மழலை தரும் “தர்ம சங்கடம்”

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 23, 2020
பார்வையிட்டோர்: 4,045 
 
 

குழல் இனிது யாழ் இனிது என்பர், தம் மக்கள்
மழலை சொல் கேளாதவர்
.
– திருவள்ளுவர்.

மழலை பேச்சு உண்மையிலே கேட்க சந்தோஷம் தான்,நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இந்த குழந்தைகள் பேசும் மழலை அப்படி இல்லையே. தர்ம சங்கடமா இருக்கே!

படியுங்கள் உங்களுக்கே புரியும்!.

பார்வர்தியின் பேத்தி அமெரிக்காவில் இருந்து லீவுக்கு வந்து இருந்தாள்.

அன்றும் பார்வதி வழக்கம் போல காலையிலே எழுந்து குளித்து விட்டு சுவாமிக்கு ஒரு சின்ன பூஜையை பண்ணிக் கொண்டு இருந்தாள்.அவள் பேத்தி பாட்டி பக்கத்திலே நின்றுக் கொண்டு பூஜையை கவனித்துக் கொண்டு இருந்தாள்

பாட்டி வீட்டு சுவாமி அறையில் இருந்த காய்ந்த திரா¨க்ஷ பழங்கள் கொஞ்சம் எடுத்து ஒரு தட்டில் வைத்து சுவாமிக்கு ‘நிவேதனம்’ பண்ணி விட்டு,சுவாமி ரூமுக்கு பக்கத்திலே பால்கனியிலே இருந்த துளசி செடிக்கும் அந்த திரா¨க்ஷயை ‘நிவேதனம்’ பண்ணினாள்.இதைப் பார்த்த பேத்திக்கு ஆச்சரியமாக இருந்தது.அவள் உடனே பாட்டியைப் பார்த்து “பாட்டி,பாட்டி,சுவாமிக்கு வாய் இருக்கு சரி,ஆனா வாயே இல்லாத துளசி எப்படி இந்த திரா¨க்ஷ பழத்தே சாப்பிடும்” என்று கேட்டதும் பாட்டிக்கு என்ன பதில் சொல்வது என்று தொ¢யாமல் தர்ம சங்கடப் பட்டாள்.

சரளாவுக்கு நாலு வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது.

அந்த பெண்ணுக்கு மூனு வயது ஆகி அவளுக்கு நன்றாகப் பேச வந்தவுடன் தன் அம்மாவைப் பார்த்து அடிக்கடி “அம்மா,அம்மா,என் கூட விளையாட எப்போ ஒரு தம்பிப் பொறப்பான்” என்று கேட்டுக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தாள். அதற்கு சரளா “உனக்கு கூடிய சீக்கிரமா ஒரு தம்பிப் பாப்பா பொறப்பான்” என்று சொல்லி வந்தாள்.

சொல்லி ரெண்டாவது மாசமே சரளா கர்ப்பம் ஆனாள்.அவளுக்கு நாலு மாசம் ஆயிற்று.

அன்று ஞாயிற்றுக் கிழமை.சரளாவின் கணவன் வீட்டில் இருந்தான்.அன்றும் அந்த பெண் குழந்தை அவள் அம்மாவைப் பார்த்து அவள் வழக்கமாக அடிக்கடி கேட்கும் கேள்வியைக் கேட்டாள்.

சரளா சந்தோஷத்தில் தன் வயிற்றை தடவிக் காட்டிக் கொண்டு “உனக்கு சீக்கிரமா இந்த தம்பிப் பாப்பா பொறக்கப் போறான்” என்று சொன்னதும் உடனே அந்தக் குழந்தை “அம்மா நீங்க பொய் சொல்றீங்க.உங்க வயத்லே இருந்து தான் நான் பொறந்தேன்.நான் ஒரு பொண்ணு.உங்க வயத் லே இருந்து இன்னொரு குழந்தை பொறந்தா அந்த குழந்தை எனக்கு ஒரு தங்கையாத் தான் இருக் கும்.ஆனா எனக்கு ஒரு தம்பிப் பாப்பா வேணுமே.அது அப்பா வயத்லே இருந்து பொறந்தா தானே நடக்கும்” என்று கேட்டவுடன் சரளவுகும் அவள் கணவனுக்கும் என்ன் பதில் சொல்வது என்று தெரியாமல் தர்ம சங்கடப்பட்டுக் கொண்டு இருந்தார்கள்.

ராகவன் செங்கல்பட்டில் தன் சொந்த வீட்டில் இருந்து வந்தான்.அவன் ‘ஆபீஸ்’ சென்னை ‘மவுண்ட்’ ரோடில் இருந்தது.அவன் வேலை செய்து வந்த ‘ஆபீஸ்’ வேலை வாரத்தில் ஆறு நாட்கள் இருந்தது. ஞாயிற்றுக் கிழமை தான் அவனுக்கு லீவு.அதனால் அவன் தினமும் காலையிலே ஆறு மணிக்கே வீட்டை விட்டு கிளம்பி ஆபீஸ்க்குப் போவான்.அவன் வீட்டுக்கு வந்து சேரும் போது இரவு மணி எட்டரை ஆகி விடும்.அவனுக்கு மூனு வயதில் ரமா என்று ஒரு பெண் குழந்தை இருந்தது. தினமும் ரமா எழுந்தரிக்கும் முன்னமே ராகவன் ஆசீஸ்க்கு கிளம்பி விடுவான்.ரமா எட்டு மணி க்கு தூங்கின பிறகு தான் அவன வீட்டுக்கு வந்துக் கொண்டு இருந்தான்.

அன்று ஞாயிற்றுக் கிழமை.

ரமாவுக்கு பள்ளி கூடம் லீவு.ராகவன் கடைக்குப் போய் வீட்டுக்கு காய்கறிகள் வாங்கிக் கொண் டு வந்தான்.உடனே ரமா “அம்மா,நாத்திக் கிழமை,நாத்திக் கிழமை வழக்கமா நம்ம வீட்டுக்கு வர ‘அன்கிள்’ வந்து இருக்கார்” என்று சொல்லி விட்டு விளயாடிக் கொண்டு இருந்தாள்.

ராகவனுக்கும் அவள் மணைவிக்கும் ரமா சொன்னதை கேட்டு தர்ம சங்கடமாய் இருந்தது.

‘ஜாம்பியா’ என்னும் நாட்டில் ஒரு பொ¢ய ஜெயிலுக்கு பக்கத்தில் இருந்தது அந்த சின்ன ஊர். அந்த ஊர் சட்டப் படி யார் ஒருவர் சாயங்காலம் ஐந்து மணிக்கு மேலே குற்றம் செய்தால், உடனே அவரை ஜெயிலில் போட்டு விடுவார்கள்.அடுத்த நாள் தான் அவரை கோர்ட்டுக்கு அழைத்து வந்து விசாரணை செய்வார்கள்.

அந்த ஊரில் ஒரு கமபனியிலே வேலை செய்துக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தான் சிவராமன்.அவன் கம்பனிக்கு ஞாயற்றுக் கிழமை அன்று லீவு.

ஜெயிலில் சின்ன குற்றம் புரிந்தவர்களை ஜெயில் அதிகாரி ஜெயிலுக்கு பக்கத்தில் இருக்கும் பெரிய தோட்டத்தில் காய் கறிகள் நட்டு பயிர் இட சொல்லுவார்.அதில் வரும் காய்கறிகளை ஞாயிற்றுக் கிழமை ஒரு ‘காய்கறி சந்தை’ வைத்து வியாபாரம் செய்வது வழக்கம்.மற்ற இடங்களை விட இங்கே காய்கறிகள் விலை குறைவாகக் கிடைக்கும்.

சிவராமன் அவர் மனைவி கிட்டே சொல்லி விட்டு அந்த காய் கறி சந்தைக்குப் போனார். வழக் கமாக அவா¢டம் ஞாயிற்றுக் கிழமைகளில் பேசி வரும் சுரேஷ் அவருக்குப் ‘போன்’ பண்ணீனார். சிவராமன் நாலு வயது பெண் தான் ‘போனை எடுத்துப் பேசினாள் அவள் குரலைக் கேட்டதும், சுரேஷ் ”சுதா அப்பா எங்கே” என்று கேட்டதும்,சிவராமன் அவர் மணைவி இடம் சொல்லி விட்டுப் போனதை கேட்டுக் கொண்டு இருந்த சுதா உடனே “He has gone to jail” என்று சொல்லி விட்டு ‘போனை’ ‘கட்’ பண்ணி விட்டாள்.

சுரேஷ¤க்கு தூக்கி வாரிப் போட்டது.’அடப் பாவமே சிவராமன் நேத்து என்ன தப்பு பண்ணீ இருப்பான்.ஒரு வேளை சனிக்கிழமை சாயங்காலம் குடித்து விட்டு காரை ஓட்டி இருப்பானோ.இல்லே ‘red signal’ ‘கிராஸ்’ பண்ணீ இருப்பானோ, இல்லே ஏதாவது காரில் மோதி இருப்பானோ’ என்று பல வித எண்ணங்கள் அவன் மனதில் மோதியது.’சரி,எதுக்கும் சிவராமன் என்ன தப்பு பண்ணீ பண்ணி இருப்பான்னு அவன் மனைவியைக் கேக்கலாம்’ என்று நினைத்து சுரேஷ் மறுபடியும் சிவராமன் வீட் டுக்குப் ‘போன்’ பண்ணினான்.

இந்த தடவை சிவராமன் மணைவி தான் ‘போனை’ எடுத்துப் பேசினாள்.சிவராமனின் மணைவி குரல் ‘போனில்’ கேக்கவே சுரேஷ் “மாடம் கேக்க ரொம்ப கஷ்டமா இருக்கு,பாவம் சிவராம ன் என்ன தப்பு பண்ணீனார்…” என்று சொல்லி முடிக்கவில்லை சிவராமனின் மனைவி “நான் பேசற துகுள்ளே சுதா ‘போனை’ வச்சுட்டா.நான் நினைச்சேன் அவ சொன்ன பதிலைக் கேட்டு நீங்க கவ லைப் பட்டுக் கிட்டு இருப்பீங்கன்னு.அவ அப்படி சொல்லி இருக்க கூடாது.அவர் ஜெயிலுக்கு காய் கறி சந்தைக்குப் போய் இருக்கார்.அவர் வந்ததும் நான் உங்க கிட்டே பேசச் சொல்றேன்” என்று சொன் னதை கேட்ட பிறகு தான் சுரேஷ¤க்கு நின்று போன மூச்சு மறுபடியும் வந்தது.

அது ஒரு ‘புரோகிதர்’ வீடு. அவர் ஒரு ஓட்டு வீட்டில் வசித்து வந்தார்.

அவருக்கு நாலு வயதில் சுமதி என்று ஒரு பெண் இருந்தாள்.

அன்று காலையிலேயே புரோகிதரைப் பார்த்து “நீங்க சீக்கிரமா சமைச்சு வச்சுட்டு,உங்க ஜோ லிக்கு போங்க” என்று சொன்னதும் ‘புரோகிதர்’ அவர் மனைவி சொன்னதைப் புரிந்துக் கொண்டு சமையல் கட்டுக்குப் போனார்.”சுதா,நீயும் சமையல் கட்டுக்குப் போய் அப்பாவுக்கு கூட மாட உதவி பண்ணு” என்று சொல்லி விட்டு வீட்டுக்கு சற்று ஒதுக்குப் புறமான ‘இடத்தில்’ உட்கார்ந்துக் கொண்டு இருந்தாள் ‘புரோகிதரின்’ மனைவி. பொம்மைகள் வைத்து விளையாடிக் கொண்டு இருந்த சுமதி பிடிக்காமல் பொம்மைகளை எல்லாம் அப்படியே வைத்து விட்டு அப்பாவுக்கு உதவி பண்ணப் போனாள்.

‘புரோகிதர் ‘கிடு’ ‘கிடு’ என்று சமையலைப் பண்ணீ வைத்து விட்டு,தனக்கு என்று கொஞ்சம் சமையலை எடுத்து ஒரு ஓரமாக வைத்து விட்டு தன் ‘ஜோலி’க்குக் கிளமபினார்.

அப்பா போனதும் சுதா தன் அம்மாவைப் பார்த்து “அம்மா,அம்மா,நீங்க ஏன் இன்னிக்கு சமைக் கலே.அப்பாவை சமைக்க சொன்னீங்க.நீங்க இன்னிக்கு சமைக்கக் கூடாதுன்னு உங்களுக்கு எப்படி தெரிஞ்சது” என்று கேட்டதும் ‘இவளுக்கு நாம என்ன பதில் சொல்றது’ என்று தர்ம சங்கப் பட்டுக் கொண்டே “அது ஒன்னும் இல்லே சுதா.காத்தாலே நான் எழுந்ததும் ஒரு காக்கா நம்ம ஆத்து கூரை மேலே இருந்து ஒரு ஓட்டை கீழே தள்ளித்து.அந்த மாதிரி தள்ளினா நான் சமைக்கக்கூடாதுன்னு எனக்கு தெரியும், அதான் நான் சொன்னேன்”என்று சொல்லி சமாளித்தாள்.

அம்மா சொல்றது உண்மையா இருக்கும் என்று நம்பி விட்டு சுதா விளையாடப் போனாள்.

‘புரோகிதர்’ அந்த வருஷக் கடைசியிலே அந்த ஓட்டு வீட்டை காலி பண்ணி விட்டு ஒரு சின் ன ‘ப்லாட்டு’க்கு குடி வந்தார்.இந்த வீட்டிலும் ‘புரோகிதா¢ன்’ மணைவி தன் கணவரைப் பார்த்து ‘மாதம்’ ஒரு தடவை ‘வழக்கமாக’ சொல்லுவதை மறுபடியும் சொன்னாள்.

ஒரு நிமிஷம் கூட ஆகவில்லை.சுதா தன் அம்மாவைப் பார்த்து “அம்மா,இந்த ஆத்லே ‘ஓடே’ கிடையாதே.எப்படி காக்கா ஓட்டைத் தள்ளீ இருக்கும்.உனக்கு எப்படி தொ¢ஞ்சது” என்று கேட்டதும் ‘புரோகிதா¢ன்’ மணைவி தன் பெண் சுதாவுக்கு என்ன பதில் சொலவது என்று திணறினாள்.

மாம்பலத்தில் வசித்து வந்த மரகதம்,தனக்கு ‘ஆறு மாசம்’ ஆகி இருந்ததால் தன்னுடைய மூனு வயது பெண் கலாவை அழைத்து கொண்டு ஒரு வாரத்திற்கு தன் அம்மா வீட்டுக்கு வந்து இருந்தாள்.

கர்ப்பமாய் இருக்கும் தனது பெண் வீட்டுக்கு வரவே மிகவும் சந்தோஷப் பட்டு மரகதத்தின் அம்மா மங்களம் மரகதத்திற்கு அவளுக்கு வாய்க்கு பிடித்தார் போல பல பலகாரங்களும் சமையலை யும் பண்ணி போட்டுக் கொண்டு இருந்தாள்.மிகவும் சூட்டிகையாக இருந்த கலாவை மங்களத்துக்கு ரொம்ப பிடிக்கும்.அவளிடம் நிறைய பேசி வருவாள்.

அன்று சாப்பிட்டு விட்டு மூவரும் ‘சோபாவில்’ உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்கள்.கலா பாட்டியிடம் நிறைய பேசிக் கொண்டு இருந்தாள்.சந்தோஷ மிகுதியால் மங்களம் தன் பேத்தி இடம் “கலா,இன்னும் நாலு மாசம் போனா உனக்கு ஒரு தம்பி பாப்பாவோ, இல்லே ஒரு தங்கைப் பாப்பாவோ பொறக்கப் போறா” என்று சொன்னாள்.கலா சந்தோஷப் பட்டாள்.

பேச்சின் நடுவிலே கலா பாட்டியைப் பார்த்து “பாட்டி நான் அம்மாவை எவ்வளவோ கேட்டுப் பாத்தேன்.ஆனா அம்மா நான் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டா.நீங்க எனக்கு..”என்று சொல்லி முடிக்கவில்லை மரகதம் “அம்மா அவளே மேலே கேக்க விடாதே”என்று எச்சரித்தாள்.

“கலா குழந்தே,அவ கேக்கட்டும்.அவ என்ன அப்படி கேகப் போறா.நான் அவளுக்குப் பதில் சொல்றேன்” என்று சொன்னதும்,மரகதம் மறுபடியும் “வேணாம்மா,நான் சொல்றேன் கொஞ்சம் என் பேச்சே நீ கேளு” என்று சொல்லியும் கேட்காமல் மங்களம் தன் பேத்தியைப் பார்த்து “நீ கேளூடா கண்ணா.உங்க அம்மா சொல்லாட்டா என்ன.நான் உனக்கு பதில் சொல்றேன்” என்று சொன்னதும் கலா சந்தோஷப் பட்டுக் கொண்டு “பாட்டி, நான் அம்மாவைப் பாத்து ‘அம்மா,இந்த குழந்தே உன் வய த்லே எப்படி வந்தது’ன்னு எவ்வளவோ தடவை கேட்டுப் பாத்தேன்.அம்மா பதிலே சொல்லாம என்னே கோவிச்சுக்கறா.நீங்க கொஞ்சம் சொல்லுங்க பாட்டி”என்று கேட்டு முடிக்கவில்லை மரகதம் தன் அம் மாவைப் பார்த்து “பாத்தியா,இதுக்குத் தான் நான் அவளே கேக்க வேணாம்னு சொன்னேன்.ஆனா நீங்க கேக்கலே.இப்ப மாட்டிண்டியா” என்று கோவத்துடன் சொன்னாள்.

உடனே மங்களம் தன் பேத்தியைப் பார்த்து “இவ்வளவு தானே.இதுக்கா கலாவை நீ கோவிச்சுக் கறே.நான் சொல்றேண்டா செல்லம்”என்று சொல்லி விட்டு பேத்தியை கொஞ்ச விட்டு “கலா,அம்மா தினமும் சுவாமியே வேண்டிண்டு வறா இல்லையா.அந்த சுவாமி தான் அம்மா வயத்லே இந்த குழந் தையே குடுத்து இருக்காரு” என்று சொல்லி ஒரு நிமிஷம் கூட ஆகவில்லை கலா பாட்டியைப் பார்த்து “ஏன் பாட்டி,நீங்க கூட தினமும் சுவாமியே வேண்டிண்டு வறீங்க.மாம்பலத்லே இருக்கிற பாட்டி கூட தினமும் சுவாமியே வேண்டிண்டு வறா.ஆனா உங்க ரெண்டு பேர் வயத்லேயும் ஏன் அந்த சுவாமி குழந்தையே குடுக்கலே.ஏன் பாட்டி” என்று கேட்டதும் மங்களம் ‘மரகதம்,நீ சொன்னப்ப நான் கேக்க லே.நான் இப்போ கலாவுக்கு என்ன பதில் சொல்லப் போறேன்’ என்று தன் தலையிலே கையை வைத் துக் கொண்டாள்.

சரஸ்வதி தன் மூனு வயது பெண் சீதா பல்லைத் தேய்த்து விட்டு ‘டைனிங்க் டேபிளில்’வந்து உட்கார்ந்து கொண்டு அம்மா கொடுக்கும் பாலுக்குக் காத்துக் கொண்டு இருந்தாள்.

‘பல்லே தேச்சுட்டு சுவாமிக்கு ஒரு நமஸ்காரம் பண்ணக் கூடாதோ இந்த பொண்ணு’ என்று நினைத்து சரஸ்வதி தன் பெண்ணைப் பார்த்து “சீதா, நீ தினமும் பல்லே தேச்ச்சுண்டு வந்து ‘சுவாமி க்கு’ ஒரு நமஸ்காரம் பண்ணிட்டு வந்து தான் பாலைக் குடிக்கணும்.இல்லேன்னா ‘சுவாமி’ உன் கண் ணே குத்திடும்” என்று பயமுறுத்தி சொன்னாள்.’அப்படி பயமுத்தி சொன்னா தன் குழந்தை தினமும் சுவாமிக்கு ஒரு நமஸ்காரம் பண்ணுவாள்’ என்று நினைத்தாள் சரஸ்வதி.

உடனே சீதா எழுந்துப் போய் சுவாமிக்கு ஒரு நமஸ்காரம் பண்ணீ விட்டு வந்து பால் குடிக்க உட்கார்ந்துக் கொண்டாள்.சீதாவுக்கு பாலைக் கொடுத்து விட்டு சரஸ்வதி குளிக்கப் போனாள். குளித்து விட்டு அவள் ‘டிரஸ்’ பண்ணீக் கொண்டு,சுவாமி படத்தின் முன்பு நின்றுக் கொண்டு தன் கண்களை மூடிக் கொண்டு மந்திரங்கள் சொல்லி விட்டு,ஒரு நமஸ்காரத்தை பண்ணி விட்டு, சமை யல் வேலையைக் கவனித்து வந்தாள்.இதை சீதா கவனித்தாள்.

சரஸ்வதியின் கணவர் ராமன் பேப்பரை படித்து முடிந்ததும்,குளித்து விட்டு அவரும் தன் கண்களை மூடிக் கொண்டு சுவாமி படத்தின் முன்பு நின்றுக் கொண்டு மந்திரங்கள் சொல்லி விட்டு ஒரு நமஸ் காரத்தை பண்ணி விட்டு வந்தார்.இதையும் சீதா கவனித்துக் கொண்டு இருந்தாள்.

சீதா தன் அம்மாவை பார்த்து “நமஸ்காரம் பண்றதுக்கு முன்னாடி ‘சுவாமி’ கண்ணே குத்திடும் னு பயந்து தான்,நீங்களும் அப்பாவும் உங்க கண்ணே மூடிண்டு மந்திரங்க சொல்றேளா” என்று கேட்டதும் சரஸ்வதியும்,அவள் கணவரும் அசந்து விட்டார்கள்.

உடனே சரஸ்வதி ‘சீதா கிட்டே ஏன் நாம அப்படி சொன்னோம்’என்று நினைத்து தர்ம சங்கடப் பட்டாள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை.சரஸ்வதியும் அவள் கணவரும் கோவிலுக்குப் போனார்கள்.சுவாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர்கள் சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணீனார்கள்.

சீதா இதைக் கவனித்தாள்.உடனே அவள் அம்மாவைப் பார்த்து “அம்மா,அப்பா நன்னா படுத்து ண்டு நமஸ்காரம் பண்றா.ஆனா நீங்க மட்டும் ஏன் முட்டிப் போட்டுண்டு நமஸ்காரம் பண்றேள்.நீங்களும் அப்பா மாதிரி ஏன் நன்னா படுத்துண்டு நமஸ்காரம் பண்ணலே” என்று கேட்டதும் சரஸ்வதி சீதாவுக்கு பதில் சொல்ல திணறீனாள்.

குருக்கள் சரஸ்வதிக்கு குங்கும பிரசாதம் கொடுத்து விட்டு,அவள் கணவருக்கு குங்கும பிரசா தமும் விபூதிப் பிரசாதமும் கொடுத்தார்.சரஸ்வதி குருக்கள் கொடுத்த குங்கும பிரசாதத்தை தன் நெற்றியிலே இட்டுக் கொண்டாள்.ராமன் குங்கும பிரசாதத்தையும்,விபூதிப் பிரசாதத்தையும் தன் நெற்றியில் இட்டுக் கொண்டார். இதை கவனித்த சீதா தன் அம்மாவைப் பார்த்து “அம்மா, அந்த குருக்கள் அப்பாவுக்கு மட்டும் குங்குமம், விபூதி ரெண்டு பிரசாதமும் குடுத்தார்.ஆனா உங்களுக்கு வெறுமனே குங்கும பிரசாதம் மட்டும் தானே குடுத்தார்.அது ஏம்மா” என்று கேட்டதும் சரஸ்வதிக்கு என்ன் பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தாள்.

அடுத்து சரஸ்வதியும் ராமனும் முருகன் சன்னிதிக்குப் போனார்கள்.

சரஸ்வதியும்,ராமனும் முருகப் பெருமானை வேண்டிக் கொண்டு இருந்தார்கள்.வேண்டி முடிந் ததும் சீதா தன் அம்மாவைப் பார்த்து “அம்மா,இந்த சுவாமிக்கு ரெண்டு பக்கமும் ரெண்டு அம்மன்க இருக்கா.ஏம்மா” என்று கேட்டதும் சரஸ்வதி யதார்த்தமாக தன் பெண் சீதாவைப் பார்த்து “ஆமாம், சீதா.முருகப் பெருமானுக்கு வள்ளீ,தெய்வானைன்னு ரெண்டு பொண்டாட்டி இருக்கா” என்று சொல்லி முடிக்கவிலை, சீதா உடனே “அம்மா,அப்பாவுக்கு நீங்க ஒரு பொண்டாட்டி தானே இருக்கீங்க. ஏன் அப்பாவுக்கு அந்த முருகப் பெருமானைப் போல ரெண்டு பொண்டாட்டி இல்லே” என்று கேட்டதும் சரஸ்வதி சீதாவைப் பார்த்து “இதோ பார் சீதா, இனிமே அம்மாவைப் பாத்து இந்த மாதிரி அதிகப் பிரசங்கித் தனமா ஒன்னும் கேக்காம வாயே மூடிண்டு வா”என்று கோவித்துக் கொண்டாள்.

இது போன்று சின்ன குழந்தைகள் கேட்கும் பல விதமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடி யாமல் எல்லா அம்மாக்களும்,அப்பாக்களும் திண்டாடுவதை நாம அன்றாடம் பார்த்து வருகிறோமே!!!

இப்போது சொல்லுங்க.

மழலை சொல் “இனிதா”,இல்லே “தர்மசங்கடமா” !!!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *