பழிக்குப்பழி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 23, 2013
பார்வையிட்டோர்: 13,515 
 
 

நான் சென்னையிலுள்ள ரெயில்வே ஆபீஸில் ஒரு குமாஸ்தா.
மாதம் முப்பது ரூபாய் சம்பளத்தில் என் குடும்பத்தை (மனைவி
ஒருத்தி. ஒன்றைரை வயசுக் குழந்தை. தம்பி கிட்டு இவர்களை)ப்
போμத்து வந்தேன். எனக்குப் பத்து வயது ஆவதற்குள்ளாகவே
என் தகப்பனார் இறந்து விட்டார். சென்னையிருந்து
நாற்பது
மைல் தூரத்திலுள்ள ஒரு கிராமத்தில் – அதுதான் நாங்கள் பிறந்த
ஊர் – எங்களுக்குக் கொஞ்சம் நிலம் நீர் வீடு வாசல் உண்டு.
தகப்பனார் இருந்த வரையிலும் அவரே சொந்தப் பயிர் வைத்து
வந்ததாலும் அவ்வூரிலுள்ள மளிகைக் கடை ஒன்றில்
கணக்கெழுதி வந்ததாலும் எங்களுக்குச் சோற்றுப் பஞ்சம்
இல்லாதிருந்தது.
அவர் போனதும் எங்கள் குடும்பம் கஷ்ட தசையில் ஆழ்ந்தது.
வேறு வழி இல்லாததால் வீடு வாசலைத் தவிர நிலபுலன்களை
விற்றுப் பட்டணம் சென்று எங்களைப் படிக்க வைத்து
எப்படியாவது பிழைக்கலாம் என்று எங்கள் தாயார்
அவற்றைவிற்கப் பிரயத்தனப்பட்டாள். இதுதான் சமயமென்று
எங்கள் பங்காளிகளான ஒன்றுவிட்ட பெரியப்பாவின்
பிள்ளைகள் – அவர்களுக்கு ஊரில் செல்வாக்கு அதிகம் இருந்தது.
அவற்றையாரும் வாங்கவொட்டாமற் செய்து விடவே.
கடைசியில் குறைந்த விலைக்கு அவர்களுக்கே விற்று விட்டுப்
பட்டணம் வந்து குடித்தனம் நடத்த வேண்டியதாயிற்று.
எனக்கு அப்பொழுது “மைனர்’ நீங்கவில்லையாதலால்
கொஞ்சம் பணம் பிடித்துக் கொண்டு அதற்கு வட்டி கொடுத்து
வருவதாக உடன்பட்டனர். கைக்கு வந்த ரூபாயைப்
பட்டணத்திலுள்ள தாய்வழிப் பந்து ஒருவரின் மூலமாக
வட்டிக்குக் கொடுத்து அந்த வருமானத்தைக் கொண்டு
குடும்பத்தை நடத்தி வந்தாள் எங்கள் தாயார். எங்கள்
பங்காளிகளிடமிருந்து வட்டிப் பணம் வாங்குவதென்றால்
லேசான காரியமல்ல. எனக்குப் பதினெட்டு வயதானதும் அந்தத்
தொல்லை ஒழிந்தது. இரண்டு மாத விடுமுறையின் போது மட்டும்
ஊருக்கு வந்து எங்கள் வீட்டில் வசிப்போம். என்னை
எஸ்.எஸ்.எல்.ஸி. வரை மிகச் சிரமப்பட்டுப் படிக்க வைத்தாள்
என் தாயார். மேலும் படிக்க வேண்டுமென்று ஆசை இருந்தது.
ஆனால் என்ன செய்வது?
அதற்குப்பின். முன் சொன்ன தாய்வழி உறவினரின் சிபார்சின்
பேரில் ரெயில்வே ஆபீஸில் 23 ரூபாய்க்குக் குமாஸ்தாவாக
அமர்ந்தேன். வேலையில் அமர்ந்த வருஷம் எனக்கு விவாகம்
நடந்தேறியது. அதே வருஷத்தில் என் தாயார் இறந்து போனாள்.
இதனால் குடும்பப் பாரமனைத்தும் என் தலைமீது விழுந்தது.
எனக்கு அப்பொழுது வயது பத்தொன்பதுதான். கிட்டுவுக்குப்
பத்து வயது. என்னைத் தவிர வேறு யாரும் அவனுக்கு இல்லை.
“ஜ்யேஷ்டப்ராதா பிதுஸ் ஸம:’ என்றபழமொழிக்கேற்ப நான்
அவனை மிக்க வாஞ்சையுடன் வளர்த்து வந்தேன். என்
மனைவியும் அவனை ஆதரவுடன் கவனித்து வந்தாள். “சீ”
என்றஒரு வார்த்தை அவனைப் பார்த்துச் சொன்னது கிடையாது.
எப்படியாவது அவனை பி.ஏ. வரைக்கும் படிக்க வைத்து நல்ல
வேலையில் அமர்த்திப் பங்காளிகளின் கண்ணெதிரில் முன்னுக்கு
வரவேண்டுமென்று ஆசைப்பட்டேன்.
சென்றவருஷம் கிட்டு எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சையில்
தேறினான். உடனே அவனைப் பச்சையப்பன் கல்லூரியில்
சேர்த்தேன். அந்த வருஷம் அவன் சரியாகப் படித்து வந்தான்.
தவறாமல் காலேஜ் செல்வான்; திரும்பி வருவான். இரவு எட்டு
மணிக்குச் சாப்பிட்டுவிட்டுப் பத்து மணிவரை பாடங்களைப்
படித்துவிட்டு அப்புறந்தான் தூங்கச் செல்வான். அந்த வருஷம்
பரீட்சையில் தேறிவிட்டான். இரண்டாம் வருஷத்தில்தான்
அவனுடைய நடத்தையில் பெரிய மாறுதல் ஏற்பட்டது.
மணிக்கணக்குத் தவறாமல் வீட்டிற்குத் திரும்புவான்.
இப்பொழுது இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்குக் கூட வர
ஆரம்பித்தான். வந்ததும் சில நாள். “உடம்பு என்னவோ போல
இருக்கிறது; பசி எடுக்கவில்லை” என்று சொல்ப்
படுக்கப்
போய் விடுவான். வற்புறுத்தினால் இரண்டே வாய் அள்ளிப்
போட்டுக் கொண்டு இலையை விட்டு எழுந்து விடுவான்.

முதல்
நான் இவைகளையெல்லாம் கண்டு கொள்ளாதது
போல் இருந்தேன். பிறகு. இப்படி விசாரிக்காமல் இருப்பது
சரியல்ல என்று எண்ணி. ஒரு நாள். “ஏன். கிட்டு. இப்படி
நாழிகழித்து வருகிறாய்? என்றேன். “என்னுடைய சிநேகிதர்கள்
வீட்டுக்குப் போய்விட்டு வருகிறேன்” என்றான் அவன். “இந்த
வருஷம் பரீட்சை ஜாக்கிரதை! இப்போதெல்லாம் பாடமே
படிக்கிறதில்லைபோல் இருக்கிறதே?” என்றேன். “ஏன்
படிக்காமல்! ஒருத்தன் தனியாகப் படிப்பதைவிட நாலு பேருடன்
சேர்ந்து படிப்பது மேல் அல்லவா? சந்தேகம் ஏதாவது
தோன்றினால் ஒருவனை யொருவன் கேட்டுத் தெரிந்து
கொள்ளலாமோ இல்லையோ?” என்றான் “அதென்னவோ.
அப்பா. படித்துப் “பாஸ்’ பண்ணினாயானால் உனக்குத் தான்
நல்லது” என்றேன்.
ஒரு நாள் தற்செயலாக அந்தக் காலேஜ் சரித்திர ஆசிரியரைச்
சந்திக்க நேரிட்டது. அவர் எனக்குக் கொஞ்சம்
அறிமுகமுள்ளவர். என்னைப் பார்த்ததும் அவர். “ஏன் சார்.
உங்கள் தம்பி கிருஷ்ணசாமி கிளாஸýக்கே வருவது கிடையாதே?
ராமநாதன். இவன் இன்னும் நாலைந்து பேர் சேர்ந்துகொண்டு
தவறாமல் மட்டம் போடுகிறார்கள்” என்றார்.
எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. “யார் அந்த ராமநாதன்?”
என்று கேட்டேன். “உங்கள் ஊர்தான் ஸôர். உங்களுக்குக் கூடப்-
பந்துதான் போல் இருக்கிறது” என்றார். அவர் சொன்னது
வாஸ்தவமே. எங்களுடைய ஒன்றுவிட்ட பெரியப்பாவின்
கடைசிப் பிள்ளை பட்டணத்தில்தான் படிக்கிறானென்றும்.
பிராட்வேயிலுள்ள யூனிவர்ஸிடி மாணவர் ஹாஸ்டல்
இருப்பதாகவும் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அவன்
பச்சையப்பன் கல்லூரியில் படிக்கிறானென்பது எனக்குத்
தெரியாது. “சரிதான். நான் கவனிக்கிறேன்.” என்று சொல்அவ
ரிடம் விடை பெற்றுக் கொண்டு நேராக வீட்டிற்கு வந்தேன்.
அன்று வழக்கத்திற்கு மாறாகக் கிட்டு சீக்கிரமாக வீடு
திரும்பியிருந்தான். சிரமபரிகாரம் ஆனதும் நான் நிதானமாகவே
வார்த்தையை எடுத்தேன்.
“ராமு உனனோடேயாடா படிக்கிறான். கிட்டு?” என்றேன்.
“ஆமாம்” என்றான் கிட்டு தாழ்ந்த குரல்.
“அவனோடு ரொம்பப் பழகுகிறாற் போருக்கிற
து?”
“நான் ஒன்றும் அவனோடு சேருவது கிடையாது; யார் உனக்குச்
சொன்னார்கள்?”
“யாராய் இருந்தால் என்ன? அவனோடு சேர்ந்து காலேஜுக்கு
“டிம்கி’ கொடுத்துவிட்டு ஊர் சுற்றினாயானால் கட்டாயம் நீ
பரீட்சையில் “கோட்’ தான் அடிக்கப் போகிறாய்.”
“இல்லவே இல்லை; நான் நிச்சயம் “பாஸ்’ பண்ணுவேன்.”
அந்த வருஷம் நான் எதிர்பார்த்தபடியே கிட்டு பரீட்சையில்
தேறவில்லை. எனக்குக் கோபம் பிரமாதமாக வந்து விட்டது.
அவனைப் பார்த்து. “நான் சொன்னதைக் கேட்டாயாடா.
மடையா? அவனெல்லாம் ஊரார் சொத்தை வாயில் போட்டுக்
கொண்டு ஏழைகளை ஏமாற்றிப் பணக்காரன் ஆனவன். அதே
மாதிரிதான் அவர்கள் பணமும் கரையும். அந்தத் திருட்டுப்
பையன் ராமுவோடு இழையாதே இழையாதே என்று நான்
எவ்வளவு சொல்யும்
நீ கேட்கவில்லை . கழுதை. ராஸ்கல்…..”
என்றெல்லாம் ஆவேசம் வந்தவன் போல் மடமடவென்று திட்டித்
தள்ளிவிட்டேன்.
அதுவரை என்னிடமிருந்து ஒரு திட்டும் கேட்டிராத கிட்டு
பிரமித்து நின்றான். அவன் கண்களிருந்து
நீர் ஆறாகப்
பெருகியது. என் மனசு உடனே இளகியது. “அடடா! அம்மா
அப்பா இல்லாத பையன்; என் ஒருத்தனையே நம்பியிருக்கிறான்.
ஏன் வைதோம்’ என்றாகிவிட்டது. ஆனாலும் இப்படிச்
செய்தால்தான் இனிமேலாவது “குறியாகப் படிப்பான் என்று
தோன்றவே. முகத்தை முன்போலவே கடுமையாக வைத்துக்
கொண்டு. “ஓழிந்து போ! என் கண்முன் நிற்காதே! இனிமேலாவது
சரியாகப் படி. அவனோடெல்லாம் சேராதே” என்றேன்.
கிட்டு கண்களைத் துடைத்துக் கொண்டு தன் அறைக்குச்
சென்றான்.
அன்று முதல் அவன் தவறாமல் நாலரை மணிக்கு வீடு வந்து
சேர்ந்து விடுவான். இரவு சாப்பிடுவதற்கு முன் கொஞ்ச நாழிகை
வரை படிப்பான். சாப்பிட்டான பின் மறுபடியும் பத்து மணி
வரை படிப்பான். கொஞ்ச நாள் கழித்து எனக்கே அவன் அப்படி
ஓயாமல் படிப்பது உடம்புக்குக் கெடுதி என்று பட்டது. அதனால்

சாயங்காலம் கடற்கரைக்கோ கிரிக்கெட் ஆடவோ
அனுப்பிவிடுவேன். காலேஜ் பாடமே படித்தால் பொது அறிவு
விசாலமடையாதென்று. பொறுக்கி எடுத்த சில உயர்தர
ஆங்கிலக் கதைப் புத்தகங்களையும். தமிழ்ப் பத்திரிகைகளையும்
வாங்கி வந்தேன்.
அ ப் ú ப ô து அ வ னு க் கு த் த ச ர ô வு க் க ô க
விடுமுறைவிட்டிருந்தார்கள். அன்று அவன் தன் அறையில்
உட்கார்ந்த வண்ணம் ஏதோ ஒரு புத்தகத்தை மிகவும்
ஊக்கமாகப் படித்துக் கொண்டிருந்தான். நான் உள்ளே
நுழைந்தது கூட அவனுக்குத் தெரியவில்லை. நான் “கிட்டு!”
என்று கூப்பிட்டதும் அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
புத்தகத்தை ஓர் ஓரமாக வைத்து விட்டான். நான் அருகில் வந்து
அப்புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன். அது பிரபல நாடகாசிரியர்
திவான் பகதூர் கண்ணப்ப முதயார்
எழுதிய “பழிக்குப் பழி’
என்றதமிழ் நாடகம். நான் நிமிர்ந்து பார்த்ததும் “எத்தனை நாழி
பாடம் படிக்கிறது? ஒரு மாறுதல் வேண்டாமா? அதனால்தான்
இதைப் படித்துக் கொண்டிருக்கிறேன்” என்று கெஞ்சும்
பாவனையாகக் கூறினான்..
“சரி. சரி. படி. பரவாயில்லை. நானும் அதைச் சொல்லத்தான்
இங்கே வந்தேன். நான் சில இங்கிலீஷ் புத்தகங்களும். தமிழ்ப்
பத்திரிகைகளும். நாவல்களும் வாங்கி வந்திருக்கிறேன். தமிழ்
படிக்க வேண்டியதும் அவசியந்தான்” என்று கூறி என்
அறையிருந்து
அவற்றைஎடுத்து வந்தேன்.
அச்சமயம் என் சிநேகிதரான சுப்பிரமணிய ஐயர் வந்தார்.
அவரும் எங்கள் ஆபிஸ் குமாஸ்தாதான். அவர் சுத்த கர்நாடகம்.
அந்தத் தமிழ்ப் புத்தகங்களையெல்லாம் பார்த்துவிட்டு.
“நாவல்களோ? கிட்டு. இதெயெல்லாம் படித்துக்
கொண்டிருந்தாயோ. இந்தத் தடவையும் பரீட்சையில் “ப்ளாங்கி’
போட வேண்டியதுதான்” என்றார்.
நான் அவரை அழைத்துக் கொண்டு என் அறைக்கு வந்தேன்.
கொஞ்ச நேரம் சம்சாரத் தொல்லைகளைப் பற்றிப் பேசிக்
கொண்டிருந்துவிட்டுப் பிறகு ஆபீஸ் சமாசாரத்தை
ஆரம்பித்தார். கடைசியில் “ரிச்மண்ட் துரை வருகிறானாம்.
இனிமேல் நமக்கெல்லாம் கொஞ்சம் நல்ல காலந்தான்” என்று
சொல்
விட்டுப் போனார்.
எனக்கு வெகு நாட்களாக லீவு கிடைக்கவில்லை
இப்பொழுதுள்ள துரை மகா கருமி. ரிச்மண்ட் வருகிறானென்று
தெரிந்ததும். சமீபத்தில் தசராப் பத்து நாளும் லீவு வாங்கிக்
கொண்டு வீட்டிலோ ஊருக்குப் போயோ “ஹாய்’ ஆக இருக்கலாம்
என்று எண்ணி மகிழ்ந்தேன்.
மறுநாள் லீவுக்கு விண்ணப்பம் போட்டேன். நல்ல காலம்
உடனே அது ஏற்றுக் கொள்ளப்பட்டுப் பத்து நாட்களுக்கு
விடுமுறைகிடைத்தது. ஆனந்தத்துடன் அன்று வீடு வந்து
சேர்ந்தேன். சிற்றுண்டி அருந்தியதும் கிட்டுவோடு பேச மாடிக்குச்
சென்றேன். அவன் யாரைப் பார்த்தோ கோபத்துடன் “அடே
துஷ்டா! துன்மார்க்கா! என் குடியைக் கெடுத்த பாவி!” என்று
கத்துவதும் உடனே ஏதோ “தொப்பென்று விழும் சப்தமும்
கேட்டன. எனக்கு ஒன்றும் புரியவில்லை. “கிட்டு” என்று
கூப்பிட்டுக் கொண்டே அவன் அறைக் கதவைத் திறக்க
முயன்றேன்.
ஆனால் அது உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. அதே சமயம்
அறையிருந்து
யாரோ அவசர அவசரமாக வாயிற்
பக்கமாகவுள்ள மற்றொரு மெத்தைப் படிக்கட்டின் வழியாகக் கீழே
இறங்கிச் செல்வது போல் இருந்தது. என்னைச் சமாளித்துக்
கொண்டு இந்தப் பக்கப் படிக்கட்டின் வழியாக வாயிலுக்குச்
செல்வதற்கு ஐந்து நிமிஷம் ஆகியிருக்குமென்று எண்ணுகிறேன்.
எதிர் வீட்டிலுள்ள சுப்புவை விசாரித்ததில் அப்பொழுதுதான்
கிட்டு வெளியில் சென்றதாகத் தெரிந்தது.
கிட்டு சொன்ன வார்த்தைகளின் மர்மம் எனக்கு விளங்கவே
இல்லை. எதுவாக இருந்தாலும் அவன் திரும்பி வந்ததும் கேட்டுத்
தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணி ஒருவாறு மனந்தேறினேன்.
மணி ஆறு அடித்தது; ஏழு அடித்தது; எட்டு. ஒன்பதும்
அடித்துவிட்டது. அவனுக்காக நான் காத்திருந்ததுதான் மிச்சம்.
என் கவலை அதிகரித்தது. உடனே என் மனசில் ஒரு புதிய
எண்ணம் உதித்தது. ஒரு வேளை ராமநாதனோடு மறுபடியும்
சகவாசம் பண்ண ஆரமபித்துவிட்டானோ? எதற்கும் ராமநாதன்
இருக்கும் ஹாஸ்டலுக்குச் சென்று பார்ப்போம் என்றமுடிவிற்கு
வந்தேன்.
தோளின் மேல் ஒரு சிறு குட்டையைப் போட்டுக் கொண்டு
புறப்பட்டேன். அங்கே போய் விசாரித்ததில் ராமு விடுமுறையைக்

கழிக்கத் தன் ஊருக்குப் போய்விட்டானென்று தெரிய வந்தது.
அதனால் வேறு யாராவது சிநேகிதன் வீட்டிற்குத்தான் கிட்டு
போயிருப்பான். இதற்குள் வீட்டுக்கு வந்துவிட்டிருப்பான்’
என்று எண்ணிக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினேன். ஆனால்
கிட்டு அங்கு வரவில்லையென்று தெரிந்ததும் இடி
விழுந்தவன்போல் தலையில் கையை வைத்துக் கொண்டு
உட்கார்ந்து விட்டேன். அன்று இரவு முழுதும் அவன்
வரவேயில்லை; நானும் தூங்கவில்லை. எப்படித் தூக்கம் வரும்?
ஊருக்குத்தான் போயிருக்க வேண்டும் என்று தீர்மானித்துக்
கொண்டேன்.
மறுநாள் விடியற்காலை எழுந்து பல் தேய்த்துக் கொண்டு
ஊருக்குப் புறப்பட்டேன். சென்ட்ரலுக்குப் போய் அவசர
அவசரமாக டிக்கெட் வாங்கிக் கொண்டு ரெயில் ஏறினேன்.
வண்டி எங்கள் ஸ்டேஷனுக்கு வந்து சேரும் வரை என் மனம்
எப்படிப் பதறியது என்பதை அந்த ஆண்டவனே அறிவான்.
வண்டியை விட்டு இறங்கியதும் ஸ்டேஷனருகிலுள்ள
இலுப்பைத் தோப்பு வழியாகத்தான் ஊருக்குள் செல்ல
வேண்டும். நான் தோப்பினுள் நுழைந்து கொஞ்ச தூரம்
சென்றேன் “ஆ! அது என்ன? கிட்டுவின் குரல் மாதிரி
இருக்கிறதே? அதோ அந்த இலுப்பை மரத்தின்கீழ் யாரோ
இருவர் சண்டை போடுகிறார்களே!
“அடே. துஷ்டா. துன்மார்க்கா. என் குடியைக் கெடுத்த
பாவி!”
ஆம். ஆம் கிட்டுதான்! ராமுவின் மென்னியைப் பிடித்து
அழுத்தி அவன் மார்பின்மேல் உட்கார்ந்து கொண்டு. “அடே
துன்மார்க்கா. இதை வாங்கிக் கொள்” என்று சொல்க்
கொண்டே கையிலுள்ள கத்தியால் அவனைக் கொல்லப்
போகிறான்!
நான் இரைக்க இரைக்க ஓடோடியும் வந்து. “ஐயோ! கிட்டு.
கிட்டு! அவனைக் கொல்லாதேடா! அவன் நமக்குத் தம்பி
முறையாக வேணுமடா” என்பதற்குள் கத்தி ராமுவின்
கழுத்தைத் தொட்டு விட்டது. அதே சமயம் என் கண்கள்
இருட்டி வந்தன. அப்படியே கீழே விழுந்து நினைவு இழந்தேன்.
நினைவு வந்ததும் கண் விழித்துப் பார்த்தேன். என்ன
ஆச்சரியம்! ராமுவும் கிட்டுவும் என் முகத்தில் ஜலம் தெளித்துக்
கொண்டிருந்தனர். பிறகு தான் விஷயம் இன்னதென்று எனக்கு
ஒருவாறு விளங்கிற்று.
சமாசாரம் என்னவென்று விசாரித்ததில். தசரா
விடுமுறைக்காக ஊரிலுள்ள ஜில்லா போர்டு பாடசாலையில்
திவான் பகதூர் கண்ணப்ப முதயார்
எழுதிய “பழிக்குப் பழி’
என்றநாடகம் நடத்தப் போகிறார்களென்றும். அதில் கிட்டு
கதாநாயகனாகவும் ராமு துன்மார்க்கக் கள்வனாகவும் வேஷம்
போடுகிறார்களென்றும் அறிந்தேன். எனக்கு அப்பொழுது எப்படி
இருந்திருக்கும். நீங்களே சொல்லுங்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *