கசப்புப் பதனீர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2014
பார்வையிட்டோர்: 10,872 
 
 

விஷயம் தெரியுமா உங்களுக்கு? என்படி வந்தாள் செல்லம்மாள். செல்லம்மாளுக்கு எப்படியும் 60 வயதிருக்கும். ஒரு சாயம் போன சேலை, எந்த நித்தில் எப்போது வாங்கியதென்று தெரியாத ஒரு இரவிக்கை. தினமும் நடக்கி விஷயம்தான் இது. காலையில் ரேடியோ கேட்பதுபோல செல்லம்மாவின் செய்தியை பக்கத்து வீட்டிலிருப்போரெல்லாம் கேட்டாகவேண்டும். தினமும், சந்தையில் காய்கறியும், மீனும் வாங்கும்போதே காற்றுவாக்கில் வரும் எல்லா செய்திகளையும் கேட்டு வீட்டுக்கு வந்து ஒலிபரப்புவது தான் செல்லமாவின் பொழுது போக்காய் இருந்தது.

என்ன சமாச்சாரம் கொண்டு வந்திருக்கே இன்னிக்கு?

கேட்டுக்கொண்டே முழங்கையால் நெற்றியில் இருந்த வியர்வையைத் துடைத்த சொர்ணத்துக்கு 45 வயது இருக்கும். இன்னும் கண்ணாடி போட வேண்டி வராத தீர்க்கமான பார்வை. கையில் பதனீர் காய்ச்சுவதற்கான பெரிய தகரப் பாத்திரம். நேற்று பதனீர் காய்ச்சிய பிசுபிசுப்பை சாம்பல் தொட்டு தேங்காய் சவுரி கொண்டு தேய்த்துக்கொண்டிருந்தாள் சொர்ணம்.

“”எப்படி மனுஷனோட ஆயுசு பொட்டுன்னு போயிடுதுன்னு நினைச்சாலே பயமா இருக்கு. நேத்திக்கு வரைக்கும் கல்லு மாதிரி இருக்கி மனுஷன் இன்னிக்கு பொசுக்குன்னு போயிடான். காலைல பேசிகிட்டு இருக்கிவங்க மறுநாள் பாத்தா பேச்சி மூச்சில்லாம கிடக்காங்க. இதெல்லாம் விதி. மனுஷன் எவ்வளவு சம்பாதிச்சு என்ன புண்ணியம். காலம் வரும்போது காலணா கூட எடுக்காம போய்க்க வேண்டியதுதான்…”

எப்போதுமே செல்லமா இப்படித்தான். சொல்லவேண்டிய விஷயத்தை நேரடியாகச் சொல்வதில்லை. பலமான பீடிகை அது இது என்று ஏதாவது பேசிவிட்டுத்தான் சொல்வாள்.

சரி நீ இப்போ விஷயத்தைச் சொல்லு.. என்ன ஆச்சு? கேட்டுக்கொண்டே வேலையைத் தொடர்ந்துகொண்டிருந்தாள் சொர்ணம்.

“”நம்ம தெக்கேத் தோட்டத்து பாலம்மா புருஷன் தங்கப்பன் செத்துப் போயிட்டானாம், பனையில இருந்து விழுந்து.”

செல்லம்மா சொல்லி முடிக்கவில்லை, சொர்ணம் திடுக்கிட்டுத் திரும்பினாள்.

“”எப்போ?.. எப்படியாம்?”

“”இன்னிக்கு காலைல பனை ஏப் போனப்போதான் நடந்தது. பனைத் தாவல் சமயத்துல பிடி நழுவிடுச்சுன்னு சொல்ாங்க. என்ன நடந்ததுன்னு யாருக்கும் சரியா தெரியல. ஏதோ சத்தம் கேட்டு,ஓடிப்போயி பாத்திருக்காங்க, அப்போ தான் பேச்சு மூச்சில்லாம கீழே கிடந்திருக்காரு மனுஷன். அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போயிருச்சு. மூத்த பையன் பாண்டில பனை ஏப் போயிருக்கானாம். அவனுக்கு தகவல் சொல்ல போயிருக்காங்க. அவன் வந்ததுக்கு அப்பும்தான் அடக்கம் இருக்கும்.”

சொர்ணத்தின் நெஞ்சுக்குழிக்குள் அம்மி வைத்தது போல் ஒரு பாரம். தங்கப்பனுக்கும் அவளுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் அந்த மரணம் ஒருவித வலியை ஏற்படுத்திவிட்டது. காரணம் அவன் புருசன் பொன்னனுக்கும் பனைஏற்றுத் தொழில் என்பதுதான்.

அவனும், பனைத் தாவலில் பிரசித்தம். அருகருகே நிற்கும் இரண்டு நெட்டைப் பனைகளை தனித்தனியே ஏறுவதற்குப் பதிலாக ஒரு மரத்தில் ஏறி கலையம் கட்டியபின், கத்தியை இடுப்பில் கட்டியிருக்கும் பானையில் போட்டுவிட்டு, ஒரு மரத்தின் ஓலை வழியாக நடந்து பக்கத்து மரத்தை அடைந்துவிடுவார்கள். இதைத்தான் பனைத்தாவல் என்று சொல்வார்கள். பொன்னன் இதில் பிரசித்தம். பொன்னனுக்கு இப்போது 55 வயதாகிது. இன்னும் கட்டுக் குலையாத கம்பீரம். பிள்ளை மேல் வைத்திருக்கும் பாசம், மனைவி கடிந்துகொள்ளாத மனசு இதெல்லாம்தான் நெட்டைப்பனை உசரத்துக்கு பொன்னனை சொர்ணத்தின் மனசுக்குள் நிறுத்தியிருந்தது.

சொர்ணத்தின் திருமண சமயத்தில், 50 பனை ஒரே மூச்சில் ஏறுவான் பையன், அந்திப்பனை ஏறுவான், என்ùல்லாம் பெருமையாக சொல்லித்தான் திருமணம் செய்து வைத்தார்கள். அப்போதெல்லாம் எத்தனை பனைமரம் ஏறுகிான் என்பதை வைத்துதான் புருஷனுடைய வீரமே கணக்கிடப்பட்டது. இப்போது அதெல்லாம் இல்லை. ஏதோ கொஞ்சம் குடும்பங்கள்தான் பனை ஏறும் தொழில் செய்கின்ன.

பொன்னனுக்கு வைராக்கியம். பனை ஏற்றுத் தொழிலின் மேல் அவனுக்கு பக்தி இருந்தது. காலையில் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து பனை ஏக்கிளம்பிவிடுவான். செல்லாயி கையால் பால் கலக்காத ஒரு தேயிலை தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டால் தூக்கமெல்லாம் போய்விடும். ஒரே பையன் தாசப்பன். அவனை ஒரு வாத்தியாராக்க வேண்டும் என்பதுதான் பொன்னனுடைய ஒரே கனவாக இருக்கிது. அதற்காக அவனை எந்த வேலையும் செய்ய சொல்வதில்லை. தாசப்பனுக்கும் அந்த உணர்வு இருந்தது. எப்போதும் குடிசைக்கு வெளியே இருக்கும் புளியமரத்தடியில் அமர்ந்து ஏதாவது படித்துக்கொண்டிருப்பான்.

இந்த விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து சொர்ணத்துக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. எப்படியாவது பாழாய்ப்போன இந்த வேலையை நிறுத்தச் சொல்லவேண்டும். எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக பனை ஏறுவதை மந்துகொண்டிருக்கிார்கள். இவருக்கு மட்டும் எதுக்கு இந்த வீம்பு? விட்டுத் தொலைக்கவேண்டியதுதானே? ஒழைக்கிதுக்கு உடம்புல தெம்பிருக்கி வரைக்கும் விகு வெட்டியாவது பொழைக்கலாம்,மனசுக்குள் சொல்லிக்கொண்டாள் சொர்ணம்.

இதொன்றும் புதியதில்லை. ஒருமுû பாதிப் பனை ஏறிக்கொண்டிருக்கும்போது, பனை ஏறுவதற்காகக் காலில் போட்டுக்கொள்ளும் திளாப்புக் கயிறு அறுந்துபோக பனை மரத்தைக் கட்டிக்கொண்டு வழுக்கிக் கீழே விழுந்ததில் மார்பு முழுவதும் இரத்தக் காயம். பனைமரத்தின் கூரிய வளையங்கள் ஆழமாக கிழித்திருந்தன. அப்போதே கண்ணீர் தீருமட்டும் அழுதுப் பார்த்தாள். மனுசன் கேட்பதாக இல்லை. தாசப்பனும் ஓரிருமுû சொல்லியிருக்கிான், “”நான் வேணும்னா வேலைக்குப் போúன்பா, நீ இந்த வயசு காலத்துல கஷ்டப்படவேண்டாம்” என்று. அப்போதெல்லாம் சிரித்துக்கொண்டே, “”நீ வாத்தியானாகி நாளைக்கு அப்பும் நான் பனையே மாட்டேண்டா.. அதுவரைக்கும் நீ படி, நான் தொழில் பாக்கúன்” அவனிடம் சொல்லிவிட்டு போய்விடுவார். அதற்குமேல் பேச்சை வளர்த்துவதும் அவருக்கு பிடிப்பதில்லை.

சொர்ணத்துக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்திப்பனை ஏ மாலையில் 5 மணிக்கு தான் போவார்கள். எப்போதாவது கொஞ்சநேரம் பிந்திவிட்டால் என்ன ஆச்சோ, ஏதாச்சோ என்று ஈரல் குலை நடுங்கும். வாசலில் மண்ணெண்ணை விளக்கேற்றி பார்த்திருப்பாள். அப்படி பொழுது தப்பி பொன்னன் வீட்டுக்கு வரும்போதெல்லாம் கள் வாசனையோடுதான் வருவான். நீவி விட்ட பனம் பூவோடு சேர்ந்து கட்டிவைக்கும் கலயத்தில் சுண்ணாம்பு தேய்த்துவைத்தால் சேர்வது பதநீராகும். இல்லையேல் அது கள்ளாக மாறிவிடும். கள் குடுத்துவிட்டு பொன்னன் எப்போதுமே பனையேறுவதில்லை. கடைசிப் பனையில் அவ்வப்போது கள் பனை வைப்பதுண்டு. எல்லா பனையும் ஏறி முடித்தபின் கடைசியாக அந்த பனையில் ஏறி கள் இக்கி அவ்வப்போது குடிப்பான்.

செல்லம்மாளின் வார்த்தைகள்தான் சொர்ணத்தை மிகவும் பாதித்ததென்றில்லை. அந்த கவலை அவளுக்கு எப்போதுமே இருந்து வந்ததால் இன்யை நிகழ்ச்சி அவளை மிகவும் பாதித்தது. பதனீர் காய்ச்சி அதைத் தேங்காயின் கண் பாகம் இருக்கின் சிரட்டைகளில் இலைவைத்து அதில் ஊற்றி, கருப்புக்கட்டி செய்துகொண்டிருந்தபோது பொன்னன் வரும் சத்தம் கேட்டது.

நிமிர்ந்து பார்த்தாள். அவன் கண்கள் கலங்கியிருந்தன. “”ஏன் அப்படி பார்க்கú? நேரத்தோடு வீட்டக்கு வந்திருக்கிúனே? கருப்புக்கட்டி வியாபாரயெல்லாம் அடிமாட்டு விலைக்குப் போயிடுச்சாம். அதனால இந்த வாரம் சந்தைக்கு போகவேண்டாம். அடுத்தவாரம் பாத்துக்கலாம்…” பேசிக்கொண்டே பொன்னன் இடுப்பிலிலிருந்த பனையையும் தோளிலிருந்த திளாப்பையும் கழற்றி கூரையில் தொங்கவிட்டான்.

“”விஷயம் கேள்விப்பட்டீங்களா? தங்கப்பன்..” சொர்ணத்தால் முழுதாக சொல்ல முடியவில்லை.

“”ம்.. கேள்விப்பட்டேன். என்ன ஆச்சுண்ணு தெரியல. அவன் ரொம்ப நாளா கட்டிப்புடிச்சு ஏறு மரம். அவனை கீழே விட்டுடுச்சு…” மெலிதான சோகம் படரவிட்டுக்கொண்டே சொன்னான் பொன்னன்.

“”நான் சொல்தை கேக்கறீங்களா? நாளையிலிருந்து பனை ஏ போகவேண்டாமே? நம்ம நினைச்சா வே வேலையா பாக்கமுடியாது?.. எத்தனை பேரு ஏமான் சாரோட வயலில வேலை பாக்காங்க? அவரோட மரக்கடையில விகு வெட்டாங்க?” சொல்லிவிட்டு பார்த்தாள் சொர்ணம்.

“”அதெல்லாம் எதுக்கு சொர்ணம். எத்தனை வருஷமா இந்த வேலை பாக்கúன்.”

“”எல்லா தொழில்லயும் கஷ்டம் இருக்கு. ஒரு டிரைவர் விபத்துல செத்துபோயிட்டா எல்லாரும் வண்டி ஓடடு தொழிலை விட்டுடுவாங்களா? போன மாசம் ஆத்துச் சுழில சிக்கி ஒரு சின்னப் பையன் கூட செத்துபோயிட்டான் பாவம். விதி முடிஞ்சுட்டா போய் சேத்துட வேண்டியதுதான். அதுக்காக பயந்துட்டு தொழிலுக்கு போகாம இருக்கலாமா சொர்ணம்? நீ கவலைப்படாதே எனக்கு ஒண்ணும் ஆகாது.”

“”எனக்கு பூவோடயும் பொட்டோடயும் போய்ச்சேரணும். அதான் ஆசை. இந்த கஷ்டத்தை எல்லாம் என்னால பாத்துட்டு இருக்கமுடியாது சாமி.. என் தலையில் அவன் என்ன எழுதி இருக்கானோ?” சமையல்கட்டில் சொர்ணம் புலம்பிக்கொண்டிருந்தாள்.

முற்த்திலிருந்த கயிற்றுக்கட்டிலில் வந்து உட்கார்ந்த பென்னனுக்கு தொண்டை அடைத்தது. பாவம் தங்கப்பன், எத்தனை வருஷமாய் பனை ஏறுகிான். சின்ன வயதிலிருந்தே என் கூட பனையேறும் தொழிலைத் தொடர்வது அவன் மட்டும்தான். காலையில முதல் பனையில் ஏறியவுடனே சத்தம்போட்டு பேசுவான், பக்கத்து பனையிலிருக்கும் என்னைப் பார்த்து. ஒரு தோழனாய், தொழில் செய்யுமிடத்தில் ஒரு பேச்சுத்துணையாய் எல்லாமாய் இருந்தவன்தான் தங்கப்பன். அவன் மரணம் இதுவரை சொல்லாத ஏதோ ஒரு வலியையும், சிறு பயத்தையும் பொன்னப்பனின் மனசில் விதைத்தது. அவனுக்கு இந்த நிலை வந்திருக்கக்கூடாது. காய்ப்பேறிப்போன கைகளை ஒருமுû பிசைந்துவிட்டு காதுமடலில் சொருகி வைத்திருந்த பீடி எடுத்து பற்வைத்துக் கொண்டான். “”பையனை எப்படியும் வாத்தியானாக்கவேண்டும். அதோடு இந்த செத்துப்பிழைக்கும் பனையேற்றுத் தொழிலையும் விட்டுவிடவேண்டும்.”

இதுவரை இதமாக இருந்த அந்த கயிற்றுக் கட்டில் முதல் முûயாக முதுகைக் குத்துவதாகத் தோன்றியது பொன்னனுக்கு.

– மே 2001

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *