‘’ஷிவானி, இந்த ரோஸ் கலர் சட்டை உன்னிடம் இருக்கிறது. மறுபடியும் எதற்கு அதே கலர் சட்டை?’’ வேறு கலர் எடுத்துக்கொள்’’ என்றாள் சுஜாதா.
‘’மாட்டேன். எனக்கு இதே கலர்தான் வேணும்’’ அடம் பிடித்தாள் ஷிவானி.
‘’சனியனே சொன்னால் கேட்கமாட்டாயா?’’ திட்டினாள். தலையில் குட்டினாள். பிறகு, ‘’கடைக்காரரே இதைப் பார்சல் செய்யுங்கள்’’ என்றாள்.
‘அங்கிள் அந்தச் சட்டையை கிஃப்ட் பார்சல் செய்து தாங்க’’ என்றாள் ஷிவானி.
‘’எதுக்கடி கிஃப்ட் பார்சல்? யாருக்குத் தரப் போறே?’’
‘’அம்மா, போன தடவை அன்விதா இங்கு வந்தபொழுது இந்தச் சட்டை நன்றாக இருக்கிறது என்றாள். அவள் அம்மா வாங்கித் தலரை. அடுத்த மாதம் அவள் பிறந்தநாள் வருகிறது. அவளுக்குப் பரிசாக இதைத் தரப் போகிறேன்’ என்றாள் ஷிவானி.
‘’ஸாரிடா செல்லம்’’ ஷிவானியை அணைத்துக் கொண்டாள் சுஜாதா.
– மணியன் (5-1-11)