கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 26, 2023
பார்வையிட்டோர்: 2,128 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும்…’ 

மார்கழிக் குளிர் இருளின் நிசப்தத்தில் அது நல்லாகக் கேட்கிறது. செல்லம்மா ஆவலோடு கேட் டுக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு நிச்சயமாகிறது. அவர்தான் படிக்கிறார். ‘வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்…’

நல்லாகக் கேட்கிறது. முத்துவுக்கும் கேட்கும். இனி அவன் வந்துவிடுவான். செல்லம்மாவின் உட லில் ஒரு துடிப்புப் பற்றுகிறது. அவள் எட்டிப் பார்க்கிறாள். முன்னாலுள்ள சீமால் வேலிக்குப் பின்னாலுள்ள வேலியில் கிடக்கும் பொட்டால்தான் அவன் வருவான். ‘வீதிவாய்க் கேட்டலுமே திவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து…’ 

வேலிப்பக்கம் ஒரே இருளாய்க் கிடக்கிற ஐந்துமணிகூட ஆகியிருக்காது. அதோடு மழை மூடம். அந்த இருட்டில் முத்து முன்னால் நின்றால் கூடத் தெரியாது. அவனுடைய கன்னங்கரேர் என்ற உடம்புக்கும் இருட்டுக்கும் எந்தவித வித்தியாசமும் இருக்காது. செல்லம்மா லாந்தரை எடுக்க நடுவறைக் குள் போகிறாள். அவளைக் கேட்காமலேயே அவளின் காது கோயிலிருந்து வரும் ஓசையைக் கிரகிக்கிறது. அவளுக்கு அவை தளர் பாடம். 

‘ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே ஈதோ எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்.’ சேமக் கல் ஓசையோடு சங்கூதல் தொடர்கிறது. 

லாந்தரை எடுத்துக்கொண்டு அடுத்தறைக்குள் எட்டிப்பார்க்கிறாள். பெரியபெட்டை, சின்னப் பெட்டை எல்லோருக்கும் நல்ல நித்திரை. ஓசைப் படாமல் கதவைப் பூட்டிக் கொண்டு திரும்புகிறாள். 

பாடலுக்கு உரை சொல்லப்படுகிறது. அது அவருடைய குரல் அல்ல. பண்டிதர் நல்லதம்பி யரின் குரல். திடீரென்று அவளின் கண்களை ஏதோ அமத்திப் பொத்துகிறது. 

செல்லம்மா ஒருகணம் பயந்துபோகிறாள்.ஆனால் ஒருகணந்தான். அடுத்தகணம் “தூப்” பென்று மெல்லத் துப்பிக்கொண்டு தன்னைச் சமாளித்துக் கொள்கிறாள். கண்களை மறைத்த கைகளை இழுத்து விலக்கிக்கொண்டு திரும்பியபோது திரும்பவும் உட லில் பழைய துடிப்புக் கூடுகிறது. 

“பயந்திற்றியா?” 

லாம்பு வெளிச்சத்தில் முத்துவின் வெள்ளைப் பற்கள் பளிச்சிடுகின்றன. 

“தெறிச்சிருவ இளிக்கிறியா பேய்மாதிரி அமத்தியிற்று?” என்று கோபிப்பவள்போல் பாவனை காட்டிக் கொண்டு லாந்தர் இருந்தெடுத்த நடுவறைக்குள் போகமுயல்கிறாள் செல்லம்மா. முத்துவை வேண்டுமென்றே அப்படித் திட்டுவது அவளுக்கு சுவைத்தது. 

நடுவறைக் கதவடியில் வைத்து முத்து அவளைப் பிடித்துக்கொள்கிறான். உள்ளே அவனுக்குப் பழக்கமான அந்த மெத்தைபோட்ட கட்டிலில் இரண்டு தலையணைகள் அடுக்கிவைத்த மாதிரியே கிடக்கின்றன. இரவுப் படுக்கையின் அடையாளமாக அழுத்தம் ஒன்றும் அவ்வளவு இருக்கவில்லை. முத்துவால் செல்லம்மாவின் அப்போதைய நிலையை உணரமுடிகிறது. அவருக்குத் திருவெம்பாவை விரதம்! முத்து தன் பிடியை இறுக்குகிறான். 

“பனையில் ஏர்ற பழக்கம் போகாது, விடு விளக்க வைக்க”

செல்லம்மா வேண்டுமென்றே அவனைத் திட்டு கிறாள். அப்படிப் பேசும்போதே அவளுக்குத் தலை யில் கிறுக்கம் ஏற்படுவதுபோல் ஆரம்பித்து விடுகிறது. ஆனால் அப்படி ஒரு பேச்சைத்தான் அவரோடு – அவள் புருஷன் ஆறுமுகத்தோடு – அவளால் பேசமுடிவதில்லை. பேசுவதற்கு அவர் என்றுமே விட்டுவைத்ததில்லை. அவரில் அவளுக்குக் கொள்ளை விருப்பம். அவரிடம் இருக்கும் நல்ல குணங்களை யாரிடமுமே அவள் இன்னும் ம் காணவில்லை. ஆனால் அதனால் தானோ என்னவோ அவரிடம் ஏதோ குறை இருப்பதுபோல் செல்லம்மாவுக்கு இப்போ படத் தொடங்கியிருக்கிறது. அவரில் அவளுக்கு அன்பு உண்டு, அருகதை உண்டு. அவருக்காக வேண்டி அவள் எதையும் செய்யத் தயார். ஆனால் முத்து வில் அவளுக்கு ஏற்படும் இப்படியான ஒரு பைத் திய வேகத்தோடுவரும் வெறிகலந்த ஆசைமட்டும் அவர்மேல் அவளுக்கு ஏற்படுவதில்லை.ஏற்பட அவர் இடம்வைப்பதில்லை. 

பத்து நாட்களுக்கு முன்புதான் முத்துவுடன் செல்லம்மா முதல்முதலாகக் கதைத்தாள். முத்து கள்ளிறக்குபவன், நாடான். முன்வளவில் பனை சீவுபவன். ஆனால் அன்று அவனோடு கதைத்தற்குப் பின் என்றுமே இல்லாதவகையில் உடலில் ஏதோ ஒன்று முதல்முதலாகக் கிளறப்பட்டதைச் செல்லம் வாவால் உணரமுடிந்தது. அதற்குப் பின் ஒரு தடு மாற்ற நிலை. காலையில் எழுந்து குளிப்பது, படத் துக்குப் பூசைசெய்து கும்பிடுவது, அவர் பள்ளிக் கூடத்துக்குப் போகமுன் சைவச்சாப்பாடு ஆக்கு வது, பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு விடுவது என்று பதினாறு வருடங்களாகப் போன வாழ்க்கையில் – கல்யாணங்கட்டிப் பதினாறு வருடங்களும் ஆகி விட்டதே, பெரிய கமலத்துக்குப் பதினான்கு, சின்ன யோகத்துக்குப் பன்னிரெண்டு- பதினாறு வருடங்கள் நிதானமாகப் போன வாழ்க்கையில் திடீரென்று ரு சலனம் ஏற்படத்தொடங்கிற்று.ஆரம்பத்தில் வைரவர்கலையாக்கும் என்றுதான் அவள் நினைத் தாள். அப்படியும் அவளுக்கு வருவதுண்டு. பக்கத் தில் இப்போ அவர் பாடிக்கொண்டிருக்கும் சிவன் கோவிலில் திருவிழா ஏற்படும் காலங்களில் அப்படி அவளுக்குக் கலை வருவது வழக்கம். அப்படி அப்படி ஒரு விறுவிறுப்பு முத்துவைக் கண்டபின் அவளின் மன நிலையில் விழுந்துவிட்டிருந்தது. ஆனால் அந்த விறு விறுப்போடு அது நின்றுவிடவில்லை. அதற்குப்பின் அவளுக்கு ஏதோவெல்லாம் கதைக்கவேண்டும்போல் இருந்தது. ஏதோவெல்லாம் செய்யவேண்டும்போல் இருந்தது. மூன்றாம்நாள் அவர் பள்ளிக்கூடம் போன பின் விறகெடுக்கப்போகும் சாட்டில் முத்துவரும் நேரம்பார்த்து முன்வளவுக்கு அவள் போய்விட் டாள்! அவளுக்கே தெரியாமல் நடந்த நிகழ்ச்சி போல் அது பின்புபட்டது. கலையில் வரும் ஒரு மயக்கவேகம்! அதே வேகத்தில்தான் ஐந்தாம் நாள் முத்துவின் யோசனைப்படி திருவெம்பாவைக்காலம் தொடங்கியபின் விடியக்காலையில் அவர் கோயிலுக் குப் போனபின் அவனை வரவேற்கும் வரவேற்கும் துணிவுகூட அவளுக்கு வந்திற்று. அதற்குப்பின்தான் அவரின் குறைகள் அவளுக்குத் தெரிய ஆரம்பித்தன. அப் படிச் செய்யக்கூடிய சக்தி அவளிடங்கூட இருந்திருக்கிறது என்பதை நினைக்க அவளுக்கே பயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்திற்று. ஆனால் அவர் கொடுக்காதவற்றோடு ஒப்பிடும்போது அவற்றைத் தாங்கிக்கொள்ள அவளால் முடிந்தது. அவர் மிகமிக நல்லவர். மிகமிகக் கடவுள் பக்தி. ஆனால் அது தான் எப்படியோ இப்போ அவரின் குறையாகவும் பட்டது. பச்சையாக அவரிடம் எதுவுமே இல்லை. கழுவித் துடைத்து பூசிக்கீசி மறைத்து மரியாதை பார்த்துத்தான் அவர் எதையும் கொடுப்பார். முன்பு அவை எவையும் குறையாகப்பட்டதில்லை. ஆனால் இப்போதான் அவளுக்கு வித்தியாசம் தெரி கிறது. அதோடு அவருக்கு முன்னால் அவளின் நிலை இரந்து வாங்கும் ஒரு பிச்சைக்கார நிலையேதான். கொடுத்துவாங்கும் ஒரு சமத்துவ வியாபாரம் ருப்பதில்லை. விளக்கு ஒருநாளும் எரிவதில்லை. களைந்து எதுவும் நடப்பதில்லை. பச்சையான பேச்சு. ப்படி ஒரு தலைக்கிறுக்கம் எதுவும் இல்லை. 

செல்லம்மாவுக்கு முத்துவில் பிறந்த ஆசைவேகம் பிய்த்துக்கொண்டு ஓடுகிறது. ‘விடு மூதேசி விளக் கைவைக்க!” என்று திரும்பவும் கோபித்தபாணியில் பேசுகிறாள். 

பிடியைத் தளர்த்தி, அறைக்குள் கட்டிலுக்கெதிரே இருந்த மேசையில் லாந்தரை வைப்பதற் குச் செல்லம்மாவை விட்டுவிட்டுப் பின்னால் வந்து முட்டியும் முட்டாமலும் நிற்கிறான் முத்து. கோயி லில் இருந்துவரும் குரல் கேட்டுக்கொண்டே இருக் கி றது. தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத் துள் ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்.’ டிங்டிங், பும்பூம். நேரம் எவ்வளவோ இருக்கிற தென்ற நிதானத்தால் செல்லம்மாவுக்குத் தைரியம் ஏற்படுகிறது. தொடர்ந்து லாந்தரைத் தொட்டுக் கொண்டு ஏதோ செய்பவள்போலவே அவள் நிற்கி றாள். வெறும் பாவனை. வியாபாரத்தில் அவளுக் குரிய பேரம் பேசும் உரிமை, அவரோடு அவரோடு அனுப விக்காத ஒன்று. 

”அம்மாவுக்குக் கோபமாக்கும்?” 

அவள் பேசவில்லை. லாந்தரில் இன்னும் ஏதோ வேலையிருக்கிறது. 

முத்து ஒவ்வொன்றாக உடைகளைக் களைகிறான். அவனது கைகளிலும் ஒரு துடிப்பு நடராசர் கடையில் கள்ளுக்குடிக்கவரும் ஒவ்வொருவரும் செல்லம்மாவைப்பற்றிப் புகழ்ந்திருக்கிறார்கள். ஆறுமுக மாஸ்றற்ற பெண்சாதி ஒரு தங்கப்பவுண் ‘கடவுள் பக்தியான மனுஷி’ முத்துவுக்கு உலகத்தையே வென்ற ஒரு திளைப்பு நெஞ்சை நிரப்புகிறது. சமத்துவம் பெற்ற களிப்பு வெறி. தாவணி, சேலை, உட்சட்டை, பாவாடை.. 

பதினாறு வருடவாழ்க்கையில் அப்படி விளக்கு வெளிச்சத்தில் ஒவ்வொன்றாக விழுவதை அந்த ஆறே ஆறு நாட்களாகத்தான் செல்லம்மா காண்கிறாள். முத்துவின் முழு உடலும் பச்சையாக முட்டுவதை அவளால் உணரமுடிகிறது. அடுத்தகணம் நேராகத் திரும்பி அவனை ஒரே அணைப்பாக அணைத்துக்கொள்கிறாள். 

“முத்து, உன்னில்தான் எனக்கு ஆசை” 

அவனுக்கு ஒரு வெற்றிப் பெருமிதம்.ஆனால் இன்னும் அதை விளக்கவேண்டும்போல் படாமலுமில்லை. “அப்ப அவரில்?” 

செல்லம்மாவுக்கு கோயிலிருந்து வரும் அவர் குரல் கேட்கிறது. ‘கண்ணைத் துயின்றவமே காலத்தைப்போக்காதே விண்ணுக்கொரு மருந்தை, வேத விழுப்பொருளை…’

”அவரில எனக்கு அன்புதான். அவர் செத்தால் நானும் செத்திருவன்” அவள் சொல்கிறாள். ஏதோ குழந்தைப்பிள்ளையைத் தடவி விடுவது போல் அவரைத் தடவி விடவேண்டும் என்ற ஓர் உணர்ச்சி அவள் மனதில் எழுகிறது. ‘அவரில் எனக்கு உயிர். ஆனா உன்னிலதான் எனக்கு ஆசை.’ 

முத்துவுக்கு அவள் என்ன கருதுகிறாள் என்று பூரணமாக விளங்கவில்லை. ஓரளவுக்குத்தான் விளங் கிற்று. ஆனால் பேரம் பேசும் உரிமைமட்டும் இப் போ தன்னுடையது என்பதைமட்டும் அவனால் முற்றாக உணரமுடிகிறது. அதோடு அவரைப்பற்றி இன்னமும் அப்படிச் சொல்கிறாளே என்ற ஒரு மெல்லிய கசப்பும் இல்லாமலில்லை. அதன் காரணமாய்த் தன் முக்கியத்துவத்தின் தன்மையை முற் றாக அறிந்து விட வேண்டும் என்ற துடிப்பு இன்னுங் கூடுகிறது. அவளை அப்படியே தூக்கிக் கொண்டு போய் கட்டிலில் வளர்த்திவிட்டு கொஞ்சமும் கவ லைப் படாதவன் போல் எட்டிப்போய் தூரத்தில் நிற்கிறான்.”நான்மாட்டன், அவரட்டான் போ” 

செல்லம்மா படுக்கையில் கிடந்தபடியே அவன் பக்கம் பார்வையைத் திருப்புகிறாள். வாழ்க்கையில்  முதன்முதலாக நிதர்சனமாக அப்படி ஒரு காட்சி. சென்ற ஐந்துநாட்கள்கூடக் காணாத ஒரு பரிமாணம். கன்னங் கரேரென்ற நிறம். கறுப்பு. கறுப்பு…

அவரைப்போல் அவன் தொகதொகவென்று கொழுப்பாய் இருக்கவில்லை. மெல்லிய உடம்புதான். ஆனால் அத்தனையும் ஒரு வேகத்தை அடைத்துப் பிடிக்கும் ஒரு இறுக்கத்தோடு அமைந்திருக்கிறது. கறுப்பு, கறுப்பு… 

பார்வை மெல்லக் கீழே இறங்குகிறது. அதோடு செல்லம்மாவின் தலையில் ஒரு கிறுகிறுப்பும்கூடத் தொடங்குகிறது. அவளால் அதைத் தடுக்க முடியாமல் இருக்கிறது. வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டே கிடக்கிறாள். தலையில் அந்தக் கிறுகிறுப்பு விறுவிறென்று ஏறுகிறது. 

பக்கத்துச் சிவன்கோயில்….. 

மூலஸ்தானத்தில் இருபெரும் தூண்களுக்கிடை தொங்கிக்கொண்டிருக்கும் பென்னம்பெரிய தூண்டாமணி விளக்கின் பின்னணியில் எண்ணெயின் வழுவழுப்போடு கன்னங்கரேரென்று எழுந்து நிற்கிறது லிங்கம்…ஐயர் கற்பூர விளக்கைக் காட்டுகிறார்…சிவப்புத் தீபம் மேலே செல்கிறது. மேலே செல்கிறது, லிங்கத்தின் நுனிக்குச் செல்கிறது. 

அரோகரா! அரோகரா! சுற்றிநிற்பவர்கள் கத்துகிறார்கள், கத்துகிறார்கள் 

செல்லம்மாவுக்குக் கோயிலில் கலைவரும் காட்சி நினைவுக்கு வருகிறது. உடலில் ஒரு பயங்கரவேகம். அரோகரா என்ற ஓசைப் பெருக்கத்துக்கு ஏற்ப உள்ளே ஏதோ ஒன்று பெருகிறது. 

எண்ணெயின் வழுவழுப்போடு கன்னங்கரேர் என்று எழுந்து நிற்கிறது லிங்கம்… சிவப்புத் தீபம் மேலே செல்கிறது, மேலே செல்கிறது. லிங்கத்தின் நுனிக்குச் செல்கிறது. 

செல்லம்மா கட்டிலைவிட்டு மூசிக்கொண்டு பாய்கிறாள். முத்துவைக் கட்டிப்பிடித்து இறுக அணைத்த வண்ணம் கட்டிலில் சாய்த்து அமத்துகிறாள். முத்துவின் அணைப்பு அவளின் வேகத்தைக் கூட்டுகிறது. உடல்களின் பிணைப்போடு வாய்க்குள் புகுந்த முத்துவின் நாக்கு எங்கோபோய்த் தொடுகிறது, எங்கோ போய்த் தொடுகிறது.. முதுகிலிருந்து ஆரம்பித்து எலும்பு நீட்டுக்கு ஓடிக் கீழே கீழே வெளியே வெளியே எங்கோ எங்கோ கீழே கீழே எங்கோ எங்கோ… 

செல்லம்மா சோர்ந்துபோகிறாள். அவளின் பிடி தளர்கிறது. 

சிறிது நேரத்துக்குப் பின் முத்து எழுகிறான். பிடிதளர்ந்து மட்டமல்லாக்காய்ச் சாய்ந்த செல்லம்மாவின் தோற்றம் அவனைப் பிரமிக்க வைக்கிறது. உடலில் ஒவ்வொரு மயிர்க்காலிலும் துளிர்த்து மினுங்கிய வியர்வை ஒளியோடு போட்டிபோட்டுப் பூரித்துப் பிரகாசித்த அவளின் முகம் அவனைப் புல்லரிக்க வைக்கிறது. எங்கோ பார்த்த தோற்றம். கோயில் சாத்துப்படி ஸ்தான மூலையில் தங்கத்தால் செய்து நிற்கும் அம்மன் சிலையின் அருள் செறிந்த தோற்றம்! ஆறுமுக மாஸ்றற்ற பெண் சாதி தங்கப்பவுண் என்று ஊரார் சொன்னது அவனுக்கு நினைவு வருகிறது. இல்ல, தங்கப்பவுணில்ல. தங்கச்சில, தெய்வச்சில, தெய்வம்! 

கோயிலிலிருந்து குரல் கேட்கிறது. 

‘தங்கள் மலங்கழுவுவார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநஞ் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப் பங்கயப் பூம்புனல் பாய்ந் தாடேலோர் எம்பாவாய்’ டிங்டீங். பும் பூம்…’ 

முத்துவின் உடல் புல்லரிக்கிறது. சோர்வை மறந்து அவனையறியாமலேயே செல்லம்மாவைப் பார்த்தவண்ணம் தானும் ஏதோ அப்படி முணு முணுக்கிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *