கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 24, 2019
பார்வையிட்டோர்: 7,068 
 
 

கணபதிராமன் வயது 45 டவுனில் ஒரு பிரபல சிவில் இன்ஜினியர் நிறைய கட்டிடம் பள்ளிகள் அடிக்குமாடி குடியிருப்புகள் தனித்தனி வில்லாக்கள் என கட்டுமான பணியில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். கடவுள் பக்தியும் குடும்ப பாசமும் கொண்ட ஒரு உழைப்பாளி. தொழிலாளர்களிடம் சிமெz;டும் மணலும் கலந்த கலவை போல நேர்மையாகவும் மனிதாபிமானத்துடன் பழகுபவர்.

இவரிடம் வீடு கட்ட ஒப்பந்தம் செய்தால் புதுமனை புகு விழாவிற்கு பத்திரிக்கை அடித்துவிடலாம். அவ்வளவு சுறுசுறுப்பு திறமை நேர்மையான ஆட்களை தன்னகத்தே வைத்துள்ளார்.

வீட்டிலேயே அலுவலகம் ஆட்களை வேலை பகிர்ந்து சைட்டுகளுக்கு அனுப்புவது டிசைன்களை பார்வையிடுவது மெட்டிரியல் பற்றாக்குறை இவற்றையெல்லாம் தீர்ப்பது என ஏக பிசியாய் இருப்பார்.

இவரின் மேஸ்த்ரி கோபால் நிறைய அனுபவம் மிக்கவர் கணபதிராமன் படிப்பு முடித்து வேலை ஆரம்பித்த நாளிலிருந்து 20 ஆண்டுகளாக இவருடனே இருந்து இவர் நினைப்பதை செயல் வடிவத்தில் கொண்டு வந்துவிடும் திறமைசாலி. பணம் பட்டுவாடா தொடங்கி ஆட்களை வேலை வாங்குவது மெட்Bரியல்கள் மற்றும் பைனல் செட்டில்மென்ட் வரை அனைத்தும் அவருக்கு மட்டுமே அத்துப்படி.

ஒரு நாள் காலை.

சார் நான் வேலையை விட்டு நிற்கப்போகிறேன் என்றார்> கோபால். ஏன்? என்னாச்சு? கோபால்.

நான் தனியா வேலை எடுத்து செய்யலாம்னு…. அதான் என்று இழுத்தார். இப்படி திடீர்னு சொன்னா எப்படி.?

நாளைக்கு இரண்டு இடத்திலே பூஜை பேhடறேன் தெரியுமில்ல உனக்கு….

தெரியும். அப்புறம் இப்படி போனh என்ன செய்யறது.? உங்களுக்கு உங்க கவலைதான் எப்போதும் என்று மனதுக்குள் நினைத்தான். நானும் நாளைக்கு ஒரு வேலை ஆரம்பிக்கறதா ஒத்துக்கிட்டேன் சார். என்றார் கோபால்.

ஓ.ஓ முடிவு பன்னிட்டுத்தான் வந்திருக்கே! சரி சரி..

அதோட இந்த ஒரு புது tPட்டு வேலையையும் சேர்த்து பாரு.. பராவாயில்ல. மிச்ச வேலையைல்லாம் புதுசா சேர்ந்த ரவி பையனை பக்கத்துலே வச்சுக்கிட்டு வேலையை முbச்சுடு என்று கூறி வேறு அலுவல்ல மூழ்கினார். வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொண்டார் கோபால்.

புதுசா வந்த பையனை வச்சுகிட்டு என்னத்த செய்றது? நம்ம வேலையை எப்படி பார்ப்பது என கவலை மனதில் ஓடியது.

பூஜை போடப்பட்டு வேலைகள் தொடங்கியது. கோபாலும் தான் ஏற்ற வீட்டு வேலையில் கவனம் செலுத்தினான்.

வேலையாட்களை தனது பக்கம் அழைத்து வேலை கொடுத்து அவர்களுக்கு ஊக்கமும் தொகையும் கொடுத்து வேலை மடமடவென நடந்தது.

முதலாளி பார்த்துக்கொள்ள சொன்ன வீட்டை ரவியிடம் ஒப்படைத்துவிட்டு முழுக்கவனத்தையும் தான் ஏற்ற வேலை மீது வைத்தார். ரவியும் சந்தோஷமாக ஏற்று கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்டு சாரிடம் நன்மதிப்பை பெற்றான்.

ஒரே நாளில் இரண்டு வீட்டுக்கும் நல்ல நாள் பார்த்து கான்கீரட் வேலை வந்தது எப்போதும் கோபால்தான் கவனிப்பார் இப்பொழுது கோபால் இல்லாததால் ரவி பார்க்கும் வீட்டிற்கு கணபதி ராமனே நேரில் வந்து கான்கீரட் வேலை முழுவதையும் இரண்டு நாட்கள் பார்வையிட்டு நல்லமுறையில் செய்துவைத்தார். பல புதிய ஐடியாக்களை ரவி சொல்ல அதை ஆமோதித்து அனுமதி தந்து ரவியை உற்சாகப்படுத்தினார்.

கோபால் ஏற்ற வீட்டின் கான்கீரட் வேலை முடிந்துவிட்டது அந்த வீட்டு ஓனருக்கு பணம் பற்றாக்குறையால் வேலை தாமதமாகும் எனக்கூறி 6 மாதத்திற்கு வேலையை தள்ளிவைத்தார்.

கோபால் வேலையின்றி இருந்தான். திரும்ப வேலைக்கு போவதற்கு மனமில்லை. அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் மனதிற்குள் பொறாமை குணம் குடி வந்தது. ஒருநாள் மாலை வேiளயில் கணபதிராமன் கோபால் வேலை செய்யும் வீட்டின் ஓனருடன் பேசிக்கொண்டிருந்தார் அதை கோபாலும் பார்த்து விட்டார்
தாம் செய்யும் அவரின் வேலையை நிறுத்தியது இவராகத்தான் இருக்கும் என நினைத்தான். அதனால் எழுந்த கோபத்தால் புதுப் பையனின் வேலைகளுக்கு இடைஞ்சல் கொடுக்கலானார். ஆட்களை போக விடாமல் செய்தான் இல்லாதj;;தையும் பொல்லாதj;தையும் கூறி அவருக்கு கெட்ட பெயர் வரும்படி செய்துகொண்டிருந்தான்.

சிலர் இவன் பேச்சைக் கேட்டு நடந்தனர். பாக்கியுள்ள நபரைக்கொண்டு திறமையாக வேலை வாங்கினான் ரவி.

ஒரு மாதம் ஓடியது கோபாலுக்கு போன் வந்தது மறுமுனையில் ஓனர் பேசினார் வீட்டு வேலையை நாளை ஆரம்பிக்கும்படி கேட்டுக்கொண்டார். மகிழ்ச்சியுடன் தயாரானான்.

ஒரு வழியாக கோபால் தான் ஏற்ற வேலையை முடித்து சாவியை ஒப்படைத்தார்.

முதல் முதலாய் தன்னை நம்பி வேலைக் கொடுத்ததற்க்கு ஓனருக்கு மனமார்ந்த நன்றிகளை கூறினார் மேலும் பலருக்கு வேலைக்கு சொல்லிவிடும்படியும் கூறினார்.

நானே உங்களுக்குதான் நன்றி சொல்லனும்!

ஏன்னா!

உங்க முதலாளியை ஒரு நாள் சந்திச்சபோது வேலை நிற்பதை தெரிந்துக்கொண்டு காரணம் கேட்டார் நான் வங்கி பிரச்சனை மற்றும் பணம் பறிமாற்றம் பற்றி கூறினேன். உடன் அவர் கோபால் நல்ல திறமையானவர் புதிதாக வேலை ஆரம்பித்துள்ளார் சென்டிமென்டாக வருத்தப்படுவார் ஏனென்றால் இது வரை 20 வருடத்தில் எங்கள் வேலை எதுவும் எதற்க்காகவும் தடை பட்டதில்லை அவருக்காக நீங்கள் இதை ஏற்றுக்கொண்டு உங்கள் வேலையை தொடரச்செய்யனும் என்றும் அக்கறையாக சொன்னார் என்று கூறினார் ஓனர்.

நீங்க பன்ற வேலை நிற்கக்கூடாதுன்னு எனக்கு பணம் பற்றாக்குறையின் போது உங்கள் முதலாளி கணபதிராமன்தான் பணமும் கொடுத்து மெட்டீரியல்ஸ் எல்லாம் அவரின் பொறுப்பில் கடனில் வாங்கி கொடுத்தார் அதனால்தான் நானும் உங்களை அழைத்து பாக்கி வேலையை முடிக்கச் சொன்னேன். என்னைப் பொறுத்தவரை உங்க முதலாளி கடவுள் மாதிரி தானாக வந்து உதவிசெய்த வள்ளல் என்று சொல்லிக்கொண்டே போனார்.

கோபால் நெகிழ்ந்துபோனான்… முதன்முதலாய் அவசரப்பட்டு விட்டோமோ? எனத் தோன்றியது.

ஒரு வழியாக ரவி பார்த்த அந்த வீட்டின் வேலையும் முடிந்து ரவி வீட்டின் சாவியைக் கொண்டு வந்து கணபதிராமனிடம் தந்தான். சொன்ன தேதியில் முடித்த ரவியை பாராட்டினார் இதற்கு பரிசாக அடுத்த வேலையையும் உனக்கே தருவதாக உறுதியளித்தார். அவனும் சந்தோஷமானான். மறுநாள் ரவியை கூப்பிட்டார் அந்த வீட்டுச் சாவியை எடுத்துக்கோ> ரவியை அழைத்துக்கொண்டு புது வீட்டை பார்வையிட சென்றார்.

சிறு சிறு மாற்றங்களை கூறினார். ரவியும் செய்துவிடுவதாக கூறினான். அந்த மனை 1500 சதுர அடி கொண்ட அவரோட சொந்தமனை இன்றைய மதிப்புக்கு கிரவுண்ட் மதிப்பு 20 லட்சம் இருக்கும். 1000 சதுர அடி கட்டுமானம் மதிப்பு 12 லட்சத்தில் கூடுதல் மதிப்பு 35 லட்சம் இருக்கும். விற்பதாக இருந்தால் 45 லட்சம் வரை விற்கலாம். அவ்வளவு நேர்த்தியாக கட்டப்பட்டிருந்தது.

கோபால் குடியிருக்கும் வாடகை வீட்டிற்கு போனார்கள்.

கோபால் என்று கூப்பிட்டார்.

சார் வாங்க! கூப்பிட்டா நானே வந்துருப்பேனே சார்! நீங்க இவ்வளவு க\;டg;பட்டு வரனுமா? உட்காருங்க சார்! இதோ வரேன்.

ஏய் சார் வந்து இருக்காங்க! வா!வா! வந்து பாரு! என்றார்.

மனைவியுடன் வந்தார்.

சார் என்ன சாப்பிடறீங்க! உங்களுக்கு டீ பிடிக்குமே அதை சாப்பிடுங்க! என உற்சாகமானான் தற்போதைய கசப்புகளை மறந்து 20 வருட பழக்கம் ஞாபாகம் வந்தது.

கோபால் இப்படி வாங்க! அம்மா நீங்களும் இப்படி வாங்க! இந்தாங்க ! இதை வாங்கிக்கோங்க! என்றார். ஆம் அது ரவி கட்டிய புது வீட்டின் சாவி என்ன சார் என்றார் கோபால் நடுங்கலாக.

நீ போறேன்னு சொன்னவுடன் உன் வீட்டை நீயே கட்டி குடி போக சொல்லலாம்னு இருந்தேன் நீ வேற வேலை ஒத்துகிட்டதாலே ரவியை விட்டு செய்யச் சொன்னேன். அவனும் மிக நேர்த்தியாக வடிவமைத்து கட்டி முடித்துள்ளான். அதைதான் உனக்கு கொடுக்கிறேன். இது உன் 20 வருட விசுவாசத்திற்கான பரிசு என்றார்.

இருவரும் நெகிழ்ந்து போனார்கள். சார் என்னை மன்னிச்சுடுங்க! என்றார் கோபால்.

இந்த ஒரு வருடம் என்னாச்சுன்னே தெரியல சார் என்னோட இயலாமையால நான் உங்களுக்கு துரோகம் நினைச்சிட்டேன். ஆனா அதையெல்லாம் மனசுல ஏத்திக்காம எனக்காக நீங்க பன்னினதை மறக்கமாட்டேன் சார் இனி வரும் என் காலம் முழுவதும் உங்களோடத்தான் இருப்பேன் சார் என்றார்.

வேண்டாம் கோபால்! நட்பு உறவு வேலை செய்யும் இடம் அனைத்தும் நம்பிக்கை சார்ந்தது. நமது தொழிலில் நம்பிக்கைத்தான் மூலதனம். அதனாலே நீ தனியா வேலை எடுத்து செய் ஏதாவது உதவினா தயங்காம கேளுங்க, நான் இருக்கேன்! என்று நம்பிக்கை ஊட்டினார். ரவிக்கும் சேர்த்து.

சீக்கிரமாக கிரஹபிரவேசம் செஞ்சு குடி போங்க! என வாழ்த்தி விடை பெற்றார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *