கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 23, 2013
பார்வையிட்டோர்: 17,809 
 

அன்று சூரப்பட்டி. மாரியம்மன் உற்சவம் போல். விழாக் கோலம் பூண்டிருந்தது.

ஊர் நுழைவாயில் கோயில் எதிரே கொட்டகை போட்டு, வாழை மரங்கள் கட்டியிருந்தார்கள். அங்கிருந்து. கிராமத்தின் ஓரே “தேசிய சாலை’ யான வீதியில். இரண்டு பக்கங்களிலும் ராமாயி வீடு வரை, கம்பங்கள் நட்டு, தென்னங் குருத்து, மாவிலைத் தோரணங்கள் காற்றிலே மெல்லச் சலசலத்துக் கொண்டிருந்தன. ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் பெரிய பெரிய கோலங்களில் பெண்களின் கைவண்ணம் மிளிர்ந்தது.

அந்த ஊரில் பிறந்த சின்னத்தாயி, இங்கிலாந்திருந்து பெற்றோருடன் – இருபத்தோரு ஆண்டுகளுக்குப் பிறகு – பெற்றதாய் தந்தையின் கிராமத்திற்கு அன்று வருகிறாள்.

அவளை வரவேற்கத்தான் அந்த ஊரிலே அன்று அவ்வளவு உற்சாகம், மகிழ்ச்சி, பெருமை பரபரப்பு, எல்லாம்!

ஆனால் – 21 ஆண்டுகளுக்கு முன்பு – இந்தச் “சின்னத்தாயி’ ராமாயியின் குடிசையிலே மூன்றாவது பெண் குழந்தையாகப் பிறக்கும்போது-

அந்தக் குடிசையில் தான் எத்தனை மயான அமைதி…..ராமாயிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் அவதரித்து. அவள் வீட்டுத் தரித்திரத்தைப் பங்குபோட்டுக் கொண்டிருந்தன.

அவளுடைய கணவன் கருப்பையா. விவசாயக் கூலி. மழை பெய்து. கண்மாய்கள் நிறைந்தால். வருஷத்தில் மூன்று அல்லது நான்கு மாதங்கள். வேளாண்மை வேலைகள் கிடைக்கும். உழவு, நாற்றுப்பாவுதல், நடவு, களையெடுப்பு, அறுவடை என்று, மனைவியோடு சுற்றுப்புறக் கிராமங்களுக்கெல்லாம் நடந்து போய் வேலைபார்ப்பார்கள். கிடைக்கும் கூலியைக் கொண்டு வந்து, குடிசையிலே சேமித்து வைத்து, அவ்வப்போது கிடைக்கும் “மெய்க்காட்டு’ வேலைகளையும் பார்த்து, ஓர் ஆண்டுக் காலத்தை அரைவயிற்றுக் கஞ்சியோடு, ஜீவனோபாயம் நடத்துகின்ற குடும்பம் அது…..

அந்த வட்டாரத்தில. பெண் குழந்தை பிறந்து விட்டால். அந்த வீடு இழவு வீடுதான். சோகத்தில் மட்டுமல்ல – உண்மையிலே, அது “இழவு வீடு’ ஆகிவிடும்!

கள்ளிப்பால், கருக்காய், நெல் என்று ஏதாவது கொடுத்து, தாய்மார்களே ஒன்று கூடி சிசுவைக் கொன்று புதைத்துவிடுவார்கள்.. “அப்பாடா! ஒரு பொட்டச்சி, கஸ்டப்படாம, கரை சேர்த்துட்டோம்…’ என்ற மன நிறைவோடு மகிழ்ச்சியடையும் அந்த கிராமம்.

அப்படிப்பட்ட இழவு சம்பவம். ராமாயி வீட்டிலே ஏற்கனவே இரண்டு தடவை ஏற்பட இருந்தது. கையும் கள்ளிப்பாலுமாகச் சுற்றி நின்ற பெண்களிடம் கெஞ்சி, அழுது இரண்டு பெண் குழந்தைகளையும் புதை குழிகளிருந்து மீட்டு விட்டாள்.

“ஆத்தா!… பெண்டுகளா! எப்படியாச்சும் இந்தப் புள்ளையை நான் வளர்த்துக் காப்பாத்திடறேன். ஆத்தா! பெத்த வயிறு துடிக்கு. கள்ளிப்பால் குடுக்க மனசு கேக்கலே!… இந்தப் புள்ளையை விட்டுடுங்க…. என்று உறவினர்களிடம் கண்ணீர் மல்கக் கதறிக் கதறி. இரண்டு மகள்களையும் சாவிருந்து காப்பாற்றி விட்டாள்.

இப்போது மூன்றாவது பெண் குழந்தை!

அந்தக் கிராமத்துக்கு அடிக்கடி வந்து செல்லும் “சேவா’ என்னும் தொண்டு நிறுவனத்தின் கோவிராஜ், பெண்சிசுக் கொலையின் கொடுமையை அவ்வப்போது உருக்கமாக எடுத்துச் சொல்வார். அவர் பேச்சை சுவாரஸ்யமாகக் கேட்பார்கள். ஆனால். குழந்தை பிறந்த வீட்டில், பெண் சிசுவின் அழுகைக் குரல்தான். அவர்கள் நெஞ்சுக்குள் பாய்ந்து உலுக்குமே தவிர, கோவிராஜின் பேச்சே நினைவுக்குள் எட்டிப்பார்க்காது.

இந்தத் தடவை ராமாயிக்குக் குழந்தை பிறந்ததுமே, குடிசையின் முன்னால் வந்து ஆஜராகி விட்டார் அவர்.

அவருடைய தொண்டு நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் வந்து
நிதியுதவி செய்யும் இங்கிலாந்து நாட்டுத் தம்பதிகள் ரிச்சர்டும் லிஸியும் குழந்தைப்பேறு இல்லாதவர்கள். ஆகையால் ஓர் ஏழைக் குழந்தையைத் தத்து எடுததுக்கொள்ள விரும்புவதாக அவரிடம் தெரிவித்திருந்தார்கள்.

ராமாயியின் குழந்தையை. அந்தத் தம்பதிகளுக்குத் தத்துக் கொடுக்க ஏற்பாடு செய்ய முன் வந்தார் கோவிராஜ். அதைக் கேட்டதும். கிராமத்துப் பெண்களுக்கு, பாதி ஆச்சரியம்.

“என்ன சொல்றீக நம்ம புள்ளையை வெள்ளைக்காரங்க, தத்து எடுத்துக்கிறாகளா?” என்று இடுங்கிய கண்களை அகலப்படுத்தினாள் கிழவி செல்லாயி.

“கறுப்பு நிறம்னாலே வெள்ளைக்காரர்களுக்குப் பிடிக்காதுனு அய்யா சொல்லுவாகளே?” என்று கேட்டாள் சிகப்பி. அவளுடைய தாத்தா வெள்ளைச்சாமி. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு. ஆகஸ்டு புரட்சியில் சிறைக்குப் போய்வந்த தியாகி.

“அய்யய்யோ…! நம் பொண்ணு கஸ்டப்படக் கூடாதுனுதான், கள்ளிப்பால் கொடுத்துச் சாகடிக்கிறோம். இதை வெள்ளைக்காரங்களுக்குத் தூக்கிக் குடுத்து, அங்கே அவங்க
அதைக் கஷ்டப்படுத்தினா. யாரு கேக்கிறது?”

“அதெல்லாம் வேண்டாம்யா!… இது என்ன புதுப் பளக்கம்?….அதிலும் பொட்டப் புள்ளையை யாராச்சும் தத்து எடுத்துக்குவாகளா?”

“நம்ம வீட்டிலே பொறந்த புள்ளையை நாம வளக்கணும். இல்லேன்னா நாமே கொன்னு புதைச்சிடணும்… நமக்குப் புள்ளை வளர்க்க வக்கு இல்லேங்கிறதுக்காக, வெள்ளைக்காரங்களுக்குக் குடுக்கறதா?…அதெல்லாம் வேண்டாம்….” என்று சுற்றியிருந்தவர்கள் எல்லாம் ஆட்சேபணை தெரிவித்தார்கள். ஆனால் பெற்றவளுக்கோ. தன் சிசுவைக் கொல்ல மனம் இல்லை. கண்காணாத தூரமாயிருந்தாலும், எங்கேயாவது உயிரோடே அவளுடைய குழந்தை இருந்தாலே போதும் என்றும் நினைத்தாள் அவள்…

“அடியே ராமாயி! ஊரிலே இல்லாத புது வளக்கம் எல்லாம் உண்டாக்காதே… அப்புறம். பெரியவங்க எல்லாம் கூடி. உன்னை
ஊரை விட்டே தள்ளிவச்சிருவாக…” என்று எச்சரிக்கை செய்தது
ஒரு பெரிசு’…

கடைசியில். கோவிராஜின் முயற்சி வெற்றி பெற்றது… ரிச்சர்ட் லிஸி தம்பதிகளுக்கு, குழந்தையைத் தத்துக் கொடுக்க, சட்டபூர்வமான நடவடிக்கைகள் எல்லாம் செய்து முடித்தார் அவர். பெற்றவளைத் தவிர, ஊரில் எல்லோரும் மறந்துபோன அந்தப் பெண்குழந்தைதான், இப்போது பருவப் பெண்ணாக, பெற்றெடுத்தவர்களைப் பார்க்க இங்கிலாந்திருந்து பறந்து வருகிறாள்!

இந்த 21 ஆண்டுகளில் சூரப்பட்டியும் எவ்வளவோ மாறிவிட்டது!

“அடடே! நம்ம வளக்கப்படி, பாட்டியோட பேரையே பேத்திக்கு வச்சிருக்காகளே. வெள்ளைக்காரங்க!” என்ற வியப்புடனும் பெருமையுடனும், தங்கள் ஊரில் பிறந்த வெள்ளைக்காரியாய் வளர்ந்திருக்கிற “சின்னத்தாயி’ யைப் பார்க்க, ஆவலோடு காத்திருந்தார்கள், கிராம மக்கள்.

மதுரை விமான நிலையத்தில் வந்து இறங்கிய ரிச்சர்ட், லிஸி, சின்னத்தாயி குடும்பத்தை, காரில் அழைத்துக் கொண்டு, சூரப்பட்டிக்கு வந்தார் கோவிராஜ். அவர்கள் ஊருக்குள் நுழைந்ததும். குலவை ஒல போட்டுப் பாடி. மாலைகள் அணிவித்து, ராமாயியின் வீட்டு வாசலே ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள்.

சின்னத்தாயி, பெற்றோரைப் பார்த்ததும், உணர்ச்சி பொங்க, “ஆத்தா! அப்பா! நன்றாக இருக்கிறீர்களா? என்று குரல் கம்ம, கட்டிப்பிடித்துக் கண்கலங்கியதைக் கண்டு கிராமத்து மக்களுக்கு இரண்டு ஆச்சரியம் – பிறந்த உடனே வெள்ளைக்கார நாட்டுக்குப் போன பெண். எப்படி இவ்வளவு சுத்தமாகத் தமிழ் பேசுகிறாள்? அவள் மட்டுமல்ல – ரிச்சர்ட், லிஸி தம்பதியரும், தமிழில் பேசுகிறார்களே? மக்களுடைய முகத்தில் கவிந்த வியப்பைப் புரிந்து கொண்டார் கோவிராஜ்.

“டாக்டர் ஜி.யூ போப்னு ஒரு பாதிரியார் ரொம்ப காலத்துக்கு முன்னாலே, தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார் தெரியுமா? திருக்குறளையும் திருவாசகத்தையும் இங்கிலீசில் மொழி பெயர்த்து. உலகத்திற்குத் தமிழின் பெருமையை வெளிப்படுத்தினாரே. போப்? என்று கேட்டார் கோவிராஜ்.

பாவம்! அந்தக் கிராமத்தார்களுக்கு, போப், திருக்குறள், திருவாசகம் என்பதெல்லாம் தெரியுமா? அவர்கள் மேலும் விழிபிதுங்கி நின்று கொண்டிருந்தார்கள்.

தன் கல்லறையில் “ஜி.யூபோப் – ஒரு தமிழ் மாணவன்’னு எழுதச் சொன்னாரே. அந்த போப் பரம்பரையில் வந்தவர்கள் தான் இந்த ரிச்சர்ட் சார் குடும்பம்”… என்று அறிமுகப்படுத்தினார் கோவிராஜ்.

“யா… சிறுவயதிருந்தே தமிழையும் கற்றுக் கொள்வது எங்கள் குடும்பப் பழக்கம்.. யாராவது தமிழர்களைக் கண்டால். அவர்களோடு தமிழிலேயே பேசி சந்தோஷப்படுவோம்..” என்று ஆமோதித்தார் ரிச்சர்ட்.

“சின்னத்தாயியின் குழந்தைப் பருவத்திருந்தே, உங்களைப் பற்றிச் சொல்யே வளர்த்தோம். இப்போது. அவள் உங்களையெல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அதற்காகத்தான் அவளை அழைத்துக் கொண்டு வந்தோம். உங்களைப் பார்த்ததில் அவளுக்கு மட்டுமல்ல- எங்களுக்கும் சந்தோஷம்!” என்று சிவந்த முகமெல்லாம் சிரிப்புப் பொங்கி மலரச் சொன்னாள் லிஸி.

அன்றைக்கு என்று அரிசிச் சோறு வடித்து, குழம்பு, காய்கறிகள், ரஸம், பாயசம் வைத்துப் பரிமாறினாள் ராமாயி. இருபத்தோரு ஆண்டுகளுக்குப் பிறகு. தன் வயிற்றில் பிறந்த மகளுக்கு உணவூட்டி மகிழ்ந்தாள் அந்தத் தாய்.

வெள்ளைக்காரக் குடும்பம் இங்கிலாந்திருந்து வந்து அங்கே தங்கியிருக்கும் செய்தி, வெளியில் பரவி, பத்திரிக்கைக்காரர்கள். பேட்டி காண வந்து விட்டார்கள்.

“நான் பிறந்த புனித பூமியை மீண்டும் தரிசிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனாலும் என் பெற்றோர். இன்னும் வறுமையிலே வாடுவதைத்தான். என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த மண்ணில். எப்போது பொன் விளையும் என்று ஆதங்கப்படுகிறேன்.” என்று கண்களில் நீர் மல்கக் கூறி அழுதாள் சின்னத்தாயி.

கிராமத்தில் எல்லோருடைய வீடுகளுக்கும் சென்று, பார்த்து, அவர்கள் அன்புடன் தந்த கூழ், கஞ்சி, பானகம், பனங்கிழங்கு, பதனீர், சோளக்கதிர், பனம் நுங்குகளை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சாப்பிட்டார்கள் வெள்ளைக்காரத் தம்பதிகளும் மகளும்.

மூன்று நாட்கள் கழித்து. நெஞ்சம் கலங்கி வருந்தப் பிரியாவிடை பெற்றுப் புறப்பட்டாள் சின்னத்தாயி. ராமாயியும் கருப்பையாவும் கண்ணீர்ப் படலம் விழிகளை முட்டித்தெறிக்கப் பெற்றமகளை அனுப்பி வைத்தார்கள்.

மதுரை விமான நிலையத்திற்கு வந்ததும். ரிச்சர்டும் லிஸியும் கோவிராஜைத் தனியே அழைத்துக் கொண்டுபோய்ப் பேசினார்கள்.

“மிஸ்டர் கோவிராஜ்! என் மகளின் குடும்பத்தின் வறுமையைப் பார்க்க எங்களுக்கு வருத்தமா யிருக்கிறது. இவ்வளவு ஏழ்மையிலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்கள் எங்களிடம் காட்டிய அன்பை எங்களால் மறக்க முடியாது” என்று மனப்பூர்வமாகக் குரல் தழுதழுக்கச்
சொன்னாள் லிஸி.

“யா… மிஸ்டர் கோவிராஜ்! பெற்றதாயும் தந்தையும் இவ்வளவு வறுமையில் வாடிக் கொண்டிருப்பதால். அவர்களுக்கு நாம் பொருளுதவி செய்வோம் என்று எங்களிடம் ஒரு வார்த்தை கூட. சின்னத்தாயி சொல்லவில்லை. அது எங்கள் மனத்தை உருக்கிவிட்டது. எங்கள் அனுமதி இல்லாமலே அவளால் அவர்களுக்குப் பண உதவி செய்யமுடியும். ஆனாலும் அவள், அப்படி எங்களைச் மீறிச் செய்யவில்லை. உண்மையில் இந்த மண்ணின் மகளது உத்தமப் பண்பைப் பார்த்து நான் ரொம்பப் பெருமைப்படுகிறேன். எஸ் வீ ஆர் ரியப்ரவுடு ஆ*ப் ஹாவிங் ஹெர் அஸ் அவர் டாட்டர்!” என்று பெருமிதம் பொங்கும் குரல் சொல்மகிழ்ந்தார் தந்தை.

அந்தத் தம்பதியரின் உணர்வு கமழும் பேச்சு. கோவிராஜின் மனத்திற்குள் ஆழ்ந்த சிர்ப்பைப் பரப்பியது.

தன்கைப்பையிருந்து நோட்டுக் கற்றைகளை எடுத்து. அவரிடம்
நீட்டினார் ரிச்சர்ட்.

“மிஸ்டர் கோவிராஜ்! இந்தப் பணம் – இந்திய ரூபாயில் சுமார் இரண்டு லட்சம் இருக்கும் – இதை ராமாயியிடம் கொடுங்கள். அவர்களுக்கு உதவியாக இருக்கும்.” என்று கொடுத்து விட்டுப் புறப்பட்டார் அவர்.

அவர்கள் இங்கிலாந்து போய்ச் சேர்ந்த போதே, கோவிராஜிடமிருந்து கடிதமும் வந்து சேர்ந்தது.

“மிஸ்டர் ரிச்சர்ட்! நீங்கள் பணம் கொடுத்தனுப்பியதை ராமாயியிடமும் கருப்பையாவிடமும் சொன்னேன். அவர்கள் அதை வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார்கள். நாங்கள் குழந்தையைக் கொடுத்தது பணத்திற்காக அல்ல. எங்களிடம் குழந்தைச் செல்வம் இருந்ததால் அவர்களுக்குத் தானம் கொடுத்தோம். விலைக்குக் கொடுக்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள். பணத்தை இத்துடன் திருப்பியனுப்பியிருக்கிறேன்.” என்று எழுதியிருந்தார் கோவிராஜ்.

அதைப் பார்த்துத் திகைத்து நின்றார்கள் வெள்ளைக்காரத் தம்பதிகள்.

“ஓ! தீஸ் டமிலியன்ஸ் – கிரேட்டர் தேன் த கிரேட்டஸ்ட் பீப்பிள்! அந்த மண்ணிலேதான் திருக்குறளும் திருவாசகமும் சின்னத்தாயும் பிறக்க முடியும் லிஸி!” என்று மனைவியிடம் நெஞ்சம் நெகிழச் சொன்ன ரிச்சர்டின் நீல விழிகளில், கண்ணீர் வெள்ளிய துளியாய்ப் பளபளத்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *