இந்த யுகத்திலே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 21, 2024
பார்வையிட்டோர்: 633 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவள் பழமையைத் தகர்க்க வந்த, உரிமையைப் பறை சாற்றத் துணிந்த, புதுமைப் பெண். அவளது செயல் ஒவ்வொன்றும் அதையே நிரூபித்தது. அவளது தோற்றத்திலே, பேச்சிலே, நடையுடை பாவனைகளிலே இந்த யுகத்தின் வர்ணம் ஒளி ஜாடை காட்டியது. கொசு வலைப் புடவையும், அலங்கோலச் சடையிலே அகங்கரிப்பினும், மணமற்றம் பூக் கொத்தும் புரள – நவயுக சம்பிரதாய்ச் சின்னங்களில் எதுவும் குறையாமல் – அவள் நிற்கும் பொழுது, அவள் கண்கள் (கண்ணாடிக்குப் பின் உருள்வன தான்) அவளது உரிமையைப் பிரகட்னம் செய்து அப்படியும் இப்படியுமாகப் புரளும், அவளை யார் குறை கூறுவது ? அவள் யாருக்கும் அடிமை யல்ல, தன்னம்பிக்கை கொண்டு விட்ட நவயுவதி அவள்.

அவள்? பத்தாம் பசலிப்பேர் வழியல்ல. நாகரிக வெள்ளத்தால் இழுப்புறும் திவலையு மல்ல. வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டுவிட்ட துறவியல்ல.’தாமரையிலை நீர்’ என்ற தன்மையில் வாழ்பவனு மல்ல. வாழ்வின் இன்பத்தில் அமிழ்ந்து போதை கிறுகிறுக்கும் பித்தனுமல்ல. வாழ்க்கையை, அதன் தன்மைகளையும் கண்டு சிரிக்கத் தெரிந்த ஓர் வாலிபன்.

அவள் பார்த்தாள், அவன் சிரித்தான். இருவரும் பேசுகிறார்கள்.

அவள் : ஏன் சிரிக்கிறீர்கள் ?

அவன் : சிரிக்க வேண்டியிருப்பதால் தான்.

அவள் : என்னைப் பார்த்து ஏன் சிரிக்க வேண்டும் ?

அவன் : சிரிக்காமல் என்ன செய்வது!

அவள் : உமது எழுத்துக்களைப் போலத்தான் இருக்கிறது உம் செயலும், பைத்தியம்!

அவன் : நானல்ல. பார்க்கப் போனால், உலகில் எல்லோருமே பைத்தியக்காரர்களாகத் தான் இருக்கிறார்கள்.

அவள் : இருக்கலாம். அவர்களால் பிறருக்குத் தீங்கு நேரிடாத வரையில் யாருக்கும் நஷ்டமில்லை. பைத்தியன் சிரிப்பு உளறல் நிலைகளைத் தாண்டி விட்டால் அப்புறம் கல்றெறி படவேண் டியது தான்.

அவன் : நீங்கள் என்மீது கல் வீசப் போறீர்களா ?

அவள் : தெரியும்!

அவன் : என்ன ?

அவள் : தொடர்ந்து நீங்கள் சொல்லப் போவது.

அவன் : அட, பிறர் சிந்தனையின் போக்கை உணரும் சக்தி கூட உண்டா உங்களிடம் ஊங், நான் சொல்லப் போவது?

அவள் : இத்தகைய அழகி கல்லெறிய ஆரம்பித்தால், அந்தக் கற்களை எடுத்துச் சேமிப்பதற்கே ஆண்கள் பலர் முன் வருவார்களே என்று….

அவன் : சுத்தத் தவறு. ஆணுலகம் அவ்வளவு மோசமான ஸ்திதிக்கு இன்னும் வந்து விடவில்லை. நான் அப்படி நினைக்கவும் மாட்டேன்.

அவள் : அட்டா! ரொம்ப யோக்கியர்கள் தான். விசுவாமித்திரர்கள் தான் எல்லோரும்!

அவன் : ஏன் வீண் வார்த்தைகள்? உங்கள் வம்சம் கால் கட்டை விரலையே குறிப்பாகப் பார்த்துக் கொண்டு நடை போடும் குடும்ப விளக்குகள் தான்! தெரியுமா,

அவள் : பெண்கள் வீதி வழிச் சென்றால் வெறித்து நோக்குவது. கலையென்ற பேரால் பெண்களின் படங்களையே விதவிதமாகச் சித்தரித்து கண் கொட்டாமல் பார்ப்பது. கதைகளிலும் பேச்சிலும் பெண்களைப் பற்றியே அபாரமாக அளப்பது எல்லாம் கலை என்று சொல்லி ஏமாற்றுவது:

அவன் : உங்கள் போக்கும் இதற்குக் குறைந்து விட வில்லையே?

அவள் : என்னத்தைக் கண்டு விட்டீர்களாம்?

அவன் : உங்கள் பேச்சும் பாவனையும் தான் பெண்களின் இயல்பை அம்பலப் படுத்துகிறதே. நாகரிகம் என்ற பெயரால் பெண்ணுலகம் வெறும் பகட்டுடன் விளம்பரச் சரக்குகளுடன் திரிகிறது ஏன்? ஆண்கள் மனதைக் கவர்வதற்காக.

அவள் : பார்ப்பது குற்றமில்லையாம்! அழகாக விளங்குவதும் அழகுடன் மிளிர முயல்வதும் தவறாம்.

அவன் : நான் அப்படிச் சொல்லவில்லையே.

அவள் : பின்?

அவன் : இல்லாத அழகை இருப்பதாகப் பாவித்து, விளம்பர சாதனங்களை மேல் பூச்சாக்கி, மன மயக்குடன் திரியும் போலி கர்வம் வான் கோழிப் பண்பு தான் – குறை கூறுவதற்குரியது என்கிறேன். அவசியத் தேவைகளான அஸ்திவாரத்தின் மேல் நாகரிகம் என்ற காயம் பூசி அநாவசிய ஆடம்பரங்களை அடுக்கி பகட்டுடன் அலையும் பண்பு தான் தவறானது என்கிறேன், இயற்கையிலேயே அமுகும் மணமும் பெற்ற மலரை யாராவது – குறை கூற முடியுமா? போலிச் சாயமும் மணமும் ஏற்றப் படட மலரை யாராவது பாராட்ட் முடியுமா?

அவள் : நாங்கள் காகித புஷ்பங்கள் என்று…

அவன் : சொல்ல வர வில்லை ; காகிதப் பூக்களிலாவது கலையழகு உண்டு. நீங்கள் விரும்பிச் சுமக்கிறீர்களே கனகாம்பரம்! அதற்கு சாயம் பூசி, சென்ட் தெளிக்க முயல்வது போலிருக்கிறது உங்கள் செயல்கள்!

அவள் : அப்படியானால், நவயுவதிகள்…

அவன் : வெறும் வண்ணாத்திப் பூச்சிகள்…

அவள் : வண்ணாத்திப் பூச்சிகளா ? உங்கள் பார்வையிலே, அகோர பசியுடன் இலைகளை அரித்து அரித்துத் தின்னும் புழு – பறக்கும் அழகுப் பூச்சியாகப் பரிணாமம் ஆயதற்கு முந்திய நிலைக்கும் முந்திய நிலையில் உள்ள நெளியும் ஐந்து தான் சிறந்ததோ!

அவன் : அப்படி – நினைப்பவனல்ல. அதற்காக, பகட்டாய் மலருக்கு மலர் தாவும் நிலையே லட்சியப் பண்பு என ஆமோதிப்பவனுமல்ல.

அவள் : அந்தப் போக்கு அதன் உரிமை.

அவன் : அத்தகைய உரிமையிலே தான் கோளாறு இருக்கிறது.

அவள் : பெண்கள் கூண்டுக் கிளிகளாய் வாழ வேண்டுமாக்கும்?

அவன் : பெண் கூண்டுக் கிளியுமல்ல, பகட்டாய் சிறகடிக்கும் வண்ணாத்திப் பூச்சியுமல்ல, பெண் பெண்ணாகவே வாழட்டும், உரிமை என்ற போலி அங்கி அணிந்து மயக்க நிலையிலே சுழன்று, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளாமல் இருக்கட்டும்.

அவள் : இந்த யுகத்து ஆண்கள் எல்லோரும் உத்தமர்கள் என்ற நினைப்போ? நவயுவதிகளையே குறைகூற வந்துவிட்டீரே; நவயுவர்கள் குற்றம் குறையாமல் பரிபூரணப் பிறவிகளாக்கும்.

அவன் : இல்லை தான் யாருமே அத்தகைய் பரிபூரண நிலை எய்த வில்லை. தவறுகள் செய்யும் மானுஷிகம் நிறைந்ததே இந்த உலகம்.

அவள் : அதனால் எங்களை மட்டுமே குறை கூறுவதில் பயனில்லை யல்லவா? தவறுதல் மனித உரிமை.

அவன் : தவறுகளைச் சுட்டிக் காட்டுவதும், கண்டு சிரிப்பதும் விமர்சகரது உரிமை.

அவள் : அதனால் யாருக்கெனன? நீங்கள் பாட்டுக்கு சொல்லிக் கொண்டே இருங்கள். உங்கள் விமர்சனத்தையும், ரசிகச் சிரிப்பையும் கவனித்தால் உலகம் சொல்லுகிறது?

அவன் : அம்மணி இந்த யுகத்தின் நடைமுறை சித்தாந் தங்களில் இதுவும் ஒன்று தான்! பொழுது என்னவோ விடிகிற போது விடிகிறது. ஆண்டி எப்பவோ ஊதுகிற பொழுது சங்கை ஊதி வைக்கிறான். அவ்வளவு தான்.

– கல்யாணி முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, சினிமா நிலையம் வெளியீடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *