கல்யாணம்ம் சுவாஹா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2023
பார்வையிட்டோர்: 2,952 
 
 

“வா.. சத்யா”

“நேத்தியே வந்துருக்கலாமே….”

“அப்படிலாம் இல்ல.. கொஞ்சம் உடம்பு சரி இல்ல..”

“சாப்ட்டு வந்துருங்க”

“என்னடா? சரி வா”

“ஸ்வீட் இருக்கு பாருயா.. அல்வா.. கவனிக்கலையோ! ஹீ ஹீ…”

“’பூரி’ய பாத்தாலே பயமா இருக்குடா”

“என்னையா மண்டபத்துல ஒரு பொண்ணும் காணும்”

“காபி ரொம்ப இனுப்பா இருக்குல?”

“அங்க பாரு கல்யாண பொண்ணு பக்கத்துல.. யாரு அது… செம சீன் போட்றா”

“கல்யாணம் மண்டபத்துல இல்லையாம் பக்கத்துல கோவில்லயாம், அதான்… நாமலும் போவோமா?”

“பின்னன இங்க இருந்து என்ன பண்றது!.. அந்த சீன் பார்ட்டியும் போயிடிச்சே!”

“அழகா இருக்கா…டா! ஹீஹீ… சீன்ன்… போட்றா”

“இந்த கோவில்ல தான்யா நானும் என் லவரும் பிரஸ்ட் மீட்டிங் அப்டியே கோவிலைய சுத்தி.. பொறுமையா @#$%”

“ஹலோ பாஸ்… எப்படி இருக்கீங்க.. யாரு வீடு?”

“கல்யாண பொண்ணு என்னோட பிரண்ட்டு..ஆமா..”

“என்னையா இவ்ளோ பார்மாலிட்டிஸ்.. வீட்ல 300 வாதான் வைக்க சொன்னங்க நானாதான் அதான் இப்படி பயமுறுத்துறாங்களேயா.. எல்லாம் ஒரு பார்மாலிட்டி”

“எங்க மறந்ஜாலும் ஹாலஜன மூஞ்சில அடிக்கிறான்.. டிவில பாரேன் எல்லாரு மூஞ்சும் எரியுது.. ஓவர் எச்போஸ்.. அது என்னங்க சொல்வாங்க?”

“பர்ன் அவுட்..”

“எல்லாம் ஆட்டோல போட்டு ஏனோதானோனு சூட் பண்றாங்க”

“என்னையா இது வாசலுக்கு மாப்ளைய கூட்டி போறாங்க.. திரும்பி வராங்க என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியலையே”

“எல்லாம் எடிட்டர் கைல தான் இருக்கு.. சினிமா மாதிரி.. ஹா ஹா..”

“யெப்பா! கல்யாணம் முடிஞ்சிடிச்சி..”

“நீங்க கிபிட் குடுத்துட்டு வந்துடுங்க.. கிளம்புவோம்”

“சீஸ்”

“எங்கடா அந்த சீன் பார்ட்டி?”

***

“காலேல நாங்க ரெண்டு பேரும் ஒரு கல்யாணம் போனோம்.. பொண்ணு இவர் பிரெண்ட்… பொண்ணோட தம்பி என் பிரெண்ட்”

“நான் ஒரு கல்யாணத்துக்கு போட்டோகிராபி பண்ண போனேன்.. வடபழனி முருகன் கோவில் பக்கத்துல ரிஜிஸ்டர் பண்றாங்க.. சிம்பிள் பார்மளிட்டி.. ரெண்டு வீட்டு குடும்பம் மாட்டும் தான்.. நான் நின்னு போட்டோ எடுக்கவே எடம் இல்ல.. அவ்ளோ சின்ன ஆபிஸ், அப்புறம் பக்கத்துலயே.. பெரிய ஹோட்டல் ஒன்னு அது… பேரு…, செமையா ரிசப்சன் டின்னர்… அவ்ளோதான்.. எனக்கு ஆயரம் ரூபா வந்துச்சு டின்னெர் வெஜ், நான்வெஜ்னு சூப்பரா இருந்துச்சு”

“ஆமா பொண்ணுக்கு பொதுவா 21 வயசுலயே கல்யாணம் பண்ணிக்கலாம்ல..”

“மேக்சிமம் பொண்ணு பய்யன் ரெண்டு பேருக்குமே 25 லேந்து 27 குள்ள பண்றது தான் நல்லது”

“அப்புறம் உடனே குழந்த வேறயா?”

“அட்லீஸ் 2 வருசமாது தள்ளிதான் பெத்துகணும்.. “

“யோவ்.. நீ வேற 2 வருசமா பாக்றவன்லாம் எதாச்சு கேள்வி கேட்றுவானுங்கயா.. அதுக்கு 30ல பண்ணிக்கிறதே பெட்டெர்”

“கப்புள்ஸ் ப்ரீயா லவ் பண்ண ரெண்டு வருஷம் வேணாமா?.. பதினாலு வயசுல ஜெனிடல் ஆகி 27 வயசு வர வெயிட் பண்றதே மனுஷனுக்கு ஓவர் டா”

“நானே இன்னும் கல்யாணம் பத்தி யோசிக்கல.. என் தம்பி சொல்றான்.. மல உச்சில ஓபன் ஷ்பேஸ்ல தான் கல்யாணம் பண்ணுவானாம்”

“தெரியுமா ரசூல்க்கு கல்யாணம் பண்ண மறுபடியும் பொண்ணு பாத்தாச்சு”

“இத கேளு.. பொண்ணு டென்த்தான் படிக்குதாம்”

“ஐயோ என்னடா இது அநியாயம் பாவம்யா..”

“யோவ் அது மட்டும் இல்லையா.. சின்ன சண்டனாலே அம்மாவ பாக்க போய்டும் பக்குவம் இருக்காது யா?”

“இது வன்கொடுமை மாதிரி தான்..இல்ல?”

“அப்படியே படிக்க வச்சாலும் பத்தாதுலயே லவ் பண்ணி ஊர சுத்துறாங்க அதுக்கு என்ன பண்றது?”

“பிரெச்சன அது இல்ல.. படிக்கிற பொண்ணுங்களும் சொசைட்டிய விட்டு விலகிதான் இருக்காங்க அதுக்கு என்ன பண்றது?”

“சுதந்திரம் எந்த ஒரு பெண்ணும் ரோட்டோர டீ கடையில தனியா நின்னு டீ குடிக்க வைக்க கூடியதா இருக்கணும்.. காதலனோட இருட்டுல ஒதுங்குறதுக்கு மட்டும்தான் சுதந்திரமா? இதுலதான ஆபத்து”

“இதுல.. ஒரு பொண்ணு தன்னோட ஆண் வட்டத்துல பெண்கள பத்தி அவங்களோட பொதுவான எண்ணம் என்ன(?)ன்னு தெரிஞ்சிக்கல பாக்கணும்”

“யோவ்.. ஆண்தான் மூல காரணமே… சும்மா @#$%”

“ஆண்களுக்கு ஏத்த மாதிரி அமைச்சதுதான் இந்த சொசைட்டி அதான் இவ்ளோ பிரெச்சனையும் என்ன?…”

“இந்த பொண்ணுக்கு முன்னாடியே ஒரு பொண்ணு பாத்தாங்க.. அதான்யா அவனுக்குதான்.. வெளிய சொல்லவே ஒரு மாதிரி இருக்கும்”

“எனக்கு தெரியும் நானும் கேள்விபட்டேன்.. ஹாஜா சொன்னான்… ஹாஜாவுக்கு இதுல பயங்கர கடுப்பு ஆனா சொல்லி சிரிச்சான்”

“நீ சொல்லு எனக்கு தெரியாது”

“பொண்ணு ஏழோ எட்டோதான் படிச்சிருக்கு.. கல்யாணம் வேலைலாம் ஆரம்பிச்சிடிச்சு.. அப்புறம் அந்த பொண்ண வேணாம்னு சொல்டாங்க.. ஏன் தெரியுமா? அந்த பொண்ண ஒரு நாள் இவங்க வீட்ல தங்கவச்சிருக்காங்க.. அப்போ அந்த பொண்ணு தூக்கத்துலயே பெட்ல மூத்தரம் பேஞ்சிடிச்சி.. அப்புறம் எல்லாரும் அசிங்கமா பேசி சண்ட வந்து கல்யாணத்த நிறுத்திடாங்க”

“அடடா! இது செம ட்ரிக்கா இருக்கே..”

“அந்த பொண்ண வேணாம்னு சொல்லிட்டு இப்போ மறுபடியும் பத்தாது படிக்க போற பொண்ண பேசி வச்சுருக்கானுங்கயா… இவனுங்கள என்ன சொல்றது”

– செப்டம்பர் 2014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *