குளத்துக்கன்னி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 30, 2013
பார்வையிட்டோர்: 10,713 
 
 

சகுந்தலையும் அஞ்சலையும் கட்டினாள் தன் மாமன் வீரையனைதான் கட்டுவோம் என்று இருவரும் பிடிவாதம் பிடித்தனர். ஆனால் வீரையனுக்கு தான் கிருஷ்ணனாக இருப்பதைவிட ராமனாக இருக்கவே நினைத்தான். என்ன செய்வதென்று தெரியாமல் வீரையன் சோக்கடலில் மூழ்கினான்.

குளக்கரையில் உட்காந்துக்கொண்டு தரையில் கிடந்த கற்கள் ஒவ்வொன்ரையும் எடுத்து குளத்தில் விட்டெறிந்தான். அவன் விட்டெறிந்த கற்கள் குளத்தில் இருந்த மீன்களை காயப்படுத்தியது. அதில் ஒரு மீன் வலி தாங்கமல் ஏய் எதற்காக எங்கள் மீது கற்களை எறிந்து எங்களை காயப்படுத்தி பார்த்து நீ சந்தோஷப்படுகிறாய்?

ஐயோ என்னை மன்னித்துவிடுங்கள், நான் வேண்டுமென்றே இப்படி செய்யவில்லை. ஏதோ கவலையில் நான் இப்படி செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்.

கவலையா! உனக்கு என்ன கவலை?

எனக்கு இரண்டு முறைப்பெண்கள் இருக்கிறார்கள். இருவரும் என்மீது அளவுக்கடந்த பிரியம் வைத்துள்ளனர். அவர்கள் இருவரும் கல்யாணம் செய்துக்கொண்டாள் என்னைதான் செய்வோம் என்று பிடிவாதமாக இருக்கின்றனர். நான் இருவரில் ஒருவரை மட்டுமே மணக்க விரும்புகிறேன். ஆனால் ஒருவரைக் கட்டிக்கொண்டாள் இன்னொருவரின் மனசு கஷ்டப்படும். இப்போது நான் என்ன செய்தென்றே தெரியவில்லை என்றான் அழுத்துக்கொண்டு.

குளத்து மீனுக்கு வீரையனை பார்க்கும் போது பாவமாக இருந்தது. குளத்து மீன் கொஞ்சம் நேரம் சிந்தனையில் ஆழ்ந்தது. சரி உன்னுடைய இந்தப் பிரச்சனை தீர நான் உக்கு உதவி செய்யட்டுமா? என்றது.

உன்னால் எனக்கு என்ன உதவி செய்ய முடியும்! நீயோ சாதாரண குளத்து மீன்.

வீரையன் பேசிக் கொண்டிருக்கும் போதே மீன் குளத்துக்குள் மூழ்கி பேரழகியாக உருமாறி வீரையன் முன் நின்றது.

வீரையனுக்கு தன் கண்ணை தன்னாலயே நம்ப முடியவில்லை.

நீ…நீ….

நான் தான் குளத்துக்கன்னி.

என்ன குளத்துக்கன்னியா!

ஆம் நான் குளத்தில் தானே வாழ்கிறேன். அதனால் என் பெயர் குளத்துக்கன்னி. இப்போது உன் பிரச்சனையை நான் தீர்த்து வைக்கட்டுமா?

அப்படியென்றால் என்னை உன் முறைப்பெண்களிடம் கூட்டிக்கொண்டு போ, ஆனால் ஒரு நிபந்தனை. நாம் அங்கு போனபிறகு நான் இப்போது உனக்கு சொல்லி தருவதைதான் அவர்களிடம் சொல்ல வேண்டும். மேலும் நான் அங்கு என்ன சொன்னாலும் நீ தலையை மட்டும் தான் ஆட்ட வேண்டும் சரியா?

குளத்து மீனின் நிபந்தனைக்கு வீரையன் ஒப்புக்கொண்டு சரியென்று தலையசைத்தான்.

குளத்து கன்னியை தன் முறைப்பெண்களின் முன் கொண்டு போய் நிறுத்தினான்.

மாமா யார் இந்த பெண்? இவள் மிகவும் அழகாக இருக்கிறாள்.

ஆம் இவள் அழகுதான். அதனால் தான் நான் இவள் அழகில் மயக்கிவிட்டேன். சகுந்தலை அஞ்சலை நான் இவளைதான் திருமணம் செய்துக்கொள்ளப்போகிறேன்.

சகுந்தலையும் அஞ்சலையும் அதிர்ச்சியடைந்தனர்.

நீங்கள் செய்து தவறு. சிறுவயதிலிருந்து நாங்கள் இருவரும் உங்களையே நினைத்து உங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கும்போது இப்போது யாரோ ஒருத்தியை அழைத்துவந்து இவளைதான் மணந்துக்கொள்ள போகிறேன் என்றால் என்ன அர்த்தம்?

சகுந்தலை அஞ்சலை இருவரின் கண்களிலிருந்தும் கண்ணீர் அருவியாக கொட்டியது. இருவரின் அழுகையை பார்த்து குளத்துக்கன்னி மனம் இறங்கியது.

சரி நீங்கள் இருவரும் உங்கள் மாமனையே கட்டிக்கொள்ள நான் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். இன்றிலிருந்து நான் உங்களுக்கு ஏழு நாட்கள் தருகிறேன். அந்த ஏழு நாளும் வீரையன் என்னுடன்தான் இருப்பார். அந்த ஏழுநாட்களில் ஒரு முறையாவது வீரையன் என்னை விட்டு பிரிந்து உங்கள் பின்னால் வந்துவிடுமாறு நீங்கள் செய்துவிட்டாள், நான் வீரையனை விட்டு போய்விடுகிறேன். அப்போதும் வீரையனை என்னிடமிருந்து உங்களால் பிரிக்க முடியவில்லையென்றால்….. கடைசியா நான் மீண்டும் உங்களுக்கு ஒரு வாய்ப்பளிப்பேன். அது என்னவென்று ஏழுநாட்கள் முடிந்தவுடன் சொல்கிறேன் என்று கூறிவிட்டு குளத்துக்கன்னி வீரையனின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு நடையை கட்டியது.

சகுந்தலையும் அஞ்சலையும் தீவிர முயற்ச்சியில் இறங்கினர்.

இரண்டாவது நாள், மூன்றாவது நாள், ஐந்தாவது நாள், ஆறாவது நாளும் வந்தது ஆனால் எதுவுமே பிரயயோசனம் இல்லாமல் போனது. இருவரின் அனைத்து முயற்சிகளும் தோல்வியவே தழுவியது.

ஏழாவது நாள் சகுந்தலையும் அஞ்சலையும் குளத்துக்கன்னி முன் போய் நின்றனர்.

நாங்கள் இருவரும் எவ்வளவோ முயற்சி செய்துவிட்டோம். ஆனால் எங்களால் மாமனை உன்னிடமிருந்து பிரிக்க முடியவில்லை. இப்போது நாங்கள் இருவரும் ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். எங்களால் மாமன் இல்லாமல் வாழமுடியாது. வாழவும் மாட்டோம் என்று கூறிய இரு சகோதரிகளும் அருகில் இருந்த கிணற்றில் குதித்துவிட்டனர்.

குளத்துக்கன்னி கிணற்றில் குதித்து இருவரையம் காப்பாற்றியது.

இவ்வளவுதானா உங்களுடைய முயற்சி! நான்தான் கடைசியாக உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு தருவேன் என்றேனே!

அந்த கடைசி வாய்ப்பிலும் நாங்கள் தோல்வியை தானே தழுவியிருப்போம்.

இல்லை நீங்கள் கண்டிப்பாக தோல்வியடைந்திருக்க மாட்டீர்கள்.

தோல்வியடையாதளவு அப்படியென்ன பெரிய வாய்ப்பென்று நினைக்கிறீர்களா?. உங்களுடை ஆசைதான் அந்த வாய்ப்பு.

இரு சகோதரிகளும் விழித்தனர்.

இன்னும் புரியவில்லை? வீரையா நீ ராமனாக மட்டுமே இருக்க நினைப்பது எனக்கு தெரியும், ஆனால் இப்படியொரு இரண்டு மீரா உனக்காக காத்திருக்கும்போது நீ கிருஷ்ணனாக இருப்பதில் தவறே இல்லை.

சகுந்தலை அஞ்சலை இருவரின் மனதை புரிந்துக்கொண்ட வீரையன் இருவரையும் திருமணம் செய்துக்கொள்ள ஒப்புக்கொண்டான்.

இப்போது புரிகிறதா உங்களுடைய கடைசி வாய்ப்பு என்னவென்று? என்று கேட்டப்படியே குளத்துக் கன்னி அங்கிருந்து மறைந்துவிட்டது…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *