ஒவ்வொரு கல்லாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 23, 2013
பார்வையிட்டோர்: 25,055 
 
 

அந்த வீட்டில் இவன் குடும்பத்தோடு குடியேறியபோது பக்கச்சுவர் பின் சுவரெல்லாம் பூசியிருக்கவில்லை. வீட்டிற்குள் எப்போதும் சிமிண்ட்வாசம். அறுத்த மரம் வாசம். பெயிண்ட் வாசம். கழுவக் கழுவ சிமிண்டும். தூசியும் வெகுநாளைக்கு வந்து கொண்டிருந்தன. ஜில்லென்றதரையும் சுவர்களும் அளித்த குளிர்ச்சி. கெடு பிடியான வாசனையெல்லாம் சேர்ந்ததில் அவளுக்கும். பிள்ளைகளுக்கும் ஒரு வாரத்திற்குக் கடுமையான ஜலதோஷம் கண்டது.

“வீடு புதுசு’ என்று காட்டவும். போகிறவருகிறவர் நின்று பார்க்கவுமென்று பலவற்றைவீட்டுக்காரர் செய்திருந்தார். “குமார் இல்லம்’ என்று தன் மகனின் பெயரை வீட்டிற்கு வைத்து. அதை ஒரு சாண் உயர எழுத்துக்களாகச் சிமிண்டில் ஆக்கி மொட்டை மாடிச்சுவரில் ஏற்றியிருந்தார். அதன் கீழ். வீடு குடியேறிய சுபதினத்தை ஒரு முட்டை வடிவத்தில் பதித்திருந்தார். ஒரு வராந்தா இருந்தும் எலெக்டிரிக் மீட்டரை வெளிச்சுவரில் பலகை அறைந்து பொருத்தியிருந்தார். திருஷ்டிபடாமலிருக்க கறுப்பு ரோமத்தில் திரித்த கயிற்றில் ஒரு வெள்ளைப் பூசணியைக் கட்டித் தொங்க விட்டிருந்தார்.

முன்பு குடியிருந்த வீடு ஒரு ஒண்டிக் குடித்தனம். அம்மி ஆட்டுரல். பாத்ரூம். சில நேரங்களில் வாசற்படியில் உட்கார என்று எல்லாவற்றிற்கும் க்யூ. இந்தப்பக்கமும் அந்தப் பக்கமுமாயிருந்த ஏழு போர்ஷன்களைச் சின்னம்மா. பெரியம்மா வீடுகள் என்று பிள்ளைகள் நினைத்து வேளை கெட்ட வேளைகளில் விளையாடப் போக, வேண்டாத வார்த்தைகளைக் கேட்கும்படி ஆனது.

பிள்ளைகளை எப்படி வளர்ப்பது; அடுத்தவர்களோடு எப்படிப் பழகுவது என்பவைகளை அவர்களுக்குப்போதிக்கத் துவங்கும் ஒவ்வொரு சமயத்திலும் வாய்ச் சண்டைக்குப் போய்க் கைப்பிரயோகத்தில் முடிந்தது. கோபம் தணியத் தெருவில் தனியாக நடக்கையில் அவன் சண்டை முற்றிய நிலையில் ஒரு நாள் சொன்னது திரும்பத் திரும்ப ஞாபகத்தில் வந்தது. “எங்களுக்குத் தெரியாத எதை இப்ப புதுசாச் சொல்லீட்டிய?

“தனி வீடு’ என்று போய்விட்டால். அவள் மேலும் பிள்ளைகள் மேலும் பிரியமாக இருக்க முடியுமென்று தோன்றியது. படுக்கையிருந்து
எழுந்தது முதல் ராத்திரிப் படுக்கை வரை கூச்சல் எதுவுமே சோபிப்பதில்லை என்று தெரிந்தது.

“தனி வீடு’ தேடி ஊரை அலசிய சமயம் பாதிக்கு மேல் கட்டுமானமாகிய நிலையில் “டுலெட்’ அட்டையோடு இந்த வீடு நின்றது. கையும்
பனியனுமாய் வேலை செய்து கொண்டிருந்த ஆட்களின் நடுவில் பேண்ட் சட்டையோடும் கையில் ஒரு ஹேண்ட் பேகோடும். முகம் நிறையக் கவலையோடும் ஒருவர் நின்று கொண்டிருந்தார். பார்த்த மாத்திரத்திலேயே அவர்தான் வீட்டுச் சொந்தக்காரராயிருக்க வேண்டுமென்று நினைத்தான். அருகில்போய் “வீடு வாடகைக்கு” என்று இவன் பேச ஆரம்பித்தவுடனேயே பேண்ட்காரர் இவனை வேலையாட்கள் மத்தியிருந்து தனியாக அழைத்துக் கொண்டு நடந்தார்.

அதெல்லாம் வயற்காடாக இருந்த இடம். நெல்லறுத்த தாள்கள் நூல் நூலாய் நைந்து கிடந்தன. பழைய வாய்க்கால்களில் அழுத்திக் கொண்டிருந்த வரப்போரங்களில் மட்டும் உள்ளங்கையளவு பச்சைப் புல் திட்டுக்கள் தெரிந்தன. நடந்த வழியெல்லாம் வீடு கட்டிக் கொண்டிருந்தார்கள். சின்ன சாலைகளை மறித்துக் குவியல் குவியலாய் மணல் கொட்டிக் கிடந்தது. கிணறுகள் வெட்டி வெளிவந்த சுங்காம் பாறைக்குவியலும் செங்கல்லும் சிமெண்டுக் கலவையுமாய் பழைய வயற்பரப்புக்கள் அடையாளம் தெரியாமலாக்கும் வேலைகள் அந்தப் பிரதேசம் முழுதும் நடந்தன.

கட்டி முடித்து இன்னும் குடி வராத ஒரு வீட்டுக் காம்பவுண்டுக் கதவைத் திறந்து வாசற்படியில் உட்கார்ந்தார் பேண்ட்காரர். கீழ்ப்படியில் இவன் உட்கார்ந்தான். “உங்களுக்கு வீடு எப்ப வேணும்?” என்று ஆரம்பித்தார்.

“இன்னைக்குன்னாலும் சரிதான். ஆனா வேலை முடியாம இருக்குதேன்னு பாக்கிறேன்.” என்றான் இவன்.

“முடிகிறஅளவுதான் வேல முடியும்; மிச்சமெல்லாம் கெடக்கும்.”

“அது உங்க பிரியம். வாடகை எவ்வளவுன்னு சொல்லுங்க?”

“சொல்றேன். அவ்வளவு வாடகை என்னை மாதிரி ஆள்களுக்குக் கட்டுப்படியாகாது. முன்னூறுரூபா வாடகை. மூவாயிரம் ரூபா அட்வான்ஸ்.”

“ரெண்டுமே அதிகந்தான். அதோடேயே சேத்து ஒண்ணு சொன்னியளே. அதுக்கு என்ன அர்த்தம்?”

“சொந்தமா ஒரு வீடு வேணுமேங்கிறதுக்காக ஊரு பூரா கடனை வாங்கி இந்த வீட்டைக் கட்டிட்டேன். நான் இப்ப இருக்கிறவீட்டுக்கு நூத்தம்பதுதான் வாடகை.”

பேண்ட்காரர் இவன் வீட்டிற்கு ஒரு நாள் வந்து கிரகப் பிரவேசப் பத்திரிகையைக் கொடுத்துவிட்டுப் போனார். பார்த்துச் சிரிப்பாய் வந்தது. அதிருந்து ஏழாம் நாள் இவன் குடியேறப் போகும் வீடு. அட்வான்ஸ் பணத்தை முதல் நாள்தான் கொடுத்துவிட்டு வந்திருந்தான்.

இவன் குடும்பம் குடியேறி இரண்டு நாட்கள் வரை வாசல் கட்டியிருந்த வாழை மரங்கள் வாடிக் கொண்டு சணல் கட்டிக் கிடந்தன. பந்தல்காரர் வந்து அவைகளைக் கீழே தள்ளி இழுத்துப் போய் எதிரே இருக்கும் பள்ளத்தில் தள்ளிவிட்டார்.

பேண்ட்காரரின் மகன் முதல் மாதம் வாடகைக்கு வந்தான். அவன் பெயரைத்தான் வீட்டிற்கு வைத்திருந்தார். வாடகையைக் கொடுக்கும் போது. சுவர்கள் பூசாமல் கிடப்பதையும். வெளியிருக்கிற பாத்ரூமுக்கும் கொல்லை வாசலுக்குமிடையே ஒரு தாழ்வாரம் கட்டித் தருவதாய்ச் சொன்னதையும் “அப்பாட்ட ஞாபகப்படுத்து” என்றான்.

அடுத்த மாதமும் வாடகை வாங்க அந்தப் பையனே வந்தான். வயதுக்கு மீறிய மௌனத்தோடு சுவரைப் பார்த்துக்கொண்டு நின்றான். வாடகையை வாங்கிக் கொண்டு மெல்லப் படியிறங்கிப் போனான். பதினைந்து நாள் கழித்து ஒரு ஞாயிற்றுக்கிழமை விடியக்காலையில் பேண்ட்காரர் வந்து நின்றார். முகம் வாடியிருந்தது.

இவன் உள்ளே அழைத்தான். “இல்லை இப்படியே உக்காரலாம்” என்றார். உள்ளேயிருந்து இரண்டு நாற்காகளைக்கொண்டு வந்து போட்டான். உட்கார்ந்ததிருந்து அவர் தலை குனிந்தேயிருந்ததது. இவனுக்கு முதல் சங்கடமாகவும் அப்புறம் எரிச்சலாகவும் இருந்தது.
“சொல்லுங்க” என்றான்.

பேண்ட்காரர் நிமிர்ந்தார். முகத்தில் பிச்சை எடுக்கப் போகும் களை வந்திருந்தது. சொன்னார். “வேட்டி கட்டுறவன். கைகட்டுற வன்லாம் வீடு கட்டுறானேன்னு நானும் வீடு கட்ட ஆசைப்பட்டது தப்பாப் போச்சு. லோன் போட்டது. பாதிக்குக் கூடக் காணலை. சொந்தக்காரங்க. வேண்டியவங்கன்னு வரிசையாகக் கடன் வாங்கினேன். கடைசியா மூணு வட்டிக்கு வாங்கி முக்காவாசி முடிச்சேன்.”

இதில் பாதி அவர் ஏற்கனவே சொன்னதுதான். இப்போது கேட்க இவனுக்கு இரக்கமாய் வந்தது. தைரியப்படுத்துவதற்காகச் சொன்னான். “உங்களுக்குன்னு சொந்தமாக ஒரு வீடு ஆகியிருச்சில்ல…”

பேண்ட்காரரின் தலை மறுபடி பாதிக்குக் குனிந்தது. “வாங்குறசம்பளம் முழுசும் வட்டிக்குப் போயிருது. வட்டிக்குன்னு இல்லாமக் குடுத்தவங்க மொகங்கள் வருத்தமாகிக்கிட்டு வருது.” பேண்ட்காரர் நிமிர்ந்து உட்கார்ந்தார். “ஒரு நாப்பதாயிரம் குடுங்க. இந்த வீட்டை ஒங்க பேரிலெ ஒத்திக்கு எழுதித் தர்றேன். கிராமத்துலெ இருக்கிறநஞ்சை புஞ்சை மனைகளையெல்லாம் விக்க ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்கேன். கிராமத்திலெ ரொக்கம்வச்சிருக்க மாட்டான். சிறுகச் சிறுகத்தான் வாங்குவாக. ஒருவருசத்திலெ திருப்பிடுவேன்…”

இவன் தடுமாறிப் போனான். தன் சம்பளம் எப்படியெல்லாம் தனக்குப் போதவில்லையென்று எடுத்துச் சொன்னான். அவ்வளவு பெரிய தொகையை வாழ்நாளில் மொத்தமாக ஒரு இடத்தில் இன்னும் தான் பார்த்துகூட இல்லையென்று சிரித்துக் கொண்டே சொன்னான்.

பேண்ட்காரருக்கு முகம் மாறியது. “முன்னூறு ரூபா வாடகை உங்களுக்கு மிச்சம். சேர்த்துப் பொறட்டிக் குடுத்துட்டீயன்னா அந்தப் பணம் உங்களுக்கு பெரிய காரியம் எதுக்காவது உதவும். ஒரு வாரங் கழிச்சு மறுபடி வர்றேன். நல்லா யோசிங்க என்று சொல் விட்டுப் படியிறங்கினார்.

உள்ளே நுழைந்ததும் அவள். “இது என்ன புதுக் கூத்தாயிருக்கு?” என்று சிரித்தாள். விளையாட்டாய்ப் பேசிக்கொண்டே வரும் போது தாங்கள் ஒரு சிக்கல் மாட்டிக் கொண்டதை டக்கென்று அவள் எடுத்துச்
சொன்னாள். “அந்த நாப்பதாயிரத்தை நாம் குடுக்கலைன்னா கொடுக்கிறவனுக்கு வீட்டை ஒத்திக்கு விட்டுட்டு நம்மைக் காபண்ணச்
சொல்லப் போறாரு.”

வீட்டிற்குள் கிணறும் கிணற்றுத் தண்ணீர் வற்றாமல் வாய்த்ததும் இந்த ஊரில் ஒரு அதிர்ஷ்டம் பக்கத்திலே இவனுக்கு ஆபீஸ். பிள்ளைகள் ஆளுக்கொரு அறையிலோ ஒதுக்கமாகவோ உட்கார்ந்து படிக்கலாம். மொட்டை மாடி மைதானம் மாதிரி ஒண்டிக் குடித்தன வீட்டை நினைக்க இந்த வீட்டில் அடுப்படி கடல் மாதிரி.

அ வ ளு க் கு இ ந் த வீ ட் û ட விட்டுவிடக்கூடாதென்றவைராக்கியம் வந்து விட்டது. மறுநாள் அவள் தன் அம்மா ஊருக்குப் போய் வந்தாள். அவன் பிராவிடண்ட் *பண்டில் லோன் போட்டான். மதுரையிருக்கும்
தங்கை மாப்பிள்ளை வரவு செலவுள்ளவர். அவருக்கு விவரமாய் ஒரு கடிதம் எழுதினான். நெருங்கிய நண்பர்களின் வீடுகளுக்கு முன்னால் விடியும் போது நின்றான். வீடு ஒத்திக்கு வருகிறது என்றால் “பாதி கிரயம்’ என்று அர்த்தம் என இருவரும் பேசி முடிவெடுத்த வெறியில் நடந்தன எல்லாம்.

ஒரு வாரங்கழித்து பேண்ட்காரர் வந்தபோது பைக்குள்ளிருந்து கை கொள்ளாத நோட்டுகளை அள்ளி வெளியிலெடுத்தான். பழக புதுசு அழுக்கு எல்லாம் சேர்ந்த கலவை நோட்டுகள்; எண்ணி முடிக்கவே வெகு நேரமானது. பத்திரத்தில் கையெழுத்துப் போடுகையில் பேண்ட்காரரின் கை நடுங்கியது. ஒவ்வொரு கல்லாயெடுத்து வைத்துக்
கட்டியவர் ஒருமுறைவீட்டைக் கீழ் மேலாய்ப் பார்த்துவிட்டு நடந்தார்.

ஒரு வருஷத்திற்குச் சத்தமேயில்லை. பேண்ட்காரரை இவன் சந்திக்கும் போதெல்லாம் “வணக்கம்’ போட்டுக் கொள்வதோடு சரி. திடீரென்று ஒரு நாள் முனிஸிபல் ஆபீஸ் எதிரில் போய்க்
கொண்டிருந்தபோது கைகாட்டி நிறுத்தினார். “இன்னும் ரெண்டு
மாசத்திலெ ஒத்தியைத் திருப்பிடுவேன் ஸôர்ó. எல்லா ஏற்பாடும்
நடந்துக்கிட்டிருக்கு” என்று சொல் விட்டுப் போனார்.

அன்று ராத்திரி வெகு நேரம் வரை இவன் மனைவியோடு இதைப் பற்றி பேசினான். விடிந்ததும் பெரிய கண்மாய்க்குப் போகும் வழியில் விற்பனைக்குக் கிடந்த மனை இடங்களைப் பார்த்து வந்தான். எங்கும் புறாக்கள் உட்கார்ந்திருப்பது போல் ஊன்றிக் கிடந்த வெள்ளைக் கற்களின் இடையே அவன் குடும்ப சகிதமாய் மனை முகூர்த்தத்திற்காக நின்றான். பிரித்து வைத்த துண்டுக் காகிதத்துக்
குங்குமம். வைகாசி வெயில் பயப்படும் நிறத்தில் தெரிந்தது. தூர
தூரமாய் இதேபோல் நாலைந்து இடங்களில் குடும்பங்கள் கடக்கால் போட நின்று கொண்டிருந்தன. பட்டு வேட்டிகளும், பட்டுச் சேலைகளும் வெயில் ரொம்பவும் மினுமினுத்தன.

அன்று சில ஆட்களிடம் அட்வான்ஸ் கொடுத்தான். இப்போது குடியிருக்கும் பேண்ட்காரரின் வீட்டில் எதெதெல்லாம் இல்லையோ அதெல்லாம் தான் கட்டப்போகும் வீட்டிருக்க வேண்டுமென்பதை முடிவு செய்திருந்தான். “பாத் அட்டாச்ட் ரூம் இல்லாத வீடு என்னத்தில் சேர்ந்தது?” என்றான் அவளிடம். தூ ங் கி க் ù க ô ண் ú ட ô . பு ர ண் டு ù க ô ண் ú ட ô கிடக்கிறபெரியவர்கள். குழந்தைகளைத் தாண்டி உடைகளைச் சரிப்படுத்தி அகால நேரங்களில் அவள் பாத்ரூம் போய் வருவதில் அவளுக்கு நேரும் சங்கடங்கள் அவனைப் பாதித்திருந்தன.
பிளான் போடும் போதே இஞ்சினியரிடம் சொல் விட்டான். “எவ்வளவு செலவானாலும் சரி “அட்டாச்ட் பாத்ரூம். பாதிச் சுவருக்கு வெள்ளைக் கல் என்று.

பேண்ட்காரருக்கு அவ்வளவாய் ரஸனை போதாதென்று மனசுக்குள் சொல்க் கொண்டான். வாசல் வேப்பங்கன்றைவைத்தான். கொல்லையில் பன்னீர்ப்பூ மரக்கன்றைவைத்தான். வீடு கட்டி முடிக்கையில் ஒரு ஆளுயரத்திற்காவது வளர்ந்திருக்க வேண்டுமென்று சித்தாள்களிடம் சொல்வான்.

உப்பு புளிக்காகும் செலவுகள் துச்சமாய்த் தெரிந்தன அவள் ஒரு. “அஞ்சு ரூபா இருந்தாத்தாங்க” என்று கேட்க “அஞ்சாயிரம் இப்ப எதுக்கு? என்று பதில் சொன்னான். ஆயிரங்களுக்குக் குறைத்து வாயிருந்து வார்த்தை கீழே விழுவதில்லை. ண்டல். ரூ*பிங் என்று புதுப்புது வார்த்தைகளிலேயே கணவன். மனைவி பேசிக் கொண்டனர்.

லோன் முதல் தவணை வந்தது. ஏற்கனவே வாங்கிய கடன்களில் ஒரு பகுதியை மட்டுமே அடைக்க அது பயன்பட்டது. அடுத்த தவணை லோனைக் காட்டி எங்கெங்கோ போய் ரொக்கமாகவும் பல வீட்டு நகைகளையும் வாங்கி வந்தான்.

மரத்துக்காக மானாமதுரை. தரையில் பதிக்கிறகல்லுக்காகச் செட்டிநாடு என்று அலைந்து திரிந்தான். ஒவ்வொரு வேலை முடிவிலும் தனக்குள் எவ்வளவு திறமை இருந்திருக்கிறதென்று நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டான்.

ராத்திரி தூக்கம் குறைந்து போனது. இருட்டி வெகு நேரங்கழித்து வீட்டிற்கு வந்து குளித்து. சாப்பிட்டுக் கணக்குப் பார்த்து விடிய எத்தனை மணிக்கு எழுந்திருக்கவேண்டும். என்னென்ன வேலைகள் செய்யவேண்டு மென்பதையெல்லாம் பேசி முடித்து விட்டு நடுநிசியில் ஒரு நாள் அவள் கேட்டாள். “மாடிப்படியிலெ மூணாவது படி கோணலாயிருக்குமோன்னு தோணிக்கிட்டேயிருக்கு.” அவன் கத்தினான் “எல்லாத்தையும் மறந்துட்டுக் கொஞ்ச நேரமாவது தூங்கவிட மாட்டியா?”

ஒத்தி வாங்கக் கடன் கொடுத்தவர்கள் புது வீடு கட்டக் கடன் கொடுத்தவர்கள் என்று பலரிடமிருந்தும் திருப்பித் தரச் சொல்லி ஜாடை மாடையாக எழுதிய கடிதங்கள் வர ஆரம்பித்தன. சிலர் அதிகாலையிலும். இருட்டியும் வீட்டு வாசல் வந்து நின்றார்கள்.

ரெண்டாந்தவணை. மூணாந்தவணை லோன் வந்தும் வீடு முடிவதாயில்லை. ஊர் பூராவும் பல ஊர்களிலும் வாங்கிய கடன் பகுதி பகுதியாய் மிச்சம் கிடந்தது. “அகலக்கால் வைக்காதியன்னு ஆரம்பத்திலேயே சொன்னேன்; கேட்டாத்தானே” என்று எப்போதோ ஒருமுறைசொன்னதை ஞாபகத்தில் கொண்டு வந்து திரும்பத் திரும்ப அவள் எரிச்சல் படுத்தினாள்.

ஒரு நாள் பேண்ட்காரர் கைப்பை நிறைய ரூபாயுடன் வந்து சேர்ந்தார்.

“நேத்து ராத்ரிதான் பாக்கி ரூபாயும் வந்து சேர்ந்துச்சு.” என்று சொல்
விட்டு எடுத்து வைத்தார்.

பேண்ட்காரர் முகத்தில் பெரிய மாதிரி மகிழ்ச்சியில்லை. ஒத்திப்
பத்திரத்தை இவனிடமிருந்து பெற்றுக் கொண்டதும் சொன்னார்.

“அப்டி இப்டி ஏதோ பண்ணி வீட்டைத் திருப்பிட்டேனே தவிர
கடன் முழுசும் அடைஞ்சபாடில்லை; நீங்க காலி பண்ணினதும் நான்
இன்னும் இங்கே வர்றநிலையிலே இல்லை. வாடகையைக் கூட்டி
வைச்சு யாரையாவது குடிவைக்கணும்.”

இவன் கேட்டான் “எவ்வளவு கூட்டுவிய?”

“அம்பது ரூபா”

“நானே அந்த அம்பதையும் சேத்து முன்னூத்தம்பதுன்னு வாடகை
குடுத்துடுறேன். நான் ஒங்க வீட்டிலெயே தொடர்ந்து வாடகைக்கு
இருக்கப் போறேன். நான் கட்டுற வீட்டுக்கு வாடகை ஐநூறு ரூபா.
பாத் அட்டாச்ட் ரூமோட வீடு நமக்குக் கட்டுப்படியாகாது.”

ஆறு மாதங்கழித்து ஒரு நாள் இவன் மதுரையிருந்து ஊருக்கு
வந்து கொண்டிருந்தான். முன் சீட்டில் உட்கார்ந்திருந்த ஆள் பக்கத்தாளிடம் சொன்னார். “பத்து வருஷத்துக்கு முந்தி நான் இங்கெ
வந்த போது இந்தப் பக்கமெல்லாம் வயக்காடும். கருவக்காடுமாக்
கெடந்துச்சு. ஊரு முன்னேறிருச்சு எங்கே பாத்தாலும் வீடுகளா
நிக்கிது.” சொல்லிக்கொண்டே அந்த ஆள் பார்த்த திசையை இவனும்
பார்த்தான். வெகு தூரத்தில் மங்கலாய் இவன் வீடும் நின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *