நிதர்சனம்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 1, 2022
பார்வையிட்டோர்: 2,465 
 
 

சுந்தரேசன், கண்ணாடி பேழையில் கிடத்தப்பட்டிருந்தார்.

பாட்டி…நான் ஒண்ணு பண்றேன். தாத்தாவோட friends யாரு என்னன்னு நமக்கு தெரியாது. அவரோட WhatsApp status, Facebook account ல போய்.. Death news update பண்ணிடறேன். ப்ரீத்தி சொல்வதை கேட்டு காமாட்சி தலை ஆட்டினாள் சோகமே வடிவாக.

அந்த status பார்த்துவிட்டுத் தான், நானும் சென்றேன் என் நண்பனின் உடலை பார்க்க.

பேத்திகளும், பேரன்களும், ஒரே மகனும், மகளும், மருமகனும், மருமகளும் மாறி மாறி அழுதவண்ணம் இருந்தனர். நண்பனின் மனைவி கண்ணாடி பேழை அருகிலேயே கிடந்தாள். உறவினர்களின் பாசம் கண்டு, சுந்தரேணனை எண்ணி மனதில் மகிழ்ந்தேன்.

சுந்தரேசன் மறைவுக்கு முன்னால் கூட பலமுறை அவன் வீட்டுக்கு சென்றிருக்கிறேன். பெரும்பாலும் என்னை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஒரு hi, ஒரு smile அவ்வளவுதான்.

அவரவர் கையடக்க சவப்பெட்டியில் மூழ்கி இருப்பார்கள். சிலர் லேப்டாப்பில்.. Work from home ஆம். கொரோனாவிற்கு பிறகு இந்த வார்த்தையை உபயோகிக்காத வீடில்லை. சுந்தரேசனுக்கே கூட சொல்லும்படியான அளவுக்கு மரியாதை இருந்ததில்லை என்று அவனே வருத்தப் பட்டிருக்கிறான்.

ஆனால் இன்று நான் காணும் காட்சி? எது நிஜம்.. ஒருவர் இருக்கும் வரை அருமை தெரியாது. இறக்கும் போதுதான் உணர்வார்கள் என்று சொல்வார்களே…. அப்படியோ…

ஆனால் இதுவும் நிஜமில்லை என்று அப்போது தான் தெரிந்தது. எப்போது?

சுந்தரேசன் இறந்த மூன்று நாட்களுக்கு பிறகு.. மிகவும் சோகமாக இருந்தார்களே, ஆறுதல் கூறலாமென அவன் வீட்டிற்கு சென்றேன்.

என்ன ஆச்சர்யம்.. லேப்டாப்பில் வேலை ஓடிக்கொண்டிருந்தது. மொபைலை நோண்டிக் கொண்டிருந்தார்கள். உள்ளே உறவினர் கும்பல் ஒன்று உரக்கப்பேசி சிரிக்கும் சத்தம்.

கண்ணாடி பேழைக்குள் இருந்த நண்பன், கண்ணாடி படத்துக்குள் இருந்தான். அன்று ஏராளமான மாலைகளுடன். இன்று அதுவுமின்றி.

அழுதுகொண்டே இருக்கவேண்டும் என்று இல்லை என்றாலும்.. இவ்வளவு சீக்கிரம் எப்படி சகஜ நிலை.. ஜீரணிக்க சற்று கடினமாக இருந்தது என்பதுதான் உண்மை.

எது நடந்தாலும் life has to go on என்று சொல்லிவிடுவார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *