குட்டான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 16, 2012
பார்வையிட்டோர்: 9,592 
 
 

விடிகாலை ஏழுமணிக்கு நான் எழுந்து வேலைக்குப் போனால் எப்பிடியும் வீடுவர பின்னேரம் ஆறுமணியாகிவிடும். சில வேளையில் பிசியில்லையென்றால் நேரத்தோடு அனுப்பி விடுவார்கள்.நான் இருக்கும் இந்த வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாகிவிட்டன. வீடு இருக்கும் வீதி தமிழர்களால் நிறைந்திருக்கும். யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற உணர்வே மனதில் மேலோங்கும். நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி இந்த மார்கழியோடு பதினைந்து வருடம் நிறைவு பெறுகின்றது . என்னுடைய வீட்டுக்காரர் இருவீடுகள் சொந்தமாக வாங்கி வைத்திருக்கிறார். ஸ்காபரோவில் இருக்கும் வீட்டில்தான் நான் இருக்கிறேன்.அடுத்த வீடு மார்க்கம் ஏரியாவில் தமிழர்கள் இல்லாத இடம் பார்த்து வாங்கியிருக்கிறார்.இந்த வீட்டில் தனக்கு தெரிந்த தமிழ்ச் சனத்தைக் குடியமர்தியிருக்கிறார்கள். அவர்களிடம் இருக்கும் இந்த இருவீடுகள் பற்றிக் கணவனும் மனைவியியும் புளுகித் தள்ளுவதில் தங்களது ஓய்வு நேரங்களைத் தொலைத்துக் கொண்டிருந்தார்கள்.நான்அவை எல்லாவற்றுக்கும் மறுப்புச் சொல்லாமல் “ம்”போடுவதை என்னுடைய வழக்கமாகக் கருதினேன்.

வீட்டின் அறையில் நான் குடித்தனம் செய்யவர முன் இந்த அறையைப் பற்றித் தமிழ்ப் பத்திரிகையில் “தளபாடத்துடன்கூடியஅறையொன்றுவாடகைக்கு”என்று தான் விளம்பரம் போடப்பட்டிருந்தது. அறையை வாடகைக்கு எடுத்ததிலிருந்து ஒவ்வொருநாளும் “மரமஞ்சள்”அவச்சுக் குடிக்க வேண்டிய நிலையென்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டியள். கட்டிலின் நான்கு பக்கங்களும் கறள் கட்டிய கம்பியால் பிணைத்துக் கட்டப்பட்டிருந்தது.சேர்த்துக் கட்டப்பட்டிருந்த கம்பிகளின் சிறிய பகுதிகள் வெளித் தள்ளப்பட்டுக் காணப்படும். இந்தக் கம்பிகள் என் கால்களில் அடிக்கடி தட்டுப்பட்டுக் காயக்கீறல்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருந்தன. மெத்தையில் என் உடல் சாய்ந்தால் ஏதோ ஒருபள்ளத்திற்குள் தொப்பென விழுவது போன்ற தொரு உணர்விலிருந்து என்னால் தப்பவேமுடியாது.

ஒருகால் முறிஞ்ச பழைய மேசை, ஒரு பழைய கதிரை, சின்னரீப்போ இவை களைத்தான் கனடாவில் தளபாடத்துடன் அறை வாடகைக்கு விடப்படும் என்று விளம்பரப்படுத்துவது வழக்கமாய்ப் போய்ச்சுது…?

நான் இங்கு வந்த போது இருந்த மனநிலை படிப்படியாகமாறி இந்த வீட்டின் சொந்தக்காரர் குமார் எனக்கு நெருக்கமான நண்பராகிவிட்டார். ஒவ்வொரு வெள்ளியிரவும் குடிப்பதிலேயே குமாருக்கு அந்த இரவுஅழிந்துவிடும். நான் ஒரு அறையில், அடுத்த அறையில் இன்னொருபொடியன். அவனும் காலப் போக்கில் எனக்கும் குமாருக்கும் நண்பனாகிவிட்டான். அவனுடைய பெயர் விநாயகமூர்த்தி. ஆனால் நானோ குமாரோ அல்லது குமாரின் வீட்டுக்காரரோ அவனை அப்படி அழைப்பதில்லை. மாறாகா “குட்டான்” என்று தான் நாங்கள் எல்லோரும் அவனை அழைப்பது வழக்கம். அவன் மிகவும் குள்ளமாக இருப்பதே அவனை அப்படி அழைப்பதற்கு மிக முக்கியமான காரணம். அவனை ஆரம்பத்தில்குட்டான் என்று நாங்கள் அழைத்த போது அவன் கொஞ்சம் சங்கடப்பட்டாலும் காலப் போக்கில் அவன் விரும்பியோ விரும்பமாலோஅவனுக்கு அந்தப் பெயரே நிலைத்தது.

குமாரின் இரண்டு பிள்ளைகளும் சுறுசுறுப்பான சுபாவம் கொண்ட பிள்ளைகள். தங்களுக்குள் ஆங்கிலத்திலேயே கதைத்துக் கொள்வார்கள். அப்படி அவர்கள் கதைப்பது குமாரின் மனைவிக்குப் பெருமையாக இருக்கும்.குமாரின் மனைவி சாந்தாவை நாங்கள் சாந்தாக்கா என்றுதான் அழைப்போம். சாந்தாவுக்கு அவ்வளவாக ஆங்கிலம் பேசவோ எழுதவோ தெரியாவிட்டாலும் அரை, குறையாக ஆங்கிலத்தில் பிள்ளைகளோடு பேசுவதை எப்போதும் பெருமையாக நினைப்பாள். வீட்டில் மொத்தமாக நான்குஅறைகள்.ஒர்அறையில்நானும, மற்றைய அறையில் குட்டானும், இன்னொரு அறையில் குமாரின் அப்பாவும் அம்மாவும் மற்றைய அறையில் குமார் குடும்பமுமாய் அந்த வீடு “கொழும்புஐலண்ட்” லொட்ச்சுப் போல இருக்கும்.நான் சாப்பாட்டோடு மாதம் நானூறுடொலர் கொடுக்கிறேன். அது போல் குட்டானும் கொடுப்பான் என்று தான் நினைக்கிறேன்.குமாரின் பெற்றோர் சமூகக்கொடுப்பனவுப் பணத்தில் சீவித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் குமாருக்கு மாதம் எவ்வளவு அவர்கள் கொடுக்கிறார்கள் என்பதைப் பற்றி இன்றுவரையும் எனக்கு தெரியவில்லை.

குமாரின் அம்மாவுக்கு கிட்டத்தட்ட அறுபதுவயது இருக்கலாம். ஆனால் நவநாகரீகமங்கை போலவே தோற்றம். இரண்டுகைகளிலும் தங்கவளையல் அடுக்கப்பட்டிருக்கும்.மோதிரங்கள் மூன்று எப்போதும் விரல்களை அலங்கரித்திருக்கும்.கண்களில் அஞ்சனம் அழகாய் இல்லாவிட்டாலும் ஒவ்வொருநாளும் பூசுவதைமட்டும் மறப்பதில்லை. உதட்டில்சாயம் எப்போதும் உட்காந்திருக்கும். உடையில் மேலேத்தேய நாகரீகம் தூக்கலாய் இருக்கும்.அடிக்கடி கண்ணாடி முன் நின்று சரிபார்க்கும் குமாரின் அம்மாவிற்கு நிறம் மட்டும் கறுப்பாக இருப்பதாகக் கவலை. ஆனாலும் வெளிப்பார்வைக்கு அவர் தன்னுடைய குறையாக அந்தநிறப் பிரச்சனையை என்றும் காட்டிக் கொள்வதில்லை.

இன்று வெள்ளிக்கிழமை. வழமையான நாட்களிருந்து எங்களுக்கு இந்தநாள் வேறுபட்டே இருக்கும். ஏனென்றால் இன்று தான் வீட்டிலிருக்கும் எல்லோரும் ஒன்றாய்ச் சந்திக்கும் நாள்.குமாரின் பெற்றோர்கள் நடுவிறாந்தையில் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் இருக்கும் “இத்தாலியன்லெதர்சோபா” வில் உட்கார்ந்து விட்டார்கள்.குமார் வேலை முடிந்து வருவதற்கு இன்னும் அரைமணித்தியாலம்தான் இருக்கின்றது.குட்டான் வேலை முடிந்து வந்து குளித்துவிட்டு அவனுடைய அறைக்குள் ஏதோ செய்து கொண்டிருந்தான்.சாந்தா நல்ல வாசம் மூக்கைத் துளைக்கிற மாதிரி கறி சமைத்துக் கொண்டு குசினிக்குள் நின்றாள். பொதுவாக நான் சாப்பிடுவதற்காக நடுவிறாந்தைக்கு வரும் போது சாந்தா சோபாவில் இருந்தால் குமாரின் பெற்றோர்கள் சாந்தாவுக்கு முன்னால் வந்து உட்காரமாட்டார்கள்.

நான் நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது சாந்தாவைத் தவிர வேறு யாரும் வீட்டில் இருக்கவில்லை.அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சாந்தா தன் நெஞ்சுக்குள் அடுக்கடுக்காய் சேமித்து வைத்த பிரச்சினைகளை வாய்விட்டுத் கொட்டித் தீர்த்தாள்.சாந்தா எனக்குத் தன்னுடைய மாமா மாமியை பற்றிச் சொன்ன குற்றச்சாட்டுக்கெல்லாம் “ம்” போட்டபடியே இருந்தேன். சில பிரச்சினைகள் பற்றி கதைக்கும் போது குறுக்காகச் சாந்தாவிற்கு நோகாமல்; சில கேள்விகளையும் தொடுத்தேன். பொதுவாக சாந்தாவின் உப்புச்சப்பில்லாத நொண்டிச்சாட்டுகளில் எனக்கு உடன்பாடில்லை.நேற்றுக் கேட்ட சில கேள்விகளுக்கு சாந்தா சொன்ன பதில்கள் வேடிக்கையோடு என் மனதில் இழையோடியது.

“அக்கா..இங்கை முதியோரை ஸ்பொன்சர்பண்ணி எடுத்தவங்க அவர்கள் வந்த பின் பொதுவாக கொடுமைப்படுத்துறாங்க எண்டுதான் பரவலாய் கதையிருக்கு. ஆனா நீங்க சொல்ற தப்பார்த்தா உங்கட மாமிமாமா தான் உங்களை கொடுமைப்படுத்துவது போல இருக்கே..?என்றுகேட்டதற்கு,
‘ம்’பேந்தென்னதம்பி.நீ இன்னும் கல்யாணம் பண்ணேலெயெண்டா அது உன்ர சொந்தப் பிரச்சினை அதேயேன் உன்னட்டத் தோண்டித் தோண்டித் கிளறவேணும் இதிலயிருந்து அவங்கட குணத்தை நாங்க அறியேலாதா..?சில வேளை அவங்களுக்கு என்னுடைய வாழ்க்கையில அக்கறையிருக்கலாம் தானே…?
அவையளுக்கு உன்ர வாழ்க்கையில அக்கறையா..? இது மெய்யாத்தான் இருக்குமோ.. அது அவையின்ர நடிப்பு..தன்ர சொந்தப்பிள்ளை படுகிற கஸ்டத்தையே உணராமல் இருக்கினம். அதுக்குள்ள உங்கட வாழ்க்கை பிரச்சினையிலையா அக்கறை வந்திருக்கும்.அவங்க சுபாப்புத்தியே மற்ற வங்கட பிரச்சினையை தோண்டித் தோண்டித் கேட்கிறது தான்… என்னைப்பாருங்களேன்.வேலை முடிஞ்சு வந்து சும்மா சோபாவில இருந்தால் குசினிக்குள் ஏதோ செய்யிறமாதிரிநிண்டுகொண்டுகுத்தலாய்கதைப்பாள்…எத்தினை நாளைக் கெண்டுதான் நானும் பொறுத்துக் கொள்ள அதென்னதம்பி இந்த வயசிலேயே அவியள்பட்டப் பகலியே அறையைபூட்டிக் கொண்டு புதுசாக கல்யாணம் செய்தவியள் மாதிரிஆட்டம் போடுகினம் பேரப்பிள்ளையை கண்ட காலத்திலேயே இப்படியெண்டால் அந்தக் காலத்திலே எப்படி சோக்குப் பண்ணியிருப்பினம்?இதுக்கு மேலே இரண்டு பேரும் குடியும் கும்மாளமும்… ச்சீ… எங்கட பரம்பரையிலேயே பொம்பிளைகள் குடிச்சதாய் இது வரைக்கும் வரலாறு கிடையாது. இவையளுக்கு வெக்கம் மானம்ரோசம் கிடையாது.என்ர மனுசனையும் சேர்த்து வைச்சுக் கொண்டு குடிக்கினம்.இதென்ன அறுந்த குடும்பம்.தெரியாமல் வந்து இந்த சாக்கடைக்குள்ள விழுந்திட்டேன்.

ஒரு அடைமழை பெய்து ஓய்வெடுத்தது போல அவளுடைய வாயிலிருந்து வார்த்தைகள் தெறித்து அமைதியானள். ஏன் அமைதியானல் என்பது எனக்கு புரியவில்லை. என்னைக் கதைக்கவிடமால் தானே வெடுவெடுத்துக் கதைத்துக் கொண்டிருந்தவள் ஏன் திடீரென உறைநிலையானாள்.?ஒற்றைப்பின்னல் கூந்தல் மார்ப்பிக்கிடையில் நெளிந்து அழகுகிறிக்கிடந்தது. நெற்றியல் சிவப்புநிலா..இரண்டு காதோரமும் முடி நீண்டு சுடுண்டு மடிந்து கிடந்தது. அது விரல்களால் சுருட்டிவிடப்பட்டிருக்கவேண்டும்.

இப்படி சுருட்டி விடுகிற பழக்கம் ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் பிரபல்யம். கழுத்தில் தங்கத்தாலி அதன்மேல் முத்தமிட்டபடி மல்லிகைமொட்டு சங்கிலி கிடந்தது. aமௌனம் போர்த்திக்கிடந்த முகத்தை ஏறிட்டு பார்த்தேன். விக்கித்துப் போனேன். கண்கள் சிவத்து மெல்ல மெல்ல கண்ணீர்; சிறு ஓடையாய் ஒடியது.

“சாந்தா அக்கா ஏன் அழுகிறியள்..?”

‘……..’

ஒன்றும் பதில் சொல்லாமலே இன்னும் விம்மி விம்மி அழத்தொடங்கினாள்.

மீண்டும் கெஞ்சும் குரலில் “என்னண்டு சொல்லிப் போட்டுத்தான் அழுங்கலன் அக்கா……?”என்றேன்.

அவள்எதுவும்பேசுவதாகதெரியவில்லை.நான்இதற்குமேல்கதைக்காமல்என்னுடையஅறைக்குபோய்விட்டேன். கணனிக்குமுன்னால்நான்இருந்துஇலங்கைச்செய்திகளைபார்த்துக்கொண்டிருந்தபோதுதான்நேற்றுநடந்தஇந்தநினைவும்வந்துதொலைந்தது
அறைக்குள்இருந்துநான்விறாந்தைக்குவரவும்குட்டானும்வெளிவிறாந்தைக்குவரவும்சரியாகஇருந்தது.

“என்னடாகுட்டான்முகமெல்லாம்அதைச்சுப்போய்க்கிடக்கு…ஏன்ராஇரவெல்லாம்முழிச்சிருந்துதமிழ்நாடகங்கள்பார்த்தனீயோ..?”

“இல்லையடாமச்சான்இரவிலஇப்பநெத்திரைவாறதுகுறைவாயிருக்கு..இப்பபுதுசாசேர்ந்தஇரண்டாவதுவேலைசரியானகஸ்டமடாஅதுதான்இரவிலகொஞ்சம்நெத்திரைவரப்பஞ்சிப்படுகிது;.அதாலதான்மூஞ்சிஅதைச்சுப்போய்க்கிடக்குது..என்னசெய்யிறதுஇங்கஉழைக்கத்தானேவந்தனாங்க.உடம்புஏலும்மட்டும்அடிப்போம்…எங்கடகஸ்டத்தைமற்றவங்களுக்குசொன்னாப்போலதரவாபோறாங்க.”என்றுசொல்லிக்கொண்டுபக்கத்தில்இருந்தசோபாவில்உட்கார்ந்தான்.
நான்சோபாவிற்குபக்கத்தில்நின்றுகொண்டிருக்ககுமாரின்அம்மாஎன்னைப்பார்த்து@

“கொஞ்சம்இரன்தம்பிசோபவில்”என்றுசொல்லவும்நான்சோபவில்உட்காந்துகொண்டேன்.

“இஞ்சபார்த்தியளாகுட்டான்ரகதையைநாங்கஎன்னகேட்டாஉதவிசெய்யமாட்டோமா?”
அவளுடையஇயல்பானகேளியும்கின்டலும்கலந்தகுரலில்மனமுருகிகேட்பதுபோல்குமாரின்அம்மாகேட்டாள்.குட்டானுக்குகோபம்வந்ததோஎன்னவோஒருகுத்தலாககதையைப்போட்டான்.

“நீங்களேபிச்சைஎடுத்துக்கொண்டிருக்கிறீயள்அதுக்குள்ளஎனக்குஉதவிசெய்யப்போவினயாம்.கொஞ்சம்உள்ளுக்குள்ளபோனவுடனேஎன்னகதைக்கிறதென்டுதெரியாமல்வாயில்வந்ததெல்லாத்தையும்கொட்டுறியள்.”என்றான்.குமாரின்அம்மாவுக்குமுகத்தில்செருப்பால்அடித்ததுபோல்இருந்ததுவலியும்அவமானமும்கொதிப்புமாய்உயர்ந்ததுஉடலில்..கோபக்குவியலாய்முகம்இறுகிகனத்துசெவ்வானம்போல்சிவந்திருந்தது .டேய்பொன்னையான்! நாங்கவெல்வயர்எடுத்துசீவித்தால்உனக்குஎன்னடாசெய்யுது.நாலுசல்லிக்குபெறாதநாய்எங்களைப்பார்த்துகதைக்கிறியோ..?எங்கடகுடுபத்தின்ரகௌரவம்என்ன..எங்கடஊருலயேஎங்களிட்டத்தான்மெத்தைவீடுஇருந்தது…வீட்டில்ஒன்றுக்குஇரெண்டுவேலைகாரர்நீயெல்லாம்எங்கடகால்தூசிக்குவரமாட்டாய்அதுக்குள்ளவாயைப்பார்…?”
குட்டானும்விடமால்,
“பேந்தென்னகுடும்பகௌரவத்தைசொல்லவேண்டும்பொஞ்சாதியும்புருசனும்புள்ளையும்சேர்ந்துகுடிக்கிறஇலட்சணத்தில”
அதுஎங்கடநாகரீகம்…எங்கடவிருப்பம்அதுலஉனக்குஎன்னசெய்யுது…?”

அப்பஉன்னைப்போலபொன்னையன்மாதிரிமுலைக்குள்கிடக்கவசொல்லுறாய்? விடிஞ்சாபொழுதுபட்டால்வேலைவேலையெண்டுதிரியிறநாய்…குடிக்கத்தெரியாதுசிகரட்பத்தத்தெரியாதுநாலுஇடத்துக்குபோகத்தெரியாதுநாலுபேரோடபழகத்தெரியாதுநீயெல்லாம்ஆம்புளையா..?பொன்னையன்…பொன்னையன்…”

ஆண்மைபற்றிஅவள்கொண்டிருந்தகோட்பாடுகோபத்தோடுவெளிப்பட்டது.

மயனாஅமைதிவிறாந்தையில்நிலவியது.

குசினிக்குள்நின்றுநடக்கிறவிடயங்களைஅவதானித்துக்கொண்டுஏதோசெய்துகொண்டிருந்தசாந்தாகையில்இரண்டுகப்புதேத்தண்ணீயைக்கொண்டுவந்துஎனக்கும்குட்டானுக்கும்தந்துவிட்டுமீண்டும்குசினிப்பக்கம்போய்விட்டாள். இவ்வளவுநேரமும்குசினிக்குள்நின்றசாந்தாதிடீரெனஏன்விறாந்தைக்குவரவேனும்…? ஏதேனும்காரணத்திற்காகத்தான்அவள்தேத்தண்ணீயைதருவதுபோல்விறாந்தைக்குவந்துபோயிருக்கவேண்டுமென்றுஎன்மனதிற்குள்மின்னலாய்வெட்டியது.ஆனால்சாந்தாவிறாந்தைக்குவரும்போதுஅவளுடையமுகத்தில்கடுப்பானஎரிச்சல்கவிந்துகிடந்ததைஅவதானித்தேன்.
அவள்வாழ்வின்ஒவ்வொருநிமிடத்தையும்குடும்பச்சுமைதின்றுதீர்க்கமூச்சுவிடநேரமற்றுஓடித்திரிவாள்.அன்பானகணவனும்அம்மா..அம்மா..என்றுஅன்பால்நனைக்கும்பிள்ளைகளும்அவள்இதயத்தைஇதமாகவைத்திருந்தாலும்வீட்டில்இருப்பவர்களால்அவ்வப்போதுஏற்படும்பிரச்சினைகளால்தூக்கம்இன்றிதுக்கத்தில்ஆழ்ந்துபோய்விடுவாள்.அப்படிஎற்படும்துயரத்தில்இருந்துஉடனடியாகஅவள்திரும்பவும்மாட்டாள்.சிலவேளைஒருமாதத்துக்குகூடநீண்டுபோய்விடும்.அந்தநேரத்தில்யாருடனும்முகம்கொடுத்துபேசாமல்தனக்குள்ளேயேஎல்லாவற்றையும்பூட்டிமனதிற்குள்மறைத்துவைத்துகடுப்பானஎரிச்சலோடுஉருகிச்செத்துக்கொண்டிருப்பாள்.அவளுடையஇயல்பேஅப்படித்தான்என்பதைஉணர்ந்தகுமார்அதற்கேற்ப்;பவளைந்துகொடுப்பான்.
சுவரில்மாட்டப்பட்டமணிக்கூடுஒருபறைவையின்சத்தம்போல்ஒலியெழுப்பிஇரவுஏழுமணியைக்காட்டிக்கொண்டுஓய்ந்தது. இளவேனிற்காலம்என்பதால்ஏழுமணியாகியும்இன்னும்இருட்டவில்லை.சூரியனின்மஞ்சள்நிறஒளிக்கதிர்கள்வீட்டின்முன்பக்கத்திலுள்ளகண்ணாடியில்விழுந்துதெறித்துக்கொண்டிருந்தன.குமார்வழமையாகஆறுமணிக்குள்வீட்டிற்குவந்துசேருவான்.ஆனால்இன்றுஏழுமணியாகியும்இன்னும்வரவில்லை.இன்றுவெள்ளியிரவுஎன்பதால்சிலவேளைகுடிவகைவாங்கப்போயிருக்கலாம். விறாந்தையில்நிலவிக்கொண்டிருந்தஅமைதியைகிழித்துக்கொண்டுஏதேனும்சொல்லவேண்டும்என்றுமனம்கிளற,
“குட்டான்நடந்ததெல்லாம்மறந்துபோட்டுவாசாப்பிடுவோம்என்றுகூப்பிட்டுக்கொண்டுகுமாரின்அம்மாவின்மீதுஎன்பார்வைதிரும்பியது.
“அம்மாஎன்னதான்இருந்தாலும்குட்டான்உங்களுடையவயதுக்காவதுமதிப்புக்குடுத்துகதைச்சிருக்கவேணும்அவன்அப்படிகதைக்காததுஅவனுடையபிழைதான்நான்ஒத்துக்கொள்ளுறன்.அதுபோலநீங்களும்கொஞ்சம்நாகரீகமாகஅவனோடகதைத்திருக்கலாம்.”நான்சொல்லிமுடிப்பதற்குள்
ஏரிகின்றநெருப்பில்எண்ணைய்ஊற்றியதுபோல்என்வார்த்தைஇன்னும்அவள்கோபத்தைகிளறிவிட்டுதுபோல..,

“இந்தக்குட்டானோடநாகரீகமாய்கதைக்கிறதா..?இப்பவேபெட்டியைக்கட்டிக்கொண்டுவீட்டைவிடடுப்போகணும்..இல்லையெண்டால்நடக்கிறதுவேற..”

குட்டான்ஒன்றும்பேசாமல்பறையாமல்இருக்க…குசினிக்குள்நின்றசாந்தாவெளிவிறந்தைக்விறுவிறுஎனநடந்துவந்தாள்.முகத்தில்உணர்ச்சிக்குவியல்குமாரின்அம்மாசொன்னவார்த்தையைஉள்வாங்கிகடுப்பாகிப்போனாள்.மனம்இருப்புக்கொள்ளமுடியாமல்கொந்தளித்தது. சூரியனையேசுட்டுப்பொசுக்கும்விழிகளின்பார்வை..நான்இந்தவீட்டின்அறைக்குவந்தநாட்களிலிருந்துஇப்படிசாந்தாகோபம்கொண்டதைஇதுவரையில்நான்பார்தததேஇல்லை.

“குட்டான்!எங்கடவீட்டிலவாடகைக்குஇருக்கிறவன்..அவனைவீட்டைவிட்டுவெளியபோகச்சொல்லமாமிஉங்களுக்குஎந்தஉரிமையும்கிடையாது.அவங்கதாறவாடகையில்தான்வீடடுக்குவாங்கினகடன்கட்டுறம்அவங்கவீட்டைவிட்டுபோனால்எனக்குத்தான்அந்தகஸ்டம்தெரியும்.அவன்தானுண்டுதன்ரவேலையுண்;டுஎன்டுதன்ரபாட்டிலஇருக்கிறபொடியனை..”என்றுநீட்டிமுழங்கிக்கொண்டிருந்தவார்த்தைகள்முற்றுப்பெறுவதற்குள்குமாரின்அம்மாமுந்திக்கொண்டுசீறிப்பாய்ந்தாள்.

“நீயேன்ரிஅவனுக்காகவாக்காளத்துவாங்கிக்கொண்டுவாறா..ஆட்டக்காறி..வாயைத்திறந்திட்டாள்.எனிவாய்குடுத்துதப்பபேலாது.”

“எனக்குமற்றஆட்களைப்பற்றிகவலையில்லை..குட்டான்எங்களோடுதான்இருப்பான்.”
குமாரின்அம்மாவுக்குகோபம்கொப்பளித்துக்கொண்டுவந்தது

“அப்ப…இவள்அவனைவைச்சிருக்கிறாளாக்கும்”
அதன்பின்யாரும்எதுவும்கதைக்கவில்லை.விறாந்தைமுழுவதும்அமைதிஅப்பிக்கிடந்தது.
யன்னல்வெளியினுடேவானம்இருண்டுகொண்டுவந்தது.வெளிப்பக்கமாககார்வந்துதரித்துநிற்ககுமார்இறங்கிஉள்ளேநடந்துவந்தான்.

நன்றி. காலம்-கனடா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *