இரவு நேரம் வீட்டுக்கு வந்த சங்கரன் – மூத்த மருமகள் சப்பாத்தி சாப்பிடுவதையும், இளைய மருமகள் பழைய கஞ்சி சாப்பிடுவதையும் கண்டார்.
தன் மனைவி கமலாவை அழைத்து, “மூத்த மருமகள் சீர் வரிசை, நகை, வரதட்சணையோட வந்ததால அவளுக்கு சப்பாத்தியும் இளைய மருமகள் காதல் கல்யாணம் பண்ணி வெறும்
கையோட வந்ததால அவளுக்கு பழைய கஞ்சியும் கொடுக்கறியே! இது நியாயமா?’ என்று கேட்டார்.
மாமனாரின் பேச்சை கேட்ட இளைய மருமகள், “இல்லை மாமா, நான்தான் வெயில் காலத்துல கஞ்சி குடிச்சா உடம்புக்கு நல்லது, தூக்கம் நல்லா வரும்னு விரும்பி சாப்பிடறேன். அத்தை மேல எந்த குத்தமும் இல்லை’ என்றாள்.
சங்கரன் அங்கிருந்து சென்றதும் கமலா, இளைய மருமகள் கையைப் பிடிச்சு “என்னை மன்னிச்சுடும்மா, நான் தப்பு செய்தும் என்னைக் காட்டிக் கொடுக்காமல் உன் மாமனார்கிட்டே இருந்து என்னைக் காப்பாத்திட்டே.
நீ சீர் செனத்தியோட வரலேன்னாலும் நல்ல குணத்தோட வந்திருக்கே; அதுவே போதும்’ என்று நா தழுதழுக்க இளைய மருமகளைப் பாராட்டினாள்.
– எஸ். முகம்மது யூசுப்