ஒரு ஓடலியின் கனவு நனவாகிறது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 4, 2023
பார்வையிட்டோர்: 1,272 
 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தன் அறையில் இருந்தபடி பத்திரிகை படித்து கொண்டிருந்த பரமானந்தர், தனது ஊர் வைத்தியசாலை பற்றி வந்திருந்த செய்தியை பார்த்ததும் பரவசமடைந்தார். 

நீண்டகாலமாக தான் கண்டுவந்த கனவு நனவாகப் போகின்றது. காரியம் கைகூடி வரப்போகின்றது என்ற சந்தோஷத்தில் கையில் பத்திரிகையுடன் அறையிலிருந்து வெளிப்பட்டு குரல் கொடுத்தார். 

“சரசு… சரசு..எங்க இருக்கிறாய்… பேப்பரைப் பார்த்தாயா, படிச்சாயா” என்று தன் மனைவி சரஸ்வதியை அழைத்து கேட்டு வைத்தார். 

“நான் இங்க குசினுக்குள் இருக்கிறன்.உங்களுக்கு தேத்தண்ணி போடுறன். கொஞ்சம் பொறுங்க கொண்டு வாறன்.” 

என்று பதில் சொன்னாள் சரஸ்வதி. 

“அட தேத்தண்ணி கிடக்கட்டும் கழுதை, நீ இஞ்ச வா . இந்த பேப்பரில் வந்திருக்கிற செய்தியை பாரு” என்று அவர் சொல்லிக்கொண்டு இருக்கையில் சரஸ்வதி கையில் தேத்தண்ணி கப்போடு 

ஹாலுக்குள் வந்தவள் கேட்டாள். 

“அப்படி என்னப்பா இன்றைக்கு பேப்பரில் செய்தி. இவ்வளவு சந்தோசப்படுறீங்க. 

முதலில தேத்தணியை குடியுங்கோ. இந்தாங்கோ பிடியுங்கோ” என்று கொடுத்தாள். 

அதை வாங்கி வைத்துக்கொண்ட பரமானந்தர். 

“சரசு பேப்பரில் நல்ல செய்தியல்லோ வந்திருக்கு. நீ பார்க்க இல்ல என்ன” 

“இல்லை நான் வேலையாக இருந்திட்டன். படிச்சுப் பார்க்காமல் உங்கட அறைக்குள்ள 

கொண்டு வந்து வச்சனான். என்ன செய்தியப்பா வந்திருக்கு.’ 

‘இஞ்ச பார் நம்மட ஆசுபத்திரி பெரிய வைத்தியசாலையாகப் போகிறதாம். 

விரைவில் அது சகல வசதிகளுடனும்கூடிய பேஸ் கொஸ்பிடலாக வரப்போகிறதாம் 

என்று பெரிய செய்தி படங்களுடன் வந்திருக்கு. இஞ்ச பார்” என்று பத்திரிகையில் வந்த செய்தியை காட்டினார் பரமானந்தர். 

-97- 

“ஓமப்பா இது நம்மட ஆஸ்பத்திரிதான்… இந்த படத்தில தெரியுதே.. திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலை என்று. ஆட்களும் நிறையப் பேர் மாலையும் கழுத்துமாக 

நிற்கிறார்கள். என்னப்பா விசேசம்?” கேட்டாள் வெள்ளந்தியான சரஸ்வதி. 

‘எடி சரசு, இதில இருப்பவர்கள் கிழக்குமாகாண, சுகாதார அமைச்சரும். நமது நாடாளுமன்ற உறுப்பினரும், வைத்திய அதிகாரிகளுமடி. போன வருஷம் கிழக்குமாகாண முதலமைச்சர் நமது ஆஸ்பத்திரிக்கு, சுகாதார அமைச்சர் அவர்களுடன் வருகை தந்தபோது,மக்கள் வைத்த கோரிக்கைக்கு உறுதிமொழி வழங்கி இருந்தார். 

இந்த திருக்கோவில் வைத்தியசாலை, இந்த பிரதேச மக்களின் வைத்திய நலன்களுக்காக பேஸ் கொஸ்பிடலாக விரைவில் தரம் உயர்த்தப்படும் என்று” 

‘அதென்னப்பா பேஸ் கொஸ்பிடல்” 

“அப்படியென்றால் ஆதார வைத்தியசாலை என்று பொருள்.அது ஓரளவு சகல வசதிகளும் கொண்டது. 

இப்போது இருப்பது மாவட்ட வைத்தியசாலை. இது ஆதார வைத்திய 

சாலையாக 

உயர்த்தப் படும்போது மருத்துவ வசதிகள் அதிகரிப்படும். வைத்தியர்கள் அதிகரிக்கப் படுவார்கள். 

தாதிமார் எண்ணிக்கை கூடும். புதிய கட்டிடங்கள் கட்டப்படும். வாடுகள் நவீனத்துவம் பெறும்” 

உண்மையாகவே சொல்றீங்க. எங்கட மக்கள் போதிய வசதி இல்லாம 

எவ்வளவு 

கஷ்டப்பட்டுப் போயிட்டாங்க. கொஞ்சம் கடுமையான 

நோய் வந்தாலும் அக்கரைப்பற்று. 

கல்முனை என்று செல்ல வேண்டி இருக்கு . என்னப்பா” 

“பின்ன, வேறே என்ன. எவ்வளவு பழமையான வைத்தியசாலை இது. ஆங்கிலேயர் காலத்தில 

ஒரு டிஸ்பென்சரியாக இருந்தது.” 

“நீங்களும் இந்த ஆஸ்பத்திரியில்தானே ஓடலியராக 

வேலையை தொடங்கினீர்கள்.” 

-98- 

“நான் மட்டுமில்ல. எனக்கு முதல் ராசையா அண்ணர், நடேசபிள்ளை 

மாமா எல்லோரும் இங்குதான் மருந்தாளர்களாக வேலை செய்தவர்கள். அப்போ தெற்கே கோமாரி தொடக்கம் வடக்கே சின்னமுகத்துவாரம் வரை இருந்து நோயாளிகள் வருவார்கள். காய்சல்,தடிமல். 

என்று வருபவர்களுக்கு அப்போது இருந்த “அப்போதிக்கரி” 

ஐயா எழுதித் தரும் மருந்தை நோயாளிகளுக்கு கொடுத்திருக்கிறார்கள்.. பலர் காயங்களுடன் வருவார்கள் அவர்களுக்கு மருந்து கட்டி இருக்கிறார்கள். 

“அந்தக் காலத்தில் பிள்ளைகள் பெற்றுகொள்ளவும் இங்கதான் வருவார்கள் என்ன” 

‘ஒமோம் மகப்பேற்றுக்கு தனியாக ஒரு வாட் இருந்தது எலோருக்கும் தெரியும். நமது திருக்கோவில் பிரதேச மக்கள் அநேகமானோர் நம்மட ஆஸ்பத்திரியில் பிறந்தவர்கள்தான். 

நாம பிறந்தது, நம்மட பிள்ளைகள் பிறந்தது எல்லாம் 

இந்த ஆஸ்பத்திரிதானே. எவ்வளவு 

பெருமை மிக்க ஆஸ்பத்திரி இல்லையா” 

‘கண்டிப்பாக மிக சிறப்பு வாய்ந்தது. அந்த பழைய ஆஸ்பத்திரி கட்டிடமும், மருந்து கட்டும் முன்பக்க கொட்டிலும், குழந்தை பெறும் வாட்டும், இன்னும் என் கண்களுக்குள் இருக்கின்றன. அன்றைய ஆஸ்பத்திரி எங்கள் பிரதேச மக்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக இருந்தது. நல்ல அப்போதிக்கரி டாகுத்தர் எல்லாம் இருந்திருக்கிறார்கள். நோயாளிகளோடு அவர்கள் அன்பாக பேசுவதிலே நோயாளிகளின் பாதி நோய் பறந்து போய்விடும். காலம் மாற, பிரதேச மக்களின் தொகை பெருக, அந்த ஆஸ்பத்திரி மறைந்து படிப்படியாக இன்றைய எமது வைத்திய சாலை உருவாகியது. இன்று இந்த செய்தியின்பிரகாரம் இன்னுமொருபடி உயரப்போகிறது. 

சரி சரசு. நான் கிணற்றடிக்கு போயிட்டு வாறன். நீ எனக்கு காலைச் சாப்பாட்டை எடுத்து வை. நான் சாப்பிட்டுவிட்டு ஒருக்கா முச்சந்தி வரைக்கும் ஒரு நடை போயிட்டு வாறன். 

இந்த சந்தோசமான செய்தியை, நம்மட ஆஸ்பத்திரி மருந்தாளர் ஆனந்தனோடும் கேட்டு தெரிந்து கொண்டு வாறன்.” 

-99- 

“சரி சரி கெதியா கை,கால் முகம் கழுவிற்று வாங்க நான் 

புட்டுக்கு சம்பல் போட்டு எடுக்கிறன். இரவையக் கறி, சொதி எல்லாம் இருக்கிறது” என்ற சரஸ்வதி சமையலறைக்குள் சென்றாள். 

எழுபத்திரண்டு வயது நிரம்பிய பரமானந்தர் இன்னும் சுறு சுறுப்பாக இருப்பது அவரின் தேகாரோக்கியத்தை காட்டியது. இந்த வயது வரைக்கும் அவர் எந்தக் கெட்ட பழக்க வழக்கங்கள் 

இல்லாமல் இருக்கிறார். 

ஊருக்குள் அவருக்கு நல்ல மரியாதையும்,கண்ணியமும் இருந்தது. அவரது வாலிப வயதிலிருந்து ஓய்வு பெறும்வரை இந்த வைத்திய சாலையின் பணியாளனாக, நோயாளிகளை அரவணைக்கும் ஒரு பண்பாளனாக இருந்திருக்கிறார். தனது காலத்துக்குள்ளே இந்த வைத்தியசாலை பெரிய தரத்துடன் உயரவேண்டும் 

என்று கனவு கண்டவர். 

அந்தக் கனவு இன்று நனவாக போகின்றது என்று அறிந்து அவர் உள்ளம் துள்ளிக்குதித்தது . 

அதன் வெளிப்பாட்டில் கம்பீரமாக நடந்து முச்சந்திக்கு வந்துவிட்டார். இங்குதான் இந்த ஆஸ்பத்திரியின் தற்போதைய மருந்தாளர் ஆனந்தன் இருக்கிறார். அவரின் வீட்டுக்கு முன் நின்ற பரமானந்தரை, கேற்றை திறந்துகொண்டு வெளியில் செல்லவந்த ஆனந்தன் கண்டுகொண்டான். 

“ஐயா, வாங்க. எப்படி இருக்கிறீங்க” என்று நலம் விச்சாரிதான். 

நான் நல்லா இருக்கிறன் தம்பி. நீங்க எங்கேயோ கிளம்பிட்டீங்க போல. நான் உங்களை கண்டு பேசிற்றுப் போகலாம் என்றுதான் வந்தனான்.” 

“அப்படியே அய்யா வாங்க உள்ள வாங்க. நான் நம்மட கொஸ்பிடலுக்கு முன்னால் இருக்கிற சூப்பர்மார்கெட்வரை போயிட்டு வரலாம் என்று வெளிக்கிட்டனான். பிறகு போய்க்கொள்ளலாம் நீங்க வாங்க” என்று வரவேற்றான். 

ஹாலுக்குள் இருவரும் வந்து அமர்ந்தார்கள். ஆனந்தனின் மனைவி ராணியும் பரமானந்தருக்கு வணக்கம் சொல்லி வரவேற்றாள். பதில் வணக்கம் சொன்ன அவர் 

“தம்பி இன்றைய பேப்பர் படிச்சனான். நம்மட கொஸ்பிட்டல், ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படப் போகின்றது என்று 

-100- 

படங்களுடன் செய்தி வந்திருக்கிறது. எனக்கு அந்த 

செய்தியப் படிச்சதிலிருந்து சந்தோசம் தாங்க முடியல்ல. அதுதான் உங்களோடு பேசிற்றுப் போகலாம் என்று வந்தனான்” 

“ஓம் அய்யா, உங்கள் கனவு பலிக்கப் போகிறது. என்னோடு பேசும்போதெல்லாம் ஒரே இதைத்தானே சொல்வீர்கள். 

உ 

அறுபதுகளில் இருந்து ஓய்வு பெறும்வரை அக்கரைப்பற்று, பாலமுனை என்று மாற்றம் வந்தாலும் உங்கள் அதிகப்படியான காலம் உங்க ஊர் ஆஸ்பதிரியோடுதானே கழிந்தது என்று சொல்வீர்கள்.அது படிப்படியாக 

மாற்றமடைந்து மாவட்ட வைத்தியசாலையாக மாறியபோதும். பழைய கட்டிடங்கள் போய்,புதிய கட்டிடங்கள் வந்தபோதும் சந்தோசப் பட்டுக்கொண்டீர்கள். இருந்தாலும் திருக்கோவில் பிரதேசம் பரந்த நிலப்பரப்புக் கொண்ட பல கிராமங்களை உள்ளடக்கிய பிரதேசம் அதனால் தற்போதைய வைத்தியசாலை சகல வசதிகளுடனும் கூடிய 

பேஸ் கொஸ்பிட்டலாக மாறவேண்டும். 

அவசர சிகிச்சைகளுக்குரிய அனைத்து வசதிகளும், போதிய நோயாளிகள் விடுதிகளும் கட்டப் படவேண்டும், புதிய மருத்துவ உபகரணங்கள், அவசர மருத்துவ வண்டிகள் எல்லாம் இருக்க வேண்டும் என்று சொல்வீர்களே அதெல்லாம் இனிக் கிடைக்கும் ஐயா” 

ஆனந்தன் நீங்க இப்படி சொல்லும்போதே எனக்கு மகிழ்ச்சி தாங்க முடியல்ல.பேப்பரில் செய்தியை படிச்சவுடன் என் மனைவியுடன் சொல்லி அவளுடனும் சந்தோசத்தை பகிர்ந்துகொண்டேன். உங்களிடம் இந்த செய்திபற்றி அறியலாம் என்றுதான் வந்தனான். நீங்களும் இந்த பகுதி மக்களுக்காக இந்த வைத்திய சாலையிலிருந்து பல சிரமங்களுடனும், சில வேளைகளில் மருந்து பற்றாக்குறையுடனும் பணியாற்றுவதாக சொல்லி இருக்கிறீர்கள். இல்லையா தம்பி” 

உண்மைதான் ஐயா. மாத்திரை, மருந்துகள் அடிக்கடி பற்றாக்குறையாக இருந்திருக்கிறது. கடந்த காலங்களில் நோயாளிகளின் வருகை அதிகரித்து இருந்திருக்கிறது. முன்னைய காலத்தைப்போலல்லாமல், தற்போது புதிய நோய்களும் மக்களைப் பாதிக்கின்றன. உங்கட காலத்தில், இந்த கொலஸ்ட்ரோல், ப்ரஷர், ஸுகர், கான்ஸர், என்ற நோய்கள் இருந்ததா இல்லையே” 

நீங்க சொல்லுற நோய்கள் எல்லாம் அன்றைய காலங்களில் பெரியளவு பேசப்படவில்லை. மிஞ்சிபோனா காய்ச்சல், கூதல். 

சளி,வயிற்றுப்போக்கு, தலையிடி,சொறி,சிரங்கு என்றுதான் வருவார்கள். அன்று நீங்கள் சொல்லுகிற நோய்கள் இருந்திருக்குமோ தெரியாது. 

-101- 

அவற்றை கண்டு சொல்லும் மருத்துவ வசதியும் அன்று நமது ஆஸ்பத்திரியில் இருக்கவில்லை. இப்போது உள்ள மருத்துவ முறையிலும்,வளர்ச்சியிலும் எல்லாவித நோய்களையும் 

கண்டுபிடிக்க முடிகிறது.” 

“சரிதான் இன்று மருத்துவத்தின் வளர்ச்சி எங்கேயோ போய்விட்டது. நமது வைத்திய சாலைக்கும் இந்த நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவம் கிடைக்கப் போகின்றது என்ற செய்தி நமக்கு மட்டுமல்ல ஐயா நமது பிரதேச மக்களுக்கும் சந்தோசத்தைக் கொடுக்கும் செய்திதான். கடந்த வருடம் கிழக்குமாகான முதலமைச்சருடன் வருகை தந்த சுகாதார அமைச்சர் நசீர் அவர்கள் நமது வைத்தியசாலை பற்றிப் பேசும்போது, குறிப்பிட்டது எனக்கு நினைவுக்கு வருகிறது. 

தன்னுடைய தகப்பனார் பொத்துவிலுக்கு விவசாய தொழில் நிமித்தம் இந்த வழியால் செல்லும்போது, தன்னையும் அழைத்து செல்வதுண்டாம். அந்த நேரம் இந்த ஆஸ்பத்திரியை ஒரு சிறு கட்டிடமாக தான் கண்டதாகவும், இந்த பிரதேச மக்களுக்கு ஒரு முக்கியமான, அவசியமான ஒரு வைத்திய சாலை இது என்று அன்றே தான் உணர்ந்து கொண்டதாகவும் குறிப்பிட்டு,கண்டிப்பாக இந்த வைத்தியசாலையை ஒரு ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்த ஆவன செய்வேன் என்று உறுதி கூறினார்” 

ஓம் நானும் அன்று வந்திருந்தேன். கிழக்குமாகாண முதலமைச்சரும் அதை ஆமோதித்து கண்டிப்பாக நடவடிக்கை 

எடுப்பதாக சொன்னார். இலையா” 

“அன்று அமைச்சர்கள் உட்பட,மாகாண சபை உறுப்பினர்,வைத்திய அதிகாரிகள் எல்லோரும் ஒரே மனதுடன் ஒரு மித்த குரலில் நமது மக்கள் மத்தியில் சொன்ன வாக்குறுதி இன்று நிறைவேறுவதாக இன்றை 

பத்திரிகை செய்தி கூறுகிறது. விரைவில் இது அமுல் படுத்தப் படும்” 

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே ஆனந்தனின் மனைவி ராணி ஒரு தட்டில் பலகாரமும், டின்பால் தேநீரும் கொண்டு வந்து வைத்து. 

ஐயா பலகாரம் சாப்பிடுங்கள். டீக்கு சீனி போடவில்லை.” என்றாள். 

“ஏன் பிள்ளை. நான் இப்பதான் சரசு காலைச்சாப்படு தர, சாப்பிட்டுவிட்டு வந்தனான்” 

-102- 

“பரவாயில்லை ஒன்றை சாப்பிட்டுவிட்டு டீயை குடியுங்கோ” என்றான் ஆனந்தன். அவனும் ஒன்றைக் கடித்து டீயை குடித்தான். ஒரு மணி நேரமாக மருந்தாளர் ஆனந்தனின் வீட்டில் இருந்து, வைத்தியசாலை பற்றியும், ஊர்,மற்றும் பிரதேச மக்களின் தேவைகள் பற்றியும் பல விசங்கள் பேசி முடித்து, அவர்களுக்கு நன்றியும், வணக்கமும் சொல்லி விடைபெற்றார் அந்த எழுபத்திரண்டு வயது பரமானந்தர்.அவருடைய நீண்டநாள் கனவு நனவாகப் போகின்றது என்ற செய்தி அன்று அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. இதற்கு வழிவகுத்த அனைத்து உள்ளங்களையும் அவர் மனதார வாழ்த்தினார்.

– ஊருக்குத் திரும்பணும் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2016, மெய்கண்டான் பிரைவேட் லிமிடெட். இலங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *