‘ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களும், பண்டித மணி கதிரேசஞ் செட்டியார் அவர்களும்,
திருச்சிக்கு மேற்கே, சொற்பொழிவாற்ற மாலை நேரத்தில் சென்றிருந்தனர்.
அங்கே, குளத்தங்கரையில், அனுட்டானம் செய்து கொண்டிருந்த நாட்டார் ஐயா அவர்கள் – பண்டிதமணி அவர்கள் (ஒரு கால் நடக்க விராது) தடியை ஊன்றி தட்டுத் தடுமாறி வருவதைப் பார்த்து, ‘ஐயா, கொஞ்சம் விழிப்பாக இருங்கள்; அவ்விடத்தில் ஒரு படி இல்லை’ என்று சொன்னார்.
அதற்குப் பண்டிதமணி சொன்னார் :
“தாங்கள் சிவப்பழம் ஆயிற்றே, இறைவன் இருக்கும் இடம் வந்தும்,
“எனக்குப் படியில்லை’ என்று சொல்லலாமா? என்று கேட்டார்,
– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை