கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 28, 2021
பார்வையிட்டோர்: 6,419 
 
 

சாலைக்குப் பக்கத்தில் தழைக் கின்ற காட்டில் சண்டாளன் மாரப்பன் தோண்டி வைத்த கிணறு…

கடும் ராஜதண்டனைக்குள்ளான மாரப்பன் அல்லும் பகலும் ஓய்வு ஒழிச்சலில்லாமல் கிணறு தோண்டிய படி இருக்க, ஈட்டியோடும் கேடயங்களோடும் சுற்றிலும் அர சாங்க வீரசேனை காவலிருந்தது. வேற்று ஆள்கள் அன்னதானம் செய் யாதபடிக்கும் சிரமதானம் செய் யாத படிக்கும் அவர்கள் காவல் இருந்தார்கள்…

முதலாவது 1874-ஆம் வருஷத் இல் பிரதியெடுக்கப்பட்ட கல்வெட் டுக் குறிப்பு. ஓரங்கள் எல்லாம் செல் லரித்து எழுத்துக்கள் மங்கிய பக்கத் தில் இருந்து ஆனமட்டும் முயற்சி எடுத்துப் படித்த வாக்கியம். அடுத் தது சோழர்கால ஆட்சியைப் பற்றி 1909-ல் வந்த ஆங்கிலக் கட்டுரைக்கு 1920-ல் வந்த தமிழாக்கத்தில் அரையும் குறையுமான பகுதியில் ஏதேச் சையாகக் காண நேர்ந்த குறிப்பு. இரண்டும் ஏதோ ஒரு புள்ளியில் சம்பந்தப்பட்டு இசைந்து போவதைக் கண்ட பிறகுதான் இந்த விஷயத்தில் எனக்கு உற்சாகம் பிறந்தது. கன்ணில் கண்டவர்களிடம் எல்லாம் ‘மாரப்பனைத் தெரியுமா’ என்றேன். கிழவர்கள், பாட்டிகள், புலவர்கள் எல்லோரிடமும் என் கேள்வியை முன் வைத்தேன். சாராய வீச்சர் துடன் குழப்பமான மொழியில் அவர்கள் சொல்லும் அரைகுறைக் தகவல்களைக் கூட அக்கறையுடன் கேட்டேன். எந்த பதிலும் திருப்பு யாய் இல்லை என் பைத்தியமோ நாளுக்குநாள் ஏறிக் கொண்டிருந்தது. என் மனசில் மாரப்பன் ஒரு மகாபுருஷனாய்ப் பதிந்து விட்டிருந் தான். அவன் எனது வட்டாரத்தைச் சேர்ந்தவன். என் முந்தைய தலை முறையில் ஒரு முத்தாத்தன். ஆஜானு பாகுவான அவனது உருவம் சதாகாலமும் நெஞ்சில் முன்னும் பின்னும் அசைந்து கொண்டிருந்தது. ஆனால் அவன் யார்? கேள்வியின் வெம்மை என்னை எங்கெங்கோ துரத்தியது. நூலகங்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சிக்காரர்கள். எங் கும் பதில் கிடைக்கவில்லை. என்னைத் துவள வைப்பதாக இருந்தது அவர்கள் பேச்சு. நானோ பதில் பக் கத்திலேயே இருக்கிறது என்கிற போதையில் தேடிக் கொண்டிருந்தேன்.

காலையிலேயே கிளம்பி விடுவேன். எந்த இடம் என்பது எனக்கே தெரிவதில்லை . தகவல்கள் ஒரு புயலைப் போல என்னைச் சுற்றி இழுத்துச் செல்லும். இரவு வெகு நேரம் சென்றுதான் திரும்பி வருவேன். யாரையும் எழுப்ப மனசிருக் காது. வாசலிலேயே படுத்து விடு வேன். நடு இரவில் அப்பா எழுப்பி, “நல்ல கதைடா இது. அந்தக் கதை இந்தக் கதைன்னு பகல் பூரா அலஞ் சிட்டு குடிகாரன் மாதிரி படுத்துக் கெடக்கறான் பாரு” என்று திட்டி விட்டு உள்ளே போகச் செய்வார். என் தலைக்குள் மாரப்பன் புன்சிரிப்பது தெரியும். எனது களைப்பு கரைந்துவிடும்.

தெருக்கூத்துக்களால் ஏதாவது பயன்விளையும் என்று நண்பன் சொன்னதை நம்பி சுற்றுவட்டாரங் களில் நடக்கும் கூத்துக்காரர்களைத் திரட்டிக் கொண்டு அலைத்தேன். அதிகபட்சமாய் ஆறோ ஏழோ குழுக்கள்தான் களத்தில் இருந்தன. ஒவ்வொன்றிற்கும் ஏழெட்டுக் கூத் துகள் மட்டுமே பாடம். எல்லாமே பாரத. ராமாயணக் கிளைக் கதை கள். அதற்குமேல் தெரியவில்லை . துருவித் துருவிக் கேட்டாலும் சொன்னதையேதான் திரும்பத் திரும்பப் பாடினார்கள். பெண் வேஷதாரி யான ஒருவர் வளவனூர் மலையான் தான் பாட்டுக்குக் குரு என்றும். வயது காரணமாய்ப் பல வருவாங் களுக்கு முன்னாலேயே தன் குழுவை கலைத்துவிட்டாலும் அவருக்கு ஒரு வேளை தெரிந்திருக்கக் கூடும் என்றும் சொன்னார். எனக்குப் பொக்கிஷம் கிடைத்த மாதிரி இருந்தது.

அடுத்த நிமிடமே வளவனூருக் குச் சென்றேன். பிரயாணம் முழுக்க என் மனம் படபடத்துக் கொண் டிருந்தது. விசாரித்தபோது ஊரைத் தாண்டி ஒரு குடிசையைக் காட்டி னார்கள். நடந்தேன். குடிசை வாசலிலேயே நரைத்த குடுமியுடனும் அழுக்கு வேட்டியுடனும் ஒரு ஆதிவாசியைப் போல இருந்தான் அவன். கருத்த தேகம் தளர்ந்திருந் தது. கம்பீரமாய் ஒரு காலத்தில் ஒட்டி யிருந்த தசை மண்டலம் தளர்ந்து குலுங்கி அதிர்ந்தது! பக்கத்தில் இருந்த புட்டியிலிருந்து சாராயத்தை ஊற்றிக் குடித்துக் கொண்டிருந் தான் அவன். நான் அவன் பக்கத்தில் சென்று உட்கார்ந்தேன். எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று குழப்ப மாய் இருந்தது.

அவன் என்னை உற்றுப் பார்த் தான். நான் சிநேகமாய்ச் சிரிக்க முயன்றேன். “என்ன வேணும்’ என்று கேட்டான். மெல்ல மெல்ல என் ஆவல்களை வெளியிட்டேன். என் ஏமாற்றங்களையும், அலைச்சல்களையும் சொன்னேன். மாரப்பனின் பெயரைக் கேட்டதும் மலையானின் கண்கள் மின்னின. பளீரென ஒரு பரவசம் அவன் முகத்தில் வெளிப்பட்டது.

அந்த நாள்களில் வளவனூரே ஒரு காடு என்று பேச்சை ஆரம்பித் தான் மலையான். நடந்தால் வேர் இடிக்கும். நின்றால் மரம் இடிக்கும். பார்த்த இடத்தில் பச்சை நிறைந் திருக்கும். வடக்கு திசையில் மாந் தோப்பு கொலுவிருக்கும். தெற்குத் திசை தென்னந்தோப்பிருக்கும். காட்டுக்கு நடுவே கீழ் ஜாதிக்காரர் கள் வாசம். காணி நிலமுழுது கவனமுடன் பயிர் செய்தார். மூலைக்கு மூலை முத்து மணி நெல் புரளும். காலைக்குக் காலை தங்கமணி நெல் புரளும். காட்டைத் தாண்டி சிறை யெடுத்த பெண்ணோடு அந்த ஊருக்கு வந்தவன்தான் மாரப்பன் என் நான் மலையான்.

மாரப்பனைக் கண்டு அஞ்சியவர் கள் தள்ளித்தள்ளி நின்று வேடிக்கை பார்த்தார்கள். அவனோடு பேசக் கூட பயந்து மரங்களின் பின்னே மறைந்தபடி ஓரக்கண்ணால் பார்த் தார்கள். அவன் முகத்தின் பிரகாசம் அவர்களைக் கலவரப்படுத்தியது. உற்று உற்றுப் பார்த்தபடி ஒரு நாழிகை நேரம் கழிந்தது. அப் போது மாரப்பனே, “சோழர் சிற்ற ரசன் தோட்டம் துரவுகளை கண் னுக்கு கண்ணாக காவல் செய்கின்ற, கிழித்தகோடு தாண்டாத கீழ்சாதிக் காரன் நான். தோப்புக்குள் வந்த சுந்தரி மேல் காதல் கொண்டு சாதிப் பயம் மறந்தேன். சாம்ராஜ்ய பயம் மறந்தேன். ஆசைவசப்பட்டு அவளைச் சிறையெடுத்தேன். வீர சைனியர் கள் வெறியோடு துரத்திவர தப்பித்து வந்து தஞ்சம் புகுந்துள்ளோம் என்றான். மாரப்பன் கதை கேட்டு மனம் உருகியது ஊர். அவர்கள் இருவரையும் ஆதரவுடன் அணைத் துக் கொண்டார்கள்.

கதையை நிறுத்திவிட்டு மலையான் எழுந்தான். போதையை முற்றிலுமாக இழந்திருந்தான் அவன். என்னைப் பின் தொடரச் சொல்லி விட்டு வேகவேகமாய் நடக்கத் தொடங்கினான். அக்கிழவனின் ஆவேசமான கால்களைத் தொடர்ந்து சிட்டத்தட்ட நான் ஓடினேன்.

ஒரு நீண்ட வாழைத் தோப்பு. அப்புறம் ஒரு குளம். அதைத் தாண் டிப் போய் சட்டென நின்றான் மலையான். சுற்றிலும் பெயர் புரி யாத பல மூலிகைக் கொடிகள். புள்ளிப் புள்ளியாய் மஞ்சள் பூக்கள். ஒரு சின்ன ஓடை. ஒரு பெரிய அரச மரத் தடியில் லிங்கம் போல் இருந்த சிறு கல்லைக்காட்டி “பார்” என்றான் மலையான். நான் என்ன என்று பார்வையால் கேட்டேன். “அவன் தான் மாரப்பன்” என்றான் மலை யான். அவன் குரல் அசரீரி போல ஒலித்தது. ‘பூசை படையல் எல்லாம் உண்டா?” என்று ஆவலை அடக்க முடியாமல் கேட்டேன். “என் சின்ன வயசில் நடக்கும். இப்ப இல்ல. பாவிங்கதான் எல்லாத்தயும் தலைமுழுவிட்டானுங்களே. வெறும் சோத்துக்கும் சொத்துக்கும் வாழற பசங்ககிட்ட எது நடக்கும். எல் லாமே போச்சி’ என்றான் மலையான். சொல்லி முடித்ததும் அந்தக் கல் லின் முன் விழுந்து வணங்கினான். அதைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டான்.

காலாட்படையும் குதிரைப்படை யும் தொடர்ந்து வர வாள்வீசி வந் தார்கள் சேனைத் தலைவர்கள். காட்டின் எல்லையில் நின்று கொண்டு தீப்பந்தத்தோடு – ஆள்களை அனுப்பி ஊர்க்காரர்களை வரவழைத்தார்கள். வெறிகொண்ட சேனைத் தலைவனைப் பார்த்து ஊர் தலைவன் கும்பிட்டான். “எங்கே அந்தத் திருட்டு நாய்கள்?” என்று கர்ஜித்தான் சேனாதிபதி. “அவர்கள் எங்கள் அடைக்கலம்” என்று அமைதியாய் சொன்னான், அனர்த்தலைவன். “நீயே அடிமைச்சாதி. உனக்கு எதற்கடா அடைக்கல நீதி?” என்று திமிரோடு கூவினான் சேனைத் தலைவன். சொன்னபடி கேட்டால் உயிராவது மிஞ்சும். மறுப்பவர்கள் தலை களை மண்ணில் உருளச் செய்வேன்” என்று மிரட்டினான். “முடியாது” என்று மீண்டும் மறுத்தான் ஊர்த் தலைவன், மறுத்த தலையை ஒரே வீச்சில் சீவினான் சேனாதிபதி, கோபம் கொண்ட ஊர்மக்கள் கூடி நின்று வழிமறித்தார்கள். குதிரை களை விரட்டிக் கும்பலைக் கலைத் தான் சேனாதிபதி. காடே கலங் சியது. கூச்சல். அழுகுரல். மரண ஓலம். குடிசையைவிட்டு வெளியே வந்தான் மாரப்பன், “போதும் நிறுத்துங்கள். எனக்காக இத்தனை சாவு வேண்டாம்” என்று கண்கலங் கிக் கும்பிட்டான். சேனாதிபதி சிரித்தான். குதிரையை விட்டு இறங்கி அவனைச் சங்கிலியால் கட்டினான். தடுக்க வந்தவனை வீரர்கள் பிடித்து பல்லக்கில் ஏற்றிக் கொண்டார்கள். கோபம் தாங்காமல் மாரப்பன் பொருமினான். சேனாதிபதி சவுக்கால் அடித்தான்.

அடுத்த நாள் சின்னராஜாவே குதிரையில் வந்து இறங்கியதாய்ச் சொன்னான் மலையான். மவர்க்காரர்கள் எல்லாரும் கைதாகி நின்றார்கள். ஆளுக்கு நூறு சவுக்கடிகள் தரப்பட்டன. அது ராஜதுரோகத்திற்கான தண்டனை. அடுத்த நாள் மேலும் நூறு சவுக்கடிகள் தரப்பட்டன. அது சாதி முறை மீறலை ஆதரித்த குற்றத்திற்கு. அடி தாளாமல் பாதிக்கு மேல் இறந்து போனார்கள். இறந்த உடல்களை கழுகுக்கும், காக்கைக்கும், காட்டில் திரியும் விலங்குகளுக்கும் தீனியாக வீசி எறிந்தார்கள். நடந்ததையெல்லாம் பார்த்து மாரப்பன் ரத்தக் கண்ணீர் வடித்தான். மாரப்பனை பார்த்து ஏளனமாய்ச் சிரித்தான் ராஜா. “அவன் கையை வெட்டணும்” என்றான் சேனாதிபதி. “கண்ணு ரெண்டையும் தோண்டி எடுக்கணும்” என்றான் இன்னொருவன். “நட்ட நடுச் சந்தியிலே கழுவேற்றணும்” என்றான் மற்றொருவன். எல்லாரும் ராஜாவின் முடிவை எதிர்பார்த்தார்கள். அதே காட்டில் ஆள்துணை ஏதுமின்றி கிணறு வெட்ட வேண்டுமென்றும், அன்ன ஆகாரம் தந்து விடாதபடிக்கு காவல் காக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டுவிட்டுச் சென்றான் ராஜா. மறுநாள் முதல் மாரப்பன் கிணறு வெட்டத் தொடங்கினான். அவனது மலைபோன்ற தோள்கள் உயர்ந்து இறங்கின. பூமியின் நெஞ்சில் கடப்பாறை இறங்கியது. பிளந்த மண்ணை வாரி எடுத்தான். களைப்பு அவன் உடலை ஆக்ரமித்தது. கைகள் நடுங்கின. ஒரு துளி தண் ணீருக்குத் தவித்தான். அவனைச் சுற் றிலும் ஒரு பெரிய காவல்படையே நின்றது. வேலை நிற்கும் போதெல் லாம் சவுக்கு அதிர்ந்தது. மாரப்பன் உடலில் வரிவரியாய்த் தழும்புகள். ரத்தமும் சேறும் குழம்பி நாறின. நெற்றில் வழியும் ரத்தத்தையே நாவால் வழித்துச் சுவைத்தான். புதரின் தழைகளைப் பறித்து தின்றான். கண்கலங்கப் பார்த்தபடி நின்றார்கள் ஊர்க்காரர்கள்.

அவமானம் தாங்காமல் உடல் நடுங்கினான் மாரப்பன், ‘அம்மா அம்மா’ என்று மனசுக்குள் அரற்றினான். பொழுது சாய்ந்தது. மயங்கி மண்ணில் விழுந்தான். மாரப்பன் உடலில் காட்டு எறும்புகளும் ஈயும் மொய்த்தன. பூச்சிகள் அரித்தன. அவன் கை வீங்கியது. விழித்தெழுந்த மாரப்பன் அதைப் பொருட்படுத்த வில்லை. தொடர்ந்து வெட்டினான். பூமி புரண்டு புரண்டு அவன் வீச்சு களுக்கு நெகிழ்ந்து கொடுத்தது. மண்ணின் கட்டு தளர்ந்தது. ஆழம் செல்லச் செல்ல அடிமண் எல்லாம் மலைபோல மெல்லக் குவிந்தது. பூமியின் அடிவயிற்றில் மாரப்பன் வீசிய கடப்பாறை ஒலி காடெங்கும் விண்ணென்று அதிர்ந்தது.

எத்தனை நாள் கணக்கு என்பது தெரியாது என்றான் மாரப்பன். பூமியின் அடிவயிற்றில் ஊற்றை மாரப்பன் தொட்டு விட்டான் என் றான். ஊர் மக்களுக்கு ஒரே உற் சாகம். சட்டென பொங்கிய வெறி யில் காவல் கட்டுக்களை மீறி அவனிடம் ஓடினார்கள். “மாரப்பா மாரப்பா” என்று ஒரே சத்தம். பாட்டுப்பாடி தாளமிட்டது கூட்டம் ஆனால் மாரப்பன் முகத்தில் மகிழ்ச்சியே இல்லை. புண்ணாலும் சீழாலும் சிதைந்து உருக்குலைந்திருந்தது அவன் முகம். ஆனால் அவன் கண்களில் மட்டும் நெருப்பு மாதிய வெளிச்சமிருந்தது. தன் காதலிக்காது தேக்கி வைத்த காதல் அக்கண்களில் இருந்தது. பிரிவு. இம்சை , வலி லாம் மௌனமாய் அங்கே உறைக் திருந்தன. அவள் பெயரை உரத்த குரலில் ஒரு முறை கூவினான் மாரப்பன் காடு முழுக்க அக்குரல் எதிரொலிக் தது. பட்சிகள் அந்தப் பெயரைச் கூவின. எதிரொலிகளின் இடையே கடப்பாறையை விண்ணில் வீசினான். கீழே இறங்கும் கூர்மையான நுனியை நெஞ்சில் வாங்கித் கீழே சரிந்தான்.

மனர் மக்கள் கூடி மாரப்பனை அடக்கம் செய்தார்கள், காவல் படைகள் ஊரைவிட்டு ஓடின.

மலையானின் குரலில் வேதனை இழைந்தது. அவன் பேச்சில் குறுக் கிடாமல் மெல்லக் கவனித்துக் கொண்டிருந்தேன். தன் துயரங்களை யெல்லாம் கொட்டி விட்டவன் போல வெறுமையான பார்வையை என் மேல் பதித்தான் மலையான். கண்களின் விளிம்பில் கண்ணீர் தழும்பிக் கொண்டிருந்தது. துயரம் ததும்பும் அந்த விழிகளைக் காணத் திராணியில்லாமல் எனது பார்வையை அந்த நடுக்கல்லில் பாய்ச்சினேன். சுற்றிலும் அடர்ந்த பெரிய புதர்கள். கொடிகள். என்னென்னவோ பூக்கள், சருகுகள், மலைமேடு கல் குவியல். திடுமென ஞாபகம் வந் தவன் போல அந்தக் கிணறு?” என்று மலையானை கேட்டேன். தன் ரத்தத்தாலும், வேர்வையாலும் மாரப்பன் தோண்டிய அக்கிணற்றைப் பார்க்க மனம் துடித்தது. எனது கேள்வியையே வாங்கிக் கொள்ளாதவன் போல மலையான் என்னையே பார்த்திருந்தான். “சொல்லு, மலையான்! அந்தக் கிணறு எங்கே” என்றேன் மீண்டும்.

மௌனத்தைக் கலைக்க விரும்பாதவன் போல மலையான் எழுந்து நடந்தான். நான் பின் தொடர்ந்தேன். சில வளைவுகள், சந்துகளைத் தாண்டி, அக்கிராமத்தின் பிரதான கட்டிடத்தின் முன் நின்றான். எந்த இடத்திலாவது அவன் சுட்டிக் காட்டுவான் என்று அக்கம்பக்கம் பரபரப்புடன் பார்த்தேன். அவனோ வைத்த கண் வாங்காமல் கட்டிடத்தையே உற்று நோக்கினான். பொறுமையின்றி மீண்டும் மலையானிடம் “கிணறு?” என்றேன். அவன், “அந்த கிணத்துக்கு மேலதா இந்த கட்டடம் நிக்குது” என்றான்.

– நவம்பர் 1994

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *