தீர்ப்பு உங்கள் கையில்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 14, 2019
பார்வையிட்டோர்: 4,543 
 
 

அத்தியாயம்-22 | அத்தியாயம்-23

ரமேஷ் ஆச்சரியமாக லதா சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தான்.

’லதா இத்தனை கஷடங்களுக்கு நடுவே அம்மா சொல்லியும் கேக்காம தனக்கு ‘அபார்ஷன்’ பண்ணிக்காம ஆனந்தைப் பெத்துண்டு வந்து இருக்காளே.அவ மட்டும் அம்மா ஆசைப் பட்டது போல ‘அபார்ஷன் பண்ணீண்டு இருந்தா ஆனந்த இந்த லோகத்லே பொறந்தே இருக்க மாட்டானே. அவ ‘அபார்ஷன் பண்ணிக்காம யாரோ ஒருவரைக் கல்யாணம் பண்ணிண்டு இருந்தா,அவ கணவ னோடும்,அம்மாவோடவும் எங்கோ சந்தோஷமா இருந்து வந்துண்டு இருப்பா.பாவம் என் ஆனந்த் அந்த ஆத்லே தனக்கு அப்பா இல்லை என்கிற குறையோடு காலம் பூராவும் வாழ்ந்து வந்துண்டு இரு ப்பான்.இல்லை லதாவும்,அவ கணவனும் ஆனந்தை ஏதாவது ‘அனாதை இல்லத்லே’சேத்துட்டு இருந்தா,அவன காலம் பூராவும் ஒரு அனதையா வாழ்ந்துண்டு வந்து இருப்பான்.அப்படி ஆயி இருந் தா நான் ஆனந்தை பாத்தே இருக்க முடியாதே.என் ‘குடும்பா வாரிசு’ன்னு யாருமே இல்லாம போய் இருக்குமே’ என்று எண்ணும் போது அவனை அறியாமல் அவன் கண்களில் கண்ணீர் வந்தது.அவன் தன் பாகெட்டில் இருந்து கைக் குட்டையை எடுத்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டான்.

லதா மறுபடியும் தொடர்ந்தாள்.”நல்ல வேளையா அந்த பகவான் தான் என் பக்கம் இருந்து என்னை உங்க கண்லே பட வச்சு,உங்களை இந்த குடும்பத்தோடு சேத்து வச்சு இருக்கார்.அதனாலே தானோ என்னவோ பகவான் எனக்கு கல்யாணமே பண்ணிக்கணும் என்கிற புத்தியை குடுக்கலே. நீ ங்க என்னை இப்போ கல்யாணம் பண்ணிண்டு,எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை குடுங்கோ.இத்த னை நாளா என் நெத்திலே நான் சாந்து இட்டுண்டு வந்து இருக்கேன்.என்னைக் கல்யாணம் பண்ணி ண்டு என் நெத்திலே நீங்க குங்குமத்தை இடுங்கோ.என்னை ஒரு சுமங்கலி ஆக்குங்கோ”என்று சொ ல்லி விட்டு குலுங்கி குலுங்கி அழுதாள்.‘லதா தன் பூரா கதையை இப்படி விவரமா சொல்லி விட்டு குலுங்கி குலுங்கி அழுது கொண்டு இருப்பதை பார்த்ததும்காயத்திரிக்கு அழுகை வந்தது. தன் புடவைத் தலைப்பால் தன கண்களைத் துடைத்துக் கொண்டாள்.லதா கதையை பூராவையும் கேட்ட ரமேஷூ க்கு என்ன சொல்லுவது என்றே புரியவில்லை.அவன் யோஜனைப் பண்ணினான்.கொஞ்ச நேரம் ஆனதும் ரமேஷ் “லதா,நான் சொல்வதை கொஞ்சம் நிதானமா கேளு.நான் உங்க எல்லோர் கூடவே தான் என் வாழ் நாள் பூராவும் இருந்து வரப் போறேன்.இது நிச்சியம்.ஆனா எனக்கு கல்யா ணம் பண்ணிண்டு மறுபடியும் இந்த சம்சாரத்தில் வர இஷ்டமே இல்லை.நான் ஆன்மிகத்திலே இரு ந்து வரவே ஆசைப்படறேன். என்னை கல்யாணம் பண்ணீக்கோங்கன்னு நீ வற்புருத்தாதே” என்று கெஞ்சும் குரலில் சொன்னான்.

லதா தன் கண்களைத் துடைத்துக் கொண்டு “நீங்க அப்போ என்னை கல்யாணம் பண்ணிக் கொள்ள ரொம்ப ஆசைப்பட்டேளே.இப்போ நான் ஒரு ‘அம்மாவா’ஆயிட்டேன்னு என்னை உங்களு க்கு பிடிக்கலையா.நானா கல்யாணம் ஆகாம ஒரு ‘அம்மாவா’ ஆகணும்ன்னு ஆசைப் பட்டேன்.உங்க தம்பி தானே இதுக்கு காரணம்.இப்ப நான் உங்களை ரொம்பக் கெஞ்சிக் கேக்கறேன். என்னைக் கல் யாணம் பண்ணீண்டு எனக்கு வாழ்வு குடுங்கோ”என்று சொல்லி அழுதுக் கொண்டே தன் இருகை களையும் கூப்பி ரமேஷைப் பார்த்துக் கேட்டாள்.“இல்லை லதா.என்னை என் போக்கிலேயே விட்டு டு.எனக்கு இந்த சம்சார வாழ்க்கையிலே கொஞ்சம் கூட ஈடுபாடு இல்லை.நான் என்ன பண்ணட்டும். எனக்கு இப்படி இருக்கறது தான் மன நிம்மதியே தறது”என்று சொல்லி விட்டு சும்மா இருந்தான்.
உடனே லதா “உங்களுக்கு இப்படி இருக்கறது நிம்மதியா இருக்கலாம்.ஆனா நான் நிம்மதி இல் லாம தவிக்கிறேனே.என்னைக் கல்யாணம் பண்ணிண்டு எனக்கு நிம்மதியே குடுங்கோ ‘ப்ளீஸ்’. என் னைக் கல்யாணம் பண்ணிக்கோங்கோ.எனக்கு ஒரு வாழ்க்கையை குடுங்கோ” என்று அழுதுக் கொ ண்டு மறுபடியும் கெஞ்சினாள்.ரமேஷ் பதில் ஒன்னும் சொல்லமல் சும்மா இருந்தான்.‘சரி, நாமும் அந்தப் பையன் கிட்டே சொல்லி,லதாவை கல்யாணம் பண்ணிக்கோ’ன்னு சொல்லலாம் என்று நினை த்தாள் காயத்திரி.ரமேஷைப் பார்த்து “ஏம்ப்பா,நீ அவளை கல்யாணம் பண்ணிக்க ரொம்ப ஆசைப்பட் டே.அவளும் உன்னை கல்யாணம் பண்ணிக்க இன்னும் ஆசைப்பட்டுண்டு இருக்கா.நீ தயவு செஞ்சி அவளைக் கல்யாணம் பண்ணிக்கோப்பா” என்று சொன்னாள்.ரமேஷ் காயத்திரி சொன்னதுக்கு ”இல் லே மாமி,எனக்கு இந்த கல்யாண ஆசையே இல்லே.நான் ஆன்மீகத்தி லே இருந்து வரத் தான் ஆசைப்படறேன்” என்று மறுப்டியும் சொன்னான்.லதாவுக்கு பொறு மை எல்லையை மீறி விட்டது.அவள் ரமேஷை பார்த்து “நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் னு சொன்னா நான் இனிமே உயிர் வாழ போவது இல்லை.எனக்கு ஒன்னும் பிடிக்கலே.எனக்கு இந்த தேவலோக ‘ப்லாட்டும் வே ணாம்,என் அம்மாவும் வேணாம்,ஆனந்தும் வேணாம்,நீங்களும் வேணா ம்.நான் என் ரூமுக்குள் போ ய் கதவை தாழ்பாள் போட்டுண்டு ‘பான்’ கொம்ப்லே தூக்குப் போட்டு ண்டு செத்துப் போறேன். இன்னும் ஐஞ்சு நிமிஷம் கழிச்சு அந்த ‘பெட் ரூம்’ கதவை நீங்க உடைச்சு என் பொணத்தை கீழே இறக்கி எனக்குக் ‘காரியங்கள்’ பண்ணுங்கோ.அப்போவாவது உயிரோடு இருக்கும் போது எனக்கு கிடைக்காத நிம்மதி,நான் செத்து போன பிறகாவது எனக்கு கிடைக்கும்”என்று சொல்லி விட்டு பெட் ரூமுக்குள் போய் கதவைச் சாத்தி தாழ்பாள் போட்டுக் கொண்டாள்

காயத்திரி பயந்துப் போனாள்.“ஐயையோ,இந்தப் பொண்ணு தற்கொலை பண்ணிண்டு விடு வா.இதுக்கு முன்னாடி அவ தற்கொலை பண்ணீக்க போனவ தான்.அவளைக் கொஞ்சம் காப்பாத்து ப்பா ,அவளை காப்பாத்துப்பா” என்று கத்திக் கொண்டு அந்த ‘பெட் ரூமை’ நொக்கி ஓடிப் போய் கா யத்திரி ‘பெட்’ ரூம் கதவை ‘பட’‘பட’ என்று தட்டி”லதா,உன் உசிரே மாய்ச்சுக்காதே. நான் இருக்கேன் உனக்கு.உன் உசிரே அநியாயமா போக்கிக்காதே.என்னையும் ஆனந்தனையும் தனியா தவிக்க விட்டு ட்டு போயிடாதே” என்று கத்தினாள்.‘பெட்ரூமில்’ இருந்து ஒரு சத்தமும் வரவில்லை.காயத்திரி ரொம் ப பயந்து போய் “லதாவை காப்பத்துப்பா.நீ அவளை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னா அவ நிச்சியமா தன்னை மாய்ச்சிக்குவா.அவளை காப்பாத்து.அவ நம்மை விட்டு போயிடுவா”என்று சொல்லி தன் கையை கூப்பி ரமேஷை கெஞ்சினாள்.ரமேஷ் ரொம்ப பயந்துப் போனான் .காயத்திரி மாமி சொன்னது போல ‘லதா தன் உயிரை போக்கிண்டு விடுவாளா.ஆனந்த் அம்மா இல்லாத பைய னா ஆகி விடுவானா.இவ தற்கொலை பண்ணிக் கொள்ள நான் காரணமா ஆகி விடுவேனா.நாம் யாருக்கும் ஒரு கஷ்டம் தராம வாழ்ந்துண்டு வரணும்ன்னு தானே முடிவு பண்ணி இது நாள் வரை வாழ்ந்துண்டு வரோம்.இப்போ ஒரு அபலை ஏழைப் பெண் தற்கொலைக்கு நான் காரணம் ஆகி விடு வேன் போல இருக்கே’ என்று ரமேஷ் நினைத்துக் கொண்டு இருக்கும் போது அவனுக்கு வரதன் சொன்ன வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தது.

’இப்போ என் கண் முன்னாலே அந்த பெண் தற்கொலை பண்ணி கொள்ளப் போறாளே.நான் இதைப் பார்த்துண்டு சும்மா இருக்கப் போறே னே.இது சரி இல்லையே.தப்பாச்சே,பொ¢ய தப்பாசே.இது என்னடா கஷ்டம்’ன்று நினைத்து ரமேஷ் வேதனை பட்டான்.உடனே ரமேஷ் மெல்ல எழுந்து ‘பெட் ரூம்’ வாசலுக்கு வந்து லதா “நீ தற்கொலை எல்லாம் பண்ணிக்காதே.வெளியே வா” என்று சொல்லி அவனும் கதவை பலமாக தட்டினான்.ஆனால் லதா உள்ளே இருந்துக் கொண்டே“நான் வெளியே வர வே மாட்டேன்.நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா தான் நான் வெளியே வரு வேன்.இது நிச்ச்சியம்”என்று கத்தினாள்.

உடனே காயத்திரி “நான் சொன்னேப்பா.அவ வெளியே வர மாட்டா.நீ அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னாத் தான் அவ தன் முடிவை மாத்திண்டு வெளீயே வருவா.நீ அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு.என் பொண்ணைக் காப்பாத்து” என்று சொல்லி ‘ஓ’ என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.லதா இருந்த ரூமில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. காயத்திரி விடாமல் “லதா வெளியே வா.லதா வெளியே வா” என்று கத்திக் கொண்டு ‘பெட் ரூம்’ கத வைத் தட்டிக் கொண்டு இருந்தாள்.கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணீனான் ரமேஷ்.அவனுக்கு ஒரு வழியும் தெரியவில்லை.வேறே வழி இல்லாம“லதா,நீ வெளியே வா.நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன்.உடனே வெளியே வா” என்று சொன்னான்.ரெண்டு நிமிஷம் கழித்து லதா அழுதுக் கொண்டே வெளியே வந்தாள்.‘பான்’ கொம்பில் அவள் சுறுக்குப் போட்ட அவள் புடவைத் தொங்கி க் கொண்டு இருந்தது. ‘பான்’கீழே ‘டிரெஸ்ஸீங்க் டேபிள்’ போட்டு இருந்தது.ரமேஷூம்,காயத்திரியு ம் அந்தப் ‘பெட் ரூமை’ப் பார்த்தார்கள் அவர்களுக்குத் தூக்கி வாரிப் போட்டது.காயத்திரி ரமேஷை பார்த்து “நல்ல வேளையா,நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேப்பா.இல்லாவிட்டா இத்தனை நேரத்துக்கு அவ பொணமா தொங்கிண்டு இருப்பா.உனக்கு ரொம்ப தாங்க்ஸ்ப்பா”என்று சொல்லி தன் கையைக் கூப்பிச் சொன்னாள்.

தன் ரூமில் இருந்து வெளியே வந்த லதா ரமேஷ் காலில் விழுந்து அவனை நமஸ்காரம் பண் ணீ “உங்களுக்கு ரொம்ப ‘தாங்க்ஸ்’ நீங்க மட்டும் இன்னும் ஒரு ஐஞ்சு நிமிஷம் ஒன்னும் சொல்லாம இருந்தா நான் தூக்கிலே தொங்கிண்டு இருந்து இருப்பேன்.நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேள்ன்னு சொன்னதும்,என் மனசு ரொம்ப உடைஞ்சுப் போச்சு. எனக்கு வாழவே பிடிக்கலே” எ ன்று அழுதுக் கொண்டே சொன்னாள்.ரமேஷ் மெல்ல லதா தோளைத் தொட்டு எழுப்பினான்.அவ ளை அழைத்துக் கொண்டு வந்து சோபாவில் உட்கார்ந்தான் ரமேஷ்.அழுது அழுது லதாவின் முகமும் கண்களும் கோவைப் பழம் போல் சிவந்து இருந்தது.காயத்தி ரி சமையல் ரூமுக்குள் போய் எல்லோ ருக்கும் காபிக் கலந்து கொண்டு வந்து ரமேஷிடம் ஒரு டவரா ட்ம்ளரைக் கொடுத்து விட்டு “என் பொண்ணைக் காப்பாத்தினேப்பா.உனக்கு நான் எப்படி என் நன்றயே சொல்றதுன்னே எனக்கு தெரியலே” என்று மறுபடியும் சொல்லி தன் கைகளை கூப்பி அவனுக்கு நன்றி சொன்னாள்.ரமேஷ் ”மாமி நீங்க கையை எல்லாம் கூப்பி எனக்கு நன்றி சொல்ல வேணாம்.நீங்க வயசிலெ ரொம்ப பெரிய வா” என்று சொல்லி விட்டு லதாவை பார்த்து “லதா,இனிமே நீ அழவேகூடாது. எப்பவும் சந்தோஷமா இரு ந்து வரணும் தெரியுறதா.முதல்லே போய் அந்த ‘பான்’ கொம்பிலே இருந்து நீ உன் புடவையாலே போட்ட சுறுக்கை அவிழ்த்துட்டு வா.இனிமே இந்த மாதிரி எல்லாம் செய்யக் கூடாது இந்த மாதிரி தற்கொலை முயற்சி செய்யறது,இது தான் முதலும் கடைசி தடவையாகவும் இருக்க ணும்”என்று சொ ல்லி விட்டு காயத்திரி கொடுத்த காபியை மெல்ல குடிக்க ஆரம்பித்தான்.ரமேஷ் அப்படி சொன்னது ம் லதா ஓடிப் போய் ‘பான்’ கொம்பில் போட்டு இருந்த புடவை சுறுக்கை அவிழ்த்து விட்டு வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள். அவளும் அம்மா கொடுத்த் காபியை குடிக்க ஆரம்பித்தாள்.காயத் திரியும் காபியை குடித்தாள்.

கொஞ்ச நேரம் ஆன்தும் ரமேஷ் உடனே “லதா,மாமி,இதிலெ ஒரு சிக்கல் இருக்கு.நான் கல்யா ணம் பண்ணிண்டா,ஆனந்த் என்னை என்னன்னு கூப்பிடுவான்.இது நாள் வரைக்கும் அவன் என் னை ஒரு ‘அந்நியனா’ பாத்துண்டு வந்து ‘அங்கிள்’ன்னு கூப்பிட்டுண்டு வறான்.கல்யாணம் ஆனா ஆனந்த் என்னை என்னன்னு கூப்பிடுவான்.நான் உன்னே கல்யாணம் பண்ணிண்டா,நீ ஆனந்தைத் துளிக் கூட வெறுக்கக் கூடாது.அவனை உன் சொந்தப் பையன் போல் நினைச்சு வரணும்.பாவம் அவ னுக்கு அப்பாவும் இல்லை,அம்மாவும் இல்லை என்கிற நிலை வரக்கூடாது.அவன் இப்போ இருப்பது போல சந்தோஷமா இருந்து வரணும்.இந்த ரெண்டு கவலை தான் என் மனசிலே இருக்கு”என்று சொன்னான் ரமேஷ்.உடனே லதா “நீங்க கவலையே படாதேள்.நான் அவனுக்கு அம்மாவா,நிச்சியமா இரு ந்து வருவேன்.அவன் என் வயித்லே பொறந்தப் பையன்.நான் அவனை பத்து மாசம் சுமந்துப் பெத்த வ.நான் அவனை எப்படி அவனை வெறுக்க முடியும்.எனக்கு வாழ்க்கைலே ஒன்னும் இல்லேன்னு ஆனப்ப,ஆனந்த் என் வயித்லே வளர ஆரம்பிச்சான்.அப்போ தான் ‘நான் வாழ்ந்து வரணும்,இந்த குழந்தையை பெத்துக்கணும்’ என்கிற ஆசையை தந்தவனே இந்த ஆனந்த் தான். நான் தினமும் வேண்டி வரும் அந்த அம்பாள் சாட்சியா நான் ஆனந்தை ஒரு நாளும் வெறுக்க மாட்டேன்” என்று சொல்லி ரமேஷூக்கு உறுதி அளித்தாள்.

“ரொம்ப ‘தாங்க்ஸ்’ லதா.இப்ப எனக்கு நிம்மதியா இருக்கு” என்று சொல்லி விட்டு கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணினான்.அந்த நேரம் பார்த்து ஆனந்த் விளையாடி விட்டு வந்து காலிங்க் பெ ல்லை அழுத்தினான்.லதா தான் எழுந்து போய் வாசல் கதவைத் திறந்தாள்.ஆனந்த் உள்ளே வந்து சோபாவில் உட்கார்ந்துக் கொண்டு டீ.வீ.பார்க்க ‘ரிமோட் கன்ட்ரோலை’ எடுத்தான்.ரமேஷ் உடனே “ஆனந்த்,நீ விளையாடிட்டு வந்தப்புறம் இப்படி சோபாவில் உக்காந்துண்டு டீ.வீ.எல்லாம் பாக்கக் கூடாது.நீ ‘பாத் ரூம்’ போய் உன் கை,கால்,மூஞ்சு,எல்லாம் அலம்பிண்டு வந்து, சுவாமி படத்தின் முன்னால் நிண்ணுண்டு உனக்குத் தெரிஞ்ச சில மந்திரங்களை சொல்லிட்டு,சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டுத் தான் நீ டீ.வீ.பாக்க உக்காரணும்”என்று சொன்னதும் ஆனந்த “சரி அங்கிள்”என்று சொல்லி விட்டு தன் கை,கால்,மூஞ்சு,எல்லாம் கழுவிக் கொண்டு வந்து சுவாமி படத்தின் முன்னால் நின்றுக் கொண்டு தனக்குத் தெரிந்த மந்திரங்களைச் சொல்லி விட்டு சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணீ விட்டு டீ.வீ.பார்க்க உட்கார்ந்துக் கொண்டான்.ரமேஷ் அவனிடம் “ஆனந்த், நீ தினமும் இந்த மாதிரி காத்தாலேயும் சாயங்காலத்திலேயும் சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணீ வரணும்” என்று சொன்னான்.

கொஞ்ச நேரம் ஆனதும் ரமேஷ் லதாவைப் பார்த்து “நான் ஆன்மீகத்லே என் மீதி காலத்தே கழுச்சு வரணும்ன்னு நினைச்சு இருந்தேன்.ஆனா அந்த பகவான் என்னை ஒரு ‘கிருஹதாஸ்ரமத்லே’ இருந்து வந்து,அதிலே எல்லாத்தையும் கிரமமா பண்ணி,முடிச்சுட்ட பிற்பாடு தான் ஆன்மீகத்துக்கு வரணும் முடிவு பண்ணி இருக்கார் போல இருக்கு.பகவான் எண்ணத்தை யாரால் மாத்த முடியும்.சரி, நான் அதன் படியே இனிமே வாழ்ந்து வறேன்.ஒரு முஹூர்த்த நாளா பாத்து நம் கல்யாணத்துக்கு எல் லா ஏற்பாடுகளும் பண்ணி,கிரமமா சாந்தி முஹ¥ர்த்தம் பண்ணிண்டு வாழ்ந்து வரலாம்” என்று சொ ன்னான்.லதா ரமேஷ் கையை எடுத்து தன் கண்களில் ஒத்திக் கொண்டாள்.கொஞ்ச நேரம் உட்கார்ந்துக் கொண்டு இருந்து விட்டு “அப்போ நான் கிளம்பறேன்” என்று சொல்லி விட்டு மெல்ல எழுந்து தன் காலை வைத்து,நடந்து தன் அக்குள் கட்டையை எடுக்கப் போனான்.லதா உடனே அந்த அக்குள் கட்டையை எடுத்து ரமேஷ அக்குளில் வைக்க உதவினாள்.பிறகு இருவரும் வாசல் கதவைத் திறந்துக் கொண்டு ‘லிப்ட்டில்’ கீழே இறங்கி கார் நிற்கும் இடத்திற்கு வந்தார்கள்.கார் டிரைவர் அங் கு இல்லை.இதைக் கவனித்த லதா ரமேஷ் கையைப் பிடித்துக் கொண்டு மெல்லிய குரலில் “நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சு எனக்கு வாழ்வு குடுத்து இருக்கேள்.நான் உங்களுக்கு ஏத்த மணைவியா நிச்சியமா இருந்துண்டு வருவேன்”என்று சொல்லி அவன் கைகளை எடுத்து அவள் கண்களில் ஒத்திக் கொண்டாள்.கொஞ்ச நேரம் ஆனதும் ரமேஷ் தன் செல் ‘போனை’ எடுத்து கார் டிரைவரைக் கூப்பிட்டான்.கார் டிரைவர் வந்ததும் ரமேஷ் காரில் ஏறிக் கொண்டு “நான் போய் வறேன் லதா” என்று சொல்லி கார் கதவை மூடினான் ரமேஷ்.லதா கொஞ்சம் பின்னால் வந்து சந்தோஷ்மாக அவனுக்கு ‘டா’ ‘டா’க் காட்டினாள்.

கார் கிளம்பிப் போனதும் லதா சந்தோஷத்துடன் ‘ப்லாட்டுக்கு’ வந்து கதவைத் திறந்துக் கொ ண்டு உள்ளே வந்தாள்.உள்ளே வந்ததும் லதா தன் அம்மாவிடம் ரகசியமா “அம்மா,எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா¡.உனக்கும் சந்தோஷம் தானேம்மா”என்று சொல்லி அவள் கையைப் பிடி த்துக் கொண்டு கேட்டாள்.“எனக்கு நிச்சியமா ரொம்ப சந்தோஷம் தான் லதா.ஏதோ போன ஜென்மத்லே நீ பண்ண பாவம்.கல்யாணம் ஆகாம ஒரு ‘காமுகன்’ உன்னை கெடுத்து,நீ கல்யாணம் ஆகாம நீ ஒரு குழந்தையைப் பெத்துண்டு இத்தனை நாளா கஷடப்பட்டுண்டு இருந்தே.எல்லாம் அந்த அம்பா ள் அனுகிரஹம் தான்.உனக்கும் கிரமமா ஒரு கல்யாணம் நடந்து,நீயும் ஒரு ஆம்படையானோடு ரொ ம்ப காலம் ‘சுமங்கலியா’வாழ்ந்து வரணும்.உனக்கு ஒரு விடிவு காலம் வராதான்னு எத்தனை வருஷமா நான் ஏங்கிண்டு இருந்தேன் தெரியுமா”என்று சொல்லி தன் பொண்ணு லதாவைக் கட்டி கொண்டாள் காயத்திரி. காயத்திரி கண்களில் கண்ணீர் வழிந்தது.லதாவும் காயத்திரியும் ரொம்ப நாட்களுக்குப் பிறகு நிம்மதியாக தூங்கினார்கள்.

பங்களாவுக்கு வந்த ரமேஷ் தன் கை கால்களை எல்லாம் கழுவிக் கொண்டு வந்து சுவாமி மந் திரங்கள் எல்லாம் சொல்லி விட்டு,சமையல் கார மாமா ‘ஹாட் பாக்கில்’ செய்து வைத்து இருந்த சாப்பாட்டைச் சாபிட்டு விட்டு படுக்கப் போனான்.படுத்துக் கொண்டு ரமேஷ் யோஜனைப் பண்ணினான். ‘ஒரு வேளை நான் ஆன்மீகத்திலே இருந்து வரத் தான் ஆசைப் படுகிறேன்,எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்று நான் சொல்லி,நான் கல்யாணத்துக்குக் ஒத்துக் கொள்ளாம இருந்தா,லதா அநியாய மாக தூக்கு போட்டுண்டு செத்து போய் இருப்பாளே.ஆனந்த் அம்மா இல்லாத அனாதையா ஆகி இரு ப்பானே.இப்ப நாம் லதாவை கல்யாணம் பண்ணி கொள்றதாலே,நாம அவனுக்கு அம்மாவை குடுக்க முடிஞ்சி இருக்கு.நாமும் அவனோடு இப்போ இருந்து வர முடியும்.நாம இப்படி அக்குள் கட்டையுட னும்,‘ஆர்டிபிஷியல் காலுடன்’ இருக்கும் போது கூட லதா நம்மை வெறுக்காம விரும்புகிறாளே.அவ காதல் எவ்வளவு புனிதமா இருக்கும்.வெறுமனே வெளி அழகுக்கு அவ ஆசைப் படலே தவிர ‘உங்க ளுக்கு ஏத்த மணைவியா இருந்து வருவேன்’ன்னு கூடச் சொன்னாளே.உண்மையிலே அவ ரொம்ப நல்ல பொண்ணு.நாம ஒரு தவறும் பண்ணலே.சரியாத் தான் பண்ணி இருக்கோம்’ என்று எண்ணி சந்தோஷப் பட்டான் ரமேஷ். அவன் மனம் நிம்மதி அடைந்தது .அவன் தூங்கப் போனான். அவன் நிம்ம தியாக தூங்கினான்.

அடுத்த நாள் காலையிலே எழுந்து குளித்து விட்டு ரமேஷ் சுவாமி மந்திரங்கள் எல்லாம் சொல் லி விட்டு, ‘டிபன்’ சாப்பிட்டு விட்டு அவன் வழக்காமாகப் போகும் கோவிலுக்குப் போய் விட்டு ‘பாக்டரிக்கு’வந்து தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான்.வார நாட்களில் ரமேஷ் லதாவோடு போ னில் பேசி வந்தான்.லதாவுக்கு சுரேஷ் தன்னோடு அடிக்கடி போனில் பேசி வருவதை நினைத்து சந் தோஷப் பட்டுக் கொண்டு வந்தாள்.அடுத்த வாரமே ரமேஷ் ப்லாட்டுக்கு வந்து காயத்திரி,லதா, ஆனந்த் மூவரையும் காரில் அழைத்துக் கொண்டு ‘நல்லி சில்க்ஸ்’ கடைக்கு போய் நல்ல விலைக்கு கூரைப் புடவையையும்,நாலு பட்டு புடவையையும்,காயத்திரிக்கும் நாலு பட்டு புடவைகளும் ‘மாட்சிங்க் ’ப்லவுஸூம், ஆனந்துக்கும் நாலு நல்ல ‘டரஸ்ஸூம்’ வாங்கிக் கொண்டு வந்தான்.

ஒரு நல்ல முஹ¥ர்த்த நாளில் ரமேஷ் ஐஞ்சு வாத்தியார்களை வைத்துக் கொண்டு எல்லா மந்தி ரங்களையும் சொல்லி கிரமமாக ‘மங்கல்ய தாரணம்’ பண்ணீ,லதா கழுத்தில் மூனு முடிச்சு போட்டு தாலி கட்டி கல்யாணம் பண்ணிக் கொண்டான்.போட்டோ எடுப்பவரும்,விடியோ எடுப்பவரும் ஒரு நிமிஷம் கூட சும்மா இருக்காமல் வந்தவர்களையும்,வாத்தியார் செய்த எல்லா விசேஷங்களையும், ‘மாங்கல்ய தாரணம்’ வரை ஒன்னு விடாமல் எடுத்து தள்ளி விட்டார்கள்.பிறகு நாலு பேரும் ஒரு பெ ரிய ஹோட்டலுக்குப் போய் விருந்து சாப்பாடு சாப்பிட்டு விட்டு வந்தார்கள்.அன்று சாயந்திரமே ரமே ஷ் தன் பங்களாவுக்கு வந்து சமையல் கார மாமாவைப் பார்த்து “நீங்கோ நாளையிலே இருந்து, உங்க சம்சாரத்தோடு ப்லாட்டுக்கு வந்து சமையல் பண்ணி வாங்கோ.நான் இனிமே அங்கே தான் இருக்கப் போறேன்”என்று சொல்லி அவரை அனுப்பி விட்டு,ஆறுமுகத்தைப் பார்த்து “நாளையில் இருந்து என்னுடைய கிண்டி பாக்டரிக்கு வேலைக்கு வா” என்று சொல்லி அனுப்பி விட்டான்.

தன் டிரைவரை வைத்து கொண்டு வழியில் ‘கேக்கும்’ ‘சாக்லெட்டையும்’ வாங்கிக் கொண்டு, ஆறுமுகம் ‘பேக்’ பண்ணி வைத்து இருந்த ஐஞ்சு “சூட் கேஸ்களை’ யும்,சித்தப்பா கொடுத்த நகை பெ ட்டியையும்,எடுத்துக் கொண்டு ’ப்லாட்டுக்கு வந்து காலிங்க் பெல்லை அழுத்தினான்.லதா வாசல் கதவைத் திறந்தாள்.வாசலில் நின்று கொண்டு இருந்த சுரேஷை பார்த்ததும்“வாங்கோ,உள்ளே வாங் கோ”என்று சிரித்துக் கொண்டே கூப்பிட்டாள்.ரமேஷூம் சிரித்துக் கொண்டு மெல்ல நடந்து ‘ப்லாட்’ உள்ளே வந்தான்.லதா உடனே ரமேஷின் அக்குள் கட்டையை அவனிடத்தில் வாங்கி ஒரு ஓரமாக சாய்த்து வைத்து விட்டு,அவன் பக்கத்தில் சோபாவில் உட்கார்ந்தாள்.ரமேஷ் மணியை பார்த்து “கார் லே இருக்கிற கேக் டப்பாவையும்,சாக்லெட் டப்பாவையும்,ஐஞ்சு ‘சூட் கேஸ்களையும்’ நகைப் பெட்டி யையும் எடுத்து வா”என்று சொன்னான்.உடனே மணி காருக்குப் போய் அவைகளை எடுத்துக் கொ ண்டு வந்து ரமேஷிடம் கொடுத்தான்.மணி “மூனு சிவப்பு ‘சூட் கேஸ்’களையும்,அந்த ‘பெட் ரூமில் வச்சுட்டு,பச்சை கலர் ரெண்டு சூட் கேஸ்களை சுவாமி ரூம் கிட்டே வச்சுட்டு.நகை பெட்டியையும். ‘கேக்’ டப்பாவையும்,’சாக்லெட்’ டப்பாவையும் மட்டும் என் கிட்டே குடு” என்று சொன்னதும் மணி ரமேஷ் சொன்னது போல செய்தான்.

ரமேஷ் முதலில் ஆனந்தை கூப்பிட்டு ‘கேக்’ பெட்டியையும்,’சாக்லெட்’ டப்பாவையும் கொடு த்தான்.”ரொம்ப தாங்க்ஸ் அப்பா” என்று ஆனந்த் சொன்னதும் ரமேஷூக்கு மிகவும் ஆச்சரியமாக இரு ந்தது.”என்ன ஆனந்த்,போன வாரம் வரை நீ என்னை ‘அங்கிள்’ன்னு கூப்பிட்டுண்டு இருந்தே. இன் னைக்கு என்ன என்னை ‘அப்பா’ன்னு நீ கூப்பிடறே”என்று ஆச்சரியத்தோடு கேட்டான் ரமேஷ். உட னே ஆனந்த் “அம்மா தான் என்னை இனிமே உங்களை ‘அப்பா’ன்னு கூப்பிடணும்ன்னு சொன்னா அங்கிள்,சாரி அப்பா”என்று சொல்லி ‘கேக்’ டப்பாவையும்,’சாக்லெட்’ டப்பாவையும் வாங்கிக் கொண் டு போய் ‘டேபிளில்’ வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.‘என்னடா இது,லதாவே நம்ப ஆனந் தை என்னை இனிமே ‘அப்பா’ன்னு கூப்பிணும்ன்னு சொல்லி இருக்கா.இதைத் தானே ஆனந்த் பண் ணணும்ன்னு நாம ஆசைப் பட்டோம்’என்று நினைத்த போது அவன் உடம்பு பூராவும் புல்லரித்தது.

அவன் தன் கண்களை மூடிக் கொண்டு இருந்தான்.அவன் தினமும் வேண்டி வரும் பகவானு க்கு தன் நன்றிகளை மனதில் சொல்லிக் கொண்டான்.அவன் தன் கண்களை மூடிக் கொண்டு இருந் தான்.பத்து நிமிஷம் ஆகி விட்டது.லதாவுக்கும்,காயத்திரிக்கும் பயம் வந்து விட்டது.உடனே லதா ரமேஷப் பார்த்து ”என்ன நீங்க உங்க கண்ணை மூடிண்டு ஒன்னும் பேசாம இருக்கேள்.ஆனந்த உங் களே ‘அப்பா’ன்னு கூப்பிட்டது உங்களுக்கு பிடிக்கலையா சொல்லுங்கோ.நான் அவனை பழையபடி ‘அங்கிள்’ன்னு கூப்பிட சொல்லட்டுமா”என்று பயந்து போய் கேட்டாள்.உடனே ரமேஷ் “நீயும், அம் மாவும் பண்ணா,அது ரொம்ப சரியா இருக்கும்.ஆனநத என்னை ‘அப்பா’ன்னே கூப்பிடட்டும். எனக் கும் அப்படி கூப்பிடறது தான் ரொம்ப பிடிச்சி இருக்கு”என்று சொன்ன பிறகு தான் லதாவுக்கும் காயத்திரிக்கும் மூச்சே வந்தது.காயத்திரி உடனே “நீங்க என்னை ‘அம்மா’ன்னு சொன்னேளே.அதை கேக்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு”என்று சொல்லி தன் கண்களை துடைத்துக் கொண்டு, ’இனிமே நானும் உங்களே ‘வாங்கோ,போங்கோ’ன்னு கூப்பிடணும்.நீங்க இந்த ஆத்து மாபிள்ளை ஆச் சே.அது தான் முறை.சரியும் கூட.என் அப்பாவும் லதாவின் அப்பா பேரைச் சொல்லி கூட்டுட்டு இரு ந்தார்.ஆனா எனக்கு கல்யாணம் ஆனவுடனே அவர் லதா அப்பாவை ‘வாங்கோ’,’போங்கோ’, ‘மாப்பி ள்ளே’என்று கூப்பிட ஆரம்பிச்சுட்டார் “என்று சொன்னாள்.

வழக்கம் போல தன் அம்மாவுக்கு ஒரு துண்டு கேக்கைக் கொண்டு போய் கொடுத்தான்.லதா ஆனந்தைப் பார்த்து “ஆனந்த் முதல்லே ஒரு துண்டை இனிமே நீ அப்பாவுக்குத் தந்து விட்டு அப்பு றமா எனக்குத் தரணும் தெரிகிறதா”என்று சொன்னதும் ஆனந்த் தான் கொண்டு வந்து இருந்த கேக் துண்டை ரமேஷிடம் நீட்டினான் ஆனந்த்.உடனே ரமேஷ் “இல்லை ஆனந்த்,நீ முதல்லே கேக் துண் டை பாட்டிக்குத் தரணும்.பொ¢யவாளுக்கு முதல்லே கொடுத்து விட்டு அப்புறமாத் தான் எனக்கும் அம்மாவுக்கும் கொடுக்கணும்”என்று சொன்னதும் ஆனந்த் தான் கொண்டு வந்த கேக் துண்டை பாட் டியிடம் கொடுத்து விட்டு,இன்னும் ரெண்டு துண்டுகளை எடுத்துக் கொண்டு வந்து ஒரு துண்டை ரமேஷிடம் கொடுத்து விட்டு,இன்னொரு துண்டை அம்மாவிடம் கொடுத்து விட்டு மீதி ‘கேக்கை’ச் சாப்பிட உட்கார்ந்தான்.‘கேக்கை’ சாப்பிட்டு விட்டு ரமேஷ் காயத்திரி மாமியைக் கூப்பிட்டு “இங்கே வாங்கோ.இந்த நகைப் பெட்டியை கொஞ்சம் வாங்கிண்டு தொறந்து பாருங்கோ” என்று சொல்லி தன்னிடம் இருந்த நகைப் பட்டியை காயத்திரியிடம் கொடுத்தான்.காயத்திரி ரமேஷ் கொடுத்த நகைப் பெட்டியைத் திறந்தாள்.அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.உடனே காயத்திரி “என்னை ஏன் இந்த நகைப் பெட்டியைத் தொறந்து பாக்க சொன்னேள்”என்று கேட்டாள்.உடனே ரமேஷ் “இந்த நகைகள் எல்லாம் எங்க ஆத்து நகைகள்.நான் இத்தனை நாளா இந்த நகைகளை எல்லாம் பத்திரமா பாதுகாத்து வந்தேன்.நான் இப்போது லதாவை கல்யாணம் பண்ணீண்டு இருக்கேன்.இனிமே இந்த நகைகள் எல்லாம் லதாவுக்கும் ஆனந்துக்கும் தான் சொந்தம்.அதனால் தான் இந்த நகைப் பெட்டியை உங்க கிட்ட குடுத்து இருக்கேன்” என்று சொன்னான்.

லதாவும் காயத்திரியும் அந்த நகைகளை எல்லாம் பார்த்தார்கள்.அதில்’இருபது ஜதை வளையல்கள்,ஒட்டியாணம்,நிறைய நீள சங்கிலிகள்,நிறைய ஷார்ட் சங்கிலிகள்,வைரத் தொடு,வைர மூக்கு த்தி,தங்க கொலுசுகள்,வெள்ளீ கொலுசுகள்,வைர அட்டிகை,நிறைய தங்க நாணயங்கள்,கங்கணங்க ள்,ப்ரேஸ்லெட்டுகள்,இப்படி நிறைய இருந்தன. உடனே காயத்திரியும் லதாவும்“இவ்வளவு நகைகளா” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்கள்.பிறகு ரமேஷ் “லதா,இந்த நகைகளிலே உனக்கு பிடிச்ச நகை களை தின்மும் போட்டுண்டு வா.அம்மாவுக்கு பிடிச்ச நகைகளை அம்மா போட்டு வரட்டும்”என்று சொன்னான்.லதா”சரி,நான் அப்படியே பண்றேன்” என்று சொல்லி விட்டு காதுக்கு ¨ரைத்தோடு, மூக்குக்கு வைர மூக்குத்தி,ரெண்டு செயின்,கைக்கு ரெண்டு ஜதை வளையல் எல்லாம் போட்டுண்டு ரமேஷிடம் காட்டி”நான் போட்டுண்டு இருக்கிறது உங்களுக்கு பிடிச்சு இருக்கா” என்று சந்தோஷ த்துடன் கேட்டாள்.உடனே ரமேஷ் சந்தோஷப் பட்டு “ரொம்ப நன்னா இருக்கு”என்று சொல்லி லதா வை பாராட்டினான்.காயத்திரி வெறுமனே ஒரு செயினை மட்டும் போட்டுக் கொண்டாள்.மீதி நகைகளுடன் லதா நகைப் பெட்டியை ஜாக்கிறதையாக பீரோவில் வைத்து பூட்டினாள்,

சமையல் கார மாமி எல்லோருக்கும் காப்பிப் போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள்.ரமேஷ் காயத்திரி கொடுத்த காப்பியை வாங்கிக் குடித்தான்.பிறகு ரமேஷ் காயத்திரியைப் பார்த்து ”ஒரு பச்சை கலர் சூட் கேஸ்லே நிறைய சுவாமி புஸ்தகங்கள் இருக்கு.இன்னொல்லே நிறைய வெள்ளீ பூஜா சாமா ன்கள் இருக்கு.நீங்கோ சுவாமி கிட்டே வச்சுட்டு,தினமும் சுவாமிக்கு அந்த ரெண்டு பொ¢ய வெள்ளீ குத்து விளைக்கை ஏத்திட்டு,உங்களுக்கு பிடிச்ச சுவாமி புஸ்தகத்தை படிச்சுண்டு பூஜையும் பண்ணி வாங்கோ”என்று சொன்னதும் காயத்திரி ஒரு பச்சை கலர் சூட் கேஸ்லே இருந்த எல்லா சுவாமி புஸ்தக ங்களையும் எல்லாம் எடுத்து சுவாமி கிட்டே வைத்து விட்டு,அடுத்த சூட் கேஸ்லே இருந்த எல்லா வெ ள்ளி பூஜா சாமான்களையும் சுவாமி கிட்ட வைத்து விட்டு,ரெண்டு பொ¢ய வெள்ளி குத்து விளக்கில் நிறைய தீப எண்ணையை விட்டு தீபம் ஏத்தி விட்டு சுவாமியை வேண்டிக் கொண்டாள்.‘இவ்வளவு வெள்ளி பூஜா சாமான்களா’ என்று மலைத்து போய் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு இருந்து விட் டு ஹாலுக்கு வந்தாள்.காயத்திரி ரமேஷ்ப் பார்த்து “நீங்க சொன்னா மாதிரி நான் சுவாமி கிட்டே தீப எண்ணையை நிறைய விட்டு ரெண்டு வெள்ளீ குத்து விளைக்கையும் ஏத்தினேன்” என்று சொன்னா ள்.கொஞ்ச நேரம் ஆனதும் ரமேஷ்”நான் இப்போ உங்க மாப்பிள்ளையா ஆயிட்டேன்.நான் கேக்கறனே ன்னு நீங்க தப்பா எடுத்துக்காதீங்கோ.எங்க குடும்பம் பத்தி உங்களுக்கு நன்னாத் தெரியும்.எனக்கு வேறே யாரும் உறவே கிடையாது.லதாவுக்கு கூடப் பிறந்தவா யாராவது இருக்காளா.இல்லை லதா உங்களுக்கு ஒரே பொண்ணா” என்று கேட்டான் ரமேஷ்.

உடனே காயத்திரி “லதா,எனக்கு பொறந்த ஒரே பொண்ணு தான்.லதா அப்பா ஒரு சாதாரண ‘ஸ்வீட் மாஸ்டரா’ ஒரு ஹோட்ல்லே வேலை பண்ணண்டு இருந்தார்.ரொம்ப சம்பளம் எல்லாம் இல் லே.அதனாலே நாங்க ரெண்டு பேரும் முதல் குழந்தைப் பொண்ணாப் பொறந்துட்டதாலே,அடுத்த குழந்தையும் பொண்னாப் பொறந்துட்டா வர சொற்ப சம்பலத்தில் ரெண்டு பொண் குழந்தைகளையும் படிக்க வச்சு ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணிக் குடுப்பது ரொம்ப கஷ்டமா இருக்கும்ன்னு நினைச்சு லதாவுக்கு அப்புறமா குழந்தையே பெத்துக்கவே இல்லை” என்று சொல்லும் போது அவள் கண்கள் கலங்கியது.தன் புடவை தலைப்பால் துடைத்து கொண்டாள்.கொஞ்ச நேரம் கழித்து ரமேஷ் ”லதா என்ன படிச்சு இருக்கா”என்று கேட்டான். காயத்திரி “அவ பத்தாவது ‘பாஸ்’ பண்ணி இருக்கா. ‘அவர்’ ‘லதா பத்தாவது ‘பாஸ்’ பண்ணது போது,இதுக்கு மேலே படிக்க வச்சா இன்னும் அதிகமா படி ச்ச ஒரு பையனாப் பார்த்து தான் லதாவுக்குக் கல்யாணம் பண்ண வேண்டி இருக்கும்’ என்று சொல்லி லதாவுக்கு சீக்கிரமா கல்யாணத்தை முடிச்சி விடணும்ன்னு ஆசைப் பட்டார்.ஆனா கொஞ்ச நாளைக் கெல்லாம் அவருக்கு புத்து நோய் வந்துட்டது.டாக்டர் அவரை ஆபரேஷன் பண்ணக் கொள்ளச் சொ ன்னார்.ஆபரேஷன் பண்ணீண்டாத் தான் இந்த உடம்பு தேவலை ஆகும்,வெறுமனே மாத்திரைகளை சாப்பிட்டு வந்தா உடம்பு தேவலை ஆகாதுன்னு டாக்டர் சொல்லியும்,அவர் ஆபரேஷனுக்கு செலவு ரொம்ப ஆகும்ன்னு சொல்லி வெறுமனே மாத்திரைகளை மட்டும் சாப்பிட்டுண்டு வந்தார். கொஞ்ச மாசத்திலேயே அவர் என்னையும்,லதாவையும்,தனியா விட்டுட்டு போயிட்டார்” என்று சொல்லி அழு தாள் காயத்திரி.ரமேஷூக்கு ‘நாம் ஏன் கேட்டோம்’ என்று இருந்தது.

கொஞ்ச நேரம் ஆனதும் “உங்க கூடப் பிறந்தவா யார் யார் இருக்கா”என்று கேட்டான் ரமேஷ். ”லதா மாதிரி நானும் என் அப்பாவுக்கு ஒரே பொண்ணு தான்.லதா அப்பா என் அப்பா கிட்டே சேர்ந்து தான் ‘ஸ்வீட் மாஸ்டர்’ வேலைக் கத்துண்டு வந்தார்.அவர் ‘ஸ்வீட் மாஸ்டர்’ முழுக்கக் கத்தண்டப்புறம் தனியா ஒரு ஹோட்டலில் ‘ஸ்வீட் மாஸ்டரா’ வேலைக்கு சேர்ந்தார்.வேலைக்கு சேந்தப்புறம் ஒரு நாள் அவர் நிறைய ஸ்வீட்டும்,காரமும்,பூவும்,பழமும், வாங்கி ண்டு வந்து என் அப்பா கிட்டேக் குடுத்து நன்றி சொல்ல வந்தார்.அப்போ தான் நான் அவரை பார்த் தேன்.அவர் அழகா நல்ல ‘பர்சனாலிட்டி யாய்’ இருந்தார்.என் அப்பாவிடம் ‘அப்பா நான் அவரைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்டறேன்னு சொன்னேன்.என் அப்பாவும் அவரை கேட்டார்.அவரும் ‘உங்கப் பொண்ணை எனக்குப் பிடிச்சு இரு க்கு’ ன்னு சொன்னதும்,என் அப்பா அவரை எனக்குக் கல்யாணம் பண்ணீ வச்சார்” என்று சொ ல்லி விட்டு கொஞ்சம் ஜலத்தை குடித்து விட்டு வந்தாள் காயத்திரி.பிறகு “ஏழு வருஷம் ஆனதும் எனக்கு லதா பொறந்தா.பத்தாவது நாள் என் அப்பா அவர் ‘ப்ரெண்ட்’ கிட்டே இருந்து ஒரு ‘ஆவி’ வந்த தொட்டிலை வாங்கிண்டு வந்து ‘தொட்டில் போடும் விழா’வை எங்களோட சந்தோஷமா கொண்டாடி னார்.பதினோராவது நாள் குழந்தைக்கு லதா என்று பேர் வச்சோம்.நானும் அவரும் ‘நமக்கு ரெண்டா வது குழந்தை பொண்ணாப் பொறந்துட்டா ரெண்டு பொண் குழந்தைகளையும் வளத்து,அவாளுக் கு துணிமணிகள் வாங்கி குடுத்து,அவாளை நன்னா படிக்க வச்சு,நல்ல இடத்தில் கல்யாணம் பண் ணி குடுக்கும் வசதி இல்லே.நாம இன்னொரு குழந்தை பெத்துக்க வேணாம்,இந்த ஒரு குழந்தையே நாம வளத்து வரலாம்’ன்னு முடிவு பண்ணிட்டோம்” என்று சொல்லி விட்டு தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

காயத்திரி தொடர்ந்தாள்.”லதாவுக்கு மூனு மசம் ஆகும் வரை என் அப்பா சென்னைலே இருந் தார்.அப்புறமா ஒரு நாளைக்கு எங்க ஆத்துக்கு ரெண்டு பெட்டிகளுடன் வந்து லதா அப்பாவை பாத்து ‘மாப்பிள்ளே,என் பிராணன் போனா எனக்குக் கொள்ளீப் போட ஒரு பையன் எனக்கு வேணும்ன்னு நான் ரொம்ப ஆசைப் பட்டேன்.ஆனா காயத்திரி பத்தாவது படிச்சுண்டு இருந்தப்ப என் சம்சாரம் கம லா திடீர்ன்னு ஒரு அஞ்சு நாள் விஷ ஜுரம் வந்து,வைத்தியம் பண்ண்ணேன்.ஆனா எந்த வைத்திய மும் பல அளிக்கலே.அவ என்னையும் காயத்திரியையும் தனியா தவிக்க விட்டூட்டு போயிட்டா’ன்னு சொல்லி ரொம்ப கண்ணீர் விட்டார்.அப்புறமா நடந்ததே நான் சொல்றேன்” என்று சொல்லி விட்டு தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *