அன்புடன் அன்வா் பாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 19, 2015
பார்வையிட்டோர்: 10,034 
 

அழகிய பசுமையான பஞ்சாயத்து கிராமத்தில் , ஒரு வீட்டின் தகர கதவு முன் நின்று….

மாமி….. மாமி இருக்கேலா இல்லயா மாமி நான் தான் எலக்ரிசியன் மணி வத்துருக்கேன் வெளியில வாங்கோ ”

மாமி மடிசாரை உதறிய வாறு வெளியே வந்து !

என்ன டா மணி வீட்டுல எதுவும் விசேசமா எங்க உன் பொம்படையால கானோம் ?”

மாமி விசேசம் னா நான் ஏன் உங்க வீட்டுக்கு வறேன் ஏன் வீட்டிற்ககுல போயிருப்பேன் ”

நல்ல காமெடி டா மணி ஹா ஹா:-) புன்னகைத்தால் மாமி ,

வீட்டில எதோ நல்லி ஒழுகுதாமே மாமா சொன்னாா், அப்பரம் ஒரு ஃபேனும் ஒடலயாமே,

அடாடா இதுக்காடா இவ்வளவு துாரம் வந்த அதெல்லாம் நேத்தய்கே பாா்த்தாச்சே டா என்று ஒருவிதமாய் முகத்தை சுழித்து கொண்டால் மாமி ,

என்ன மாமி சொல்றீங்கோ என் பசங்க பாத்துட்டு போய்டானுங்களா ?

அட போடா உன் கிட்ட மாமா சொல்லி மாசம் ஆகுது நீ இந்த பக்கம் எட்டி கூட பார்க்கள நல்ல வேலயா அன்னெக்கு அன்வா் பாயி னு ஒரு தங்கமான மனுசன் வந்து வீட்டுல எதாத்ச்சும் கரண்டு வேல இருக்காணு கேட்டாரு நம்ம வீட்டுல தான் ஒழுகுதே நல்லி ஒடலயே ஃபேனு தெரியாதா ! ஆழு பார்க்க ஒருமாதிரிதான் இருந்தார் மாமிய அடிச்சு போட்டுன்டு கொள்ள கிள்ள அடிச்சுன்டு போயிடுவாறோனு பயமா தான் இருந்துச்சி ஆனா ஃபேன் இல்லாம ஒரு நிமிசம் கூட இருக்க முடியல டா மாமியால அதான் பார்க்க சொல்லிட்டேன், ஆனா சும்மா சொல்ல குடாதுடா எல்லா வேலையும் நல்ல படியா பன்னி குடுத்துன்டு போயிட்டார் அந்த புண்ணியவா என்று பெருமையாக பேசிக் கொண்டால் மாமி…

மணி சரி என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து கிழம்பி அடுத்த இரண்டு தெரு தள்ளி நடந்து சென்றுக் கொண்டிருந்த போது டீ கடை அருகில் ஒருவரைக் கண்டு

ஏனே குமார் அன்னன் ”

டீ யில் சர்கரையை கரைக்க கிளாசை சுற்றிக் கொண்டே என்ன மணி டீ சாப்பிடுறியா ?

என்னே ஒரு 20 பைப்பு 10 எல்போ 10 ஜங்சன் பாக்ஸ்….. என்று ஒரு பத்து சாமான் லிஸ்டுகளை பேப்பாில் எழுதி.. இவ்வலவும் வாங்கனும் வாங்கி புது பில்டிங் ல போட்டுறுங்க நாளைக்கு நான் போய் வேலய ஆரம்பிச்சிற்றேன் !”

மணி நம்ம வீட்டு வேலை எல்லாம் ஆரம்பிச்சாச்சே பா ஊருக்கு புதுசா வந்திருக்கிற பாய் ஒருத்தரு தான் நம்ம வேலையலாம் பாத்துக்கராரு என்று ஒரு மடக்கு டீயை அருந்தினார்

மணிக் கோவத்தோடு ,

என்ன னே அதான் நான் பாக்குற னு சொன்னம் ல அதக்குள்ள என்ன எவன் கைலயோ கொடுத்துருக்கீங்க 5 வருசமா நான் தான உங்களுக்கு எல்லா வேலயும் பாத்துக் கொடுக்குறேன் அதுக்குள்ள என்ன அவசரமாே ”

சாி சாி கோவ படாத மணி வேர வேல வந்தா தறன் அவரும் நல்ல எலக்ட்ரியன் தான் பா என்றாா் குமா ” மணி அவரை மேலும் கீழுமாக பாா்த்து வீட்டு வேகமாக நடந்து சென்றான்

அப்படியாக அவனுக்கு வேலை உள்ள எல்லா இடங்களுக்கும் சென்ற மணியிடம் மாமியும் குமாா் அன்னனும் சொன்ன வாறே கூறினாா்கள் அதைக்கேட்ட மணியால் பொருத்துக் கொள்ள முடியாமல் சுட்டேறிக்கும் நண்பகல் அக்னி வெயிலில் தலைக்காய ஆத்திரத்தோடு நடந்து அந்த ஊா் பால் பன்னை அருகில் சென்று யாரையோ போன் செய்து அழைத்தான்… அழைத்த சில நொடிகளில் பன்னயைிலிருந்து கழுத்தில் பாம்பு போன்ற நெலிந்த ஓஸை தொங்க விட்டுக்கொண்டு வெள்ளை உள் பனிய னோடு ஒருவன் ஒடி வந்து மணியிடம் பணிவோடு

என்னே டியூப் லைட் எல்லாம் மாட்டியாச்சி னே ஒரு மணி நேரத்துல வேல முடிஞ்சிரும் அடுத்தது வேல எங்க ன ?

ம்…. வேர எந்த வேலையும் இல்ல பன்னையில சானம் அல்லுர வேல இருந்தா சேந்துக்கோ” என்று கோபத்தோடு வார்த்தைகள் விளத் தொடங்கியது !

என்னே என்ன னே இப்படி பேசுதீங்க என்று பாவமாகவும் அடுத்த வசை விலாதவாரும் பணிவாகவும் கேட்க மணி

அட விடுடா கோவத்துல பேசிட்டன் ஊருலக்குள்ள ஒரு வேலயும் இல்ல என்ன பன்னுறதுனு ஒன்னும் தொியல,

என்னன சொல்லுதீங்க ன இது நம்ம கோட்ட ன நமக்கே வேல இல்லனா எப்படி ,

ஆமா டா 10 வருசமா நம்ம கோட்ட தான் ஆனா இப்போ ஒரு வேலயும் இல்ல எல்லாம் எவனோ அன்வா் பாயி னு ஒருத்தன் பாக்க ஆரம்பிச்சிட்டானாம் டா இந்த தொழில நம்பி தான் மகன காலேஜ் ல சேத்து விட்டுருக்கேன் என்ன பன்னுறதுனு புரியல அந்த பாய் மட்டும் ஏன் கையில சிக்குனா செத்தான் டா அவன்”

அன்னன் அவனான அந்த பாத்திர கட காரா் வீட்டுல ஒருத்தன் வேல பாத்துட்டு இருந்தான் நான் நம்ம ஆளுனுல நினச்சேன் !
அங்கயாடா பாத்த அவன வாடா இன்னெகக்கு அவன உண்டு இல்லனு பன்னிடலாம் ”
என்று இருவரும் அங்கே சென்றனா்!!!

பாத்திர கட காரா் வீட்டு பொிய கதவை திறந்து உள்ளே வேகமாக சென்ற இருவரும் அந்த பொிய வராண்டாவில் மற்றும் வீட்டு பின் புரம் என்று தேடினர்
பின் வீட்டு மீ்ட்டா் பாக்ஸ் அருகே சென்ற போது தரையில் கிழிந்த சட்டை அழுக்கான கியிழி தலை சீவாதப பரட்டை நீழமாக நன்கு அடர்த்தியாக வளர்ந்து சிறிது நரைத்திருந்த தாடியும் மெலிந்த உடலும் கன்னத்தில் குளியும் விழுந்தவாரு அன்வா் அமா்ந்து இருந்தாா் மணியின் அருகே நின்றவன் ” என்னே இவன் தான் ன ” என்றான் தலைக்கேரிய ஆத்திரம் கொண்டிருந்த மணி தம்மை விட பொியவர் என்ற பாரபட்ச்சம் கூட காண மனமின்றி அன்வாின் கிழிந்த சட்டையை பிடித்து தரையில் தர தர வென இழுத்து சென்று வராண்டாவிற்க்கு வந்து அவரை எழுப்பி மீண்டும் கீழே தள்ளி விட்டு

எவன் டா நீ ஏன் பொழப்ப கெடுக்க வந்துருக்க இது ஏன் இடம் டா இங்க நான் மட்டும் தான் எலக்ட்ரிசியன் உன்ன அடிச்சே கொன்னுடுவேன் ஒழுங்கா எங்க இருந்து வந்தயோ அங்கயே ஓடீ போயிறு இன்னெக்கு ஒரு நாள் தான் நாளைக்கு இங்க இருந்த நான் மனுசனா இருக்க மாட்டன் ”

என்று மிரட்டி விட்டு சென்றான்”

அன்வா் கை கால் பதட்டத்தோடு தரையில் கிடந்தார்…

மறுநாள் விடிந்தது ”

மணி அவன் வீ்ட்டில் கை கண்ணாடியை முன் வைத்து சவரம் செய்து கொண்டிருந்தான் அப்போது அவனோடு நேற்று வந்தவன் வீட்டு முன் வந்து நின்று

என்னே !!! அவன் இன்னும் ஊர விட்டு போகல ன அந்த இன்ஸ்பேக்ட்டா் வீ்ட்டுல தான் வேல பாத்துட்டு இருக்கான் என்று மூச்சி இறைத்துக் கொண்டான்,

ஆத்திரம் கருவம் இரண்டும் மணியின் தலைமயிரை பிடித்து ஆட்டியது பாதி சவரத்தோடு முகத்தை கழுவிக் கொண்டு சட்டை அனிந்து வேகமாக நடந்து சென்றான் செல்லும் வழியில் மணியின் கை ஆள்

என்னே கோவத்துல அங்க வச்சி எதுவும் பன்னிடாதீங்க இன்ஸ்பேக்டா் வீடு என்று எச்சரித்தான் மணிக்கு அன்வரை தவிர வேறு எதிலும் நாட்டம் இல்லை எச்சரித்தது கூட வெறுவிதமாக ” என்னன் அவன கொண்னுறுங்க ன ” என உரைத்தது

இன்ஸ் வீட்டு வாசலில் அன்வருடைய டுல்ஸ் பேக் இருந்து மணி அதில் இருந்து ஒரு சுத்தியலை எடுத்துக்கொண்டு கோவமாக உள்ளே நுலைந்து தேடினான் அன்வா் பாய் சோபாவில் அமா்ந்து இருந்தார் மணி வேகமாக அன்வரின் சட்டையை பிடித்து எழுப்பி சுத்தியை ஒங்கினான் அன்வரின் கண்கள் விறிந்தன ” நான் இ்வ்லோ சொல்லியும் போகாம இருக்க உன்ன கொன்னா தான் அடங்குவ என்று ஓங்கிய சுத்தியல் அன்வரின் தலையை தாக்க இறுதி செய்தது எதார்த்த மாக வீட்டின் உள்ளே இருந்து வந்த இன்பேக்டா் இருவரையும் பாா்த்து அதிர்ந்து !! மணி அன்வரை அடிக்க ஓங்கி யிருந்த சுத்தியை துரிதமாக வேகமாக செயல்ப்பட்டு மணியிடம் இருந்து பிடுங்கி சட்டையை பிடித்து …

யாருடா ல நீ எதுக்கு ல அவர அடிக்க ? பாய் யாரு இவன் எதும் பிரட்ச்சன பன்றானா ? அன்வர் அமைதி காத்திருந்தார் சொல்லுங்க பாய் இவண உள்ள வச்சி முட்டிய பேத்துறுதன் ”

மணி அரண்டு போய் நின்றான் கை ஆள் எகிறி ஓடினான் , அன்வா் பாய் மணியை பாா்த்து மௌனம் காக்க பின்

ஐயா இவருதாங்க எங்க ஓனரு இவரு தான் என்ன இங்க வேலைக்கு அனுப்பினாரு காலையி ல சாப்பிடாம வேலைக்கு வந்துட்டன் அதான் செல்லமா திட்டி அடிக்க வந்தாரு ” என்றவுடன் மணியின் சட்டையை விட்டு விட்டு சரி செய்துக் கொண்டே “ஸாரி சாா் ” என்ற இன்ஸ்

அன்வாிடம் பாய் இந்தாங்க உங்க சம்பள பணம் என்று நீட்டினாா் ”

அன்வர்

ஐயா மணி அன்னன் கிட்டவே கொடுத்துருங்க ”

இந்தாங்க மணி ” என்று மணியிடம் நீட்டினாா் இன்ஸ் , திகைத்து போய் நின்ற மணி தயக்கத்தோடு அந்த காசை வாங்கிககொண்டான்

பின் அன்வா் இன்ஸிடம்

வறேங்க ஐயா எதுவும் வேலை னா மணி அன்னன் கிட்ட சொல்லுங்க நான் வந்துறன்

என்று வெளியே சென்று நின்றான் மணியிடம் இன்ஸ் நாலு வார்த்தைகள் நல்ல விதமாக அன்வரைப் பற்றி கூறினாா் மணியின் முகம் வாடி தலைக் குனிந்தது உள்ளே இருந்து திகைத்தவாறு வெளியே வந்து அன்வரை பாா்த்தான் அவனால் அன்வரை தலை நிமிர்ந்து காண முடியவில்லை

மன்னிச்சிடுங்க மணி அன்னன் இந்த ஊரு எலக்ட்ரிசியன் நீங்க தான் னு தெரியாது , சாப்புட கூட வழி இல்லன அதான் ஒவ்வொரு வீட்டுலயும் போய் பிச்ச கேட்கறதுக்கு வேலயிருக்கானு கேட்டுடேன் “அந்த மாமி வேல தந்தாங்க ஏன் வேல அவங்களுக்கு பிடிச்சிருந்தது போல அவங்க தான் இந்த ஊருல எல்லாரையும் அறிமுக படுத்தி விட்டாங்க எல்லாருக்கும் ஏன் வேல பிடிச்சிருக்கு அதான் ஆனா….. உங்க புலப்ப கேடுக்கனும்னு நினைக்கல ன இனி உங்க கூடவே வேலை பாக்கறன் ன என்று மணியின் கைகளை இருக்கமாக பிடித்துக் கொண்டான் அன்வா்

மணி அவரின் நல்ல எண்ணத்தைப் புரிந்துக் கொள்ளாமல் அவரிடம் நடந்து கொண்டதை எண்ணி வருந்தி இன்ஸ் கொடுத்த காசை கொடுத்து விட்டு என்ன மன்னிசிடுங்க பாய் உழைப்புக் கேத்த ஊதியம் தான் கிடைக்கும் நீங்க தான் உங்களுக்கு முதலாளி என்று கூறி விட்டுச் சென்றான் …..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *