சட்டென்று சலனம் வரும் என்று…….!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: July 23, 2017
பார்வையிட்டோர்: 19,038 
 

யாராவது மரணிக்கும் போது உயிர் போவதை வெகு அருகில் நின்று பார்த்திருக்கிறீர்களா….?

அப்போது மரணிப்பவரின் உடல் இயக்கத்தை கவனித்திருக்கிறீர்களா….?….

அதுவும் தற்கொலை செய்பவர்களின் உயிர் பிரிதலைக் கண்டவர்கள் உண்டா…!

உண்டெனில் அது பற்றி சொல்லுதல் ஒரு மாயக் கதையென ஒரு பனி மூட்டப் பாதையென விரிந்து கொண்டே செல்லுமே… அதன் திசைகள் அற்ற தவங்களின் கதறல் போலத்தான் நான் திரிந்து கொண்டு இருக்கிறேன்…. என் பின்னிரவு தனிமை, ஒரு வித தேடல் கொண்டவை… அது பற்றி தெரிந்தால் என் மீது வெறுப்பு வரலாம்… அல்லது மிகுத்த ஆசை வரலாம்…வருவது எல்லாம் வந்தவையா என்று போய்க் கொண்டிருக்கும் நான் என்னில் இருளால் வாழ்பவன்.. இருளுக்குள் கொண்ட ஒளியின் நீட்சியை தொட முடியாதவர்கள் இதோடு போய் விடலாம்….

நான் இரவுகளின் துகள்களாய் திரிபவன்…. பகல் எனக்கு வெறுப்பையே தருகிறது……. இரவுகளைப் போல.. இனிமையான வெளி எங்கும் இல்லை என்பது போன்ற பல கருத்துகளை கருமமே என்றெண்ணி முதுகில் சுமந்து கொண்டு திரியும் முடிவற்றவன். காடோ மலையோ.. மழையோ.. வெயிலோ….. எனக்கு எல்லாவற்றிலும் இரவு வேண்டும்… இரவைப் போல, நிர்வாணம் ஒன்று உண்டெனில் அதன் முன் நான் கடவுளாகி விடுவேன்… அப்படி இல்லை என்பதால் கடவுளாக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்….. கொள்ளுதல் எல்லாம் முயற்சி என்றாகிய பின்.. முயற்சிகளில் எல்லாம் என் ஆடைகள் திறந்தே கிடக்கின்றன…….

நண்பர்களற்ற நான் அவ்வப்போது என்னுடனே பேசிக் கொள்வதுண்டு…. என்னுடனே கோபப் படுவதும் உண்டு….. அந்த கோப நாட்களில் நான் வீதி வீதியாக சாலை சாலையாக ஒரு தூரம் போல நீண்டு கொண்டே நடப்பேன்…..மாயங்களின் நறுமணம் பெண்களின் வாசத்தை காட்டிக் கொடுத்து விடும்…. இழுபட்டு, இழுக்கப்பட்டு… இனி சொட்டு, இனிக்கும் சொட்டென….. புள்ளி கோடாகி கோடாகி போய் ஒரு கட்டத்தில் கலைந்த கோலமாகி என் கால் படும் பெண்களின் வாசலில்….. வண்ணமே இல்லாத என் உலகை வண்ணங்களால் நிரப்புவேன்….நிரம்புவேன்…….

அப்படி நீண்டு கிடந்த ஒரு வாசத்தின் நூல் பிடித்து பின் சென்ற ஒரு பின்னிரவு அதிகாலையில்….. ஒரு மெல்லிருட்டு பேய் போல எனது நடை அமைந்ததில் எனக்கு மிகுந்த சந்தோசம்… என்னை பின் தொடரும் பேய்களின் இரவை நான் கடன் வாங்கி வாங்கி சேமித்துக் கொண்டு அன்றும் நடந்தேன்…நடையினில் நளினம் கூடிக் கொண்டு இருப்பதை உணர்ந்தேன்…. நடந்தும் பார்த்தேன்… அது ஒரு கம்பீர நடை…. பால் மயக்கம் சார்ந்த குழைதல் நடை…காமத்தின் திறவு கோலின் இருக்கமென நடை தளர்ந்து கொண்டே வந்து நின்றது….. நிற்க நிற்க நின்றாலும்.. நின்றே நிற்கிறது நிற்பதும்…..

ஒரு நடுத்தர வீடு…. சுற்று சுவரெல்லாம் கொண்டு ஒரு தீவு போல மிதந்து கொண்டிருந்தது…. இரவும்.. வெளிச்சமும் பிணைந்து கிடக்கும்.. ஒரு வகை இருட்டுக்குள் ஒரு வெளிச்சமென என் கண்கள் ஊடுருவ…. சுவற்றை ஒட்டிய கொடியில் நான் ஆவலாய் தேடி வந்த பெண்களின் ஆடைகள் காய்ந்து கொண்டிருந்தன…..ஈர உடலோடு….இடுப்பின் அச்சோடு….

நான் சிரித்துக் கொண்டேன்… சிவந்து போனேன்…. அழுகை முட்டிக் கொண்டு வந்தது…. ஆத்திரம் கண்களைக் கட்டியது…..அத்தனையும் ஒரு நொடியில் மாறி ஒரு வித ஏதேன் தோட்டத்துக்குள், நான் நாசி விரிந்த காடுகளாய் ஆனேன்…. கைக்கு கிடைத்த ஒருத்தியின் உள்ளாடையை நுரையீரல் வீரிட்டு அழும் வரை நுகர்ந்தேன்.. நுகர, நுகர நுகர்தலின் ரீங்காரம் எனது செவிக்குள் இனிப்பாய் சொட்டியது…. பெண்களின் வாசத்தில் நான் சொர்க்கம் சமைக்கும் கடவுளின் கை விரல்களில் என் உடல் குலுங்கியது, ஒரு குட்டி சாத்தானாய்….. கிடைத்த உள்ளாடைகளை எனக்குள் பத்திரப் படுத்திக் கொண்டேன்…. பசி கொண்ட வெறி என் கண்களில், நாசியில் முகத்தில் படர, படர….. என் கண்கள், கீற்றின் வேர் தாண்டும்… விழியென, பார்வையாகி நேராக தெரிந்த சாளரத்துக்குள் பதிந்தது.. உள்ளே, ஒரு பெண் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தாள்….

நான் முகத்தில் கிடந்த உள்ளாடையை விலக்கிக் கொண்டு கண்களை தேய்க்காமலே பார்த்தேன்… ஆம்.. கண்கள் வெளிவர.. நாக்கு வெளியே தள்ள.. கயிறு கழுத்தை இறுக்கிக் கொண்டிருக்க, கால்கள் ஒன்றை ஒன்று உரசி… உயிர் போகும் வேதனைக்குள் மிதந்து கொண்டு இருந்தாள் ஒருத்தி …
எனக்கு சிரிக்கத் தோன்றியது…..இன்னும் லாவகமாக நின்று கொண்டேன்… அந்த இடமே ஒரு வகை அமானுஷ்யங்களால் கட்டமைக்கப் பட்டது போல அத்தனை அழகாய் இருந்தது…ஏதோ வந்து வந்து என் முன்னால் போய்க் கொண்டும்… வந்து கொண்டும்… கண் மூடி திறக்கும் போதெல்லாம் மாயங்களின் மௌனங்கள் எச்சில் துப்புவதை உணர்ந்தேன்…..

அவ்வளவு சீக்கிரம் யாரும் கண்டு விட முடியாத இடத்தில் நின்று கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தந்தது…. இனம் புரியாத, இடம் பொருள் ஏவல் கதைகளை அழித்துக் கொண்டது போல உள்ளூர ஒரு வகை குறுகுறுப்பு…….. ஆனால் தூக்கில் தொங்கும் பெண்ணின் கண்கள் என்னையே பார்த்தது…. கண்களில் ஒரு வித சிவப்பு வழிவதை என்னால் பார்க்க முடிந்தது… சிவப்பு வெளிச்ச பிரகாசத்தில் மரணப் பிரதேசம்.. சஞ்சலப் படுவதை உணர முடிந்தது….அவள் ஒரு தேவதையை போல தொங்கிக் கொண்டிருந்தாள்…. மரணங்களின் வாழ்வுதனை தேவதைகள் கொள்வதில்லை…. என்பது போல……வெகு அற்புதமாக நிகழ்ந்து கொண்டிருப்பதாக, மரணத்தை,….. நான் பார்த்துக் கொண்டே புன்னகைத்தேன்…..இதே போலதான் ஒரு நாள் என் அம்மா… தூக்கில் தொங்கினாள்….. அதைத் தொடர்ந்து ஒரு நாள் என் அக்காவும் தூக்கில் தொங்கினாள்…. பின் ஒரு நாள் என் பாட்டி கூட தூக்கில் தான் தொங்கினாள்….

அதன் நீட்சியாகத்தான் இவளும் தொங்குகிறாள்…. மரணம் அவளின் சுதந்திரம்.. அவள் அனுபவிக்கட்டும்….. என்று சிந்தித்த ஒரு துளியில் அவள் என்னைப் பார்த்து கண்களாலே அழைப்பது போல இருந்தது… அந்தப் பார்வையின் கீச்சிரல்……… அவள் கண்களில் மரணம் தாண்டி பயம் குடி கொண்டிருந்தது…. அவளின் மார்புகள் விடைத்து காம்புகள் ஆடையை விட்டு வெளியேறி என்னை குத்துவதாக நீண்டது…. எனக்கு இந்தக் காட்சி பிடிக்கவே இல்லை.. ஒரு மரணத்தைக் காண ஆசையாக நின்ற என்னை அவள் ஏமாற்றுகிறாள்.. என்று வந்த கோபத்தில் ஒரு கல்லை எடுத்து அந்த வீட்டின் முகப்பு சாளரத்தை அடித்து உடைத்தேன்….

மறுநாள்….

அதே இடம் .. அதே நேரம்….

நான் நின்றேன்…. கண்கள் கூச திரும்பி, நேற்று அவள் தொங்கிய அறையைப் பார்த்தேன்….வெறும் அறை திறந்த ஜன்னலோடு, நீண்டு கிடந்தது…. நீட்சியின் மறு பிரவேஷமாய்.. ஒரு தியானித்த அமைதியைக் கொண்ட ஆழ்கடல் போல, காணும் தூரம், அகலம் வரைக்கும் அமைதி….

“என்னவாகி இருப்பாள்….?….. செத்துருப்பாளோ……!”

யாரோ என் கழுத்தோரம் பெருமூச்சு விடுவது போல என் கற்பனைகள் விரியத் தொடங்கின… சில்லிட்ட இரவில் உடல் போர்த்தும் பனியென… ஒரு சூழல் என்னை எங்கோ அழைத்து செல்வது போல இருந்தாலும்… தேடிய மனதோடு .. கண்ணில் பட்ட காயத்தின் சுவடே இன்றி முகப்பு கண்ணாடி மீண்டும் புதியதாய் பளிச்சிட்டது…. இரவைப் பிரதிபலித்த நிஜம் போல…

சட்டென்று புரிந்து கொண்டு அவளின் அறையைப் பார்த்தேன்…

திடும்மென… அடித்த புயல் போல… பக்கவாட்டிலிருந்து என்னைப் பார்த்துக் கொண்டே வெளியே வந்தாள்……. அவள் எனக்காக காத்திருந்ததைப் போல தான் இருந்தது சூழல்… அல்லது என் கற்பனை.. அல்லது அவளின் நிஜம்…

ஜன்னலில் சாய்ந்து கொண்டு என்னையே பார்த்தாள்… சில்லென வீசிக் கொண்டே இருந்த காற்றை நான் சூடாக்கிக் கொள்ள தோன்றியது….. மஞ்சள் நிற நைட்டியில்… பூ பூவாய் பூத்திருந்தது போல இருந்தது உடல்வாகு… முகமதில் பட்ட சிவப்பு நிற ஜீரோ வோல்ட்ஸ்- ல் அவளின் நிறம் இன்னும் பிரகாசித்தது.. இளஞ்சிவப்பு உதடு சற்று கனத்திருந்தது…..செவ்வரிகளின் இடைவெளியில் ஒட்டியிருந்த ஈரத்தில்… கொஞ்சம் வெளிர் நிறம் கூடியது……..உதட்டில் இடது ஓரத்தில் ஒரு சிவப்பு மச்சம், அல்லது சிவப்பாய் தெரிந்த மச்சம்…… கன்னத்தில் கூட இரண்டு மச்சங்கள்… மென் சோகம் படரும் கண்கள்…. பளிச்சிட்ட மூக்குத்திக்கு அளவு எடுத்தாற் போல நாசி… பா வடிவ நெற்றியில் குங்குமம் கீற்றாக பளிச்சிட்டது…நேற்று அத்தனை பெரிதாக இருந்த மார்புகள் இன்று இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு இருந்தது…… போதாதற்கு குறுக்கே கட்டிய கைகளில் கொஞ்சம் மறைத்தும் வைத்திருந்தாள்….மறைக்க மறைக்க கிடைக்கும் நிழல் போல பதுங்கிய புலியின் காதுகளில் இருக்கட்டும் என இருந்த மிச்சத்தை மச்சம் என்ற எனக்கு அது மலை செதுக்கிட்ட பிரம்மனின் கைப் பிடி உச்சம் என்று உணர சற்று நேரம் பிடித்தது.. நேற்று நீண்ட காம்புகளின் நினைவுகளில்…

மை விழி பூசிய கருமைக்குள் கொஞ்சம் கலந்து விடத்தான் துடித்தது என்னோடு இருந்த பின்னிருட்டு…பார்க்க பார்க்க பரவச நிலைக்குள் போவதைத் தவிர வேறு ஒன்றும் என்னால் செய்ய முடியவில்லை…

சட்டென்று முணு முணுக்கத் தோன்றியது……. கட்டுப் படுத்திக் கொண்ட மன அசைவில் உதடு வரி விரிந்தது….”எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று, அது ஏதோ உன்னிடம் இருக்கிறது….”

அவள் புருவம் தூக்கி ஏதோ சமிக்ஜை செய்தாள்.. என்ன செய்தாலும் புரியாத எதுவும் இப்போதும் புரிந்தது போலதான்… நேராக கண்களைப் பார்த்தேன்……அவளும், விடாமல் பார்த்துக் கொண்டேயிருந்தாள், ஒரு யட்சியைப் போல.. அல்லது ஒரு தேவதையைப் போல… அளவெடுத்த உயரத்தில் சிலை போல.. அல்லது செத்தவள் மீண்டும் வந்து நின்று கொண்ட மரணம் போல…

வீட்டை நிறைத்த ஒரு ஜோதியாய் பிரகாசத்தில் நின்றவளை அணைக்கத் துடித்த மனதை தூர எறிந்து விட முடியாத உடலோடு சுவரோடு அணைந்து நின்றேன்…ஏதோ என் மீது வந்து விழுந்தது போல இருந்தது……. முகம் மறைத்த தாவணியை விலக்கிப் பார்த்தேன்…. அவன் ஜன்னலை அடைத்து விட்டிருந்தாள்…. என் மேல் படர்ந்து கிடந்த அவளின் தாவணியை நுகர்ந்து கொண்டே வீடு நோக்கி நடந்தேன், ஒரு போதி சுமந்த போதையாக……..

வீட்டில் நான் இயல்பாக இல்லை…. அந்த தாவணியைக் கட்டிக் கொண்டு தூங்கினேன்…. அந்த தாவணியை கயிறு போல கழுத்தில் கட்டிக் கொண்டு தூக்கில் தொங்குவது போல நடித்தேன்… அந்த தாவணியில் இனம் புரியாத ஒரு வகை வாசம்.. வந்தது.. அது அவளின் வாசம்தான்.. ஒவ்வொரு பெண்ணும் ஒரு வாசம் உண்டு… என் அறையில்..என் நிர்வாண உடலுக்கு போர்வையான அவளின் தாவணியை… முடிந்த அளவுக்கு வாய்க்குள் திணித்துக் கொண்டே இருந்தேன்….. நிறம் மாறிய மனதுக்குள்.. இனம் புரியாத காற்று வீசியது…….சுருட்டி சுருட்டி அந்த தாவணி முழுக்க என் வாய்க்குள் போய் விட… குமட்டிக் கொண்டு வந்தது நிஜம்..வாந்தி எடுத்த பின் அடங்கியதாக பட்ட நிஜத்தில் தூக்கம் அவிழாத ஒரு வகை வெறுப்பு என் அறையெங்கும் ஒரு நிர்வாணப் பிசாசைப் போல பரவியது…….. எனக்கு அவளை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் போல இம்சித்தது…… அடுத்த இரவை கட்டிப் பிடித்து இழுத்து வந்து ஓடிச் சென்றேன்…….

அடுத்த நாள்

எனக்காகவே காத்திருப்பது போல நின்றிருந்தாள்… சிவப்பு நிற நைட்டியில் ஒரு சிவந்த பேயைப் போல இருந்தது பார்வை…. ஊசி குத்தும் கண்களின் பார்வையில் என் கண்களுக்குள்ள இடைவெளியில் இருக்கும் காந்தம் முழுக்க இருளாக மாற்றிக் கொண்ட ஒரு புன்னகையோ ஒரு அழுகையோ எதுவுமற்ற சலனமற்ற பார்வையில் பூஜித்திருந்தாள் …..அதே இடத்தில் லாவகமாக நின்று கொண்டேன்… எங்கள் பார்வைகளில் ஒரு வித நெடி பரவுவதை உணர முடிந்தது….. உணர உணர ஆழமாய் ஒரு கிணறு, தன்னை தானே வெட்டிக் கொண்டு அகன்று கொண்டே இருந்தது…எனது வியர்வைகளில் ஒரு வித குறு குறுப்பை உணர்ந்தேன்…. இரவுக்கு பிடித்த சூடு போல கொப்பளித்துக் கொண்டிருந்தது எனது உள்ளமும்…. கழுத்தோரம் விழுந்த இலை ஒன்றில் தள்ளாட்ட பகலின் மிச்சம் இருக்கும் போல, நுகர்ந்து பார்த்தேன்..அது அவளின் வாசம் போல இல்லை.. அவளின் வாசம் என்னை அந்த இடத்தில் ஒரு ஞானியைப் போல உணர வைத்தது… என் கட்டுப் பாட்டுக்குள் இருக்கும் சுற்றம் போல மிடுக்காக்கி.. குறுக வைத்தது.. நான் ஒரு பிச்சைகாரனைப் போல முழுப் பசியோடு ஏங்கினேன்.. அவள் தவம் தரும் கடவுளாகிப் போனாள்…அல்லது கடவுள் தரும் தவமாகிப் போனாள்…

இன்று தான் நன்றாக கவனித்துப் பார்த்தேன்….. வர்ணிக்க ஒன்று குறைகிறதே என்று….ஆம். அவளுக்கு புருவம் இல்லை…..ஒருவேளை குறைவாக இருக்கிறதோ என்னவோ…! பா வடிவ நெற்றியில் சுருண்டு விழும்… முடியை அவள் ஒதுக்குவதில்லை… ஒதுக்கினாலும்.. அது அடங்குவதில்லை..அடங்கினாலும் அதிலிருந்து என் கிறக்கம் இறங்குவதில்லை… இறங்க இறங்க காட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தது என் ….பார்வை…. பார்வையில் கலவி கொள்ள என்னால் மட்டுமே முடியும் என்பது போல ஒரு இறுமாப்பு.. நான் அவளின் ஆடைகளை உரியத் தொடங்கினேன்….. அவள் சலனமற்று என்னை அழகியலாக்கிக் கொண்டிருந்தாள்…… அவளின் கண்களில் வெறி கொண்ட மோகினியின் பசியை நான் கண்டேன்…. கண்டதைக் கொண்டாடித் தீர்க்க தேடி…. ஒரு காட்டு மிருகம் போல “நான் உள்ளே வரவா” என்று ஜாடையில் கேட்டேன்…. அவள் முறைத்த படியே சட்டென சாளரத்தை அடித்து அடைத்தாள்…. அதற்கு முன் என் மேல் வி ழு ந் தி ரு ந் த து அவளின் உள்ளாடை…

என் அறையில் நான் ஒரு இறகாய் மிதக்கத் தொடங்கினேன்.. என் சுவரெல்லாம் என் காலடிகள் இருந்தன… என் வானத்தை பூமிக்குள் போட்டு புதைத்து மிதித்து அதன் மேல் நின்று ஒற்றைக் காலில் ஆடிப் பார்த்தேன்.. நீலவண்ண ஆடையில் படர்ந்திருந்த உப்புக் கரைசலின் மிச்சமென.. சில அடையாளங்களோடு, நான் பிசாசாக வேண்டும் என்று கத்திக் கொண்டே நுகர்ந்தேன்….அவளின் உள்ளாடை அணிந்து கொண்டு நிலைக்கண்ணாடி முன் நின்று ரசித்தேன்… நான் அவளாக மாறிப் போனது போல ஒரு வாடை காற்று என் அறையை சுற்றி சுழற்றியது….. எனக்கு அழ வேண்டும் போல தோன்றியது… கத்தி கத்தி அழுதேன்.. என் குரல் எனக்கே கேட்கவில்லை…. கேட்காத தூரத்தில் ஒரு மௌனம், மொழியாகி என் நிஐக் கண்ணாடி வழியாக ஒரு நிர்வாணக் கவிதை வரைந்ததாக ஒரு உள்ளுணர்வுக்குள் முயங்கி மயங்கி தயங்கி சரிந்தேன்… என் தலையில் பாறாங்கல் வைத்தது போல அவளின் நீண்ட பார்வையும் நீண்ட காம்புகளும் என்னை மாற்றி மாற்றி சுமந்தன…. நான் ஒரு அடிமையைப் போல கட்டிலுக்குள் ஒளிந்து கொண்டேன்…. நான் அணிந்திருந்த அவளின் உள்ளாடை மெல்ல கிழியத் தொடங்கியது, கற்பனை என்றால் அப்படியே…….

அடுத்த நாள்

கொஞ்சம் முன்னமே சென்று விட்டேன்…. என் கண்கள் பனிக்க கூனி குறுகி… சுவரோரம் பதுங்கிக் கொண்டு நின்றேன்…. அவளைக் காணவில்லை… தலைக்குள் வண்டு புகுந்து கொண்ட நொடிகளின் ஆடைகளை உருவிக் கொண்டே திட்டினேன்…. கெட்ட வார்த்தைகள் என்று சொல்லப்படும் வார்த்தைகளின் ராகத்தில் ஒரு முணு முணுப்பு…. ஆவேசமாக என்னை நிரப்பியது…

“ஒரு வேளை இவள் பேயா…. யட்சியின் மறு உருவமா… அன்று ஒரு வேளை செத்துதான் போனாலோ….? அப்படி என்றால் இந்த நாட்களில் என் முன்னால் வருவது ஆவியா….?!”- மனம் பேதலிக்கத் தொடங்கிய நொடிகளில் சட்டென்று ஜன்னலில் தோன்றினாள்… அவள் அணிந்திருந்த ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்றி என் மீது எறிந்தாள்… பின், பார்க்க பார்க்க ஒன்றுமே இல்லாத நிர்வாண உடலில் ஜோதியும்.. சாந்தமும் வீசின….மறுகணமே ஒவ்வொன்றாய் சேர்ந்து கொண்ட உடலில் துளி ஆடை இன்றி நிற்பதை உள் வாங்கிக் கொண்டே அவளின் ஆடைகளில் முகம் புதைத்தேன்…….இப்போது காந்தமும்… பந்தமும் வீசின. தீவிர வாசத்துக்குள் ஒரு காற்றில்லா துடிப்பை என் சுவாசம் கொடுத்துக் கொண்டிருந்தது….

மஞ்சள் நிறத்தில் பல்லவன் சிற்பத்தைப் போல… தோன்றினாள்….என்னைப் பார்த்துக் கொண்டே நின்றாள்…… வர்ணிக்க வார்த்தை இல்லை…. வாரி அணைக்க நான் போதவில்லை…அத்தனை அழகும் கொட்டிக் கிடக்கும் அவளின் மேடு பள்ள வளைவுகளில்.. நான் ஒரு காற்றாகி சுழன்றேன்…. பெரு மூச்சு, எங்கும் பீறிட…நான் ஒரு குழைதலின் உறுமலோடு… கண்களில் தீயைக் கக்கினேன்…. அவளுக்கும் எனக்குமான இடைவெளியில் நியூட்ரினோக்கள் கடவுளாக மிதந்து கொண்டிருப்பதைக் காண முடிந்தது.. நான் கெஞ்சி கெஞ்சி அவளிடம் நெருங்கத் துடித்தேன். அவளின் ஆடைகளால் நான் ஒரு வெறி கொண்ட ஜந்துவைப்போல.. வெற்றிடமெல்லாம் முகம் வாசித்தேன்….

அவள், அவளின் புடவை கொண்டு கழுத்தோடு சுருக்கு போட்டுக் கொண்டே என்னைப் பார்த்தாள்….. நான் எவ்வித எதிர்வினையும் அற்று அவளின் ஆடைகளை அணைத்தபடியே அவளின் உடலில் கண்களால் மேய்ந்து கொண்டிருந்தேன்……. அவளின் மார்புக் காம்புகள் மெல்ல நீளத் தொடங்கின…. அவளின் சிவந்த கால்கள் ஒன்றோடு ஒன்று உரச உரச எனக்குள் எங்கும் தீப் பிடித்துக் கொண்ட மன நிலைக்குள் ஒரு வித பேயாட்டத்தில் நான் துவளத் தொடங்கினேன்.. நிர்வாண கடவுளென அவள் தூக்கில் தொங்கி, துடித்துக்கொண்டே என்னைப் பார்த்தாள்…..அவளின் பார்வையில்… ஒரு மெல்லிய நீரோடை… கடந்து விட்ட தூரத்தில் நின்று நிதானமாக ஆர்ப்பரிப்பது போல இருந்தது.. சலனமற்ற காடு, எரிந்து முடிவது போல எழும்பி பறந்த சிறு பறவையின் சாயலோடு இருந்தது… பார்க்க பார்க்க பார்க்க பார்க்க… நான் எனக்குள் ஆழமாய் ஏங்கினேன்…… ஏங்க ஏங்க ஒரு பேரலை பிரவாகமாய் மேல் எழும்பிக் கொட்டத் துவங்குகையில் அவளின் துடிப்பு அடங்கி இருந்தது… சிவப்பு விளக்கின் வெளிச்சத்தில் பொன்னிற பூக்களின் மொத்தமாய் ஒரு காந்த கவிதையாக தொங்கி துவண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தவளின் உயிர் அப்போது அந்த நிர்வாண உடலில் இருந்திருக்காது… உணர்வு வந்து உயிர் வந்தது போல எல்லாம் புரிந்த மனநிலையில் நான் செய்வதறியாமல் நின்றேன்…. மயிரடர்ந்த அல்குலில் முகம் புதைத்து சாக வேண்டும் போல இருந்தது….அத ஒரு தீரா வனமாய் புதைந்து கொண்டே இருப்பதாக நம்பினேன்…

“பாவி செத்து போயிட்டாளே….!”-

நான் ஆடையை சரி செய்து கொண்டு … இயலாமையின் உச்சத்தில்…. என் கைகளையே கடித்துக் கொண்டு ஒரு கல்லை எடுத்து என் தலையில் அடித்துக் கொண்டே வீடு வந்தேன்…வழியெங்கும் நிரம்பி வழிந்த இரவுக்குள் அவளின் நிர்வாண தேகம்… பாதையாக மிதி பட்டுக் கொண்டேயிருந்தது….நான் ஒரு நாயைப் போல புரண்டு, புரண்டு உருண்டு… கால்களை நீட்டி நிமிர்த்தி என் தலையை மண்ணோடு ஓங்கி ஓங்கி அடித்தபடியே சிரித்தேன்… சிரிப்புக்கும் அழுகைக்கும் இடைவெளி இல்லாத பேரின்பம் அது.

அந்த பிறகு என் வீட்டில் இருந்த அத்தனை உள்ளாடைகளையும் தீயில் போட்டு எரித்தேன்…….. ஒரு பொம்மை வாங்கி வந்து அவளின் ஆடையை அணிவித்து விட்டு தினமும் அதனுடன் பேசத் தொடங்கினேன்….

அவளின் மரணம்… ஒரு பேரதிர்வாய் எனக்குள் இப்போதும் சொட்டிக் கொண்டே இருக்கிறது, நிர்வாணங்களின் மொத்தமாய்….நான் இது வரை திருடி வந்த யார் யாரோவுடைய உள்ளாடைகளின் சத்தமாய்…… ஒன்றுமே இல்லாத தூரத்தில் நான் வெளிகளில் சுற்றுக் கொண்டிருக்கும் ஒரு ஆன்மாவை விட்டு வெகு நாட்களானது போல ஒரு கயிறு திரிந்து கொண்டேயிருந்தது…. பாழடைந்த மனதுக்குள் ஒரு பாம்பு… கண்ணீர் விட்டபடியே சாக தவம் இருக்க, சுவாச காற்றினில் அவள் வாசம் மட்டும் தீரவேயில்லை….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *