நடிகையின் கோபம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 6,791 
 

பிரபல வாரப் பத்திரிகையின் நிருபர், காவல் துறை தேடிக் கொண்டிருந்த மோசடிக் கம்பெனி விளம்பரங்களில் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும்படி பல டி.வி. விளம்பரங்களில் நடித்த அந்த நடிகையிடம் பேட்டி எடுத்தார்.

“ மேடம்!…கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாயை பொது மக்களிடம் ஏமாற்றி மோசடி செய்திருக்கிறது இந்தக் கம்பெனி…இந்தக் கம்பெனி அறிவித்த திட்டங்களைப் பார்த்தாலேயே அது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது என்பது தெரியும்!…உங்க ரசிகர்கள் உங்க மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்காங்க!…..அவங்க மத்தியிலே நீங்க அவங்களுக்கு நம்பிக்கை ஊட்டும்படி இந்தப் போலிக் கம்பெனி விளம்பரங்களில் நீங்க தத்தரூபமா நடிச்சிருக்கீங்க!…..இப்போ விசாரணையிலே பல ரசிகர்கள் உங்க மேல இருக்கிற நம்பிக்கையில் தான் இந்தக் கம்பனியிலே இண்வெஸ்ட் செய்ததாகச் சொல்லறாங்க!….நீங்க அதைப் பற்றி என்ன சொல்லறீங்க? ”

“ ஏது ஏது விட்டா எனக்கும் இந்த மோசடியில் பங்கு இருக்குமென்று சொல்வீங்க போலிருக்கு!,,,”

“எப்படிங்க மேடம்….லட்ச ரூபாய் முதலீடு செய்தா மாத மாதம் பத்தாயிரம் ரூபாய் வட்டி தர முடியும்?”

“நான் என்ன பொருளாதார மேதையா?…இந்தமாதிரி கேள்வி எல்லாம் எங்கிட்ட கேட்கிறீங்க?…நான் ஒரு நடிகைங்க!….எங்களுக்குப் பேசிய சம்பளத்தை ஒழுங்காக் கொடுத்தா…எங்க வேலையை நல்லாச் செய்து கொடுத்திட்டு நாங்க போய் கொண்டே இருப்போம்!…எங்க சினிமா கம்பெனி முதலாளிகளை விட இவங்க பேசிய பணத்தை ஒழுங்கா ஒரே தவணையில் தந்து எங்களை மதிச்சு நடத்தியிருங்காங்க!…நடிக நடிகைங்க அதைத் தான் பார்ப்பாங்க!..”

“என்ன மேடம் இப்படி சொல்லறீங்க?…நடிக நடிகைகளுக்கு சமுதாயப் பொறுப்பு இல்லையா?….கடைசியா ஒரே கேள்வி….நீங்களும் ஏழை விவசாயிகளைப் போல இரவு பகல் பாராம கஷ்டப் பட்டு சம்பாதிக்கிறீங்க….அந்தப் பணத்தை இந்தக் கம்பெனியில் முதலீடு செய்யும்படி கேட்டா நீங்க முதலீடு செய்வீங்களா?..”

“ தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்கிறீங்க!…பேட்டி போதும்!..நீங்க போகலாம்!..” என்று நடிகை கோபத்தோடு உள்ளே எழுந்து போய் விட்டார்..

– புதுகைத் தென்றல் மார்ச் 2016 இதழ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *