‘’டேய் வசந்த் உனக்கு லவ் பண்ண வேற யாரும் கிடைக்கலையா? போயும் போயும் அந்த திமிர் பிடிச்சவளை செலக்ட பணணியிருக்க?’’
‘’டேய்.. குமார் ஆபீஸ்ல எல்லாருமே ஏன் அவளை தப்பாவே பார்க்கறீங்க?
‘’வசந்த்.. அந்த சுமி நடக்கவே காசு கொடுக்கணும். அவ்வளவு சோம்பேறி ஒரு முறை லிப்ட் வேலை செய்யலைன்னதும்… யாரால ஐஞ்சு மாடி ஏற முடியும்னு… கம்பெனிக்கு லீடு போட்டுட்டு போனவள் ! இவ்வளவு பணத் திமிர் பிடிச்ச அவள் சரிப்பட்டு வருவாளான்னு யோசிச்சு முடிவு எடு?’’ என்ற குமாரின் வார்த்தைகளை பொருட்படுத்தாமல் தனது காதலை சுமியிடம் கூறினான் வசந்த்.
‘’மிஸ்டர்… வசந்த் என்னை மன்னிடுச்சிடுங்க. நான் உங்களுக்கு தகுதியானவள் இல்லை. ஒரு விபத்துல என்னோட வலது கால் முறிஞ்சு போய்.. இப்ப மரக்கால் தான் வச்சிருக்கு. தயவு செய்து இதை யார்கிட்டேயும் சொல்லிடாதீங். ஏன்னா அடுத்தவங்க பரிதாபமா பார்க்கிறது எனக்கு பிடிக்காது. நானும் ஒரு சராசரி மனுஷியா ஜெயிக்கணும்!’’. என கூறிவிட்டு சுமி மெதுவாய் நடந்து செல்ல..
வசந்தின் மனதிற்குள் மட்டும் இன்னும் வேகமாய் வந்து கொண்டிருந்தாள் சுமி.
– கோவை நா.கி.பிரசாத் (13-10-10)