தீர்ப்பு உங்கள் கையில்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 27, 2019
பார்வையிட்டோர்: 4,270 
 

அத்தியாயம்-7 | அத்தியாயம்-8

”இது வரைக்கும் உங்க ஆசீர்வாத்ததாலே உங்க பழைய சினேகிதர் ‘மெஸ்லெ’ எங்க ரெண்டு பேருக்கும் சமையல் வேலை கிடைச்சு இருக்கு.ரெண்டு பேருக்கும் தங்க ஒரு ஜாகையும் கிடைச்சு இருக்கு.நீங்க என் கூடவே இருந்து இந்த சமையல் வேலைலே நான் கொஞ்ச வருஷம் நிரந்தரமா இருக்க வச்சு,கொஞ்சம் பணம் சேந்ததும்,ஒரு நல்ல மாப்பிள்ளையா எனக்குக் காட்டிகொடுத்து,நம் பொண்ணு லதாவின் கல்யாணத்தை நல்ல படியா முடிச்சு குடுக்கணும்”என்று வேண்டி கொண்டாள்.

சற்று நேரம் கழித்து “அந்த வசந்தி குடுத்த உப்புமாவே எனக்குத் ‘திம்’னுன்னு இருக்கு,எனக்கு பசி இல்லே.உனக்கு மட்டும் நான் ஏதாவது சாப்பிட பண்ணட்டுமா”என்று கேட்டாள் காயத்திரி.“எனக்கும் ‘திம்’முன்னு இருக்கும்மா.எனக்காக ஒன்னும் நீ பண்ண வேணாம்”என்று சொல்லி விடவே இருவரும் தண்ணீரைக் குடிச்சுட்டு பாயைப் போட்டுக் கொண்டு படுத்துக் கொண்டார்கள்.

கொஞ்ச நேரமானதும் காயத்திரி எழுந்து போய் வீட்டுக்கார மாமியைக் கூப்பிட்டு “மாமி,நான் நாளைக்குக் காத்தாலே வேறு ஜாகைக்கு மாத்திண்டு போறேன்.நான் மூனு மாசம் கழிச்சு வந்து இந்த ஆத்தை காலி பண்ணி மீதி மூனு மாச ‘அட்வான்ஸை’வாங்கிக்கறேன் மாமி” என்று சொன்னாள்.”சரி, நீங்க அப்படியே பண்ணுங்கோ”என்று சொல்லி விட்டு அந்த மாமி உள்ளே போய் விட்டாள்.காயத்திரி வந்து படுத்துக் கொண்டாள்.ரொம்ப நேரமா அவ தூங்கவே இல்லே.காயத்திரி தன் கண்ணை கொஞ் சம் அசத்தி இருப்பாள்.சற்று நேரத்திற்கெல்லாம் சுவத்தில் மாட்டி இருந்த மணி நாலு அடிச்சது.எழுந் துண்டு சுவாமி படத்தின் முன் நின்றுக் கொண்டு அம்பாளை நன்றாக வேண்டிக் கொண்டாள்.பிறகு தன் கணவர் படத்தின் முன் நின்று வேண்டிக் கொண்டாள்.பிறகு பல் தேய்த்து விட்டு காபி குடித்து விட்டு லதாவையும் எழுப்பி பல் தேய்க்கச் சொன்னாள்.லதாவுக்கும் காபி கலந்தாள்.லதா பல் தேய்த் து விட்டு வந்ததும் அவளுக்கு கலந்த காபியைக் கொடுத்தாள் காயத்திரி.அம்மா கொடுத்த காபி யைக் குடித்து விட்டு ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு ரெடி ஆனாள்

‘திரி ஸ்டவ்’,அவ சமையல் பாத்திரங்கள்,குளிக்கும் பக்கெட்,மக் எல்லாம் எடுத்து ஒரு கோணி பையில் போட்டுக் கட்டினாள்.தன்னுடைய துணிமணிகளையும்,லதாவின் துணிமணிகளை யும் ஒரு தகர பெட்டியிலே எடுத்து வைத்துக் கொண்டாள்.ரெண்டு பாயையும்,தலகாணிகளையும் சுவாமி படத்தையும்,தன் கணவர் போட்டோவையும் எடுத்து லதாவிடம் கொடுத்து வைத்துக் கொள்ளச் சொன்னாள்.வீட்டை நன்றாக பூட்டி விட்டு, சாமான்களை எல்லாம் எடுத்துக் கொண்டு லதாவையும் கூட்டிக் கொண்டு வாசலுக்கு வந்து ஒரு ஆட்டோவைப் கூப்பிட்டாள்.அந்த ஆட்டோவில் எல்லா சாமான்களையும் ஏற்றிக் கொண்டு,வரும் வழியில் ரெண்டு முழம் பூவையும் வாங்கிக் கொண்டு,நேரே மயிலாப்பூர் வந்து வசந்தி வீட்டுக்கு வந்து,பின் பக்க ‘போர்ஷனை’த் திறந்து அவள் கொண்டு வந்த சாமான்களை இறக்கி வைத்தாள்.முதலில் அவள் சுவாமி படத்தையும்.தன் கணவர் படத்தையும் சுவ த்லே இருந்த ஆணியில் மாட்டினாள்.சுவாமி படத்துக்கும்,கணவர் படத்துக்கும் தான் வாங்கி வந்த பூவை மாட்டினாள்.பிறகு தான் கொண்டு வந்து இருந்த தீபத்தில் கொஞ்சம் எண்ணை விட்டு ஏற்றி, சுவாமி படத்தின் முன்னால் வைத்து விட்டு,ரெண்டு படத்துக்கும் நமஸ்காரம் பண்ணினாள்.அவள் மனது இப்போ கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.

மணியைப் பார்த்தாள் காயத்திரி.அது ஆறரை காட்டியது.லதா டிரஸ் பண்ணிக் கொண்டதும் காயத்திரி லதாவையும் கூட்டிக்கொண்டு பக்கத்லே இருந்த ஹோட்டலில் ரெண்டு இட்லி சாப்பிட்டு விட்டு,லக்ஷ்மி ‘மெஸ்’க்கு வந்தாள்.’மெஸ்’ மாமா காயத்திரியைப் பார்த்ததும் “சொன்னா மாதிரியே வேலைக்கு வந்துட்டாயே.உள்ளே போ.அங்கே ஒரு மாமி இருப்பா.அவ நீ என்ன சமையல் இன்னை க்கு பண்ணனும்ன்னு சொல்லுவா.அதுக்கு என்ன காய் எல்லாம் வேணுமோ அதை உன் பொண்ணை நறுக்கி தரச் சொல்லி,நீ சமையல் பண்ணிடு” என்று சொன்னதும் காயத்திரி லதாவை கூட்டிக் கொ ண்டு சமையல் ரூமுக்குப் போனாள்.’மெஸ்’ வேலை முடிஞ்சதும்,காயத்திரி லதாவை அழைத்துக் கொண்டு சாயங்காலம் ஏழு மணிக்கு தன் ‘போர்ஷனு’க்கு வந்து சேர்ந்தாள்.உடனே வச ந்தியைப் போய் பாத்து “வசந்தி,நான் காத்தாலேயே அந்த பழைய ஆத்லே இருந்த முக்கியமான சாமான்களை எடுத்துண்டு இங்கே வந்துட்டேன்.இன்னிலே இருந்து அந்த ‘மெஸ்’ வேலைக்கு சேந்துட்டேன்”என்று சொன்னாள் ”அப்படியா ரொம்ப சந்தோஷமா இருக்கு காயத்திரி,உனக்கு என்ன ‘ஹெல்ப்’ வேணுமோ அதை தயக்கம் இல்லாம என்னை கேளு.நான் உனக்கு நிச்சியம் பண்ணுவேன்”என்றாள் வசந்தி.“சரி வசந்தி,நான் நிச்சியமா உன்னைத் தான் கேப்பேன்.எனக்கு இங்கே வேறு யாரைத் தெரியும் வசந்தி” என்று சொல்லும் போது அவள் கண்கள் நீர் துளித்தது.தன் ‘போர்ஷனுக்கு’ப் போய் தான் ‘மெஸ்’ஸில் இருந்து கொண்டு வந்த மீதி சாப்பாட்டை லதாவுக்கும் போட்டு தானும் சாப்பிட்டாள்.பிறகு இருவரும் படுத்துக் கொண்டார்கள்.

மூனு நாள் திருப்பதியில் நண்பா¢ன் கல்யாணத்தை முடித்துக் கொண்டு செவ்வாய் இரவு பத்து மணிக்கு சென்னைக்குத் திரும்பி வந்தாள் லலிதா.வழியிலேயே இரவு உணவு சாப்பிட்டு விட்டதால் பங்களாவுக்கு வந்தது மூவரும் தூங்க போய் விட்டார்கள்.அடுத்த நாள் காலை மணி ஏழடித்ததும் லலிதா மெல்ல எழுந்து வந்து பல் தேய்த்துக் கொண்டு வந்து,சமையல் கார மாமியை செல் போனில் கூப்பிட்டாள்.செல் போனில் ‘இந்த எண் தற்போது புழக்கத்தில் இல்லை’என்று பதில் வந்தது.நம்ப முடியாமல் மறுபடியும் மறுபடியும் அதே நம்பருக்குப் ‘போன்’ பண்ணினாள் லலிதா.’என்னடா இது.இது தானே அந்த சமையல் கார மாமியின் நம்பர்.பின் ஏன் இந்த நம்பர் ‘தற்போது புழக்கத்தில் இல்லை’ன்னு பதில் வருது’என்று ஆச்சரியப்பட்டாள்.’ஒரு வேளை அந்த மாமி பழைய போனை தொலைத்து விட்டு புது ‘போனை’வாங்கிக் கொண்டு இருப்பாளோ என்னவோ’ என்று நினைத்தாள் லலிதா.அவளுக்கு கோவம் கோவமா வந்தது.‘சரி மத்தவா எழுந்துக் கொள்றதுக்குள்ளே,நாம அந்த மாமியின் ஆத்துக்கே போய் அந்த மாமியை வேலைக்கு வரச் சொல்லலாம்’என்று நினைத்து தன் காரை எடுத்துக் கொண்டு சமையல் கார மாமியின் வீட்டின் முன்னால் நிறுத்திட்டு வாசலில் நின்று கொண்டு இருந்த மாமியிடம் “காயத்திரி மாமி,இங்கே தானே குடி இருக்கா.நான் அந்த மாமியை பாக்கணும்.கொஞ்சம் கூப்பிடறேளா” என்று கோவமாக சொன்னாள் லலிதா.

வாசலில் இருந்த அந்த மாமி “அந்த காயத்திரி மாமி நேத்து தான் இந்த ஆத்தை காலி பண்ணிட்டு வேறு ஜாகைக்குப் போவதா சொல்லி போய் விட்டாளே.ஆனா இன்னும் கொஞ்ச சாமான்களை இங்கே வச்சுட்டு போய் இருக்கா.மூனு மாசம் ஆனதும் அந்த மீதி சாமான்களை வந்து எடுத்துண்டு போவதா சொல்லிட்டு போனா”என்று சொன்னாள்.”அப்படியா சமாச்சாரம் சரி நான் வரேன்” என்று சொல்லி விட்டு லலிதா சட்டென்று காரில் ஏறப்போனாள்.“நீங்க யாரு காயத்திரி மாமி வந்து கேட்டா நான் சொல்லணுமே” என்று வாசலில் இருந்த வீட்டுக்கார மாமி கேட்டதற்கு “காரில் வந்த மேடம்ன்னு சொல்லுங்க.அவளுக்குப் புரியும்”என்று சொல்லி விட்டு காரை வேகமாக ஓட்டிக் கொண்டுப் போனாள் லலிதா.’சுத்த கர்வியாய் இருக்காளே.இந்த பணக்காராளே இப்படி தான்.நம்மைப் போல் ஏழைகளைப் பாத்தா இப்படித்தான் கர்வமாய் பேசுவா.நீங்க யாருன்னு கேட்டா ‘இன்னவான்னு’ சொல்ல கூடாதோ. காரில் வந்த மேடம்ன்னு சொல்றாளே.எல்லாம் அவா பணக்காரத் திமிர் தனம்” என்று திட்டி விட்டு உள்ளே போனாள் அந்த மாமி.

காரை பங்களா வாசலில் நிறுத்தி விட்டு வேகமாக பங்களாவுக்குள் நுழைத்தாள் லலிதா. நுழைந்ததும் நுழையாததுமாய் “ஆறுமுகம்,ஆறுமுகம்” என்று உரக்கக் கத்தினாள் லலிதா.மேடம் கத்தி இப்படிக் கூச்சல் போட்டத்தைக் கேட்ட ஆறுமுகம் ஓடி வந்து மேடம் எதிரில் பவ்யமாக நின்றான். “ஆறுமுகம் அந்த சமையல் கார மாமி நான் திருப்பதி போய் இருந்த சமயம் உன்னிடம் ஏதாவது சொன்னாங்களா.அந்த மாமி சமையல் வேலைக்கு வரலையே.அவ வீட்டுலேயும்,அந்த மாமி இல்லை” என்று கத்தினாள் மேடம்.”எனக்கு ஒன்னும் தெரியாதுங்கம்மா.நீங்க திருப்பதி போய் இருந்த ஞாயித் துக் கிழமை நம்ம சின்ன ஐயா என்னைக் கூப்பிட்டு ‘ஆறுமுகம்,இன்னைக்கு அப்பா, அம்மா, சுரேஷ் மூனு பேரும் வீட்லே இல்லை.உனக்கு இன்னைக்கு வேலை ஒன்னும் இல்லே.நீ இன்னைக்கு லீவு எடுத்திகிட்டு நாளைக்கு வேலைக்கு வா’என்று சொன்னாருங்கம்மா.அதனால் நான் ஞாயித்துக் கிழமை லீவு எடுத்திக்கிட்டு திங்க கிழமை தான் நான் வேலைக்கு வந்தேன்.ஞாயித்து கிழமை சமை யல் கார மாமி அவங்க என் கிட்டே ஒன்னும் சொல்லலீங்க”என்று சொல்லி பயத்துடன் நின்றுக் கொண்டு இருந்தான் ஆறுமுகம்.

”சரி நீ போய் உன் வேலையை கவனி”என்று சொன்னதும் ஆறு முகம் தன் வேலையை கவனிக்கப் போய் விட்டான்.சற்று நேரத்திற்கெல்லாம் லலிதா “ரமேஷ்,அந்த சமையல் கார மாமி உன் கிட்டே ஏதாவது சொன்னாளா.நம்ம வீட்டு வேலை அதிகம்,ஆனா நாம குடுக்கிற சம்பளம் கம்மின்னு ஏதாவது ‘கம்ப்லெயின்’ சொன்னாளா.அந்த மாமி இன்னைக்கு வேலை க்கு வரலையேடா”என்று கத்தினாள்.ரமேஷ¤க்கு தன் அம்மா கேட்டதும் சு¡£ரென்றது.‘என்னடா இது நம்ம அம்மா நம்மைக் கேக்கறாளே,நாம் என்ன பதில் சொல்றது,என்று புரியாமல் யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந் தான்.”என்னடா நான் கேக்கறேன்,நீ என்னவோ கோட்டையைப் பிடிக்கிற மாதிரி யோஜனைப் பண்ணிக் கொண்டு நிக்கறே” என்று கத்தியதும் அவன் தன் சுய நினைவுக்கு வந்தான்.“எனக்கு ஒன்னும் தெரியாதேம்மா.அந்த மாமி என்னிடம் ஒன்னும் சொல்லலையேம்மா” என்று தட்டுத் தடுமா றிச் சொன்னான்.லலிதா அவனை அத்தோடு விடவில்லை.”ஏண்டா நீ அன்னைக்கு வேலைக்காரன் ஆறுமுகத்திற்கு லீவு கொடுத்தே.அவன் நீ லீவு எடுத்துக் கொள்ளச் சொன்னதாகச் சொன்னானே உண்மையா”என்று விடாமல் கேட்டாள் லலிதா.“ஆமாம்மா,அவன் என் கிட்டே லீவு வேணும்ன்னு கேட்டான்.நீங்க மூனு பேரும் இல்லாததால் லீவு குடுத்தேன்”என்று ஒரு பொய்யை சொன்னான் ரமே ஷ்.உடனே லலிதா “ஏண்டா அவனை கேட்டா நீ தான் லீவு எடுத்துக்க சொன்னேன்னு சொல்றான்.நீ என்னடான்னா அவன் லீவு கேட்டான்ன்னுசொல்றே.யார் சொல்றது நிஜம்,யார் சொல்றது பொய்டா” என்று கேட்டதும் ஆறுமுகத்திற்கு பயம் வந்துவிட்டது.

‘என்னடா இது.இந்த சின்ன ஐயா இப்படி நான் லீவு கேட்டேன்னு சொல்றாரு.நான் இவரை லீவு கேக்கவில்லையே.சின்ன ஐயாத் தானே தானே என் னை லீவு எடுத்துக்கோன்னு சொல்லி அனு ப்பினார்’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தான்.ரமேஷ் உடனே “ஆறுமுகம் ஞாயித்துக் கிழமை அன்னைக்கு லீவு கேக்கலே.அவன் அதுக்கு ரெண்டு நாளளைக்கு முன்னாலே கேட்டு இருந்தது எனக்கு ஞாபகத்துக்கு வரவே,நீங்க மூனு பேரும் ஆத்லே இல்லையே,நானும் வெளியே போய் விடப் போறேனேன்னு நினைச்சு,அவனுக்கு லீவு குடுத்தேன்”என்று இன்னொரு பொய்யை சொன்னான்.‘என்ன லலிதா இப்படி ரமேஷை ஏதோ துருவி துருவிக் கேக்கறாளே’என்று பொ¢யவரும் சுரேஷ¤ம் பார்த்துக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தார்கள்.அவர்களுக்கு ஒன்னும் புரியவில்லை. ’ஒரு வேளை அந்த சமையல் கார மாமி வேலைக்கு வறலையேன்னு காரணம் கண்டு பிடிக்கிறாளோ’ என்று பொ¢யவர் நினைத்தார்.நாம் பொருத்து இருந்துப் பார்ப்போம் என்று அவர்கள் சம்பாஷணையை க் கவனித்து வந்தார்.இதுக்கு மேலே நம்ம அம்மா துருவி துருவிக் கேட்டால் நாம் என்ன சொல்றது என்று ரமேஷ¤க்கு பயம் வந்து விட்டது.அவன் நழுவப் பார்த்தான்.ஆனால் லலிதா ரமேஷை விடுவ தாக இல்லை.“நான் கேக்கறத்துக்கு நீ பதில் சொல்லு.ஞாயித்துக் கிழமை காத்தாலே அந்த மாமி வேலைக்கு வந்தாளா”என்று கேட்டாள் லலிதா.”மாமி வேலைக்கு வந்தா”என்று பதில் சொன்னான் ரமேஷ்.“வேலைக்கு வந்த மாமி உனக்குக் காபி போட்டுக் குடுத்தாளா” என்று விடாமல் கேட்டாள் லலிதா.“எனக்குக் காபிப் போட்டுக் குடுத்தா”என்று மொட்டையாக பதில் சொன்னான் ரமேஷ்.

”அன்னைக்கு உனக்கு அந்த மாமி ஏதாவது சமையல் பண்ணாளா.உன் கிட்டே ஏதாவது சொல்லிட்டுத் தானே அந்த மாமி வேலையே விட்டு நின்னுப் போய் இருக்கணும்.ஒன்னும் சொல்லாம வேலையே விட்டு நிக்க மாட்டாளே.உனக்கும் அந்த மாமிக்கும் ஏதாவது வாக்கு வாதமோ சண்டை யோ நடந்ததாடா”என்று விடாமல் கேட்டாள் லலிதா.”அந்த மாமி எனக்குக் காபிப் போட்டுக் குடுத்தா.அப்போ ‘நான் இன்னிக்கு வெளிலே போறேன்.நீங்க எனக்கு சமைக்க வேணாம்’ன்னு சொன்னே ன்.காபி குடிச்ச அப்புறம் நான் குளிச்சுட்டு வெளியே போயிட்டேன்.அதுக்கு அப்புறமா அந்த மாமி அவ ஆத்துக்குப் போய் இருப்பான்னு நான் நினைக்கிறேன்.இதுக்கு மேலே எனக்கு ஒன்னும் தெரியா தம்மா.ஒரு வேளை அந்த மாமிக்கு நாம குடுப்பதை விட,இன்னும் சம்பளம் அதிகம் குடுக்கிற இடமா வேலைக்குக் கிடைச்சி இருக்கும்.அந்த மாமி இந்த வீடு வேண்டாம்ன்னு அந்த புது இடத்துக்கு போய் வேலைக்கு சேந்துட்டு இருப்பா.நாம குடுக்கற சம்பளம் அந்த மாமிக்கும்,அந்தப் பொண்ணு லதாவுக் கும்,போதலையோ என்னவோ” என்று சொல்லி கதையை திருப்பி விட பார்த்தான் ரமேஷ்.

லலிதா இத்தோடு ரமேஷை விடவில்லை.”ஏண்டா,நீ அந்த சமையல்கார மாமியும் லதாவும் நம்ம ஆத்தை விட்டுப் போறதுக்கு முன்னாலேயே கிளம்பிட்டயா” என்று கேட்டாள்.”ஆமாம்மா.நான் குளிச்சிட்டு சீக்கிரமே வெளியே போயிட்டேன் அப்புறமாத் தான் மாமியும் லதாவும் நம்ம் ஆத்தை விட்டுப் போயிருக்கணும்” என்று பதில் சொன்னான் ரமேஷ்.”அப்போ நீ பங்களாவை பூட்டாம,பங்க ளா சாவியை அந்த மாமி கிட்டே குடுத்துட்டு போனயா” என்று விடாமல் ரமேஷை கேள்வி மேல் கேள்வி கேட்டு மடக்கினாள் லலிதா.”இல்லேம்மா நான் நம்ப பங்களா சாவியை அந்த மாமி கிட்டே குடுத்துட்டுப் போகலே.நம்ப வீட்டு கூர்க்கா ராம் சிங்கிடம் குடுத்துட்டு,அந்த மாமியும் அவங்க பொண்ணும் நம்ம ஆத்தை விட்டுப் போன பிறகு,பங்களாவை பூட்டி சாவியை அவனே வச்சுக் கொள் ளும்படி சொல்லிட்டுப் போனேன்.நான் ராத்திரி திரும்பி வந்த போது ‘டியூட்டி’லே இருந்த இன்னொ ரு கூர்க்கா என்னிடம் பங்களா சாவியைக் குடுத்தான்.நான் திறந்துக் கொண்டு உள்ளே வந்து படுத்து கொண்டேன்.அவ்வளவு தான்.போதுமா இல்லை இன்னும் கேக்க ஏதாவது இருக்கா”என்று கோபத் தோடு கேட்டான் ரமேஷ்.அவனுக்கு அவன் அம்மா இப்படி துருவி துருவி கேட்பது பிடிக்கவில்லை.

“சரிதான் போடா.ரொம்பத்தான் கோபப் படுகிறே.நான் இங்கே சமையல் காரி இல்லாம கஷ்டப் படறது உனக்குத் தெரியலையாடா.இனிமே வேறே சமையல் காரி கிடைக்கிற வரைக்கும் யாருடா சமையல் பண்ணுவா நம்ம ஆத்லே.நீ பண்ணுவியா சொல்லு”என்றாள் லலிதா கோபமாக.கொஞ்ச நேரம் போனதும் லலிதா ”டேய் ரமேஷ்,இப்போ வாசல்லே யாரு கூர்க்கா இருக்கான் பாரு.ராம் சிங்க் இருந்தா நாம,அவனை அந்த மாமி ஆத்தை விட்டுப் போகும் போது ஏதாவது சொல்லிட்டுப் போனா ளான்னு கேப்போம்.ஒரு வேளை இந்த சமையல் கார மாமி அவன் கிட்டே ஏதாவது சொல்லிட்டுப் போய் இருக்கலாம்” என்றாள்.’இது என்னடா புது வேதனை.இந்த அம்மா விடாம அந்த சமையல் கார மாமி ‘என்ன சொல்லிட்டுப் போனா’ ‘என்ன சொல்லிட்டுப் போனா’ என்பதைக் கண்டு பிடிப்பதிலே யே குறியா இருக்காளே.ஒரு வேளை அந்த சமையயல் கார மாமி மயக்கம் தெளிஞ்சி லதாவை ஆத்து க்கு அழைச்சுண்டுப் போகும் போது நம் ‘வண்டவாளத்தை’ ராம் சிங்கிடம் சொல்லிட்டுப் போய் இரு ப்பாளோ.அப்போ நாம மாட்டிண்டு விடுவோமே.என்ன பண்றது’ என்று மிகவும் பயந்தான் ரமேஷ்.

லலிதா ஆறுமுகத்தை கூப்பிட்டு “ஆறுமுகம்,வாசல்லே ‘டியூட்டி’லே கூர்க்கா யாரு இருக்கான் னு பாரு.அவனை உடனே வரச் சொல்லு” என்று சொன்னதும் ஆறுமுகம் வாசலில் இருந்த கூர்க்கா வை பார்த்து “ராம்சிங்க்,உன்னை அம்மா கூப்பிடறாங்க.வாங்க”என்று கூப்பிட்டான்.ரமேஷின் மனசு ‘திக்’‘திக்’ என்று அடித்துக் கொண்டு இருந்தது.ராம் சிங்க் வீட்டுக்குள் நுழைந்தான்.ரமேஷ் ‘இந்தப் பாவி என்ன சொல்லி நம்மை மாட்டி விட போறானோ.இவன் தானே அன்னைக்கு காத்தாலே ‘டியூட் டி’லே இருந்தவன்.நிச்சியமாக அந்த சமையல் கார மாமியும் லதாவும் நம்மைப் பத்தி சொல்லி இருந்து இருப்பா.நாம் பண்ண ‘காரியத்தை’ச் சொல்லாம போய் இருக்க மாட்டாளே.சொல்லாம போக கூடிய ‘காரியத்தையா’ நான் பண்ணி இருக்கேன்’ என்று பயந்து கொண்டே நின்றுக் கொண்டு இருந்தான் ரமேஷ்.

ராம் சிங்கைப் பார்த்து ”ராம் சிங்க்,ஞாயித்துக் கிழமை காத்தாலே அந்த சமையல்கார மாமியும், அவங்க பொண்ணும்,நம்ம வீட்டை விட்டுப் போகும் போகும் போது உன் கிட்டே ஏதாவது சொன்ன ¡ங்களா”என்று கேட்டாள் லலிதா.“ஒன்னும் சொல்லலீங்கம்மா.ஆனா அவங்க ரெண்டு பேரும் அழுது கிட்டே போனாங்க.அந்த பொண்ணு ரொம்பவே அழுதிச்சு”என்று சொன்னான்.“அந்தப் பொண்ணும். அவங்க அம்மாவும் அழுதுண்டு போனாளா.அந்தப் பொண்ணு ரொம்ப அழுதுதாளா” என்று கவலை யோடு கேட்டாள் லலிதா.அதுக்கு அந்த கூர்க்கா “ஆமாங்க மேடம்” என்று சொன்னதும் லலிதா”சரி நீ போ” என்று சொல்லிட்டு கூர்க்கா போன பிறகு “ஏண்டா ரமேஷ்,அவா ரெண்டு பேரும் அழுதுண்டுப் போனான்னு சொல்றான் கூர்க்கா,நீ ஏதாவது கோபத்திலே அந்த பொண்ணையோ இல்லை,அந்த சமையல் கார மாமியையோ திட்டினாயாடா”என்று கேட்டாள்.“நான் அவா ரெண்டு பேரையும் ஒன்னும் சொல்லலேம்மா.நான் அந்த மாமி குடுத்த காபியைக் குடிச்சிட்டு,குளிச்சுட்டு,உடனே வெளியே போயிட்டேனே.அவா அம்மா பொண்ணுக்குள்ளே ஏதாவது சண்டை வந்து இருந்து இருக்கும்மா” என்றான் ரமேஷ்.லலிதவுக்கு ரமேஷ் சொன்ன பதில் சரியாய் இருக்கும் என்று தோன்றவில்லை.

கொஞ்ச நேரம் அவள் யோசித்தாள்.”இந்த ஆத்லே அவா அம்மா பொண்ணு ரெண்டு பேரும் மூனு வேளையும் நன்னா சப்பிட்டுண்டு வந்து தானே இருந்தா.நான் அந்த மாமிக்கு குடுக்கும் பத்தா யிரம் ரூபாயும்,அந்த பொண்ணுக்கு குடுக்கும் ஐனூறு ரூபாய்க்கும் அவாளுக்கு செலவே இல்லையே. வெறும் வீட்டு வாடகையும்,போக வர பஸ் சார்ஜ்ஜும்,துணிமணியும் தானே வாங்கி வர உபயோகப்படு த்தி வந்து இருப்பா.எனக்கு என்னமோ அந்த மாமி அதிக சம்பளம் தரும் வேறு ஆத்துக்கு சமையல் வேலைக்கு போய் இருப்பான்னு தோணலே.அப்படி சம்பளம் அதிகமா வேணும்ன்னா அந்த மாமி என் னை நிச்சியமா கேட்டு இருப்பா.சம்பளம் காரணாமா இருக்காது.வேறு காரணம் இருக்கணும்.அது என்னன்னு நான் தெரிஞ்சுக்கணும்”என்றாள் எதிர் தரப்பு வக்கீல் மாதிரி.பொ¢யவருக்கும்,சுரேஷ¤ க்கும் ஒன்னும் புரியவில்லை.ரமேஷ் மட்டும் விடாம“இல்லேம்மா,எனக்கு என்னவோ நாம குடுக்கிற சம்பளம் போதாம,அந்த மாமி இன்னும் அதிக சம்பளம் தரும் வீடாப் பாத்துண்டு வேலைக்கு போய் இருப்பான்னு தான் தோன்றது.இந்த விஷயத்திலே தான் அம்மா பொண்ணுக்கும் ஏதாவது சர்ச்சை வந்து இருக்கும்.அந்த பொண்ணு ‘அம்மா சுரே¨ஷ் என்னை கல்யாணம் பண்ணீக்க ஆசைப்படறார், ஒரு வேளை இந்த கல்யாணம் நடந்தா நான் சுரேஷோடு இந்த பணக்காரா பங்களாலே சந்தோஷமா இருந்து வருவேன்.அதானால்லே நான் இந்த பங்களாவே விட்டு வரமாட்டேன்னு’ பிடிவாதம் பிடிச்சி இருப் பா.அதுக்கு அந்த அம்மா அந்தப் பொண்ணைக் கோவிச்சுண்டு இருப்பா.அந்த பொண்ணு அழ ஆரம்பிச்சு இருப்பா.அதைப் பாத்து, அந்த அம்மாவுக்கும் அழுகை வந்து இருக்கும்.அதான் அவா ரெண்டு பெரும் அழுதுண்டு போனான்னு ராம் சிங்க் சொல்றான்னு நான் நினைக்கிறேன். அத னாலே தான் அந்தப் பொண்ணு ரொம்பவே அழுது இருப்பா” என்று இன்னொரு பொய்யைச் சொன் னான்.ரமேஷ் சொல்லி விட்டு “இன்னைக்கு எனக்கு ‘பாக்டா¢யிலே ஒரு முக்கியமான ‘மீட்டிங்க்’ இருக்கு. நான் சீக்கிரமா ‘பாகடா¢க்கு போகணும்”என்று சொல்லி விட்டு தன் ரூமுக்குள் போய் விட்டான்.

‘எப்படியோ நம் அம்மா சந்தேகப் படாதபடி நாம் பதில் சொல்லி விட்டோம்’ என்று நினைத்து சந்தோஷப் பட்டான் ரமேஷ்.லலிதாவுக்கு ரமேஷ் சொன்னதில் நம்பிக்கை வரவில்லை.தன் பேர் அடிபடுவதைக் கேட்ட சுரேஷ் ரமேஷ் சொல்வது நிஜமாக இருக்கலாம்.லதா நம்மை முழு மனசோடு காதலிக்கிறா.நாமும் அவளைக் காதலிக்கிறோம்.அது அவ அம்மாவுக்குப் பிடிக்கலே.அதனால் அவ அம்மா நம்மை விட்டு லதாவைப் பிரிக்க வேறு இடம் பாத்துண்டு போயிருப்பாளோ’ என்று எண்ணி வருத்தப் பட்டான்.அவனுக்கு கவலையாகவும்,விரக்தியாகவும் இருந்தது.அவன் முகம் வாட்டமாய் போயிற்று.’நாம கல்யாணம் பண்ணிக்க முடியாவிட்டாலும் லதாவை தினமும் பாத்து பழகி வந்தோம். அதுவும் இப்போ போய்விட்டதே.நாம் எங்கே போய் லதாவைத் தேடுவது.அவள் அம்மாவுக்கு எங்கே சமையல் வேலை கிடைச்சு இருக்குமோ,அங்கே அந்த மாமி வேலைக்கு போய் விட்டிருப்பா. கூடவே லதாவும் அழுதுண்டு,பிடிக்காம அம்மாவோட அங்கே போய் இருப்பா.நாம திருப்பதி போகும் வரை அந்த மாமியும் லதாவும் நம் ஆத்லே சந்தோஷமா தான் இருந்து வந்தா.திடீர்ன்று இந்த மூனு நாள்ளே என்ன ஆகி இருக்கும்.நான் லதாகிட்டே ‘உன்னை நிச்சியம் கல்யாணம் பண்ணி கொள்றேன்னு சொன்னேனே,அதுக்கு ரொம்ப ‘தாங்க்ஸ்’ன்னு சொன்னாளே’ன்னு என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தான் சுரேஷ்.‘இவ்வளவு அமக்களம் நம்மாத்திலே நடந்துட்டதே’ என்று நினைத்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரமேஷ் தன் நண்பன் வரதன் சொன்னது போல பழைய மாம்பலம் பக்கம் போய் லதாவையும்,அவ அம்மாவையும் தேடி வந்தான்..

’ஒரு விதத்லெ அந்த சமையல்கார மாமி இந்த ஆத்தை விட்டு போனது நல்லது தான்.அப்படி யாவது சுரேஷ் அந்த சமையல் கார மாமியின் பொண்ணை மறந்துட்டு வேறு நல்ல பணக்கார பொண் ணா ‘லவ்’ பண்ணட்டும்.நாம் அந்தப் பொண்ணை அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடலாம்’ என்று அவள் நினைத்து சந்தோஷப் பட்டாள் லலிதா.கொஞ்ச நேரம் ஆனதும் லலிதா தன் செல் போனை எடுத்து தன் தோழி விமலாவுக்கு போன் பண்ணி “விமல்,எனக்கு ஒரு நல்ல சமையல்கார மாமி உடனே வேணும்,இப்ப வேலை செய்யற மாமி திடீரென்று நின்னுத் தொலைச்சுட்டா.உனக்கு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லு,ப்ளீஸ்”என்று கெஞ்சினாள்.லலிதா தோழி விமலா ஒரு புது சமையல் கார மாமியை ஏற்பாடு பண்ணினாள்.

காயத்திரி தினமும் லதாவை அழைத்துக் கொண்டு சமையல் வேலைக்குப் போய் வந்துக் கொண்டு இருந்தாள்.ரெண்டு மாசம் ஓடி விட்டது.லதாவும் நார்மலாக இருந்து வந்தாள்.மாசா மாசம் காயத்திரிக்கு சம்பளம் வந்துக் கொண்டு இருந்தது.அவள் கையில் கொஞ்ச பணம் இருந்தது.’மெஸ்’ மாமா குடுக்கிற சம்பளமும் வந்துக் கொண்டு இருந்தது.‘இனிமே நாள் கடத்தாம நாம சீக்கிரமே லதா வுக்கு ஒரு பையனைப் பாத்து கல்யாணம் பண்ணிடணும்’என்று நினைத்து காயத்திரி ‘நாம நாலு பேர் கிட்டே ‘ஒரு நல்ல பிராமணைப் பையன் இருந்தா எங்க லதாவுக்கு சொல்லுங்கோ’ ன்னு கேட்டுண்டு வரலாம் என்று நினைத்தாள்.’மெஸ்’ மாமா,வசந்தி வீட்டுக்கு வரும் வாத்தியார்,அந்த தெருக் கோடி கோவில்லே பூஜை பண்ணி வந்த குருக்கள்,இப்படி கன்ணிலே பட்டவர்கள் கிட்லே எல்லாம் சொல்லி வந்தாள்.லதா இதை கவனித்து வந்தாள்.அவள் யோசித்தாள்.’லதா அப்பா இல்லாத ஒரு பொண்ணு. அவளை நாம் ஒருத்தனுக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணிக் குடுக்கணும்.அந்த கடமையை நாம முடிச்சுட்டா,அப்புறமா எந்த கவலையும் இல்லாம இருந்து வரலாம்’ என்று தன் அம்மா ஆசைப்படுவது அவளுக்கு நன்றாகப் புரிந்தது.ஆனால் ‘நம் நிலை என்ன’ என்ற கவலை அவளுக்கு இல்லையே’ என்று நினைத்த போது லதாவுக்கு அழுகை அழுகையாக வந்தது.

’நாம சுரேஷை கல்யாணம் பண்ணிண்டு,அந்த பணக்கார பங்களாலே சந்தோஷமா இருந்து வரப்போறோம்’ன்னு தானே கனவு கண்டுண்டு வந்தோம்.இதுக்கு நடுவிலே அந்த ‘நயவங்க காமு கன்’என்னை நம்ப வச்சு நம்மை’ கெடுத்துட்டானே’.வயசு பொண்ணான நாம,மத்த வயசான பொம்ம ணாட்டிகளோட இப்படி நெருப்படிலே வெந்து வறோமே’என்று நினைத்து,வருத்தப் பட்டுக் கொண்டு ஒரு ‘நடை பிணம்’ போல அம்மா பின்னாலே அந்த ‘மெஸ்’க்கு போய் வந்துக் கொண்டு இருந்தாள் லதா.

அவள் யோஜனைப் பண்ணினாள்.‘கொஞ்ச நாள் போனா யாராவது பாத்து சொல்லும் ஒரு பை யன் கிட்டே நம்மை பிடிச்சு குடுக்க நினைப்பாளே.நாம எப்படி இதை மறுப்பது.அப்படி என்னை கல் யாணம் பண்ணிக் கொள்ள வரும் அந்த பையனை நான் ஏமாத்த போறேன் இல்லையா.நான் எப்படி ஒரு ‘நல்ல ஆடவன்’ எனக்கு கிடைக்க வேணும்ன்னு ஆசைப் படறேனோ,அதைப் போலத் தானே அந்த ஆண் மகனும் அவனுக்கு வரும் பொண்ணு ஒரு ‘நல்ல பொண்ணாக’ இருக்கணும்ன்னு தானே ஆசைப் படுவான்.ஒரு வேளை,நான் ‘அவரை’ கல்யாணம் பண்ணிண்ட பிறகு,அவர் என் போ¢ல் உசிரையே வச்சுண்டு,என்னை மிகவும் நல்லபடி வாழ வச்சா,நான் எனக்கு ‘நடந்ததை’ எல்லாம் கா லம் பூராவும் ‘அவரி’டம் சொல்லாம,அவரை ஏமாத்திண்டு தானே நான் வாழ்ந்து வரணும்.இது சரி இல்லையே.இந்த குத்த உணர்வோடு நான் எத்தனை வருஷங்கள் வாழ்ந்து வருவது.அப்படி நான் பண்ணக்கூடாதுன்னு நினைச்சு,ஒரு நாள் ‘அவர்‘ நல்ல மூடில் இருக்கும் போது ‘உண்மையை’ சொ ல்லலாம் என்று நாம் நினைச்சு,நாம சொன்னா,அதன் பின் விளைவு என்னவா இருக்கும்’ என்று எண்ணிப் பார்க்க பயமாய் இருக்கே’ என்று நினைத்து மனம் குழம்பிபாள் லதா.

கொஞ்ச நேரம் ஆனதும் லதா ‘நாம சொன்னதாலே ‘அவர்’ என்னுடன் வாழ்க்கை நடத்த மாட்டேன் என்று சொல்லி என்னை விவாக ரத்து செஞ்சுட்டா,நாம என்ன பண்ணுவது.இதுக்குள்ளே நமக்கு குழந்தை வேறு பிறந்துட்டா,நாம இந்த குழந்தையை எப்படி வளத்து ஆளாக்குவது.நான் அம்மா கிட்டே எனக்கு ‘நடந்த உண்மையே ‘அவர்’ கிட்டே சொன்னேன்’ன்னு சொன்னா,அவ சும்மா இருப்பாளா.அவர் கிட்டே ஏன் நீ ‘நடந்ததை’ எல்லாம் சொன்னேன்னு கத்தி நம்மை நாறு நாறாய் கிழிச்சிடுவாளே.இனிமே நான் உன் கூட இருக்கமாட்டேன் என்று சொல்லி அவளும் நம்மை விட்டு விலகிப் போயிட்டா,நமக்கு யார் துணை.நாம் என்ன பண்ணுவோம்.நடந்த ‘உண்மையை சொன்னா லும் கஷடம்,சொல்லா விட்டாலும் கஷ்டம்’ என்று எண்ணி லதா மீண்டும் மனம் குழம்பினாள்

அவளுக்கு ‘நாம் இனி வாழவே வேண்டாம்’ என்ற எண்ணம் மனதில் தோன்ற ஆரம்பித்தது. முன்னேயாவது அம்மாவுக்கு நாம வேண்டி இருந்தோம்.ஆனா இப்போ அவ இந்த உலகத்லே தனி யாக வாழ்ந்துண்டு வருவா.அவளுக்கு இப்போ ஒரு வேலை இருக்கு.மாசம் பொறந்தா சம்பளம் வரது. குடி இருக்க ஒரு ஜாகை இருக்கு.யாருக்கும் தொந்தரவு இல்லாமல் நாம் நம் உயிரை மாய்த்துக் கொ ண்டு விட வேண்டும் என்று முடிவு செய்தாள்.அவளுக்கு இதை எப்படி செய்வது என்று தான் தெரிய வில்லை.‘இந்த சின்ன ஆத்லே நாம் தூக்கு போட்டுண்டு செத்துடலாம்ன்னா ஒரு ‘சீலிங்க் பேன்’ கூட இல்லை.விஷம் வாங்கி குடிக்கலாம்ன்னா,ஒரு வயசுப் பொண்ணு விஷம் போய் கேட்டா எல்லோ ரும் சந்தேகப் படுவாளே.தவிர நமக்கு விஷம் கிடைக்கும் இடம் தெரியாதே.உடம்பிலே கிரஸின் ஊத்திண்டு தீக்குளிச்சு விடலாம்ன்னு நினைச்சு,அப்படி செஞ்சா,நாம பாதி எரிஞ்சிக் கொண்டு இருக்கும் போது யாராவது வெளியே வரும் புகையும்,அனலையும்,பார்த்து விட்டு ஓடி வந்து தீயை அணைச்சு,காப்பாத்திட்டா, பல அங்கங்கள் பாதி வெந்து,பார்வை போய்,படுத்த படுக்கையா ஆகி விட்டோமே.அப்படி ஆனா அம்மாவுக்கு தானே கஷ்டம்.அவள் நமக்கு வைத்திய செலவு வேறே பண்ண வேண்டி இருக்குமே தவிர என் மீது போலீஸ் ‘கேஸ்’ வேறு ஆகி விடுமே அம்மா வேலைக்கும் போகாம, நம்மோடு ராத்திரி பகலா,இருந்துண்டு வர வேண்டியதாக ஆகி விடுமே.ஓடும் ரயில் முன் னல் விழுந்து,உடமபை சின்னா பின்னம் ஆக்கிக் கொண்டு ‘அனாதை’யா இறக்க எனக்கு விருப்பம் இல்லேயே’ என்ன பண்ணுவது என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தாள்.

இப்படி பல விதமான எண்ணங்கள் அவள் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது.இந்த நேரத்தில் லதாவுக்கு தன் அம்மா கிட்டே பழைய வீட்டில் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.’நான் உன்னை விட்டு போகமாட்டேன்.நீ அழாதேன்னு சொன்னோமே.இப்போ தம்ம உயிரை மாய்த்துக் கொள்ள வழயே யோசிக்கறோமே. இது தப்பு என்று முடிவு பண்ணீ லதா உயிரை மாய்த்துக் கொள்ளும் எண் ணத்தை அறவே மறந்து விட்டு,அம்மாவோ டு ஒரு ‘ஜடம்’ போல வாழ்ந்து வந்தாள்.

ஒரு ஞாயித்துக் கிழமை காயத்திரி கோவிலுக்கு போன போது அங்கு இருந்த குருக்கள் “மாமி , எங்க அண்ணா பையன் ஒத்தன் இருக்கான்.அவன் இத்தனை நாளா கல்யாணமே வேணாம்ன்னு சொல்லிண்டு இருந்தான்.இப்ப பண்ணிக்கிறேன்னு சொல்றான்.என் அண்ணா மயிலாப்பூர்லே உபாத் தியாயம் பாக்கறார்.அவர் கணபாடிகள்.வேதம் படிச்சவர்.உங்க பொண்ணு ஜாதகம் குடுங்கோ.நான் அவர் கிட்டே குடுத்து ஜாதகப் பொருத்தம் இருக்கான்னு பாக்கச் சொல்றேன்.ஜாதகம் பொருந்தி இருந்தா நாம மேலே ஆக வேண்டியதைக் கவனிக்கலாம் மாமி” என்று சொன்னார்.காயத்திரிக்கு ரொம்ப சந்தோஷம்.”ரொம்ப சந்தோஷம் மாமா.நான் அடுத்த முறை கோவிலுக்கு வரும் போது இவ ஜாதகத்தைக் கொண்டு வந்துத் தரேன்.நீங்க உங்க அண்ணா கிட்டே குடுத்து ஜாதகம் பொருந்து இருக்கான்னு பாக்க சொல்லுங்க”என்று சொல்லி விட்டு வந்தாள்.வரும் வழியில் காயத்திரி லதாவிடம் “லதா,இந்த பையன் ஜாதகமும் உன் ஜாதகமும் பகவான் புண்ணியத்தில் பொருந்தி இருந்தா போதும். அவா வாத்தியார் குடும்பம் தான்.அதிகமா ஒன்னும் கேக்க மாட்டா.நான் என் கிட்டே இருக்கிற எல் லா பணத்தையும் போட்டு,உன் கல்யாணத்தை முடிச்சடலாம்ன்னு நினைக்கிறேன்.அப்புறமா எனக்கு வரும் சம்பளத்தில் சேத்து வச்சு வருஷந்திர செலவுகளை எல்லாம் நான் பண்ணி விடலாம்ன்னு நினைக்கிறேன்” என்று சந்தோஷம் பொங்க சொன்னாள்.

லதா பதில் ஒன்னும் சொல்லாமல் வந்துக் கொண்டு இருந்தாள்.காயத்திரி லதா ஒன்னும் பதில் சொல்லாமல் வந்துக் கொண்டு இருப்பதை கவனித்து “என்னடீ லதா,நான் இவ்வளவு சொல்றேன்,நீ கம்மென்று ஒன்னும் சொல்லாம வாயை மூடிண்டு வறே”என்று லதாவை கோபித்துக் கொண்டாள். ”இப்ப ரோடிலே என்னம்மா பேசறது. எல்லாம் ஆத்லே நாம் போய் பேசலாலேம்மா” என்றாள் லதா. காயத்திரி அதற்கு மேல் ஒன்னும் பேசவில்லை. பசி அதிகமாக இருக்கவே வீட்டிற்கு வந்த காயத்திரி கல்லைப் போட்டு தோசையை வார்க்க ஆரம்பித்தாள்.தொட்டுக்க கொஞ்சம் சட்னி அரைத்தாள். ”லதா,வா சாப்பிடலாம்”என்று அழைத்தாள் காயத்திரி.லதாவும் சாப்பிட வந்து உட்கார்ந்தாள்.காயத்திரி லதாவுக்கு மூனு தோசையைப் போட்டு தொட்டுக்க சட்னியையும் போட்டாள்.காயத்திரிக்கு பொறுமை இல்லை.”என்னடி ஆத்துக்குப் போய் பேசலாம்ன்னு சொன்னே.இப்ப நாம் ஆத்லே தான் இருக்கோம்,பேசேன்” என்று ‘பட’ பட’ என்று கேட்டாள்.

தோசையை சாப்பிட்டுக் கொண்டே லதா “அம்மா நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே.நீ நன்னா யோசிச்சுப் பாரு.குருக்கள் சொன்ன இடமோ ஒரு கணபாடிகள் வீடு.அவர் வேதம் படிச்சவர் அம்மா.நான் அவா ஆத்துக்கு போய் எப்படி வாழ்ந்து வர முடியும்மா.எப்படிம்மா நான் எனக்கு நடந்த ‘உண்மையை’ அவர் கிட்டே சொல்லாம மறைச்சுண்டு வாழ்ந்து வரமுடியும்.நான் பண்றது தப்பு இல் லையாம்மா.அவா ஒரு ‘நல்ல’ பொண்ணாப் பாத்து கல்யாணம் பண்ணிக்கட்டும்மா. ஜாதகம் பொரு ந்தி இருந்து,அந்தப் பையன் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னாலும் நான் அந்த வீட்டுக்கு ஒரு மாட்டுப் பொண்ணா போக மாட்டேம்மா” என்றாள் தீர்மானமாக.தூக்கி வாரிப் போ ட்டது காயத்திரிக்கு.”ஏண்டி அப்படி சொல்றே.உனக்கு என்ன பயித்தியமா பிடிச்சி இருக்கு.நல்ல பிராமண குடும்பம்.வேதம் படிச்சவா.இந்த மாதிரி இடம் உனக்கு கிடைச்சா உனக்கு என்னடி கஷ்டம். உனக்கு நடந்த அந்த பழைய சம்பவத்தை இன்னும் ஏண்டீ நினைச்சுண்டு இருக்கே.அதை மறந்து ட்டு ஜாதகம் பொருந்தி இருந்து,அந்த பிள்ளைக்கும் உன்னை பிடிச்சி இருந்தா நீ பேசாம கல்யாண த்தைப் பண்ணிக்கோ.நான் என் கையில் இருகிறதை எல்லாம் போட்டு உனக்குக் கல்யாணம் பண்ணி வக்கிறேன்”என்று சொன்னாள் காயத்திரி.“அந்த குடும்பம் ரொம்ப ‘நல்ல’ வேதம் படிச்ச குடும்பம். அந்த குடும்பத்லே இந்த ‘கெட்ட’ பொண்ணு போய் குடித்தனம் பண்ண கூடாதும்மா.உனக்கு ஏம்மா இது தோணலே.நாம் இந்த பெரிய தப்பைப் பண்ணக் கூடாதும்மா.நீ தானேம்மா நாம் எந்தப் தப்பும் பண்ணக் கூடாதுன்னு சொல்லுவே.இப்ப இந்தத் தப்பைப் பண்ணச் சொல்றயேம்மா.என்ன பாவம் பண்ணேனோ நான்.‘இப்படி’ ஆயிட்டேன்.இனிமே நான் மேலே மேலே தப்பு பண்ண மாட்டேம்மா. என்னை மன்னிச்சுடும்மா”என்று சொல்லி விட்டு எழுந்து தன் கைகளை கழுவ போய் விட்டாள் லதா.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *