமாக இருந்தன. ஜுனியஸ், தம்முடைய புத்தகங்களையும், சாய்வதற்குச் சௌகர்யமான அந்த மாரீஸ் நாற்காலியையும், வெலாஸ்க்வெஸ் ஸின்’ ‘கார்டினல்’ என்ற புத்தகத்தின் நல்ல பிரதி யொன்றையும் , ‘சர்ச்சின் இளவரசன்’ என்ற நூலையும் தருவித்துக் கொண்டார். அவருக்கு அவருடைய எதிர் காலம் இன்ப மயமானதாகவும் பிரகாசம் பொருந்திய தாகவும் காட்சியளித்தது.

மிஸஸ் மல்ட்பி, திருமணமானவுடன், கூலியாளை விலக்கி விட்டுத் தன் கணவனை அந்த வேலையில் ஈடுபடுத்த முயன்றாள். ஆனால் மல்ட்பி அதற்கு உடன்படாத தைக் கண்டு கலக்க முற்றாள். அந்த எதிர்ப்புக்கு அவ ளால் ஒன்றுஞ் செய்ய முடியாத நிலையில் அவளிருந் தாள். ஜுனியஸ் நோய்வாய்ப்பட்டு குணமடைந்த ஒரு வருஷ காலத்தில் சோம்பேரியாகவே இருந்துவிட்டார். சோம்பேரித்தனத்தின் மீது காதல் கொண்டுவிட்டார் என்று சொல்லவேண்டும். அந்தப் பள்ளத்தாக்கும், பண்ணையும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தன : ஆனால அவைகள் எப்படி இயற்கையாக இருந்தனவோ அப் படியே இருக்கத்தான் விரும்பினார். புதிய செடிகொடி களைப் பயிராக்கவும் அவர் விரும்பவில்லை. பழையன வற்றைக் களைந்தெறிவதிலும் அவருக்கு விருப்பமில்லை. ஒருநாள் மிஸஸ் மல்ட்பி அவர் கையில் மண்வெட்டி யைக் சொடுத்துக் காய்கறித் தோட்டத்தைக் கொத்தி விடச் சொல்லி சென்று சிறிது நேரங்கழித்து வந்து பார்க் கும்போது அவர் அந்தப் புல்வெளியை அடுத்த ஓடை யிலே காலை அளையவிட்டுக் கொண்டு கையில் ஸ்டீவன் சன் எழுதிய “பிள்ளைக் கொள்ளை” (கிட் நாப்டு) என்ற புத்தகத்தோடு காட்சியளித்துக் கொண்டிருந்தார். அவர் மனைவியைக் கண்டதும் ஒன்றும் தெரியாதவர்போல் விழித்தார். அவருக்குத் தாம் ஏன் அப்படி நடந்து கொண்டோம் என்றோ எப்படி அப்படி நடந்து கொண்டு விட்டோம என்றோ தெரியவில்லை என்று அசடுவழிய அவர் மனைவியிடம் சொன்னார். அவருக்கே தெரியாது தான். அதுதானே உண்மை!

முதலில் சில காலம் அவளும், அவருடைய சோம் பேறித்தனத்தையும், ஓடையில் நனைந்தும் அழுக்கடைந் தும் காணப்பட்ட அவர் ஆடைகளைப்பற்றியும் அடிக் கடி சுட்டிக்காட்டிக் குறைகூறிக் கொண்டேயிருந்தாள். ஆனால் அவள் என்ன சொன்னாலும் காதில் போட்டுக் கொள்வதில்லை யென்று அவர் தம்மைப் பழக்கிக கொண்டார். அவள் பெண்மைப் பண்பு குறைந்து செயல்புரியும்போது அவளைக் கவனிப்பதே மரியாதைக் குகந்ததல்ல என்று அவர் கருதினார். அது ஒன்றும் செய்யமுடியாத முடவனைப் பார்த்து, “நீ ஏன் நடக்க கூடாது” என்று கேட்பது போலத்தான் என்று அவ ருக்குப்பட்டது. மிஸஸ் மல்ட்பி அவரை எவ்வளவு தான் குறைகூறியும் அவருடைய எதிர்ப்பு என்னும் மூடுபனியை அவளால் விலக்க முடியவில்லை. கொஞ்ச நாளைக்கெல்லாம் அலுத்துப்போய் முகம் சிணுந க ஆரம்பித்துப் படிப்படியாகத் தன் தலைமயிரை வாரிவிடு வதையும்கூட கவனிக்காமல் விட்டுவிட்டாள். 1911-ம ஆண்டிலிருந்து 1917-ம் ஆண்டுக்குள் அவர்கள் பரம ஏழையாகிவிட்டார்கள். ஜுனியஸ் பண்ணையை கவனிக்க வேண்டுமென்ற உணர்வே இல்லாதிருந்தார். அவர்கள் உணவு உடைக்காக மேய்ச்சல் நிலத்திலேயே சில ஏக்கர்களை விற்றார்கள் ; அப்படி விற்றுங்கூட வயிறு நிறைய உண்ண முடியவில்லை. வறுமை அந்தப்பண்ணை யில் வேரூன்றி உட்கார்ந்து கொண்டு அவர்களை வருத்த ஆரம்பித்தது. அவர்களுக்கு உடுக்க புது ஆடையென்று ஒன்றுமே எப்போதும் இல்லை. ஆனால் ஜுனியஸுக்கு டேவிட்க்ரேஸன் என்னும் இலக்கிய ஆசிரியரின் கட்டு ரைகள் கிடைத்துவிட்டன. இந்த ஏழ்மை தாண்டவ மாடும் சூழ்நிலையிலும் அவர் தம்முடைய மேலங்கியை மட்டும் அணிந்துகொண்டு, ஓடையின் ஓரங்களில் வரி சையாக வளர்ந்திருந்த காட்டத்தி மரங்களினடியில் அமர்ந்து கொண்டு கவலையற்று காலத்தைக் கழிப்பார் : சில சமயங்களில் “மனோ நிம்மதியுள் சஞ்சாரங்கள்” (அட்வென்சர்ஸ் இன் கண்டென்ட்மென்ட்) என்ற புத்த கத்தைத் தம்முடைய மனைவிக்கும், இரண்டு பையன் களுக்கும் படித்துக்காண்பிப்பார். இதை அவர்கள் கேட்டு ஆனந்திப்பர் என்று எதிர்பார்த்தார் போலும்!

1917ன் தொடக்கத்தில் மிஸஸ் மல்ட்பி கருவுற்றி ருந்தாள். அந்தவருஷக் கடைசியில் யுத்தகால இறுதியில் வெகுவாய் பரவிய தொத்து வியாதி இன்புளுயன்ஸா அந்தக் குடும்பத்தைக் கொடுமையாகப் பீடித்தது. போதிய உணவில்லாததாலோ என்னவோ இரண்டு பையன்களும் சேர்ந்தாற்போல் இன்புளுயன்ஸாவினால் பீடிக்கப்பட்டார்கள். அந்த வீடே வியாதியஸ்தர்கள் வீடாகக் காட்சியளித்தது. மூன்று நாட்கள் அந்தக் குழந்தைகளின் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தன. நான்காம் நாள் இரண்டு சிறுவர்களுமே உயிரைவிட்ட னர். இரண்டு பையன்களும் இறந்துவிட்ட விஷயமே மிஸஸ் மல்ட்பிக்குத் தெரியாது. ஏனெனில் கருவுயிர்க் கும் தருணத்தில் இருந்த அவளிடம் அந்தக் கொடிய செய்தியைச் சொல்ல உதவிக்காக வந்திருந்த அக்கம் பக்கத்தவர்கள் எவரும் துணியவில்லை. பிரசவ வேதனை யுடனிருக்கும்போதே அந்தக் கொடிய தொத்துவியாதி அவளையும் பீடிக்க ஆரம்பித்து. அவள் பெற்ற குழந்தையைக் கண்ணால் பார்க்காமலே அவளும் உயிர் நீத்தாள்;

மிஸஸ் மல்ட்பியின் பிரசவத்துக்கு உதவி செய்த அக்கம்பக்கத்துப் பெண்கள், தம் மனைவியும் மக்களும் இறந்து போன சமயத்திலும்கூட ஜுனியஸ் ஓடைக்கரை யில் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்ததை ஊர் முழுதும் ஏளனமாகச் சொல்லிக் கொண்டிருந்தார் கள். ஆனால் இது முற்றிலும் உண்மையல்ல. அவர்கள் இறந்த பொழுது அவர்களுக்கு உடல் நலமில்லை என்பதையே அறிந்திராததால்தான் கால்களை ஓடை நீரிலிட்டு உட்கார்ந்துகொண்டிருந்தார். ஆனால் செய்தி தெரிந்த பிறகு சிறிது நேரம் இறக்கவிருந்த இரண்டு குழந்தை களிடமும் மாறி மாறிப்போய் ஏதோ பிதற்றிக்கொண்டிருந்தார். பெரிய பையனிடம் வைரம் எவ்வாறு செய் யப்படுகிறது என்பது பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார்; அடுத்தப் பையனருகில் அமர்ந்து ஸ்வஸ்திக் சின் னத்தின் அழகையும், பழமையும் தத்துவமும் பற்றி ஏதோ விவரித்துக்கொண்டிருந்தார். ‘புதையல் தீவு’ (ட்ரெஷர் ஐலண்டு) என்ற புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயததை அவர் உரக்கப் படித்துக்கொண்டிருந்த போதே ஓருயிர் பிரிந்து சென்றுவிட்டது; அந்த அத்தி யாயத்தைப் படித்து முடித்துவிட்டுப் பையனைப் பார்க் கும் வரையில் அவருக்கு அவன் உயிர்போய் விட்ட தென்பதே தெரியாது. அந்த நாட்களில் அவர் உண மையிலேயே இன்னது செய்வதென்றே தெரியாமல் பெரிதும் கலக்க முற்றிருந்தார். அவரிடமிருந்த வஸ்த துக்களைத்தானே அவரால் கொண்டுவந்து கொடுக்க முடியும் அதைத்தான் கொடுத்தார். மரணத் தறுவாயில் குழந்தைகளுக்களித்தார். ஆனால் சாவினின்றும் அவர் களைக் காப்பாற்ற அவைகளுக்குப் போதிய சக்தி இல்லை. இந்த உண்மை அவருக்குத் தெரியும்; அதுதான் அவரை மேலும் கலக்கமுறச் செய்தது.

சவங்கள் எடுத்துச் செல்லப்பட்டபின் ஜுனியஸ் மறுபடியும் தன்னுடைய ஓடைக்குத் திரும்பிவந்து “கழுதையுடன் பயணங்கள்” என்ற புத்தகத்தில் சில பக்கங்களைப் படித்துப் பார்த்தார். மாடஸ்டின்-அது தான் அந்தக் கதையில் வரும் கழுதையின் பெயர்-அதனுடைய எதற்கும் கலங்காத சுரணையற்ற தன்மையை. எண்ணி வியக்கவா வெறுக்கவா என்று முடிவுக்கு வர முடியாமல் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டார். அதற்குள் அவருக்கு ஒரு சிந்தனை: ‘ஸ்டீவன்ஸனைத் தவிர வேறு யார் ஒரு கழுதைக்கு மாடஸ்டின் என்று இந்த அழகானப் பெயரிடமுடியும்?’

பக்கத்து வீட்டுப் பெண்னொருத்தி ஜுனியஸின் போக்கைக் கண்டு காணாமல் அவரைக் கூப்பிட்டு மன மாற திட்டினாள். வேண்டியமட்டும் கடிந்து கொண் டாள். திட்டுகள் அதிகமாகப் போகவே ஜுனியஸ் திறுதிறு வென்று விழித்தார். பதில் சொல்லாமல் சும்மா இருப்பதே சரி என்று அவள் சொல்லுவதைக் காதில் போட்டுக்கொள்ளாதவர் போலிருந்தார்

அவள் கோபம் மீண்டும் அதிகரித்தது. அவள் தன் கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு ஜுனியஸை ஒரு வெறுப்புப் பார்வை பார்த்துவிட்டு, பிறகு உள்ளே சென்று புதிதாகப் பிறந்திருந்த ஆண் குழந்தையை எடுத்துவந்து அவர் கைகளில் “தொப்பென்று போட்டாள். பிறகு அவள் வாயிற் கதவுவரை சென்று அங்கிருந்து ஒரு துச்சமான பார்வையை வீசிவிட்டு மறைந்தபோது ஜுனியஸ் தன் கைகளில் கதறிக்கொண் டிருந்த குழந்தையுடன் நின்றுகொண்டிருந்தார்.. குழந் தையை என்ன செய்வதென்றே தெரியாமல் கீழே விடு வதற்கென ஓரிடமும் அவருக்குப் புலப்படாததால் நெடு நேரம் குழந்தையைத் தம் கையிலேயே வைத்திருந்தார்.

அந்தப் பள்ளத்தாக்கில் வசித்து வந்தவர்கள் ஜுனியஸைப்பற்றி பல பலவாறாகக் கதைகள் சொல் லிக் கொண்டார்கள். சில சமயம் வேலை செய்து வாழ் பவர் வேலையற்ற சோம்பேறிகளை வெறுப்பது போல ஜுனியஸையும் வெறுத்தார்கள்; சில சமயம் அவர் சோம்பலைக் கண்டு பொறாமைப்பட்டார்கள். ஆனால் இவர் செய்வதெல்லாம் தவறாகவே போய்விடுகிறதே என பலர் இரக்கப்பட்டார்கள். அந்தப் பள்ளத்தாக்கிலிருந்த ஒருவரும், ஜுனியஸை பொருத்தமட்டில் அவர் சந்தோஷமாகத்தானிருக்கிறா ரென்பதை மட்டும் உணரவேயில்லை.

அவர்கள் சொல்லிக்கொண்ட கதையில் இது ஒன்று: ஜுனியஸ், டாக்டர் யோசனைப்படி குழந்தைக்கு பாலுக் கென்று வெள்ளாடு ஒன்றை வாங்கினாறாம். வெள் ளாட்டை வாங்குவதற்கு முன் அது ஆணா/ பெண்ணா? என்றே விசாரிக்கவில்லையாம்; எதற்காக வாங்குகிறார் என்பதையும் சொல்லவேயில்லை. அதை வாங்கி வந்து விட்ட பிறகு அதன் வயிற்றுப்புறம் பாலுக்காக மடி இல்லாததைப் பார்த்துவிட்டு ” இது உண்மையான வெள்ளாடுதானா?” என்று தன் தீவிரமான சந்தேகத்தை வெளியிட்டாராம்.

“நிச்சயமாக” என்று சொன்னானாம் அதை விற்றவன்.

“ஆனால் வெள்ளாட்டின் பின்னிரண்டு கால்களுக் கிடையே பாலுக்காகப் பைபோல ஏதோ ஒன்று இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்” என்று ஜுனியஸ் மறுபடியும் தன் சந்தேகத்தைத் தெரிவித்தாராம்.

ஜூனியஸ் அப்படிச் சொன்னதைக் கேட்டு ஊர் மக்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். பிறகு புதிய வெள்ளாட்டைக் கொடுத்தபோதும் இரண்டு நாட்கள் அதன் மடியைத் தடவிக் கொடுத்தும், பெரு முயற்சி செய்தும் ஒரு சொட்டுப் பால் கூடக் கறக்க அவரால் முடியவில்லையாம். அந்த வெள்ளாட்டிலும் ஏதோ குறையிருக்கிறதென்று அதையும் திருப்பிவிட நினை தாராம். ஆனால் அந்த வெள்ளாட்டுக்காரர் பால் கறக்கும் முறையைச் செய்து காண்பித்தபோது தான் உண் மையை உணர்ந்து கொண்டாராம். ஜுனியஸ் அந்தக் குழந்தையையே வெள்ளாட்டின் அடியில் கிடத்தி அது வாகவே வெள்ளாட்டின் மடியிலிருந்து பாலைச் சாப் பிடும்படி விட்டுவிட்டதாகக் கூட சிலர் சொல்லிக்கொண்டார்கள். ஆனால் அது உண்மையல்ல. அந்தப் பள்ளத் தாக்கு ஊர் மக்கள் அவர் குழந்தையை எப்படி வளர்க்கிறாரென்று தங்களுக்குத்தெரியாதென்று சாதித்தார்கள்.

ஓர் நாள் ஜுனியஸ் மாண்டரீக்குச் சென்று, பண்ணையில் வேலை செய்ய ஓர் வயது முதிர்ந்த ஜர்மானி யனை அழைத்து வந்தார். அவர் அப்புதிய வேலை யாளுக்கு அவன் சம்பளக் கணக்கில் 5 டாலர்கள் கொடுத்தார். அதன் பின் மறுபடி ஒன்றுமே கொடுக்க வில்லை. அவள் வேலைக்கு வந்து இரண்டு வாரங் களுக்குள் சோம்பலில் ஊறி எஜமானைப் போலவே யாதொரு வேலையும் செய்யாமல் காலங் கடத்த ஆரம் பித்தான். அவர்கள் இருவரும் ஓரிடத்தில் அமர்ந்து ‘புஷ்பங்களுக்கு நிறம் எப்படி வருகிறது? இயற்கை யின் சின்னங்கள் என்ன? இயற்கைக்குச் சின்னங்கள் ஏதேனும் உண்டா? சின்ன புஷ்பத்திற்கு இன்ன நிறம் என்ற அடையாளமிருக்கிறதா? அட்லாண்டிக் எங்கே உளது….இங்காஸ் பெரு நாட்டு அரசர்கள் எப்படி இறந்தவர்களை அடக்கம் செய்தனர்? என்பது போன்ற ஆச்சரியத்தை விளைவித்த பல விஷயங்களைப் பற்றி அக்கரையுடன் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் வசந்த காலத்தில் உருளைக் கிழங்கைப் பயிரிட்டார்கள். ஆனால் காலங்கடந்தே நடவு நட்டார் கள். ஆனால் பூச்சிகளினின்றும் அவற்றைக் காக்க சாம்பல் போட்டு மூடாமல் விட்டுவிட்டனர். அவர்கள் பீன்ஸ், தானியம், பட்டாணி முதலியவைகளை விதைத் துச் சில காலம் அவற்றைக் காத்துப் பின் அவற்றை மறந்தேவிடுவார்கள். பயிர்கள் கண்களுக்கே தெரியா வண்ணம் களைப்பூண்டுகள் அவற்றை மூடிவிடும். ஜுனியஸ் களைப் பூண்டுகளின் மத்தியில் புகுந்து ஒரு நல்ல வெளிரிய வெள்ளரிக் காயை களைகளினின்று பிரித்து எடுத்துத் தூக்கிக்கொண்டு வருவதை சாதாரண மாக அங்கே காணலாம். ஜுனியஸ் பாதரக்ஷைகள் அணிவதையே விட்டுவிட்டார். பூமியின் உஷ்ணம் உள்ளங் கால்களில் தாக்குதல் உண்டாகும் உணர்ச் சியை அவர் விரும்பினார். மற்றொரு காரணமும் உண்டு.

அவருக்கு பாதரக்ஷையே இல்லை.

பிற்பகலில் அவர் ஜேகப் ஸ்டட்ஸிடம் அதிக நேரம் பேசுவது வழக்கம்.

“குழந்தைகள் இறந்தபொழுது நான் பயத்தின் சிகரத்தையே அடைந்துவிட்டதாகத்தான் எண்ணி னேன். பின் அதைப் பற்றி சிந்தித்தபோது அது பயப் படவேண்டிய விஷயம் அல்ல; வருந்தவேண்டிய சம்ப வம் என்பது விளங்கியது. மேலும் சிந்தித்தபோது அது மேலும் பாரமாக மாறிற்று. என் மனைவியையோ அல்லது அக்குழந்தைகளை யோ நன்றாய்த் தெரியாது என்றே எண்ணுகிறேன். அவர்கள் எனக்குமிக அருகிலிருந்தனர் என்பதனால்தான். அறிதல் என்பது ஒர் விந்தையான விஷயந்தான். அது பல நுணுக்க விபரங்களைப் பற்றிய உணர்வுடன் இருத்தல் என்பதைத் தவிர வேறில்லை. சிலருக்கு இந்த உணர்வு தூரத்து விஷயங்களில் கூர்மை யாகவும் அருகாமையிலுள்ள விஷயங்களில் குறைவாக வும் காணப்படும். என் அருகில் உள்ளவைகளைப் பற்றி என்னால் ஒரு பொழுதும் நன்றாக அறிய முடிவ தில்லை. உதாரணமாக அதோ இருக்கும் என் வீட்டை விட, ஏதன்ஸ் நகரிலுள்ள கீர்த்தி பெற்ற “பார்தினான்” கோயிலைப் பற்றிய விஷயம் அதிகம் எனக்குத் தெரியும்” என்றார். இதை ஜூனியஸ் சொன்னதும் திடீரென அவர் முகம் உணர்ச்சி வசப்பட்டு நடுங்கத் தொடங்கிற்று. அவருடைய கண்கள் உத்சாகத்தால் ஜ்வலித்தன. – ஜேகப், நீ எப்பொழுதாவது பார்தினான் கோவிலின் சிற்பசித்திர வேலைப்பாட்டுடன் கூடிய கல்வெட்டுகளைப் பார்த்திருக்கிறாயா?” எனக் கேட்டார். “ஆம் பார்த்திருக் கிறேன். அது நன்றாகவே இருக்கிறது” என்றான் ஜேகப்.

ஜூனியஸ் கூலியாளின் முழங்காலில் ஒரு கையை ஊன்றிக்கொண்டு, “அந்தக் குதிரைகள் அந்த அழகிய குதிரைகள் வானுலகிற்குச் செல்ல ஆயத்த மான அப்புரவிகள்-அவற்றின் மீது அமர்ந்துள்ள ஆவலுள்ள அந்தப் பெருமிதம் வாய்ந்த இளைஞர்கள் மறுபுறம் தயாராகும் விருந்திற்குச் செல்ல ஆயத்த மாய்ப் புறப்படுகிறவர்களைப் போல தூணில் சிற்பம் அமைந்திருக்கிறது. கவனித்தாயா?”

ஓர் குதிரை அது மிகவும் சந்தோஷமா யிருக்கும் போது எப்படித் தன் உணர்ச்சியைப் பிரதிபலிக்கிற தென்பதை ஒரு மனிதன் எங்ஙனம் உணர்தல் கூடும் என்று நான் ஆச்சரியப்படுகிறேன். அவன்-கற்சிற்பி அங்ஙனம் அறிந்திராவிட்டால் அவ்வளவு உயிருள்ள வைகளாக, உணர்ச்சியுள்ளவைகளாக அமைத்திருக்க அவற்றை அவனால் – செதுக்கியிருக்க முடியாது” என் றார். அவர்கள் சிறிது நேரம் இவ்வாறு சம்பாஷித்துக் கொண்டிருந்தனர். ஜுனியஸின் மனம் ஒரு விஷயத் தில். நீண்டநேரம் பதியாது. நடுப்பகல் போஜன் வேளையாகும் போதுதான் சாப்பாட்டின் நினைவே வரும். அப்போதுதான் பெட்டைக்கோழியின் கூட்டைத் தேடு வார்கள். ஒரு முட்டைகூட அங்கே இல்லாவிட்டால், அவர்கள் பட்டினியாகவேகூட இருந்து விடுவார்கள்.

ஜுனியஸ் தன் பிள்ளைக்கு ராபர்ட்லூயி எனப் பெயர் வைத்திருந்தார். ஜூனியஸ் அப்பெயரால் தன் மகனை அழைத்தபோது ஜேகப் குறுக்கிட்டு இலக்கிய உலகத்தில் பிரகாசிக்கும் ஒரு மணியின் பெயரை ஒரு மனிதக் குழந்தைக்கு வைப்பது சரியல்ல என்றும், நாய்க் குட்டிகளுக்குச் செல்லமாகப் பெயரிடுவது போலவே குழந்தைகளுக்கும் பெயரிட வேண்டும் என்று தன் அபிப்பிராயத்தைத் தெரிவித்தான். “பெயர் கூப்பிட ஒரே ஒரு சொல் போதுமானது. ராபர்ட் என் பதே மிக நீளமான பெயர். அவனை “பாப்” என்றே கூப்பிடலாம் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான் “உன் இஷ்டப்படியே” என்று ஜுனியஸும் அவனோடு சமானத்திற்கு வந்து ராபர்ட் என்பதைவிட ராபீ என் பது குறுகலான பெயர் அல்லவா? நாம் அவனை இனி “ராபி” என அழைப்போம்” என்றார்.

ஜுனியஸ் எப்போதும் ஜேகப்புக்கு விட்டுக் கொடுத்துத்தான் பழக்கம். ஏனென்றால் அவன் சாதா ரண சிறு விஷயங்களுக்கெல்லாம் சிறிது போராடுவான். ஒவ்வொரு சமயம் அசுத்தத்தைக் காணும்போது ஆவேசம் கொண்டு வீட்டைச் சுத்தம் செய்வான் : சிறிது வேலையும் செய்வான்.

ராபி ஒரு பையனைப்போலல்லாமல் பெரியவர்கள் மாதிரியே வளர்ந்து வந்தான். எப்போதும் அவன் அவர்களுடனேதான் இருப்பான். அவர்கள் பேசுவதை யெல்லாம் கவனித்து வந்தான். ஜூனியஸ் அவனை சிறு பையனாகவே நடத்தவில்லை : ஏனென்றால் சிறிய பையன்களை எப்படி நடத்த வேண்டுமென்பதும் அவ ருக்குத் தெரியாது. ராபி எப்போதாவது ஏதாவது புதியதாகக் கூறினால், அவர்களிருவரும் அதை ஒரு பெரிய விஷயமாகக் கருதி அதைத் தங்கள் சம்பாஷணை யில் சேர்த்துக்கொண்டு விவாதிப்பார்கள். அல்லது அதைப் பெரிய ஆராய்ச்சியின் ஆரம்பமென்று பாராட்டு வார்கள். இப்படி அவர்கள் ஒருநாள் பிற்பகல் சம் பாஷணையில் பல விஷயங்களைப்பற்றிப் பேச்சு நிகழும். அறிவுக் களஞ்சியம் ஜுனியஸோடு ஒவ்வொரு நாளும் பல விவாதங்கள் நடைபெறும்.

ஒரு பெரிய காட்டத்தி மரத்தின் கிளை ஓடைக்கு மேலே தாழ்ந்து குறுக்கே ஒரு பாலம்போல் வளர்ந் திருந்தது. அந்தக் கிளைமீதுதான் மூவரும் உட்கார்ந்து கொள்வார்கள். பெரியவர்கள் இருவரும் தங்கள் கால் களை நீரில் தொங்கவிட்டுக் கீழே உள்ள கூழாங்கற்களை கிளரி விட்டுக்கொண்டே குமிழிகளையுண்டாக்குவார் கள். அதைப்போல ராபியும் செய்ய பெரிதும் முயற்சிப் பான். அவனுடைய அபிப்பிராயத்தில் தண்ணீரைக் கால்களால் எட்டினால் தான் மனிதனாக ஆவதற்கு அடை யாளம்.ஜேகப் இப்போதெல்லாம் செருப்பணிவதையே விட்டு விட்டான். ராபியோ என்றால், அவன் வாழ்க் கையில் அதுவரை செருப்பணிந்ததே இல்லை.

அவர்களுடைய விவாதம் கல்வியறிவு உள்ளவர் நடத்தும் சம்பாஷணைகளைப் போலவே தானிருந்தது.

ராபியும் பையன்கள் பேசுவது போல் வார்த்தைகளைப் பேசுவதில்லை. ஏனெனில் அப்படி ஒரு பேச்சையும் அவன் கேட்டது கூட இல்லையே! அவர்கள் சம்பாஷித் தார்கள் என்றும் சொல்ல முடியாது. விதையிலிருந்து தோன்றும் செடிகளைப்போல எண்ணங்கள் தாமாகவே அரும்பின. அரும்பிய எண்ணங்கள் வளர்ந்து பரந்து கிளை விட்டு விரிவதை எண்ணி வியப்பார்கள். முன்ன தாகவே மற்றவர்கள் செய்வது போல் இப்படித்தான் பேசவேண்டும் என்று கட்டுப்படுத்திக் கொண்டோ, ஒழுங்கு படுத்திக்கொண்டோ ஒரு நோக்கத்துடனோ அமையாத அவர்கள் பேச்சிலிருந்து விளையும் பெரும் பயனைக் கண்டு அவர்களே பெரு மகிழ்ச்சி அடைந் தார்கள்.

அந்தக் கிளையின்மீதுதான் மூவரும் உட்காருவார் கள். அவர்களுடைய ஆடைகள் அழுக்கடைந்தும் கிழிந் தும் காணப்பட்டன. அவர்கள் தலைமயிர் கண்ணை மறைக்காதபடி இருப்பதற்காக மட்டும் வெட்டிவிடப்பட்டிருந்தது. அவர்கள் தலைமயிரை ஒதுக்கி விட்டிருந் தனர். வாரிவிடுவதென்பதே கிடையாது. பெரியவர்களுக்கு தாடி வேறு நீண்டு அடர்ந்து வளர்ந்திருந்தது. கால்களை நீரில் நனைத்து நனைத்து மேலும் ஆழமாக்கிய அந்த ஓடை நீரில் நீந்தும் மீன்களைப் பார்த்துக்கொண் டிருப்பார்கள். அந்தப் பெரிய மரத்தின் இலைகள் காற்றின் அசைவிலே கீதம் பாடிக்கொண்டிருந்தன. எப்போதாவது கைக்குட்டை நழுவுவதுபோல, மரங்கள் பழுப்புநிற இலைகளை உதிர்த்துக் கொண்டிருந்தன. ராபி அப்போது ஐந்து வயது நிரம்பப் பெற்றவனாயிருந்தான்.

தன்னுடைய துடையில் ஓரிலை விழுந்ததைக் கவனித்தபோது “காட்டத்தி மரங்கள் மிக நல்லவை யென்று கருதுகிறேன்” என்று சொல்லிக்கொண்டே அந்த இலையின் நரம்பைக் கிழித்தார், ஜுனியஸ்.

“ஆம்; அது உண்மைதான். அவை நீரிலே வளர்வன. எப்போதும் நல்ல பொருள்கள் நீரையே பெரிதும் விரும்புகின்றன. நல்லதல்லாத கெட்டவைகளே ஈரமற்று உலர்ந்து காணப்படுகின்றன’ என்று ஜேகப் ஒத்துக்கொண்டான். “காட்டத்தி மரங்கள் பெரியனவாகவும் நல்லனவாகவும் இருக்கின்றன ; நீண்ட நாள் இருக்க விரும்பும் எந்த நல்ல பொருளும் பெரியதாகவும் இருக்கவேண்டுமென்று தோன்று கிறது. நல்ல பொருள் சிறியதாக இருந்தால் சிறிய தாக உள்ள கெட்ட பொருள்களால் அழிக்கப்படுகின் றன. பெரிய பொருள்கள் அனேகமாகக் கொடுமை யானதாக இருக்கமாட்டா. ஏமாற்றுபவையாகவும் இரா. இதனால்தான் மனித மனமும் பெரியன வற்றை நல்லனவென்றும், சிறியனவற்றைக் கெட்டன வென்றுங் கொள்கின்றன. ராபி இது உனக்குத் தெரி கிறதா?” இவ்வாறு ஜுனியஸ் ஏதோ கேட்டுக்கொண் டிருந்தார். “ஆம்…எனக்குத் தெரிகிறது…யானையைப் போலத்தானே!” என்று பதிலளித்தான் ராபி!

“யானைகள் பெரும்பாலும் கொடியனவே! ஆனால் அவைகள் கூட சற்று சிந்தித்தால் சாதுவாகவும், நல்லன வாகவும் தோன்றுகின்றன….” அவரை முடிக்க விடாமல் ஜேகப் குறுக்கிட்டான். ஆனால் தண்ணீ ர்? தண்ணீரைப்பற்றியும் அப்படியேதான் காண்கிறீர் களா?” “இல்லை…. தண்ணீ ர் அப்படிப்பட்டதல்ல”. “தண்ணீர் இல்லாமல் உலகமே இல்லை; தண்ணீர் தான் வாழ்க்கையின் பிறப்பிடம். மூன்று முக்கிய மான பொருள்களுள் தண்ணீர் என்ற திரவப்பொருள் தான் பிராணிகளின் உயிர் எனலாம். பூமிதான் உயி ரின் கருப்பை. சூரிய வெளிச்சம்தான் வளர்ச்சிக்கு அளவு காட்டுகிறது…”

இப்படி ஏதோ அர்த்தமற்ற விஷயங்களை ராபிக் குக் கற்பித்து வந்தனர்.

அந்த ஸ்வர்ககப் புல்வெளிப் பிரதேசத்தின் மக் கள் மல்ட்பியின் மனைவியும், இருமக்களும் இறந்து விட்ட பிறகு அவரை வெறுத்து ஒதுக்க ஆரம்பித்தனர். ஜுனியஸின் குடும்பத்துக்கேற்பட்ட கோர விபத்தின் போது ஜுனியஸ் நடந்து கொண்ட விதத்தைப்பற்றிய கதைகள் அளவுக்கு மீறிப்போய் அவை பலமிழந்து காலப்போக்கில் பலர் அவற்றை மறந்தேவிட்டார்கள். அவர் வீட்டுக்கு அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் ஜுனி யஸ் தம்முடைய குழந்தைகள் இறந்துபோகும் சமயத் தில் புத்தகம் படித்துக் கொண்டிருந்ததை மறந்து விட்டாலும், அந்த ஊருக்கே அவர் ஒரு பிரச்னையாக ஆகிவிட்டார் என்பதை மட்டும் அவர்களால் மறக்க முடியவில்லை. அவர் அந்த வளமுள்ள பள்ளத்தாக் கில் வருந்தத்தக்க வறுமையில் வாடி வதங்கினார். மற்ற குடும்பங்கள் சிறிது சிறிதாக வருவாயைப் பெரி தாக்கிக்கொண்டு, காரும் ரேடியோவும் வாங்கி, வீட் டுக்கு மின்சார விளக்கு வசதி செய்து கொண்டு, வாரத் துக்கு இருமுறை மாண்ட்ரீக்கோ, சாலினாஸுக்கோ சென்று சினிமாவும் பார்த்து விட்டு செல்வத்திலும் ஆனந்தத்திலும் திளைக்கும்போது ஜுனியஸ் மட்டும் பரம ஏழையாகி அநாகரிகமாகக் காட்டுமிராண்டியைப் போலக் காட்சி யளித்தார். அந்தப் பள்ளத்தாக்கி லுள்ளவர்கள் ஜுனியஸின் நல்ல மரத் தோட்டமும், வயல் வெளிகளும் பாழாகி, புதராகி வேலிகளும் விழுந்து கேட்பாரற்றுக் கிடப்பதை யெண்ணி வருந்தினார்கள்… ஜுனியஸைத் தூற்றினார்கள். பெண்கள் அவருடைய வீட்டுச் சன்னல் கதவு ரேழி, எல்லாம் அழுக்கடைந்து குப்பையுங் கூளமுமாக ஒரே அசுத்த மாகக் காட்சியளித்ததைக் கண்டு மனம் வெதும்பினர். அந்த வீட்டைப்பற்றியே வேண்டா வெறுப்பாகத்தான் அந்த ஊர்ப் பெண்கள் எண்ணினார்கள். ஜுனியஸின் சோம்பேறித்தனத்தையும், சுய கௌரவமே சிறிதும் இல்லாத தன்மையையும் ஊர் மக்கள், ஆண் பெண் அடங்கலும், வெறுக்கவே செய்தனர். சிலகாலம் தங் கள் பழக்க வழக்கங்களை நேரில் கண்டாவது திருந் தட்டுமென்று ஜுனியஸின் வீட்டுக்கு சென்று வந்தார் கள். ஆனால் அவர் வீட்டுக்கு வந்தவர்களை ஜுனியஸ் இயல்பாக நண்பர்களைப்போல சம அந்தஸ்துள்ள வர் போலவே வரவேற்றார். அவர் தம்முடைய வறு மையைப் பற்றியோ, கிழிந்த ஆடைகளைப்பற்றியோ சிறிதும் கவலைப்பட்டவராகவும் தெரியவில்லை. அதனால் ஊரார் படிப்படியாக அவரை சமூகத்திற்கு அருகதை யற்றவர் என்று ஒதுக்கிவைத்து, விலகி நிற்க ஆரம் பித்தனர். ஒருவரும் அவர் வீட்டுப்பக்கமே வருவ தில்லை; அவர் சமூக அந்தஸ்து இல்லாதவர் யென்று முடிவு செய்தார்கள். அவரை அழைப்பது கூடாது, அவரை எவரும் சென்று காணவுங் கூடாதென்றும் தீர்மானித்தனர்.

ஜுனியஸுக்கு கிராமத்து வாசிகளின் வெறுப்பைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அவர் இன்னும் தன்னுள் ளத்தில் மிக மகிழ்ச்சியோடுதானிருந்தார். அவருடைய சிந்தனைகளைப்போலவே அவருடைய வாழ்க்கையும் உலகத்துக்கு ஒவ்வாத கற்பனையிலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்தது. அவருக்கு சூரிய வெளிச்சத்தில் அமர்ந்துகொண்டு காலை ஓடையிலிட்டுக்கொண்டு விட்டால் போதும்! அவருக்கு அணிந்துகொள்ள நல்ல ஆடைகளும் இல்லை என்பது உண்மைதான். ஆனால் நல்ல அழகிய ஆடைகளை அவசியம் அணிந்து கொண்டே செல்லவேண்டிய இடமும் தான் அவருக்கு இல்லையே!

ஊர் மக்கள் ஜுனியஸை வெறுத்தாலும் அவரு டைய பையன் ராபியிடம் மட்டும் இரக்கப்பட்டார்கள் அந்த ஊர்ப் பெண்கள் ஒருவருக்கொருவர், ராபி நாகரிகமற்ற அந்தக் காட்டுமிராண்டியிடம் வளர்ந்து வரு வதே கொடுமை என்று பேசிக்கொண்டார்கள். அவர் கள் பெரும்பாலும் நாகரிகப் பண்புள்ளவர்களான தால் ஜுனியஸின் விவகாரங்களில் நேராகத் தலையிடத் தயங்கினார்கள்.

மிஸஸ் பாங்க்ஸ் என்ற பெண்மணி தன் வீட்டுத் தனி அறையில் கூடியிருந்த பெண்களிடம் “அந்தப் பையன் பள்ளிக்குச் செல்லும் வயதையடையும் வரை பொறுத்திருங்கள் : நாம் எவ்வளவு விரும்பியபோதி லும் நம்மால் ஒன்றுஞ் செய்ய முடியாது: அவன் இப்போது அவனுடைய தகப்பனாருக்குச் சொந்தமான வன். அவன் ஆறு வயதை அடைந்துவிட்டால் அவன் ஊரின் சட்ட திட்டங்களுக்கும் உள்ளடங்கித்தான் ஆகவேண்டும்: அப்போது பார்த்துக் கொள்ளலாம்’ என்று சொன்னாள். மிஸஸ் ஆலன் கண்ணை மூடி தலையை ஆட்டி அவள் சொன்னதை ஆமோதித்து விட்டுச் சொன்னாள் “நாம், அவன் மல்ட்பியின் மகன் மட்டுமல்ல இறந்துவிட்ட மிஸஸ் க்வேக்கரின் மகனுங்கூட என்பதை மட்டும் மறந்துவிடுகிறோம்; நாம் இதற்கு முன்னரே அவன் விஷயத்தில் தலை யிட்டிருக்க வேண்டும். ஆனால் அவன் பள்ளிக்குப் போகும்போது அவன் இதுவரை பெற்றிராத சில பொருள்களை அவனுக்குக் கொடுப்போம்”

மற்றொருத்தியும் ஆலனை ஆமோதித்து “நம்மால் செய்யக்கூடிய சிறு உதவி அவன் உடல் மறைய உடுக்க உடைகள் அளிப்பதுதான்” என்று சொன்னாள்.

அவர்கள், ராபி பள்ளிக்குப் போகும் நாளை வெகு ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ராபியின் ஆறாவது பிறந்ததினத்துக்குப் பின்னும், பள்ளி திறந்தபோது, அவன் பள்ளிக்கூடத்துக்கு வரவில்லை. அப்போது பள்ளிக்கூட நிர்வாகஸ்தர் ஜான் ஒயிட்ஸைடு ஜுனியஸ் மல்ட்பிக்கு ஒரு கடிதம் எழுதினார்.

ஜுனியஸ் அதைப் படித்துப் பார்த்தபோது, “நான் இதைப்பற்றி நினைக்கவே யில்லையே! ராபி / நீ பள்ளிக் கூடத்துக்குப் போய் ஆக வேண்டுமென்று நினைக்கிறேன்” என்று சொன்னார்.

“நான் பள்ளிக்குப் போக விரும்பவில்லை” என்று ராபி பதிலளித்தான்.

“அது எனக்குத் தெரியும். நீ பள்ளிக்கூடம் போக வேண்டுமென்று நானும் விரும்பவில்லை ; ஆனாலும் அப்படி சட்டங்களிருக்கின்றனவே! சட் டத்தை நிலை நிறுத்த அபராதம் என்ற தண்டனை வேறு இருக்கிறதே. நாம் சட்டத்தை மீறுவதில் உள்ள சந் தோஷத்தை தண்டனையிலுள்ள கஷ்டத்தோடு ஒப் பிட்டு பிறகுதானே அனுபவிக்க வேண்டும்? கார்த் தேஜ் தேசமக்கள், துரதிர்ஷ்டவசமாக நேர்ந்த சம்பவங் களுக்குக்கூட மனிதனுக்குத் தண்டனையளித்தார்களே!

துரதிர்ஷ்டவசமாக யுத்தத்தில் தோல்வியுற்றால் கூட தளபதியைத் தூக்கிலிட்டு விட்டார்களே! அதைப் போலவே இப்போது இயற்கையாக ஏற்பட்ட பிறப் புக்கும் அதைப் போன்றவைகளுக்கும்கூடத் தண்டனை யளிக்கிறோமே” என்று பேசிக்கொண்டே கடைசியில் அந்தக் கடிதத்தைப்பற்றியே மறந்துவிட்டார்கள். ஜான் ஒயிட்ஸைடு-இவர் தான் பள்ளிக்கூட அதிகாரி- மறு படியும் சுருக்கமாகவும் சூடாகவும் ஒரு குறிப்பு எழுதி அனுப்பி வைத்தார். ஜுனியஸ் அந்தக் குறிப்பைப் பார்த்தபோது “ராபீ! நீ போய்த்தான் தீரவேண்டு மென்று தோன்றுகிறது. நீ போனால் அவர்களும் பல உபயோகமான விஷயங்களைக் கற்றுத் தருவார்கள்” என்று சொன்னார். “அவற்றை நீங்களே ஏன் கற்றுக் கொடுக்கக்கூடாது” என்று கேட்டான் ராபி/

“ஓ! என்னால் முடியாது. அவர்கள் உனக்குக் கற்றுத் தருவன வெல்லாம் எனக்கு மறந்தே போய் விட்டது”

“நான் அங்கு போக விரும்பவேயில்லை. நான் அவைகளை கற்றுக்கொள்ளவும் வேண்டாம்” என்றான் ராபி பிடிவாதமாக. “அது எனக்கும் தெரியும் எனினும் வேறு வழி இல்லாததால் நீ போகத்தான் வேண்டும்’ என்றார் முடிவாக. எப்படியோ ராபி ஒரு நாள் பள்ளிக்கூடத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டான். அவன் ஒரு பழைய மேலங்கி ஒன்றை அணிந்து கொண்டிருந்தான். அது பின்னாலும், முழங்காலருகி லும் கிழிந்திருந்தது. காலர் கிழிந்து காலரின்றிக் காணப்பட்ட நீலச் சட்டையை அணிந்துகொண்டிருந் தான். ராபியின் அலங்காரம் அவ்வளவுதான்! அவனுடைய நீண்ட தலை மயிர் மட்டக் குதிரையின் நெற்றி மயிர்போல கண்கள் மீது விழுந்தவண்ணமிருந்தன.

பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் அவனைச் சுற்றி வட்டமாக நின்று கொண்டு சத்தம் செய்யாமல் அவனையே முறைத்து முறைத்துப் பார்த்துக்கொண்டி ருந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஜுனியஸின் சோம்பேறித்தனத்தைப் பற்றியும் அவர்கள் வறுமை யைப்பற்றியும் கேள்விப்பட்டிருந்தார்கள். அவர்களும் ராபி தங்களிடம் நன்றாக அகப்பட்டுக்கொள்ளும் சந் தர்ப்பத்திற்குக் காத்திருந்தார்கள். ஆனால் அந்த வேளை வந்துவிட்டபோதோ அவனைச் சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முன்பே தீர்மானம் செய்திருந்தபடி ஒருவரும் “இந்த உடைகள் எல்லாம் எப்படிக் கிடைத்தன” என்று கேட்டோ “அவனுடைய தலைமயிரைப் பாருங்கள் டோய்” என்றோ கேலி செய்ய வில்லை. குழந்தைகளுக்கு என்ன காரணத்தினாலோ ராபியை கேலி செய்யத் தோன்றவில்லை. பரிகசிக்கவும் இல்லை. ராபியின் முன் தங்கள் தோல்வியை எண்ணி திகைத்து நின்றார்கள்.

ராபி அவர்களை ஆழ்ந்து கோக்கிய வண்ணமிருந் தான். அவர்களைக் கண்டு அவன் சிறிதும் பயப்பட்டவ னாகத் தெரியவில்லை. அவர்களைப் பார்த்து, “நீங்கள் விளையாடுவதில்லையா? நீங்கள் நிறைய விளையாடுவீர் கள் என்று என் தகப்பனார் சொன்னாரே!” என்று கேட்டான். அவர்கள் ஏதோ கத்திக்கொண்டே கலைய ஆரம்பித்தார்கள்.

“அவனுக்கு ஒரு விளையாட்டுமே தெரியாது”

“நாம் அவனுக்கு ‘பீவி’ கற்றுத் தரு வோம்” “இல்லை நிக்கர்-பேபி (நீக்ரோக் குழந்தை) கற்றுத் தருவோம்.”

“ப்ரிசினர்ஸ் பேஸ் (கைதியின் பீடம்) தான் முதலில் கற்றுத் தர வேண்டும் அவனுக்கு”

“அவனுக்கு ஒரு விளையாட்டுமே தெரியாது.”

“எந்தக் காரணத்தினாலோ இந்த விளையாட்டெல் லாம் தங்களுக்கு தெரியாமலிருந்தால் எவ்வளவோ நலமா யிருக்குமே” என்ற எண்ணம் அவர்களுக்குள் உண்டாயிற்று. ராபியின் மெல்லிய முகம் அவனுடைய புத்திக்கூர்மையைக் காட்டிக்கொண்டிருந்தது. “நாம் முதலில் பீவியை விளையாடுவோம்” என்று அவன் சொன்னான். அந்தப் புதிய விளையாட்டுக்களில் அவன் பல பிழைகளைச் செய்தான்; ஆனால் அவனுக்குப் போதித்தப் பெரிய பையன்கள் அதற்காக அவனைக் கோபிக்கவில்லை; அதற்குப் பதிலாக பீவி மட்டையை எப்படிப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லித் தராததற்காகப் பரிந்து பேசினர். பீவி விளையாட்டிலும் பல முறைகளிருந்தன. ராபி எல்லாவற்றையும் தனித்திருந்து பார்த்து தனக்குப் பிடித்த ஒருவனிடம் கற்றுக்கொண்டான்.

ரா பி யை ப் பள்ளிக்கூடத்துக்கனுப்பியதாலான விளைவு உடனே தெரிந்தது. வயதுவந்த பிள்ளைகள் அவனைத் தனியாக விலக்கிவிட்டனர்; சிறிய பையன்கள் அவனைப்போலவே எல்லாம் செய்தார்கள். கால்சட்டை யில் முட்டிக்கு நேரே கிழித்துக் கொண்டார்கள். அவர் கள் எல்லோரும் இடைவேளையில் சாப்பிடுவதற்காக வெய்யிலில் பள்ளிச்சுவரில் சாய்ந்துகொண்டிருக்கும் போது ராபி தன் தகப்பனாரைப்பற்றியும் அந்தக் காட் டத்தி மரத்தைப்பற்றியும் அவர்களுக்குக் கூறினான். அவர்களும் அதை நன்றாக உற்றுக் கேட்டு தங்கள் தகப்பனார்களும், ராபியின் அப்பாவைப்போல் சோம் பேறியாகவும், சாதுவாகவும் ஏன் இருக்கக்கூடாது என்று வியந்தனர்.

சில சமயங்களில் சில பையன்கள் தங்கள் பெற் றோரின் உத்தரவையும் மீறி வீட்டுக்குத் தெரியாமல் ஒரு சனிக்கிழமையில் மல்ட்பியின் வீட்டுக்கு ரகசிய மாக வந்து விடுவார்கள். ஜுனியஸ் காட்டத்தி மரத்தில் சாய்ந்து கொண்டிருக்கும்போது இருபுறங்களிலும் அவர்கள் உட்கார்ந்து கொள்வார்கள். அவர் ”புதை யல் தீவு” புத்தகத்தைப் படித்துக் காண்பிப்பார் ; டிரபால்கர் யுத்தம், காலிக் யுத்தங்கள் ஆகியவற்றை விவரிப்பார். ராபி தன் தந்தையின் சிபாரிசால் பள்ளிக் கூடத்திலே ‘ராஜா ‘வாகி விட்டான் என்பது அவனை ஒருவரும் கேலிப் பெயர் சொல்லி அழைக்காமலிருந்த தாலும் எல்லா சச்சரவுகளையும் தீர்த்துவைக்க அவன் முற்பட்டதிலிருந்தும் தெளிவாயிற்று. ஒருவரும் அவ னோடு சண்டை போடக்கூட முற்படவில்லை. அவ்வளவு பெரும் ஸ்தானத்தை அவன் அடைந்து விட்டான்!

பள்ளியின் சிறு பையன்களுக்கெல்லாம் தானே தலைவன் ஆகிவிட்டான் என்பதைப் படிப்படியாகத் தான் அவன் உணர ஆரம்பித்தான். அவனுடைய வயதும், சுய திறமையுமே மற்ற நண்பர்கள் அவனைத் தலைவனாகக் கொள்ளச் செய்தன. என்ன விளையாட்டு விளையாடுவதென்பதைக்கூட அவனே தீர்மானிக்கும் ஒரு காலமும் விரைவில் வந்துவிட்டது!

“பேஸ்பால்’ விளையாட்டில் வேறு எவரும் சச்சரவின்றி நீதி செய்ய முடியாதாகையால் அவன் தான் அந்த ஸ்தானத்தை வகித்தான். அவனே முறைதவறி விளையாடினாலுங்கூட விளையாட்டு விதி களும், ஒழுக்க விதிகளும் அவனிடமே கேட்கப் பட்டன. -ராபி, ஜுனியஸுடனும், ஜாகோபுடனும் நீண்ட நேரம் ஆலோசித்து இரண்டு பெரிய பிரபலமான விளை யாட்டுக்களைக் கண்டுபிடித்தான். அவை ” ஸ்லின்கி கோயோட்” என்ற ‘முயலும் வேட்டை நாயும்” விளையாட்டும், “நொண்டிக்கால்’ என்ற ஒருவகை பிரபல மான ஓட்ட விளையாட்டுமாகும். இந்த இரண்டு விளை யாட்டுகளுக்கும் அவன் விரும்பியபடியே வீதிகளை யெல்லாம் வகுத்தான்.

விளையாடுமிடத்தைப் போலவே வகுப்பறையிலும் வியத்தற்குரியவனாக இருந்த அவன்மீது உபாத்தியா யினி மிஸ் மார்கனும் நாட்டஞ் செலுத்த ஆரம்பித்தாள். அவனால் பிழையின்றி திருத்தமாக வாசிக்கவும் பேச வும் முடித்தது. ஆனால் எழுதத்தான் முடியவில்லை. அவன் மிகப்பெரிய எண்மானங்களை அறிந்திருந்தாலும் சிறிய கணக்குகளை அவன் கற்க விரும்பவில்லை. ராபி

பெருமுயற்சி செய்து எழுதப் பழகினான். பள்ளிக்கூட அட்டைகளில் அவன் கைகள் ஏதோ கிறுக்கின. கடைசி யில் மிஸ் மார்கன் அவனுக்கு உதவி செய்ய முயற்சி யெடுத்துக்கொண்டாள்.

“ஒரு எழுத்தை எடுத்துக்கொள். அதில் நீ பூர்ண தேர்ச்சி பெறும்வரை திரும்பத்திரும்ப அதிலேயே நாட்டம் செலுத்து. அப்படியே ஒவ்வொரு எழுத்திலும் கவனமாக இரு” என்று அவள் அறிவுரை புகன்றாள். அது அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கு விருப்பமா யுள்ள வேறு ஏதாவது செய்ய தனக்குத் தெரிந்தவையெல்லாம் மனத்தினால் ஆராய்ந்து பார்த்தான். அவன் கடைசியில், “எதுவும் எவ்வளவு பயங்கரமான விஷயமானாலும் அது நம்மிடத்திலேயே உள்ளது என் னும் நம்பிக்கை வந்துவிட்டால் ஒன்றுமே கொடுமை யாகத் தோன்றாது.” என்னும் வாக்கியம் எங்கேயே கேட்டது அவன் கவனத்திற்கு வந்தது. உடனே அதை There is nothing so monstrous but we can believe it of ourselves என்று எழுதிப்பார்த்தான். அந்த ‘மான் ஸ்ட்ரஸ்’ என்ற பதத்தை வெகுவாக அவன் விரும் பினான். அதிலிருந்த ஒலி நயமும் அக்ஷர அழுத்தமும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன. சில வார்த்தைகள் தங்கள் ஒலித்திறனால் பூமியிலிருந்து சில விரும்பாத பூதங்களைக்கூடக் கவரமுடியுமென்றால் அப்படிப்பட்ட வார்த்தைகளுள் Monstrous கட்டாயம் ஒன்றாக இருக்கவேண்டும். திரும்பத் திரும்ப, Monstrous என்ற பதத்தில் விசேஷ சிரத்தை செலுத்தி அவன் அந்த வாக்கியத்தை எழுதினான். அவன் எப்படி எழுதிக்கொண்டிருக்கிறான். என்பதைப் பார்ப்பதற் காக ஒருமணி கழித்து மிஸ்மார்கன் அங்கு வந்தான்.

ஏன்? ராபர்ட்! இந்த வார்த்தையை எங்கு கற்றுக் கொண்டாய். “ஸ்டீவன்ஸனது புத்தகங்களிலிருந்து அம்மையே…என்னுடைய தகப்பனாருக்கு அவை பெரும்பாலும் மனப்பாடம் தான்”

ஜுனியஸைப்பற்றிய எல்லாவிதமான கெட்ட கதைகளையும் கேட்டிருந்தபோதிலும் அவளுக்குமட்டும் அவர்மீது தனி மதிப்பிருந்தது. இப்போது அவரை எப்படியும் கட்டாயம் காணவேண்டுமென்று அவள் விரும்பினாள்.

பள்ளிக்கூடத்தில் பையன்கள் விளையாடுவதில் உற்சாகத்தை இழக்க ஆரம்பித்தனர். ராபி ஒருநாள் பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தபோது இதைப்பற்றி ஜுனியஸிடம் கூறி வருத்தப்பட்டான். ஜுனியஸ் தம் தாடியை உருவிவிட்டபடியே ஆலோ சனை செய்தார். “வேவுபார்க்கும் விளையாட்டு (Spy) ஒரு நல்ல விளையாட்டு… அதை நான் மிகவும் விரும்புவதுண்டு” என்று கடைசியில் கூறினார்.

“யார்மீது வேவுபார்ப்பது?”

“ஓ…யாராயிருந்தாலும் சரி… கவலையில்லை …. காங் கள் இத்தாலியர்மீது வேவுபார்ப்பது வழக்கம்.”

ராபி உடனே பள்ளிக்கூடத்துக்கு ஓடினான். அன்று பிற்பகலில் பள்ளிக்கூட அகராதியைப் புரட்டிப்பார்த்து நன்றாக யோசித்து B.A.S.S. F.E. A. J. என்ற எழுத் துக்களை ஒழுங்குபடுத்தி ‘பாய்ஸ் ஆகஸிலரி ஸீக்ரட் ஸர்விஸ் பார் எஸ்பியனேஜ் அகென்ஸ்ட் தி ஜப்பானீஸ்’ (ஜப்பானியர்க் கெதிராக வேவுபார்க்கும் ரகசிய ஒற்றர் உதவிப்படை) என்று பொருள்படும்படி பெயரை அமைத்தான். வேறு எந்தக் காரணத்துக்காக இல்லா விட்டாலும் அந்தப் பெயரின் படாடோபமே பெரு மதிப்பையளித்தது. ராபி, அவர்களை ஒருவர் பின் ஒரு வராக அழைத்துக்கொண்டு போய்ப் பள்ளிக்கூடத்தை யடுத்த பசுமையான மரத்தடியில் அந்த ரகசிய சங்கத் துக்குப் பெருமை தேடும் வகையில், அவ்வளவு கொடூ ரமானதொரு பிரமாணத்தை யெடுத்துக் கொள்ளச் செய்தான். பிறகு அவர்கள் எல்லோரையும் ஒன்று கூட்டினான். சந்தேகமின்றி சமயம் வரும்போது ஜப்பா னியர்களோடு ஒருநாள் சண்டைக்குப் போகப்போவ தாகவும் கூறினான்.

அவன், ” அது நாம் தயாராக இருக்கவேண்டிய தன் அவசியத்தை யுணர்த்துகிறது. அந்தப் பரம துஷ் டர்களின் துஷ்டச் செயல்களைப் பற்றி யெல்லாம் அதி கம் அறிந்துகொள்ளலாம். யுத்தம் ஏற்படும்போது தேவையான உளவுகளைக் கூறலாம்” என்று சொன்னான். இந்தச் சிறந்த வார்த்தைகளின் கோவையைக் கேட்டவர்கள் உடனே கீழ்ப்படிந்து அதற்கிணங்கினர். இத்தகைய வார்த்தைகள் சொல்லப்படவேண்டு மானால் சூழ்நிலை எவ்வளவு முக்கியமானதாக இருக்க வேண்டுமென்று எண்ணித் திகைத்தனர். வேவு பார்ப் பது பள்ளியின் வேலையாகிவிடவே, மூன்றாவது வகுப்பி லிருந்த சிறிய டாக்ஷிகேடோ என்னும் ஜப்பானியன் இவர்களுக்கு இலக்கானான். ஒரு நொடிகூட அவனால் தனிமையாக இருக்கமுடியவில்லை. டாக்ஷி பள்ளிக் கூடத்தில் இரண்டு விரல்களை உயர்த்தினால் ராபி அதன் பொருளையுணர்ந்து கொண்டதற்கு அறிகுறியாக மற் றொரு பையனைப் பார்ப்பான்; இரண்டாவது கரம் ஆகா யத்தில் அங்குமிங்கும் அசைந்தாடும். டாஷி பள்ளிக் கூடத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பும்போது, குறைந்தது ஐந்து பையன்களாவது சாலையின் ஓரமாகவே ஊர்ந்து செல்வார்கள். எப்படியோ கடைசியாக ஓர் இரவு டாக்ஷி யின் தகப்பனாரான கேடோ சன்னலில் ஒரு முகம் தெரி வதைக் கண்டவுடன் துப்பாக்கியால் சுட்டார். ராபீ உடனே தன் படையைக்கூட்டி சூரியன் மறைந்த பிறகு ஒற்றர் வேலைபார்ப்பதை உடனே நிறுத்திவிடவேண்டு மென்று உத்தரவிட்டான். “உண்மையாகவே முக்கிய மான காரியமெதையும் இரவில் செய்ய முடியாது” என் பதை அவர்களுக்கு விவரித்தான்.

போகப்போகக் கடைசியில் டாஷிக்கு ஒற்றர்படை யினால் அதிகத் தொந்தரவில்லாமலிருந்தது. ஏனென் றால் அவனைக் கண்காணிக்கத் தங்கள் பயணங்களில் எல்லாம் டாக்ஷியையும் உடனழைத்துச் செல்லவேண் டியே இருந்ததால் அவன் எல்லா இடங்களுக்கும் அழைக்கப்பட்டான். மேலும் ஒருவரும் அவன் பின் தங்கியிருந்து டாஷியை வேவுபார்க்க ஒப்பவில்லை.

டாஷியே அந்தப் படையைப்பற்றி யெல்லாம் தெரிந்துகொண்டு அதில் சேர மனுச் செய்துகொண்ட போதுதான் (அந்தப் படைக்கே) பேரிடி விழுந்தது போலாயிற்று.

ராபி அவனோடு அன்பாகவே பேசித் தன் ஆட் சேபணையைத் தெரிவித்தான் “உன்னை எப்படி அனு மதிப்பதென்றே தெரியவில்லை. நீயோ ஜப்பானியன : நாங்களோ அவர்களை வெறுப்பவர்கள்.” டாக்ஷிக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது. நானும் உங் களைப் போல இங்கேதான் பிறந்தேன். நானும் உங் களைப்போல அமெரிக்கன் தானே?” என்று கத்தினான். ராபி நன்றாகச் சிந்தித்தான். டாக்ஷியிடம் கொடுமையாக நடந்து கொள்ள அவன் விரும்பவில்லை. (முடிவுக்கு வந்ததன் அறிகுறியாக) அவன் நெற்றி சுருங்கி விரிந் தது “நீ ஜப்பானிய மொழி பேசுகிறாயா……… சொல்!” என்று கேட்டான். “நிச்சயமாக…….. சற்று நன்றாகவுங் கூட”.

நல்லது…அப்படியானால் எங்கள் செய்திகளை யெல்லாம் மொழி பெயர்ப்பவனாக இருந்துவிடு’ என்று ஒரு முடிவாகச் சொன்னான். டாக்ஷி மகிழ்ச்சி யால் முறுவலித்தான். ”நிச்சயமாக இது என்னால் முடியும். நீங்கள் விரும்பினால் என்னுடைய தகப்ப னாரையே வேவு பார்க்கிறேன்” என்று மிகுந்த உற் சாகத்தோடு கூறினான்.

ஆனால் அது இடையில் தடைப்பட்டது. மிஸ்டர் கேடோவைத் தவிர வேறு யாரும் வேவு பார்க்கக் கிடைக்கவில்லை. அவரோ துப்பாக்கி வைத்திருந்த தோடில்லாமல் பயங்காளியாயிருந்ததால் அவரிடம் விளையாட பையன்களுக்குத் தைரியம் வரவில்லை.

பள்ளிக்கூடத்தின புனிதமான சேவையைப் பாராட்டி நன்றி கூறும் தினம் அந்தச் சமயத்தில் தான் ராபியினால் மற்ற பையன்களிடை ஏற்பட்ட மாறுதல் கள் நன்றாகப் புலனாயின. அவர்களுடைய சொல் திறம் வளர்ச்சியுற்றிருந்தது ; நல்ல உடை உடுத்துவதிலும், செருப்பணிவதிலும் வெறுப்பேற்பட்டிருந்தது. ராபி அவனை யறியாமலேயே, புதியதல்லாவிடினும், பழை யதைவிடச் சற்றுக் கடுமையான ஒரு பாணியை உரு வாக்கியிருந்தான். நல்ல ஆடைகளை அணிவதே ஆண் மைத்தனமல்ல என்றும் அப்படி ஒருக்கால் யாரேனும் அணிந்தால் அது ராபியையே அவமதிப்பதாகும் என் றும் கருதத் தலைப்பட்டனர்.

ஒருநாள், வெள்ளிக்கிழமை பிற்பகல், ராபி பதி னான்கு குறிப்புகளை எழுதிப் பள்ளிக்கூடத்தில் பதி னான்கு பையன்களுக்கும் ரகசியமாக அனுப்புவித் தான். குறிப்புகள் எல்லாம் ஒன்றுதான் : ‘ செவ்விந்தி யர்களில் பலர் யுனைடெட் ஸ்டேட்வின் ஜனாதிபதியை நாளைக் காலை 10 மணிக்கு எங்கள் வீட்டருகேயுள்ள கம்பத்தில் கட்டி தீக்கிரையாக்கத் திட்டமிட்டுள்ளனர். ஆகையால் நீங்கள் வேவுபார்க்கத் தொடங்கி கீழ் வயலில் பதுங்கியிருந்து குறித்த காலத்தில் நரிபோல ஊளையிடுங்கள். நான் வந்து உங்கள் எல்லோரையும் அழைத்துக்கொண்டு போய் அந்த எளிய ஆத்மாவைத் தீக்கிரையாகாமல் காப்பாற்றுகிறேன்” என்று குறிப்பில் கண்டிருந்தது.

பல மாதங்களாகவே மிஸ் மார்கனும் ஜுனியஸ் மல்ட்பியைக் காணவேண்டுமென்று நினைத்திருந்தாள். அவரைப்பற்றிக் கூறப்பட்ட கதைகளும், அவளுக்கு ராபியிடம் ஏற்பட்ட தொடர்பும் அவள் ஆவலை அதிகம் தூண்டின. அடிக்கடி வகுப்பறையில் யாராவது ஒரு பையன் அதிசயமான செய்தி ஒன்றைச் சொல்லிக் கொண்டே இருந்தான். உதாரணமாக, முட்டாள் தனத் துக்குப் பெயர்போன ஒரு பையன் ஹெங்கெஸ்டும் ஹோர்ஸாவும் பிரிட்டனை படை எடுத்தனர் என்று அவளிடம் சொன்னான். அவனை வற்புறுத்திக் கேட்ட போது அந்தச் செய்தி அதிரகசியமானதென்றும் ஜுனி யஸ் மல்ட்பியிடமிருந்து தெரிந்து கொண்டதாகவும் கூறி னான். அந்தப் பழைய வெள்ளாட்டுக் கதையை ரஸித்த அவள் அதை பத்திரிகைக்கெழுதினாள். ஆனால் அதை எப்பத்திரிகையும் பிரசுரிக்கவில்லை. போகப் போக அவள் மல்ட்பியின் பண்ணைக்குப் போக ஒரு தேதியையும் குறித்து வைத்திருந்தாள்.

டிஸம்பர் மாதத்தில் ஒருநாள் காலை வானம் பனி யால் குளிர்ந்தும், சூரிய வெளிச்சம் பளிச் சென்றும் இருப்பதைக் கண்டாள். காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு அவளுடைய கனத்த சட்டை யொன்றையும், விரை வாக நடக்க உதவும் பூட்ஸையும் அணிந்துகொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டாள். முற்றத்தில் உறங்கிக் கொண்டிருந்த நாய்களை உடனழைத்துச் செல்ல முயன்றாள். ஆனால் அவை வாலைச் சுருட்டிக்கொண்டு சூரிய வெப்பத்தில் உறங்கச் சென்றன.

மல்ட்பியின் வீடு கேடோ அமரில்லோ (Gato Amarillo) என்ற சிறிய ஆழமான பள்ளத்தாக்கில் இரண்டுமைல் தூரத்திலிருந்தது. சாலையை அடுத்து ஒரு ஓடை ஓடிக்கொண்டிருந்தது. சாலையில் மரங்களுக் குப் பக்கத்திலே வரிசையாகவும் அடர்த்தியாகவும் பல செடிகள் புதர்போல வளர்ந்திருந்தன. அந்தப் பள்ளத் தாக்கில் ஒரே குளிராக இருந்தது. ஏனென்றால் சூரியன் இன்னும் மலையுச்சியில் தோன்றவில்லை. மிஸ் மார்கன் அந்தச் சாலை வழியே நடந்து கொண்டிருந்தபோது அவ ளுக்கு முன்னால் ஏதோ காலடி ஓசையும், இன்னும் ஏதோ குரல் ஒலிகளையும் கேட்டு அந்த வளைவை வேக மாகக் கடந்து சென்று பார்த்தாள். ஆனால் அங்கு ஒரு வரையுங் காணவில்லை. ஆனால் சாலையோரத்திலிருந்த புதர்களிலிருந்து ஏதோ ஒரு மர்மமான சத்தம் வந்து கொண்டே இருந்தது.

அதற்கு முன்பு மிஸ் மார்கன் அங்கு வராவிட்டா லும் மல்ட்பியின் வயலை அவள் அங்கு வந்தவுடன் அறிந்து கொண்டாள். முட்செடி அதிகமாகி வயலின் வேலி கீழே வளைந்து சாய்ந்து கிடந்தது. அந்த களைக் காட்டில் பழமரங்களுங்கூட வெறுங் கிளைகளுடன் காட்சியளித்தன. களாச் செடிபோனற கருப்பு திராட் சைக்கொடி ஆப்பிள் மரத்தின் மீது படர்ந்திருந்தது. அணில்களும் முயல்களும் மரத்தின் அடியிலிருந்து துளை போட்டுப் பொந்துக்களை உண்டாக்கி யிருந்தன. மெல்லிய குரலைக் கொண்ட புறாக்கள் தம் இறககை களை அடித்துக்கொண்டு ஓர் ஒலியை உண்டாக்கிய வண்ணம் வெளியே பறந்து சென்றன. உயர்ந்து அடர்ந்திருந்த பேரிமரத்தில் நீல நிறமுள்ள ஏதோ பறவைகள் விதவிதமான சத்தங்களை உண்டாக்கிக் கொண்டிருந்தன. எல்ம் மரத்துக்குப் பின்னால் பாசி படிந்து வளைந்து காணப்பட்ட மல்ட்பி வீட்டுக் கூரை யின் உச்சியை மிஸ். மார்கன் கண்டாள். அந்த இடம் நூறாண்டுகளாக மனித சஞ்சாரமே இல்லாத இடம் போல் அவ்வளவு அமைதியாக இருந்தது. அப்படிப் பாழடைந்து இருந்தது அந்த இடம். “எவ்வளவு அழுக் கடைந்தும், இடிந்தும் பாழாகிவிட்டன. எவ்வளவு நேர்த் தியாக இருந்தும் கவனிப்பாரற்றுப் பாழாகிவிட்டதே!” என்று இவ்வாறெல்லாம் அவள் எண்ணினாள். ஒற்றை இரும்புக் கம்பியில் மட்டுமே ஆடிக்கொண்டிருந்த

அந்தச் சிறிய வாசல் கதவு வழியாக உள்ளே நுழைந் தாள். அந்தப் பண்ணைக் கட்டடம் சீதோஷ்ண மாறு பாடுகளால் பழுதடைந்து காணப்பட்டது. அதன் சுவர் களின் பாதிக்குமேல் கொடிகள் வளர்ந்து மேலும் உயர வளர யத்தனித்துக் கொண்டிருந்தன. மிஸ் மார்கன் வீட்டின் ஒரு மூலை திரும்பியதும் வழியில் சற்று தாமதித் தாள். அங்கே அவள் கண்ட காட்சி அவளைத் திகைக்க வைத்தது. பயத்தால் அவள் “ஆ’ வென வாயைப் பிளந்தபடி நின்றாள். அவள் முதுகெலும்பே சிலிர்த்துக் குறுகிவிட்டது போன்ற ஒரு உணர்ச்சி யுற்றாள். அந்த முற்றத்தின் மத்தியில் ஒரு இரும்புக் கம்பம் நாட்டப்பட் டிருந்தது. அதில் கிழிந்த ஆடைகளை அணிந்திருந்த ஒரு மனிதனை நீண்ட கயிற்றால் இறுகக் கட்டி யிருந்தார்கள். அவனைவிடச் சிறியவனும், வாலிபனு மான மிகக் கிழிந்த ஆடைகளை அணிந்திருந்த மற்றொரு வன் அவனுடைய காலடிகளில் சருகுகளையும் சுள்ளி களையும் குவித்திருந்தான். மிஸ் மார்கன் நடுங்கிப்போய் வீட்டின் பின் மூலைக்கு மறுபடியும் போனான். “இப்படிப் பட்ட காரியங்கள் நிகழ்வதில்லை; நிகழ முடியாது. இது ஏதோ கனவுதான்” என்று அவள் நினைத்தாள். பிறகு அவள் அந்த இரண்டு மனிதாகள் தங்களுக்குள் சகஜமாகவே பேசிக்கொண்டிருந்த அந்த சம்பாஷ ணையை உற்றுக் கேட்டாள்.

“மணி பத்தாகப் போகிறது’ என்றான் அந்தச் சிறியவன். அந்தக் கைதி “ஆம்…புதருக்கு தீ வைப் பதற்கு முன் ஜாக்கிரதையாக இரு…அதற்கு முன் அவர்கள் வருகிறார்களா என்பதை முதலில் நிச்சயித்துக் கொள்” என்று சொன்னான். மிஸ் மார்கனுக்குச் சற்று நிம்மதி ஏற்பட்டது. ஏதோ விளையாட்டுப்போலிருக்கிறது என்ற சந்தேகம் தோன்றவும் கொஞ்சம் தைரியமடைந்து அந்த மரத்தருகே மெல்லத் தடுமாறிச் சென்றாள். கட்டப்படாத அந்த சிறிய மனிதன் அவ ளைப் பார்த்தான். ஒரு கணம் அவன் திகைத்து நின்றான்.

உடனே சமாளித்துக்கொண்டு அவளுக்கு தன் வணக் கத்தைத் தெரிவித்துக்கொண்டான். கிழிந்த ஸூட்டும் அடர்ந்த தாடியுங் கொண்ட அவனுடைய வணக்கம் வேடிக்கையாகவும், கவர்ச்சிகரமாகவும் இருந்தது. மிஸ் மார்கன் பெரு மூச்சுக் கிடையில் தான் பள்ளிக் கூட ஆசிரியை என்பதை விளக்கினாள் : “நான் உலாவச் சென்றபோது இந்த வீட்டைப் பார்த்தேன். ஒரு கணம் இந்த விசாரணையும் தண்டனையும் உண்மையான அபாயம் தான் என்றே நம்பி விட்டேன்.”

ஜுனியஸ் புன்முறுவல் செய்தபடியே, “உண்மை தான் ….. நீங்கள் நினைப்பதைவிட உண்மையான அபா யந்தான். நீங்கள் தாம் விடுவிக்க வந்திருப்பதாக நான் நினைத்தேன். விடுதலை 10 மணிக்கு நடக்கவேண்டும்,” என்று சொன்னார்.

அந்த வீட்டுக்கருகே புதரினின்றும் திடீரென்று நரி ஊளையிடுவதுபோல சத்தம் கேட்டது. ஜுனியஸ் “அதுதான் விடுதலைக்கு அடையாளம்” என்று சொல்லி மேலே தொடர்ந்தார் :

“மார்கன், என்னை மன்னித்து விடுங்கள்! இது தான் விடுதலை அறிவப்பென்று நினைக்கிறேன். நான் தான் ஜுனியஸ் மல்ட்பி! இந்தக் கனவான் சாதாரண மான நாட்களில் ஜாகோப் ஸ்டூட்ஸ். இன்று அவர் தான் இந்தியர்களால் தீ விபத்துக்குள்ளாகும் ஐக்கிய நாட்டின் ஜனாதிபதி. ஒரு சமயம் மற்றொரு விளையாட்டில் அவர்தாம் “குனிவெராக” நடிப்பாரென்று நினைத் தோம். அதற்குத் தேவையான சரீர அமைப்பு இல்லா விடினும் “குனிவரை ” விட ஜனாதிபதியே அவருக்குச் சிறந்த வேஷம் : நீங்கள் அப்படி நினைக்கவில்லையா? தவிரவும் அவர் பெண்கள் அணியும் பாவாடையணிய வும் மறுத்துவிட்டார்.”

“முழு முட்டாள் தனம்” என்று சொன்னார் தலை வர். மிஸ்மார்கன் சிரித்தாள். “நான் இந்த விளையாட்டின் இறுதிக் கட்டமாகிய. விடுதலையைக் காணலாமா?” என்று மல்ட்பியிடம் கேட்டாள்.

“நான் ஒன்றும் மல்ட்பி இல்லை. இந்த விளையாட் டில் நான் தான் முன்னூறு இந்தியர்கள்”: நரிகளின் ஊளை சப்தம் மறுபடியும் ஆரம்பித்துவிட்டது. அந்த “முன்னூறு இந்தியர்கள்” படிகள் மூலம் மேலே ஏறிப் போங்கள்” என்று உத்தரவு பிறப்பித்தார்கள். உன்னைச் செவ்விந்தியனாக எண்ணி ஒருவனும் கொலை செய்து விட மாட்டார்கள்.

அவர் அவ்வோடையை உற்று நோக்கியவண்ண மிருந்தார். ஒரு அலரிக் கிளை வேகமாய் ஆடிக் கொண் டிருந்தது. அந்தக் கம்பத்தினடியில் இருந்த கட்டையில் ஜுனியஸ் தீக்குச்சியை தன் நிஜாரில் தேய்த்துத் தீ மூட்டினார். தீ ஜ்வாலை சுடர்விட்டு மேலெழுந்தபோது அந்த அலரி மரங்கள் துண்டுகளாக வெடித்துச் சிதறி விடுவன போலத் தோன்றின. ஒவ்வொரு துண்டும் நடுங்கி வீறிடும் ஒரு சிறுவனைப் போல் காட்சியளித்தன. பிரஞ்சு மக்கள் முன்பு சரித்திரத்தில் பாஸ்டில் சிறையை மனம் போனபடி கொடூரமாய்த் தகர்த்தெரிந்ததைப் போல மறைந்திருந்த பையன்கள் கூட்டம் முன்னேறி யது. ஜனாதிபதியைத் தொடும் முன்னரே தீ வேக மாய் உதைக்கப்பட்டு கலைத்தெறியப்பட்டது. காப் பாற்ற வந்தவர்கள் கயிறுகளை அவிழ்த்து விட்டனர். ஜேகப் ஸ்டூட்ஸ் விடுதலைபெற்று மகிழ்ச்சியோடு நின்றார். அதையடுத்து நிகழ்ந்த நிகழ்ச்சிகளும் கவர்ச்சி கரமாகவே இருந்தன. தலைவருக்கு மரியாதை செய்யும் வகையில் ஸல்யூட் செய்து அவர்கள் நின்றபோது அத் தலைவர் கீழிறங்கிவந்து அணி வகுப்பைப் பார்வை யிட்டு ஒவ்வொருவர் சட்டையிலும் வீரன் என்று பொறிக்கப்பட்ட சின்னத்தை அணிவித்தார். அத் துடன் விளையாட்டும் முடிவடைந்தது.

‘அடுத்த சனிக்கிழமை இந்த இழிவான சதியில் இறங்கிய துரோகிகளைத் தூக்கிலிடுவோம்’ என்று – ராபி அறிவித்தான்.

‘ஏன் இப்போதே கூடாது? அவர்களை இப் பொழுதே தூக்கிலிடுவோம்’ என்று படையினர் கூச்சல் போட்டனர்.

“நண்பர்களே, இல்லை, இன்னும் செய்யவேண் டிய காரியங்கள் நிரம்ப உள்ளன. நாம் தூக்குமரத்தை உருவாக்கவேண்டும்” என்று சொல்லிவிட்டுத் தந்தை யைப் பார்த்து, “உங்களிருவரையுமே தூக்கிலிட வேண்டுமென நினைக்கிறேன்,” என்று சொன்னான். அவன் கண்கள் ஒருமுறை மிஸ் மார்கனை அன்போடு உற்றுப் பார்த்துப் பின் கீழிறங்கின.

மிஸ் மார்கனுக்கு அன்றைய பிற்பகல் ஆயுளி லேயே இன்பகரமான தொனறாகத் தோன்றியது. அவளுக்கு அந்தக் காட்டத்திமரத்தின் கிளையில் ஓர் உயாந்த இடம் அளிக்கப்பட்டதால் மாணவர்கள்

அவளை ஒர் ஆசிரியை என்றே நினைக்கவில்லை.

‘உங்களுடைய செருப்புகளைக் கழற்றிவிட்டால் மிக நேர்த்தியாயிருக்கும்’ என்று ராபி சொன்னான். அவ ளும் அப்படியே தன்னுடைய செருப்புகளைக் கழற்றி விட்டு ஓடை நீரிலே கால்களை தொங்கவிட்டபடி இருந்தபோது அவன் சொன்னது போல் நேர்த்தியாயிருப்பதை உணர்ந்தாள்.

அன்று பிற்பகல் ஜுனியஸ் அல்யூஷியன் இந்தியர் களிடையேயிருந்த ‘கானிபால் ஸொசைட்டி’யைப் (மனி தர்களையே தின்னும் அல்யூஷியன் இந்தியர் சங்கம்) பற்றிச் சொன்னார். அவர், கார்த்தேஜுக்கு எதிராக எப்படி அந்த நாட்டுக் கூலிக்குப் போர் செய்யும் வீரர் கள் திரும்பிவிட்டனர் என்பதைப் பற்றியும் சொன்னார். தெர்மோபைலே யுத்தத்தில் லாஸிட மோனியர்கள் இறப்பதற்கு முன்பு தங்கள் சிகையை அலங்கரித்துக் கொண்டு மரணத்தையும் மகிழ்ச்சியோடு வரவேற்கத் தயாராக இருந்ததைப்பற்றி விவரித்தார். மகரோனி என்ற கோதுமை பணியாரம் முதலில் எப்படித் தோன் றியது என்பதைப்பற்றியும், தாமே நேரிலிருந்து கண்ட வர்போல தாமிரம் என்ற உலோகம் எப்படி முதலில் கண்டு பிடிக்கப்பட்டது என்பதைப் பற்றியும் விளக்கி னார். கடைசியில் ஈடன் தோட்டத்து வெளியேற்றத்தைப் பற்றிய அவருடைய கருத்தை பிடிவாத குணமுடைய ஜேகப் மறுத்தபோது சிறு சச்சரவு ஏற்பட்டது. பையன்களும் வீட்டுக்குப் புறப்படலாயினர். மிஸ் மார்கன் அவர்களை யெல்லாம் முன்னே போக விட்டு அவள் மட்டும் சற்று பின்னே தங்கியபடியே மெதுவாகவே நடந்துவந்தாள். ஏனெனறால் அவள் அந்த அதிசயமான மனிதனைப் பற்றி சிந்தித்துக் கொண்டே செல்ல விரும்பினாள்.

பள்ளிக்கூடப் பார்வையாளர் குழு பள்ளிக்கு விஜயம் செய்யும் நாளை எப்போதும் மாணவரும் ஆசிரி யரும் பயத்துடனேயே எதிர் பார்த்துக்கொண்டிருந்தனர். அன்று நாள் முழுவதும் நிகழ்ச்சிகள் எல்லாம் கடுகடுப்பாகவே நிகழும். பாடங்கள் யாவும் நடுக்கத்துடன் தான் ஒப்பிக்கப்படும் / வார்த்தைகளே சரியாக உச்சரிக்கப்படாது! அன்றுபோல் என்றுமே மாணவரும் அத்தனை தவறுகளைச் செய்ததில்லை ; ஆசிரியரும் அன்று போல் என்றுமே அப்படி அஞ்சி நடுங்கியதும் இல்லை !

அந்த ஸ்வர்க்கப் பள்ளத்தாக்கின் பள்ளிப் பார்வையாளர் குழு டிஸம்பர் மாதம் 15ம் தேதி பிற் பகல் அப்பள்ளியைப் பார்வையிட்டது. பிற்பகல் உண வுக்குப் பிறகு அவர்கள் யாவரும் சவ ஊர்வலத்தில் செல்வது போல வரிசையாக மந்த முகத்துடனும், சிறிது வெட்கத்துடனும் ‘அணி வகுத்தனர்.’ அந்தப் பள்ளத்தாக்கு மக்கள் கல்வியைப்பற்றிக் குறைகூறு வதை ஏதோ சாதாரணமாகவே நினைத்து வரும் கிளார்க தலை நரைத்த கிழவர் ஜான் ஓயிட் பீல்டு முதலில் வந்தார். பேட் ஹம்பர்ட் இரண்டாவதாக வந்தார். பேட் அவரே விரும்பிய காரணத்தால், தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் ஒரு தனிப்பட்ட மனிதர். அவருக்கு ஊர் மக் களைத் தாமே நேரிற் சந்தித்துப் பழக முயற்சி எடுத் துக் கொள்வதில் அவ்வளவாக ஆர்வமில்லை யென்றா லும் அவர்களோடு எந்த விதத்திலாவது தொடர்பு கொள்ள மட்டும் எல்லா விதங்களிலும் முயலுபவர்.அவருடைய ஆடைகள், வாஷிங்டன் நகரத்திலுள்ள லிங்க னுடைய சிலைக்கு வெண்கலத்தால் செதுக்கப்பட் டிருந்த உடையைப் போல அவலட்சணமாகவும் ஒழுங்கற்றும் இருந்தன. அடுத்தபடியாக டி. பி. ஆலன் மௌனமாக வாசல் நடைப்பக்க ஒரமாக வந் தார். அவர் ஒருவர்தாம் அந்தப் பள்ளத்தாக்கில் வியாபாரியாக இருந்தவர்! அதனால் அந்தக் குழுவில் அவ ருக்குள்ள இடம் அவருக்கொரு உரிமையாகி விட்டது. அவருக்குப் பின்னால் தாவித் தாவி நடந்து வந்து கொண்டிருந்த பெரிய தமாஷான பேர்வழி ரேமாண்ட் பாங்க்ஸ் சிவந்த முகத்தோடும் சிவந்த கைகளோடும் காட்சி யளித்தார். அந்த வரிசையில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த, பெர்ட்மன்றோ கடைசியாக வந்து கொண்டிருந்தார். அதுவே அவருடைய முதல் விஜயமாக இருக்கவே பொட் மற்ற அங்கத்தினர்களுடன் அந்த அறைக்கு முன்னாலிருந்த ஆசனத்தி லமரச் சென்றபோது மந்தை ஆடு போலக் காணப்பட்டார்.

அந்தக் குழுவினர் அதிகார தோரணையில் அமர்ந் திருந்தபோது அவர்களுடைய மனைவியர் உள்ளே வந்து குழந்தைகளுக்குப் பின்னால் ஒரு அறையில் உட்கார்ந்து கொண்டார்கள். இது மாணவர்களுக்கு ஒரு பெரிய இடைஞ்சலாக இருந்தது. அவர்கள் தம் மைச் சுற்றி மற்றவர்கள் சூழ்ந்திருப்பதால் விடுவித் துக் கொண்டு வெளியே செல்லும் உரிமை பறிக்கப் பட்டு விட்டதாக உணர்ந்தார்கள். அவர்கள் உட்கார்ந்த படி உடம்பை வளைத்து நெளித்தபோது பின்னாலமர்ந் திருந்த பெண்மணிகள் புன் முறுவல் செய்ததைக் கண் டார்கள். மிஸஸ் மன்றோ தன் மடியில் வைத்திருந்த காகிதப் பொட்டலம் அவர்கள் கண்களில் பட்டது.

பள்ளிக்கூடமும் ஆரம்பமாயிற்று. மிஸ் மார்கனும் சிரமப்பட்டு வருவித்துக்கொண்ட புன்முறுவலுடன் பள்ளிக்கூடப் பார்வையாளர் குழுவை வரவேற்றாள். “வழக்கத்துக்கு மாறாக, எதையும் செய்ய வேண்டாம்; பள்ளிக்கூடத்தின் அன்றாட வேலை முறையில் பள்ளி யைப் பார்வையிட்டால் நன்றாக இருக்கும்,” என்று அவள் கூறினாள். சற்று நேரங்கழித்து அவளுக்கே ஏன் அப்படிச் சொன்னோம்’ என்றாகிவிட்டது. அவளுக்கு நினைவு தெரிந்தவரை அவ்வளவு முட்டாள்தன மான குழந்தைகளைக் கண்டதே இல்லை. வாயைத் திறந்து பெரு முயற்சியின் பயனாக வந்த வார்த்தைகளும் பெரும் பிழைகளாக இருந்தன. அவர்களுடைய உச் சரிப்பைக் காதுகொண்டு கேட்க சகிக்கவில்லை. அவா களுடைய வாசிப்பு, பைத்தியக்காரர்களின் பிதற்றலைப் போல ஒலித்தது. குழுவினரும் கூடியவரை கௌரவ மாகப் பெருந்தன்மையோடு இருக்க முற்பட்டனரென் றாலும் சில இக்கட்டான சமயங்களில் குழந்தைகளுக்கு. மத்தியில் புன்முறுவல் செய்வதைத் தவிர்க்க முடிய வில்லை. மிஸ் மார்கன் முகத்தில் வியர்வை அரும்பியது. அவளுக்கு, கோபங்கொண்ட அந்தக்குழுவினரால் தான் பள்ளியிலிருந்து விலக்கப்பட்டு விடுவதாகவெல்லாம் தோன்றியது. பின்னால் அமர்ந்திருந்த அவர்களுடைய மனைவிகள் லேசாகப் புன்முறுவல் செய்தனர். காலமும் மெல்ல ஓடியது. கணக்குப் பாடத்தை வைத்துக் கொண்டு அவர்கள் மண்டையை உடைத்துக் கொண் டிருந்தபோது ஜான் ஒயிட்ஸைடு தம் ஆசனத்திலிருந்து எழுந்தார்.

“மிக்க நன்றி….நீங்கள் அனுமதித்தால், குழந்தை களுக்கு ஓரிரு வார்த்தைகள் சொல்லுகிறேன் ; பிறகு அவர்களைப் போகச் சொல்லிவிடலாம். இவ்வளவு நேரம் நாங்கள் அவர்களோடு இருந்ததற்கு அவர் களுக்கு ஏதாவது பரிசு கொடுக்கவேண்டும்” என்று சொனனார்.

எப்படியோ ‘இன்ஸ்பெக்ஷன்’ எல்லாம் முடிங் ததோ என்ற திருப்தியோடு அவள் பெருமூச்சுவிட்டாள் “வழக்கமாக சாதாரண நாட்களில் இருப்பதைப்போல குழநதைகள் இன்று இல்லை என்பதை நீங்களும் அறிந் திருப்பது பற்றி மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினாள்.

ஜான் ஒயிட்ஸைடு புன்முறுவல் செய்தார். அவர் பள்ளிக்கூடப் பார்வையாளர் குழுகூடும் நாட் களில் பல இளம் ஆசிரியர்கள் தைரிய மற்று நடுங்கு வதைப் பார்த்திருக்கிறார். “குழந்தைகள் பரிபூர்ண மான தேர்ச்சி பெற்றுவிட்டதாக நான் எண்ணினால் பள்ளிக்கூடத்தை உடனே மூடிவிடுவேன்” என்று சிரித்தபடியே கூறினார். பிறகு அவர் அந்தக் குழந்தை களிடம் ஒரு ஐந்து நிமிடம் பேசினார். அவர்கள் யாவரும் கஷ்டப்பட்டு படிக்கவேண்டுமென்றும் ஆசிரியரிடம் அன்பாயிருக்கவேண்டுமென்றும் குறிப்பிட்டார். பல வருடங்களாகப் பேசிவரும் அவருடைய வழக்கமான பேச்சு சுருக்கமாகவும், லளிதமாகவும், சிறியதாகவும் இருந்தது. சற்று வயதான பிள்ளைகள் அதை அடிக்கடி கேட்டிருந்தனர். பேச்செல்லாம் முடிந்தவுடன் அவளிடம் குழந்தைகளையெல்லாம் வீட்டுக்கனுப்பிவிடும்படி சொன்னார். மாணவர்கள் யாவரும் வரிசையாக வெளியே வந்தனர். வெளியேவிட்டால் போதுமென் றிருந்த அவர்களை வெளியேவிட்டதும் மகிழ்ச்சி கரை புரண்டது. “ஓ”வென்ற பேரிரைச்சலோடு பலவிதமான ஒலிகளை எழுப்பியவண்ணம் ஒருவரையொருவர் தலையை பிய்த்தும், குடலைப் பிடுங்கியும் கொலை செய்து விடுவதுபோல ஒடிப் பிடித்துக்கொண்டும், சண்டை யிட்டுக்கொண்டுமிருந்தனர்.

ஜான் ஒயிட்ஸைடு மிஸ்மார்கனோடு கை குலுக் கினார். பிறகு அவர் “இதைவிட மேலான ஒழுங்கை நிலை நிறுத்திய ஒரு ஆசிரியரை நான் கண்டதே இல்லை ; குழந்தைகள் உங்களை எவ்வளவு அன்பாக நேசிக்கிறார் களென்பதை உணர்ந்தால் நீங்கள் இன்னும் அதிக சங்கடப்படுவீர்கள் என்று நினைக்கிறேன்” என்று அவளிடம் கூறினார்.

அவளும் பதிலுக்கு மரியாதையாக “குழந்தைகளும் நல்லவர்கள… மிகமிக நல்லவர்கள்” என்று சொன்னாள்.

ஜான் ஒயிட்ஸைடு “ஆம்… உண்மைதான்” என்று ஒத்துக்கொண்ட பிறகு “ஆமாம், அந்த சிறிய மல்ட்பி பையன் எப்படி இருக்கிறான்?” என்று விசாரித்தார்.

“ஏன்? அவன் ஒரு புத்திசாலிப் பையன் தான்…கவர்ச்சிகரமான பையன். அவன் புத்தி வளர்ச்சியடைந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

“மிஸ் மார்கன், எங்கள் குழுவினர் கூட்டத்தில் அவனைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அவனுடைய வீட்டு வாழ்க்கை சாதாரணமாக இருக்க வேண்டிய மாதிரியில் அமையவில்லை யென்பது உங்க ளுக்கும் தெரிந்திருக்கும். இன்று பிற்பகல் அவனைத் தனியாகக் கவனித்தேன். அந்த ஏழைக் குழந்தைக்குச் சரியானபடி ஆடைகூட இல்லை.”

மிஸ் மார்கன் ஜுனியஸுக்கு ஆதரவாகப் பேச வேண்டுமென்று நினைத்தாள். “ஆம் அது ஒரு அதிசய மான குடும்பந்தான்; அது சாதாரணமான குடும்பங் களைப்போல இல்லைதான் என்றாலும், அது ஒன்றும் கெட்ட குடும்பமல்ல” என்று சொன்னாள்.

“மிஸ். மார்கன், என்னைத் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நாங்கள் அவர்கள் விஷயத்தில் எதி லும் குறுக்கிடப் போவதில்லை; அவனுக்கு சில பொருள்களை வழங்கலா மென்று தான் நினைத்தோம். அவன் தகப்பனார் தாம் ஏழையென்பது உங்களுக்குத் தெரியுமே”

“எனக்குத் தெரியும்” என்று மெல்லச் சொன்னாள். “மிஸஸ் மன்றோ அவனுக்காக சில உடைகளை வாங்கி வந்திருக்கிறாள். அவனைச் சற்று உள்ளே அழைத்தால் அதை அவனிடம் கொடுத்து விடுவோம்.”

“ஓ! வேண்டாம்…… நான் அழைப்பது அவ்வளவு சரியாகப் படவில்லை…” என்று ஏதோ ஆரம்பித்தாள.

“ஏன்? நாங்கள் சில சட்டைகளும், ஒரு ஜதை ஸுட்டுக்களும், சில செருப்புக்களும் தாமே வைத்திருக்கிறோம். 7

“மிஸ்டர் ஒயிட் ஸைடு, அவன் மிகுந்த சுயமரி யாதை உள்ளவன், நீங்கள் தானமளிப்பது அவனைப் பெரும் சங்கடத்தி லாழ்த்திவிடலாம்.”

“நல்ல ஆடைகளைக் கொடுப்பது சங்கடத்துக் குள்ளாக்குமா? முட்டாள் தனம் தான் அவை யில்லாம லிருப்பதுதான் அவமானமாக இருக்குமென்று நான் நினைக்கிறேன். மேலும் இந்தக் குளிர்காலத்தில் செருப் பில்லாமலிருப்பது உடம்புக்கும் நல்லதல்லவே / ஒரு வாரமாகவே தரையெல்லாம் காலைவேளைகளில் பனித் துளி படர்ந்து காணப்படுகிறது…”

அவள் வேறு வழியின்றி மறுபடியும் மறுபடியும் “நீங்கள் அதைக் கொடுக்காமலிருந்தால் நன்றாக இருக்கும்” என்று இரண்டு முறை சொன்னாள்.

“மிஸ் மார்கன், இந்தச் சிறிய விஷயத்தைப் நீங்கள் பெரிதுபடுத்துவதாக நீங்கள் நினைக்கவில்லையா? மிஸஸ் மன்றோ பெரிதும் அன்பு கூர்ந்து அவனுக்காக இவற்றை வாங்கி யிருக்கிறார். நீங்கள் அவனைத் தயவு செய்து உள்ளே கூப்பிடுங்கள். அவள் அவற்றை அவனிடம் கொடுத்துவிடட்டும்’ என்று முடிவாகச் சொன்னார்.

ஒரு கண நேரத்துக்குப் பிறகு ராபி அவர்கள் முன் வந்து நின்றான். வாரிவிடப்படாத அவன் தலைமயிர் அவன் முகத்தில் விழுந்தபடி இருந்தது. அவன் கண் களில் இன்னும் வெளியே விளையாடிக் கொண்டிருந்த விளையாட்டின் உக்கிரம் தான் வீசிக்கொண்டிருந்தது. அவர்கள் எல்லோரும் அந்த அறை முன்னால் கூடி அவனை அன்போடு பார்த்துக்கொண்டிருந்தார்கள் அவனுடைய கிழிந்த ஆடைகளைக் கவனிக்காதது போலி ருக்கப் பிரயத்தனம் செய்தார்கள். ராபி ஒன்றும் புரியா மல் அங்குமிங்கும் விழித்துப் பார்த்தவண்ணமிருந்தான்.

“ராபர்ட், உனக்குக் கொடுப்பதற்காக மிஸஸ் மன்றோ சில சாமான்களை வைத்திருக்கிறார்கள்” என்று மிஸ் மார்கன் சொன்னாள். பிறகு மிஸஸ் மன்றோ அவனுக்கு முன் வந்து அவன் கைகளில் அந்தப் பொட்டலத்தை வைத்து “எவ்வளவு நல்ல பையன்!” என்று கூறினாள். ராபி அந்தப் பொட்டலத்தை மெது வாகத் தரையில் வைத்து கைகளைப் பின்னுக்கிழுத்துக் கொண்டான்.

“பெரியவர்களிடம் இப்படித்தான் நடந்து கொள் வதா? திறந்து பார்” ராபர்ட் என்று சற்று கோபமாகவே கூறினார், டி. பி. ஆலன். ராபி அவரை முறைத்துப் பார்த்து விழித்தான். பிறகு “சரி, அப்படியே செய்கிறேன்” என்று சொல்லி அந்தப் பொட்டலத்தைப் பிரித்தான். அவனுக்கு முன்பு அந்த சட்டைகளும், புதிய ஸூட்டுக்களும் கிடந்தன. ஒன்றும் புரியாமல் சிறிது நேரம் அவற்றையே வெறித்து நோக்கிக்கொண் டிருந்தான். சட்டென்று அவனுக்கு விஷயம் விளங்கி விட்டது போலத் தோன்றியது. அந்த வேகத்தில் அவன் முகம் சிவந்து காட்டியது. ஒரு கணம் செய்வதறியா மல் கூண்டிலடைபட்ட மிருகத்தைப் போலத் திகைத் திருந்தான். பிறகு அவன் அந்த ஆடைகளையெல்லாம் அங்கேயே விட்டு விட்டு வாயிற் கதவு வழியாக வெளியேறி விட்டான். அவர்கள் பள்ளியின் முன் மண்டபத்தில் இரண்டு காலடி சத்தத்தைக் கேட்டார் கள். அவ்வளவுதான். ராபி போய்விட்டான்.

மிஸஸ் மன்றோ என்ன செய்வதன்றறியாமல் ஆசிரியையைப் பார்த்தாள். “அவனுக்கென்னதான் குறை?” என்று கேட்டாள்.

“அவனுடைய சுய மதிப்புக்குப் பங்க மேற்பட்டு விட்டதாக நினைத்திருக்கவேண்டும்” என்று மிஸ் மார் கன் சொன்னாள்.

“அவன் ஏன் அப்படி நினைக்கவேண்டும்? நாங் கள் அவனிடம் நல்லபடியாகத் தானே நடந்துகொண்டோம்.”

அவளும் நிலைமையை ஒருவாறு விளக்க முற்பட்டும் கடைசியில் அவர்கள் மீதே சற்று கோபமேற்பட்டது.

“இதோ பாருங்கள்….ஏன் அப்படி நடந்து கொண்டானென்றால், சற்று நேரத்துக்கு முன்புவரை அவனுக்கு, தான் ஏழை என்பதே தெரியாமலிருந்தத….அப்படித்தானிருக்கவேண்டும் என்று நினைக்கறேன்.”

“ஆம் அது என் தவறுதான்…மன்னிக்கவேண்டும்” என்று தன் வருத்தத்தைத் தெரிவித்துக்கொண் டார் ஜான் ஒயிட்ஸைடு.

“அவன் விஷயத்தில் நாம் என்னதான் செய்யலாம்?” என்று பெர்ட்மன்றோ கேட்டார்.

“எனக்குத் தெரியாது… நிச்சயமாக எனக்கொன்றுந் தோன்றவில்லை.”

மிஸஸ் மன்றோ தன் கணவன் பக்கம் திரும்பி “பெர்ட், நீங்கள் வெளியே மிஸ்டர் மல்ட்பியைச் சந்தித்துப் பேசி வந்தால் உதவியாக இருக்கும். நீங்க ளும் அன்பாகத்தானிருக்கிறீர்கள். வேறொன்றும் செய்யவேண்டாம். அவரிடம் போய் சிறிய குழந்தைகள் பனியில் செருப்பில்லாமல் வெறுங் கால்களுடன் நடந்து செல்லக் கூடாதென்று சொல்லுங்கள். மிஸ்டர் மல்ட்பி ராபர்ட்டிடம் அந்த உடைகளை எடுத்துக் கொள்ளச் சொன்னால் சௌகர்யமாயிருக்கும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மிஸ்டர் ஒயிட்ஸைடு?” என்று அவர் களிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“நான் இதை விரும்பவில்லை ; உன் இஷ்டம்; நான் அவன் மனதைத் துன்புறுத்தியது போதும்.”

“அவனுடைய உணர்ச்சிகளை விட உடல் நலம் மிக முக்கியமானதென்று நான் நினைக்கிறேன்” என்று அவள் மேலும் வற்புறுத்தினாள்.

பள்ளிக்கூடம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக டிஸம் பர் மாதம் இருபதாந் தேதியன்று மூடப்பட்டது. மிஸ் மார்கன் விடுமுறையை லாஸ் ஏஞ்சல்ஸில் கழிக்கத் திட்டமிட்டாள். அவள் ஸாலினாஸுக்குப் போக பஸ்ஸுக்காகக் காத்துக் கொண்டிருக்கபோது அந்த ஸ்வர்க்கப் புல் வெளிச் சாலையில் அவளை நோக்கி ஒரு சிறுவனும் ஒரு பெரியவரும் வருவதைக் கண்டாள். அவர்கள் விலை மலிவான புதிய ஆடைகளை அணிந்து கொண்டிருந்தனர். அவர்களிருவரும் காலில் ஏதோ வலியிருப்பது போல மெல்ல நடந்து வந்தனர். அவர் கள் இருவரும் அருகில் வந்தபோது மிஸ்மார்கன் அந் தச் சிறிய பையனை உற்றுப் பார்த்தபோது அவன் ராபி தான் என்றரிந்தாள். அவன் முகம் மகிழ்ச்சியற்று, இருண்டு, விசனமாகக் காட்சியளித்தது.

“ஏன் ராபர்ட்? என்ன விஷயம்? எங்கே போகி றாய்?” என்று அடுக்கடுக்காக ஆவலுடன் கேட்டாள்.

அந்தப் பெரியவர் தாம் சொன்னார் : ”மிஸ் மார் கன், நாங்கள் ஸான் பிரான்ஸிஸ்கோவுக்குச் செல்கிறோம்.”

அவள் அவர் பக்கம் திரும்பினாள். ஜுனியஸ் தாம் தாடியை க்ஷவரம் செய்துகொண்டு விட்ட பிறகு ஒரு வயோதிகனாகவே காட்சியளித்தார். அவருக்கு இவ் வளவு வயதாகி விட்டதென்பதையே அவள் அறிய வில்லை. அவருடைய குறுகுறுவென்றிருந்த கண்களும் குழிவிழுந்து காணப்பட்டன. அவருடைய தாடி சூரிய உஷ்ணத்தினின்றும் பாதுகாப்பளித்து வந்ததால் அவர் வெளுப்பாகவே இருந்தார். அவருடைய முகத்தில் மட்டும் ஆழ்ந்த கலக்கம் இருந்தது.

“நீங்கள் அங்கு விடுமுறைக்குப் போகிறீர்களா?’7 என்று கேட்டு அவள் மேலும் தொடர்ந்து சொன்னாள்: “கிறிஸ்துமஸ் சமயத்தில் நகரத்தில் உள்ள கடைகள் எல்லாம் எனக்கு வெகுவாகப் பிடிக்கும்.”

ஜுனியஸ் சற்றுத் தயங்கியபடியே பதிலளித்தார். “இல்லை…நாங்கள் விடுமுறைக்காகச் செல்ல வில்லை…… இனி அங்கேயே தங்கிவிடலாமென்று தான் போகிறோம். நான் ஒருகணக்குப் பிள்ளை தான். மிஸ் மார்கன்…இருபது வருடங்களுக்கு முன்பாக நான் ஒரு கணக்கு எழுதும் வேலை பார்த்திருக் கிறேன். நான் மறுபடியும் அந்த வேலை தேட முயற்சி செய்யப்போகிறேன்.” அவருடைய குரலிலே ஏக்கம் பிரதிபலித்தது.

“நீங்கள் ஏன் அப்படி செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டாள். அதற்கு அவர் “நான் இது வரை இங்கு இந்தப் பையனுக்குப் பெருந்துரோகம் செய்து வந்ததை உணரவேயில்லை: அதைப்பற்றி யெல்லாம் நினைக்கவே இல்லை: அதைப்பற்றி அப்போதே நான் ஆலோசித்திருக்கவேண்டும். அவன் வறுமையில் கஷ்டப் பட்டு வளரக்கூடாது தான். ஜனங்கள் எங்களைப்பற்றி பேசிக்கொண்டதும் எனக்குத் தெரியவில்லை” என்று விளக்கமாகச் சொல்லித் தான் சொல்வது சரிதானே’ என்று அவளுடைய அபிப்பிராயத்தையுங் கேட்டார்.

மிஸ். மார்கனுக்கு கோபமாகத்தானிருந்தது. ஆனால் அதே சமயத்தில் அவளுக்கு அழுகையும் வந்துவிடும் போல் தோன்றியது.

“முட்டாள் ஜனங்கள் சொல்வதையெல்லாம் ஒரு வரும் நம்புவதில்லையல்லவா?” என்று கேட்டாள்.

ஜுனியஸ் மல்ட்பி அவர் அவளை ஒரு வியப்போடு பார்த்தார். “ஆம்! இல்லைதான்…ஆனால் வளரும் மானிடச் சிறுவனைச் சிறிய மிருகம் போல வளர்க்கக் கூடாதல்லவா?” என்று கேட்டார். அதற்குள் சாலையின் கோடியில் பஸ் வந்தது நன்றாகத் தெரிந்தது.

ஜுனியஸ் ராபியைச் சுட்டிக்காட்டி “இவன் வரவே விரும்பவில்லை குன்றுகளுக்கருகே ஓடிவிட்டான். நேற்றிரவு நானும் ஜேகபும் தான் தேடிப்பிடித்தோம். அவன் பல நாட்களாகவே சிறிய மிருகத்தைப்போல வாழ்ந்து வந்துவிட்டதால், ஸான் பிரான்ஸிஸ்கோ எவ்வளவு நேர்த்தியாக இருக்கும் என்பதை உணரவில்லை” என்று அவளிடம் சொன்னார்.

பஸ் ‘கிரீச்’ சென்ற சப்தத்தோடு வந்து நின்றது. ஜுனியஸும், ராபியும் பின் ஸீட்டில் ஏறி அமர்ந்தார்கள். மிஸ் மார்கனும் அவர்களுக்குப் பக்கத்தில்தான் உட்கார விரும்பினாள. ஏனோ, திடீரென்று திரும்பி டிரைவருக் கருகில் அமர்ந்து கொண்டாள்.

“ஆம் உண்மைதான் அவர்கள் தனியாக இருக்கத் தான் விரும்புவார்கள்” என்று ஏதோ தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

– அமெரிக்கக் கதைகள், முதற் பதிப்பு: செப்டம்பர் 1957, சக்தி காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *